இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -19 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 13-04-2024

Total Views: 29188

மாவிளக்கு போவதற்காகவே வளவனும் யுகியும் தனியாக தயாரானர்கள். அங்கு அவர்கள் நண்பர்களும் வந்து விடுவார்கள் அவர்களுடன் சேர்ந்து அழகு அழகாக செல்லும் பெண்களை பார்த்து விமர்சிப்பது தான் அவர்களின் வேலையே. இதற்காகவே பெண்களை கழட்டிவிட்டு இவர்கள் இருவர் மட்டும் சென்றனர்.

நிலா எங்கும் போகவில்லை., ராஜியின் பின்னாலையே நின்றுக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாளும் நந்தன் தன் அத்தை மகள்களுடன்  திருவிழாவை சந்தோசமா கழித்துக் கொண்டிருந்ததால் நிலாவை அவன் கண்டுக் கொள்ளவில்லை.

கெடாவெட்டு முடிந்ததும் திருவிழாவிற்கு வந்த சொந்தங்கள் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.

கடைசி நாள் மஞ்சள் நீர், வீதிகளின் நடுவே மிகப்பெரிய பெரிய அண்டாவில் மஞ்சள் தண்ணீரை  ஊற்றி வைத்து சாமி ஊர்வலம் வந்து போனதும் சொந்தங்கள் மீதும், நண்பர்கள் மீதும் ஊற்றி விளையாடுவார்கள்.

எப்போதும் யுகி, வளவன், ஷாலினி நிலா நால்வரும் தான் ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடுவார்கள். இந்தமுறை ஷாலினி தடைப் போட்டிருக்க.. மற்ற மூவரும் தான் கலந்துக் கொண்டனர்.

"பூனை நான் தான் உனக்கு முதல்ல ஊத்துவேன்."

"முடியாது யுகி நான்தான் ஊத்துவேன் வருஷம் வருஷம் நீதானே ஊத்துற இந்த வருஷம் நான் தான் ஊத்துவேன்",என யுகியை துரத்த, வளவனின் மீது யாரும் அறியாமல் ஷாலினி மஞ்சள் நீரை ஊற்றி இருந்தாள்.

"என்ன ஷாலு இதெல்லாம்?"

"உன் சட்டையை நான்தான் எப்போமே மஞ்சள் ஆக்கணும், வேற யாரும் ஊத்தக்கூடாது"

"இதை ஆயா கேக்கணும் அப்புறம் இருக்கும் ரெண்டுபேருக்கும் அதான் ஊத்திட்டே வீட்டுக்குப் போ".

"நான் ஊத்திட்டேன்,  நீ ஊத்தி என்மேல".

"அதான் நீ ஊத்திட்டில அப்புறம் நான் வேற எதுக்கு? வீட்டை விட்டு வெளியே வராதன்னு சொல்லிருக்காங்க அவங்க முன்னாடி நலஞ்சி போய் நின்னா சும்மா விடுவாங்களா, கம்முனு வூட்டுக்குப் போ ஷாலு."

"நீ ஊத்தாம இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்"

"இது தேவையில்லாத அடம்" 

"பரவாயில்ல ஊத்து"

"போய் தொலை" என்று திட்டிக்கொண்டே அவள் மீது மஞ்சள் நீரை ஊற்றினான்.

"யாராவது பார்க்கறதுக்கு முன்னாடி கிளம்பும்மா தாயே"

"ஊரே மஞ்சதண்ணி ஊத்தி விளையாடுது, இதுல நம்பல தான் தனியா பார்க்கப் போகுதா போடா"என்றாலும் அவன் சொன்ன ஒரேக் காரணத்திற்காக அங்கிருந்து யாரும் அறியாமல் வீட்டிற்கு சென்று உடை மாற்றிக் கொண்டாள்.

யுகியை துரத்திக் கொண்டு ஓடினாள் நிலா.

