இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 6)) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 23-04-2024

Total Views: 21914

உனக்கென்றே உயிர் கொண்டேன் 6

தேவராஜ் பூர்வியிடம் அஸ்வின் பின்பக்க தோட்டத்தில் இருக்கிறார். சென்று பாரு என்றதும் சரியென தலையை அசைத்த பூர்விக்கு, எப்படி செல்வதென்ற தயக்கம்.

தமிழ் தமக்கையின் உணர்வை புரிந்து கொண்டவனாக,

"வாங்க போகலாம்" என்று அழைத்தான்.

சண்முகத்திற்கு வந்ததிலிருந்தே தமிழை எங்கோ பார்த்த நினைவு. எங்கென்று தெரியாது தன்னுடைய சிந்தையின் ஓர் மூலையில் யோசித்துக் கொண்டிருந்தார்.

"தம்பி கூப்பிடுதே! போயிட்டு நல்லா பேசிட்டு வாங்க" என்று சண்முகமும் சொல்ல, பூர்வி தமிழுடன் சென்றாள்.

"மேலிருந்து பார்க்கும்போது இந்த பயமில்லையாக்கும்?" தமிழ் பூர்வியை கேலி செய்திட...

"பக்கத்துல பார்க்கணும்... அதென்னவோ படபடப்பா இருக்கு தமிழு" என்றாள் பூர்வி.

"மொபைல் கையில் வச்சிருக்கீங்களே! கெட்டியா புடிச்சிக்கோங்க" என்றவன்,
 அஸ்வின் இருக்கும் இடம் வந்ததும்,

"பேசிட்டு இருங்க. ஜூஸ் கொண்டு வருகிறேன்" என்று நகர...

"தமிழ்" என்றழைத்த பூர்வி, அவன் நின்றதும் அணைத்துக்கொண்டாள்.

பூர்வியின் மனம் நிலையாக இல்லையென்று அவளின் அணைப்பில் புரிந்துகொண்ட தமிழ்... 

"ஜஸ்ட் பேசப்போறீங்க. அவ்வளவு தான் பூர்வி" என்று பின்னந்தலையில் வருடி விடுவித்தான்.

"பேசுங்க." தங்களையே பார்த்திருந்த அஸ்வினிடம் சொல்லிச் சென்றான் தமிழ்.

"உட்காருங்க."

பூர்வியிடமிருந்த தயக்கம் அஸ்வினிடம் இல்லை. மேலிருந்து அவள் பார்த்த பார்வையிலே அஸ்வின் தன்னுடைய தயக்கம் மற்றும் பதட்டத்தையெல்லாம் உதறியிருந்தான்.

அவனின் மனதிற்கும் தன்னை நேர்கொண்டு பார்த்த பூர்வியை ரொம்ப பிடித்துவிட்டது.

அஸ்வின் அமர்ந்திருந்த கல் மேடையின் மறு முனையில் பூர்வி அமர்ந்தாள்.

"ஏதாவது பேசுங்க?" அஸ்வின் ஆரம்பித்தான். அவளின் கைகள் இறுக்கி பிடித்திருந்த அலைப்பேசியை பார்த்து மெல்லிதாக புன்னகைத்துக் கொண்டான்.

"உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?"

"முதல் கேள்வியா நான் இதை எதிர்பார்க்கல?"

"எனக்கு உங்களை பார்த்ததும் பிடித்தது. உள்ளுக்குள்ள நீங்க தான் எனக்கு க்ரெக்ட்ன்னு ஒரு சவுண்ட். அதான், உங்களுக்கும் என்னை பார்த்ததும் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்" என்றாள் பூர்வி.

பூர்வியின் சட்டென்ற இயல்பான பேச்சு அஸ்வினுக்கு அவள் மீது உண்டான பிடித்தத்தின் அளவை கூட்டியது.

"எதுவும் தெரியாமல் எப்படி? தோற்றம் தான் பிடித்தத்துக்கு அளவா? பார்க்க நான் அழகா இருக்கன்னு பிடித்திருக்கா?"

கேட்ட அஸ்வினை ஆழ்ந்து பார்த்தாள் பூர்வி.

