இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 17 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 11-04-2024

Total Views: 22909

அத்தியாயம் 17

சக்கரவர்த்தி நீட்டிய கார்டை வாங்கப்போன அருணாவை தடுத்தான் சுரேந்திரன்.

கேள்வியாக அவனை அனைவரும் பார்க்க "என் பொண்டாட்டிக்கு.. என்ன தேவையோ... அத என் பணத்துல வாங்கிக் கொடுங்க..." என்க.

"ஏன்... இது என்ன புது பழக்கம்... உன் பணம்... என் பணம்னு சொல்லிட்டு..." என தர்மன் கேட்க.

அவரை ஒரு பார்வை பார்த்தான் சுரேந்திரன்.

அவர் வாய் கப்பென மூடிக்கொண்டது.

"அம்மா... இது என்னோட ஆசை.. என்னோட வருங்கால மனைவிக்கு நான் சுயமா சம்பாதிச்ச பணத்துல அவளுக்கு தேவையானது வாங்கிக் கொடுக்கனும்னு..." என அவன் கூற.

"அருணா... அவன் எப்போ வேணாலும் வாங்கிக் கொடுக்கட்டும்... இப்ப பெரியவங்க நாம என்ன வாங்கிக் கொடுக்கறமோ  அத போட்டுக்க சொல்லு... ஏன்னா பெத்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது பெத்தவங்களான்னா நம்மோட கடமை... அதுல இருந்து நாம தவற வேணாம்... கொஞ்சம் புத்தியில ஏறற மாதிரி எடுத்து சொல்லு...." என்க.

"ஏன்... இங்கதான இருக்கான்... நீங்க சொல்றத அத்தனையும் அவன் காதுல நல்லாவே விழும்...." என்க. 

"விழுந்தா சரி... இப்போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்... மூணு மணிபோல கிளம்புங்க சரியா இருக்கும்...." என்க.

அவரையே ஆழ்ந்து பார்த்தவன் "ஏன் சித்தப்பு... புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது என்னவோ பெத்தவங்க கடமைதான்... ஆனா அவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ண செலக்ட் பன்றதும் பெத்தவங்க கடமைதான... அத ஏன் மீறி நடந்துக்கிட்டாருன்னு கொஞ்சம் கேட்டு சொன்னீங்கன்னா பரவால்ல...." என அவன் கூற.

பத்மினிதான் "சுரேன் என்னப்பா பேச்சு இது....?" என கேட்க.

"இல்ல... சித்தி அவரு சொன்னதுக்கு நான் பதில் சொன்னேன்...." என்றான் அவன்.

அவனோ மீண்டும் அவரை முறைத்து பார்க்க "பத்மினி... இன்னைக்கு சொல்றேன் எழுதி வச்சிக்க... இவன் அருவிய பிடிக்காம கட்டிக்கிட்டான்னு இங்க இருக்க எல்லோருக்கும் தெரியும்... ஆனா இதே சுரேன் நாளைக்கே என் பொண்டாட்டிதான் எனக்கு எல்லாமே... அவதான் என்னோட உயிர்னு சொல்றானா இல்லையான்னு பாரு...." என்க.

அதற்கு நக்கலாக சிரித்தவன் "சித்தி... இந்த அது இந்த ஜென்மத்துல நடக்காது...  இங்க இருக்க எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்... அவ என் கையால தாலி வேணா கட்டிக்கலாம்...ஆனா என்னோட மனசுல ஒரு நாளும் இடம்பிடிக்க முடியாது.... இது அவளுக்கும் சேர்த்துதான் சொல்றேன்...." என்றவன் விறுவிறுவென அவனுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அருவியின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேறியது அவன் வார்த்தைகளை கேட்ட பின்.

யாரும் அறியாமல் அதை மறைத்துக் கொள்ள அவள் முயன்ற பொழுது அருணாவும் பத்மினியும் அவள் அருகில் வந்து அவள் தலையை வாஞ்சையாக வருடிவிட்டனர்.

