இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 21 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 22-04-2024

Total Views: 18837

அத்தியாயம் 21

"போச்சு...போச்சு... எல்லாம் போச்சு... ஏன்டா பைத்தியக்காரா..  உன்ன அமைதியா இருக்க சொல்லி தலையா அடிச்சிக்கிட்டேன்... இப்ப என்ன பண்ணி வச்சிருக்க... அந்த சக்கரவர்த்தி கண்ணுல மாட்டாதன்னு உனக்கு ஆயிரம் முறை சொல்லி இருந்தேனா... இல்லையாடா.." என வஜ்ரவேலு கத்திக் கொண்டு இருக்க அதை சற்றும் காது கொடுத்து கேட்டானில்லை திகம்பரன்.

கையில் கிடைத்த ஏதோ ஒன்றை அவன்மீது தூக்கி வீச 

அதை தட்டிவிட்டவன் அவரை கோபமாக பார்த்தான்.

"நான் சொல்லிட்டே இருக்கேன்... காது கொடுத்து கேக்குறியாடா... தற்குறி... அந்த சக்கரவர்த்திக்கு மட்டும் நீதான் கத்திய வீசினதுன்னு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் உன்னை தூக்கிடுவான்டா... உனக்கு தெரியாது...அவன் ஆளுதான் மெட்ராஸ்ல இருக்கான்... ஆனா அவனுக்கு கண்ணு எல்லாம் இங்கதான் இருக்கு..? ஊருக்குள்ள நிறைய பேர அவன்தான் வளர்த்துட்டு இருக்கான்னு ஒரு பேச்சு இருக்கு...எதுக்கு தெரியுமா... ஏன் அவனுங்கள படிக்க வச்சு அவனுங்களுக்கும் சரி... அவனுங்க குடும்பத்துக்கும் நல்லது கெட்டது பன்றான்னு உனக்கு தெரியுமாடா... உனக்கு எங்க அதுலலாம் கவனம் இருக்க போவுது... நீதான் அந்த அருவி... இந்த ஊர் உலகத்துல இல்லாத பெரிய அழகின்னு அவ பின்னாடி சுத்திட்டு இருந்தியே... ச்சே... என் பையன்னு சொல்லவே வெக்கமா இருக்கு...."என்க.

"அப்பா... இன்னொரு தடவ அருவிய பத்தி பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன்.." என்க.

"வாய மூடுடா.. அந்த வாசு பையன் எப்படி இருக்கான் பார்த்தியா... அவனகூட விடு... அந்த மெட்ராஸ்காரன் அவன் அந்த ஊர்லயே பெரிய இதய டாக்டராம்... ஆனா அவன் அப்பன் பேச்ச மீறாம... அந்த அருவி கழுத்துல தாலிய கட்டுன்னு சொன்னதும் ஏன் எதுக்குன்னு கேக்காம உடனே கட்டிப்புட்டான்... அவனும் நீயும் ஒன்னா பத்தாவது வரைக்கும் படிச்சவன்தான... அப்பவும் அவன்கூட போட்டி போட்டு உன்னால ஜெயிக்க முடியல... இப்பவும் அந்த அருவி பின்னாடி நீ சுத்திட்டு இருந்த... ஆனா அவன் தூக்கிட்டு போய்ட்டான்...நீ எப்பவுமே எதுக்குமே லாயக்கு இல்ல..." என அவர் கூறி முடிக்கும் முன் கூர்மையான சுத்தி போன்ற ஆயுதம் ஒன்று அவரது கையை பதம் பார்த்தது.

