இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 20-04-2024

Total Views: 18863

காதலொன்று கண்டேன்!

தேடல்  19

அவளுக்கென..

வீட்டுக்கு வந்த மித்ராவின் எண்ணம் முழுக்க இன்று காளையவனின் நடத்தையை தான் சுற்றி வந்தன.

மற்றவர்களிடம் அவன் காட்டும் முகமும் அவளிடமும் அவன் காட்டும் மறுமுகமும் அத்தனை வித்தியாசம் ஆனது ஆயிற்றே.

இப்படி சீண்டியபடி இலகுவாக தன்னுடன் பழகுவான் என்று அவளுமே பார்த்திருக்கவில்லை.
அதிலும் அவனின் சீண்டல்கள்.

நினைக்கையிலேயே இதழ்கள் தன்னால் விரிய மனக்கண்ணில் காளையவனின் விம்பம்.

தன்பாட்டில் சிரித்துக் கொண்டிருந்தவளை ஆராய்ந்து கொண்டே வந்தமர்ந்தாள்,தீப்தி.

"என்னடி..நைட் ஒம்போது மணியாச்சு..சாப்ட கூட வராம இங்க இருக்க..? என் உன் ஆள பத்தி யோசிச்சிட்டு இருக்கியா..?" கலாய்க்கும் தொனியில் அவள் கேட்கையிலேயே பெண்ணவளின் இதழ்கள் விரிந்து விட்டன.

"என்னடி வெக்கப்பட்டு சிரிக்க வேற செய்ற...?அதுவும் நம்ம ஹிட்லர் சார பத்தி நெனச்சு." கேட்டவளுக்கு இன்னுமே தமக்கை ஜீவாவைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட விடயம் ஒரு வித அதிர்வு தான்.

"உங்களுக்கு வேணா அவர் ஹிட்லரா இருக்கலாம்..எனக்குன்னா அப்டி இல்ல பா.." கையை விரித்து சொன்னவளின் குரலில் ஒரு வித பெருமிதம் இழையோடியதோ..?

"எந்தப் பொண்ணு தான் புடிச்ச பையன விட்டுக் கொடுப்பாங்க..நீயும் அப்டி தான.."

"தீப்தி..நா ஒன்னும் சும்மா சொல்லல..அவரு நீ நெனக்கிற மாதிரி ஆள் கெடயாது..அதுவும் என் கிட்ட நடந்துக்குறத பாத்தா நீயெல்லாம் கண்டிப்பா இப்டி பேச மாட்ட.."

"ஆமா அந்த ஹிட்லர் உன்கிட்ட மட்டும் சாஃப்டா நடந்துப்பாரு பாரு..நீ ரொம்பத் தான் உன் ஆளுக்கு சப்போர்ட் பண்ற.."

"தங்கமே,நா என்ன சொன்னாலும் நீ நம்ப மாட்டன்னு புரிது..எதுக்குன்னாலும் நா சொன்னத மைன்ட் ல வச்சிக்கோ..திடுதிடுப்புன்னு ஜீவா சார் நடந்துக்குறத பாத்து ஷாக்ல மயங்கி விழுந்துராம இருக்கனும்ல.."

"ம்க்கும்..பாக்கலாம் பாக்கலாம்.." என்றவளோ கட்டிலில் சாய அவளுக்கு பக்கத்தில் படுத்துக் கொண்ட மித்ராவின் விழிகள் விட்டத்தை மேய்ந்து கொண்டிருந்ததன.

விரல்களை கோர்த்து நெஞ்சில் வைத்த படி நேராய் படுத்திருந்தவளின் ஒரு விரல் மட்டும் அடுத்த கரத்தின் மீது தாளமிட்டுக் கொண்டிருந்தது.

உறக்கமும் வரவில்லை.நினைவுகளும் அவனை விட்டு விலகவில்லை.
"சீண்டல் மன்னன்.." இதழ்கள் மெதுவாய் முணுமுணுக்க மெல்லச் சிரிப்பும் விரிய அவள் புறம் திரும்பி படுத்த தீப்திக்கு தமக்கையின் மாற்றங்கள் ஒரு வித நிறைவே.

"என்னடி இது..? அந்த ஹிட்லர் கிட்ட இப்டி மயங்கி கெடக்குற..? என்ன தான் பண்ணுச்சு அந்த ஆளு..? உனக்கு என்ன தான் ஆச்சு..?"

