இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 20-04-2024

Total Views: 21809

 

அத்தியாயம் : 14

ஹோட்டலுக்குள் நுழைந்த ரேஷ்மியை பின் தொடர்ந்து அஞ்சனாவும் வந்தாள். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய கண்ணாடி கதவோ தானாக திறந்தது.

அதனை தாண்டி உள்ளே வந்த நொடியே அவளின் பார்வை கண்டது ரேஷ்மியையும், தன் அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் ஹெச். ஆர் இருவரையும் தான்.

அவளின் தோளில் கைபோட்டுக் கொண்டு லிப்ட்டுக்குள் இருவரும் நுழைந்து விடவே, வேகமாய் அதனை நோக்கிச் செல்லப் பார்த்தாள்.

அதற்குள் அங்கே பணிபுரியும் பணியாளர்கள், “மேடம் ! இஸ்டாப். யார் நீங்க ? ரிசப்சன்ல உங்க நேம் என்டர் பண்ணுங்க “ என்க,

“இல்லை, இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு “ என்று லிப்ட்டைப் பார்த்து கூறவே, முன்னிருந்தவன் யாரை கூறுகிறாள் என்பது புரிந்தாலும் தெரியாததுப் போல் காட்டிக் கொண்டான்.

“மேடம் பிளீஸ் இப்படி நிக்காதீங்க ? உங்களுக்கு என்ன வேணும் ? ரெஸ்டாரெண்ட் போகணுமா இந்த பக்கம் இருக்கு. ஹோட்டல் ரூம் வேணுமா அங்கே வந்து டீடைல்ஸ் கொடுங்க. இல்லைன்னா கிளம்புங்க “ என்கவே, வேறு வழியின்றி வெளியே வந்தாள்.

அதுவரை அஞ்சனாவை பின் தொடர்ந்து வந்த நந்தன் வெளியே தன் பைக்கில் அமர்ந்தவாறு காத்திருக்க, எதையோ யோசித்துக் கொண்டே வெளியே வருபவளைக் கண்டான்.

‘இவ என்ன பண்ணிட்டு இருக்கா ? எதுக்கு இவ்வளோ வேகமா இந்த ஹோட்டலுக்கு வந்தா ? உள்ளே போனதுமே வெளியே வந்துட்டா ? என்னவா இருக்கும் ? எதுக்கு இப்படி யோசிச்சிட்டு இருக்கணும். பேசாம அவ கிட்டையே கேட்கலாம் ‘ நினைத்து இறங்கி அவளின் முன்னே வந்து நின்றான்.

“ஹாய் “ என்றதும், சட்டென நிமிர்ந்தவளோ நந்தனைக் கண்டாள்.

‘இவன் என்ன இந்த நேரம் இங்கே ?’ நினைத்தவளோ, “ஹாய் நந்தன் “ என்றாள்.

“என்னங்க இந்த பக்கம் வந்திருக்கீங்க ? யாரையும் பார்க்க வந்தீங்களா ?”

“இல்லை, அது வந்து “ தடுமாறியவளோ,

 “சும்மா தான் “ என்றாள்.

“சும்மா வர்றதுக்கு எதுக்கு இவ்வளோ தூரம் வந்தீங்க ?” என்கவே,

“அப்போ நீங்க என்னை பாலோ பண்ணுனீங்களா ? ஒரு பொண்ணை அவளுக்கே தெரியாம பாலோ பண்ணிட்டு வந்திருக்கீங்க ? உங்களுக்கு என்ன வேணும் ?” வேகமோடு மொழிந்தாள்.

“ரிலாக்ஸ், உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குற மாதிரி தோணுனது அதான் வந்தேன். எதுக்கு நீங்க இவ்வளோ டென்ஷனாகுறீங்க ?”

“அதெல்லாம் இல்லையே ?”

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா சொல்லுங்க, கண்டிப்பா பண்ணுறேன் “

“நான் எப்படி உங்களை நம்ப முடியும் ? “

“ஏங்க, உங்களுக்காக இவ்வளோ தூரம் வந்திருக்கேன். இப்படி சொல்லுறீங்க ?”

“நான் ஒன்னும் உங்களை வர சொல்லலையே “

“அதான் சொன்னேன்னே, ஏதோ நீங்க பண்ணுறீங்க ? அதுக்கு உதவி வேணும்னா கண்டிப்பா சொல்லுங்க “ என்று மறுபடியும் கேட்கவே, அவனின் முகத்தைக் கண்டாள்.

