இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 13-04-2024

Total Views: 22237

பாவை :  10

 கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்களோடு டூர் கிளம்பிய ஐஸ்வர்யா சென்னையிலே இறங்கி விட்டாள். வசந்தனை அழைத்து தான் வந்து விட்டதாக தகவல் கூற, அவள் நின்ற இடத்திற்கே கூப்பிட வந்தான்.

 ஏற்கனவே புகைப்படத்தில் இருவரும் பார்த்திருக்கவே, காரில் வந்து அவளின் முன்னே நின்று இறங்கி அருகில் வந்தான்.

“எப்படி இருக்கே ஐஸ்வர்யா ?”

“நல்லாயிருக்கேன். இப்போ என்ன பண்ணனும் ?”

“தெரியல. நீ தானேம்மா பார்க்கணும் சொன்னே ?” என்கவே,  அவளோ ஆமாமென தலையசைத்தாள்.

இருவரும் ரெஸ்டாரெண்ட் ஒன்றிருக்குச் செல்ல, அங்கே அவளை உண்ண வைத்தவன், பின் அங்கையே அமர்ந்து அடுத்து என்ன என்பதைப் பற்றி பேசினார்.

“நான் எப்படியாவது என் அக்கா எப்படி இறந்தான்னு கண்டுபிடிச்சே ஆகணும் ? அந்த போலீஸ் யாரு. நீங்க வேலை பார்த்த ஆபிஸ்க்கு போக முடியுமா ?”

“இங்கே பாரும்மா. நீ விசாரிக்க நினைக்கிறது சரி தான். ஆனா வெளிப்படையா விசாரிச்சா எல்லாருக்கும் கண்டிப்பா தெரிய வரும் “ 

“அப்போ என்ன பண்ணலாம் ?“

“மறைமுகமா தான் நாம்ம இதை பண்ணனும் “

“எப்படி ?”

“நான் முடிஞ்சளவு உனக்கு உதவி பண்ணுறேன். அந்த ஆபிஸ்க்குள்ள போகணும் நீ நினைச்சா அது அங்க வேலை பார்த்தா மட்டும் தான் முடியும். என்னைக் காரணமே இல்லாம நாலு மாசத்துக்கு முன்னாடியே தூக்கிட்டாங்க. ஆனா அங்கே வேலைக்கு இடம் இருக்குன்னு கேள்விப்பட்டேன் “

“கண்டிப்பா என் வீட்டுல இங்க என்னை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க. அக்கா இறந்ததுனால என்னை அதிகமா கவனிக்கிறாங்க. அவங்க பக்கத்துல இருக்க வைக்க நினைக்கிறாங்க “

“நீ சொல்லுறது சரி தான். அப்போ நம்ம யாரையாவது ஏற்பாடு பண்ணி அந்த ஆபிஸ்க்குள்ள நுழைஞ்சி என்ன நடந்ததுன்னு கண்டு பிடிக்கணும். “

“எப்படி ?” 

“அங்கே எல்லா இடத்துலையும் சிசிடிவி கேமரா இருக்கு. அதுல எப்போ ஆனந்தி கிளம்புனான்னு பார்த்தா தெரியும். அவ விழுந்து இறந்த எரி இருக்குற ஏரியா பக்கம் அவ போனதே இல்லை. அப்பறம் எப்படி அங்கே அவளால ராத்திரி நேரம் போயிருக்க முடியும் ?“

“போலீஸ் கிட்ட கம்பிளைண்ட் கொடுப்போம்மா ?”

“நான் கொடுத்து ரெண்டு மாசமாச்சு. ஆனா இன்னும் ஒரு ஸ்டெப் கூட எடுக்கலை. ஸ்டேஷன் போக வர்ற இருந்தது தான் மிச்சம். எனக்கு என்னமோ அந்த போலீஸ்க்காரன் கூட இதுல உடந்தையா இருப்பான்னு தோணுது ? “

“எப்படி சொல்லுறீங்க ?”