"எக்ஸ்க்யூஸ் மீ... சாரி..." என்று அங்கு வந்த தமிழ், தட்டில் இனிப்பு, காரம், பழச்சாறு ஆகியவற்றை வைத்துச் சென்றான்.

பழச்சாறு அடங்கிய குவளையை கையில் எடுத்த பூர்வி,

"குடிங்க" என்று அஸ்வினிடம் நீட்டினாள்.

அஸ்வின் பெற்றுக்கொள்ள... அவன் கேட்டதற்கு பதில் வழங்கினாள்.

"காதலுக்கு ஒருத்தரைப்பற்றி எதுவும் தெரிந்துகொள்ள வேண்டாம். எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வரது காதலுமில்லை. எனக்கு உங்களை இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி பால்கனியில் நின்னுட்டு பார்த்தப்போ இல்லை... நைட் தமிழ் உங்க போட்டோ காட்டியதுமே, உங்களோட நேம் என்னன்னு தெரிவதற்கு முன்னவே பிடித்தது. லவ் அட் பர்ஸ்ட் சைட்'ன்னு  வச்சிக்கோங்களேன்" என்றவள், "அம் இன் லவ் வித் யூ அஸ்வின். வில் யூ மேரி மீ?" என எவ்வித தயக்கமோ தடுமாற்றமோ இன்றி தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து அவனுடைய பதிலையும் கேட்டிருந்தாள்.

அஸ்வின் இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை. பெண் பார்க்க வந்த இடத்தில் பெரியவர்களின் முடிவின் படி சம்மதம் ஏற்கப்படுமென்று வந்தவனுக்கு, தன்னைப்பற்றி எதுவும் அறியாது... தன்னை மட்டுமே பிடித்து விருப்பம் கொண்டு காதலிப்பதாக சொல்வாளென்று சற்றும் நினைத்திருக்கவில்லை அஸ்வின்.

அவளின் இந்த வெளிப்படையான பேச்சும் பிடித்தது அவனுக்கு.

அதைவிட தம்பியின் மீது அவள் கொண்டுள்ள அன்பு, அவள் தன் உடன்பிறந்தவனிடம் தன்னுடைய உணர்வுகளை காட்டிட்ட சிறு அணைப்பில் புரிந்திருந்தது. தன்னுடன் பிறந்தவன் மீது அன்பு கொண்டவளால் நிச்சயம் தன்னையும் தன் தங்கையின் அன்பையும் புரிந்துகொள்ள முடியுமென்று நினைத்த நொடி பிடித்தத்தின் அளவு இன்னும் கூடியது.

"எனக்கு உங்களை" என்று நிறுத்தியவன், அவளின் ஆர்வமான பார்வையில் "உன்னை பிடித்திருக்கிறது" என்றான்.

"தேன்க்ஸ்."

அவள் சொல்லிட சிரித்துக்கொண்டான்.

"நான் போட்டோவில் எல்லாம் பார்க்கவில்லை. இப்போ... இங்கே... அந்த பால்கனியில் வைத்து தான். பார்த்ததும் பிடித்தது. லவ் அட் பர்ஸ்ட் சைட்டான்னு தெரியல. ஆனால் வாழுற வாழ்க்கை உன்னோட நல்லாயிருக்கும் அப்படின்னு ஒரு எண்ணம். உள்ளுக்குள் தோணுச்சு" என்றான்.

பூர்விக்கு மனதிற்குள் மத்தாப்பு.

தன்னவனுக்கும் தன்னைப்போல் தன்னை பார்த்ததும் பிடித்திருக்கிறது என்பதில் அத்தனை உவகை.

அடுத்து இருவருக்கும் மௌன நொடிகள்.

அவளையே பார்த்திருந்த அஸ்வின்...

"அந்த போன் என்ன பண்ணுச்சு பாவம்" என்று அவளின் கையிலிருந்து உருவி எடுத்தான்.

கடவுச்சொல்லின்றி திரை திறந்து கொண்டது.

"செக்யூர் பண்ணலையா?" ஆச்சரியமாகக் கேட்டான்.

"மறைச்சு வைக்கிற அளவுக்கு அதில் ஒண்ணுமில்லை. தமிழுகிட்ட எல்லாமே ஷேர் பண்ணிடுவேன்" என்றாள்.

