இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 18 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 12-04-2024

Total Views: 22391

அத்தியாயம் 18

தன் ஒரு கையால் அருவியை தூக்கி சுவற்றோடு சுவறாக ஒட்டி நிறுத்தினான் சுரேன்.

அவன் இறுக்கி பிடித்ததால் கழுத்தில் வலி எடுக்க மூச்சுவிடவே சிரமப்பட்டாள் அவள்.

கண்விழி இரண்டும் பிதுங்கி ஒருமாதிரியாக சொருக ஆரம்பிக்கும் போதுதான் கவனித்தான் அவன் விழிகளுக்கு நேரே அவளது பளீரென இடை இருந்தது.

ஒருநிமிடம் அதை லயித்து பார்த்தவன் சட்டென அவளை விட பொத்தென கீழே விழுந்தாள் அருவி.

அவன் இறுக்கி பிடித்த கழுத்து வளைவு வலியெடுக்க வலி தாங்க முடியாமல் கண்களில் நீர் கோர்த்தவள் அவனை நிமிர்ந்து பாராமல் அழுதுகொண்டு இருந்தாள்.

இதுவரை யாரிடமும் அடியோ அல்லது ஒரு சுடு சொல்லோ வாங்காதவள் அவள்.

இன்று அவன் கையால் வாங்கியதை நினைக்க நினைக்க மனம் பெற்றவளையும் அவளது அப்பத்தாவையும் எண்ணி ஏக்கம் கொள்ள முதன் முறையாக தான் ஒரு அனாதை என்பதையும் தனக்கு ஏதாவது ஒன்றானால் கேட்க எவரும் இல்லை என்பதை உணர ஆரம்பிக்க ஒரு பக்கம் மூளையோ இல்லயே உன்ன பார்த்துக்க உன் மாமா அத்தைன்னு எல்லோருமே இருக்காங்க என எடுத்துரைக்க அவளுக்கு என்ற பண்ணுவது என்றே தெரியவில்லை  வெளியே அவன் அவளிடம் கோபமாக நடந்தால் அவர்கள் கேட்பார்கள் நான்கு சுவற்றுக்குள் அவன் செய்யும் அட்டூழியங்களை கேட்க முடியாதே என அவள் எண்ணி கண்ணீர் வடிக்கையில் "ஏய்... எழுந்திரிடி...." என்றான் அவன்.

அவளோ தலைநிமிர்ந்து பார்க்க "இப்ப எழுந்திரிக்கல... அப்படியே கழுத்துல கால வச்சு மிதிச்சே கொன்னுடுவேன்..." என்க.

"என்ன ஓவரா பேசிட்டு இருக்கீங்க....?" என அவள் எதிர்த்து கேட்டு முடிக்கும் முன் அவள் கன்னத்தில் சப்பென அறைந்து இருந்தான் சுரேந்திரன்.

"என்ன வாய் நீளுது.... என்னய ஏமாத்தி கல்யாணம் பண்ணதும் இல்லாம... என்ன எதிர்த்து வேற பேசுறியா... ஏய்..." என அவள் முன் ஆள்காட்டி விரல் விரலை நீட்டியவன் "இங்க பாருடி நான் என்ன சொல்றனோ...அதத்தான் நீ கேக்கனும்... என்னய எதிர்த்து பேசறதோ... இல்ல... நான் உங்கிட்ட நடந்துக்கிறதையோ... வீட்ல யார்கிட்டயாச்சும் சொன்னேன்னு வை... அப்பறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன்.... இந்த வீட்டுல இருக்கவங்க முன்னாடியும் இந்த ஊர் முன்னாடியும்தான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி... ஆனா நாலு சுவத்துக்குள்ள நீ யாரோ நான் யாரோ.... நீ எதையும் வெளிய சொல்லாம இருந்தா உனக்கு மூணு வேலையும் சோறும் வருஷத்துக்கு ரெண்டு டிரஸ்ஸும் எடுத்து தருவேன் இல்லன்னா பட்டினியா கிடந்து சாக வேண்டியதுதான்...."என்க.

அவளோ "நான் ஒன்னும் அப்பன் காசுல உக்கார்ந்து திங்கிற ஆள் கிடையாது... எங்கைல உழைப்பு இருக்கு நாலு வயக்காட்டுல வேலை செஞ்சு என் வயித்த நான் கழுவிக்குவேன்... நீ ஒன்னும் எனக்கு பிச்சை போட வேணாம்..." என்க.

"ஏய்... என்னடி வாய் ரொம்ப நீளுது...நீ இப்ப என் பொண்டாட்டி ஞாபகம் வச்சிக்க...." என்க.

"அதனால நீ செய்யறத எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு ஒரு அடிமையா வாழுவேன்னு நினைக்காத...நானும் பார்த்துட்டே இருக்கேன்... நீ என்னமோ ரொம்ப ஓவரா பன்ற... என்னை பார்த்தா எப்படி இருக்கு உனக்கு... என்னமோ நான் வேணும்னே உன்னய கட்டிக்கிட்ட மாதிரி பேசற....வா இப்பவே போய் மாமாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை அத்துவிட சொல்றேன்..." என்க.