ஏனோ அவனைக் கண்டால் தனக்கு உண்மையிலே ஏதோ உதவ வந்தவன் போன்று இருக்கவே, “காபி குடிக்கலாம் வரீங்களா ?” என்றதும், அவனும் சரி என்றான்.

இருவரும் சேர்ந்து அதே ஹோட்டலில் இருந்த ரெஸ்டாரெண்ட்டில் அமர்ந்தனர். அஞ்சனாவின் பார்வையோ லிப்ட்டை நோக்கி தான் இருந்தது.

“யாரும் உங்களுக்கு தெரிஞ்சவங்க வந்திருக்காங்களா ?” அவளின் பார்வையை வைத்தே கேட்டு விட்டான்.

“ஆமா. நம்ம ஆபிஸ்ல ரேஷ்மின்னு வேலைப் பார்க்குற ஒரு பொண்ணு இங்கே வந்தா. அவளை பாலோ பண்ணி தான் நான் வந்தேன் “

“எதுக்காக ? நீங்க அவங்களை பாலோ பண்ணனும் ?” 

“அவ என் கிட்ட “ என்று அவளின் காதல் முறிந்தது, இரவு நேர வேலை. இப்போது இங்கு வந்தது. ஹெச்.ஆர்ரோடு உடன் சேர்ந்துச் சென்றது வரை கூறினாள்.

“ஏங்க ? யார் எப்படியோ போனா உங்களுக்கு என்னங்க ? சென்னை சிட்டில இப்படிப்பட்ட பொண்ணுங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க. நினைச்ச நேரம் சட்டையை மாத்துற மாதிரி ஆளை மாத்துவாங்கன்னு சொல்லுவாங்களே அப்படி தாங்க இது. இதை போய் எதுக்கு நீங்க பெரிசா எடுத்துக்குறீங்க ?" 

“நம்ம ஹெச்.ஆர் க்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்குல. அப்படி இருக்க இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்கன்னா ஏதோ இருக்குன்னு தோணுது. ரேஷ்மி பிடிக்காம கூட அவர் கூட போகலாம். இல்லை அவரை ரேஷ்மி கூட வளைச்சி போட்டிருக்கலாம்ல “

“இருக்கலாம் தான். அதுனால என்னங்க உங்களுக்கு ?” என்கவே, இவனிடம் எப்படி முழு உண்மையும் கூற முடியும். 

“ஆபத்துல சிக்கிர கூடாதுன்னு தான் “ என்க,

“அக்கறை தாங்க உங்களுக்கு ஒத்துக்குறேன். இனிமே இப்படி கண்டுபிடிக்கிறேன் வந்து எதுலையாவது மாட்டிக்கிடாதீங்க ?”

“ஏன் அப்படி சொல்லுறீங்க நந்தன் ?”

“நம்ம ஹெச்.ஆர் பொண்ணுங்க விசியத்துல கொஞ்சம் வீக் “

“அப்படின்னா ?”

“ஏங்க இதெல்லாம் தெளிவா சொல்ல முடியாது. தனக்கு ஒரு பொருள் பிடிச்சது அப்படின்னா அதை அடைஞ்சே தீரணும் நினைக்கிற விதம், பொருள் மட்டுமில்ல பொண்ணும் தான். நீங்க எதுக்கும் அவர் கிட்ட இருந்து தள்ளியே இருங்க “

“என்கிட்டே அவரால எல்லாம் நெருங்க முடியாது. அப்படி நெருங்கி பார்க்கட்டும் அதுக்கு அப்பறம் இருக்கு. ஆமா இந்த விசியம் உங்களுக்கு எப்படி தெரியும் ?”

“என் அண்ணன் தான் சொன்னான் “

“இந்த ஹெச்.ஆர் பத்தி வேற ஏதாவது உங்களுக்கு தெரியுமா ?”

“வேற ஏதாவதுன்னா ?”

“அவரோட குடும்பம், வளர்ந்த விதம், செல்வாக்கு “

“இதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க ?”

“சும்மா தான் “

“சும்மா எல்லாம் நீங்க தெரிஞ்சிக்கிட்டா அப்பறம் உங்களுக்கு தான் ஆபத்து. நம்ம வேலை பார்க்க்குறோம். அதுக்கு சம்பளம் கொடுக்குறாங்க. அவ்வளோ தான். அப்படியே இருந்துக்கிடணும் அது தான் நல்லது. நேரமாச்சு வாங்க போகலாம் “ என்றவாறு எழவே, இவனிடம் இதற்கு மேல் பேச முடியாது என்பது புரிய, நேரமானது உணர்ந்து அவனோடு எழுந்துக் கொண்டாள்.