"விடுடா... அவன் கொஞ்சம் கோபமா இருக்கான்... அவன கேக்காம இந்த கல்யாணத்த பண்ணி வச்சிட்டோம்னு கோபத்துல இருக்கான்... நாள் ஆக ஆக சரியாகிடுவான்... நீ வேணா பாரு அருவி அருவின்னு உன் பின்னாடியே சுத்தறானா இல்லையான்னு..." என அருணா கூற.

அவளோ அவரை பார்த்து ஒரு கசந்த புன்னகையை உதிர்த்தாள்.

சக்கரவர்த்தி அவள் அருகில் வந்தவர் "இங்க பாரும்மா அருவி.. ஒருநாள் இல்லன்னா ஒருநாள் இந்த மாமா பண்ணி வச்ச கல்யாணம் சரிதான்னு நீயும் புரிஞ்சிப்ப... அவனும் புரிஞ்சிப்பான்... உங்க ரெண்டு பேருக்குமே நான் நல்லது மட்டும்தான் பண்ணியிருக்கேன்னு நீங்க புரிஞ்சிக்கிற காலமும் வரும்..." என்க.

"மாமா... நீங்க வருத்தப்படாதீங்க... இதனால எனக்கு ஒரு வருத்தமும் இல்ல... மாமா கடைசி வரைக்கும் என்ன ஏத்துக்கலனாலும்... உங்களுக்கு பொண்ணா நான் உங்க காலடியிலயே வாழ்ந்து என் வாழ்க்கைய வாழ்ந்துருவேன்...." என்க.

"என் தங்கமே...." என அவளை அணைத்து கொண்டார் அருணா.

"அவன்கிடக்கறான் விடும்மா நாங்க இருக்கோம் உனக்கு..." என்க.

"சரிங்கத்தை..." என்றாள் அவள்.

இதில் எதிலும் மகிழா கலந்து கொள்ளவில்லை.

அருவிக்கு திருமணம் ஆனதில் அவளுக்கு பெரிய வருத்தமோ மகிழ்ச்சியோ இல்லை.

இப்போதைக்கு அவளது எண்ணம் எல்லாம் வாசுவை எப்படியானும் சமாதானப்படுத்தி தன்மீது இருக்கும் கோபத்தை போக்க செய்வதிலேயே இருக்க அவனோ இவளை எப்படியானும் வீட்டை விட்டு துரத்திவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே உழன்றான்.

அறைக்குள் நுழைந்த சுரேன் கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி அடித்தான்.

இன்னும் அவனால் இந்த திருமணம் நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பற்களை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்று தோற்றான்.

பின்வாசல் வழியாக வெளியே சென்றவன் அங்கிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த மூச்சுகளை எடுத்துவிட்டவன் தன்னை கட்டுப்படுத்த படாதபாடு பட்டான் என்றுதான் கூற வேண்டும்.

சற்றுநேரம் அமர்ந்து இருந்தவன் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து முகத்தில் குளிர்ந்த நீரை வாறி வாறி அடித்தான்.

சற்று நிதானம் வந்ததுபோல இருக்க மெல்ல வீட்டினுள் நுழைந்து அவன் அறைக்குள் சென்றவனுக்கு மீண்டும் கோபம் வர "ஏய்...." என கத்தியபடி உள்ளே சென்றவன் அங்கு அவன் கட்டிலில் அமர்ந்து இருந்த அருவியை பார்த்து "வெளிய போடி..." என கத்த அவனது கத்தல் கீழே இருந்த அனைவருக்கும் தெளிவாக கேட்டது.

வாசுவின் அறை

கண்மூடி கட்டிலில் படுத்து இருந்தான் வாசு.

மனதில் ஆயிரம் கேள்விகள்.