"நான் ஊத்துறதுக்கு முன்னாடி யாரவது ஊத்திட்டா அப்புறம் உன்கிட்ட பேசவே மாட்டேன் ஒழுங்கா நில்லு யுகி".

"மாட்டேன், நான்தான் உன்மேல முதல்ல ஊத்தணும் அதுக்கு சரின்னு சொல்லு நிற்கறேன்". என கத்திக்கொண்டே ஓடினான்

"அப்போ நானும் மாட்டேன் போ.. "என்றவள் கையில் வைத்திருந்த சொம்பை தூக்கி தண்ணீரை வீச, யுகி கீழே அமர்ந்து விட்டான். அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நந்தனின் மீது தான் முழு மஞ்ச தண்ணீரும் பட்டது.

"யார் இப்படி பண்ணது?" என கோவமாக தன் வெள்ளை உடையைப் பார்த்தவன் அப்படியே எதிரே நின்றவளையும் பார்க்க.

நிலாவிற்கு கால் பரத நாட்டியம் ஆடத் தொடங்கிவிட்டது "சாரிங்க..சாரி. அது யுகி மேல ஊத்... த.. உ.. ங்.. க மேல பட்டுடுச்சி".

"எதுக்கு இப்போ இவ்வளவு பயப்படற மஞ்சநீர்னா  தண்ணி படத்தான் செய்யும் இதுக்குலாம் சாரிக்கேப்பியா. தண்ணி படக்கூடாதுன்னா ஓரமா நின்னுருக்கணும் இல்லையா வீட்டுக்கு
ல்லையே கதவை அடிச்சிட்டு உக்கார்ந்து இருக்கனும்" என யுகி நிலாவிடம் ஆரம்பித்து எங்கோ பார்த்துக்கொண்டே நந்தனிடம். சொல்லிவிட்டு நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

இருவரின் கையையும். நிலாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்த நந்தன்.

அன்று இரவு தனியாக மாற்றிய நிலாவை நைய  புடைத்துவிட்டான்

"அவன் எதுக்குடி உனக்கு எப்போ பாரு சொம்பு தூக்கிட்டு வரான்,.என்மேல் மஞ்ச தண்ணி ஊத்துற அளவுக்கு வந்துட்டியா?"என்று நங்கு நங்கு என அவளது தலையில் கொட்டி வைத்தவன்.

"உன்னைய சொல்லக்கூடாதுடி  உன்னையும் என்னையும் ஒரே இடத்துல மஞ்சதண்ணி விளையாட விட்ட இந்த ஊரை சொல்லணும். எங்க தகுதிக்கு சமமா இருக்கவீங்க கூடாதான்  இந்த விளையாட்டை வெச்சிருக்கணும்" என சொல்லி சொல்லி அவளது கையை கிள்ளி எடுத்தான்.

அவளும் தான் அந்த நொடி நினைக்கிறாள் நந்தன் இல்லாத உலகிற்கு சென்றுவிட வேண்டும் என்று எங்கு நடக்கிறது. அடுத்த நொடி அவன் முகத்தில் முழிப்பது போல் தானே சூழ்நிலை இருக்கிறது.

"ஹாய் ஸ்டூடண்ட்ஸ். இந்த வருஷம் நீங்க  டுவல்த் படிக்கறீங்க ரெகார்ட் நோட் எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணாம,  படிப்புல கான்ஷன்ரேட் பண்ணுங்க. உங்க அக்கா தம்பியோ தங்கச்சோ, இல்லை பக்கத்துல யார் இருந்தாலும் கொடுத்து எழுதிட்டு வாங்க. சரியா உங்களோட கவனம் முழுக்க முழுக்க மார்க், கட்டாஆப்  மெடிக்கல் சீட், ஆர், என்ஜினீயர் சீட் இதுமேல தான் இருக்கனும்" என நந்தனின் ஆசிரியர் சொல்லி அனுப்பிருக்க.

கேக்கவா வேண்டும், அவனுக்கு என்று இருக்கும் ஒரு கைப்பாவையை வைத்து 4 ரெகார்ட் நோட்டையும் முடித்து விட மாட்டான்.

