இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...28 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 15-04-2024

Total Views: 30783

கையில் பரிசு பொருட்களுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் விசித்ரா. பூசினாற் போன்ற உடல்வாகுதான் என்றாலும் குழந்தைத்தனம் மாறாத முகம். முகிலனும் மீராவும் அவளை இனிமையாக வரவேற்றனர். ஆனால் விசித்ராவின் கண்கள் தேடியது என்னவோ பூச்செண்டைத்தான்… சமையலறையில் வேலை செய்வது போன்ற பாவனையில் சுற்றிக் கொண்டிருந்தாள் சண்டிராணி.


“அந்த பஜாரி என்ன பண்றா…?” பல்லை கடித்தப்படி மீராவிடன் மெல்லிய குரலில் கேட்டான் தரணி.


“ரொம்ப மும்முரமா டிபன் ரெடி பண்றாண்ணா…”


“கிழிச்சா… வீட்டுக்கு வந்தவளை வான்னுகூட கூப்பிட மாட்டாளோ…” எரிச்சலுடன் ஒற்றை விரலால் நெற்றி கீறினான்.


“உங்க மேல அவ்வளவு பொசசிவ்னஸ்…” குறும்புச் சிரிப்புடன் மீரா கிசுகிசுக்க “என் வாயில நல்லா வந்துரப் போகுது… அவளுக்கு மொத்தமா இருக்கு ஒரு நாள்…” மீண்டும் பல்லைக் கடிக்க “என்னைக்குன்னு சொல்லுங்கண்ணா… நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பிரைவேசி குடுத்துட்டு ஓடிடறோம்…” மீரா கண்சிமிட்டி சிரிக்க அவளை முறைத்தபடியே விசித்திராவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான் தரணி. கையில் பழரச கண்ணாடி குவளைகளுடன் வெளியே வந்தாள் பூச்செண்டு.


“வாங்க…” வெறுமையான ஒரு சிரிப்பு… அப்படியே ஒரு அழைப்பு.


“இது போங்கன்னு சொல்ற மாதிரில்ல இருக்கு…” பொங்கி வந்த சிரிப்புடன் தரணியின் காதை கடித்தாள் விசித்ரா.


நிமிர்ந்து எதிரில் நிற்கும் மனைவியை முறைக்க அவளும் பதிலுக்கு சளைக்காமல் முறைத்து மற்ற மூவருக்கும் கண்ணாடிக் குவளைகளை கொடுத்து நான்காவதாக தரணி கை நீட்டி எடுக்கும் முன் தான் எடுத்துக் கொண்டு மீராவின் அருகில் அமர்த்தலாய் அமர்ந்து கொண்டாள். அனைவருக்குமே இதழை வெடித்து வரும் சிரிப்புதான்… தரணியின் கோபத்தை கிளர்வதுபோல் ஆகிவிடும் என்று அடக்கி வாசித்தனர். பல்பு வாங்கியவன் அவளை பஸ்பமாக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.


சிறிது நேரம் முகிலன் மீராவிடம் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின் கலகலவென பேச ஆரம்பித்தாள் விசித்ரா. எதிரெதிரே அமர்ந்திருந்த பனைமரமும் போன்சாய் மரமும் மட்டும் கர் புர் என ஒன்றை ஒன்று கோபப் பார்வைகளால் தாக்கிக் கொண்டிருந்தன. விசித்ராவின் அருகில் அமர்ந்திருந்தவனை தள்ளி உட்காரு என்று கண்களால் அவள் ஆணையிட அவனோ வேண்டுமென்றே இன்னும் நெருங்கி அமர்ந்தான். மூக்கை சுழித்து அவனை முறைத்தவள் ஒற்றை விரல் கொண்டு தன் காதினை மெல்ல தட்டி காட்டினாள்.


‘ஓ… என் காதை கடிப்பியோ… நான் உனக்கு வேற பிளான் வச்சிருக்கேன்டி…’ என்று கண்களை சுழற்றி தான் சொல்ல வந்ததை புரிய வைத்து கீழ் உதட்டை கடித்தபடி ஒரு மார்க்கமாய் அவன் சிரிக்க அவளோ தீடுமென விழித்து பின் சமாளித்து சமையலறைக்குள் எழுந்து சென்றிருந்தாள்.


அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது… மீராவையும் அமர வைத்து தானே அனைவருக்கும் உணவு பரிமாறினாள் பூச்செண்டு. பொங்கல் பூரி இட்லி வடை என்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க “அய்யோ… எதுக்கு இத்தனை ஐட்டம்ஸ்…? நான் ஏற்கனவே வெயிட் அதிகம்… இதெல்லாம் சாப்பிட்டா அவ்வளவுதான்…” தோள்களை உயர்த்தி சிரித்தாள் விசித்ரா.


