இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 22-04-2024

Total Views: 19433

பாவை : 15

 சுற்றுலாச் செல்ல அனைவரோடு சேர்ந்து அஞ்சனாவும் தன் பெயரை இணைத்துக் கொள்ள, அடுத்த இரு வாரங்களில் அதற்காக ஏற்பாடுகள் முடிந்தது.

கிளம்பும் நாளும் வர, அலுவலகத்தில் இருந்து அனைவரும் ஏர்போர்ட் செல்ல காத்திருந்தனர். அப்போது தான் யார் யார் வருகிறார்கள் என்பது தெரிய வந்தது.

“ஹாய் அஞ்சனா “ கேசவன் சந்தோஷமாக வெகு நாட்கள் கழித்து பார்த்ததில் பேச,

“ஹாய், எப்படி இருக்கீங்க ?”

“ரொம்ப நல்லாயிருக்கேன். நீ வருவேன்னு நான் நினைச்சி கூட பார்க்கலை “ என்க,

‘ அதென்ன தன்னை விட இவனுக்கு அவளிடத்தில் அதீத உரிமை. நீ, வா என்று ஒருமையில் அழைக்கிறான்’ கருவிக் கொண்டு நின்றான் நந்தன்.

பின் அனைவரும் வந்து விட கிளம்ப ஆரம்பித்தனர். ஹெச்,ஆர் ரேஷ்மி இருவருமே வருகை புரிய, கண்டும் காணாததுப் போல் எனக்கென்னவென்று இருந்தாள்.

ஏர்போர்ட் வந்து சிம்லா, மணாலி இரு இடங்களும் சேர்ந்து காண்பது போல் தான் ஏற்பாடுச் செய்திருந்தனர். தங்களின் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு இருப்பிடத்தில் சென்று அமர்ந்தனர்.

அஞ்சனாவிற்கு ஏனோ ஐஸ்வர்யாவாக தான் இருந்த நினைவு வரவே, அருகில் அமர்ந்திருந்த ரேஷ்மி முகத்தினைக் கண்டு என்னவென்றுக் கேட்டாள்.

“நத்திங் “ என்றவாறு அமைதியாக இருந்து விட்டாள்.

பல மணி நேரங்கள் கடந்து இருள் சூழும் நேரம் வந்து இறங்க, மேனியை தழுவும் குளிர் தான் அவர்களை வரவேற்றது. இறங்கிய நொடியே தங்களின் ஜர்க்கினை எடுத்துப் போட்டுக் கொண்டனர்.

பின் அவர்களுக்காக வாகனம் வர அதில் ஏறிக் கொண்டு தங்கப் போகும் இடத்திற்குச் சென்றனர். அனைவரும் ஆவலோடு இருக்க அஞ்சனா மட்டும் சந்தோஷமே இல்லாது தனிமையில் இருக்க நினைப்பதுப் போல் இருப்பதை அறிந்தான் நந்தன்.

அவளைக் கண்காணித்துக் கொண்டே தான் இருந்தான். தன் நண்பனின் பார்வைச் சென்ற இடத்தைக் கண்ட கேசவன், “என்னடா நானும் பார்க்குறேன் ரொம்ப நேரமா அஞ்சனாவையே லுக் விடுறே ?” என்க,

“அப்படியெல்லாம் இல்லையே ”

“சரியில்லைடா, சரியில்லை. எனக்கு என்னமோ நீயும் கவுந்துட்டேன்னு தான் நினைக்கிறேன் “

“ஏய், ச்சி அதெல்லாம் ஒன்னுமில்லை “ என்றவனோ அதற்கு பின் காணவேயில்லை. தங்கப் போகும் இடத்திற்கு வந்துச் சேர, இரு பெண்களுக்கு ஒரு அறை என்ற விதத்தில் தான் கொடுத்திருந்தனர்.

“கைய்ஸ் எல்லாரும் நிம்மதியா தூங்குங்க. மார்னிங் எயிட் ஒ கிளாக் போல சுத்திப் பார்க்க கிளம்பலாம். நமக்கான கைடு மார்னிங்க வந்திருவாங்க. ஏதாவது தேவைன்னா என் நம்பருக்கு கால் பண்ணுங்க “ என்று அவர்களின் ஹெச்.ஆர் கூற,

“ஓகே சார் “ என்றவாறு அருகருகே தான் அனைவரின் அறையும் இருக்க உள்ளேச் சென்றனர். ரேஷ்மி தன்னோடு வரக் கூடாது என்று அஞ்சனா நினைக்க, ஆனால் விதி அவளை தான் அழைத்து வந்தது.

