இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 13-04-2024

Total Views: 13797

காதலொன்று கண்டேன்!

தேடல்  17

அவளுக்கென..


அவளின் முணுமுணுப்பு அவன் செவிகளை எட்ட இன்னுமே சுவாரஷ்யம் அதிகமானது,அவளை சீண்டிப் பார்ப்பதில்.

"நா கேட்ட கேள்விக்கு இன்னும் பதில காணோம்..? எதுக்கு மித்ரா சைலன்ட் ஆகிட்டீங்க..?" இயல்பாக அவன் பேசுவது போல் அவளுக்குத் தோன்ற பதில் சொல்ல முடியாது திணறியவளின் நிலையை காளையவன் உணர்ந்தாலும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.

"இல்ல..பதில் சொல்ல தெரியல.."

"பதில் தெரியலியா..?இல்லன்னா தெரிஞ்ச பதில சொல்ல முடியலியா..?"

"சார்ர்ர்ர்.." நைந்து ஒலித்து அவள் குரல்.

"யெஸ்ஸ்ஸ்ஸ்"

"இப்டி புத்திசாலித்தனமா கேள்வி கேட்டா என்னால பதில் சொல்ல தெரியாது..நாம வேற ஏதாச்சும் பேசலாமே.." காளையின் வினாத் தொகுப்பில் இருந்து தப்பிக்க அவள் விடை சொல்ல அவனுக்கு அது போதாதா..?

"அப்போ உங்களுக்கு என் கூட பேசறது புடிச்சி இருக்கு..ரைட்..?"

"எதே நா எப்போ சொன்னேன் அப்டி..?"

"இப்ப தான சொன்னீங்க..வேற ஏதாச்சும் பேசலாமேன்னு.." குறும்புக்குரலில் சொல்லிட அது அவளுக்கு புரிந்திடவில்லை.தன்னையே நொந்து  நெற்றியில் அறைந்து கொண்டிருந்தன,அவள் விரல்கள்.

"ச்சே..அப்டிலாம் இல்ல சார்.."அவள் இழுக்க மறுமுனையில் இருந்தவனின் இரு புருவங்களும் உயர்ந்திட விழிகளில் "அப்படியா..?" என்பதாய் ஒரு கேள்வி.

அவளுக்குப் புலப்பட வாய்ப்பில்லை என்று தெரிந்தும் வதனத்தில் பாவங்களும் விழிகளில் அபிநயங்களும் மாறி மாறி வந்து செல்வது ஏனோ..?

"அப்போ புடிக்கலியா மித்ரா..?"மெல்லிசையாயான குரலில் தவிப்புடன் அவன் கேட்டி அவளுக்குள் உயிர் உருகி நின்றது.

"இ..இல்ல சார்..அப்டிலாம் இல்ல.."

"அப்போ புடிச்சிருக்கா..?

அவனின் வினாக்களுக்கு விடை சொல்வது பெரும் குழப்பமாய்த் தான் மாறிற்று,அவளுக்கு.பதில் சொன்னால் அதைப் பிடித்துக் கொண்டு பதிலுக்கு இன்னொரு கேள்வி கேட்கிறானே..?

"சார்,நா அப்றமா பேசறேன்.." படக்கென அழைப்பை துண்டித்து விட்டு இதயத்தில் கை வைத்திட கரமும் அதன் இயல்பின்றிய துடிப்பை உணரத் தான் செய்தது.

இனம் புரியா தவிப்பின் விளைவோ இதயத்தின் இயல்பின்றிய துடிப்பு..?
அப்படித் தான் இருக்கும் போலும்.

                ●●●●●●●●

தன் முன்னே அமர்ந்திருந்தவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்,அகிலன்.

முன்னிருந்தவனுக்கு அவனும் முறைப்பும் கோபமும் ஒரு பொருட்டே இல்லை என்பதை அவன் அமர்ந்திருந்த தோரணையே தெளிவாய் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்ததே.

"நீ ரொம்ப கவலபடுவ ஜீவா..மரியாதயா உன் வக்கீலுக்கு விட்டுத்தர சொல்லு.."அவன் கத்த நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் முழுக்க அலட்சியமே நிரம்பியிருந்தது.

