இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...30 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 19-04-2024

Total Views: 31091

தனக்கு வந்த ஒரு அழைப்பை ஏற்று பேசியபடியே அறையில் இருந்து வெளியே வந்தான் முகிலன். 


“ஹான்… ஓகே… எத்தனை மணிக்கு இங்கே இருந்து கிளம்பணும்னு காலையில கன்ஃபார்ம் பண்ணிடறேன்…” பேசி முடித்தவனின் அருகில் வந்தாள் மீரா.


“யாரு முகி…?”


“டிராவல்ஸ்ல இருந்து கூப்பிட்டாங்க… நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஸ்க்கு பஸ் புக் பண்ணி இருக்கோம்ல… இங்க இருந்து எத்தனை மணிக்கு கிளம்பணும்னு டைம் கேட்கிறாங்க… ரிசப்ஷன் அன்னைக்கு ஈவினிங் மதுரை ரீச் ஆகிற மாதிரி பிளான்… கேசவ்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிருக்கு… அவன் பார்த்துப்பான்… டைம் மட்டும் அவனைக் கேட்டு சொல்லணும்…” பேசியபடியே அப்போதுதான் கூடத்தை ஆராய்ந்தான்.


சண்டைக்கோழிகள் அங்கு இல்லை… சமாதான புறாக்களாக மாறி அறைக்குள் அடைந்து கொண்டன போலும். தரணியின் அறைக்கதவு அழுத்தமாய் சாத்தியிருந்தது. தலை கோதி புன்னகைத்தபடியே சோபாவில் வந்து முகிலன் அமர மீராவும் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். ஏதோ யோசித்தபடியே தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தவனிடம் என்ன சிரிப்பு என்று கேட்டாள்.


“இந்த நரிச்சின்னக்காவை பாத்தியா மீரா… கொஞ்ச நேரத்துல எத்தனை அழுகை…? எத்தனை ஆர்ப்பாட்டம்…?” ஆச்சரியமாய் புருவம் உயர்த்தினான்.


“ஆமா முகி… அண்ணா மேல இருக்கிற காதலை அவ கண்ணீரே வெளிப்படையா சொல்லிடுச்சு… இப்பவாவது ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டாங்களே… அதுவரைக்கும் சந்தோசம்…”


“இத்தனை அன்பை மனசுக்குள்ள வச்சுக்கிட்டுதானே சிலுப்பிக்கிட்டு திரிஞ்சிருக்கா… தரணி மேல அவ்வளவு அன்பா அவளுக்கு…?” விலகாத ஆச்சரியத்துடன் உதடு வளைத்தான்.


“ஏன் உங்களுக்கு பொறாமையா இருக்கா…?” பொய்யாய் முறைத்தாள் மீரா.


“சேச்சே… எனக்கு என்னடி பொறாமை… எப்பவும் என் மேலதான் அதிகமான அன்பை காட்டுவா… உரிமையா சண்டை போடுவா… எனக்கும் அவமேல அவ்ளோ பிரியம் உண்டு… ரெண்டு பேரும் எவ்வளவு சண்டை போட்டாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்கவே மாட்டோம்… இப்போ புருஷனுக்கு ஒன்னுனா செத்தே போயிடுவேன்னு சொல்ற அளவுக்கு மாறிட்டா…”


“அதைத்தான் பொறாமையா என்று கேட்டேன்…”


“பைத்தியம்... அது பாசம்டி… எப்பவுமே குழந்தையா மட்டும்தான் அவளை பாத்திருக்கேன்.. என்னோட பாசம் அவளுக்கு காதலா தெரிஞ்சு அவ மனசுல ஆசையை வளர்த்திட்டாளோன்னு ரொம்ப கலங்கிப் போயிருந்தேன். எனக்காக தரணி அவ கழுத்துல தாலி கட்டினப்போ கூட ரொம்ப குறுகுறுப்பா இருந்தது. ரெண்டு பேர் வாழ்க்கை என்னால போயிடுச்சோ அப்படின்னு… அவ மனசுல என் மேல காதல் இல்லைன்னு சொன்ன அந்த நிமிஷம் என் சுவாசமே சீராச்சு மீரா.. நம்ம குழந்தையை நாமே சரியா புரிஞ்சுக்கலையேன்னு என் மேலதான் எனக்கு கோபம் வந்துச்சு… சீக்கிரமே தரணியை புரிஞ்சுக்குவான்னு நம்பிக்கை இருந்துச்சு… எப்படியோ ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா நமக்கு இன்னும் ஹாப்பிதானே…”


மீராவின் வெண்டை விரல்களை ஒவ்வொன்றாக பிடித்து நீவியபடியே கூறியவனின் முகம் நிமிர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.