“ஒருநாள்தானே… அதெல்லாம் ஒன்னும் பண்ணாது... எல்லாம் பூச்செண்டோட பிரிப்பரேஷன்தான்… நான் சும்மா ஹெல்ப்தான் பண்ணினேன். பூச்செண்டு ரொம்ப டேஸ்டா சமையல் பண்ணுவா…” சிறப்புச் சான்றிதழ் வழங்கி சிரித்தபடியே சாம்பார் பாத்திரத்தை விசித்திராவை நோக்கி நகர்த்தி வைத்தாள் மீரா. ஒரு நொடி உண்பதை நிறுத்தி பூச்செண்டின் முகம் பார்த்தாள் விசித்ரா.


“தைரியமா சாப்பிடுங்க… விஷமெல்லாம் கலந்து வைக்கல… இந்த மசால்லதான் கொஞ்சமா பேதி மாத்திரை கலந்தேன்…” 


மற்றவர்கள் இட்லி பொங்கல் சட்னி, சாம்பாரை ரசித்து உண்டு கொண்டிருக்க தலைவர் மட்டும் முழு மூச்சில் பூரி மசாலை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவள் சொன்னவுடன் குபுக்கென வாயில் இருந்ததை துப்பியவன் பதட்டமாய் அடிவயிற்றில் கை வைக்க பட்டென வெடித்து சிரித்தாள் பூச்செண்டு.


“குள்ளி… உன்னை என்ன பண்றேன் பாருடி… பேதி மாத்திரை கலந்து வச்சு கக்கூஸ்ல அமுக்கி என்னை கொல்லப் பாக்குறியா….?” சத்தமிட்டபடி தரணி அவளை துரத்த குதித்து ஓடி அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டாள் நரிச்சின்னக்கா.


“ஏய்… வாடி வெளியில…” தரணி கத்திக் கொண்டிருக்க மற்றவர்களோ புரை ஏற சிரித்துக் கொண்டிருந்தனர்.


“டேய்… அவ சொன்னா அதை அப்படியே நம்பிடுவியா… உன் கூட ஒரண்டை இழுக்கறதுக்காக பண்ணிட்டு இருக்காடா… லூசுடா நீ…” சத்தமிட்டு சிரித்தபடியே முகிலன் கூற தலையில் அடித்துக் கொண்டு வந்து அமர்ந்தவன் மீண்டும் விட்ட வேலையை தொடர்ந்தான். பின்னே மனைவியின் சமையலுக்கு வாய்த்த சிறப்பான அடிமை அல்லவா அவன்.


“செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கே… உங்க ரெண்டு பேருக்கும் நல்லா பொழுது போகும் இல்லையா…?” பொங்கலை சாம்பாரில் புரட்டி தொண்டைக்குள் இறக்கியபடியே மீராவிடம் கேட்டாள் விசித்ரா.


“எங்களோட என்டர்டைன்மென்ட் என்ஜாய்மென்ட் எல்லாம் இவங்கதான்… டிவி ப்ரோக்ராம்ஸை விட இவங்க ப்ரோக்ராம்ஸ் ரொம்ப திரில்லிங்கா இருக்கும்… என்ன ஒன்னு… ஆபீஸ்ல கெத்தா சுத்திட்டு எல்லா வேலையையும் ஈசியா சமாளிக்கிற சுப்பீரியர் ஆபிசர் வீட்ல ஒரு தம்மாத்தூண்டு பீஸை சமாளிக்க முடியாம முழிச்சிட்டு இருக்கிறதை பார்க்கிறதுதான் அல்டிமேட் காமெடி…” முகிலன் சொல்லி முடிக்கும் ஒரு டம்ளர் பறந்து வந்து அவன் தலையில் விழுந்தது.


அனைவரும் உண்டு முடித்திருக்க தான் வாங்கி வந்த பரிசுப் பொருளை முகிலன் மீராவிடம் கொடுத்தாள் விசித்ரா. மற்றொன்றை கையில் எடுத்தவளிடம் “இது யாருக்குடி…?” புருவம் உயர்த்தி கேட்டான் தரணி.


