இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 15-04-2024

Total Views: 22290


பாவை - 11

ஒரு வாரம் கடந்து விட, இனி இங்கு தான் தன் வாழ்க்கை என்பதை உறுதியாக்கிக் கொண்டாள் ஐஸ்வர்யா என்ற அஞ்சனா.

வசந்த் உதவியோடு தனக்கு தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு லேடிஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்க ஆரம்பித்தாள். அதோடு மட்டுமல்லாமல் அனைத்து சான்றிதழ்களின் அஞ்சனா என்ற பெயரையும் மாற்றிக் கொண்டாள். 

அனைத்து வேலைகளையும் முடித்து  மறுபடியும் அதே அலுவலகத்திற்கு வேலை கேட்டுப் போகவே, எப்படியாவது கிடைத்து விட வேண்டுமென வேண்டிக் கொண்டு தான் சென்றாள்.

“இதுக்கு முன்னாடி நீங்க வந்தீங்களா ?” வரவேற்ப்பில் இருந்த பெண் கேட்க,

“ஆமா வந்தேன், மறுநாள் வர சொன்னேங்க ? அப்போ எனக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆகிருச்சி. அதுல இருந்து வெளியே வர கொஞ்ச நாள் ஆனதுனால என்னால வர முடியாமப் போச்சு “

“இந்த காரணத்தை எங்க ஹெச்.ஆர் கிட்ட சொல்ல முடியாது மேடம். இப்போ தான் புதுசா வேலைக்கு கொஞ்சம் பேர் வந்திருக்காங்க. இப்போ வேலைக்கு இடம் இல்லை “ 

“ப்ளீஸ் எனக்கு வேலை கண்டிப்பா வேணும். நீங்க கேட்டு பாருங்களேன் உங்க சார்  கிட்ட “

“இது ஒன்னும் மளிகை கடை கிடையாது. நீங்க நினைச்ச நேரம் வந்து வேலை வேணும்ன்னு கேட்க. முதல நீங்க இங்கேயிருந்து கிளம்புங்க. எங்க சார் வர்ற நேரமாச்சு “ என்கவே,  உள்ளுக்குள் தோன்றிய எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேறினாள்.

அலுவலகம் வெளியே வர நினைக்க, சரியாக அவர்களின் ஹெச்.ஆர் உள்ளே நுழைந்தார். இருவரும் ஒரு நொடி மோதிக் கொள்ளும் நிலைக்கு வந்து சுதாரித்தே சட்டென விலகினாள் அஞ்சனா 

“சாரி சார் “ என்க,

“மை மிஸ்டேக் தான் சோ சாரி “ 

“இட்ஸ் ஓகே சார் “ தன்மையாக கூறிச் செல்ல முயல, 

“ஒரு நிமிஷம் “ தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியே செல்வதால் யாரென அறிந்துக் கொள்ள அழைத்தான்.

“யார் நீங்க ? எதுக்காக இங்கே வந்திருக்கீங்க ?” நிச்சியம் இங்கே வேலை பார்க்கவில்லை. தனக்கு தெரியாமல் எந்த பெண்ணாவது வேலை செய்ய முடியுமா என்ன ?

அதற்குள் வரவேற்ப்பில் இருந்த பெண் வேகமாய் வந்து, “சாரி சார். அவங்க வேலை கேட்டு வந்தாக. இல்லைன்னு சொல்லிட்டேன். இப்போ அனுப்பிறேன் “ எனக் கூறி, அவளின் அருகில் செல்லப் போனாள்.

அதற்குள் தடுத்த ஹெச் ஆர், “இருக்கட்டும். அவங்களை என்னோட ரூமுக்கு அனுப்புங்க “ என்றவாறு அவரோச் சென்று விட, மலர்ந்த முகமாக முன் வந்தாள் அஞ்சனா.

“உங்களோட டீடைல்ஸ் கொஞ்சம் சொல்லுங்க “ என்கவே, தன்னைப் பற்றிய தகவலைக் கூறினாள்.

“சரி அதோ, அந்த லெப்ட் சைடு போனா சாரோட ரூம் வரும் “ 

“தேங்க்ஸ் “ என்றவளோ அந்த அறையை நோக்கிச் செல்ல, அவரவர் இருப்பிடத்தில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அறுபது பேருக்கும் மேல் அங்கே வேலைப் பார்க்க, ஹெச் ஆர் அறை என்றிருக்கவே, அனுமதி வாங்கி உள்ளே நுழைந்தாள்.

