இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 19 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 13-04-2024

Total Views: 21842

அத்தியாயம் 19

ஆணவனின் அதிரடி செயலில் அதிர்ந்து போன பெண்ணவளோ தன்னால் முடிந்த மட்டும் அவனை தடுக்க அவனது பிடியோ இரும்பு பிடியாக இருந்தது.

அவளோ அவன் செயலில் கண்களை இறுக்கமாக மூடி இருக்க அவன்தான் விழி விரித்தான்.

தன் பலம்கொண்ட மட்டும் அவனை பிடித்து விலக்கி தள்ளியவள் அவன் முகம் காணாமல் அப்படியே மடங்கி அமர்ந்து கொண்டாள்.

மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவனை.

அவனுக்கும்  இது முதல் முத்தமே.

ஒரு பெண்ணின் அருகாமையை இத்தனை நெருக்கத்தில் அவன் உணர்ந்ததே இல்லை.

இதுவே முதல் முறை.

மடங்கி அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு  இருந்தவளை தன் பின்னந்தலையில் கையை வைத்து அழுந்த கோதியபடி வெளியேற அவளோ அவன் சென்று வெகுநேரம் கழித்தும் அமர்ந்த நிலையை மாற்றவில்லை அருணா வந்து அழைக்கும் வரை.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ அருவி என அருணா அழைக்கும் குரல் கேட்டவள் பட்டென நிமிர்ந்து பார்க்க அங்கு அவன் இருந்ததற்கான சுவடே இல்லை.

கண்களை சுழலவிட்டவள் அவன் இல்லை என அறிந்து எழுந்தவள் தன் உதட்டை தொட்டு பார்க்க அது கைப்பட்டாலே எரிந்தது.

"ச்சே... மனுஷனா அவன் மிருகம்...." என நினைத்தவள் மீண்டும் அருணா அழைக்கும் குரல் கேட்டு "இதோ வரேன்த்தை...." என்றவள் முகத்தை அழுந்த துடைத்தபடி வெளியேறினாள்.

பின் வாசல் வழியாக மீண்டும் வேப்பமரத்தடிக்கு வந்தான் சுரேன்.

தன்னையே நொந்தபடி "என்ன பண்ணி வச்சிருக்கேடா இடியட்... என்ன நினைப்பா என்ன பத்தி... காமக்கொடூரன்னு நினைக்க மாட்டா...." என தன்னையே திட்டிக்கொண்டு வந்தவன் பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது அங்கு பாய்ந்த அந்த குளிர்ந்த நீரை  கையில் அள்ளி முகத்தில் அடித்தான்.

அவளின் உதட்டு சுவை இன்னும் தன் உதடுகளில் தேங்கி இருப்பதுபோல இருந்தது அவனுக்கு.

"ச்சே... என்னடா லூசு நீ..." என தன்னையே திட்டிக்கொண்டு வந்தவன் அங்கு மாமரத்தடியில் இருந்தா கயிற்று கட்டிலில் அமர்ந்து இருந்த வாசுவை பார்க்க அவனோ இவன் வருகையை கூட உணராமல் அமர்ந்து இருந்தான்.

வாசுவின் மேல் சுரேனுக்கும் சுரேன் மேல் வாசுவிற்கும் எப்போதும் மிகுந்த அன்பும் அக்கறையும் உண்டு.

ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் வாசு எப்போதும் என் தம்பி என கூறும் சுரேன் அவனை எங்கும் எவரிடத்திலும் விட்டு கொடுத்ததில்லை.

அதேதான் வாசுவிற்கும் சுரேன் தன் அண்ணன் அது எப்போதும் மாறாது அவனுக்கும்.

இன்று இருவருக்கும் ஆறுதல் கூற கூட யாருமின்றி தனிமையை அதிகம் உணர்ந்தனர்.

மெல்ல அவன் அருகில் சென்றவன் அவன் தோளை தொட அதை உணர்ந்து திரும்பி பார்த்தவன் பட்டென எழுந்து அவனை இறுக்கி கொண்டான்.

