இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 24-04-2024

Total Views: 18699

பாவை : 16 

 ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த அஞ்சனாவை எழுப்ப முயற்சி செய்துப் பார்த்தும் அவளோ எழுந்த பாடில்லை. தலை முடி கலைந்து, ஜர்க்கினும் கீழே கிடைக்க, அதனை எடுத்து அவளின் மீது போர்த்தி விட்டான். 

அக்கம் பக்கம் திரும்பி தண்ணீர் எதுவும் இருக்கிறதா என்று தேட, எதுவுமே இல்லாதுப் போக, வேறு வழியின்றி தன் கைகளில் ஏந்தியவனோ அங்கிருந்துச் சென்றான்.

இருளுக்குள் இருந்து மயங்கிய நிலையில் வெளியே அழைத்து வந்து ஹோட்டலில் முன் புறம் கொண்டு வந்தவனோ உள்ளேச் செல்லப் போனான்.

அதற்குள், “ஹே ! அஞ்சனா, நந்தன் “ என்ற ஹெச்.ஆர் இங்கே கூட்டத்தில் இருந்து அவர்களைக் கண்டு அழைக்க, அனைவரின் பார்வையும் அங்கு தான் சென்றது.

என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டு அனைவரும் அங்கேச் செல்ல, “என்னாச்சு மச்சான் ?” கேசவன் கேட்க,

“பேச நேரமில்லை. டாக்டரை வரச் சொல்லுங்க. ரேஷ்மி சீக்கிரம் வந்து உங்க ரூம்மை ஓபன் பண்ணி விடு “ கூறியவனோ அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்காதுச் சென்று விடவே, பின்னே நிதானமோடு இருந்தவர்கள் சென்றனர்.

அறையின் உள்ளே அழைத்துச் சென்று அவளைப் படுக்கையில் படுக்க வைத்தவன் அங்கிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து எழுப்ப முயற்சி செய்தான்.

அதுவும் பயனில்லாதுப் போகவே, “முதல்ல எல்லாரும் வெளியே போங்க. நல்லா காத்து வரட்டும். கேசவன் மேனேஜர் கிட்ட கேட்டு டாக்டர் கிட்ட சொல்லிட்டையா ?” என்று ஹெச்.ஆர் பரபரக்க,

“சொல்லிட்டேன் சார். பைவ் மினிட்ஸ்ல வந்திருவாங்களாம் “ என இவர்கள் இருவரும் பேச, அஞ்சனாவை விழி திறக்க வைக்க போராடிக் கொண்டிருந்தாள்.

“அஞ்சனா ! என்னைப் பாரு,கண்ண திற. உனக்கு என்னாச்சு ?” கைகள், கால் என்று வேகமோடு தேய்த்து அவளின் மேனியை சூடேடுத்தி தவிப்போடு புலம்பவே ஹெச்.ஆர் அவனின் செயலை வித்தியாசமாகக் கண்டான்.

“என்ன நடந்தது ? கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி கூட நல்லா தானே இருந்தா ?” என ரேஷ்மி முன்னே நின்றுக் கேட்க,

“தெரியல. நான் பார்க்கும் போது இப்படியே தான் மயங்கி கிடைந்தா “

“எந்த இடத்துல ?”

 “ஹோட்டலுக்கு பின்னாடி “

“அங்கே எப்படி இவ போனா ? நீங்க எப்படி அங்கே போனீங்க ?” சந்தேகமாய் ரேஷ்மி கேட்க, அங்கிருந்த சிலருக்கும் அந்த சந்தேகம் தான் இருந்தது.

“வாங்க டாக்டர், வாங்க “ அழைத்துக் கொண்டு உள்ளே வந்த ஹெச்.ஆர் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடந்த அஞ்சனாவைக் காட்டினார்.

“என்னென்னு தெரியல. சீக்கிரம் பாருங்க டாக்டர் “ “என்னோட ஹெல்ப்க்கு ஒரு ஆள் தவிர மீதி எல்லாருமே வெளியே போங்க “ என்கவே, அனைவரும் செல்ல கடைசியில் ரேஷ்மி, நந்தன் இருவரும் நின்றனர்.