"நானும்... உனக்கு தமிழ் மாதிரி எனக்கும் ஒருத்தங்க இருக்காங்க. என்னோட தங்கை. மொழி வெண்பா. எனக்கு உனக்கு முன்பாக தமிழை பிடித்த மாதிரி, உனக்கும் வெண்பாவை ரொம்ப பிடிக்கும்" என அஸ்வின் சொல்ல...

'அல்ரெடி பிடிக்கும். ஒருத்தன் கிறுக்கு பிடிச்சு சுத்திட்டிருக்கான்' என்று மனதோடு சொல்லிக்கொண்டாள்.

"தாத்தாக்கும் எனக்கும் எல்லாமே வெண்பா தான். இனி எனக்கு நீயும்" என்றான்.

அஸ்வினின் எதார்த்தமான பேச்சுக்கள் பூர்வியை மிகவும் கவர்ந்தது.

"தமிழை உங்களுக்கு பிடித்திருக்கா?"

"ம்ம்ம்... ரொம்பவே! என்னை பார்த்ததும் யாரோன்னு நினைக்க வைக்காமல், ரொம்பவே ஃபிரியா பீல் பண்ண வைத்தாங்க. பேசிட்டு இருந்த கொஞ்ச நேரம், என் ஃபிரண்டோட இருந்த பீல்" என்றவன், "ஏன் இந்த கேள்வி?" எனக் கேட்டான்.

"நீங்க என்னை பொண்ணு பார்க்க வரும்போதே... உங்களுக்கு என்னை பிடித்துவிட்டால், எனக்கும் வெண்பாவுக்குமான உறவு சுமூகமாக இருக்கணும் நினைத்தீங்க தானே?அது மாதிரி தான் இதுவும். தமிழ் என்னைவிட ரெண்டு வருஷம் சின்னவன். ஆனால் எனக்கொரு ஃபிரண்ட் மாதிரி. சம் டைம்ஸ் புரொட்டேக்டர். சம் டைம்ஸ் அப்பாவும். அப்பா சொல்லாத அக்கறை அறிவுரைலாம் அவன்கிட்டேர்ந்து வரும். கடைசி வரை எனக்கு அவன் வேணும். அதுக்கு உங்க இரண்டு பேருக்கு நடுவில் புரிதல் இருக்கணுமே! உங்களுடைய பிடித்தம் அந்த புரிதலை கொடுத்திடும் நினைக்கிறேன்" என்றாள்.

அஸ்வினுக்கு இந்தப் பேச்சில் பூர்வியை மிக மிக அதிகமாக பிடித்துவிட்டது.

தேவராஜ் இருவரையும் அழைத்துவர தமிழை அனுப்பிட... வந்தவன் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சற்று தள்ளியே நின்றுவிட்டான். அருகிலிருந்த மரத்தண்டில் சாய்ந்து அலைபேசியை பார்த்துக்கொண்டிருக்க... கண்டுவிட்ட அஸ்வின்,

"கூப்பிடுறாங்க நினைக்கிறேன்" என்றான்.

பூர்வியும் தமிழை பார்த்துவிட்டு,

"ம்ம்ம்... பாட்டியும், அத்தையும் இவ்வளவு நேரம் நாம் பேசுவதை வைத்து எதாவது வம்பு பேசுவாங்க. போகலாம்" என்றாள்.

பூர்வியின் பேச்சிலிருந்து அகிலாண்டம், தெய்வானை இருவரும் தனி ரகம் என்பதை புரிந்துகொண்ட அஸ்வின், தமிழ் தெய்வானையை அல்டாப்பு என்று சொல்லியதை நினைத்து சிரித்திட்டான்.

பூர்வி என்னவென்று கேட்க... அஸ்வின் காரணம் கூறினான்.

தெய்வானை பற்றி மேலோட்டமாகக் கூறிய பூர்வி, "எப்போவாவது கடுப்பில் இப்படி சொல்வது" என்று விளக்கம் கொடுத்தாள்.

"குடும்பம் அப்படின்னா எல்லாம் இருக்கும் தானே!" என்ற அஸ்வின் "போனதும் கேட்பாங்க... என்ன சொல்ல?" எனக் கேட்டான்.