“இதுக்குமேல அவங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க இன்னும் என்ன இருக்கு… அவங்களுக்கான வாழ்க்கையை அவங்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்…” பூட்டிய அறைக் கதவை பார்த்து குறும்பாய் சிரித்தபடியே கூறினாள்.


“அது சந்தோஷம்தான்… நாளைக்கு காலையில நாம எல்லாரும் ஊருக்கு கிளம்பணும்… ரெண்டும் கிளம்பி வந்துடுமா…?” பொங்கி வந்த சிரிப்புடன் முகிலன் கேட்க “யாமறியேன் பராபரமே…” கண்களை உயர்த்தி கைகளை விரித்து மீரா பதில் உரைக்க இருவருமே குபீரென சிரித்தனர்.


உள்ளே… அறைக்குள்…


கட்டிலில் சாய்ந்திருந்த தரணியின் நெஞ்சில் சாய்ந்திருந்தாள் பூச்செண்டு. அழகான புன்னகை இருவர் முகத்திலும்… மௌனமே மொழிகளாய்… மெல்லிய வருடல்கள் மட்டுமே இருவரிடமும்… தன்னை மீறி மாமு என்று அடிக்கடி அவள் அழைத்திருந்ததை எண்ணிப் பார்த்து சிலிர்த்துக் கொண்டான் தரணி.


“இப்போ கூப்பிடேன்…” மௌனத்தை உடைத்தான்.


“ம்ம்…” மெல்ல தலை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள். மிக நெருக்கத்தில் அவள் முகம்… அவனை வசியம் செய்யும் அந்த மயிலிறகு கண்கள் இன்னும் இன்னும் கூடுதல் கவர்ச்சியாய்… அவனை முறைக்கும்போதும் வெறுமையாய் பார்க்கும்போதுமே அந்த இமைகளின் அழகினை ரசிக்கத் தவறியதில்லை… இன்று அந்த கண்களில் கூடுதலாய் காதலும் கலந்து இருக்கிறதே… மொத்தமாய் தொலைந்தான் அந்த மோகனப் பார்வையில்.


அவள் முகம் பற்றி உரிமையாய் அந்த கண்களில் முத்தமிட்டிருந்தான். குப்பென முகம் சிவந்து போனது அவள் முகம்… இன்னும் கூடுதலாய் கிளர்ந்தான்… இரு பெருவிரல்கள் கொண்டு வந்த வழவழப்பான செழுமையான கன்னங்களை வருடி ஆராய்ச்சி நடத்தினான். அவன் கண்களில் தெறித்து வந்த காதல் பார்வையில் தன்னிச்சையாக பார்வையை தழைத்துக் கொண்டாள் பேதை.


“உன்னை கூப்பிடச் சொன்னேன்…” கிறக்கமாய் கிசுகிசுப்பாய் அவன் குரல்.


“எ..என்ன கூ..கூப்பிடணும்…?” விடாது வம்பிளக்கும் வாய் வார்த்தைகளை அளந்து வெளியேற்றியது.


“என்னை உரிமையா என்னவோ சொல்லி கூப்பிட்டியே…” அவள் மூக்கோடு மூக்கு உரசினான்.


கீழ் உதட்டை கடித்து சிரித்து வெட்கமாய் புன்னகைத்தாள். அவள் பற்களுக்குள் அகப்பட்டிருந்த அதரத்தை தன் பெருவிரல் கொண்டு விலக்கி மெல்ல வருட சிலிர்த்துப் போனவள் அவன் நெஞ்சில் அழுத்தமாய் சாய்ந்து கொண்டாள்.


“ஆசையா இருக்குடி…” ஏக்கமாய் அவன் குரல்.


