இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 22-04-2024

Total Views: 23100

நல்ல நாள் பார்த்து புது வீட்டிற்கு குடியேற தேவையான அனைத்து செயல்களையும் அபிநந்தன் பார்த்து பார்த்து செய்ய


“நந்தா வீடு வாடகை எல்லாம் உனக்கு ஏதுவா தானே இருக்கும்… அட்வான்ஸ் கொடுக்க எதுவும் பணம் தேவையா ப்பா?” என்று பார்வதி கேட்க


“அம்மா.. எனக்கு தெரிஞ்ச ஒரு பில்டர்ஸ் மூலமா தான் அந்த வீடு பார்த்திருக்கேன். வாடகை எல்லாம் இல்லம்மா அதாவது அது ஒரு டெவலப்பிங் ஏரியா.. சோ, அவங்க ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் ல வீடு கட்டி விற்பனை செய்வாங்க… நாம முழு தொகை உடனே கொடுக்க வேண்டாம். 


அட்வான்ஸ் கொடுத்து வீட்டுக்கு குடி போய்ட்டு மாசாமாசம் வாடகை மாதிரி கொஞ்சம் பணம் ஈ.எம்.ஐ ல கட்டினா சில மாதங்கள்ல அந்த வீடு நமக்கு சொந்தமாகிடும்.” என்று அபிநந்தன் பார்வதிக்கு விளக்கமாக சொல்ல


“ஓ… அந்த வீட்டை வாங்கப் போறோமா? அப்போ இந்த வீடு?” என்று கேள்வியில் தொக்கி நிற்க


“அம்மா… இந்த வீடு கவனிப்பு இல்லாம இருந்தாலும் அது நல்லா இருக்காது. உங்களுக்கு விருப்பம்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?” அபிநந்தன் தயங்க


“சொல்லு நந்தா…” 


“அது வந்து ம்மா… நமக்கு தெரிஞ்ச யாருக்காவது லீஸ் கொடுக்கலாம். அளவா ஒரு கணவன் மனைவி குழந்தை னு இருந்தா இந்த வீடு தாராளம் தானே… அந்த மாதிரி யாருக்காவது நமக்கு தெரிஞ்சவங்களா இருந்தா நல்லா இருக்கும். அதோட இப்போ உடனடியா அந்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க உபயோகப் படும்.” என்று நந்தன் முடிக்க 


இரண்டொரு நிமிடங்கள் யோசித்த பார்வதி “சரிப்பா… உனக்கும் உதவும். உனக்கு தெரிஞ்சு நல்ல குடும்பம் நம்ம வீடு பாதுகாப்பா இருக்கும் னு தோணினா நீயே முடிவு எடு…” என்று சொல்லிட


“சரி ம்மா நான் விசாரிச்சு பாக்குறேன்..‌” என்றான் அபிநந்தன்.


அதுபடியே தன்னோடு வேலை பார்க்கும் புதிதாக திருமணம் ஆன ஒருவர் அலுவலகத்திற்கு அருகில் வீடு தேடிக் கொண்டு இருக்க அவர்களுக்கு தங்கள் வீட்டை லீஸ்க்கு விட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தையும் தன் சேமிப்பையும் வைத்து வீட்டிற்கு முன்தொகை கொடுக்க அபிலாஷா அக்சயா இருவருக்கும் அந்த புது வீடு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் பார்வதி மட்டும்


“எதுக்கு நந்தா நான் ரெண்டு ரூம் இருக்கிற மாதிரி தானே வீடு பார்க்க சொன்னேன். மூணு ரூம் இருந்தா உங்கிட்ட பணம் இருந்ததாப்பா?” என்று கேட்க


“அம்மா அதெல்லாம் இருக்கு.. இவ்வளவு காலமும் எங்களுக்காக உழைச்சு நீங்க கஷ்டப்பட்டது எல்லாம் போதும். இனி உங்க பையன் நான் சம்பாதிக்கிறேன். இதோ அபி உங்களுக்கு உதவியா இருக்கா இனி நீங்க சந்தோஷமா இருங்க..‌.” என்று நந்தன் சொல்ல


“ஆமாம்மா..‌ நந்தனுக்காகவும் அச்சுக்காகவும் நீங்க ரொம்ப கஷ்டபட்டீங்க… இப்போ நந்தன் நல்ல வேலையில இருக்காரு. உங்களையும் அச்சுவையும் பாத்துக்க வேண்டியது எங்க பொறுப்பு…” என்று அபி பேச மனம் நிறைந்து புன்னகைத்தார் பார்வதி.