“வாங்க. சிட் ப்ளீஸ் “ என்க,

“தேங்க்யூ சார் “ என்றவளோ அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். 

தன் கையில் இருந்த கோப்புகளைக் கொடுக்கவே, அதனை வாங்கியவனோ, “அஞ்சனா. ஸ்வீட் நேம் “ கூறிக் கொண்டே காண, குறுநகை முகமோடு அமர்ந்திருந்தாள்.

“குட். எல்லாமே அருமையா இருக்கு. படிப்புல அற்புதமா இருந்திருக்கீங்க ? இப்போ தான் முடிச்சிருக்கீங்களா ?” என்று அதனைக் கண்டு கேட்க,

“ஆமா சார் “

“சரி ஓகே நாங்க இங்கே உங்களுக்கு வேலை கொடுக்குறோம்ன்னா. எப்படி நீங்க எதிர்பார்க்குறீங்க ?”

“இப்போதைக்கு எனக்கு ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் சார். கண்டிப்பா என்னோட முழு முயற்சியைப் போட்டு என்னால எவ்வளோ கத்துக்க முடியுமோ அவ்வளோ புது விசியங்களையும் இது மூலமா கத்துப்பேன். அது மட்டுமில்ல “ என்று இன்னும் ஏதேதோ எப்படியாவது இங்கு ஒரு வேலையை வாங்கி விட வேண்டுமென எண்ணத்தில் கூறிக் கொண்டே இருந்தாள்.

அவளின் தன்னம்பிக்கை, தைரியம், பேச்சு விதம் அனைத்தையும் கண்டதோடு மட்டுமல்லாது அவளின் அழகினையும் கண்டார்.

“சரி. நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஜாயின் பண்ணிக்கோங்க. ஆறு மாதம் நீங்க எந்த கம்பிளைண்ட்டும் இல்லாம உங்க வேலையை சரியா பார்த்தா அதுக்கு அப்பறம் நிரந்திரமா உங்களை சேர்த்திருவோம் “  

“தேங்க்ஸ் சார் “ என்றவளோ தன் பைலை வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

கீழே வந்து காரில் அமர்ந்திருந்த வசந்திடம் கூறவே, “ரொம்ப நல்லது. என்னைக்கும் உனக்கும் கடவுள் துணை இருப்பாரு “ என்க,

“அந்த ஹெச். ஆர் எப்படி ?”

“எப்படின்னா ?”

“அவரோட குணம் “

“கொஞ்சம் கடினமா தான் இருப்பாரு. வேலையை சரியா செய்யலைன்னா கோவப்படுவாரு.“

“அது பார்த்தாலே தெரியுது. பொண்ணுங்க விசியத்துல எப்படி ?”

“ஏன் திடிருன்னு இப்படிக் கேட்குற ?”

“என்னை அவர் ஒரு மாதிரியா பார்த்தாரு. அந்த பார்வை சாதாரணமா தெரியல. அதான் கேட்டேன் “

“அழகா இருந்தா பார்க்க தானே செய்வாங்க ஐஸ்வர்யா சாரி சாரி அஞ்சனா. அவருக்கு கல்யாணமாகி ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் இருக்குறதா கேள்விப்பட்டேன். “

“அப்படியா சரி “ என்கவே, லேடிஸ் ஹாஸ்டல் அழைத்துச் சென்றான்.

அங்கேச் சென்று அவளை விட்டவன், “இனி எப்படி அந்த வேலைக்குப் போக போறே ? ட்ராவல் பத்தி கேட்குறேன் ” என்க,

“பஸ் ஆர் ஆட்டோல தான் போகணும். எனக்கு இதுவரைக்கும் உதவி பண்ணுனதுக்கு ரொம்ப நன்றி. ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லுறேன் “ 

“சரி அஞ்சனா. போனதுமே விசாரிக்க ஆரம்பிக்காதே ? ஒரு ரெண்டு மூணு மாசம் வேலையைப் பாரு. இந்த வேலை உனக்கு வருங்காலத்துல நல்ல பதவிக்கு வர்ற வாய்ப்பை கொடுக்கும். அதுனால இதையும் சேர்ந்து யூஸ் பண்ணிக்கோ. படிச்ச படிப்பு எப்பவும் வீணாக்க கூடாது. மத்தவங்களுக்கு அங்கே சந்தேகம் வர்றாம நடந்துக்கணும் “ என்று சில அறிவுரைகளை வழங்க கேட்டுக் கொண்டாள்.