"என்ன சொல்லணுமோ சொல்லுங்க" என்றவள் எழுந்துகொள்ள...

"மொபைல் வேணாமா?" எனக் கேட்டவன், தன்னுடைய எண்ணை அழுத்தி தனக்கு மிஸ்ட்கால் கொடுத்து அவளிடம் அளித்தான். 

பூர்வி பூரித்த முகமாக முன்வர, அவளுக்கு பின்னால் சிறு இதழ் விரிப்போடு வரும் அஸ்வினை கண்டு அவர்களின் முடிவினை கண்டு கொண்டான் தமிழ்.

'நாம் சொன்ன பொய் உண்மையாகப் போகுது மொழி.' மகிழ்வாய் நினைத்துக்கொண்டான்.

அன்று கல்லூரி மைதானத்தில் தானும் பூபேஷும் பேசிக்கொண்டிருந்த சமயம் தன்னை நோக்கி வரும் வெண்பாவை நம்ப முடியாது பார்த்திருந்தான் தமிழ்.

பக்கம் வந்தவள்,

"ஹாய்" என்று இமை தாழ்த்தியவளுக்கு, பதிலுக்கு ஹாய் என்று சொல்லாதவனின் பார்வை அவளின் சிவந்த விழிகளில் அழுத்தமாக பதிந்திருந்தது.

'அழுதிருக்காள்.'

அர்த்தமாக நண்பனை ஏறிட்டான்.

"எனக்கு ரெக்கார்ட் சப்மிஷன் இருக்கு மச்சான். நான் போறேன்" என்று பூபேஷ் சென்று சில நிமிடங்கள் கடந்தும் வெண்பா தமிழை நிமிர்ந்து பாராது இருந்தாள்.

புறங்கை கொண்டு கொட்டும் விழிநீரை துடைத்துக்கொண்டு நின்றவளை இழுத்து தன் மார்பிற்குள் புதைத்துக்கொள்ளும் வேகம் நெஞ்சுக்குள் ஆர்பரித்திட, இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டுக்கொண்டான்.

"என்னாச்சு?"

.......

வெண்பாவிடம் பதிலில்லை. தமிழை நிமிர்ந்து பார்த்தாள்.

"உட்கார்." தனக்கு அருகில் கை காண்பித்தான். மெல்ல தயங்கி அவனருகில் சிறு இடைவெளிவிட்டு உட்கார்ந்தாள்.

தன்னுடைய கைக்குட்டையை எடுத்து அவள் முன் நீட்டியவன்,

"முதலில் முகத்தை துடை" என்றான்.

"இல்லை இருக்கட்டும்" என்றவள் தமிழ் பார்த்த பார்வையில் வேகமாக கைக்குட்டையை வாங்கி முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டாள்.

அவளது மடியில் வைத்திருந்த பையை உருவினான். 

வெண்பா என்னவென்று பார்க்க... உள்ளிருந்து அவளது தண்ணீர் பாட்டிலை எடுத்தவன், மூடியை கழட்டி...

"குடி" என்று கொடுத்தான்.

வாங்கி பருகியவள் பாட்டிலை அவனிடம் கொடுக்க மூடி பையில் வைத்தவன், தன் மடியிலேயே அவளின் பையை வைத்துக்கொண்டான்.

"குட்... இப்போ சொல்லு?" எனக் கேட்டிருந்தான்.

தான் பையில் தண்ணீர் பாட்டில் வைத்திருக்கும் வரை அவனுக்கு எப்படி தன்னைத் தெரியுமென்று அக்கணம் அவள் யோசிக்கவில்லை.

தமிழ் சொல் என்றதும் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைபெடுக்க...

"அழறது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது" என்று அடர்த்தியாகக் கூறிய தமிழின் வார்த்தையில் துளிர்த்த நீரை உள்ளிழுத்துக்கொண்டாள்.

தமிழின் மடியிலிருந்த தன் பையின் சிப்பினை அவள் திறக்க என்னவென்று பார்த்தான்.

"மொபைல்."

அவள் சொல்லியதும் அவனே எடுத்து கொடுத்தான்.