"ஏதேதோ ஆச்சு.."

"அரே..என்ன பா இது..மித்து கிட்ட இருந்து லவ் டாக் அதுவும் ஹஸ்கி வாய்ஸ்ல..நா எதிர்பாக்கல..லவ் வந்தா இப்டி தான் இருக்கும் போல..ஆனாலும் உலக அதிசயமா அந்த ஹிட்லர் மேல லவ்வு வந்தத தான் இன்னும் நம்ப முடியாம இருக்கு.."

".............."

"சரி..சரி மொறக்காத சாரி..ஹிட்லர் இல்ல..இனி ஹிட்லர்னு சொல்ல மாட்டேன்.."

"அவரு உங்க கிட்ட தான் ஹிட்லர்..என்கிட்ட எல்லாம் ரோமியோ தான்.."

"வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..?" எழுந்தமர்ந்தே விட்டிருந்தாள்,தங்கை.
உச்சபட்ச அதிர்வில் விழிகள் விரிய இதழ்களும் பிளந்து கொண்டன.

"இங்க பாரு..எங்க கிட்ட ஹிட்லர் உன் கிட்ட ஹெட் மாஸ்டர்னு சொல்லு..இல்ல ஜென்டில் மேன்னு சொல்லு..அத விட்டுட்டு ரோமியோன்னு சொல்றது எல்லாம் ரொம்ப ஓவர்.."

 "இந்த மனுஷன் எல்லார் கிட்டவும் எப்டி இருந்துக்காரு..பாக்கறதுக்கு தான் டெரர்..ஆனா உள்ளுக்குள்ள லவர் பாய்..அத சொன்னா இதுங்க நம்பாது..ஐயோ ஐயோ.." அவள் இதழ்களுக்குள் முணுமுணுக்க தீப்திக்கு அவளின் வார்த்தைகள் புரியவில்லை.

"என்னடி தனியா பேசிக்கற..?"

"ஒன்னுல்ல.." என்றபடி அடுத்த பக்கம் புரண்டு படுக்க அவளின் நடவடிக்கைகளை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்,தீப்தி.

"இவள புரிஞ்சிக்கவே முடியல.." சத்தமாகவே முணுமுணுக்க பக்கத்தில் படுத்திருந்தவளின் செவிகளை எட்டினாலும்  அந்த புன்னகை மட்டும் மறையவேயில்லை.

மறுநாள் மதிய நேரம்,

மாட்டேன் என்று அடம்பிடித்தவளை எப்படியோ அந்த உணவகத்துக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்,தீப்தி.

"வீட்டுக்கு போய் சாப்டுக்கலாம்.." ஓயாது அவள் கூறிய வசனம் ஏற்கனவே பசியின் தாக்கத்தில் இருந்தவளுக்கு பெரும் எரிச்சலை தர திட்டித் தான் சரிகட்டியிருந்தாள்.இல்லையென்றால் அவள் பிடி தகராது என்று அறியாதவளா..?

எப்போதும் போல் மித்ரா பிரியாணியை வருவித்து இரசித்து ருசித்து உண்டு கொண்டிருக்க அவளின் முக பாவனைகளில் இவள் சிரித்தே விட்டாள்.

"பெரிய பில்டப் வீட்டுக்கு போய் சாப்டலாம்னு..இங்க உன் ரியாக்ஷன பாத்தா நீ தான் வம்படியா என்ன கூப்டு வந்த மாதிரி இருக்கு.."

"பிரியாணி சாப்டும் போது பேசாத.." வாயில் இருந்த உணவை மென்று முழுங்கி விட்டு சொன்னவளின் விரல்கள் ஓரமாய் இருந்த சோற்றுப் பருக்கையை துடைத்து எடுத்தது.

"மித்ரா நீ சாப்டுடு இரு நா ரெஸ்ட் ரூம் பொய்ட்டு வர்ரேன்.." கூறிய உணவை முடித்து கொண்டு எழுந்தவளோ விலகிச் செல்ல நால்வர் அமரக் கூடிய அந்த மேசையில் மித்ரா மட்டுமே.

ஓரளவு ஆட்கள் நிரம்பியிருக்க பெண்ணவள் அமர்ந்திருந்த மேசையின் பக்கப்புறமாய் போடபட்டிருந்த மேசையில் நான்கு இளைஞர்கள்.