“எங்க ஆபிஸ் பக்கம் அவன் ஆனந்தி இறந்த போது தனியா ரெண்டு மூணு தடவை வந்திருக்கான். அப்பறம் அவனோட தம்பி கூட அந்த ஆபிஸ்ல தான் வேலை பார்க்குறான். இவன் மூலமா தான் அவன் வேலைக்கு வந்திருக்கான். என் இடத்துல தான் இப்போ அவன் வேலைப் பார்த்துக்கிட்டு இருக்கான். ஆனந்தி தற்கொலையில ஏதோ மர்மம் இருக்க, அதை வெளிப்படுத்தாம மறைக்க தம்பியை இன்டர்வியூ இல்லாம வேலைக்கு சேர்த்து விட்டான் அந்த போலீஸ் தான் எனக்கு தோணுது “

“அப்போ அவங்க தம்பியை பிடிச்சா ஏதாவது விசாரிக்க முடியுமா ? ஆபிஸ்ல நடந்ததைப் பத்தி”

“அது எப்படிம்மா ? அண்ணனுக்கு தப்பாத தம்பியா ஒரு வேலை இருந்துட்டா  ?” என்க, செய்வதறியாது இருவரும் தங்களின் பேச்சு வார்த்தையை நிறுத்தினர்.

“சரி எப்போ திரும்ப கிளம்ப போறே ?”

“ரெண்டு நாள் நான் இங்கே இருந்தே ஆகணும். டூர் போய்ட்டு திரும்ப வரும் போது அவங்க கூடவே அப்படியே போகணும் “

“என் வீட்டுல உன்னை தங்க வைக்க முடியாது. நான் வேணா ஹோட்டல் ரூம் புக் பண்ணி தரட்டா. நானும் பக்கத்துல ரூம்ல உனக்கு துணைக்க இருக்கேன். ஏன்னா இங்க பாதுகாப்பு இருக்காது ?” என்கவே, சரியெனக் கேட்டுக் கொண்டாள்.

கூறியதுப் போல் ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றவன் இரு அறைகள் எடுத்துக் கொண்டான். பின் அவளோ அவளின் அறைக்குச் சென்று குளித்து முடித்து தயாராகி அப்படியே படுக்கையில் அமர்ந்தவர்களுக்கு யோசனை தான்.

“அந்த ஆபிஸ்ல வேலை பார்த்தா தான் முடியும் “ என்று வசந்த் கூறியதை நினைத்துக் கொண்டே இருந்தவள் ஒரு முடிவினை எடுக்க அதுவே சரியெனப்பட்டது.

மாலை நேரம் போல் வசந்திடம், “நாளைக்கு, நான் அந்த கம்பெனிக்கு வேலைக்கு போகலாம்ன்னு நினைக்கிறேன் “ என்க,

“எப்படி போவே ? உன்னோட சர்டிவிகேட் “

“என் கிட்ட தான் இருக்கு “ என்கவே, மறுத்தவனை ஒரு வழியாக சரிக்கட்டினாள்.

மறுநாள் எழுந்ததுமே ரெடியாகி கிளம்பி வெளியே வர, தாங்கள் இருவரும் வேலைப் பார்த்த அலுவலகத்துக்கு அழைத்து வந்தான். காருக்குள்ளே வசந்த் அமர்ந்து விட, அந்த கட்டிடத்தையே புதிதாக தான் கண்டாள். அவளை பொறுத்தவரை அனைத்துமே புதிது. முதல் முறையாக சென்னைக்கு வருகை தந்திருக்கிறாள்.

வசந்த்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்த லிப்ட்க்குள் நுழைந்தாள். நேராக அவர்களின் அலுவலகம் நோக்கி வந்தவளோ முன்னிருந்த வரவேற்பறையில் தன்னைப் பற்றி கூறினாள்.

“இங்கே வேலைக்கு இடம் இருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ?” 

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க இன்பார்ம் பண்ணுனாங்க “

“யாரு ?”

“இங்க முன்னாடி வேலைப் பார்த்தவங்க “ என்க,

“இருங்க ஒரு நிமிஷம் நான் இதோ வரேன் “ எனக் கூறிய அந்த பெண்மணி ஒரு அறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, “உங்களை நாளைக்கு வரச் சொன்னாங்க. நாளைக்கு நாலைஞ்சு பேர் வர்றதா இருக்கு. சேர்ந்து தான் இன்டர்வியூ எடுப்பாங்க “ என்கவே, ஏமாற்றமோடு திரும்பினாள்.

“ஒரு நிமிஷம் “

“சொல்லுங்க ”

“இதுக்கு முன்னாடி வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா ?”