“ஹான்…” கண்களை படபடத்து அவனைப் பார்த்தாள்.


“கொஞ்சம் முன்னாடி என்னை கூப்பிட்டியே… அதே மாதிரி கூப்பிடுறதை கேட்கணும்னு ஆசையா இருக்கு… அதைத்தான் சொன்னேன்… நீ என்ன நெனச்ச…?” குறும்புப் பார்வையுடன் புருவம் ஏற்றி இறக்கினான்.


மீண்டும் இதழ் கடித்து புன்னகைக்க “ப்ச்… don't spoil my property…” மீண்டும் இதழை விடுவித்து வருட அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் உணர்ந்து கூடுதல் வெட்கத்துடன் அவன் நெஞ்சோடு தலையை அழுத்தமாய் மோத “ஸ்ஸ்…ஆஆ…” என்றான் தன்னிச்சையாய்.


“என்னாச்சுங்க…?” வேகமாய் விலகி நிமிர்ந்தாள். 


“ஒ..ஒன்னும் இல்ல… நீ..நீ.. படுத்துக்கடி…” சமாளிப்பாய் சொன்னவனுக்கு அவள் விலகல் பிடிக்கவில்லை. 


அவனை ஆராய்ச்சியாய் பார்த்தவள் தான் ஏற்கனவே முட்டிய இடத்தில் வேண்டுமென்றே விரல் வைத்து அழுத்தம் கொடுக்க “ஆஆ…வலிக்குதுடி…” துள்ளினான். பரபரவென அவன் சட்டை பட்டனை கழட்டி வேகமாய் விலக்கிப் பார்த்தாள். இடது மார்பின் ஓரத்தில் ரத்தக்கட்டு போல் காயம் கண்ணி சிவந்து இருந்தது.


“ஐயோ மாமு… இப்படி கண்ணி கிடக்குதே… சொல்லவே இல்லையே… இன்னும் வேறு எங்கேயாச்சும் அடிபட்டு இருக்கா…?” துடிப்புடன் கண்களை சுழல விட்டவளை ரசனை பொங்க பார்த்தான்.


“ஏன் மாமு என்கிட்ட மறைக்கிறீங்க…? இருங்க… மருந்து போட்டு விடுறேன்…” எழப்போனவளை இடுப்போடு பிடித்து தன் மேல் சாய்த்தான்.


“எங்கேடி போற…?” சிறு குழந்தைபோல் முகத்தை சுருக்கினான்.


“மருந்து எடுக்கணும்…” அவன் கைகளில் இருந்து விடுபட நெளிந்தாள்.


“உன்கிட்டதானே இருக்கு… அந்த மருந்தையே போடு… டாக்டர் கொடுத்த மருந்து வேணாம்… நீ போடுற மருந்துல உடனே சரியாயிடும்… very effective medicine…” அர்த்தமாய் தன் மேல் உதட்டை மடக்கி சிரித்தான்.


“ப்ச்… மாமு… என்ன சொல்றீங்க…?”


“பொக்கே மண்டைக்குள்ள பல்பு எரியவே எரியாதா…? பியூஸ் போன பல்பைத்தான் மாட்டி வச்சிருக்கியா…?” ஒற்றை விரலால் அவள் நெற்றியில் பட்டென தட்டினான். சில நொடிகள் கண்களை உருட்டியவள் பட்டென விழிகள் விரித்து அவனைப் பார்க்க அவனோ குறும்புப் புன்னகையுடன் என்ன என்று புருவத்தை ஏற்றி இறக்கினான்.


“மாமூஊஊ…” செல்லச் சிணுங்கலுடன் மீண்டும் அவன் நெஞ்சில் சாய மொத்தமாய் சொக்கிப் போனவனுக்கு அவள் கொடுத்த அழுத்தத்தில் ஏற்பட்ட வலி தெரியவே இல்லை. அவள் அழைப்பும் அணைப்பும் அவனை மொத்தமாய் கிறங்கடித்தன. 


தன்னை அணைத்திருந்த அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து அவள் அழுந்த பிடிக்க மீண்டும் ஆஆ என்று சத்தமிட்டான். சிராய்ந்திருந்த முழங்கை காயத்தை ஆராய்ந்தவளுக்கு மீண்டும் முனுக்கென கண்ணீர்.