பின் திரும்பிச் செல்ல நினைத்தவனோ, “அப்பறம். உனக்கும், எனக்கும் சம்மந்தம் இருக்குற மாதிரி அந்த ஆபிஸ்ல காட்டிக்காதே “ என்கவே தலையசைத்தாள். 

அவன் சென்று விட தன் அறையை நோக்கி வந்தாள். இரு பெண்கள் தங்கிக் கொள்வதுப் போன்று இருந்த அறை தான் உடன் இன்னொரு பெண்ணும் தங்கினாள். அவளோ அருகில் மற்றொரு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் பெண். தன் அக்காவோடு மட்டுமே அறையைப் பகிர்ந்து கொண்டவள் முதல் முறையாக மற்றொரு பெண்ணோடு, தனியறை வேண்டுமென்றால் அதற்குச் செலவாகும் என்பதால் இதற்கே ஒத்துக் கொண்டாள்.

நாட்கள் கடக்கவே மெல்ல அந்த பெண்ணோடு இருக்க பழகினாள். இருவரும் சகஜமாக பேசிக் கொண்டனர். அஞ்சனாவோ தனக்கு பெற்றோர் இல்லை. அனாதை ஆசிரமத்தில் வாழ வேலைக்காகச் சென்னை வந்தேன் என்று கூறினாள். அவளிடம் மட்டுமில்ல அங்கே யார்க் கேட்டாலும் அதை தான் கூறினாள்.

அன்று அலுவலகத்திற்கு முதல் நாள் வேலைக்கு கிளம்பினாள். அரை மணி நேரம் பயணத் தூரம். அலுவலகம் வந்துச் சேர, முதல் நாள் வேலை என்பதால் பயிற்சிக் கொடுப்பவர் ஒருவர் இருக்க அவரை அழைத்தார் ஹெச்.ஆர்.

“இவங்க இன்னைக்கு தான் புதுசா ஜாயின் பண்ணிருக்காங்க. டூ வீக்ஸ் வொர்க் பத்தி ட்ரைனிங் கொடுங்க “ என்க, வந்தவனும் கேட்டுக் கொண்டான்.

“நீங்க போங்க “ என்றதும், இருவரும் வெளியே வந்தனர்.

“என்னோட பேர் கைலாஷ். நான் பதினொரு வருஷமா இங்கே ட்ரைனரா வொர்க் பண்ணுறேன். உங்களுக்கு எப்போ எந்த சந்தேகம் வந்தாலும் என்ன வந்து கேளுங்க ?”

“தேங்க்யூ சார் “ 

“வெல்கம் “

“இதான் இனிமே உங்களோட கேபின். கைய்ஸ் எல்லாரும் கொஞ்சம் இங்க பாருங்க “ என்க, அந்த இடத்தில் இருந்தவர்களை அவரைக் கண்டு திரும்பினர்.

“நம்மளோட நெட்வொர் டீமுக்கு புதுசா ஜாயின் ஆகிருக்காங்க. இனிமே இவங்களும் நம்ம கூட தான் வொர்க் பண்ண போறாங்க “ என்க, அனைவரையும் கண்டு இளநகை சிந்தினாள்.

“ஹாய், ஐ ஆம் அஞ்சனா “ பொதுவாக கூற, அவர்களும் லேசான புன்னகை சிந்தி, எழுந்து வந்து அவளிடம் கைகுழுக்கிக் கொண்டனர்.

பின் அவரவர் வேலையைப் பார்க்க, அவளுமே தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். வசந்த் கூறியதுப் போல் இப்போதைக்கு எதுவும் வேண்டாமென முடிவெடுத்துக் கொண்டாள்.

நாட்கள் கடக்க கத்துக் கொடுக்க வேலையை முழுமையாக மனதில் ஏற்றி அதனை சரி வர தவறில்லாது செய்து வந்தாள். மதிய நேரம் கேண்டீன் சென்று தான் தினமும் உணவருந்தி வந்தாள்.

அவளோடு வேலை பார்ப்பவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டு வரும் போது என்றாவது ஒரு நாள் கொடுக்க மறுக்காது வாங்கிக் கொண்டு நட்புணர்வு வைத்துக் கொண்டாள்.