“இல்லை. இப்போ தான் படிச்சே முடிச்சேன் “

“அப்போ வேலை கிடைக்குறது இங்க கஷ்டம் தாங்க. வேற கம்பெனில எதுக்கும் ட்ரை பண்ணிப் பாருங்க “ என்கவே, தலையாட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

கீழே தனக்காக காத்திருந்த வசந்தின் காரில் ஏறவே, “என்ன அதுக்குள்ள வந்துட்டே ?” என்க,

“நாளைக்கு வரச் சொல்லிருக்காங்க “

“ஆனா நீ நாளைக்கு ஈவினிங் ஊருக்குப் போகணுமே ?”

“மார்னிங் வந்துட்டுப் போகலாம் இருக்கேன். வரவேற்ப்புல இருந்தவங்க “ என்று அந்தப் பெண் கூறியதைப் பற்றி கூறினாள்.

“ஆமா இங்கே வேலை கிடைக்குறது. ரொம்ப கஷ்டம். உன்னோட ரேங்க் என்ன ?” என்கவே, தான் படித்த சான்றிதழ் அனைத்தையும் எடுத்துக் காட்டினாள்.

“நல்ல மார்க் தான் வாங்கிருக்கே ? வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு ஐஸ்வர்யா பயப்பிடாதே. உறுதியா இரு. ஒரு வேலை, இந்த ஜாப் கிடைச்சா என்ன பண்ணப் போறே ?”

“வீட்டுல பேசி பார்க்கப் போறேன். எனக்கு வேற வழி தெரியல “ என்கவே, அங்கிருந்து கிளம்பினார்.

இரவு நேரம் போல் தங்கியிருந்த அறையில் அமர்ந்து கைபேசியை நோண்டிக் கொண்டிருக்க, அவளுக்கோ கல்லூரி தோழி ஒருவளிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘நாளைக்கு தானே வர்றதா சொன்னாங்க, இப்போ ஏன் கூப்பிடுறா ?’ யோசித்துக் கொண்டு அதனை எடுக்க,

“ஐஸ்வர்யா “ அழுகை, வலியும் சேர்ந்து அழைத்தாள்.

“என்னாச்சு காயத்திரி ?” என்க,

“நாங்க டூர் போற பஸ் ஆக்சிடெண்ட்டாகிருச்சி. அதுல நாலு பேர் இறந்துப் போய்ட்டாங்க. எனக்கும் கொஞ்சம் அடி பரவாயில்லை. எல்லாருமே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிக்கிட்டு இருக்காங்க “

“என்னடி சொல்லுற ? எப்போ ? எங்க வச்சி ?” அதிர்ச்சியோடு கேட்க, நடந்ததை அந்த பெண்ணும் வலியோடுக் கூறினாள்.

உடனே பக்கத்து அறையை தட்டி வசந்திடம் தகவலை கூறவே, “இப்போ என்ன பண்ணம்மா ?” என்க,

“நான் உடனே பெங்களூர் போயாகணும் “ 

“இப்போ எப்படி ?”

“தெரியாது. ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க “ என்கவே, பிளைட் டிக்கெட் புக் செய்தான்.

இருவரும் சேர்ந்தே அப்போதே அந்த அறையை காலி செய்து ஏர்போர்ட் வந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் பிளைட் வர, இரவோடு இரவாக பெங்களூர் வந்துச் சேர்ந்தனர்.

மருத்துவமனையை விசாரித்து வந்துச் சேர, அங்கே தன்னோடு பயின்றவர்களோ உயிருக்கு போராடுவதைக் கண்டாள். கை, கால் என்று மேனி முழுவதும் பலர் கட்டுகளோடு இருக்க,விழிகள் கலங்கக் கண்டாள்.

கயாத்திரி மற்றும் இன்னும் சிலர் பேசும் நிலையில் அமர்ந்தவாறு இருக்கவே, அவர்களிடம் சென்று பேசியவளோ தன் வேதனையை பகிர்ந்துக் கொண்டாள்.

“நல்ல வேலைடி நீ எங்க கூட வரல ?”

“அதை விடு. பேமிலி மெம்பெர்ஸ் எல்லார் கிட்டையும் சொல்லிட்டீங்களா ?”

“தெரிஞ்சவங்க கிட்ட மட்டும் சொல்லிருக்கோம், வந்துக்கிட்டே இருக்காங்க “ என்க,

“எங்க வீட்டுல ?”

“இன்னும் சொல்லலை “ என்கவே, சரியாக காவல் அதிகாரிகள் வந்தனர்.