 “ரேஷ்மி, பார்த்துக்கோ “ என்றவாறு கவலையோடு நந்தனும் வெளியேறினான்.

வெளியே வர, “டேய் ! அவளுக்கு ஒன்னுமாகாது. நீ ஏன் இப்படி தவிக்கிற ? ஏதோ உன் அம்மாக்கோ, பொண்டாட்டிக்கோ முடியாத மாதிரி கிடக்கே ?” என்று கேசவன் கேட்கவே,

“யாரை இருந்தா என்னடா ? முதல்ல அமைதியா இரு “ எரிந்து விழ, அனைவரும் அவனைத் தான் கண்டனர்.

நேரம் சென்று மருத்துவர் வெளியே வர, “என்னாச்சு டாக்டர் ?” முந்திக் கொண்டு முதல் ஆளாக நந்தன் கேட்க,

“அவங்களுக்கு மயங்க மருந்து எடுத்திருக்காங்க “

“வாட். அவ எதுக்கு இதை பண்ணனும் ?”

“தெரியல. ஒரு வேலை வேற யாராவது கூட இவங்களுக்கு தெரியாம இவங்க சுவாசிக்க வச்சிருக்கலாம். அதுனால தான் மயங்கிட்டாங்க. மார்னிங் கண் விழிச்சிருவாங்க. உயிருக்கு எந்த ஆபத்துமில்லை “ எனக் கூறிச் செல்ல, அந்த எவனோ ஒருவனின் மீது எல்லையில்லா சினமோடு கொந்தளித்தான்.

‘இவரின் வேலையாக இருக்குமோ ?’ சந்தேகமாய் அதே கோபப்பார்வையோடு நந்தன் காண, உடனே வேறெங்கோ பார்த்த ஹெச்.ஆர் அனைவரையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார்.

“சரி வாடா நந்தன். ரூமுக்கு போகலாம். மார்னிங் வந்து அஞ்சனாவைப் பார்க்கலாம் “ என்றவாறு தன் நண்பனை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான் கேசவன்.

மறுநாள் விடிந்து விட கண் விழித்த அஞ்சனாவிற்கு யாரோ தன்னை அடித்துப் போட்டது போன்று வலி. மயக்கத்தில் கை,கால்களை அசைக்காது இருந்ததில் சுள்ளென்று இழுப்பது போன்று இருந்தது.

அப்போது தான் குளியலறையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி, “கண் விழிச்சிட்டையா ? இப்போ எப்படி இருக்கே ?” என்க, அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.

தன் கைபேசியில் ஹெச்.ஆருக்கு குறுஞ்செய்தி ஒன்றை போட்டவளோ, “என்னாச்சு அஞ்சனா ? எதுவும் பேசாம இருக்கே ?” என்று மீண்டும் கேட்டாள்.

“எனக்கு என்னாச்சு ? நான் எப்படி இங்கே வந்தேன் ?” கேட்டவாறு யோசித்துப் பார்த்தவளுக்கு இரவில் தன் வாயை யாரோ மூடியது வரை மட்டுமே நினைவில் இருந்தது.

“நந்தன் தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தாரு. நேத்து நீ ஹோட்டலுக்கு பின்னாடி மயங்கி கிடந்தே. டாக்டர் என்ன சொன்னாங்கன்னா “ என்று அவர் கூறியது அனைத்தையும் கூறி முடிக்க, சரியாக அவர்களின் அறை ஹாலிங் பெல் ஓசை எழுப்பியது.

“இரு வரேன் “ எனக் கூறிச் சென்றவளோ கதவினை திறக்க, ஹெச் ஆர் தான் நின்றிருந்தான்.

விழியசைவால் சைகை செய்த ரேஷ்மி, “வாங்க சார் “ என்ற அழைப்போடு உள்ளே அழைத்து வர,

உள்ளே வந்தவரும், “ஆர் யூ ஓகே அஞ்சனா ?” என்க, அவளோ தலையை மட்டும் அசைத்தாள்.