“நல்ல வேலை நீயும் நானும் ஒரே ரூம். யாரோ தெரியாத பொண்ணு வந்திருந்தா ரொம்ப போரிங்கா இருக்கும் “ என்று ரேஷ்மி கூற,

“நான் போய் பிரெஸ்அப் ஆகிட்டு வரேன் “ என்ற அஞ்சனா தன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறைச் சென்று விட்டாள்.

அவள் சென்றதுமே கைபேசியை எடுத்த ரேஷ்மி அங்கு பால்கனி இருக்கவே அதன் அருகில் வந்து ஹெச்.ஆர்க்கு அழைத்தான்.

“ஹலோ !”

“சொல்லு ரேஷ்மி. எல்லாம் ஓகே தானே ?”

“ஓகே தான் சார். அஞ்சனா என் கூட இருக்கா “

“உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னா ரூம் புக் பண்ணுனதே நான் தான். நான் சொன்னதை மட்டும் நீ சரியா பண்ணிட்டேன்னு வை. அப்பறம் நீ வாழ்க்கையில செட்டில்லாகிரலாம். என்ன ஓகே தானே ?”

“கண்டிப்பா சார் “

“இன்னைக்கு எதுவும் வேண்டாம். நாளைக்குப் பார்க்கலாம் “ என்றதும், அவளும் சரியெனக் கூறி கைபேசியை வைத்தாள்.

வெளியே வந்த அஞ்சனா, “ட்ராவல் பண்ணினது எனக்கு தலைவலிக்கு நான் தூங்குறேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாதே ?” என்க,

“நல்லா தூங்கு. அப்போ தானே நாளைக்கு எனர்ஜியா இருக்க முடியும் “

“என்னச் சொல்லுற ?”

“வெளியே சுத்திப் பார்க்க போறோம்ல அதை சொன்னேன் “ என்றதும், தோள்பட்டையை குலுக்கி விட்டு படுக்கையில் சரிந்தாள்.

வசந்தும் இந்த நொடி அவனின் தங்கை திருமணத்தில் பிஸியாக இருக்க, செல்கிறேன் என்று கூறினாலே தவிர வந்ததைப் பற்றி கூறவில்லை.

மறுநாள் விடியல் அனைவரும் எழுந்து கிளம்பி கீழே வர, அவர்களுக்காக உணவு தயாராக இருந்தது. தமிழ்நாட்டு உணவினை அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர். அனைவரும் உண்டு முடிந்து வாகனம் தயாராக இருக்க கையோடு கிளம்ப ஆரம்பித்தனர்.

“டேய் மச்சான் ! இந்த ஹோட்டல் லொகேஷன் எனக்கு அனுப்பு ”  கேசவன் கேட்க,

“எதுக்குடா ? என்றான் நந்தன்.

“ஒரு வேலை தெரியாம எங்கையும் தொலைஞ்சி போய்ட்டா. லொகேஷன் பார்த்து ஹோட்டலுக்கு வந்திரலாம்ல. அதுக்கு தான் “

“ஆமா நீ சின்ன பையன் பாரு தொலைஞ்சிப் போக. நீ தொலையவும் மாட்டே. உன்னை எவனும் கடத்தவும் மாட்டான் “ என்கவே, அங்கிருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

இருந்தாலும் அவன் கூறுவது சரி என்பதால் லொகேஷனை  ஒரு சிலர் அவர்களின் கைபேசியில் பதிந்துக் கொண்டனர். முதலில் டாய் ட்ரையின் ரைடுக்கு அழைத்துச் சென்றனர்.

“இந்த ட்ரையின்ல போக தான் இவ்வளோ தூரம் வந்தோம்மா ?” என்று ஒரு சிலர் அதனைப் பற்றி தெரியாதுக் கேட்க,

“இதுல போனா தெரியும் வாங்க “ என்க, அனைவரும் அதில் பயணிக்க ஆரம்பித்தனர்.

மரங்கள், மலைகள், வீடுகள், இருபுறமும் அடர்ந்த இருட்டு, குகை, என்று ஒவ்வொரு இடமாக அதில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டேச் செல்ல, அருமையாக இருப்பதை உணர்ந்தனர்.

அஞ்சனாவிற்கும் அதனைக் கண்ட பின்னே சற்று நிம்மதியான உணர்வு. வெகு நாட்கள் கழித்து மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் விலக, மற்றவர்களைப் போல் அவளுமே மாறி வேடிக்கைப் பார்த்தாள்.