“நீயும் புதுசா கல்யாணம் ஆனவன்தானே…”


“நேத்து என்னவோ கொடுக்க மாட்டேன்னு சொன்ன…”


“ஆமா… இது உனக்காக இல்ல… பூச்செண்டுக்காக…”


இழுத்து பெருமூச்சுவிட்டவன் “மீரா… அந்த காட்டேரியை கூட்டிட்டு வா…” என்றான் எரிச்சலாய்.


“டேய்… என்னடா இது… பொண்டாட்டிக்கு விதவிதமா பேர் வெச்சிருக்க… She is so cute… எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு…” சொன்ன விசித்ராவை விசித்திரமாய் பார்த்தான் தரணி.


“ஆமாடா… அவ சேட்டை எல்லாமே ரசிக்கிற மாதிரிதான் இருக்கு… கோபமே வரல… You are so lucky da.. சும்மா கண்ணே பொன்னே காதலேன்னு சினிமா வசனம் பேசி உருகுறதெல்லாம் boring criteria… இப்படியும் இருக்கணும்… அப்போதான் நெருக்கம் அதிகமாகும்… நிறைய புரிதல் வரும்… லைஃப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்… நானும் என் புருஷன்கிட்ட இனிமே இதே மாதிரி ட்ரை பண்ணப் போறேன்…”


சிரித்தபடி சொன்னவள் தானே பூச்செண்டின் அறைக் கதவை தட்டினாள். கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டியவளின் கன்னத்தில் நச்சென முத்தம் வைத்திருந்தாள் விசித்ரா. ‘ஹான்…’ அவள் கண்கள் விரித்து நிற்க மற்றவர்களும் கூட இதை எதிர்பார்க்கவில்லை… ஆச்சரியமாய் பார்த்தனர்… விழித்து நின்றவளை தள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் விசித்ரா.


தரணி வேகமாய் உள்ளே வர “டேய்… நாங்க பொம்பளைங்க… பர்சனலா ஏதாவது பேசுவோம்… உனக்கு இங்கே என்ன வேலை…? இந்த கிப்ட் பூச்செண்டுக்குத்தான்… உனக்கு கிடையாது… வெளியே போ…” பொய்யாய் முறைத்து அவனை பிடித்து வெளியே தள்ளி கதவை தாழிட்டாள் விசித்ரா.


தன் கையில் இருந்த பரிசுப் பொருளை பூச்செண்டிடம் நீட்ட அவள் கொடுத்த முத்தத்திலேயே கரைந்து போனவள் “இ..இது நா..நான்…” சங்கடமாய் நெளிய அவள் கையைப் பிடித்து இழுத்து அந்த பரிசுப் பொருளை வைத்தவள் ஒரு நாற்காலியில் அவளை அமர்த்தி தானும் அமர்ந்து கொண்டாள்.


“பூச்செண்டு…” பெயரை அழுத்தி ஆனந்தமாய் அழைத்தாள்.


“நீ மட்டும் இல்ல… உன் பேர் கூட யுனிக்தான்… உன் பேர் அவ்வளவு அழகு… உன்னை மாதிரியே…” விகல்பம் இன்றி சிரித்து தன் கன்னம் வருடியவளை கனிவாய் பார்த்தாள் பூச்செண்டு.


“நான் ஃபர்ஸ்ட் டைம் இந்த பெயரை கேள்விப்படறேன்… எவ்வளவு அழகான பேர்…? ரொம்ப அனுபவிச்சு ரசிச்சு வச்சிருக்காங்க…” தன் பெயரை சிலாகித்து ரசித்து ஒருத்தி கூறுவதை முதன்முறையாய் ஆச்சரியமாய் பார்த்தாள் பூச்செண்டு.


“ப்ச்… எனக்கு ஒரே பெண் குழந்தைதான்… இந்த பேரை பத்தி முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா நிச்சயமா இந்த பெயரை அவளுக்கு வச்சிருப்பேன்…” விசித்ராவின் வார்த்தைகளை நம்பவே முடியவில்லை இவளால்.


“அண்ட் ஒன் மோர் திங்… உன் புருஷனுக்கு உன்னை எந்த அளவுக்கு பிடிக்குதோ அதைவிட அதிகமா உன் பெயரை பிடிக்கும்… என் பொண்டாட்டி பேர் எவ்ளோ அழகு பார்த்தியான்னு ரசிச்சு பேசுவான்… உன்னை பத்தி பேசுறதுக்காகவே டெய்லி போன் பண்ணுவான்… பத்து விஷயம் பேசினா அதுல எட்டு விஷயம் உன்னை பத்திதான் இருக்கும்…”


“அப்போ மீதி ரெண்டு விஷயம்…?” குரங்கு குதர்க்கமாய் கேட்ட கேள்வியில் ஒரு நொடி அமைதியானவள் அடுத்த நொடி கலகலவென சிரித்தாள்.