"சுரேன்... ஐயம் ஹெல்ப்லஸ்..." என கூற "விடுடா...."என்றான் அவன்.

"என்னால இத டாலரேட் பண்ண முடியல.. நாம இந்த ஊர்ல பெரிய குடும்பம்... எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்... இது நம்ம குடும்ப பேர கெடுக்கத்தான் யாரோ  பிளான் பண்ணி செஞ்சிருக்கணும்..." என அவன் கூற.

"நீ சொல்றது சரிதான் வாசு... எனக்கு என்னமோ அந்த பொண்ணு தனியா இத செஞ்சிருக்க வாய்ப்பு இல்லன்னுதான் தோணுது..." என்க.

"எக்ஸாக்ட்லி...." என்றபடி அங்கு வந்தான் சுந்தர்.

அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு "ஆமா எங்கெல்லாம் உங்க ரெண்டு பேரையும் தேடறது..." என கேட்டபடி வந்தவன் சுரேனை நகர்த்திவிட்டு அமர அவனை பார்த்து முறைத்தான் சுரேன்.

"என்னடா முறைப்பு... நீயெல்லாம் என்னை முறைக்க கூடாது...நான்தான் உன்மேல கோபப்படனும்... ஒரு அறியாப் பையன விட்டுட்டு வந்தோமே... அவன் என்ன ஆனானோ ஏது ஆனானோன்னு ஒரு அக்கறை வேணாம் ...."என அவன் கேட்க

 "டேய்... நானே டென்ஷன்ல இருக்கேன் அமைதியா இரு..." என்றான் சுரேன்.

"உனக்கு என்னப்பா நீ செட்டில்ட்டு... குலதெய்வ கோவிலுக்கு போலாம்னு சொல்லிட்டு... இங்க வந்து கல்யாணம் பண்ணிட்ட... அதோ அவனும் இருக்கானே ஊருக்குள்ள சண்டியர் மாதிரி சுத்திட்டு திரிஞ்சான்... அவனையும் பிடிச்சி கால்கட்டு போட்டுவிட்டுட்டாங்க... இப்ப நான் மட்டும்தான் மொட்டைப்பயலா சுத்திட்டு இருக்கேன்..."என்க.

"டேய்... ஏதாவது படிச்சவன் மாதிரியா பேசற நீ...ஏதோ பட்டிக்காட்டான் மாதிரி பேசிட்டு இருக்க..." என சுரேன் கேட்க.

"டேய்... பெரியவங்க என்ன சொல்லி இருக்காங்க... பி எ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம்னு சொன்னத நீ கேள்விப்பட்டது இல்ல... அதத்தான் நான் பாலோ பன்றேன்... கிராமத்துல இருக்கோம்... இங்க எப்படி இருக்கனுமோ அப்படி பேசறேன்... இதுல என்ன இருக்கு..." என அவன் கேட்க.

"டேய்...சுந்தர்... ஒழுங்கா இங்க இருந்து போய்டு...நாங்க ரெண்டு பேரும் செம்ம கோபத்துல இருக்கோம்...எங்க கோபத்த எல்லாத்தையும் மொத்தமா உன் மேல திருப்பிட போறோம்... போய் உன் ஆசை அப்பா சக்கரவர்த்தி இருக்காரு இல்ல அவருக்கு சிங்சான் போட்டுட்டு இரு..."என்க.

"அட என்னங்கடா நீங்க... அவரு என்னடான்னா போய் அந்த தடிமாடு ரெண்டையும் வர சொல்லுன்னு சொல்றாரு... நீங்க என்னடான்னா அவருகிட்ட போக சொல்றீங்க நான் எங்கயும் போகல நான் போய் சாப்பிட போறேன் போங்கடா...." என்றபடி எழுந்து செல்ல எழும் வேகத்தில் அவனுக்கு பின்னால் நின்ற சுசிலாவின் நெற்றியில் முட்டிக் கொண்டான்.