பின் இருவரும் அங்கிருந்து கிளம்ப அஞ்சனாவோ திரும்பிக் காண, “அட வாங்க போகலாம். ஆஹா இது கூட நம்ம ஹெச்.ஆர் அப்பாவோட ஹோட்டல் தான் போல. அதுனால தான் இங்கே வந்திருக்காக “ என்றான்.

அதனை மனதில் குறித்துக் கொண்டவளுக்கு இங்கு திரும்ப வந்தால் நிச்சியம் ஏதாவது தனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது நினைத்துக் கொண்டு இஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு நந்தனோடுக் கிளம்பினாள்.

அடுத்த மூன்று மணி நேரம் கடந்தே அறையிலிருந்து வெளியேறி ரேஷ்மியும், ஹெச்.ஆர் இருவரும் கீழே வந்தனர்.

“ஓகே பேபி. நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம் “ 

“பாய் டார்லிங் “ என்ற ரேஷ்மியும் தன் இஸ்கூட்டியை எடுத்துக் கொண்டுச் சென்றாள். அங்கிருந்த நீண்ட சோபாவில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்து தலையைச் சாய்த்தவனுக்கு இன்றைய பசி அடங்கிய சந்தோஷம்.

அஞ்சனாவோடு அவளின் ஹாஸ்டல் வரை நந்தன் வரவே, “நீங்க எதுக்கு என் பின்னாடியே வரீங்க ?” வாசலில் நின்று விட்டு சந்தேகமாய்க் கேட்டாள்.

“அட நீங்க வேற ? என்னோட வீட்டுக்கு போற பாதையும் இந்த பக்கம் தான் இருக்கு “ என்க, சந்தேகமாய்ப் பார்த்தாள்.

“குட் நைட்ங்க. “ என்றவனோ அதற்கு மேல் ஒரு நொடி நிற்காது சென்று விட்டான். 

நின்றால் எத்தனை நாள் இப்படி தன்னை பாலோ செய்தீர்கள் ? என்று ஏதாவது கேள்வி கேட்டு வைத்தால் என்ன செய்ய முடியும் ? அங்கிருந்து மறந்த பின்னே ஹாஸ்டலுக்குள் நுழைந்தாள்.

வசந்த்திற்கு அழைக்க அவனும் அழைப்பினை எடுக்க, இன்று தான் பார்த்த அனைத்தையும் கூறினான்.

“இப்போ இதுல என்ன ஐடியா வச்சிருக்கே ?”

“எனக்கு என்னமோ அந்த ஹோட்டலுக்கு போய் விசாரிச்சா கண்டு பிடிக்க முடியும் “

“எப்படி அஞ்சனா நம்மளால எந்த பவரும் இல்லாம விசாரிக்க முடியும் ? அது எம்.எல்.ஏவோட ஹோட்டல் “

“நீங்க சொல்லுறதும் சரி தான். ஆனா இந்த ஹெச்.ஆர் எந்த பொண்ணை உஷார் பண்ணுனாலும் அங்கே கூட்டிட்டு வர்ற மாதிரி தான் எனக்கு தோணுது. ஒரு வேலை அக்காவையும் “

“வேண்டாம் “ பட்டென கத்தினான் வசந்த்.

“போதும் அஞ்சனா. இப்படி பேசாதே ? உன் அக்காவை பத்தி உனக்கு தெரியாதா ? பணத்துக்காக இப்படி போற பொண்ணுன்னு நீ எப்படி சொல்லுவே ?”

“என் அக்காவை நான் அப்படி சொல்லுவேன்னா ? அவ எனக்கு அக்கா மட்டுமில்லை. அம்மா, குரு எல்லாமே அவ தான். கட்டயாப்படுத்தி, கடத்திக் கொண்டு போய் எதுவும் பண்ணிருப்பாங்களோ ஒரு எண்ணத்துல தான். ஏன்னா அங்கே வேலைப் பார்க்குறவங்க அவங்க பக்கம் இருக்குற மாதிரி தான் இருக்கு. அப்போ நமக்கு தெரியக் கூடாதுன்னு தானே நினைக்கிறாங்க. அதை தான் அன்னைக்கும் பேசும் போது சரி இப்போ பேசும் போதும் சரி சொல்ல வந்தேன் “  

“என்னால இப்போ எதையும் யோசிக்க முடியலை அஞ்சனா. தங்கச்சிக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க.”