"ஜீவா..இங்க பாரு..என் தம்பி ஏதோ ஒரு மயக்கத்துல அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிட்டான்..அவன் அந்த நேரம் குடிச்சிட்டு இருந்திருக்கான்..அதான் அப்டி நடந்து போச்சு.."

"வாட் தி ஹெல் அகிலன்..உன் தம்பி பண்ணது தப்பே இல்லன்னு பேசற..அவன் அப்டி பண்ணதால அந்த பொண்ணோட வாழ்க்க என்ன ஆகிருக்குன்னு பாத்தியா..? அவ இப்ப சைக்காடிஸ்ட் கிட்ட ட்ரீட்மன்ட் போறா..அது மட்டுமா சாவோட விளிம்புக்கு போய் திரும்ப வந்துருக்கா..அவ கிட்ட தப்பா நடந்துகிட்ட உன் தம்பிய சும்மா விட சொல்றியா..? உன் தங்கச்சிக்கு இப்டி நடந்து இருந்தா அந்த பொறுக்கிய நீ சொல்ற மாதிரி  பேசாம விட்ருப்பியா..?"

"ஜீவா.."

"யெஸ்ஸ்ஸ்ஸ்..ஜீவானந்தமே தான்.." என்றவனோ நிமிர்ந்து இருக்கையில் சாய்ந்தமர்ந்தவாறு காலின் மேல் காலைப் போட்டு அமர்ந்து கொள்ள கதிரையின் மேல் விளிம்பில் படர்ந்தது,அவனின் கரம்.

"ஜீவா..இது என்னோட தம்பி பண்ண தப்பா இருக்கலாம்..ஆனா பாதிக்கப்பட போறது என்னோட பேமிலி தான்..எங்கப்பா இவ்ளோ நாள் சேத்து வச்ச கௌரவம்,பிஸினஸ்ல நாங்க சேத்து வச்ச பேர் எல்லாமும் நீ பண்ணப் போற வேலயால மொத்தமா அழிய போகுது..அத பத்தி கொஞ்சமும் யோசிக்க மாட்டியா நீ..?"

"வாட்..? ஆர் யூ ஜோக்கிங்..? உன் தம்பி கூட அதப் பத்தி கவல படாம தப்பு தப்பாவே பண்ணிட்டு இருக்கான்..அவனுக்கு அத பத்தி யோசன இல்லாதப்போ நா எதுக்கு யோசிக்கனும் அகிலன்..? அது மட்டுல்ல நீ பண்ற விஷயங்களும் எனக்கு தெரியும்..ஐ க்நோ தி ஆல் திங்க்ஸ் யூ ஹேவ் டன்..வாரம் ரெண்டு தடவ நீ ப்ராஸ்டிடுயூட் கிட்ட போறது தெரியும்..ஒரு சின்னப் பொண்ண ஏமாத்தி அவ வாழ்க்கயை சீரழிச்சதும் தெரியும்..அந்தப் பொண்ணு இப்போ மென்டல் ஹாஸ்பிடல்ல இருக்குறதும் தெரியும்..
இது எதுவும் தெரியாம உன் வைப் உன்ன கண் மூடித்தனமா நம்பறதும் தெரியும்.." தீவிரமாய் அவன் சொல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் அகிலனின் முகம் பல மடங்கு வெளிறியது.

"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல அகிலன்..நீயே உன் தம்பிய ஜெயில்ல போடு..உனக்கு எந்த கெட்ட பேரும் வராது..நீ காப்பாத்த சொல்ற அளவு உன் தம்பி ஒன்னும் நல்லவன் கெடயாது..இது அவன் ரேப் பண்ணுன நாலாவது பொண்ணு..அதுல ரெண்டு பொண்ணுங்க சூசைட் பண்ணி எறந்து போயிருக்காங்க.."

"............."

"என்ன அகிலன் இப்டி பாக்கற..? இதெல்லாம் எனக்கு எப்டி தெரியும்னு யோசிக்கற..ரைட்..எங்க கம்பனில வேல செய்றவரோட பொண்ணு மேல உன் தம்பி கைய வச்சது தெரிஞ்சதுக்கு அப்றமும் நா பேசாம இருப்பேனா..?எவிடன்ஸ் எல்லாம் ஸ்டார்ங்கா இருக்கு..அடுத்த ஹியரிங்க்ல கண்டிப்பா தீர்ப்பு வந்துரும்..உன் தம்பி கலி சாப்ட வேண்டியது தான்.."