"இங்க பாருப்பா... அந்த அருவி எனக்குத்தான்... எனக்கு கிடைக்காத அவ யாருக்கும் கிடைக்க கூடாது... அதனாலதான் அந்த பாலன் அவள கட்டிக்க ஆசப்படறத தெரிஞ்சு அவன பிரிச்சு விட்டேன்...அதேமாதிரி அந்த வாசுவுக்கும் அவளுக்கும் கல்யாணம் பேசறாங்கன்னு தெரிஞ்சதும் அவ கூட்டாளிய வச்சே அவ வாழ்க்கைய கெடுத்தேன்... அவள ராசி கெட்டவன்னு இந்த ஊர்ல பேரு வாங்க வச்சு... அவள போனாப் போகுதுன்னு கல்யாணம் பண்ணி எங்கூட வச்சிக்க ஆசைப்பட்டேன்... ஆனா... அந்த சக்ரவர்த்தி வந்து என் எண்ணத்தை கெடுத்துட்டான்... நாளைக்கு அவனுங்க மெட்ராசுக்கு கிளம்பறானுங்க... அவன் வீட்டுல விருந்து வச்சிருக்கானுங்க... விருந்துக்கு போற ஊர் மக்கள் யாரும் உயிரோட திரும்பி வரக்கூடாது... டேய் கந்தா..." என கத்த "அண்ணா..." என்றபடி வந்தான் ஒருவன். 

அவன் வேறு யாருமல்ல வாசு மீது வீண்பழி போட மகிழாவிற்கு உதவியவன்தான்.

வாசு அவனை உயிர் நண்பன் என நினைத்து பழக அவனோ கூட இருந்தே குழி பறிக்கும் துரோகியாய் இருந்தான்.

வாசுவிற்கு இன்னும் அவனது சுயரூபம் தெரியவில்லை.

தெரிந்தால் அவன் நிலை என்னவோ அந்த பரமேஸ்வரனே அறிவான்.

"நாளைக்கு அந்த தர்மன் வீட்டு விசேஷத்துக்கு நீ போவதான...?" என கேட்க.

"ஆமாண்ணா... நாங்க இல்லாம அந்த வாசு ஒரு வேலையும் செய்ய மாட்டான்..." என்க.

அவன் தோளை தட்டி கொடுத்தவன் "அவன் உன்னை முழுசா நம்பறதாலதான் நம்ம வேலை ஈசியா முடியுது... உன்மேல அவனுக்கு எப்பவுமே சந்தேகம் வரக்கூடாது... அந்த அளவுக்கு இருக்கனும் உன் நடிப்பு..." என்க.

"அதெல்லாம் பிச்சு உதறிடறேன் அண்ணா..." என்க.

"ம்ம்ம்ம்... உனக்கான பணம் உனக்கு வந்து சேரும்... உங்கள எப்ப வர சொல்லி இருக்கான்...?" என அவன் கேட்க.

"இன்னைக்கு சாயங்கலமே அண்ணா..."என கந்தன் கூற.

"ம்ம்ம்ம்... சரி இந்தா..." என  ஒரு பாட்டிலை நிட்ட என்ன அண்ணா இது என கேட்க.

"டேய்... இது ஆளக்கொல்லுற விஷம்... இது சாதாரணமா கடையில வாங்கினது இல்ல... அது நம்ம ஊருக்கு கிழக்க ஒரு மலை இருக்கு இல்ல... அங்க வாழற மலைவாழ் மக்கள்கிட்ட சொல்லி சாப்டதும் உயிர் போகாம கொஞ்சம் கொஞ்சமா உயிர எடுக்கிற ஒரு அபூர்வ மூலிகை செடியில இருந்து உருவாக்கின விஷம்... நீ என்ன பன்ற... இந்த மருந்த எப்படியாச்சும் அங்க வைக்கற குழம்புல கலந்துடு... அப்பதான் யாருக்கும் சந்தேகம் வராது... என்ன புரியுதா காரியத்த கச்சிதமா முடி... பணம் உன்ன தேடி வரும்..." என்க.

"அண்ணா... கூட்டமா இருக்குமோ பெரிய வீட்டு விசேஷம்..."என்க.