விழிகளுக்கு எங்கும் பச்சைப்பசேலென்று காட்சிக் கொடுக்க தன் ஊரில் கண்ட பசுமை நிறம். பின் இங்கு தான் காண, விழிகளை மூடி அதன் வாசத்தை அனுபவித்தாள்.

“என்ன அஞ்சனா ? எல்லாரும் வேடிக்கை பார்த்தா நீ மட்டும் கண்ணை மூடி அனுபவிக்கிற ?” நந்தன் கேட்க,

“பசுமையோட வாசனை அப்படியே இதமா இருக்கு “ என்று ரசித்துக் கூறவே, குழம்பிப் போய் உடனிருந்த கேசவன் அதனை செய்துப் பார்த்தான்.

“எனக்கு மட்டும் எந்த வாசமுமில்லை. எவனோ காபி குடிக்கிறான். யாரையோ யாரோ திட்டுறாங்க “ என்று தான் உணர்ந்ததைக் கூற,

“மண்டையில மூளை இல்லைங்குறதை நிருபவிச்சிட்டான்டா “ என்க, அஞ்சனாவோ சிரிக்க ஆரம்பித்தாள். பின் அந்த பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த இடம் நோக்கி பயணித்தனர்.

அப்படியே அன்றையப் பொழுதுச் செல்லவே, இரவு நேரம் போல் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்துச் சேர்ந்தனர். உணவினை முடித்து விட்டு அவரவர் அலுப்போடு படுக்கையில் விழுந்து விட்டனர்.

நேரங்கள் கடக்க மெல்ல சத்தமில்லாது வெளியே வந்த ரேஷ்மி, ஹெச்.ஆரின் கைபேசியிற்கு அழைத்தாள்.

“சார். நான் வெளியே வந்துட்டேன் “

“சரி ஹோட்டலுக்கு கீழே கார்டன் ஏரியால நெருப்பு மூட்டியிருக்கும். அங்கே போய் நீ வெயிட் பண்ணு. நான் சொன்னதும் ரூமுக்கு வா “ என்கவே, சரியெனக் கேட்டுக் கொண்டாள்.

ரேஷ்மி அங்கிருந்துச் சென்று விட, அடுத்த பத்து நிமிஷத்தில் அவர்களின் அறையின் முன்னே வந்து நின்றார் ஹெச்.ஆர்.

மெல்ல சத்தமில்லாது அறையை திறக்க கதவில் கை வைக்க, “சார் !” என்ற அழைப்பில் அப்படியே பட்டென கரங்களை எடுத்து திரும்பிக் கண்டான். நந்தன் தான் நின்றிருந்தான்.

நேரம் சென்றதில் நித்திரைக் கலைய அதிகமாக குளிர் தெரிவது போல் இருக்கவே தூக்கமும் வராதுப் போக, பால்கனியில் சென்று நின்றான் நந்தன்.

அப்போது தான் கார்டனின் நெருப்பு எரிந்துக் கொண்டிருப்பது தெரிய, குளிருக்கு அது இதமாக இருக்கும் என்பதைப் புரிய அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்த நொடி கண்டது தான் அஞ்சனா தங்கியிருந்த அறையில் கை வைத்ததை.

“என்ன நந்தன் ? இன்னும் தூங்கலையா ?” கேட்டுக் கொண்டு அவனை நோக்கி வர,

“கீழே போகலாம் நினைச்சேன். நீங்க இங்க என்ன பண்ணுறீங்க ?” என்று அந்த அறையைக் கண்டு இவரைக் கண்டான்.

“ஏதோ சத்தம் கேட்டது போல இருந்தது அதான். சரிப்பா. குட் நைட். மார்னிங் பார்க்கலாம் “ என்றவரோ பற்களைக் கடித்துக் கொண்டு திரும்பிச் சென்றார்.

கரங்களை முறுக்கிக் கொண்டுச் செல்லும் ஹெச்.ஆர் வித்தியாசமாக தெரியவே, சிறிது நேரம் அங்கையே நின்றவன் திரும்ப அறைக்குள்ளே நுழைந்தான்.

பால்கனிக்கு மறுபடியும் செல்ல, கீழே அந்த நெருப்பின் முன் ரேஷ்மி அமர்ந்திருப்பது புரிய குழம்பினான்.

