இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 20 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 18-04-2024

Total Views: 20964

அத்தியாயம் 20

அருவியை இழுத்து அணைத்து அவள் இதழை முற்றுகையிட்டவனை அவள் அதிர்ந்து பார்க்க முன்னால் சென்று கொண்டு இருந்தவர்களில் சுந்தர் மட்டும் திரும்பி பார்த்தான்.

பார்த்தவன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ந்து விழிக்க இரண்டு அடி முன்னால் நடந்த வாசுவோ  "வாய்பிளந்து பார்த்தது போதும் சுந்தர்....  வா போலாம்.....அவன் வருவான்...." என கூறினான்.

வாசு  அவனை திரும்பி பாராமலே கூற  "டேய்... என்னடா நடக்குது இங்க... இன்னைக்கு காலையில தான்டா தாலி கட்டினான்... இப்ப என்னடான்னா.... அந்த புள்ள வாய புடிச்சி கடிச்சிட்டு இருக்கான்...." என கூற.

"நீ எதுக்கு இதெல்லாம் பார்த்துட்டு இருக்க.... தனியா இருக்க புருஷன் பொண்டாட்டிய இப்படி பாக்குறியே...உனக்கு வெக்கமா இல்ல...." என அவன் கேட்க.

"ஏன்டா... பட்டப்பகல்ல அவன் பன்ற வேலை உனக்கு வெக்கமா தெரியலயா....?" என இவன் கேட்க.

"அது அவன் பொண்டாட்டி...." என வாசு கூறினான்.

"ஏன்... அது அவன் பொண்டாட்டின்னு எனக்கு தெரியாதா... எனக்கு என்ன சந்தேகம்னா... அந்த புள்ளைய புடிக்கலன்னு காலையில அப்படி கோச்சிக்கிட்டு வந்தான்... இப்ப என்னடான்னா இப்படி கொஞ்சம் கூட பயம் இல்லாம முத்தம் கொடுத்துட்டு இருக்கான் அதும் உதட்டுல...." என்க.

"அடுத்தவங்க பர்சனல இப்படித்தான் வேடிக்கை பார்ப்பியா... கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம... நீ வரல இப்ப அப்பா தேடிட்டு வந்துடுவாரு...." என்றான் வாசு.

"யாருக்கு... எனக்கு இங்கிதம் இல்லையா.... அவன், அவன் ரூம்ல வச்சு என்ன பண்ணாலும் யாரும் பார்க்க மாட்டாங்க.... அவன்தான் யாரப்பத்தியும் கவலைப்படாம இப்படி பண்ணிட்டு இருக்கானே....?!" என அவன் கூற.

"நான் போறேன்.... நீ வா..."என முன்னால் நடக்க "டேய்... டேய்.... இருடா நானும் வரேன்... போய் அந்த மிலிட்டரிக்கிட்ட போட்டுக் கொடுத்துடாத...." என்றவன் வாசுவின் பின்னால் ஓடினான்.

தன்னால் முடிந்த மட்டும் அவனுடன் போராடியவள் ஒருகட்டத்திற்குமேல் முடியாமல் போக கால்கள் துவண்டு அவன் மேலே தோய்ந்து விழ.

அவளை தாங்கிப்பிடித்தவன் அவள் கன்னத்தை தட்டி "ஏய்.... இங்க பாரு...." என்க.

அவளோ மூடி இருந்த கண்ணை திறந்து பார்த்தவள் கண்களில் அனலை தேக்கி அவனை பார்த்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தாள்.

அவனோ அதிர்ந்து பார்த்தான் கன்னத்தில் கையை வைத்தபடி "உனக்கு என்னடா பிரச்சனை.... உனக்குத்தான் என்னய புடிக்கல இல்ல... அப்பறம் எதுக்கு எனக்கு சும்மா முத்தம் கொடுத்துட்டு இருக்க...?" என கேட்க.

அவனோ "ஏய் வாய மூடுடி... நான் ஒன்னும் உம்மேல ஆசைப்பட்டு முத்தம் கொடுக்கல...." என்றான் அவன்.