"ஸ்டாப் இட் ஜீவா..ஊர் உலகத்துல பண்ணாத தப்பயா என் தம்பி பண்ணிட்டான்..? ஏதோ போதைல.."

"ஷட் அப் அகிலன்.." கர்ஜனையாய் எதிரொலித்தது,காளையவனின் குரல்.

"சும்மா போதைல..போதைலன்னு உன் தம்பி பண்ண தப்ப ஜஸ்டிஃபை பண்ண வராத..எப்டி நடந்தாலும் தப்பு தப்பு தான்..நா கூட உன் தம்பி நல்லவன் போதைல பண்ணியிருப்பான்னு நெனச்சேன்..அந்த பொண்ணு வாழ்க்கயாச்சேன்னு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுர்லாம்னும் யோசிச்சேன்..ஆனா ரூம்ல கேமரா பிக்ஸ் பண்ணி இருக்கான் உன்னோட கேடு கெட்ட தம்பி..மனுஷனாடா அவன்..இந்த விஷயம் உனக்கு தெரியும்னும் எனக்கு தெர்யும்..ஆனா அந்த பொரம்போக்குகாக வந்து வக்காலத்து வாங்கற..? நீ பண்ற பொறுக்கித்தனம் பத்தாதுன்னு உன் தம்பி பண்றதுக்கும் சப்போர்ட் பண்ற.."

"................."

"இந்த விஷயம் தெரிஞ்ச உன்னோட அப்பாவும் அவரு பையன காப்பாத்திக்க தான் ட்ரை பண்றாரு..தப்புன்னு தோணலயா அகிலன்..? மொத்தமா விசாரிச்சு பாக்கறப்போ தான் உன் தம்பியோட மொத்த வண்டவாளமும் தெரிஞ்சுது..பணம் இருக்குங்குற தைரியத்துல எவ்ளோ தப்பு பண்ணிருக்கான்..இதுக்கு மொத்தமும் நீயும் உன்னோட அப்பனும் தான் காரணம்.."

"ஜீவா.."

"ஜீவான்னு இல்ல..ஆனந்த்னு கூப்டாலும் என்னோட முடிவ மாத்திக்கறதா இல்ல..கண்டிப்பா உன் தம்பிக்கு எதிரா தான் தீர்ப்பு வரும்..அத பாத்துட்டு உன்னோட அப்பா தூக்கு மாட்டிகிட்டாலும் ஐ டோன்ட் கேர்..ஏன்னா சொத்துக்காக பர்ஸ்ட் வைப கொன்னவரு தான் உன்னோட அப்பா..அது தெரியாம உங்கம்மா உலக மகா உத்தமன்னு நம்பி வாழ்ந்துகிட்டு இருக்காங்க..அவங்க கிட்ட சொல்லி வை பர்ஸ்ட்..அவங்களுக்கும் உன் வைப்கும் தான் இதெல்லாம் ஷாக்கா இருக்கும்.."

"..............."

"என்ன பண்றதுன்னு யோசிக்கற ரைட்..எனக்குன்னு இல்ல..என்னோட வக்கீல் இல்லன்னா அந்த பொண்ணு,பொண்ணோட பேமிலி இல்லன்னா என்ன சார்ந்தவங்க யாருக்காச்சும் ஏதாச்சும் பண்ணி தில்லு முல்லு வேல பாக்கணும்னு நெனச்சிட்டு இருந்தன்னா அத இப்போவோ கை விட்ரு..எல்லா எவிடன்ஸும் பக்காவா என்னோட கைல இருக்கு..அது மட்டுல்ல நீ அன்னிக்கி ****** ஹோட்டல் ரூம்ல இருந்த வீடியோ என்கிட்ட இருக்கு..உன் அப்பாவோடதும் தான்..அப்டியேதாச்சும் நடந்ததுன்னா அடுத்த செக்கன் எல்லாம் சோஷியல் மீடியால லீக் ஆயிரும்..காட் இட்.."காளையவன் உறும அவன் கூறிய தகவல்கள் நிலைகுழைய வைத்தது,அகிலனை.

"ஜீவா லிஸன்.."