இறந்த நால்வரின் சடலங்களைப் பற்றி விசாரித்து அவர்களின் வீட்டாருக்கு தகவல் கொடுக்க கேட்கவே, தெரிந்தவரைக் கூறினர்.

“மூனு பேர் சொல்லிட்டீங்க ? பள்ளத்தாக்குல இருந்து கீழே விழுந்த பொண்ணு பாடியை நேத்து கடைசியா கொண்டு வந்தோம்ல. அவங்களோட தகவல் “ 

“யாரு சார் ? எங்களால பார்த்தா தான் சொல்ல முடியும் ?” வலியோடு இருப்பவர்களால் எங்கே யோசிக்க முடிகிறது.

“அந்த பொண்ணோட முகம் சிதைந்து போச்சும்மா. பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாத மாதிரி தான் இருக்கு “ எனக் கூறி அவளின் உடலமைப்பை பற்றி கூறினர்.

“அஞ்சனாவா இருக்குமோ “ யோசிக்க, சட்டென சுற்றி அங்கே இருந்த அனைவரையும் கண்டாள் ஐஸ்வர்யா. 

அவள் தான் இல்லை என்பது புரிய, நிச்சியம் அவளே என்பதை உறுதியாக்கிக் கொண்டவளோ, இவர்கள் யோசிக்கும் முன்னே முந்திக் கொண்டாள்.

“அவளோட பேர் ஐஸ்வர்யா “ என்க, தன் தோழியை குழப்பமாக கண்டனர்.

“ஏய், என்ன பண்ணுற ?” தோழிகள் கேட்க வர, அவர்களை அடக்கியவள், “என்னோட பெஸ்ட் பிரெண்ட் தான் சார் அவ “ என்றாள்.

“அவங்க டீடைல்ஸ் தெரியுமா ?”

“தெரியும் சார் “ எனக் கூறி சற்று தள்ளி அந்த காவல் அதிகாரியை அழைத்து வந்தவள் தன்னுடைய முகவரியை கூறினாள். அவர்களும் அதனை எழுதிக் கொண்டு வீட்டாருக்கு தகவல் கொடுக்கச் சென்று விட்டனர்.

வசந்திற்க்கு அவள் செய்வது எதுவுமே புரியவில்லை. அவனைப் போல் அவளின் தோழிகளும் இருந்தனர்.

“எதுக்குடி ? உன் பேர், உன்னோட தகவலைக் கொடுத்தே ?”

“அஞ்சனா யாருமில்லாத அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவ தானே ? இனிமே அவளோட இடத்துக்கு நான் போகப் போறேன். அப்போ என்னோட இடத்துக்கு அவ தானே போகணும் ?”

“என்னடி சொல்லுற ?”

“என் அக்கா சாவை பத்தி நான் கண்டுபிடிக்கணும். உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் தரணும். இந்த போராட்டத்துல என்னால என் குடும்பத்துக்கு எதுவும் ஆகக் கூடாது. அதுனால தான் இப்படி பண்ணுனேன் “

“உங்க வீட்டாளுங்க அஞ்சனாவை நீ இல்லைன்னு சொல்லிட்டா ?”

“அவளோட உடல்வாகு எனக்கும் ஒன்னு தான். முகம் சிதந்தி போச்சுன்னு அவர் சொன்னாருல. அதுனால கண்டு பிடிக்க வாய்ப்பில்லை “ என்க,

“இங்கே பாரும்மா, நீ உன் அக்கா மேல வச்ச பாசத்தை நான் மதிக்கிறேன். ஆனா நீ இவ்வளோ பெரிய ஆபத்தைக் கொண்டு வர்றது எனக்கு சரியா தெரியல. ஏற்கனவே ஆனந்தியை இழந்து மீண்டு வராத உன்னை பெத்தவங்க உன்னையும் இழந்தா அவங்க உருக்குலைஞ்சிப் போயிருவாங்க “ என்று வசந்த் கூறவே, அவளால் அதனை முழுதாக உணர முடிந்தது.

இருந்தும் அக்காவின் குற்றவுணர்வில் இருந்து மீள வழி தெரியாது இதனை செய்ய முன் வந்தாள். அண்ணன் இருக்க பெற்றவர்களைப் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம்.