“ஏய் செல்லம்…” சங்கடமாய் அவள் முகம் பற்றினான்.


“வலிக்குதா மாமு…” வேதனையாய் கேட்டாள்.


“நீதான் மருந்து போட்டுவிட மாட்டேங்கறியே…” செல்லமாய் உதட்டை வளைத்தான். தன் பிஞ்சு விரல்களால் மென்மையாய் வருடியவள் குனிந்து இதழால் வருடி மிக மென்மையாக முத்தமிட்டாள். அவளிடம் பெற்ற முதல் முத்தம்… கொடுத்து வைத்த காயம்… சிலிர்த்தான் ஆடவன்.


“இங்கே கூடத்தான் வலிக்குது…” தன் காதினை தொட்டுக் காட்டினான். சங்கடமாய் பார்த்தாள்… காயம் பட்ட காதுமடலில் அழுத்தமான முத்தம்… அவள் ஏற்படுத்திய காயம் அல்லவா… பிடரி முடி சிலிர்த்து உடல் முழுக்க நடந்த ஹார்மோன் சண்டையில் இன்ப அவஸ்தை அவனுக்குள்.


‘“இந்த காயத்துக்கு இன்னும் மருந்து போடலையே…” தன் மார்புப் பகுதியை திறந்து காட்ட வெட்கத்தோடு முகத்தை மூடிக்கொண்டு அவன் மேலே சாய்ந்து சரிந்து விழுந்தாள் பூச்செண்டு.


“அய்யோ… என் பொண்டாட்டிக்கு வெட்கம் எல்லாம் வருமா..! அந்த அழகை நான் பார்க்கணுமே…” அவள் முகத்தை பிடித்து நிமிர்த்த முயல அவளோ இன்னும் அழுத்தமாய் அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள். சிரித்தபடி அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் தரணி.


“நீ எனக்கு பட்டப் பெயர் எல்லாம் வச்சிருக்கியாமே…” அவள் உச்சியில் முத்தமிட்டு காதில் குறுகுறுப்பு செய்தபடியே கேட்டான்.


“ஹான்…பனைமரம்… நெட்டமாடு…” படக்கென பதிலளித்தவள் நிமிர்ந்து பார்த்து சிரிக்க “என்னடி… மாடுன்னு கூட சொல்லுவியா…” உள்ளூர ரசித்து வெளியில் பொய்யாய் முகம் சுளித்தான்.


“மாடுன்னா செல்வம்னு அர்த்தம்… நாங்க கௌரவமாத்தான் பட்டப்பெயர் வச்சிருக்கோம்… ஆனா நீங்கதான் குட்டக்கத்திரிக்கா, டரியல், குள்ளி, குட்லி…” ஒவ்வொரு விரலாய் பிரித்து எண்ணியபடி சொல்ல “சண்டிராணி, பஜாரி, காட்டேரி, ராங்கி, அராத்து…” அவளது அடுத்த கை விரல்களைப் பிடித்து அவன் வரிசையாய் அடுக்க கையை உருவிக் கொண்டவள் அவனை தீயென முறைத்தாள்.


‘ஐயோ… உணர்ச்சிவசப்பட்டு உளறிட்டியேடா தரணி… பத்திரகாளி அவதாரம் எடுக்குதே…’ உள்ளுக்குள் தோன்றிய உதறலுடன் “ஹிஹி… சு..சும்மா ஜாலியா என் பொண்டாட்டியை செல்லமா கூப்பிடுவேன்…” அசடு வழிந்தபடி அவள் கன்னம் கிள்ள வெடுக்கென தட்டி விட்டவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்து நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.


“என்னடி… இதுக்கெல்லாம் கோவிச்சுப்பியா… மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறுதே…” எட்டி அவள் கைப்பிடிக்க முயல இன்னும் நகர்ந்தவள் “ஓஓ…வேதாளம்னு இன்னொன்னா…? போதுமா எனக்கு வச்ச பேரு… நான் என்ன அவ்வளவு அடாவடித்தனம் பண்றேனா…? இனிமே எதுவும் பேசாம ஊமையா இருந்துக்கிறேன்… ஊமை கோட்டான்னு இன்னொரு அடைமொழி கொடுத்திடுங்க…” படபடவென பொறிந்தாள்.