"இனாஃப்..நீ கேட்ட டைம் முடிஞ்சிருச்சு..யூ மே வீல் நவ்.." என்ற படி கதவை நோக்கி கரத்தை நீட்டிக் காட்ட தன் கோபத்தை அடக்கியவனாய் வெளியேறியிருந்தான்,அகிலன்.

தனது பிரத்தியேக அறையில் இருந்து கேபினுக்குள் வந்தவனுக்கு மனம் ஆறவில்லை.அகிலனின் மீதும் அவனின் தம்பி முகிலனின் மீது அளவு கடந்த கோபம் கனன்று கொண்டிருக்க கையெழுத்து வாங்க அறைக்குள் நுழைந்த  தரணியிடமும் கடுமையான நடத்தையே வெளிப்பட புரியாமல் தலையை சொறிந்த படி வெளியே வந்தவனின் முன்னே வந்து நின்றாள்,மித்ரா.

"மேடம் நீங்க இங்க என்ன பண்றீங்க..?" ஜெயகிருஷ்ணன் காளையவன் திருமணத்துக்கு சம்மதம் சொன்ன விடயத்தை அவனின் காதிலும் போட்டு விட மறக்கவில்லை.

"இல்லண்ணா உங்க எம் டி சார பாக்கணும்.." விழிகளை அவனின் கேபினை நோக்கி திருப்பிய படி கூறியவளின் செயலில் அவனின் உள்ளுக்குள் பதட்டத்தின் விதைகள்.

"இல்ல மேடம்..சார் ரொம்ப கோபத்துல இருக்காரு..இப்போ போனா பயங்கரமா திட்டு விழும்.."

"இல்லண்ணா ப்ளீஸ்ணா..ஒரே ஒரு தடவ அவர பாத்து பேசிட்டு போயிர்ரேன்னா.."

"மேடம் சார் ரொம்ப ரொம்ப கோபத்துல இருக்காரு மேடம்..அவரு யாரயும் உள்ள விட வேணாம்னு சொன்னாரு..அதயும் மீறி நீங்க போனா எனக்குத் தான் திட்டு விழும்.."

"நீங்களும் என் கூட வாங்கண்ணா..ரெண்டு பேரும் சேந்து திட்டு வாங்கலாம்..ப்ளீஸ்ணா.."அவள் கெஞ்ச அதற்கு மேலும் அவளிடம் மறுப்பு சொல்ல முடியாமல் தான் போயிற்று,தரணிக்கும்.

"எக்ஸ்க்யூஸ்மீ சார்.." தரணியின் குரல் கேட்டு இறுக்கத்துடன் நிமிர்ந்தவனின் விழிகள் பின்னே நின்றிருந்தவளை  கண்டவுடன் அவன் முகத்தில் விகசிப்பு வந்து ஒட்டிக் கொள்ள அது மறைந்தும் போனது.

அவனின் விகசிப்பு இம்முறை தரணியின் விழிகளில் இருந்து தப்பாது இருக்க சடுதியாய் காளையவன் காட்டிய மாற்றத்தில் வியந்து தான் போனான்,அவனின் பிரத்தியேக காரியதிரிசியும்.

"என்ன தரணி..?" அதே இறுக்கமான இயல்பான குரல்.

"சார் மேடம் உங்கள மீட் பண்ண வந்துருக்காங்க.."

"ம்ம்..ஓகே நா பாத்துக்குறேன்.." என்றவனின் குரலுக்கு கட்டுப்பட்டு தரணி வெளியேற அவன் வெளியறியதும் மித்ராவின் முகம் கடுகடுவென ஆனது.

விடுவிடுவென அவனுக்கு முன்னே வந்து நின்றவளோ அவனை உறுத்து விழிக்க கட்டவிழ முயன்ற புன்னகையை கட்டுப்படுத்திய படி ஏறிட்டவனின் பார்வை மறந்தும் அவளின் விழிகளை தொடவில்லை.

"எதுக்கு என் கிட்ட சொல்லல..?" மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவள் கேட்க அவனின் விரல்களோ பின்னந்தலை சிகைக்குள் நுழைந்து இரு தடவை கலைத்து விட்டு மீண்டன.

"என்ன சொல்லல..?" பதிலாய் ஒரு கேள்வி.