உணவு உண்டு கொண்டிருந்தாலும் பார்வை இவள் மீது படிந்திருக்க அவர்களுக்குள், ஏதேதோ விமர்சனங்கள் அவளைப்பற்றி.

தகாத வார்த்தைகள் இவள் காதில் விழுந்தாலும் அது தனக்கானது என்பது புரிய சில நிமிடங்கள் தேவைப்பட்டது,பெண்ணவளுக்கு.

அது புரிந்த நொடி விழுங்க முடியாது உணவு தொண்டையில் அடைக்க உடல் கூசி விழிகள் கலங்கி விட்டன.இப்படியான சூழ்நிலைகளை கையாண்டு பழக்கமில்லை,அவளுக்கு.

பரபரவென சுழன்ற பார்வை தீப்தியைத் தேட  அவள் வருவதாக புலப்படவில்லை.புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கடந்து செல்லப் பார்க்க அதில் இருந்த ஒருவன் அவளின் துப்பட்டா நுனியை சப்பாத்துக் காலால் மிதித்திட இதயம் பயத்தில் எகிற முகம் வெளிறிற்று.

பதட்டத்தில் ஒரு புறம் சரிந்து நீண்டு கிடந்த துப்பட்டாவை கவனியாது எழுந்த தன்னை நினைத்து மருகியவளோ இரு கையாலும் பிடித்திழுக்க அவன் விட்டால் தானே.

இன்னுமே அழுத்த சுடிதாருடன் சேர்த்து பிணைத்திருந்த பின் அகன்றிடாதவாறு பற்றிப் பிடித்த படி துப்பட்டாவை இழுத்துக் கொண்டு மூன்றடி நடந்திருக்க அவளை மறைத்து நின்றது,ஒரு உருவம்.

ஒற்றைக் கையை பேன்ட் பாக்கெட்டில் இட்டு மறு கரத்தினால் பின்னங்கழுத்தை தடவிய படி நின்றிருந்தது,அவன் தான்.அவனே தான்.

"ஜீவா சார்.." அதிர்ந்து உச்சரித்தவளில் இருந்து ஆசுவாசப் பெருமூச்சொன்று.இருந்த பயம் காணாது போன இடம் தெரியவில்லை.

கலங்கியிருந்த விழிகளில் ஒட்டியிருந்த ஈரத்தை உள்ளிழுத்த படி அவனை பார்க்க அவனின் இதழ்கள் இறுகியிருந்தது.முகத்தில் அழுத்தம் பரந்து பரவியிருக்க வழமை போல் அந்த கூர் விழிகளில் எந்த வித உணர்வும் புலப்படவில்லை.

"சாப்டல.."

"சாப்டுட்டேன்.."

"பரவால..நா சாப்பட்ற வர சப்போர்டுக்கு வாங்க.." அவள் இருந்த மேசையை நோக்கி நகர அவளுக்கு திக்கென்றது.

"இல்ல..நீங்க சாப்டுங்க.." அவனின் முதுகை பார்த்து அவள் சொல்ல காளையவனின் நடை ஒரு நொடி நின்றது.

"நா உங்கள தோள்ல போட்டு தூக்கிட்டு போமாட்டேன்னு என்ன நம்பிக்க மித்ரா..?" பின்னே திரும்பாது மொழிந்தவனின் வார்த்தைகளில் இருந்த உச்ச அழுத்தம் அவளுக்கு பீதியை கிளப்ப பேசாமல் பின்னூடு சென்று அமர பேரரை அழைத்து தனக்கு தேவையானதை கூறியவனின் பார்வை தங்களை நோக்கி வரும் தீப்தியைத் தொட்டது.

தீப்திக்கு தன்னிடத்தில் அமர்ந்திருந்த ஜீவாவைக் கண்டதும் உதறல் எடுக்க நடக்க முடியாது கால்கள் பின்னியது.

முதல் நாளே வாங்கிக் கட்டிக் கொண்டது அத்தனை எளிதில் மறந்திடாதே.

"அக்கா..நீ மாமா கூட வா..நா கெளம்பறேன்.." தன் பர்ஸை எடுத்துக் கொண்டு அவள் ஓடிட மித்ராவின் கரம் அவளை போக விடாமல் தடுக்க முயன்று நீண்டிட காளையவனின் விழிகள் கசிய விட்ட பார்வையில் வெடுக்கென பின்னே இழுத்து அசட்டுப் புன்னகை சிந்தினாள்,பெண்ணவள்.