“அக்கா மேல நீங்க வச்ச காதலை என்னால புரிஞ்சிக்க முடியுது. சரி நான் வச்சிறேன். உங்களால முடிஞ்சா அந்த ஹோட்டல்ல வேலைப் பார்க்குற யாரையாவது தன் பிடிக்கு கொண்டு வர முடியுமா பாருங்க “ என்றவளோ கைபேசியை வைத்து விட்டாள்.

தன்னிடம் ஆள்பலமும் இல்லை, பணபலமும் இல்லை அப்படி இருக்க எப்படி அக்காவின் இறப்பு பற்றி கண்டு பிடிக்க முடியும் ? உடல் கூறாய்வு செய்ததில் ஏரியில் விழுந்து தண்ணீர் அதிகம் குடித்து இறந்துப் போனாதாக இருக்கவே, அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. தன்னைச் சுற்றி என்ன தான் நடக்கிறது ? தான் நினைத்தது இப்போது சரியாக இருந்தாலும் எப்படி வெளியேக் கொண்டு வருவது ? தலைவலியோ உயிர் போக பில்ஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு படுத்து விட்டாள்.

மறுநாள் காலை எழுந்த பின் தான் சற்று தலை வலி குறைந்தது போன்று உணரவே, வசந்திடம் இருந்து ஹோட்டல் முகவரி வேணும் என்ற குறுஞ்செய்தி வந்திருந்தது.

அதனை அனுப்பி விட்டு அலுவலகம் கிளம்ப தயாரானாள். ஹெச்.ஆர் தன்னைக் காணும் விதம் எந்த அர்த்தம் என்று இப்போது புரிந்தது. அதுக்காக அவனின் சுயரூபத்தை வெளிக் கொண்டு வர தன்னை இழக்க முடியாது அல்லவா !

சாமியின் புகைப்படத்தின் முன்னே நின்றவளோ தன் அக்காவினை மனதில் நினைத்து, “அக்கா ! உன்னை நம்பி தான் நான் இந்த போராட்டத்துல இறங்கி இருக்கேன். எனக்கு ஏதாவது உதவி பண்ணு பிளீஸ்க்கா “ என்று தினமும் வேண்டுவது போல் தான் வேண்டிக் கொண்டு கிளம்பினாள்.

அலுவலகத்திற்கு வந்தவளோ வழக்கம் போல் தன் வேலையைப் பார்க்க, ரேஷ்மி வந்திருக்கிறாளா என்றுக் காண வந்திருந்தாள்.

எதுவும் நடக்காதுப் போல் அவளிருக்கவே, அருவருப்பாய் உணர்ந்தவள் அவளிடம் அதன் பின் பேசுவதை நிறுத்தி விட்டாள். அவளாகப் பார்த்தால் லேசாக சிரித்து விலகி விடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டாள்.

அன்றொரு நாள் அலுவலகம் வர அனைவரின் முகத்திலும் சந்தோஷம். என்னவென்று புரியாது தன்னருகில் இருந்த பெண்ணிடம் கேட்டாள்.

“மெயில் செக் பண்ணி பாரு “ என்றதும், அஞ்சனாவும் அதனைப் பார்க்க, அதில் சிம்லா டூர் செல்லும் அறிவிப்பு இருந்தது.

மூன்று நாள் பகல், இரண்டு நாள் இரவு என்ற கணக்கில் இருக்க, வர்ற நினைப்பவர்கள் முதலிலே பெயரினைக் கொடுக்கும் படி இருந்தது. 

“ஆமா இதுக்கான செலவை யார் பார்த்துப்பா ? நம்ம தானா ?”

“இல்லையே ? இந்த ஆபிஸ்சை பொறுத்தவரை இவங்களே அரேஞ்ச் பண்ணிப்பாங்க, போக வர்ற அங்கே தங்க. ஆனா அங்கே ஏதாவதுன்னா நம்ம தான் பார்த்துக்கணும் “

“இது என்ன ஆர்ச்சியமா இருக்கு “

“இந்த கம்பெனி அப்படி தான். கொஞ்சம் நம்மளும் ரிலாக்ஸ் ஆகணும்ல அதுனால. விருப்பம் இருக்குறவங்க போனாலே போதும். எப்படியும் சிங்க்லஸ் தான் ரொம்ப பேர் வருவாங்க. நல்லா என்ஜாய் பண்ணலாம் “ என்றவளோ யோசிக்காது தன் பெயரை அவள் கொடுக்க, கண்டவாறு இருந்தாள் அஞ்சனா.