அலைபேசியில் புலனம் திறந்தவள், அதில் குறிப்பிட்ட எண்ணின் சாட் பகுதியை திறந்து தமிழிடம் நீட்டினாள்.

என்னவென்று வாங்கி பார்த்தவனின் கை முஷ்டி இறுகியது. கோபம் அலையாய் பொங்கியது.

காதல் செய்ய சொல்லி தவறான தகவல்கள் மற்றும் காணொளிகள் பகிரப்பட்டிருந்தது.

"ரொம்ப டார்ச்சர் பன்றாங்க. ஃபோர் மன்த்ஸ் பேக் புரப்போஸ் பண்ணாங்க. அப்போவே முடியாது சொல்லிட்டேன். எஸ் சொல்ற வரை விடமாட்டேன்னு நிறைய ஹர்ட் பன்றாங்க. கிளாஸ் ஹவர்ஸில் கூட அவங்க பக்கத்தில் உட்காரனும் சொல்லி போர்ஸ் பன்றாங்க. நைட் டைமில் கால் பண்ணி நான் பேசுறதெல்லாம் கேட்டுதான் ஆகணும் சொல்லி ரொம்ப வல்கரா தப்பு தப்பா பேசுறாங்க. நேத்து இந்தமாதிரி கன்ட்னியூ பண்ணீங்கன்னா கம்ப்ளைய்ண்ட் பண்ணிடுவேன் சொன்னதுக்கு... நைட் கால் பண்ணி, என்னை முழுசா பார்த்துட்டால்" என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாது கைகளில் முகத்தை மூடி அழுதிட...

"மொழி..." என்று அருகில் தள்ளி அமர்ந்தான்.

"முடியல சீனியர்" என்று அவனின் தோளில் நெற்றி முட்டி கதறினாள்.

முதல் சந்திப்பில் அவளிடம் எப்படி இயல்பான நெருக்கமென்று தமிழ் யோசிக்கவில்லை.

தமிழ் அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் இறுதியாக அனுப்பிய காணொளியை திறந்திட, ஆடையின்றி  வெற்று உடலோடு தன்னுடைய உருவத்தை அனுப்பியிருந்தான்.

அலைபேசியை ஒற்றை கையில் இறுக்கி பிடித்தவன், 

"ஆரம்பத்திலே சொல்லியிருந்தாள் இவ்வளவு தூரம் வந்திருக்காது" என்று வெண்பாவை கடிந்து கொண்டான்.

விலகி அவனின் முகம் பார்த்தவள்,

"சொல்லியிருக்கணும். முடியல. சொன்னால் நைட் உன் ஹாஸ்டல் ரூமுக்கே வருவேன்னு மிரட்டினான்" என்றாள்.

"யூ இடியட்... செக்யூரிட்டிஸ் தாண்டி அவன் எப்படி ஹாஸ்டலுக்குள் வர முடியும்?" என்று கர்ஜித்த தமிழ் வெண்பாவின் மருண்ட பார்வையில் தன் கடுமையை மறைத்தான்.

"வீட்டில் சொல்லியிருக்கலாமே?"

"பயத்தில் எதையும் யோசிக்கக்கூட முடியல" என்றவள், "இன்னைக்கு காலேஜ் முடிந்ததும் அவனோடு வெளியில் வரணும் சொல்றான்" என்றாள். 

"என்ன பண்ணனும் தெரியல? அழ தான் வந்தது. மாலதி அக்கா கண்டுபிடிச்சிட்டாங்க. உங்கக்கிட்ட சொல்ல சொன்னாங்க" என்றவள், "வீட்டுக்கு தெரிந்தால் அண்ணா ரொம்ப கஷ்டப்படுவாங்க" என்றிட...

"நான் பார்த்துக்கிறேன். நீ போ" என்றான் தமிழ். அவனது ஒற்றை வார்த்தையில் அத்தனை நம்பிக்கை அவளுக்கு. அது அவளின் முகத்தில் தெரிந்தது.

எந்தவொரு உறவுக்கும் அடித்தளம் நம்பிக்கை. அது தன்னவளிடம் தன்மீது உள்ளது என்பதில் கொண்ட மகிழ்வில், அதுதான் எப்படி என்று சிந்திக்க மறந்தான்.

