இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 22 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 23-04-2024

Total Views: 21513

அத்தியாயம் 22

மணமக்களுக்கு வேண்டியவற்றை வாங்கி வர அருணாவுடன் அருவியையும் மகிழாவையும் அனுப்பி வைத்தார் சக்கரவர்த்தி.

சுரேந்திரனை அழைக்க அவன் முறைத்த முறைப்பில் வாயை மூடிய அருணா வாசுவை அழைக்க அவனும் வர முடியாது என கூற துணைக்கு யாராவது ஒரு ஆண் கண்டிப்பாக போக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் வாசு அவர்களுடன் செல்ல சுந்தரும் அவனுடன் இணைந்து கொண்டான்.

அவனுக்கு அருவியின் சிறுவயதில் என்ன நடந்தது என்பதை இன்றே தெரிந்து கொள்ள பேராவல் எனவே வாசுவை விடாமல் அவன் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தான்.

காரை வாசு ஓட்ட அவன் அருகில் சுந்தர் அமர்ந்து இருந்தான்.

அருணா மகிழாவை  அவன் அருகே அமர சொல்ல அவரிடம் எதிர்ப்பு தெரிவிக்காதவன் அவளை பார்த்த பார்வையில் நடுங்கியபடி "நான் பின்னாடி உக்காந்துக்கிறேன்மா..." என்றபடி பின்னால் அமர்ந்து கொண்டாள்.

அதன்பின்தான் சுந்தர் வந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டான்.

அருணாவும் அருவியும் மகிழாவிற்கு முன் அமர்ந்து இருந்தனர்.

அன்றைய தினத்தின் பின் அருவி மறந்தும் மகிழாவிடம் பேசவில்லை.

மகிழா கிடைத்த தனிமையில் அவளிடம் பேச முற்பட அவளோ இவளை திரும்பியும் பார்க்கவில்லை.

இப்போதும் அருவியின் அருகில் அமர்ந்து தன் நிலைமையை எடுத்து சொல்ல அவள் காத்திருக்க அவளுக்கு அந்த வாய்ப்பை அளிக்கவே இல்லை அருவி.

அவளையே ஏக்கம் நிறைந்த விழிகளால் வருட அருவியோ உன் வேஷம் இனி என்னிடம் பலிக்காது என எண்ணியபடி தன்னுடன் எப்போதும் ஒரு ஆள் இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

தன்னை அருவி ஒதுக்குகிறாள் என்பதை உணர்ந்த மகிழா அதன்பின் அவளிடம் வலிய சென்று பேசும் சந்தர்ப்பத்தினை உருவாக்கவில்லை.

ஒதுங்கியே இருந்து கொண்டாள்.

"வாசு...ஏன் இவ்ளோ வேகமா போற கொஞ்சம் மெதுவா போப்பா..." என அருணா கூற.

"அம்மா... எனக்கு வேலை இருக்கு... நீங்க சீக்கிரமா முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணுங்க..." என்க.

"ஏன்டா... மூணு பொம்பளை பிள்ளைங்க நாங்க தனியா என்னடா பண்ணுவோம்... எங்கள தனியா விட்டுட்டு போற அளவுக்கு உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை..."என அருணா கேட்க.

"அம்மா... நீங்க வேணா பயந்து இருப்பீங்க... ஆனா சிலதுகள நம்பவே முடியாது... ஊமக் கோட்டான் மாதிரி இருந்துட்டு பயங்கர வேலை எல்லாத்தையும் பார்த்து வைக்குங்க... நீங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கம்மா... இல்லன்னா உங்க மேலயும் ஏதாச்சும் பழி விழும்..."என அவன் கூற.

அவன் கூற வருவது அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்தது.

"தேவை இல்லாம பேசாத வாசு... நாங்க எடுத்து முடிச்சிட்டு உனக்கு போன் பன்றோம் நீ வந்துடு..." என்க.

"ம்ம்ம்ம்..."என முடித்துக் கொண்டான் அவன். 

"அத்தை..." என அருவி அழைக்க "என்னம்மா..." என்றபடி திரும்பினார் அருணா.

"எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு.... அத்தை நான் வரல... வீட்டுக்கு போகட்டுமா..." என கேட்க.

"ஏம்மா... என்ன பண்ணுது டாக்டர்ட்ட போலாமா... அட நான் ஒருத்தி... இங்கயே ஒரு டாக்டர் இருக்கும்போது டாக்டர்ட்ட போலாமான்னு கேக்கறேன் பாரு...ஏன்டா... சுந்தர் அருவிக்கு என்னென்னு பாரு..." என்க.

"சரிம்மா... என்றவன் வண்டிய நிறுத்து வாசு..." என அவனிடம் கூற.

அருவியோ "வேணாம்த்த நீங்க மட்டும் போய்ட்டு வாங்க நான் வீட்டுக்கு போறேன்...." என்க.

"எப்படிம்மா போவ... இவ்ளோ தூரம் வந்துட்ட இன்னும் கொஞ்ச தூரம்தானே உனக்கு பிடிக்காதத எடுத்துட்டு வந்தா உன் மாமா என்கிட்ட கோபப்படுவாரு அருவி...." என்றார் அவர்.

"எனக்கு உடம்புக்கு முடியலன்னா மாமா ஒன்னும் சொல்ல மாட்டாரு அத்த..."என்க.

"ஏன் நீ இன்னைக்கு இவ்ளோ பிடிவாதமா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்க... ஏதோ பண்ணு... என்றவர் வாசு வண்டிய திருப்பு இவள வீட்டுல விட்டுட்டு நாம மட்டும் போகலாம்..."என்க.

மகிழாவோ தான் ஏதாவது கூறினால் வாசு ஏடாகூடமாக ஏதாவது கூறுவான் என வாயை மூடி அமைதியாக அமர்ந்து இருந்தாள் 

அவளையும் அருவியையும் மாறி மாறி பார்த்தவன் கண்களில் அத்தனை ஏளனம்.

அவனின் அந்த உதாசீனத்தை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவனின் செயல் ஒவ்வொன்றும் அவளுக்கு நெருப்பில் நிற்பது போன்ற உணர்வையே கொடுத்தது.

பல்லைக்கடித்து பொறுத்துக் கொண்டாள் மகிழா.

வாசுவிற்கு இருக்கும் கோபத்திற்கு அவளை கண்டந்துண்டமாக வெட்டிப்போடும் அளவு கோபம் இருக்க பல்லைக்கடித்து பொறுமை காத்தான்,காரணம் சக்கரவர்த்தி.

"அவளை விட்டு பிடி வாசு ஆனால் தனியாக விட்டுவிடாதே..." என அவர் கூறி இருக்க. 

அவரின் வாக்கு அவனுக்கு தெய்வ வாக்கு அல்லவா எனவே பொறுமை காத்தான் ஆணவன்.

அருணா கூறியதும் வண்டியை திருப்பியவன் வீடு நோக்கி செல்ல அவனுக்கு முன்னால்தான் கந்தன் பைக்கில் சென்று கொண்டு இருந்தான்.

அருணா அவனை கவனித்துவிட்டு "வாசு... அது உன் சிநேகிதன் கந்தன்தான...?" என கேட்க.

"அம்மா உங்களுக்கு என்ன ஒரு மெமரி பவர்..."என சுந்தர் கூற.

"அட இருடா இவனே...." என்றவர் வாசு அவன கூப்டு அவன்கூட அருவிய அனுப்பி வைக்கலாம்..." என்க.

அருவிக்கு திக்கென ஆனது.

"அத்த எதுக்கு அதெல்லாம் நான் நடந்தே போய்டுவேன்...." என்க.

"சும்மா இருடி உடம்பு முடியலன்னு சொல்றவள எப்படி தனியா அனுப்ப வாசு அவன கூப்டுப்பா..." என்க.

"அம்மா சுரேனுக்கு தெரிஞ்சா திட்டுவான்ம்மா..." என்க.