“மீதி இரண்டும் உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு ஆலோசனை கேட்கிற விஷயமா இருக்கும்…” விசித்ராவின் குறும்பு நிறைந்த பதிலில் உதட்டை கடித்து பொங்கி வந்த புன்னகையை அடக்கியபடி அமர்ந்திருந்தாள் பூச்செண்டு. 


“உனக்கு தரணியை ரொம்ப பிடிக்கும்தானே…” கண்களை சுருக்கி தலையாட்டியபடி பூச்செண்டின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள் விசித்ரா.


சில்லென சிவந்து போய் தனக்குள் தோன்றும் மாற்றங்களை மறைக்க முடியாது மெல்ல உடலை நெளித்தபடி நாணப் புன்னகையுடன் இன்னும் தலையை தாழ்த்திக் கொண்ட பூச்செண்டின் இந்த பரிமாணமும் இன்னும் கூடுதல் அழகை கொடுக்க தானும் குனிந்து அவள் நாடியை பற்றி கொண்டவள் “உன்னை உசுப்பேத்தறதுக்காகத்தான் ரெண்டு பேரும் நேத்து ஓவரா சீன் போட்டோம்… ஆனா பையன் காதை பங்கம் பண்ற அளவுக்கு வருவேன்னு நினைக்கல… அவன் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றான்னு உனக்கு புரியலையா…?” மென்மையாய் கேட்க மெல்ல கண்களை நிமிர்த்தி அவளை பார்த்தாள்.


“ஆக்சுவலா எனக்கு நெக்ஸ்ட் மந்த் இங்கே வரலாம்னுதான் பிளான்… உன் புருஷன்தான் டெய்லி போன் பண்ணி டார்ச்சர் பண்ணி சண்டை போட்டு உடனடியா வரவழைச்சான். நீ வர்ற வரைக்கும் என் பொண்டாட்டியோட திறமை படுத்து தூங்கணுமான்னு ஒரே சத்தம்… ரிசப்ஷன் முடிஞ்சு வந்தவுடனே பார்லர் ஓபன் பண்ணனுமாம்… அதனாலதான் உடனே கிளம்பி வந்தேன்…” விசித்ரா பேசப் பேச தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது பூச்செண்டிற்கு.


“அ..அக்கா… சா..சாரி… நா..நான் உங்களை ஹர்ரட் பண்ற மா..மாதிரி ஏதாவது…” அவள் பேசப்பேசவே வேகமாய் இடைமறித்தவள் “அய்யோ… அந்த மாதிரி எல்லாம் எதுவுமே இல்லடா… பூச்செண்டு இஸ் ஆல்வேஸ் யூனிக்… நீ எப்பவும் உன்னோட இந்த குணத்தை மாத்திக்காதே… இன்னும் சொல்லப்போனா நீ இப்படி இருக்கிறது தான் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… சும்மா கோபப்படுற மாதிரி வெளியில நடிக்கிறான். இல்லேன்னா நீ கடிச்சு வச்ச காயத்தை காட்டி எப்படி என் பொண்டாட்டியோட லவ் பைட்னு (love bite) பெருமை பேசுவானா… உண்மையும் அதுதானே… அவன்மேல உள்ள உன்னோட காதலின் வெளிப்பாடுதானே அது…” 


மீண்டும் நாணத்துடன் தலை தாழ்த்திக் கொண்டாள் பூச்செண்டு. தன் கைப்பையை திறந்து மடிக்கப்பட்ட ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினாள் விசித்ரா.


“என்னக்கா இது…?”


“உன்னோட பிசினஸ்க்கு என்னவெல்லாம் தேவைப்படும் எங்கே வாங்கணும்னு எல்லாத்தையும் தெளிவா இதுல நோட் பண்ணி வச்சிருக்கேன்… எல்லாம் ஓகேவான்னு செக் பண்ணிக்கோ… என்ன டவுட்டா இருந்தாலும் எப்ப வேணாலும் கால் பண்ணு… நீ எல்லாத்தையும் செட் பண்றதுக்குள்ள அவன் என்னை பிழிஞ்சு எடுத்திடுவாங்கிறது வேற விஷயம்… ரிசப்ஷன் முடிச்சிட்டு வந்து சக்சஸ்ஃபுல்லா பார்லர் ஓபன் பண்ணு… இடையில நான் கண்டிப்பா வருவேன்…”