“அப்படி இல்ல பேபி… உன்னால எல்லாம் ஊமையா இருக்க முடியாதுடி… அப்படியே இருந்தாலும் என்னால ஏத்துக்க முடியாது… எனக்கு உன்னோட இந்த லொடலொட வாய்தான் ரொம்ப பிடிக்கும்…” மெல்ல தவழ்ந்து அருகில் வந்தவன் அவள் இதழை பிடித்து ஆட்ட வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள்.


“பேபிஇஇ… என்னடி…” அவள் கழுத்தில் சாய்ந்து இதழால் அழுத்தம் கொடுத்து குறுகுறுப்பு செய்ய பெண்மையின் நரம்புகள் முடுக்கி விடப்பட்டு மயிர் கூச்செறிந்து உடல் முழுக்க மாற்றம் நிகழ்ந்ததை அவனுமே உணர்ந்து கொண்டான். அவள் முகத்தை தன்புறம் திருப்பி தாபம் வழியும் கண்களுடன் “கோபமா இருக்கியா…? அப்போ இங்கே கடிச்சிடு… மருந்துகூட போட்டுவிட வேணாம்… நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்…’ என்றபடி அவன் சுட்டிக்காட்டிய இடம் அவனது இதழ்கள்.


மனைவியிடம் வெளிப்படையாய் சில்மிஷம் செய்து அவளை சிலிர்க்க வைக்க தொடங்கியிருந்தான் காதல் மன்னவன். சிரிப்பும் வெட்கமும் போட்டி போட்டாலும் வேண்டுமென்றே அவனை முறைத்தாள்.


“நெட்டமாடுன்னு சொன்னாலும் ஆசையாதான் சொல்லுவேன்… பனைமரம்னு சொன்னாலும் காதலாதான் சொல்லுவேன்… ஆனா நீங்க என்னை திட்டறதுக்காக கண்ட கண்ட பெயர் வச்சு… அதை பட்டியல் வேற போட்டு வச்சு… அதை… ம்ம்ம்…ம்ஹ்ம்…” அடுத்து வந்த வார்த்தைகளை அவனல்லவா விழுங்கி இருந்தான்.


மொத்தமாய் இதழடைப்பு செய்து சத்தத்தை நிறுத்தி இருந்தான். அவளது இமைக்குடைகள் மயிலின் தோகைபோல் விரிந்து படபடக்க அந்த விழிகளோடு விழிகள் கலந்தபடி உரிமையான இதழ் முத்திரையை அழுத்தமாகவே பதித்திருந்தான். முதலில் அதிர்ந்து உடல் உதறி உறைந்து போனவளின் பேச்சை விழுங்கியவன் மூச்சை இடமாற்றம் செய்தான். விரிந்து விழித்த கண்கள் தன்னிச்சையாய் மூடிக்கொள்ள மன்னவனின் மந்திர முத்தத்தில் மயங்கி அவனோடு இசைந்து கொடுத்தாள் பெண்ணவள். காதல் பரிணாம வளர்ச்சி அடைந்து காமத்துடன் கைகோர்த்து நிற்க அடுத்த கட்டத்தை நோக்கிய அழகான பயணத்தில் இருவருமே கைகோர்த்து இணைந்து கொண்டனர்.


புரிதலுக்குப் பின் ஆரம்பமாகும் தாம்பத்தியத்திற்கு வலு அதிகம்… அங்கு காமமும் ஆட்சி செய்யும் காதலும் ஆட்சி செய்யும். இன்பத்துப்பாலை இரண்டற கலந்து கற்க தொடங்கினர் இருவரும்… மனமும் மனமும் இணைந்த ஓர் உடற் சங்கமம்… புரிதலுடன் அழகான புனிதப்போர்… சண்டைக்கோழிகள் அன்றில் பறவைகளாய் மாறிய அற்புதக் காட்சி… நனவுலகம் மறந்து தனி உலகில் இருவர் மட்டும்… இன்பமான இல்லறப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. நேரம் சென்று கொண்டே இருந்தது… இரவு உணவிற்கும் இருவரும் வெளியே வரவில்லை… சொர்க்கவாசல் திறக்கப்படவே இல்லை.