தலையை ஆட்டியவள் எழுந்துகொள்ள, அவளிடம் பையை கொடுத்தான்.

"மொபைல் நாளைக்கு கொடுக்கிறேன்" என்க, தமிழை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவள் செல்ல...

"மொழி" என்று விளித்திருந்தான்.

வெண்பாவின் நடை நின்றது.

"ஒண்ணுமில்லை... போ" என்றவன், அடுத்த கணம் பூபேஷின் மூலமாக அந்த மாணவனை தனியாக பிடித்து அடி வெளுத்துவிட்டான்.

"பிடிக்கலன்னு சொன்னாக்கா அவு** காட்டுவியா?" என்று கேட்டு அங்கேயே பல உதைகள் கொடுத்தான். பூபேஷும் நிறைய அடிகள் வழங்கிட...

"இனி நான் வெண்பா பக்கமே திரும்பமாட்டேன்" என்று அவன் அலறிய எந்தவொரு கத்தலுக்கும் செவி மடுக்காத தமிழ் அவனை புரட்டி எடுத்த பின்னரே தன்னுடைய துறை தலைமை பேராசிரியரின் மூலமாக கல்லூரி முதல்வரிடம் புகாரை கொண்டு சேர்த்தான்.

தமிழுக்கு இவ்விடயத்தில் வெண்பாவின் பெயர் கல்லூரி முழுக்க தெரிவதில் விருப்பமில்லை. ஆதலால் விசயத்தை மாணவர்கள் தலைவன் எனும் முறையில் ரகசியமாகவே கையாண்டான்.

அவன் வெண்பாவுக்கு அனுப்பிய தகவல்களை கண்ட முதல்வர், இவ்விசயம் வெளியில் தெரிந்தால் கல்லூரியின் பெயருக்கு கலங்கம் என நினைத்து மாணவர்கள் மட்டுமின்றி மற்ற பேராசிரியர்களும் அறியாது அம்மாணவனை கல்லூரியிலிருந்து முழுதாய் நீக்கியிருந்தார்.

"என்னயிருந்தாலும் அவனை அந்தளவிற்கு அடித்தது தவறு தமிழ்" என்று தமிழை கண்டித்து அனுப்பி வைத்தார் முதல்வர்.

அம்மாணவனை திடீரென கல்லூரியிருந்து நீக்க காரணம் என்னவென்று மெக்கானிக்கல் துறை மாணவர்களிடையே பேச்சு கிளம்பினாலும் அவை யாவும் தமிழுக்கு வெண்பா உறவென்று தமிழ் பரப்பிய தகவலில் அமிழ்ந்துபோனது.

அடுத்த நாள் காலையில் தன் துறைக்குள் நுழைந்த வெண்பாவின் எதிரே தென்பட்ட மாலதி கூட "தமிழ் சீனியர் உன் ரிலேட்டிவ்ன்னு சொல்லவே இல்லையே வெண்பா" என்று குறைப்பட்டுக்கொண்டாள்.

தமிழுக்கு உறவென்ற வார்த்தை வெண்பாவை பல மாணவர்கள் மரியாதையாகவும், சிலர் தங்கச்சி என்ற அழைப்போடும் நட்பு பாராட்டிட முன் வந்ததோடு, அவளது வகுப்பு பேராசியரே "நீ தமிழுக்கு ரிலேடிவ்ன்னு இத்தனை மாசமா சொல்லவே இல்லையே! நல்லா படிக்கும் போதே தெரியுது. அவன் தான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறானா?" என்று கேட்டிட இவை யாவும் தமிழ் என்கிறவனுக்காக தனக்கு கொடுக்கப்படும் மதிப்பு என்று வெண்பாவிற்கு புரிந்தது. தமிழ் தான் அங்கு அத்தனை பிரபலமாயிற்றே!

வெண்பா வகுப்பிற்குள் நுழைந்ததும் அவளது வகுப்பு மாணவர்கள் சுற்றி சூழ்ந்து கொண்டனர்.

சொல்லவே இல்லையென்று வருத்தம் காட்டியதோடு, என்ன உறவென்று கேட்டிட...