"அதான் எம்மேல ஆசை இல்லதான... அப்பறம் எதுக்கு முத்தம் கொடுக்கற... இனிமே உன் கை எம்மேல பட்டுச்சு அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...." என்க.

"என்னடி பண்ணுவ... என்ன பண்ணுவ....உன்னால என்ன பண்ண முடியும்...?" என இரண்டு அடி முன்னால் வைத்தவனை பார்த்து மிரண்டவள் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

"நான் சுரேந்திரன்... யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல...இதெல்லாம் எதுக்குன்னு உனக்கு தெரியும்.... ஏன் பன்றேன்னும் உனக்கு தெரியும்... அப்படியே தெரியாத மாதிரி நடிக்காத... நீ யாரு எப்படி பட்டவன்னு எனக்குத்தான தெரியும்... அந்த பாவமான மூஞ்சிய வச்சிட்டு... அப்படியே நடிச்சி நடிச்சிதான இந்த ஊர ஏமாத்திட்டு இருக்க... இப்பவும் அப்படிதான் இருக்க... கொஞ்சமாச்சும் மாறி இருப்பேன்னு நினைச்சேன்... இன்னும் அப்டித்தான் இருக்க... கடைசியா என்னை ஏமாத்தி... என் கையால தாலியும் வாங்கிட்ட இல்ல... இனி இதுக்காக நீ ஒவ்வொரு நாளும் நீ வேதனை படனும்... இவன இனி வாழ்நாள்ல பாக்கவே கூடாதுன்னு நீ ஊரவிட்டே உன்ன ஓட வைக்கல... நான் சுரேந்திரன் இல்லடி..." என அவள் கண்களை நேராக பார்த்து கர்ஜிக்க.

அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.

சற்றுநேரம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"இந்தர்... நா... நான்... சொ... சொல்றத.. கொஞ்சம் காது கொடுத்து கேளு... நீ நினைக்கற மாதிரி ஒ... ஒன்னும் இல்ல..." என்க.

"ச்சீ... வாய மூடு பேசாத... நீ பேசாத... உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கல... உன் ஒருத்தியாலதான் நான் ஊருக்கு வரதே இல்ல... ஆனா எப்ப வந்தாலும் உன்ன பாக்கற மாதிரி ஆகிடும்... நான் யாரையும் என்னோட பகையாளியா நினைக்கவே மாட்டேன்டி... ஏன்னா நான் பன்ற தொழில் அப்படி... எதிரியகூட காப்பாத்தற தொழில்தான் என்னுது... ஆனா உன்ன எதிரியா கூட நினைக்க நான் விரும்பலடி... இனி ஒவ்வொரு நாளும் நீ நரகத்துலதான் வாழப்போற... அதுக்கு தயாரா இரு... இங்க இருக்கறவரைக்கும் நீ எவ்ளோ சிரிக்க முடியுமோ சிரிச்சிக்க... நாளைல இருந்து உனக்கு நரகம் எப்படி இருக்கும்னு நான் காட்டறேன்..." என்க.

"இந்தர். கொஞ்சம் பொறுமையா இரு... நான் சொல்ல வரத காது கொடுத்து கேளு.. ப்ளீஸ்... நான் வேணும்னு அப்படி பண்ணல..." என்க.

"என் வாழ்நாள்ல உன்ன பாக்கவே கூடாதுன்னுதான்... நானே எனக்குன்னு ஒரு பொண்ண தேடினேன்... அதுவும் அமைஞ்சிது... ஆனா இந்த சுந்தர் பயலாள எல்லாம் தலைகீழா மாறிடுச்சு... இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகல... நான் பன்ற டார்ச்சர்ல நீ துண்ட காணும் துணிய காணும்னு ஓடத்தான் போற... அப்றம் உன்ன கழிச்சி கட்டிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கைய நானே அமைச்சிக்குவேன்... என் அம்மா அப்பாவ எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும்...." என்க.