கண்மூடி திறக்கும் முன் தன் வாழ்வில் என்னென்னவோ நடந்து விட்டது இதில் பலியானது என்னோட காதல்தானே என மனதினுள் எண்ணி குமுற மெல்ல அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

விழி திறந்து பார்த்தவன் முன் கைகளை பிசைந்தவாறு மகிழா நின்றிருக்க கட்டிலில் இருந்து குதித்து எழுந்தவன் "யார கேட்டு என் ரூமுக்குள்ள வந்த...?" என கடித்த பற்களுக்கிடையே கேட்க.

"இல்ல....அ... அத்ததான் ரெஸ்ட் எடுன்னு சொ... சொன்னாங்க..." என திக்கி திணறி அவள் கூற.

"ஓ...ஆமா... ஆமா.. ரெஸ்ட் உனக்கு தேவைதான்... ஏன்னா... இன்னும் யாரையெல்லாம் கவுக்கனும்னு பிளான் பண்ணனுமே.... அதனால நீ கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கத்தான் வேணும்.... மகாராணி என் பெட்ல படுத்துக்கோங்க... அப்பதான் இன்னும் யார் குடிய கெடுக்கலாம்னு யோசிக்க வசதியா இருக்கும்...."என்க.

"வாசு...." என அவள் அழைக்க "ஏய்...." என அவன் கர்ஜிக்க அவனின் அந்த குரலில் பயந்து இரண்டு அடிகள் பின்னால் எடுத்து வைத்தாள்.

"என் பேர சொல்லி கூப்ட கூட உனக்கு தகுதி இல்ல... எனக்கு உன்னை பத்தியும் தெரியும்... உன் குடும்பத்த பத்தியும் தெரியும்.. நீயும் உன் அண்ணனும் பிளான் பண்ணிதான இந்த வேலைய செஞ்சீங்க..." நீங்க போட்ட திட்டத்துல பாவம் அருவி தப்பிச்சிட்டா.... ஆனா நான் மாட்டிக்கிட்டேன்..." என்க.

"இ...இல்ல... நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்ல. அவனுக்கு எதும் தெரியாது...." என்க.

"அப்ப இந்த பிளான் எல்லாத்தையும் நீ மட்டும் தனியா போட்டியா....?" என கேட்க.

அவளோ வாய் மூடி நின்றாள்.

"சொல்லித் தொலைடி யாரெல்லாம் இதுல கூட்டு....?" என்க.

"அப்படிலாம் எதும் இல்லங்க... நான் உங்க மேல உயிரையே...." என அவள் முடிக்கும் முன் ஓங்கி சுவற்றில் குத்தி இருந்தான்.

அதில் காயம்பட்டு அவன் விரல் முட்டிகளில் இருந்து செங்குருதி வழிந்தோட "ஐயோ... வாசு...ரத்தம்..."என அவன் அருகில் சென்றவளை பார்வையால் எட்டி நிறுத்தினான்.

"நீ எங்கிட்ட நெருங்கி வர நினைச்ச...நான் உன்ன எதும் பண்ண மாட்டேன்... என்னைய நானே காயப்படுத்திக்குவேன்..." என்க.

"நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க... சின்னவயசுல இருந்தே நீங்கன்னா எனக்கு உயிரு..." என்றவளை "அடச்சீ... வாய மூடு... நீயெல்லாம் காதல பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு... உண்மையா காதலிச்சு இருந்தீன்னா இந்த மாதிரி நாலு பேரு முன்னாடி என்ன இப்படி அவமானப்பட விட்டுருக்க மாட்ட....அப்படியே எப்படி இருந்துச்சு தெரியுமாடி எனக்கு... இந்த ஊர் முன்னாடி உடம்புல ஒட்டு துணி இல்லாம அம்மணமா நிக்கிற மாதிரி இருந்துச்சு... எவ்வளவு குடிச்சாலும் நான் நிதானம் தவற மாட்டேன்டி... என்ன போய் போதையில என்ன கெடுத்துட்டான்னு சொன்ன பாரு.... ச்சே... உன்ன மாதிரி ஒருத்திய என் வாழ்க்கைல நான் பார்த்தது இல்ல... உண்மைய சொல்லு.... நான் சுசிலாவ விரும்புனது உனக்கு தெரியாது சொல்லுடி....?" என அவன் ஆத்திரமாக கேட்க.