‘என்ன நடக்குது இங்கே ? ரேஷ்மி தன்னந்தனியா கீழே இருந்தா ரூம்ல அஞ்சனா மட்டும் தானே இருப்பா ? இவர் எதுக்கு இந்த ராத்திரி அந்த ரூமுக்கு போக பார்க்கணும். ரேஷ்மி பார்க்கணும்ன்னா கீழே தானே போகணும். அஞ்சனாவை எதுவும் டார்கெட் பண்ணுறாரா ?’ யோசித்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மறுநாளும் வழக்கம் போல் அனைவரும் வெளியேச் செல்ல நேற்றைய விட இன்றோ பனிப்பொழிவு அதிகமாக இருப்பதை உணர்ந்தனர்.

அன்று குயின் ஆஃப் ஹில்ஸ் நேரப் பகுதிக்கு தான் சென்றிருக்கவே, அங்கு நின்று புகைப்படம் எடுக்க, வேடிக்கை பார்க்க, சுற்றி வரவென்று நேரத்தைப் போக்கினர். காலையிலிருந்து நந்தனின் பார்வை என்னவோ ஹெச்.ஆரை மட்டுமே கவனித்தது.

அவரின் விழிகள் அஞ்சனாவை ரசனையோடுக் கண்டது. அவள் எதையாவது உண்டாலோ, கரம் நீட்டி வேடிக்கைப் பார்த்து யாரிடமாவது பேசினாலோ அப்படியே இமைகள் கூட விலகாது காணவே அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டான்.

இந்த நொடி கொலைக்காரன் ஆனாலும் பரவாயில்லை அப்படியேக் கொன்று போட்டு விட கரங்களோ துடிக்க, சினத்தோடு இருந்த நந்தன் நண்பனிடம் மட்டுமில்லாது அனைவரிடமும் கோபப்பட்டான்.

இருள் சூழப் போவதை உணர்ந்து அனைவருமே ஹோட்டலுக்கு திரும்ப வந்து விட, வெகு சீக்கிரமாக வந்ததால் ஹெச் . ஆர் அவரின் செலவில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

ஹோட்டல் வெளியே இருந்த கார்டனில் அனைவரும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன் நெருப்பு. சைவம், அசைவம், தேனீர் என்று அனைத்துமே அங்கு இருக்க, ஒரு சிலர் மதுபானமும் அருந்தினர்.

பாடலை இசைத்துக் கொண்டு டான்ஸ் ஆடியவாறு நேரத்தை போக்க, இதில் ஈடுபட முடியாத அஞ்சனா விலகிச் சென்றாள்.

அவள் சென்றதை கவனித்த ஹெச்.ஆர் அவளின் பின்னாலேச் செல்ல, மரங்களில் மீது வண்ண விளக்குகள் படர விட்டிருக்க, அந்த இடத்தில் சென்று நின்றாள்.

தனிமையில் தன் கரங்கள் இரண்டையும் முன்னே கட்டிக் கொண்டு அதனை ரசித்துக் காண, யாருமற்ற தனிமையாக இடம். இங்கிருந்து அவர்கள் கொண்டாடுவதைக் காண முடியும். ஆனால் தான் இங்கே இருப்பதை அவர்களால் காண முடியாது. அந்த அளவுக்கு  அந்த இடத்தில் கீழே இருள் மட்டும் தான் இருந்தது.

திடீரென யாரோ அவளின் வாயை துணியால் மூட திணறியவளோ அந்த வலிய கரத்தில் கை வைத்து தடுக்க முயன்றாள். ஆனால் அதுவோ அவளால் முடியாதுப் போனது. காரணம் அந்த துணியில் மயக்க மருந்து கலந்திருந்தது.

தன் கைபேசியில் கவனமாக இருந்த நந்தன் நிமிர்ந்துக் காண அங்கோ அஞ்சனா இல்லை. சற்று முன் தானே இங்கு இருந்தாள். அதற்குள் எங்குச் சென்றாள் ? நினைத்து சற்றும் முற்றும் திரும்பி பார்த்துத் தேட, ஏமாற்றம் தான் கிடைத்தது.

“ஏய் ! அஞ்சனாவை பார்த்தையாடா ?” 

“இந்த பக்கம் தான் போனா “ என்று கேசவன் ஒரு திசையைக் கை காட்ட, அங்கோ முற்றிலும் இருட்டு. ஹெச். ஆர் அங்கு இல்லை என்றதும் தவித்தவனோ உடனே அங்கிருந்துச் சென்று தேட ஆரம்பித்தனர்.

போதை மயக்கத்தில் ஒரு சிலர் இருக்க, ரேஷ்மியோ பாடலில் சத்தத்தையே அதிகரித்து அனைவரும் ஆட வைத்து திசை திருப்பிக் கொண்டிருந்தாள்.