அவளோ "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." என நெற்றியை தேய்த்துவிட்டு அவனை பார்க்க "ஏம்மா பார்த்து வரமாட்டியாம்மா..." என்றவனும் தன் நெற்றியை தேய்த்தபடி இருந்தான்.

அவளோ அமைதியாக "மன்னிச்சுக்குங்க..."என்றவள் "சின்ன ஐயா..." என வாசுவை அழைக்க அவனோ அவளை சலனமில்லாமல் நிமிர்ந்து பார்த்தான்.

அவன் கண்களை நேரே காணமுடியவில்லை அவளால்.

தலை குனிந்தவள் "பத்மினி அம்மா உங்கள வர சொன்னாங்க...."என கூற.

அவனோ அவளை பார்த்த பார்வையில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

சுரேனுக்கு அவனின் பார்வையின் தெளிவாக புரிந்தது.

அவளை காணும் அவன் கண்களில் அத்தனை வலி.

ஆசை கொண்ட பெண் அருகில் இருக்க தன்னால் அவளிடம் தான் அவளை விரும்பியதை வாய்விட்டு கூற முடியாத வலியை கண்களில் சேர்த்து அவளை ஏக்கமாக பார்க்க அவனின் வலி உணர்ந்த சுரேனோ அவன் தோளில் கைவைத்து அழுத்தம் கொடுக்க "நீ போ நாங்க வரோம்..." என அவளுக்கு சுரேன்தான் பதில் கூறினான்.

இது எதையும் சுந்தர் கவனிக்கவில்லை "ஒருவேளை நமக்கும் இந்த ஊர்லயே பொண்ணு அமைஞ்சிடுமோ..." என்ற அதி முக்கிய கேள்வியில் யோசனை செய்தபடி இருந்தான் அவன்.

அவள் அவ்விடம் விட்டு சென்ற பிறகும் கூட தன் நிலையை மாற்றவில்லை வாசு.

"தேவா..." என சுரேன் அழைக்க இமைதாண்டி விழ இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன் "வா போலாம்..." என சுரேனை அழைத்தான்.

அவன் குரலே சரியில்லை

"அந்த பொண்ணு...."என சுரேன் கேட்க.

"ஆசைப்படறது எல்லாமும் கிடைக்கிறது இல்ல இந்தர்... வா போலாம்...." என அவன் கைபிடித்து அழைத்து செல்ல முற்படுகையில் எங்கிருந்தோ ஒரு கத்தி குறி தவறி அவன் காலடியில் வந்து விழுந்தது.

பதறிய சுரேன் அவனை பின்னிழுத்து அவன் காலை பரிசோதிக்க நல்லவேளை கத்தி அவன் காலில் படவே இல்லை.

ஒருநிமிடம் அதிர்ந்த வாசு கத்தி வந்த திசையை பார்க்க வேலிக்கு தாண்டி யாரோ வேகமாக ஓடும் சத்தம் கேட்டது.

அவனும் சத்தம் வந்த திசையில் ஓடப்பார்க்க அவனை இழுத்து நிறுத்தினான் சுரேன்.

"வா போகலாம்..." என்க.

"அவ தனியா இத செய்ய வாய்ப்பே இல்ல.. யாரோ அவளுக்கு பின்னால இருந்து இயக்கறாங்க..." என அவன் கூற.

"ம்ம்ம்ம் கண்டுபிடிக்கலாம்... வா முதல்ல இங்க இருந்து போகலாம்...என்றான் சுந்தர்.

கீழே விழுந்து கிடந்த கத்தியை வேகமாக எடுக்க போன வாசுவை பட்டென தடுத்த சுரேன் அந்த கத்தியை தன் கைக்குட்டை கொண்டு எடுத்து சுற்றிலும் பார்வையை சுழற்ற அங்கு தேங்காய் உறிக்கப்பட்டு அதன் நார்கள் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு இருக்க அதை நோக்கி சென்ற சுரேன் கத்தியை தன் கைக்குட்டையால் சுத்தியவன் பத்திரமாக ஒரு இடத்தை தேர்வு செய்து மறைத்து வைத்தவன்  "நான் சென்னைக்கு போறதுக்குள்ள இது யார் செஞ்ச வேலைன்னு கண்டுபிடிச்சே ஆகனும் இப்ப வாங்க போலாம் என்றவன் டேய் ஓட்ட வாயை வச்சிட்டு வீட்ல இத சொல்லிட்டு இருக்காத..." என சுந்தரை பார்த்து கூற.