கிடைப்பில் இந்த விசியத்தைப் போட்டு விட, மதிய நேரம் போல் அவளின் முன்னே வந்த ரேஷ்மி, “ஹே ! அஞ்சனா டூருக்கு வர்ற நேம் கொடுத்துட்டையா ? என்க,

“இன்னும் இல்லை. யோசிக்கணும் “

“வா அஞ்சனா. சூப்பரா என்ஜாய் பண்ணலாம். மூனு வருஷத்துக்கு அப்பறம் இப்போ தான் கூட்டிட்டுப் போறாங்க. நான் என் பேரை கொடுத்துட்டேன்பா. கண்டிப்பா நீயும் வரணும் சரியா. இந்த பையிலை ஹெச்.ஆர் கிட்ட கொடுக்கணும்  நான் வரேன் “ எனக் கூறி அவளோச் சென்று விட, முகத்தை சுண்டினாள்.

‘இவ வான்னு சொன்னா நான் வரணும்மா. அங்கே போய் எவன் கூட ரூட் விட போறாளோ ?’ உதட்டை சுழித்து வேலையை கவனித்தாள்.

மாலை நேரம் கிளம்ப தன் இஸ்கூட்டியை எடுக்கும் நேரம் நந்தன் வந்து நின்றான்.

“ஹாய் அஞ்சு “ என்க, அவளோ விழிகளை சுருக்கிக் காணவே,

“நீங்க சுருங்கி இருக்கீங்களா அதான் சுருக்கி கூப்பிட்டேன். உங்களுக்கு பிடிக்கலைன்னா கூப்பிடல “ என்க, அவளோ அதற்கு எதுவும் கூறவில்லை.

“டூர் போக என்ன முடிவு எடுத்திருக்கீங்க ?”

“எதுக்கு தேவையில்லாம போய்க்கிட்டுன்னு நினைக்கிறேன் “

“அப்படி நினைக்காதே ? நம்ம பார்க்காத, கேட்காத, தெரியாத விசியங்கள் கூட ஒன்னாவே இருக்கப் போறதுனால தெரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கு “ என்று தன்னைப் பற்றியும், அங்கிருக்கும் அமைப்பு பற்றியும் கூறினான்.

ஆனால் அஞ்சனாவின் மனமோ எப்போதும் வித்தியாசமாக தானே நினைக்கும். ஏதாவது அங்குச் சென்றால் தன்னை முயற்சிக்க முடியுமா ? தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.

“அடிக்கடி நீங்க ஏங்க எங்கையோ போறீங்க ? இந்த உலகத்துக்கு வாங்க “

“நீங்க போறீங்களா ?”

“ஆமா. எத்தனை நாள் ஆபிஸ், வீடுன்னு இருக்க முடியும். கொஞ்சம் வெளியே போய் என்ஜாய் பண்ணிட்டு வரணும் முடிவெடுத்துட்டேன் “ என்கவே, சரியெனக் கேட்டுக் கொண்டாள்.

அதன் பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். மறுநாள் அலுவலகம் வர, அவளின் கணிப்பொறிக்கு தன்னை வந்துக் காணுமாறு ஹெச்ஆரிடம் இருந்து மெயில் வந்தது.

‘இவர் எதுக்கு நம்மளை வரச் சொல்லுறாரு ‘ யோசித்துக் கொண்டே அவரின் அறையின் அருகேச் சென்றவளோ அனுமதி வாங்கி உள்ளே நுழைந்தாள்.

“குட் மார்னிங் சார் “

“குட் மார்னிங் அஞ்சனா “

“வர சொல்லிருந்தீங்க ?”

“டூருக்கு நீங்க இன்னும் நேம் கொடுக்கலைப் போல “ என்க, ஏன் தன்னிடம் மட்டுமே இதனை அனைவரும் சொல்லி வைத்ததுப் போல் கேட்கிறார்கள். எதுவும் இருக்கிறதா என்ன இந்த விசியத்தில் ? தான் செல்ல வேண்டும் என்பது தான் விதியின் செயலா என்ன ?

“என்ன யோசிக்கிறீங்க அஞ்சனா ?” என்று அவனும் அவளை வரவைக்க ஏதேதோ பேச, சரியெனக் கேட்டு தலையாட்டி வெளியே வந்தாள்.



Leave a comment


Comments


Related Post