"அவன் ஏன்டா திட்டப்போறான்... நான் போன் பண்ணி சொல்றேன்... இப்பவே நாலு மணி ஆகிடுச்சுடா... நாளைக்கு வீட்ல விஷேசத்த வச்சிட்டு இன்னைக்கு இங்கயும் அங்கயுமா சுத்திட்டு இருக்க முடியாது நீ அவன கூப்டு..." என்க.

வேறு வழி இல்லாமல் வாசு கந்தனை அழைக்க அவனின் போனை எதிர்பாராதவன் வண்டியை நிறுத்திவிட்டு சற்று நடுக்கத்துடனே "சொல்லு மச்சான்..." என்றான் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மருந்து பாட்டிலை தடவிக்கொண்டே.

"பின்னாடி திரும்பி பாரு..." என வாசு கூற.

அவனும் போனை காதில் வைத்தபடி திரும்பி பார்த்து கண்களை விரித்தான்.

வண்டியை நிறுத்தியவன் கீழே இறங்கி அருவியை அழைத்து செல்லுமாறு கூற அவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

காரணம் சுரேந்திரனை நினைத்து அல்ல திகம்பரனை நினைத்து.

அவனுக்கு மட்டும் தெரிந்தால் கொலை விழும் என எண்ணி "நான் எப்படிடா...?" என தயங்க "நேரம் இல்லடா... ஆமா இன்னைக்கு உங்க எல்லோரையும் வீட்டுல வேலை இருக்குன்னு வர சொன்னேன்தான நீ இங்க என்ன பன்ற...?" என கேட்க.

அவனுக்கு உதறல் எடுத்தது

"அது... அது... அம்மாவுக்கும் சோறு எடுத்துட்டு போனேன்டா..." என ஒர் வயர் பையை காட்ட.

"ம்ம்ம்ம்...சரி.. சரி.. அருவி அவன் கூட போய் வீட்டுல ஓய்வெடு..."  என்க.

சுரேந்திரனை பற்றி நன்கு தெரிந்தவள் ஆதலால் அவளும் தயங்கி அவனை பார்க்க "நான் அவன்கிட்ட சொல்றேன் போ..." என்றான.

"ம்ம்ம்ம்..." என அரைமனதாக தலையாட்டியவள் அருணாவிடம் கூறிவிட்டு கந்தனின் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

அவள் சென்றதும் இவர்களும் மீண்டும் டவுனை நோக்கி சென்றனர்.

பத்துநிமிடத்தில் வாசுவின் வீடு வர அவளை இறக்கி விட்டவன் விட்டால் போதும் என தலைதெறிக்க ஓடினான்.

அவனின் செயலை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் அருவி.

இவனுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி ஓடறான் என நினைத்தவள் அறியவில்லை தன் குடும்பத்தை மட்டுமின்றி இந்த ஊரையே அழிக்க திகம்பரனுடன் கூட்டு சேர்ந்த களவாணி அவன் என.

கந்தனுடன் வந்து இறங்கிய தன் மனையாளை ஜன்னல் வழியாக வர்ஷினியுடன் போன் பேசிக்கொண்டு இருந்த சுரேன் பார்க்க சுள்ளென கோபம் ஏறியது.

"எவ்ளோ தைரியமா இன்னொருத்தன் கூட வரா  வரட்டும் பேசிக்கிறேன்..." என நினைத்தவன் அறியவில்லை அவன் மட்டும் திருமணம் முடிந்த பின்னும் வர்ஷனியுடன் கடலை போடலாம் அவள் மட்டும் வேறு ஒருவனுடன் பேசுவதும் வண்டியில் வருவதும் தவறான செயலாகவே அவன் படித்த மண்டையில் ஏறி இருந்தது.

அவள் வருவதற்குள் ஒரு குளியல் போட்டுவிட்டு வரலாம் என நினைத்தவன் பின்வாசல் வழியாக பின்கட்டில் இருக்கும் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அவள் எப்படியும் பத்மினியை பார்த்துவிட்டு அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டுதான் வருவாள் என அவன் அறிந்த ஒன்றே.