“உனக்கும், நந்தனும் ஏதாவது பிரச்சனையா ?” சட்டெனக் கேட்க,

அவளோ, ‘ஏன் இப்படி கேட்கிறார் இவர் ?’ என நினைத்து இல்லையென தலையசைத்தாள்.

“அப்பறம், ஏன் நேத்து அவன் அப்படி பண்ணுனான் ? ஓ காட் ஷெட் டேமிட். அஞ்சனா உன்கிட்ட அவன் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிருக்கான் “ என்று அவனோ ஒரு கதையை ஆரம்பித்தான்.

“என்ன சார் சொல்லுறீங்க ?” ரேஷ்மியும் தெரியாததுப் போல் கேட்க,

“ஆமா. அஞ்சனா நேத்து நைட் தனியா போய் நின்னுக்கிட்டு இருந்தா அப்போ அவ பின்னாடியே போன நந்தன் தான் எதோ பண்ணி மயங்க வச்சான். அதுக்கு அப்பறம் அவன் தான் பின்னாடி கொண்டு போனான். எதுக்கு இவன் எப்படி பண்ணுறான்னு நினைச்சி நான் பின்னாடி போகும் தான் பார்த்தேன். இவளோட ட்ரெஸ் “ என்று அதற்கு மேல் கூற முடியாததுப் போல் நடித்துக் காட்டினான்.

“என்னால இதை நம்ப முடியாது. நந்தன் இப்படி பண்ண மாட்டாரு. அவங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் “ என அஞ்சனா நம்ப மாட்டேன் என்பது போல் கூறவே,

“ஆமா சார். நந்தன் பத்தி எனக்கும் தெரியும். பொண்ணுங்க பக்கமே போகாதவன் “ என்று ரேஷ்மியும் நம்ப வைக்க தன் பங்குக்கு கூறினாள்.

“எனக்கு தெரியும் நீங்க இப்படி தான் நினைப்பீங்க ? அதான் ஆதாரம் ரெடியா வச்சிருந்தேன். இங்கே பாருங்க. நான் மட்டும் நேத்து சத்தம் எழுப்பாம இருந்திருந்தா உன்னை அவனுக்கு தீனியாக்கிருப்பான் “ என்றவாறு தன் கைபேசியில் தான் எடுத்த புகைப்படத்தை காட்டினான்.

அதனை வாங்கிப் பார்த்த ரேஷ்மியோ அதிர்ந்துப் போய், “ச்சே ! இந்த நந்தன் இப்படி பட்டவனா, இவனெல்லாம் வேலையில இருந்தா எங்களுக்கு எப்படி சார் பாதுகாப்பு ? எவ்வளோ தூரம் இங்க வந்திருக்கோம். இங்க வச்சி பண்ணுனா எதுவும் தெரியாதுன்னு நினைப்பு “ என்று புலம்பிக் கொண்டேச் செல்ல, தன் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்தவாறு தான் இருந்தாள் அஞ்சனா.

“அஞ்சனா நீ இப்போ என்னம்மா பண்ணப் போறே ?”

“நான் பார்த்துக்குறேன் சார். இன்னைக்கு நான் எங்கையும் வரல. நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க “ என்கவே, அவளின் பார்வை அதனை நம்பவில்லை என்பது போல் தான் இருந்தது.

‘இவ்வளோ சொல்லியும் இவள் நம்பவில்லை என்றால் அந்த அளவுக்கு அவனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்று தானே அர்த்தம். ஏன் அவ்வளோ நம்பிக்கை ? ஒரு வேலை இருவரும் காதலிக்கிறார்களோ ?’ மனதுக்குள் எண்ணிக் கொண்டு வெளியே வந்தார்.

காலை உணவினை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண, அப்போது ரேஷ்மியோ இந்த விசியத்தை அப்படியே பரப்பி விட்டாள்.

அனைவருமே நேற்று நல்லவன் போல் நடித்துக் காட்டிய நந்தனை உண்மையறியாது கேவலமாகக் கண்டனர்.