அவனோ கடகடவென சிரித்தான்.

அவன் சிரிப்பதை புரியாமல் அவள் பார்க்க அங்கிருந்த கட்டிலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன் "போ... இப்பவே போய் உங்க பையன் என்னய அடிச்சான்... கழுத்த புடிச்சி நெறிச்சான்னு சொல்லு... எனக்கு ஒன்னும் பயம் இல்ல... அவங்க தான் வருத்தப்படுவாங்க... அதும் என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்... அப்படி வரவச்சு அவர சீக்கிரமா மேல அனுப்புற ஐடியா இருந்தா... போ... போய் சொல்லு... நான் வேண்டாம்னு சொல்லவே மாட்டேன்... நீ வந்த நேரம் வந்ததும் மாமனார முழுங்கிட்டான்னு இந்த ஊர் உலகம் பேசட்டும்...ஏற்கனவே அப்பன் ஆத்தாவ முழுங்கினவதான அந்த ராசிதான் கல்யாணம் பண்ண அன்னைக்கே மாமனார முழுங்கிடுச்சுன்னு பேசட்டும்... எனக்கு என்ன இப்போ....?!" என அவன் சாதாரணமாக கூற.

"நீ பெரிய இதய டாக்டர்னு எல்லோரும் சொன்னாங்க... ஆனா நீ படிச்ச படிப்பு... உனக்கு பண்பையும் சொல்லி தரல... ஒழுக்கத்தையும் சொல்லி தரல... என்ன பொறுத்தவரைக்கும் நீ இதயமே இல்லாத ஒரு டாக்டர்... என்றாள் அவள்.

"ஆமா... அப்படியே வச்சிக்க... ஆமா இங்க வா..."என அவன் அருகில் அழைக்க "எதுக்கு... எதுவா இருந்தாலும் அங்க இருந்தே பேசு...?" என்க.

"என்ன வரவர மரியாதை தேயுது.... ஆமா காலையில இருந்து எப்படி கூப்ட்ட...?" என கேட்க.

அவளோ "ஏன்...?" என கேட்டாள்.

"மாமான்னு கூப்ட்ட மாதிரி எனக்கு ஞாபகம்..." என அவன் கூற.

"அதான் தெரியுது அப்பறம் என்ன...?"என அவள் கேட்க.

"என்ன மாமான்னு கூப்ட்ட என்னோட வேற முகத்த பார்க்க வேண்டி இருக்கும்..." என்றான் அவன்.

"இந்த மூஞ்சியவே பார்க்க சகிக்கல... இதுல இன்னொரு மூஞ்சி வேறயா..." என அவள் நினைக்க "உன்ன கிட்ட வர சொன்னேன்..." என்றான் அவன்.

"எதுக்கு...?" என்றபடி அவன் அருகில் வர "இது என்னடி...?" என அவள் வெற்றிடையில் அவன் கையை வைக்க பதறி நகர்ந்தாள் பாவை அவன் செயலில்.

அவளது இடை அவள் அணிந்திருந்த மெருன் கலர் தாவணியில் எடுப்பாக தெரிய அதை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் "ஆமா... என்ன இது  தாவணி... என்ன பாரு... என் இடுப்ப பாருன்னு காட்டிட்டு இருக்க... என்ன.. என்னைய செடியூஸ் பண்ண ட்ரை பன்றியா...?" என அவன் கேட்க.

"என்ன...?" என அவள் புரியாமல் விழித்தாள்.

"ஓ...மேடமுக்கு புரியலயா... படிக்காத பட்டிக்காடு...என்னய உன் இடுப்ப காட்டி மயக்க பாக்குறியான்னு கேட்டேன்..." என்க.

அவளோ "ச்சீ... ச்சீ..." என காதுகளை பொத்திக் கொண்டாள்.

"ஏய்... ஏய்... நடிக்காதடி உன் பிளானே அதான... என் அம்மா அப்பாவ கைக்குள்ள போட்டுக்கிட்டு... அவங்கக்கிட்ட சிம்பதி க்ரியேட் பண்ணி... அவங்கள உன் வலையில விழ வச்சு... என்னை அடையனும் அதான உன் பிளான்... அப்பா... என்னா பிரைன்டி உனக்கு..." என அவன் கூற.

"வார்த்தைய பார்த்து பேசுங்க... உங்களுக்கு எப்படி இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையோ... அதைமாதிரிதான் எனக்கும் விருப்பம் இல்ல... நான் ஒன்னும் உங்க பின்னாடி நாய் மாதிரி அலையல உங்கள கட்டிக்க..."என அவள் கூற.

அவளின் வார்த்தைகள் அவனுக்கு மேலும் கோபத்தையே வரவழைத்தது.