அவளோ தலை குனிந்து நின்றாள்.

"வாய தொறந்து சொல்றியா இல்லையாடி...?" என அவன் ஆத்திரமாக கேட்க

"தெ... தெரியும்..." என்றாள் அவள்.

அவன் அதிர்ந்து நின்றான்.

சுரேனின் அறை.

தலையை அழுந்த கோதியவன் சற்று தன் கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு உள்ளே வந்து பார்க்க அவனது கட்டிலில் பட்டும் படாமலும் அமர்ந்து இருந்தாள் அருவி.

அவளை பார்த்ததும் சற்று அடங்கி இருந்த கோபம் மீண்டும் தலைதூக்க "ஏய்...." என்ற கத்தலில் அவள் திடுக்கிட்டு பதறி எழ "என் ரூம்ல உனக்கு என்னடி வேலை...?" என கேட்டான் அவன்.

"அது.. அது...வந்து மாமா..." என அவள் தடுமாற.

அவள் அருகில் வந்தவன் "என் ரூமுக்கு உன்னை யாரு வர சொன்னது...?"என கேட்க.

"அது.. அது.. மாமாதான்..." என அவள் முடிக்க.

"ஓ....இப்போ நான் சொல்றேன் வெளிய போ...." என்க.

அவளோ திருதிருவென விழிக்க "வெளிய போடி...." என கத்தியவன் அவள் கழுத்தில் கை கொடுத்து சுவற்றோடு ஒட்டி தன் ஒருகையால் தூக்கி இருந்தான்.

அதே ஊரில் இன்னொரு வீட்டில்

"ஏன்டா... என்ன பண்ணி வச்சிருக்க...அந்த சக்ரவர்த்திக்கும் தர்மனுக்கும் தெரிஞ்சா...உன் தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்ருவானுங்க தெரியும் இல்ல... அப்பறம் ஏன் இந்த வேலை பார்த்து வச்சிருக்க... ஏதாச்சும் செய்ய போறதுக்கு முன்னாடி எங்கிட்ட ஒரு வார்த்தை கேக்கற பழக்கம்லாம் இல்ல... உனக்கு எத்தன தடவ சொல்றது நீயா எந்த முடிவும் எடுக்காதன்னு... இனி அந்த சக்கரவர்த்தி சும்மா இருப்பான்னு நீ நினைக்கிறியா... இந்த பிளான அந்த மகிழா மட்டும் தனியா செஞ்சிருக்க மாட்டான்னு அவன் ஆணித்தரமா அடிச்சு நம்பி இருப்பான்... இனி அவன் சும்மா நம்மள விடுவான்னு கனவுல கூட நினைக்காத..." என்க.

"அப்பா... விடுங்க என்ன பெரிய சக்கரவர்த்தி சக்கரவர்த்தின்னு பூச்சாண்டி காட்டுறீங்க... அந்த ஆளு இன்னைக்கோ நாளைக்கோ மெட்ராசுல போய் உக்காந்துக்குவான்... அதுக்கப்பறம் அந்த வாய் இல்லாப்பூச்சி தர்மன்தான... அவன்லாம் எனக்கு தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போய்ட்டே இருப்பேன்...." என்க.

"வேணாம்டா... அந்த சக்கரவர்த்தி குடும்பத்தை பத்தி தெரியாம நீ பேசிட்டு இருக்க..."என்க.

"போய் வேற வேலை ஏதாச்சும் இருந்தா பாருங்க..." என தெனாவட்டாக கூறிய அவன் அடுத்த நாள்  காலை ஆலமரத்தில் பிணமாக தொங்கினான்.



Leave a comment


Comments


Related Post