அவன் கூறிய வேறு ஒரு வாழ்க்கை என்ற வார்த்தையில் அவள் உள்ளுக்குள் அதிர்ந்து உயிரின் அடி ஆழம்வரை வலியை உணர அதை கண்களில் தேக்கி அவனை பார்க்க அவனோ வேண்டும் என்றே அவள் கண்களை காணாமல் வேறுபுறம் திரும்பி "நமக்குள்ள நடக்கற எல்லாம் நமக்குள்ளதான் இருக்கனும்... மீறி வெளிய போனுச்சு உன்ன தொலைச்சு கட்டிடுவேன்..." என்க.

"இந்தர்...." என அவள் அவனை கூப்பிட "அப்படி கூப்டாதடி..." என்றான் கடித்த பற்களுக்கு இடையே கண்களில் நீர் அருவியாக கொட்டியது.

அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லை அவளுக்கு.

"கண்ணை தொட.. இங்கயே ஆரம்பிச்சிடாத... மெட்ராசுல போய் இன்னும் இருக்கு... அங்க கண்ணீர் பத்தலனா என்ன பண்ணுவ... அதனால நல்லா இப்ப எல்லோர்கிட்டயும் சிரிச்ச முகமா இருக்க புரியுதா...?" என்க.

அவளோ கண்களில் வலியோடு அவனை பார்த்தாள்.

"இங்க என்னடா பண்ணிட்டு இருக்க...?" என்ற குரலில் இருவரும் திரும்பி பார்க்க அங்கு தர்மனும் சக்கரவர்த்தியும் நின்றிருந்தனர்.

அவர்களை கண்டதும் வேகமாக திரும்பியவள் தன் தாவணியை எடுத்து கண்களை அழுந்த துடைத்துக் கொள்ள அவர்களை நெருங்கி வந்த இருவரும் "இங்க என்ன பன்றீங்க ரெண்டு பேரும்... அருவி... ஏன் கண்ணு கலங்கி இருக்கு...?" என சக்கரவர்த்தி கேட்க.

"என்ன கண்ணோ தெரியல.. எல்லாம் கண்டுபிடிச்சிட வேண்டியது..." என உள்ளுக்குள் அவருக்கு ஒரு அர்ச்சனையை நடத்தினான் சுரேந்திரன்.

"இல்ல மாமா... சும்மா பேசிட்டு இருந்தோம்... நாளைக்கு ஊருக்கு கிளம்பறத பத்தி..." என்க.

அப்போதும் அவளை நம்பாமல் பார்த்தார் சக்கரவர்த்தி.

"ஏதாச்சும் அவள சொன்னியா...?" என அவனை பார்த்து கேட்க.

"எனக்கு அதான் வேலையா... அவகிட்டயே கேட்டுக்குங்க.. எனக்கு வேலை இருக்கு..."என அவன் அவ்விடம் விட்டு அகல முற்பட "டேய் நில்லு ஒருநிமிஷம்.... ஹாஸ்பிடலுக்கு வர இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு இன்பார்ம் பண்ணிடு..." என்க.

"ஏன்... அதான் நாளன்னிக்கு போலாம்னு சொன்னீங்க...?" என்க.

"ஆமா...  நாளைக்கு நைட்தான் இங்க இருந்து கிளம்புவோம்... அடுத்த நாள் காலையில ஆகிடும் வீட்டுக்கு போய் சேர... ஏன் நீ ரெஸ்ட் எடுக்க மாட்டியா....?" என கேட்க.

"அது ஒன்னுதான் குறைச்சல்..." என முணுமுணுக்க "என்ன சொன்ன நீ...."? என அவர் கேட்க.

"ஒன்னும் இல்ல..." என்றவன் "நான் போறேன்..." என அங்கிருந்து நகன்றான்.

போகும் அவனையே பார்த்தனர் மூவரும்.

அவன் சென்றதும் "அவன் உன்ன ஏதாச்சும் சொன்னானா...?" என அருவியை பார்த்து கேட்க.

"அதெல்லாம் எதும் இல்ல மாமா நாளைக்கு ஊருக்கு போறதுல உனக்கு ஏதாச்சும் வருத்தமான்னு கேட்டாரு..."என்க.

"நம்பமுடியலயே..." என்றார் தர்மன்.