அவர்களுக்கு ப்ரீயாக கிடைக்கும் நேரம் என்றால் மதிய உணவு நேரம் தான். அப்போது தான் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசிக் கொள்வர்.

“ஹே ! அஞ்சனா, ஆசிரமத்துல சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கும். நீ எப்படி இவ்வளோ தூரம் படிச்சி வந்தே ?” என்று அவளின் வாழ்க்கைப் பற்றிக் கேட்க,

“யாராவது விருப்பட்டவங்க எங்களுக்கு நன்கொடை மாதிரி பணம் கொடுப்பாங்க. ஒரு சிலர் இவங்க படிப்புக்கு நான் முழு பொறுப்பையும் ஏத்துப்பேன்னு சொல்லுவாங்க. அப்படி தான் நானும். அரசாங்க பள்ளி, கல்லூரி அந்த மாதிரியே போனதுனால அதிகமா பணம் தேவைப்படல. இப்போ வேலை பார்க்குறேன். ஏதோ என்னால முடிஞ்ச உதவியை அவங்களுக்கு பண்ணுறேன் “

“உன்னை மாதிரி இருக்குற பொண்ணுங்க ரொம்ப பாவம் தான். அன்பு, பாசம் எதுவுமே கிடைச்சிருக்காதுல “ என்ற நொடி, அவளுக்கோ அவளின் வீட்டார் நினைவு தான்.

சட்டென விழிகள் கலங்கி விடவே, “ஹே ! விடுங்கப்பா. அவ ரொம்ப பீல் பண்ணுறா ?” தோழிக் கூறவே,

“சாரிப்பா. சும்மா தெரிஞ்சிக்க நினைச்சு தான் கேட்டோம் “

“இட்ஸ் ஓகே, நோ பிராபளம். நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நாங்க கஷ்டப்பட்டோம் தான். ஆனா எங்களுக்கு ஏகப்பட்ட உறவுகள் இருந்தது. நந்தவனம் மாதிரி வாழ்ந்து வந்தோம். முக்கியமான மெயில் அனுப்ப வேண்டியது இருந்தது. மறந்துட்டேன் நான் வரேன் “ எனக் கூறி அப்படியே உணவினை மூடி வைத்து எழுந்தாள்.

திரும்ப அதே நேரம் யாரோ ஒருவன் நேராக வரவே எழுந்து திரும்பிய வேகத்தில் அவன் மீதே மோதினாள்.

“ஏய் “ என்றவனோ சீற,

“சாரிங்க “ அவனின் முகத்தை கூட முழுதாக காணாது விலகிச் சென்று விட்டாள்.

“யார் கைய்ஸ் இந்த பொண்ணு ? கண் இல்லையா என்ன ?”

“சாரி ப்ரோ. புதுசா ஜாயின் பண்ண பொண்ணு. நாங்க கேசுவலா பேசிக்கிட்டு இருந்தோம். அது அவளை ஹேர்ட்டாகிருச்சி போல. “ என்கவே, திரும்பி அவள் சென்ற பாதையைக் கண்டான் நந்தன்.

முகம் இப்போது தெரியவில்லை என்றாலும் பின்புறம் மட்டும் தெரிய, அவளின் கைகள் முகத்தை விட்டு கீழே இறங்க, அழுது கொண்டுச் செல்வதைக் காண முடிந்தது.

“டேய், மச்சான் வாடா, அல்ரெடி நேரமாச்சு “ எனக் கூறிய அவனின் நண்பன் அழைத்துச் சென்றான்.

நாட்கள் கடக்கவே அவளோ வேலைக்கு வந்து ஒரு மாதம் கடந்திருந்தது. இப்போது மெல்ல தன் தேடலை துவங்க ஆரம்பித்தாள். யாரெல்லாம் ஒரு வருடத்திற்கும் முன்பிலிருந்து வேலை செய்கிறார்கள் என்ற தகவலை தான் முதலில் விசாரித்தாள்.

அவளின் அக்கா வேலை பார்த்தது டிசைனிங் டிபார்ட்மெண்ட், வசந்த் வேலை பார்த்தது டெக்னிசியன் டிபார்ட்மெண்ட் என்பதால் இங்கு தான் ஆரம்பித்தாள்.