இந்த செய்தி அவனின் செவிக்கும் கேசவன் மூலம் வர, “என்னடா இப்படி சொல்லுறாங்க ? என்ன தான்டா நடக்குது ?”சந்தேகமாய் கேட்க, இவர்கள் பேசுவது எதுவும் அவனின் செவிக்கு கேட்கவில்லை. அதை நினைத்து அவனோ குறுகவும் இல்லை. எண்ணம் முழுவதும் அஞ்சனா இதனை நம்பி விட்டாளா என்று தான். 

“நான் அஞ்சனாவை பார்த்திட்டு வரேன் “ எனக் கூறிய நந்தன் எழுந்து நிற்க, 

முன்னே வந்த ஹெச்.ஆர், “அவ இப்போ யாரையும் பார்க்க விரும்பலையாம். நம்ம எல்லாரும் சுத்தி பார்த்திட்டு வரச் சொன்னா ?” என்றார்.

ரேஷ்மியும், “ஆமா. அப்படி தான் எங்க ரெண்டு பேர் கிட்டையும் சொன்னா ?” என்க,

“நீங்க எல்லாரும் போங்க நான் வரல “

“உன்னை இங்கே தனியா விட்டிட்டு போனா எப்படி ? நீ மறுபடியும் ஏதாவது பண்ணிட்டா ? அஞ்சனா பத்திரமா இருக்கணும்னா நீ எங்க கூட வரணும் “ என கூறி முடிக்கும் முன்னே அவனின் சட்டை காலரை இறுகப் பற்றினான்.

“இதை சொல்ல நீ யாருடா ?” சீற்றமோடு நந்தன் கத்த,

‘இவன் என்ன பாஸ் கிட்டையே இப்படி கோபப்படுறான். போச்சு போ !’ புலம்பிக் கொண்டு வேகமாய் வந்த கேசவன் நண்பனைத் தடுத்தான்.

 அங்கிருந்த அனைவருமே நந்தனின் மீது கடுங்கோபத்தில் இருந்தனர்.

“டேய் விடுடா முதல்ல ! சாரி சார். அவ ஏதோ கோபத்துல இப்படி பண்ணிட்டான். நான் இவன் கூட இருக்கேன். வாடா முதல “ எனக் கூறி நண்பனை அங்கிருந்துச் அழைத்துச் சென்றான்.

ஹெச்.ஆர் தன் ஜர்க்கினை சரிப்படுத்த, “நம்ம எல்லாரோட பாஸ்ன்னு கூட நினைக்காம இப்படி பண்ணுறான். தப்பு பண்ணுனதும் இல்லாம கோபத்தை பாருங்களே “ என்று ரேஷ்மி அங்கிருந்தவர்களிடம் ஏற்றி விட்டாள்.

அவர்களுமே, “ஆமா ஆமா “ என்று தலையசைக்க, புன்னகை முகமாக நின்றிருந்தான் அவர்களின் ஹெச்.ஆர்.

அன்றையப் பொழுதுச் சென்று மறுநாள் அனைவரும் அங்கிருந்துக் கிளம்ப, அப்போது தான் அறையிலிருந்து வெளியே வந்த அஞ்சனாவைக் கண்டான்.

பார்த்ததுமே அவளிடம் பேசச் செல்ல துடிக்க, கரங்களை இறுக பற்றிய கேசவனோ, “இங்க வச்சி ஒன்னும் வேண்டாம். நம்ம ஆபிஸ்க்கு போய் பார்த்துக்கலாம் “ என்க, அவளுமே நிமிர்ந்து கூட நந்தனின் புறம் பார்க்கவில்லை.

அனைவரும் அவளிடம் நலம் விசாரிக்க அவளுமே பதிலுக்கு கூறினாலே தவிர, ஒரு விதமான இறுக்கமோடு இருந்தாள். தன்னை உதாசீனப்படுத்தும் பார்வையில் வெந்துப் போனா நந்தனுக்கு உள்ளமோ வாடியது.

தன்னை எப்படி இவளால் தவறாக நினைக்க முடிந்தது ? வேதனையில் புலம்ப, “டேய் ! வாடா எல்லாரும் ஏறிட்டாங்க ?” என்க, அவனும் ஏறினான்.