"ஏன் நீங்களும் அவங்க கூட போகனுமா..?" சாதாரணா கேள்வி என்றாலும் விழிகளோ "போய்த் தான் பாரேன்.." என்றல்லவா கூறின..?

மறுப்பாய் தலையசைத்தவளுக்கு பசி வேறு எடுக்க அவளின் முக உணர்வுகளை வைத்தே எண்ணத்தை கணித்தவனின் விரல்களோ உண்ணுமாறு சைகை செய்ய மறுத்தவளின் செயல் அடுத்த நொடி மாறிற்று,காளையவனின் விழிகளில் கலந்திருந்த அதட்டலில்.

அவசர அவசரமாக உணவை வாயில் அடைத்துக் கொண்டாலும் "ரொம்பத் தான் பண்றாரு.." இதழ்கள் தன்பாட்டில் திட்டித் தீர்க்க விழிமொழியை படிப்பவனுக்கு இதழ்மொழியை புரிந்து கொள்வது அத்தனை கடினமா என்ன..?

"என்ன பண்றேன்..?" காளை அழுத்தமாய் கேட்க அவளுக்கு புரையேறிட பதறிக் கொண்டே எழுந்தவனின் கரங்கள் அவளை நோக்கி நீண்டிருக்க கடைவிழி நிமிர்த்தி பார்த்தவளின் பார்வையில் சட்டென பின்னே நகர்ந்து தன்னிடத்தில் வந்தமர்ந்தான்,காளையவன்.

"இங்க பாருங்க ஜீவா சார் இப்டி கேள்வி கேக்க வேணா.."

"எப்டி கேள்வி..?" அவன் கேட்டிட முன்பிருக்கும் சீண்டல் குரலில் இல்லாதது கண்டு அவள் முகம் கூம்ப அதைக் கவனித்தாலும் வெளிப்படுத்தவில்லை,எப்போதும் போல்.

சாப்பிட்டு முடித்து அவள் கைகளை கழுவிக் கொண்டு வந்த சமயம் அவனுக்கான உணவு வந்திருக்க பேசாமல் அமர்ந்து கொண்டவளை துளைத்து பாடாய் படுத்திற்று,அவனின் பார்வை.

அவன் விழி வீச்சில் இருந்து தப்பித்திட தலை தாழ்ந்து அமர்ந்திருந்தவளின் செவியில் திடுமென ஒரு அலறல் சத்தம் மோதிட நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது.

அவளின் துப்பட்டாவை மிதித்த இளைஞனின் கழுத்தை காளையவனின் கரம் பற்றி நின்ற நிலையிலேயே அவனை சாய்த்து மேசையில் கன்னத்தை மோதச் செய்திருந்தான்,காளையவன்.

தடுக்க வந்த மற்றவர்களையும் எட்ட நிறுத்தியிருந்தது,அவனின் அனல் சுமந்த பார்வை.

அவனின் விழிகளைக் கண்டு மித்ராவுக்கும் பயமேறிற்று.இப்படி ஒரு அவதாரத்தில் அவனை இதுவரை கண்டதேயில்லையே,அவள்.

எழுந்து நின்றிருந்த காளையின் கரங்கள் அந்த இளைஞனின் கழுத்தில் கொடுத்த அழுத்தம் அவனின் கோபத்தை முற்று முழுதாய் வெளிக் காட்ட தப்பிக்க முயன்று தோற்றுத்தான் போனான்,அவன்.

"ஜீவா சார் விடுங்க.."

"............"

"ப்ளீஸ் ஜீவா சார்.." சுற்றம் இருந்தவர்களின் பார்வை காளையவனின் மீது ஒரு விதமாய் படிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை,அவளால்.

"ஜீவா சார் ப்ளீஸ்.." மீண்டும் அவன் விழி பார்த்து அவள் கெஞ்சவே தளர்ந்தது காளையவனின் உடும்புப் பிடி.

இருமிக் கொண்டே நிமிர்ந்வனின் கரங்களிரண்டையும் பின்னால் இழுத்து முறுக்கி கீழ் முதுகில் ஒரு உதையை வைத்து நேரே நிற்க வைத்திட வலியில் முகம் சுருக்கினான்,அவன்.