“அஞ்சனா ! அஞ்சனா “ கத்தியவாறு அவள் நின்றிருந்த இடத்திற்கு வர, அவளோ அங்கில்லை.

‘இந்த ராத்திரில, இருட்டுக்குள்ள எங்க போனா ?’ தலை முடியை கோதிக் கொண்டு யோசிக்க, அந்த ஹோட்டலில் பின் புறத்தில் மரத்தின் மீது இருந்த பறவைகளை அந்த இரவுப் பொழுதில் சத்தமிட்டுப் பறந்தது.

சத்தம் கேட்கவில்லை என்றாலும், பறந்துச் செல்வதை அந்த லேசான வெளிச்சத்தில் கண்டறிந்தான்.

‘பின்னாடி ஆள் இருக்க போய் தானே பறவைகள் எல்லாம் பறந்து போகும். அப்போ அஞ்சனா அங்கே இருக்க வாய்ப்பு இருக்கு ‘ நினைத்துக் கொண்டு தன் கைபேசியின் டார்ச்சை ஆன் செய்தவனோ அப்படியே அந்த சுவர் ஓரமாக இருந்த பாதையில் நடந்துச் சென்றான்.

காலில் திடிரென ஏதோ தட்டுப்பட என்னவென்றுக் காண, அதுவோ அஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த இஸ்கார்ப். நிச்சியம் ஆபத்து என்பதை உணர்ந்தவனோ சத்தமோடு கத்தி வேகமாய் தேட ஆரம்பித்தான்.

அதே நேரம் அஞ்சனாவை மயக்கமடைய வைத்து பின் புறம் அழைத்து வந்த ஹெச்,ஆர் அங்கே போடப்பட்டிருந்த ஒரு நீண்ட பெஞ்சில் அமர வைக்க அவளோ சாய்ந்து விட்டாள்.

இங்கு யாரும் வர வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தே அன்று காலையில் அந்த இடத்தை வந்து பார்த்த பின் தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான் அவர்களின் ஹெச். ஆர்.

பெரிய பெரிய அடர்ந்த மரங்கள் முற்றிலும் இருள். தன் கைபேசியை டார்ச்சை அமர்த்திய ஹெச்.ஆர் அவளின் கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டான்.

அவளின் கழுத்தில் வளைவில் தன் அதரங்களை வைத்து முத்தமிட்டு, கூந்தலுக்குள் கரங்களை விட்டு, தன் ஆசையை அவளிடம் தீர்க்க நினைத்து மேலே அணிந்திருந்த உடையை அகற்றினான்.

ஜர்க்கினை அகற்றி அவளின் கரங்களை முகத்தால் உரசிக் கொண்டு டீஷர்டின் மீது கை வைத்த நொடி, “அஞ்சனா ! அஞ்சனா “ என்ற சத்தம் செவியில் வந்து விழுந்தது.

‘ச்சே ! எவன்டா அது ?’ எரிச்சலோடு திரும்ப, சிறு வெளிச்சமோடு சூ சத்தம் கேட்க யாரோ வருவது புரிந்தது.

வேறு வழியில்லை தான் மறந்தே ஆக வேண்டுமென புரியவே, இன்றும் தோற்றுப் போகவே, அவளை அடைய வேண்டும் என்ற என்னமோ இன்னும் அதிகரித்தது.

“விட மாட்டேன்டி . என்னைக்கு இருந்தாலும் உன்னை அடைஞ்சிருவேன் “ கூறியவனோ, சத்தம் அருகில் வருவது உணர்ந்து அங்கிருந்துச் சென்று விட்டான்.

சில படிகள் இறங்கி ஏதோ உள்ளேச் செல்வது போலிருக்க அஞ்சனாவை தேடிக் கொண்டு வந்த நந்தன் அங்குக் கண்டது மயங்கிய நிலையில் இருந்தவளை தான்.

மின்னலென அவளின் அருகில் நெருங்கியவனோ, “அஞ்சனா ! அஞ்சு, என்னைப் பாரு அஞ்சனா “ என்று தன் கரங்களால் அவளின் கன்னங்களை தட்டி எழுப்ப முயன்றான்.

அதனை மறந்து நின்று கண்ட ஹெச்.ஆர் அவனின் செய்கையை தன் கைபேசியில் போட்டோ எடுத்துக் கொண்டு, சிரிப்போடு அங்கிருந்துச் சென்றான்.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



Leave a comment


Comments


Related Post