அன்று மாலையே தன்னுடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு நிலாவைப் பார்க்கச் சென்றான்.

அவன் வருகிறான் என்றாலே இவள் தான் பூச்சாண்டியைப் பார்த்ததுப் போல் பதுங்கிவிடுவாளே நந்தன் தலை தெரிந்ததும் ஓடி ஒளிய.

"ஏய் உன்னோட கண்ணாமூச்சி விளையாடவா வந்தேன். வெளியே வாடி."

'ஐயோ கண்டுப் புடிச்சிட்டானே ஓடுனதுக்கு அடிப்பானோ?' என பயந்துக் கொண்டே வெளியே வந்தாள்.

"அடிக்க மாட்டிங்கள...?"

"மாட்டேன் வா."

"ம்ம்"  சற்று தைரியம் வரவும் அவன் அருகில் சென்று நின்றாள்.

"இந்தா இதைப் பார்த்து இதுல அப்படியே எழுதிக் குடு" 

"நானா..?"

"ஆமா, இதுக்குன்னு வேற ஆளையா போட முடியும்? ஒழுங்கா சரியா எழுதிக் குடு."

"எனக்கு உங்களைப் போல ஜாயிண்ட் லெட்டர்ல இங்கிலிஷ்லா எழுத வராதே".

"உனக்கு எப்படி வருதோ அப்படி எழுது. எழுதுவ தானே".

"எழுதுலனா அடிப்பீங்களா?"

"அதுல என்ன சந்தேகம் உனக்கு?"

"எழுதுனா இனி எப்போமே அடிக்க மாட்டிங்களா.?"

"என்ன எழுதுறதுக்கு லஞ்சம் கேக்கறீயா?"

"ஹா இல்ல இல்ல".என்றாள் அவசரமாக.

"அப்புறம்" 

"சரி எழுதி தரேன் ப்ளீஸ் வேகமாக மட்டும் அடிக்காதீங்க,ரொம்ப வலிக்குது" என கண்கள் சுருங்க கெஞ்சியவளைப் பார்க்க பாவமாக இருந்தது அந்த நிலாவின் அரக்கனுக்கு.

ஆம் நந்தன் தான் நிலாவின் அரக்கன் அவள்   அப்படி தான் பெயர் வைத்திருக்கிறாள். அவனும் அரக்கானக தானே அவளிடம் நடந்துகொள்கிறான்.

"சரி அடிக்கல இங்க வா,  இதைப் புடி எல்லாமே புதுசு, பார்த்து யூஸ் பண்ணு சரியா.?"

"ம்ம் எப்ப வேணும் நோட்டு."

"ஒரு வாரம் டைம் எடுத்துக்கிறியா?" என தன்மையாக கேக்க.. முதன் முதலாக தன்மையாக தன்னிடம் பேசுபவனை ஆச்சரியமாகவும, சந்தோசமாகவும் பார்த்தாள்.

"நாலு நோட்டுக்கு ஒருவாரம் பத்தாது. ஒரு நோட்டு ஒரு வாரத்துல கொடுக்கறேன்" என்றவளை பார்த்து விஷமமாகச் சிரித்துவிட்டுப் போனான் நந்தன்.

வெறும் ஆறாம் வகுப்பு படிக்கும் பெண்ணால்  பனிரெண்டாம் வகுப்பு பையனின் நோட்டை எழுத முடியவில்லை. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எழுத முயற்சி செய்தாள் அதனால் யுகி வளவனிடம் கூட சரியாக பேச முடியவில்லை.

"வள்ளு பூனை எங்க பார்க்கவே முடியல."

"ஏதோ எப்போ பாரு எழுதிட்டே இருக்கா.. என்ன எழுதுறானே தெரியல."

"அவளுக்கே நான் எழுதி தரணும், அப்படி யாருக்கு  எழுதுறா?" 