தன்னோடு வேலைப் பார்த்தவர்களிடம் வாய் ஓயாது கலகலவென பேசி அப்படியே சிலரின் நட்பினை அங்கு வளர்த்துக் கொண்டாள்.

எதார்த்தமாக தாண்டிச் செல்லும் போது சிலரிடம் பேசி நட்பு வைக்க, கீழே இறங்கும் போது, வேலைக்கு வரும் போது, உணவருந்தும் போது என்று நட்பினை வளர்க்க, குறுகிய நாட்களின் அவளைப் பற்றி அங்கு தெரிய வந்தது.

தன் துயரங்களை உள்ளுக்கே மறைத்து வைத்துப் போலியாக அனைவரிடமும் பட்டாம்பூச்சியைப் போல் சுற்றி வருவதாக காட்டிக் கொண்டாள்.

அன்றொரு நாள் அப்படி தான் வேலைக்கு வந்தவள் லிப்ட் அருகேச் செல்ல, அதுவே வேலை செய்யவில்லை. அவள் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து தங்களின் ஆபிஸ் என்று அறிந்துக் கொண்டாள்.

மின்தூக்கி வேலை நடக்கிறது படியில் தான் செல்ல வேண்டும் என்கவே, எரிச்சலோடு அந்தப் பெண் மேலே ஏற ஆரம்பித்தாள்.

“ஹாய், நம்ம ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ் தான் போல “ ஐடி கார்ட்டை காட்டி கூறவே, புன்னகை பூத்தாள்.

“லீவ் அன்னைக்கு இந்த லிப்ட்ல வேலை பார்த்தா என்னவாம் “ என்று தன் பேச்சினை ஆரம்பிக்க,

“ஆமா. நீங்க சொல்லுறதும் சரி தான். உங்க பேர் ?”

“அஞ்சனா. நீங்க “

“ரேஷ்மி “

“எந்த டிபார்ட்மெண்ட் “

“டிசைனிங் “ என்கவே,

‘ஆஹா, நம்ம அக்கா வேலை பார்த்த இடம். விடக் கூடாது. இதுக்காக தானே காத்துக்கிட்டு இருந்தேன் ‘ மனதில் நினைத்தவளோ அப்போதே நட்பை ஏற்படுத்திக் கொண்டாள். 

அஞ்சனாவின் பேச்சில் விழாதவர் எவருமில்லை என்பதால் அந்த பெண்ணும் அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். இருவரும் பேசிக் கொண்டே மெல்லச் சென்றனர்.

அப்போது அவர்களை நோக்கி பலர் தாண்டிச் செல்ல, அவர்களோடு ஒருவனாய் நந்தனும் சென்றான்.

“அப்படியா “ எனக் கேட்டு அஞ்சனா சிரிக்க, அந்த சிரிப்பில் தாண்டி மேலேச் சென்றவன் என்ன நினைத்தானோ திரும்பி கீழே வருபவர்களைக் கண்டான்.

சத்தம் வந்த பெண்ணைக் கண்டவனோ அன்று தன்னை இடித்தது இவள் தானென அறிந்துக் கொண்டவனோ ஏனோ அப்படியே தன் வேகத்தை குறைத்தான்.

இதற்கு முன் வேலைப் பார்த்த இடத்திலும் சரி இங்கும் சரி எந்த பெண்ணையும் இவனின் பார்வையோக் கண்டதில்லை. ஆனால் ஏனோ அஞ்சனாவை என்றோ ஒரு நாள் கண்டது இன்னும் நினைவில் இருந்தது.

அதை விட ஏன் என்றே தெரியாது இப்போது அவளின் மகிழ்விக்கும் பேச்சை கேட்டும் எண்ணம். மூச்சு வாங்க வியர்க்க ஏறியவனுக்கு இப்போது அதுவோ காணாமல் போனது. பெண்களைப் போல் மெதுவாக நடந்தால் யாரும் எதுவும் நினைத்துக் கொள்வார்கள் என்று தன் கைபேசியை எடுத்தான்.

கைபேசியைப் பார்த்தவாறு, அவள் பேசும் வார்த்தையைக் கேட்டுக் கொண்டேச் செல்ல, தனக்கு முன் தான் வேண்டிய தேவையான ஒருத்தன் செல்வதை அறியவில்லை பேதையவள்.

தொடரும் ...

தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



Leave a comment


Comments


Related Post