இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -21 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 23-04-2024

Total Views: 30096

அத்தை நிலாவுக்கு என்னாச்சி?".

"என்னாச்சின்னா சமஞ்சி மூலையில உக்கார்ந்துட்டா போய் அவ ஆத்தாகாரிக்கு சொல்லி அனுப்பிட்டு, ஷாலுவோட   பழைய சட்டையை எடுத்துட்டு வந்து குடு. போட்டுக்கட்டும்.அப்புறம் நீ ஏதோ ஒன்னு வைப்பியே அதையும் கொண்டு வந்துக் குடு. இல்லனா அந்த சட்டையும் நாசமாகிடும் அப்புறம் அவ ஆத்தாக்காரி வந்ததும்  பருப்புசோறு குடுத்துக்கலாம்."

"சரித்தை" என்றவர் நிலாவின் தலையை தடவப் போக.

"அடிக் கூறுக் கெட்டவளே அவளைத் தொட்டுப்புட்டு பொறவு எப்படி வூட்டுக்குள்ளாறப் போவ'.

"ஹா சந்தோசத்துல மறந்துட்டேன்".

"ஆமா அப்படியே உன்ற மருமக சமைஞ்ச மாதிரி இந்த துள்ளு துள்ளுற போ போ" என விரட்டியவருக்கு புது கவலை வேறு பிறந்து விட்டது.

இவ்வளவு நாள்  மார்த்தாண்டத்தையும், ராஜியையும் பற்றி தான் கவலை இருந்தது. இப்போது நிலா பெரியவள் ஆகி விட்டாள் என்றதும்,இவளோடே சுத்தும் யுகியையும் நிலாவைப் பற்றியும் கவலை எழுந்து விட்டது.

வயதானவர்களுக்கு ஒன்று போனால் ஒன்றை நினைத்து கவலை தான். யார் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என அந்த நாலுப் பேரைப் பற்றி கவலை இருந்துக் கொண்டே தானே இருக்கிறது.

வீட்டிற்கு சென்று ஷாலினியின்  உடையை எடுத்துக் கொண்டவர், மார்த்தாண்டத்திற்கு அழைத்து விஷயத்தை சொல்லி. வளவனையும், ராஜியை அழைத்து வர சொன்னார்.

"அம்மா என்னைய தான  போக சொன்னிங்க, இப்போ அப்பாவை கூட்டிட்டு வர சொல்றிங்க?"  என்று அதற்கும் சிணுங்கிய யுகி."பூனை எப்படி இருக்கா அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல, நான் போய் பார்க்கவா" என்க..

அவர் சொல்லப்போகும் பதிலுக்காக யுகி மட்டும் அல்லாமல்,நந்தனும் காத்திருந்தான்.

"ஒன்னுமில்லடா நிலா பெரிய பொண்ணு ஆகிட்டா. அதான்  அவங்க அம்மாகிட்ட சொல்லி கூட்டிட்டு வர சொன்னேன், உனக்கு  அவங்ககிட்ட விவரமா சொல்லத் தெரியாதுல,அதுக்கு தான் அப்பாவை கூட்டிட்டு வர சொன்னேன்" என்றவர் "அங்க யாரும் வரக்கூடாது.. இங்கையே இருந்து ஹோம்ஒர்க் எழுதுங்க, நான் புள்ளைய பார்த்துட்டு வரேன்" என்று கிளம்பிவிட்டார்.

நந்தன் புதுவீட்டிற்கு போவதுப் போல அங்கும் இங்கும் நடந்து நிலாவைப் பார்க்க முயற்சி செய்தான். இன்னுமே அவள் வலியோடு அவன் கையைப் பிடித்தது தான் கண் முன் வந்து வந்து போனது.

எவ்வளவு முயன்றும் நந்தனால் நிலாவைப் பார்க்க முடியவில்லை,அதற்கு மேல் அங்கு நின்றால் பலருக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று கிளம்பிவிட்டான்.

வளவன், ராஜி  இருவரும் வந்ததும் சொந்தங்களுக்கு சொல்லி அனுப்பினார்கள்.