“நீ இப்படி பண்ணுறதுக்கு கூட படிச்சவனை காதலிச்சி ஓடிப் போயிட்டேன்னு வேணா நாங்க சொல்லிக்குறோம் “ என்று அவளின் அருகில் இருந்த தோழி கூற,

“ஏற்கனவே அக்கா விசியத்தை இன்னும் ஊருக்குள்ள பேசிட்டு தான் இருக்காங்க. இதுல நானும் அப்படியே பண்ணுறேன்னு தெரிஞ்சா பெத்தவங்க தப்பான முடிவுக்கு போக வாய்ப்பு இருக்கு. இப்போ நடந்த விபத்து எனக்காக நடந்தது மாதிரியே இருக்கு. இனி நான் புது வாழ்க்கை வாழப் போறேன். நிச்சியம் இதுல என் உயிரே போனாலும் உண்மையைக் கொண்டு வருவேன் “ தோழிகளால் இதற்கு மேல் எதுவுமே கூற முடியவில்லை.

அங்கிருந்த அனைவரிடம் தன் கரம் குவித்து தான் கூறிய பொய் என்றும் பொய்யாகவே இருக்க வேண்டுமென கண்ணீரோடு வேண்டவே, சம்மதித்தனர். இனி ஒவ்வொருவரும் தங்களுக்கான வேலையை  தேடிக் கொண்டு எங்கோச் செல்ல தான் போகிறார்கள். அதோடு சேர்ந்து இந்த பொய்யும் செல்லட்டுமே !

அனாதையாகப் பெற்றவர்கள் இல்லாது உறவுகள் இன்றி வாழ்ந்த அஞ்சனாவிற்க்கு அவளின் இறப்பின் மூலம் ஒரு புது சொந்தம் கிடைத்தது.  

அன்று அதிகாலையே செய்தியில் இந்த செய்தியை பரவ விட்டனர். இருள் சூழப் போகும் நேரம் காட்டுப் பகுதியில் விபத்து என்பதால் மறுநாள் தான் செய்தி ஊடகங்கள் அதனை எடுக்க ஆரம்பித்தனர்.

இங்கே வயலின் வேலை செய்ய ஆட்கள் வந்து விட்டார்களா என்பதைக் காண சிவராம் கிளம்ப, கைபேசி மூலம் இளையவள் இறந்த செய்தி வந்தது.

மூத்தவளின் துக்கத்திலே இன்னும் மீளாது இருக்க இதில் இளையவள் என்றால் அந்த பெற்றவர்களின் நிலையைச் சொல்லவா வேண்டும். கல்லூரியில் இருந்து அழைத்துச் சென்ற பிள்ளைகளின் குடும்பத்தார்க்கு கூறினர்.

அன்றையப் பொழுதுச் சென்று மறுநாள் காலை நேரம் அந்த மருத்துவமனைக்கு அழுகையோடு ஐஸ்வர்யாவின் தந்தையின், சொந்தமும் வந்தனர்.

அவர்களை மறைந்து நின்று கண்டவளுக்கு அழுகை தாங்க முடியவில்லை. கண்ணீர் நிற்காது வழிந்தோட தன் நெஞ்சை இறுகப் பற்றிக் கொண்டாள்.

விசாரித்து அஞ்சனாவின் சடலத்தைக் வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு வந்து அவர்களின் முன்னேக் காட்ட, தன் மகள் என்றே நினைத்துக் கொண்டார். அந்த துக்கத்திலும் அவளுக்கு, இவளை ஏற்றுக் கொண்டதில் ஒரு துளி நிம்மதி.

“ஐயோ ! ஐயோ ! முத்துமணியா இருந்த ரெண்டு பேருமே என்னை விட்டிட்டு போயிட்டீங்களே ?” தலையில் அடித்துக் கொண்டு சிவராம் அழ, பார்த்தவளுக்கு வேதனை தாங்க முடியவில்லை.

அப்படியே சுவரோடு சரிந்தவளோ முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டாள். இது எத்தகைய வலி என்பதை வசந்தால் உணர முடிந்தது.

இந்த வலிக்காகவே நிச்சியம் இந்த பெண்ணிற்கு உறுதியாக இருந்து தன்னுயிரேப் போனாலும் தன் காதலியின் இறப்பைக் கண்டு பிடிக்க சத்தியம் செய்துக் கொண்டான் வசந்த்.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழுங்குமாறு கேட்டுகொள்கிறேன்.


Leave a comment


Comments


Related Post