"மித்ரா இவன் முன்னாடி வாங்க.." காளையவனின் கட்டளைக்கேற்ப முன்னே வந்து நின்றவளுக்கு அந்த இளைஞனை விட நெடுநெடுவென வளர்ந்து இருந்தவனின் அழுத்தமான முகம் எச்சிலை கூட்டி விழுங்க வைத்தது.

"இவன் தான துப்பட்டாவ மிதிச்சான்..?"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.."

"ரைட்..ஸ்லெப் ஹிம்.."

"என்னது..? என்னால முடியாது.."

"கன்னத்துல ஒன்னு பளார்னு போட சொன்னது கேக்கலியா மித்ரா..?" அவனின் கேள்விக்கு மறுப்பாய் தலையசைக்க இதழ் குவித்து ஊதிக் கொண்டான்,காளையவன்.

"தரணி.." காளையவனின் இதழ்கள் உச்சரிக்க இத்தனை நேரம் விலகி நின்றிருந்த தரணி ஓடி வந்து அந்த இளைஞனை கெட்டியாய் பிடித்துக் கொள்ள காளையவனின் பாதங்கள் நடந்தது தரித்தது,மித்ராவின் அருகில்.

"இப்போ நீ அடிக்கலனா சத்தியமா நா போட்டு பொரட்டி எடுத்துருவேன்..பரவாலயா..?"மெதுவாய் காதருகே சற்றுக் குனிந்து கிசுகிசுக்க அவனின் ஒருமையான அழைப்பில் அவள் விழிகள் விரிந்து கொண்டன.

"என்ன வா போன்னு பேசறீங்க..?"

"இப்போ இதான் முக்கியமா டி..?"

"டி போட்டு பேசறீங்க..?"

"டா போட்டு பேச நா வேணான்னு சொன்னேனா..?" இருபுருவமுயர்த்தி அவன் கேட்க இந்த கேள்விகளை விட முன்னே இருப்பவனை  அடிப்பதே உசிதம் என கூக்குரலிட்டது,மனது.

"நா அடிக்கிறேன்.."

"ம்ம் ரைட்.." என்ற படி விலகி நிற்க அந்த இளைஞனை நோக்கி நகர்ந்தவளுக்கு கைகள் நடுங்கிற்று.கையோங்கியவளுக்கு தன்னை கேவலமாய் பேசியதற்கும் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்கும் கோபம் இருந்தாலும் அறைய முடியவில்லை.

அவளின் தயக்கம் கண்டு அவளருகே வந்து நின்ற ஜீவாவின் முகத்தை ஏறிட அவனும் விழிகளால் கேட்டான்,என்னவென்று.

"நா அறயல..ரொம்ப நாள் யாருக்காச்சும் அடி வயித்துல ஒத விடனும்னு ஆச..இவனுக்கு அப்டி பண்ணவா..?" கண்கள் மின்ன கேட்டவளுக்கு மனதில் இருக்கும் தீராத ஆசைகளில் அதுவும் ஒன்று.

அவள் கேட்ட  பாணியில்  அவனிதழ்கள் மெலிதாய் விரிய பின்னிருந்த தரணிக்கு உலகம் உறைந்தது.

"அண்ணா கெட்டியா புடிச்சிக்கோங்க.." தரணிக்கு அறிவுறுத்தியவளோ உதைக்கப் பார்ப்பினும் ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது.

"இப்போ என்னடி..?" அப்பட்டமான சலிப்பு அவன் குரலில்.

"இல்ல நீங்களே அடிச்சிருங்களேன்..அவனுக்கு அடிச்சா எனக்கும்  வலிக்கும் போல இருக்கு.." அந்த புதியவனின் தோற்றத்தை பார்த்து யோசனையுடன் அவள் சொல்ல அதற்கு மேலும் பொறுமையாய் இருந்திடும் ரகம் இல்லையே,காளையவன்.

இவனை போட்டு புரட்டி எடுத்து விட மற்ற மூவருக்கும் அடி விழுந்தாலும் கொஞ்சம் குறைவு தான்.

"ஒரு அறயோட தப்பிக்க விட்ருக்கலாமே மேடம்.."வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தரணி சொல்ல அவளுக்கும் தோன்றியது,அதே எண்ணம் தான்.

தேடல் நீளும்.

2024.04.18


Leave a comment


Comments


Related Post