அவன் எண்ணியது போலவே அவளும் பத்மனியுடன் தான் கடைக்கு போகாததற்கான காரணத்தை விளக்க "சரி நீ போய் மேல இருக்க ரூம் ஒன்னுல படுத்து தூங்கு நான் குடிக்க ஏதாச்சும் கொடுத்து விடறேன்..." என்க.

அவளும் சரி என்றுவிட்டு மேலே சென்றாள்.

மேலே சென்றவள் அவன் அங்கு இருப்பது அறியாமல் தலைவலியில் கதவை கூட தாழிடாமல் அப்படியே கட்டிலில் விழுந்துவிட்டாள்.

யாரும் இல்லாத காரணத்தால் இடுப்பில் துண்டோடு பின் வாசல் வழியாக மேலே வந்து அவனது அறைக்குள் நுழைந்தவன் கதவை தாழிட்டவாறு ஒரு கையால் இடுப்பில் இருந்த துண்டையும் உருவ "ஆஆஆஆவென..." அவள் கத்திய சத்தத்தில் அவனும் அதிர்ந்து உருவிய துண்டை நழுவவிட்டான்.

அவள் அவன் நின்ற கோலம் பார்த்து மீண்டும் கத்த வாயை திறக்க அவள் அருகில் வேகமாக வந்தவன் அவள் வாயில் கைவைத்து அழுத்த அவளோ "ம்ம்ம்ம்..." என முனங்கியபடி அவனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய அவனது பிடியோ உடும்பு பிடியாக இருந்தது.

"ஏய் வாய மூடுடி... எதுக்கு இப்ப கத்தறவ... ஆமா உனக்கு என் ரூம்ல என்னடி வேலை...?" என கேட்க.

அவன் கேட்ட பிறகே அவளுக்கு உரைத்தது மேலே இருக்கும் மூன்று அறைகளில் ஒரு அறையில் அவன் இருப்பது.

ஆனாலும் விடாமல் "ம்ம்ம்ம்..." என அவள் முனங்க "நீதான் ஊரு வாயே ஒன்னா அடிப்பியே... இப்ப என்னடி ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ன்னு... முனங்கிட்டு இருக்க...?" என்றான்.

அவளோ அவனை காண முடியாமல் அவனிடம் இருந்து விடுபட போராடினாள்.

"என்னடி ஓவரா பண்ணிட்டு இருக்க..." என்றவனுக்கு இன்னும் புரியவில்லை அவன் நின்றிருக்கும் கோலம்.

அவளை திட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றவன் உள்ளாடையை எடுக்க மறந்து இருந்தான்.

ஏற்கனவே தலைவலி இதில் இவன் வேறு என நினைத்தவள் தன் ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி அவனை தள்ளிவிட அவனோ சுவற்றில் போய் முட்டி விழுந்தான்.

அவனை பார்த்து மூச்சு வாங்கியவள் "அறிவு இருக்காடா உனக்கு..."?" என கேட்டாள் பெரிய பெரிய மூச்சு வாங்கியபடி.

"ஏய்...என்ன திமிரா பயம் விட்டு போச்சா...?" என கேட்க.

சுற்றிலும் எதையோ தேடியவள் அவன் அவிழ்த்து போட்ட துண்டு தூரமாக கிடப்பதை பார்த்துவிட்டு டேய் தடிமாடு என அழைத்தவள் கட்டிலில் இருந்த போர்வையை அவன் மீது தூக்கிபோட 



"இத எதுக்கு இப்ப தூக்கி போடறா...?" என நினைத்தபடி கீழே குனிந்து அதை எடுக்கப்போக அப்போதுதான் அவனுக்கு உரைத்தது அவன் நின்ற கோலம்.

ஒரு நிமிடம்தான் அதிர்ந்து போனவன் பின் என்ன நினைத்தானோ அவனுக்கே வெளிச்சம் 

அவளை திரும்பி பார்க்க அவளோ முகத்தை திருப்பியபடி நின்றாள்.

இப்போது அவனுக்கு என்ன தோன்றியதோ கையில் எடுத்த போர்வையையும் அப்படியே போட்டுவிட்டு அவளை நோக்கி நடந்தான்....


Leave a comment


Comments


Related Post