“போன் பண்ணி பாக்கலாமா மீரா…” கொட்டாவியுடன் கேட்டான் முகிலன். இரவு 11 மணியை நெருங்கிக் கொண்டிருந்ததே.


“வேணாங்க… அது நல்லாவா இருக்கும்… பசிச்சா அவங்களே வந்து சாப்பிட்டுப்பாங்க… நாம போய் படுக்கலாம்…”


“அதுக்கில்லடி… காலைல ஊருக்கு கிளம்பணுமே… நாம பேக் பண்ணி வச்சுட்டோம்… அங்க என்ன கண்டிஷன்னே தெரியல… லாங் டிரைவ் வேற… அதான்…’ யோசனையுடன் நெற்றியை தட்டினான் முகிலன். 


“விடுங்க… பாத்துக்கலாம்… உள்ளேயேவா இருந்துடுவாங்க… அதெல்லாம் அண்ணன் சில விஷயங்கள்ல தெளிவத்தான் இருப்பார்… வாங்க…” அவன் கைப்பிடித்து எழுப்ப எழுந்து கொண்டவன் அவளை கையில் அள்ளியபடி அறையை நோக்கி நடந்தான். அவன் சட்டைப்பையில் இருந்த கைப்பேசி சத்தமிட மீராதான் எடுத்தாள்.


“அண்ணாதான் கூப்பிடறார் பாருங்க…” சிரித்தபடி அவனிடம் நீட்ட “அவனுக்கு கரடியா மாறக்கூடாதுன்னு நாம நெனச்சா இப்போ நமக்கு கரடியா வர்றான்…” நொந்தபடி மீராவை கீழே இறக்கி அழைப்பை ஏற்றான்.


“சொல்லுடா மகாராசா… இந்த உலகத்துலதான் இருக்கியா…?” எதிர்முனையில் ஒரு மார்க்கமான சிரிப்பு.


“முகில்… நாளைக்கு ஈவினிங் ஃப்ளைட்லயே போயிடலாமா… அங்கே இருந்து கேப் புக் பண்ணி ஈஸியா ஊருக்கு போயிடலாம்…”


“இதைத்தானடா நேத்து வரைக்கும் நானும் சொன்னேன்… கார்லதான் போகணும்னு நீதானடா அடம் பண்ணின…”


“மீராவோட ஹெல்த்தையும் பாக்கணும்… அதனால பிளைட்லயே போயிடலாம்…”


“அடடாடா… உன் அக்கறையில மெய்சிலிர்த்து போச்சுடா… ட்ரைவ் பண்ற கண்டிஷன்ல நீ இல்லைன்னு சொல்லு…”


“டே..டேய்ய்…”


“திடீர்னு டிக்கெட் கன்ஃபார்ம் பண்ண முடியுமா…?”


“பாரிக்கு ஒரு கால் பண்ணு… இம்மீடியட்டா அரேஞ்ச் பண்ணிடுவான்…”


“நான்தான் பண்ணனுமா…?”


“நீயேதான்…”


“ம்ம்… வேற…”


“நாளைக்கு மத்தியானம் வரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணிடாதே… கிளம்புறதுக்கு ஜஸ்ட் ஒன் ஹவர் இருக்கும்போது கால் பண்ணு… நாங்க கிளம்பிடுவோம்…”


“டேய் படுபாவி… ரிசப்ஷன் எனக்கு மட்டும் இல்ல… உனக்கும்தான்டா… ஞாபகம் இருக்கா…?”


“அதைத்தான் ஞாபகப்படுத்த சொல்றேன்… வளவளன்னு பேசி டைமை வேஸ்ட் பண்ணாதடா…”


“டேய்… எப்பா… அப்போ நாளைக்கு மதியம் வரைக்கும் வெளியே வர மாட்டியா…”


“தெரியல… நீ ஞாபகப்படுத்துறதை பொருத்துதான் எல்லாமே…’ இணைப்பு துண்டிக்கப்பட “அடப்பாவி…” தலையில் கை வைத்து நின்ற முகிலனை பார்த்து சத்தமிட்டு சிரிக்கத் தொடங்கினாள் மீரா.






Leave a comment


Comments


Related Post