வெண்பா விழித்து நின்றாள்.

"மாமா பையன்னு சொல்லு மொழி" என்று வாயிலில் ஒலித்த தமிழின் குரலில் மாணவர்கள் அனைவரும் வெண்பாவை விட்டு விலகி நின்றனர்.

"போச்சு... இது தெரியாம வெண்பாவை சைட் அடிச்சிருக்கேன்டா. சீனியருக்கு தெரிந்தால் அடிச்சிடுவாரோ?" ஒரு மாணவன் தன் நண்பனிடம் கேட்டிட, "போட்டுக்கொடுக்கவா?" என்று அவன் கேட்டதில், அம்மாணவன் அரண்டு விட்டான்.

அதே நிலை தான் மற்ற மாணவர்களுக்கும். அந்நொடி முதல் அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் தங்கையாகிப்போனாள்.

"வா."

தமிழ் சொல்லியதை நம்ப முடியாது அவனையே வெண்பா பார்த்திருக்க வாவென்று கண்களால் அழைத்திருந்தான்.

நேற்று சந்தித்த அதே மரத்தடிக்கு அழைத்து வந்திருந்தான்.

"நீ என் ரிலேட்டிவ் அப்படின்னா... பசங்க உன்கிட்ட பேசவே யோசிப்பாங்க. அதான் அப்படி சொன்னேன்" என்றவன் அவளிடம் அலைபேசியை கொடுத்தான்.

"நைட் கால் வந்துச்சு. பட் நான் அட்டெண்ட் பண்ணல" என்றவன், "ரிங்க்டோன் செம போ... பர்ஸ்ட் டைம் கேட்ட சவுண்ட்ல கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்" என்றான்.

கீற்றாய் புன்னகைத்தவள், "அண்ணா தான் கூப்பிட்டிருப்பாங்க. நான் ஹாஸ்டல்மேட் போனிலிருந்து பேசிட்டேன்" என்றாள்.

தனக்காக இவன் ஏன் இத்தனை மெனக்கெடல் செய்திருக்கிறான் என்று அவள் ஆராயவில்லை. மாணவத் தலைவன். அவனது பொறுப்பு என்று நினைத்தாள். ஆனால் உள்ளுக்குள் அவன் தனக்கு ஏதோ வகையில் முக்கியத்துவம் அளிக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.

அவனிடம் ஒரு வார்த்தை பேசிடமாட்டோமா என ஏங்கிய அவளின் மனதுக்கு தங்களின் முதல் சந்திப்பு பேச்சு இப்படியான நிலையிலா அமைந்திருக்க வேண்டுமென்று வருத்தமாக இருந்தது.

"தேன்க்ஸ்..." அவள் முடிக்காது இழுக்க...

"நேம் சொல்லு" என்றிருந்தான்.

"பெரியவங்க... எப்படி சொல்றது" என்றவள் யோசித்திட... 'அண்ணா மட்டும் சொல்லிடாதம்மா' என்று உள்ளுக்குள் அலறியவன், "சீனியர் அப்படின்னே சொல்லு" என்றிருந்தான். வேகமாக.

"ஓகே சீனியர்... ரொம்ப ரொம்ப தேன்க்ஸ்" என்றவள், "அண்ணா, தாத்தாக்கு அப்புறம் சொந்தமுன்னு சொல்ற முதல் உறவு நீங்கதான்" என்றிருந்தாள்.

அவள் உள்ளார்ந்து சொல்லியிருக்க அவனும் உள்ளன்போடு உள்வாங்கிக்கொண்டான்.

அந்த உறவில் தொடங்கிய நட்புறவு அவர்களுக்கிடையில் இன்னும் தொடர்கிறது. 

மூவரும் வீட்டிற்குள் நுழைந்ததும், சண்முகம் அவர்களின் பதலினை கேட்க இருவரும் ஒன்றாக சம்மதம் தெரிவித்தனர்.

பெரியவர்களின் நெஞ்சம் நிறைந்திட்டது.

"அப்போ நிச்சயம், கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாமே சம்மந்தி" என்று சண்முகம் சொல்ல...

சந்தோஷமாக நாள் பார்க்கப்பட்டது.



Leave a comment


Comments


Related Post