"கேள்வி கேட்டா பதிலே சொல்ல மாட்டீங்களா..?"

"பதில் சொல்லத்தான் என்னன்னு கேட்டேன்..ரைட் சொல்லுங்க..என்ன சொல்லலனு சொன்னீங்க..?" வழமையான தொனியில் காளையவன் கேட்க நேற்றிரவு பேசியது இவனா என்கின்ற சந்தேகமே அவளுக்குள் வந்து விட்டது.

"நேத்து நைட் என் கூட போன் பேசனீங்க தான.." கேட்க வந்த விடயம் மறந்து அவளை வேறு விடயத்துக்கு தாவ வைத்து விடுவதில் காளையவனை அடித்துக் கொள்ள யாரும் இல்லை போலும்.

"இப்ப நா எந்த கொஸ்டின்கு பதில் சொல்லனும்..?" பேபர் வெயிட்டை உருட்டிய படி அவன் கேட்க நெற்றியில் அறைந்து அவனுக்கு முன்னே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு மூச்சு வாங்கியது.

"தண்ணி தரவா..?" சிரிப்பை அடக்கிய படி அவன் கேட்க மேசையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப்போத்தலை வெடுக்கென எடுத்து வாய்க்குள் சரித்தாலும் தன் பாட்டில் அவனுக்கு அர்ச்சித்துத் தள்ளிக் கொண்டிருந்தது,அவள் மனது.

"இப்ப கூட கேள்வி தான்..கேள்வி கேக்காம எடுத்து தந்தா தான் என்னவாம்..?" ஓர விழிகளால் அவனை முறைத்த படி நிமிர்ந்தவளின் செய்கைகளை இத்தனை நேரமும் தாடையில் பெருவிரலும் கீழிதழில் தாழ்வாக நடுவிரலும் பதிய கன்னத்தில் ஆட்காட்டி விரல் நீண்டிருக்க இமைக்காத பார்வையில் உள் வாங்கிக் கொண்டிருந்தான்,காளையவன்.

"சரி ஏன் நீங்க சொல்லல..?"

"என்னம்மா..என்ன சொல்லலனு சொல்றீங்க.? தெளிவா சொல்றீங்களா..?"

"அப்போ உங்களுக்கு நா என்ன சொல்றேன்னு புரியல.."

"புரியலனு சொன்னா நம்பவா போறீங்க.." இதழ்களுக்குள் புன்னகையை அடக்கிய படி இடக்காய் அவன் கேட்க ஆயாசமாய் இருந்தது,அவளுக்கு.

"ஷப்பாஹ்..ஏன் நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்ன விஷயத்த நேத்து போன் பேசற டைம் என் கிட்ப சொல்லல..?"

"ஓஹ் இத சொல்றீங்களா..? ஏன் சொல்லனும்னு எதிர் பாத்தீங்களா..?" இருபுருவமுயர்த்தி அவன் கேட்க ஐயோவென்றானது,பெண்ணவளுக்கு.

"சிவசிவா.."

"மித்ரா..நா கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டீங்களா.."

"இவரு மட்டும் பதிலே சொல்ல மாட்டாரு..நாங்க சொல்லனுமா..?" இதழ்களுக்குள் அவனுக்கு திட்ட அது காளையவனுக்கு புரியாது போகுமா என்ன..?

"அப்போ நா உங்க கொஸ்டின்கு பதில் சொல்லலனா உங்களுக்கு கோபம் வருமா மித்ரா..?"

"ஐயோஓஓஓஓஓ சாமீஈஈஈஈஈ" சத்தமாக அவள் கத்திட இதழ் பிரித்து சிரித்தவனின் விழிகளும் புன்னகைத்தன.

"சார் ப்ளீஸ்..கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க..பதில் கேள்வி கேக்காம.." கெஞ்சும் குரலில் அவள் சொல்ல ஆமோதிப்பாய் தலையசைத்தாலும் அவனுக்குமே தெரியவில்லை, அது சாத்தியமாகுமா என்பது.

"ஓகே..ஏதாச்சும் சாப்டுட்டே பேசலாம்..என்ன சாப்புட்றீங்க..?"

"உங்களுக்கு புடிச்சத கொண்டு வர சொல்லுங்க சார்..."