"எப்படியாச்சும் அவனுங்க கண்ணுல மண்ண தூவிட்டு... ராத்திரியோட ராத்திரியா இந்த மருந்த கலந்துடு... இந்த ஊர்ல எனக்கும் சரி என் குடும்பத்துக்கும் சரி நல்ல மரியாதையே கிடையாது.... காரணம் யாரு தெரியும் இல்ல... அந்த வாசு குடும்பம்... அவனுங்களுக்கு சப்போர்ட் பன்றதால... இந்த ஊர் மக்களும் அவனுங்க கூடவே சாகட்டும்... இன்னைக்கு ராத்திரி எப்படியாவது நான் அருவிய தூக்கிடுவேன்... அதுக்கப்பறம் இந்த வேலைய கச்சிதமா முடிச்சிடு... மவனே... ஏதாச்சும் சொதப்பின அடுத்த நிமிஷம் நீ பொணமாத்தான் தொங்குவ..." என நாக்கை மடித்து ஆள்காட்டி விரல் விரலை நீட்டி மிரட்ட "அண்ணா... நான் முடிச்சிடறேன் அண்ணா... நீங்க கவலைப்படாம போங்க..." என்க.

"டேய் வேணாம்டா... நான் சொல்றத கேளுங்க... அந்த சக்கரவர்த்தி சாமானியன் கிடையாது... ஊசி நுழைய மூடியாது இடத்துல கூட அவன் நுழைஞ்சிடுவான்... பேருக்குத்தான் அவன் மெட்ராசுல இருக்கான்..." என்க.

"யோவ்... சும்மா வாய மூடிட்டு இரு... எப்போ பார்த்தாலும் அவன் அப்படி... அவன் இப்படின்னு... ஏதாச்சும் சொல்லிட்டு... உன்னால அவன ஒன்னும் பண்ண முடியல...நான் பன்றதையாவது ஏதும் சொல்லாம வாய மூடிட்டு அமைதியா வேடிக்கை மட்டும் பாரு...." என்க.

"டேய் வேணாம்டா...." என மீண்டும் கத்த.

"யோவ்... இப்ப அமைதியா இருக்கல கையில பாஞ்ச கத்தி... உன் வயித்துல பாஞ்சிடும்... இருக்கற இடம் தெரியாம அமைதியா இரு..." என்றவன் "வாங்கடா...." என அவன் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

கையில் திகம்பரன் வீசிய கத்தியின் முனை பட்டு புறங்கையில் குருதி வழிய அமர்ந்து இருந்த வஜ்ரவேலு தன் கையையும் போகும் அவர்களையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்.

சக்கரவர்த்தி இல்லம்

வீடே பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.

ஆளுக்கொரு வேலையாக அனைவரும் இழுத்துப்போட்டு செய்ய.

தர்மனும் சக்கரவர்த்தி மட்டும் தனி அறையில் இருந்தனர்.

"என்னண்ணா... என்ன யோசனை...?" என தர்மன் கேட்க.

"ஒன்னும் இல்ல... தர்மா இந்த வஜ்ரவேலுவ என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்...." என்க.

"அதான் நைட்டு பசங்கள வர சொல்லி இருக்கோம் இல்ல..." என அவர் கேட்க.

"ம்ம்ம்ம்... ஆனா இவனுங்க ஏன் இன்னும் ஓவரா பண்ணிட்டு இருக்கானுங்க... அவனுங்களுக்கு மரண பயத்த காட்டனும் தர்மா...இதுக்கு மேலயும் நான் அமைதியா இருந்தா வேலைக்கு ஆகாது... அவனுங்க ஆட்டம் இன்னமும் அதிகமாத்தான் இருக்கு.... என்னதான் நான் ஊருவிட்டு ஊரு இருந்தாலும்... என் எண்ணமெல்லாம் இங்கனதான் இருக்கு... தர்மா, நம்ம வீடு... இந்த ஊரு... இந்த ஊர்ல இருக்க சனங்க நம்ம மேல காட்டற அன்பு...இதுக்கு எல்லாம் நாம என்ன கைமாறு செய்ய போறோம் தர்மா... இந்த வஜ்ரவேலுங்க மாதிரியான கொலைகார குடும்பத்துக்கிட்ட இருந்து இந்த ஊர் மக்கள காப்பாத்தனும்... இந்த ஊரு மக்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ வழி செய்யனும் தர்மா..." என்க.

"ஆனா அண்ணா... எனக்கு ஒன்னு மட்டும் புரியல... அவனப்பத்தி தெரிஞ்சும் ஏன் இன்னும் நீங்க  உயிரோட விட்டு வச்சிருக்கீங்க... எனக்கு அது மட்டும் புரியாத புதிராவே இருக்கு..." என்க.