அபியின் நண்பிகள் மோகன்ராம் குடும்பத்தினரை மட்டும் அழைத்து புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறினர் அபிநந்தன் குடும்பத்தினர்.


அதன் மறுநாள் தன் வீட்டு ஷோபாவில் ஆயாசமாக அமர்ந்து ஃபோன் நோண்டிக் கொண்டு இருந்த ப்ரதீப் முன்பு வந்து அமர்ந்தார் மோகன்ராம்.


“ம்ம்க்க்கும்” என்று தொண்டையை செருமி அவனிடம் தான் பேச வேண்டும் என்று உணர்த்த “யெஸ் டாட்.. என்ன பேசனும் சொல்லுங்க..” தலையை ஃபோனில் இருந்து எடுக்காது கேட்க


“அடுத்து என்னடா ப்ளான்?” என்று மோகன்ராம் கேட்க


“என்ன ப்ளான்? அம்மா நான் வெஜ் சமைச்சு வைச்சிருக்காங்க… நல்லா சாப்பிட்டு ஒரு தூக்கத்தை போடனும்…” என்று விளையாட்டாக பதில் சொல்ல தந்தை மகன் இடையே ஏதோ விவாதம் நடக்க போகிறது என்று ஆவலாக வேடிக்கை பார்க்க அமர்ந்தார் பத்மாவதி.


“பார்த்தியா பத்மா உன் புள்ளை எப்படி பேசுறான்… டேய் அடுத்து வாழ்க்கையில என்ன பண்ண போற? ப்யூச்சர் ப்ளான் பத்தி கேட்டேன்..” என்று மோகன்ராம் கொஞ்சம் கடுப்பாக உரைக்க


“அப்பா… ஏற்கனவே சொன்னது தான் உங்க பிஸ்னஸ் எல்லாம் என்னால கவனிச்சுக்க முடியாது. நான் சொந்தமா தொழில் தொடங்க போறேன். அதுக்கு இன்வஸ்மெண்ட் கூட நானே ரெடி பண்ணிக்கிறேன். யூ டோண்ட் வொர்ரி டாட்…” என்று ப்ரதீப் சொல்ல


“அது சரி… அதைத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே… நான் கேட்டது மேரேஜ் பத்தி…” என்று சொன்னவுடன் ப்ரதீப்புக்கு கையில் குழந்தையுடன் குழந்தை போல சிரித்த அக்சயா முகம் நிழலாக வர லேசாக சிரித்துக் கொண்டான் தன்னை அறியாமல்… 


அதை தன் மனைவிக்கு காட்டிய மோகன்ராம் “என்னடா முகத்துல வெட்கம் தெரியுது… எனி சீக்ரெட்ஸ் மை சன்?” என்று கேலியாக கேட்க


“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டாட்… ஒரு டூ இயர்ஸ் போகட்டும்..” என்று ப்ரதீப் சொல்ல 


“ஓ.. அப்போ நீ யாரையும் லவ் பண்ணல இஸ் தட் க்ளியர்?” மோகன்ராம் கேட்க


“ம்ம்… யெஸ்..” சாதாரணமாக சொல்ல


“சரி அப்போ நான் உனக்கு பொண்ணு பார்த்திருக்கேன் நாளைக்கு பொண்ணை பார்க்க போறோம்..” என்று சொல்லி விட்டு அவர் எழ ப்ரதீப் அதிர்ந்து பார்க்க பத்மாவதி ஆச்சரியமாக பார்த்தார்.


“என்னங்க என்கிட்ட கூட சொல்லலை?” பத்மாவதி கேட்க


“டாட்… என்ன சொல்றீங்க? நான் தான் டூ இயர்ஸ் போகட்டும் னு சொன்னேனே…” என்று ப்ரதீப் கேட்க


“டேய் நானும் ரெண்டு வருஷம் போகட்டும் னு தான் நினைச்சேன். பட் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு நல்ல குடும்பம்… இன்னும் ரெண்டு மூணு இடத்துல இருந்து அந்த பொண்ணை கேட்குறதா கேள்வி பட்டேன். அதான் நாம முந்திக்கனும் இல்லையா?” என்று மோகன்ராம் சொல்ல


“நீங்க சொல்றது வாஸ்தவம் தான்… அவ்வளவு நல்ல பொண்ணா ங்க? என்ன படிச்சிருக்கா பார்க்க எப்படி இருப்பா?” என்று பத்மாவதி முழு சம்மதத்தை தெரிவித்து விட


“ச்ச்..” என்று முகத்தை சுழித்துக் கொண்டான்.