"என்னடி... ரொம்ப ஓவரா பேசற...என்ன எடுத்து எறிஞ்சி பேசற இந்த வாய்க்கு ஏதாச்சும் தண்டனை கொடுக்கனுமே... என்ன பண்ணலாம்..." என யோசிப்பவன் போல நடித்தவன் இரண்டே எட்டுகளில் அவள் அருகே சென்று அவள் சிவந்த இதழ்களில் அவன் இதழை வைத்து அழுத்தி மூடி இருந்தான்.

அதுவரை அவளிடம் இருந்த தைரியம் அவன் இந்த செயலில் காணாமல் போனது.

வாசுவின் அறை

அவள் தெரியும் என கூறியதில் அவனுக்கு சர்வமும் அடங்கியது.

"எ... என்னடி சொல்ற..?" என அவன் கேட்க.

"அது... அது... அவமேல உங்களுக்கு விருப்பம்னு தெரியும்...?" என அவள் கூற.

"அடிப்பாவி...." என அவள் கன்னத்தில் ஓங்கி அறைய அவளோ நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

"தெரிஞ்சாடி என்மேல இப்படி ஒரு பழிய போட்டு கட்டிக்கிட்ட... சொல்லுடி... யாரெல்லாம் இதுல கூட்டு...?" என அவன் கேட்க.

அவளோ கீழே விழுந்தவள் மெல்ல நிமிர்ந்து அவனை அமைதியாக பார்க்க அவனோ அவளது தலை முடியை கொத்தாக பிடித்தவன் அவள் அருகில் அமர்ந்து "ஏய்... இப்ப உண்மைய சொல்லப்போறியா... இல்லையா...?" என அவளை உலுக்க அவளோ சிலைபோல அமர்ந்து இருந்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் "ச்சே..." என அங்கிருந்த சேரை எட்டி உதைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

வஜ்ரவேலு 

அந்த ஊரின் இன்னொரு பெரிய குடும்பம்.

சக்கரவர்த்தியின் குடும்பத்திற்கும் வஜ்ரவேலுவின் குடும்பத்திற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.

ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழி அவர்களின் குடும்பத்தை பொறுத்த வரைக்கும் ஆகாத ஒன்று.

தர்மன் ஊருக்கு எந்த நல்லது செய்தாலும் அவரை குறை கூறுவது, அவர் கூறும் தீர்ப்பை எதிர்த்து நடப்பது, ஊர் குடிநீரில் ஏதாவது கலந்துவிடுவது என அவர்களால் என்னெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வதுதான் அவர்களது வேலை.

வஜ்ரவேலுவுக்கு இரண்டு மகன்கள்.

ஒருவன் திகம்பரன்

சுரேனும் இவனும் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள்.

இன்னோருவன் பரமசிவன்.

இதில் திகம்பரன் அந்த ஊரின் சண்டியர் என்றுதான் கூற வேண்டும்.

பரமசிவனும் அத்தனை நல்லவன் என கூறிவிட முடியாது.

பாலன் எப்போதும் திகம்பரனின் கையாள்.

அவன் செய்யும் அடாவடித்தனங்களில் அதிகம் பங்கெடுப்பது என்னவோ பாலன்தான்.

திகம்பரனுக்கு அருவியின் மேல் சிறுவயது முதலே ஒரு கண் இருக்க அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனை உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரியச் செய்தது.

அவளை காணும் போதெல்லாம் அவனும் இலைமறை காயாக அவனது ஆசையை கூற

அவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்.

அவள் அவனை ஒதுக்க ஒதுக்க அவனுக்கு அவள் மீதான ஆசை இன்னும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

இதை அறிந்த தர்மன் அருவிக்கு உடனடியாக திருமணம் முடிக்க வேண்டும் என எண்ணியதிற்கு இந்த திகம்பரனும் ஒரு காரணம்.

இதை தன் அண்ணனிடம் அவர் தெரிவித்து இருக்க அதன்பின்னரே சக்கரவர்த்தி வாசுவிற்கும் அருவிக்கும் திருமணம் பற்றிய பேச்சு எடுத்தார்.

ஆனால் அவரே எதிர் பாராதது மகிழாவின் செயல்.

நொடிப்பொழுதில்தான் சுரேனுக்கும் அருவிக்குமான திருமண யோசனை அவருக்கு வந்தது.

எண்ணியதும் அதை நடத்தியும்விட்டார்.

அருவியை சென்னை அழைத்து சென்றுவிட வேண்டும் என்பது அவரது எண்ணம்.

இது இப்படி இருக்க மகிழாவின் இந்த செயலுக்கு பின் இருப்பது முழுக்க முழுக்க திகம்பரனே.

அவனால் அருவி அவனை உதாசீனப்படுத்துவதை தாங்க முடியவில்லை.

அருவிக்கும் வாசுவிற்கும் திருமணம் என்றதும் கொதித்து போனவன் வாசுவை ஏதாவது செய்தால் வெகு சுலபமாக அவனது பெயர் அடிபடும் என்பதால் வாசுவிற்கும் அருவிக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த அவன் போட்ட திட்டம்தான் இந்த நாடகம்.

அதில் பலியானது என்னவோ மகிழாதான்....


Leave a comment


Comments


Related Post