“நீங்களும் எங்க கூடவே ரிசப்ஷனுக்கு வர்றதா சொல்லிட்டு இருந்தாரே…”


“நேத்து வரைக்கும் அதுதான் பிளான்… ஆனா என் ஹஸ்பெண்டுக்கு திடீர்னு டெல்லியில மீட்டிங் அரேஞ்ச் ஆயிடுச்சு… நானோ அவரோ ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் இருந்தா என் பொண்ணு அட்ஜஸ்டா பண்ணிப்பா… ரெண்டு பேரும் இல்லேன்னா என் மாமியாரால சமாளிக்க முடியாது… ரொம்ப அழ ஆரம்பிச்சிடுவா… அதனால இன்னைக்கு நைட்டே நான் கிளம்பணும்… அதனாலதான் கிஃப்டை இங்கே வச்சு கொடுக்கிற மாதிரி ஆயிடுச்சு… எதுவும் நினைச்சுக்காதடா…”


அவள் கன்னத்தில் செல்லமாய் தட்ட “அய்யோ… பரவால்லக்கா… முதல்ல பாப்பாவை பாருங்க… எ..என்மேல கோ..கோபம் எதுவும் இல்லையே…” மீண்டும் தயக்கமாய் கேட்டாள்‌.


அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவள் “ஐ லவ் யூ…” ஆசையாய் கூறி மீண்டும் மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள். சட்டென்று மனதிற்குள் அதிகமாக பொருந்திப் போனாள் விசித்ரா. 


அறையில் இருந்து வெளியேறி இன்னும் சிறிது நேரம் அனைவருடனும் பேசிக் கொண்டிருந்து விடைபெற்றாள் விசித்ரா. மீராவிற்கு தேவையான சில அறிவுரைகள் வழங்கியபடியே அவளுடன் இணைந்து விசித்ரா முன்னே நடக்க வீட்டின் வாசலிலேயே முகிலனும் பூச்செண்டும் நின்றிருந்தனர். விசித்திராவுடன் இணைந்து நடந்த தரணி மீண்டும் திரும்பி வந்தான்.


“டேய்… கடைக்கு இன்டீரியர் ஒர்க் பண்ற ஆளுங்க இன்னைக்கு வராங்க… கூட்டிட்டு போய் கூட இருந்து பாத்துக்கோ… எனக்கு வேற வேலை இருக்கு..” இறுகிய முகத்துடன் கூறியவனை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அராத்து ஆனந்தி.


“நான் என் பொழப்பை பார்க்க போக வேணாமாடா…? நானும் மீராவும் கிளம்பணுமே…”


“உன் அத்தை மகளுக்காக இதுகூட செய்ய மாட்டியா…?” எரிந்து விழுந்தான் தரணி.


“உன் பொண்டாட்டிக்கு நீயே செய்யேன்... என்னை எதுக்கு இழுத்து விடற…?” இவனும் பதிலுக்கு பாய்ந்தான்.


“என்னால போக முடியாது… அதான் வாய் வண்ணாரப்பேட்டையில ஆரம்பிச்சு வாரணாசி வரைக்கும் போகுதே… அக்கறை இருந்தா ஆட்டோ புடிச்சு போகச் சொல்லு…” கீழ்கண்ணால் அருகில் இருப்பவளை கோபமாய் பார்த்தபடி கூற “நான் எதுக்கு ஆட்டோ புடிச்சு போகணும்…? அக்கறை இருந்தா வந்து என்னை கூட்டிட்டு போகட்டும்… இல்லேன்னாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ரெண்டு மணிக்கு விஜய் சூப்பர்ல நானி படம் போடுறாங்க… நான் ஜாலியா பாக்கப் போறேன்…” சிலுப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் பூச்செண்டு.


“இவள..” பல்லை கடித்தபடி உள்ளே செல்ல முறுக்கியவனை தடுத்த முகிலன் “நீ போய் விச்சுவை டிராப் பண்ணிட்டு வாடா… கிளம்பு…” என்று தள்ளினான்.


“அவன் படம் மட்டும் வீட்ல ஓடட்டும்… இன்னைக்கு டிவி ரெண்டு துண்டாகி கீழே விழும்… ஒழுங்கு மரியாதையா கிளம்பி ரெடியா இருக்கச் சொல்லு… இப்போ நான் வந்துடுவேன்…” கண்களை உருட்டி சத்தமாய் சொன்னவனின் குரல் காதில் விழ பெரிதாய் விரிந்த புன்னகையுடன் அறைக்குள் ஓடினாள் பூச்செண்டு.




Leave a comment


Comments


Related Post