"ஏன் எனக்கு புடிச்சத உங்களுக்கும் புடிச்சதா மாத்திக்க ட்ரை பண்ணப் போறீங்களா..?" குறும்புக்குரலில் அவன் கேட்க கை கூப்பி விட்டிருந்தாள்,பெண்ணவள்.

"உங்க கூட பேசி பேசி மண்ட சூடாகி இருக்கு..எனக்கு ரெண்டு க்ளாஸ் ஜூஸ் கொண்டு வர சொல்லுங்க..அது போதும்.." விட்டால் போதுமென அவள் சொல்ல அடுத்த நொடி தரணிக்கு அழைத்திருந்தான்,காளையவன்.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.

இரண்டு குளிர்பானக் குவளைகளும் அவளின் முன்னே இருக்க அவனோ தனக்கு எதையும் கொண்டு வர பணித்திருக்கவில்லை.

அவளுக்கு அவனுக்கு இல்லாமல் தனியே பருக மனமில்லாது போக ஒரு குவளையை அவன் புறம் தள்ள அவளையும் அந்தக் குவளையையும் மாறி மாறி பார்த்தவனின் விழிகளில் குறும்பு குடையென விரிந்திருந்ததே.

"நா சாப்டாம நீங்க சாப்ட மாட்டீங்களா மித்ரா..?" அவன் கேட்க சர்ரென நீட்டிய குவளையை தன் பக்கம் இழுத்துக் கொண்டவளின் விழிகள் காளையவனைப் பாவமாய் பார்ததன.

"எதுக்கு இப்டி பண்றீங்க சார்..?"

"எப்டி பண்றேன்..?"

"ஐயோ சிவசிவா..எதுக்கு சார் சீண்டி கிட்டே இருக்கீங்க..?"

"ஏன் புடிக்கலியா..?" ஆளை இழுத்துக் கொள்ளும் குரலில் கேட்டவனின் விழிகள் இப்போது தயக்கமின்றி அவள் விழிகளை ஏறிட படபடத்து போனாள்,பெண்ணவள்.

"என்ன மித்ரா புடிக்கலயா..?" ஆழ்ந்த குரலில் அவன் கேட்க அதற்கு மேலும் அவளின் வாய்ப்பூட்டு உடைந்திடுமா என்ன..?

இரு குவளைகளையும் காலி செய்து விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க என்னவென்று கேட்டான்,விழியுயர்த்தி.

மறுப்பாய் தலையசைத்து விட்டவளுக்கு காளையவனின் முன்னே இருந்திடும் தெம்பு இல்லை.

"நா கெளம்பறேன்.."

"ம்ம்..அவசரமா கெளம்புனா என்ன அர்த்தம்..? கேக்க வந்தத கூட கேக்க மாட்டீங்களா..?"

"ப்ளீஸ் சார்.." மொத்தமாய் தடம் புரண்ட இதயத்தை நழுவ விடமால் பிடித்த படி அவள் கெஞ்ச ஆமோதிப்பாய் தலையசைத்திருந்தான்,மேலும் சீண்டாமல்.

எழுந்து நடந்து மூன்றெட்டு வைத்தவளோ அவனை திரும்பி பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான்,அவளுக்கான காதல் அழகியலுடன்.

பட்டென பார்வைய திருப்பிய படி அவள் நகர கதவின் பிடியில் கையை வைத்தவளை தடுத்தது,அவனின் அழைப்பு.

"மித்ரா.."

"ம்ம்.." பதில் கூறியவளோ,அவன் புறம் திரும்பவேயில்லை.

"பதிலே சொல்ல மாட்டீங்கன்னு சொல்றீங்களே..நீங்க கேக்காத ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டா..?"

"சரீஈஈஈஈ" மெதுவாய்த் தான் மொழிந்திருந்தாள்.

"இன்னும் ஒரு வாரத்துல நமக்கு கல்யாணம்..கெட் ரெடி டு பீ மை பெட்டர் ஹாப்..இன்னும் ஒரு வாரத்துல நீங்க மிஸஸ்.ஜீவானந்தம் ஆயிருவீங்க.." காளையவன் கத்தி சொல்ல அவளிதழ்களில் புன்னகை பூத்தது.

தேடல் நீளும்.

2024.04.13


Leave a comment


Comments


Related Post