நிலாவை ஒரு மூலையில் அமர வைத்து குறுக்கே ஒரு உலக்கையை போட்டு வைத்தார்கள். அவளுக்கு சாப்பிட  பருப்பு சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கொடுக்க,அந்த வாசம் வயிற்றை குமட்டியது நிலாவிற்கு.

"ஆயா வேணா வாந்தி வர மாதிரி இருக்கு."

"இதுக்கே வாந்தி வந்தா அடுத்ததுக்கு என்னத்தை சொல்லுவ, தின்னுடி கம்முனு" என அதட்டி மிரட்டி உண்ண வைத்தார்.

அடுத்து பச்சை முட்டையின் மேல் ஓட்டை மட்டும் சிறிது உடைத்து  அதை அப்படியே குடுக்க சொன்னார்கள்.

"என்னது பச்சை முட்டையா உவாக் நான் குடிக்க மாட்டேன்."

"இப்படி சொன்னா கேக்க மாட்ட.. ஏய் ராஜி. அந்தப் பக்கம் அவளைப் புடி."

"அம்மா பாவமா இருக்கு."

"என்ன பாவமா இருக்கு? இப்பவே இவ்வளவு வயிறுவலி வந்தா,  பின்னாடி எவ்வளவு கஸ்டப்படுவா.அதைப் பத்தி யோசிச்சியா ஒழுங்கா வந்து பிடி."

"ம்ம் புடிக்கிறேன்" என்றவர் நிலாவின் கையை இரண்டையும் பிடித்துக்கொள்ள, அவளது  கன்னத்தின் இருப் பக்கமும் அழுத்திப் பிடித்து வாயை திறக்க வைத்த கிருஷ்ணம்மாள் வாயில்லையே மூன்று நாட்டுக் கோழி முட்டையை ஊற்றினார்.

"முழுங்கு"

"ஹும்ஹும் மாட்டேன்" என்பது தலையை ஆட்டினாள் நிலா.

"என்ன ஹும்ஹும்  முழுங்குடி,இல்லனா  குச்சி வெச்சி குத்திடுவேன் குடி" என்று மிரட்டவும் வேறு வழியின்றி முழிங்கினாள்.

அடுத்து முட்டை ஓட்டிலையே நல்லெண்ணெயை ஊற்றி அதையும் குடுக்கச் சொல்ல.

"ஆயா முட்டை குடிச்சிட்டு  இதையும் குடிச்சா வாந்தி எடுத்துருவேன் விட்டுருங்க" என்று  தேம்பி தேம்பி அழ.

"அம்மு வயிறு வலிக்கக் கூடாது, இடுப்பு வலிக்கக் கூடாதுன்னு தான் இதையெல்லாம் குடிக்க சொல்றாங்க குடிக் கண்ணு. அழக் கூடாது செல்லம்ல கொஞ்சம் குடிடா தங்கம்"  என்று ராஜி மகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்க 

"யாருடி இவ கூறுக் கெட்டவளா இருக்கா.. புள்ள அழுதா கெஞ்சிட்டு இருப்பியா? இறகு இறகேன்னா மயில் இறகு போடாது,நம்ப தான் அமுக்கி வெச்சி புடுங்கனும், அது மாதிரி தான் குடிக்காத புள்ளையை  அமுக்கி ஊத்துறதை வுட்டுப்புட்டு கெஞ்சிட்டு இருக்கா. ஏய் இந்தா  இந்த சிணுங்கற வேலையை வுட்டுப். புட்டு  குடிக்கிற வழியப் பாரு" என மிரட்டி மிரட்டியே குடிக்க வைத்துவிட்டார் கிருஷ்ணம்மாள்.


Leave a comment


Comments 1

  • F Fajeeha Fathima
  • 2 months ago

    அய்யோ அந்த பச்ச முட்டை என் பழைய ஞாபகங்களை நினைவுப்படுத்திருச்சு அது என்ன கஷ்டம் சொன்னாலும் கேக்கவா போறாங்க😒😒😒😒


    Related Post