“என்னடா ஓவரா சலிச்சுக்குற? அபி கல்யாணம் முடிஞ்ச உடனே நீ கல்யாணம் பண்ணிக்கிறேன் னு சொன்ன தானே?” மோகன்ராம் கேட்க


“சொன்னேன் தான்… அதுக்காக அபிக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் தானே ஆகுது… நான் என் பிஸ்னஸ் ல டெவலப் ஆகனுமே ப்பா…” ப்ரதீப் சொல்ல


“அதெல்லாம் ஆகலாம் டா… முதல்ல நாளைக்கு பொண்ணு பார்க்க போறோம்…” அவ்வளவு தான் என்று முடிவாக கூறி விட்டு அறைக்கு சென்று விட்டார் மோகன்ராம்.


எதுவும் புரியாமல் விழி பிதுங்கி அமர்ந்தான் ப்ரதீப்.


மோகன்ராம் பின்னாடியே சென்ற பத்மாவதி “என்னங்க திடிர்னு பொண்ணு பார்க்க அது இதுன்னு சொல்றீங்க.. யாரு பொண்ணு? எதுவுமே சொல்லலை..” என்று கேட்க


“எல்லாம் உனக்கு தெரிஞ்ச இடம் தான் பத்மா நம்ம அபிநந்தன் தங்கை அக்சயா தான்…” என்று சொல்ல


“அவளா?” என்று ஆச்சர்யம் கொண்டவர். “ஏங்க அவ ரொம்ப சின்ன பொண்ணு நாம திடுதிப்புனு போனா அவங்க என்ன முடிவு சொல்லுவாங்க. நீங்க எதுவும் பேசுறீங்களா?” என்று கேள்விகளை அடுக்க


“எனக்கு அபியை பார்க்க முதல் முறை நந்தன் வீட்டுக்கு போனோமே அப்போ தான் இந்த மாதிரி தோணுச்சு பத்மா… சரி சின்ன பொண்ணு படிக்கிறா இவனுக்கும் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் னு நினைச்சேன். பட் ரிசப்ஷன் ல வச்சே ஒரு ஃபேமிலி அபிநந்தன் ரிலேட்டிவ் போல அவங்க அக்சயாவை பார்த்து பார்வதிக்கிட்ட பேசனும் னு அவங்களே பேசிக்கிட்டாங்க.. நானே அதை கவனிச்சேன்.


அதான் நாம லேட் பண்ணி நல்ல சம்மந்தம் கை விட்டு போயிடும் னு தான்…” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்க


“சரிங்க… ஆனா நம்ம பையன்..‌ அவனோட விருப்பம் என்னனு தெரிஞ்சுக்காம…” என்று நிறுத்த


“அவனுக்கும் அந்த பொண்ணு மேல லைட்டா விருப்பம் இருக்கு பத்மா… பங்ஷன்லயே நான் அதை நோட் பண்ணினேன். அதனாலதானே இந்த முடிவு…” என்று சொன்னவர்


“நீயும் கூட அக்சயா தான் பொண்ணு னு காட்டிக்காதே பத்மா… பையன் அதுக்குள்ள அவனா சொல்றானா பார்ப்போம். இல்லைனா அவன் நமக்கு எவ்வளவு சர்ப்ரைஸ் தந்திருக்கான். நாம அவனுக்கு தர சர்ப்ரைஸா இது இருக்கட்டும். நான் அபிக்கும் நந்தனுக்கும் கால் பண்ணி நாளைக்கு சும்மா வீட்டுக்கு வரோம் கொஞ்சம் பேசணும் னு மட்டும் சொல்றேன். அங்கே போய் நேர்ல எல்லாம் பேசிக்கலாம்.” என்று மோகன்ராம் சொல்ல


“ம்ம்… உங்க பையனோட சேர்ந்து நீங்களும் இப்படி ஆகிட்டீங்க.. சரி நான் நாளைக்கு தேவையான தட்டு தாம்பூலம் எல்லாம் ரெடி பண்றேன்.” என்று பத்மாவதி சொல்லி செல்ல


‘தன் மனைவி தன்னை புகழ்ந்தாரா இல்லை கேலி செய்தாரா’ என்று ஒன்றும் புரியாமல் நின்றார் மோகன்ராம்.


  • தொடரும்…

Leave a comment


Comments


Related Post