"ம்ம்ம்... ஆமா எப்பவும் எலியும் பூனையுமாத்தான இருப்பீங்க..." என சக்கரவர்த்தி கேட்க.

"இனிமே அப்படி இருக்க முடியுமா...?" என அவள் கேட்க.

"சந்தோஷம்... அந்த புரிதல் இருந்தா உங்க வாழ்க்கை உண்மையாவே ரொம்ப நல்லா  இருக்கும்..." என்க.

அவளோ அவரை பார்த்து சிரித்தாள் "உங்க மகன் சொன்னது எல்லாத்தையும் உங்ககிட்ட சொன்னா என்ன நடக்குமோ தெரியல" என மனதில் நினைத்தவள் வலிய புன்னகைக்க "சரிம்மா... நீ போ அத்த தேடிட்டு இருக்கா..." என்க.

"சரிங்க மாமா..."என்றவள் அவர்களை கடந்து சென்றாள்.

போகும் அவளையே சக்கரவர்த்தி பார்க்க "என்ன யோசனைண்ணா அதான் அவன் ஒன்னும் சொல்லலன்னு சொல்லிட்டு போறாளே...." என்க.

"இல்ல தர்மா... அவ பொய் சொல்றா... அவன் அவள ஏதோ திட்டி இருக்கான்... அத அவ நம்மகிட்ட மறைக்கிறா... அப்பன் ஆத்தா இல்லாத புள்ள அருவி... அவள நல்லா பார்த்துக்கனும் தர்மா...." என்க.

"அவ மனசுக்கு அவ நல்லாவே இருப்பாண்ணா..." என்றார் அவர்.

"சரி வா..." என அழைத்தவர் தேங்காய் மட்டைக்கு அருகில் சென்றார்.

தர்மனும் அவர் பின்னால் சென்றபடி "என்னண்ணா என்ன ஆச்சு...?" என கேட்க.

"ம்ம்ம்... இங்க வா..."என்றபடி அவரை அழைத்து சென்றவர் சுரேன் மறைத்து வைத்த கத்தியை எடுக்க தர்மனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

"இது எப்படி இங்க...?" என அவர் அதிர்ந்து கேட்க.

"பெருசா இதுல ஆச்சர்யபட ஒன்னும் இல்ல தர்மா... கழுதை கெட்டா குட்டிச்சுவருங்கிற மாதிரி... வஜ்ரவேலுவ விட்டா இத தைரியமா செய்ய இந்த ஊர்ல யாரு இருக்கா சொல்லு... சரி சரி இது வீட்டு பொம்பளைங்களுக்கு தெரிய வேணாம்... நீ பசங்கள வர சொல்லு..."என்க.

"சரிண்ணா..." என்றவர் சற்று தூரம் சென்று யாருக்கோ அழைக்க "ம்ம்ம் தோட்ட வீட்டுக்கு வந்துடுங்க..." என்க.

அந்த ஏதோ கூறப்படவும் "சரி..." என்றவர் "அண்ணா இன்னைக்கு நைட் வரேன்னு சொன்னானுங்க..." என்க.

"சரி இத எங்கேயாச்சும் மறைச்சு வை தர்மா..." என்றவர் "சரி... அவன் வச்ச இடத்துலயே வச்சுடுவோம்..." என்க.


"சரிண்ணா..." என்றார் தர்மன்.

"டேய்... டேய்...இப்ப சொல்ல போறியா இல்லையாடா...?"என சுந்தர் வாசுவின் பின்னால் ஓடிக் கொண்டு இருந்தான்.

அவனோ சலித்தபடி "இப்ப உனக்கு என்ன தெரியனும்...?" என கேட்க.

"பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கான்... ஆனா அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுக்கறான் ...அதான் என்னால நம்பவே முடியல..." என்க.

"பிடிக்கலன்னு சொல்றது எல்லாம் பொய்... அவனுக்கு அவள ரொம்ப பிடிக்கும் அவளுக்கும்தான்..." என கூற

சுந்தரோ "என்னடா சொல்ற...?" என நெஞ்சில் கைவைத்து கொண்டான்.


Leave a comment


Comments


Related Post