அவனோ ஏதோ சிந்தனையில் இருந்தவன் தலையை மட்டும் அசைத்தான்.

அவனை கேள்வியாக பார்த்த வாசு "என்ன யோசனை...?" என கேட்க.

"ம்ம்ம்ம்... நீங்க இங்க இருக்கறது யாருக்கும் தெரியாது நானே வீடு புல்லா தேடிட்டு கடைசியாதான் கண்டுபிடிச்சு வந்தேன்... அந்த பொண்ணு எப்படி சரியா இங்க வந்தா... அவ வந்துட்டு போய் ரெண்டு நிமிஷம் கூட ஆகல அதான் சந்தேகமா இருக்கு..." என்க.

"சுந்தர்... நீ நினைக்கிற மாதிரி அவ அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் இல்ல.. புழு பூச்சிக்கு கூட பயந்துக்கிற ஆளு..." என்க.

"அப்போ இத யாருதான் செஞ்சு இருப்பாங்க...?" என சுரேன் கேட்க.

வாசுவோ "வேற யாரு அந்த வஜ்ரவேலு குடும்பம்தான்..." என வாசு கூற.

"யாரு திகம்பரன் அப்பாவா...?" என சுரேன் கூற.

"ம்ம்ம்ம்..."என்றான் வாசு.

அப்போது அருவி அவர்களை தேடி வந்தாள்.

மூவரும் நிற்பதை பார்த்தவள் குறிப்பாக சுரேனை பார்க்காமல் "வாசு.... இங்க என்ன பன்றீங்க.... மாமா எவ்ளோ நேரமா தேடிட்டு இருக்காங்க.... உடனே கூட்டிட்டு வர சொன்னாங்க வாங்க..." என்க.

அவனோ "அருவி..." என அழைத்தவன் "சாரி... இனி அண்ணின்னு கூப்ட்டு பழகிக்கிறேன்...." என்க.

சுரேனை ஒரு பார்வை பார்த்தவள் "அதுக்கு அவசியம் இல்ல வாசு... நீ எப்பவும் போல அருவின்னே கூப்டு...." என்க.

அவளை எரித்துவிடுவது போல பார்த்தான் அவன்.

அவளோ அவனை கவனியாமல் "வா... வாசு..." என்றபடி அவள் முன்னே நடக்க சுந்தரும் வாசுவும் அவளை தொடர்ந்து நடந்தனர்.

அவன் அவனை கவனியாமல் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் "ஏய்..."என அழைக்க மூவரும் திரும்பி பார்த்தனர்.

"நீங்க போங்கடா மேடம்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு..." என்க.

வாசுவோ "சுரேன்... அருவி..." என ஏதோ கூற வர "நீ போடா..." என்றான் அவன்.

அவளோ அவனை பார்க்காமல் அங்கும் இங்குமாக பார்வையை திருப்பி கொண்டு இருந்தவளின் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்ப அவனின் அந்த செயலில் அதிர்ந்து விழித்தாள் மங்கையவள்.

"என்னடி ஓவரா பன்ற... என்னை பார்த்து பேச மாட்டியா...?" என அவன் கேட்டான்.

தாடையை அழுத்தி பிடித்ததில் வலி எடுக்க "விடுங்க வலிக்குது..." என அவள் திணறியபடி கூற "இந்த வாய்தான என்ன எதிர்த்து பேசுது..."என்றவன் மீண்டும் அவள் இதழோடு இதழ் பதித்து இருக்க இதை பார்த்த வாசுவும் சுந்தரும் ஆவென வாய் பிளந்தனர்......


Leave a comment


Comments


Related Post