"ஐ திங் நந்தனுக்குன்னு நினைக்கறேன், கேட்டா எதும் சொல்ல மாட்டிங்கிறா,ஆனா நோட்ஸ் பார்த்தா எங்களுது மாதிரி தான் இருக்கு".

"அவனுக்கு இவ எதுக்கு எழுதுறா,இரு வரேன்"

"யுகி பிரச்சனை வேண்டாம் விடு அவன் கேக்காம இவ எழுத மாட்டாள. அதை தடுத்து திரும்ப உங்களுக்குள்ள பிரச்சனை வந்துடப் போகுது."

"என்னமோ உலக அதிசயமா இவன் மட்டும் தான் பனென்டாவது படிக்கிற மாதிரி எதுக்கு  இந்த அலப்பறை பண்றான்? .இதுக்காகவே நீ அவனை விட மார்க் அதிகமா வாங்கணும் வள்ளு."

"அண்ணனைவிட என்னைய மார்க் எடுக்க சொல்ற நல்ல தம்பிடா நீ"

"அவன் ஒன்னும் எனக்கு அண்ணனும் இல்ல நான் ஒன்னும் அவனுக்கு தம்பியும் இல்லை"

"இப்படியே இருந்துடுவீங்களா.?"

"ஆமா."

"ம்ம் எவ்வளவு நாள்ன்னு பார்க்க தானே போறேன்"   என வளவன் பேசிக்கொண்டிருக்க, கணக்கு புக்கை எடுத்துக் கொண்டு வந்தாள் ஷாலினி.

"வள்ளு"

"ம்ம்"

"எனக்கு இந்த சம்ல கொஞ்சம் டவுட்டா இருக்கு  எஸ்பிலைன் பண்றியா.?"

"ஏன் உன் அண்ணனும் பத்தாவது படிக்கிறான்ல அவன்கிட்ட கேக்க வேண்டியதுதானே.எனக்கிட்ட எதுக்கு கேக்கற..?யுகி நீ சொல்லிக் குடு"என அங்கிருந்து சென்று விட்டான் வளவன்.

வளவனின் விலகளில் மனம் உடைந்த ஷாலினி அழுக ஆரம்பிக்க.

"இப்போது எதுக்கு அழற.நான் சொல்லித்தரேன் வா" என்றான்.

"எனக்கும் ஒன்னும் தேவையில்ல இப்போ எதுக்கு என்கிட்ட மட்டும் பேசாம பேசாம போறான்,அவனை நான் என்ன செஞ்சேன்?". அழுகை  கதறலாக மாறிவிட.

"சத்தம் போட்டு அழாத ஷாலினி பார்க்கறவீங்க என்ன நினைப்பாங்க.?"

"யார் என்ன நினைச்சா? என்ன இப்போ? அவன் என்கிட்ட பேச மாட்டிக்கிறான் நான் ஏதாவது தப்பு பண்ணிட்டனா?சொல்லுடா அண்ணா"

"லூசா நீ எனக்கு என்ன தெரியும்.?ஒழுங்கா உக்காரு, நான் சொல்லித் தரேன்"

"ஒன்னும் வேண்டாம் போ   அவன் என்கிட்ட பேசாம நான் யார்கிட்டையும் பேச மாட்டேன்" என அழுதுக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நடுவில் நின்ற யுகிக்கு தான் மண்டை காய்ந்தது.

மொத்தத்தில் நந்தன் இருக்கும் வரை நிலாவும்,  ஷாலினி இருக்கும் வரை வளவனும், உருப்படவே மாட்டார்கள்  என விளங்க, தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.


Leave a comment


Comments 1

  • F Fajeeha Fathima
  • 2 months ago

    எல்லாருக்கும் நடுவே யுகி மாட்டிக்கிட்டு முழிக்கிறதை பார்த்தா பாவமா இருக்கு அவனுக்கு ஒரு ஜோடி சேர்த்து விடுங்க அக்கா... இந்த நந்தன் அவ்ளோ நல்லவன் இல்லையே 🤔🤔🤔


    Related Post