"ம்ம்ம்ம்... நீ அருவிய நல்லா கவனிச்சியா தர்மா..?" என கேட்க.

"ஏன்னா... அந்த புள்ளைக்கு என்ன..?" என தர்மன் கேட்க.

"இல்லடா... நீ சரியா கவனிக்கல போல... அந்த புள்ளைக்கு நாமதான் அவ அப்பன கொன்னுட்டோம்னு ஒரு எண்ணம் இருக்கு...நான் இந்தர அந்த புள்ளைக்கு கட்டி வைக்க அதுவும் ஒரு காரணம்... அருவியோட அப்பா சாவுக்கு அந்த வஜ்ரவேலுவும் அவன் குடும்பமும்தான் காரணம்னு அந்த புள்ளை நம்பற வரைக்கும் அவ இந்தர்கூட நல்லபடியா வாழ மாட்டா.... அவ அப்பன சாகடிச்ச குடும்பத்துல வாக்கப்பட்டுட்டோம்னு அவ மனசு கிடந்து தவிக்குது.... அவ அப்பன் சாகலன்னா அவ அம்மா நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையா இருந்துருக்க மாட்டா... நாமளும் நம்ம தங்கச்சிய இழந்து இருக்க மாட்டோம்... அவன்கிட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு தர்மா...அதனாலதான் இன்னும் அவன உயிரோட விட்டு வச்சுருக்கேன்.... இல்லன்னா... அருவி அப்பன கொன்ன அன்னைக்கே அவன் கதைய முடிச்சு விட்டுருப்பேன்..." என்க.

"நான் இந்த கோணத்துல யோசிக்கல அண்ணா..." என தர்மன் கூற.

"அதனால என்னடா...உனக்கும் சேர்த்து யோசிக்கத்தான் நான் இருக்கேன்... உன் பையன் இருக்கான்..."என்க.

"அண்ணா...அந்த மகிழா...." என இழுக்க "எனக்கு தெரியும்டா... வாசு என் வளர்ப்பு...அவன் ஒருநாளும் சோடை போகமாட்டான்... எனக்கு நம்பிக்கை இருக்கு.... அவன் அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ண மாட்டான்... இத ஏன் நான் கிளறாம விட்டு இருக்கேன் சொல்லு... அவ சொன்ன பொய்க்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கு... அத கண்டுபிடிக்கனும்... அவ பின்னாடி இருக்க ஆள அவ வாயாலயே சொல்ல வைக்கனும் இன்னும்..." என்க.

"வாசுவுக்கு கொஞ்சமும் இந்த கல்யாணம் பிடிக்கலண்ணா..." என்க.

"ம்ம்ம்ம்...தெரியும்பா... ஏன் உன் பையன் அந்த இந்தருக்கும்தான் அருவிய கட்டி வச்சது பிடிக்கல... நீயே பார்த்ததானே..? அவன் எப்படி இருக்கான்னு...?" என கேட்க.

"ம்ம்ம்ம்... ஆமாண்ணா..." என்றார் அவர்.

"ம்ம்ம்ம்... இந்தர் ஒரு டாக்டர்..? அவன்கிட்ட சொல்லி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா போதும் வாசுவுக்கும் அந்த மகிழாவுக்கும்... இப்ப இருக்க இந்த டெக்னாலஜி உலகத்துல இதெல்லாம் சாதாரணம்... இதக்கூட தெரியாமையா நான் இருப்பேன்... அவ சொன்னது எல்லாத்தையும் நான் நம்பிட்டேன்னு அவ நினைச்சிட்டு இருக்கா... பரவால்ல அப்படியே இருக்கட்டும் அதான் எனக்கும் வேணும்...." என்க.

"ம்ம்ம்ம் சரிண்ணா..." என்றார் தர்மன்.

இங்கு வாசுவின் அறையிலோ அவனை பார்த்து மயங்கி விழுந்தாள் அருவி.....



Leave a comment


Comments


Related Post