பின் ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்துச் சென்னை வந்து சேரும் வரை, அஞ்சனா நந்தனைக் காணவில்லை. அவள் நந்தனை மட்டுமா காணாமல் இருந்தால் அனைவரையும் தான் பார்க்கவில்லை. நந்தனுக்கு அவள் தன்னை மட்டும் தவிர்ப்பது போல் தெரிய வேதனைக் கொண்டான்.

இரு நாட்கள் சென்ற பின் தான் அஞ்சனா மறுபடியும் வழக்கம் போல் வேலைக்கு வர, அனைவரிடமும் சகஜமாக பேசி புன்னகையோடு வலம் வந்தாள்.

“என்ன அஞ்சனா ? நீ எதுவும் பண்ணலையா ? நந்தனை பத்தி போலீஸ்ல தான் கம்பிளைண்ட் பண்ணலை. ஆபிஸ்ல சொல்லலாம்ல “ என்க,

“எதுக்கு அவரோட வேலை தானே போகும். அதான் எனக்கு ஒன்னுமில்லைல “ என எளிதாக கூறி கடந்துச் சென்றாள். 

இந்த விசியம் ஹெச்.ஆர்க்கு சென்றடையவே, அவளாக எதுவும் செய்ய மாட்டாள் என்பது புரிந்து விட்டது. நந்தனின் பார்வை வேறு அஞ்சனாவிடம் வித்தியசமாக தென்பட, பிரித்தால் தானே தனக்கு நல்லது நடக்கும்.

தன்னிடம் இருந்த புகைப்படத்தை வைத்து மேலிடத்துக்கு கம்பிளைண்ட் மெயில் அனுப்பி விட, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவனுக்கு வேலையில் இருந்து நிறுத்துவதாக மெயில் வந்தது.

அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியும்படி அந்த மெயில் வரவே, “டேய், என்னடா இப்படி பண்ணிட்டாங்க ?” கேசவனோ அதிர்ந்துப் போய் கேட்டான்.

அஞ்சனாவின் அனுமதி இருந்தால் தானே இப்படி செய்திருக்க முடியும் ? அந்த நினைப்பே அவனை வேரோடு சரிக்க, மெயிலைக் கண்ட அஞ்சனாவோ அதிர்ந்தாள்.

தனக்கு தெரியாமல் இதனை யார் செய்தார் ? தன் அனுமதி இல்லாமல் இப்படி செய்தால் அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? 

ஆவேசமாய் எழுந்தவளோ நேராக நந்தனின் இடத்திற்குச் செல்ல, அவளின் செயலை தான் அனைவரும் கண்டனர். குறுகிப் போய் அமர்ந்திருந்தவனின் முன்னேச் சென்றவளோ, “நந்தன் “ என்றான்.

“என்னை நீ புரிஞ்சிக்கிடலைல அஞ்சனா ?” நிமிர்ந்து அவளின் முகத்தைக் கண்டு கேட்க, விழிகள் இரண்டும் சிவந்து, அவனின் முகமே மாறியிருக்க அஞ்சனாவிற்கு அவனை இப்படிக் காண முடியவில்லை.

“நான் புரிஞ்சிக்கிடலைன்னு நீங்க நினைக்கிறீங்களா நந்தன் “

“அப்போ ஏன் என் கிட்ட பேச மாட்டிக்கே ? இந்த மெயில் என்ன அர்த்தம் ? எல்லாரும் என்னை எப்படி பார்க்குறாங்கன்னு உனக்கு தெரியும் தானா ? அப்படி இருந்தும் நீ ஏன் அமைதியாவே இருக்கே அஞ்சனா ? எனக்கு இவங்க எல்லாரை விட நீ என்னை பார்க்காம, பேசாம இருந்தது தான் வருத்தமே “ என்க,

“என்ன நடக்குது இங்கே ? இது ஒன்னும் சத்தம் மார்க்கெட் இல்லை “ கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து நின்று அவர்களின் ஹெச்.ஆர் கேட்க, 

 “நீங்க தான் இந்த மெயில்லை போட்டீங்களா சார் ?”

“ஆமா நான் தான் பண்ணுனேன். என்னோட ஆபிஸ்ல வேலை பார்க்குற பொண்ணுக்கு ஆபத்து வந்தா நான் எப்படி சும்மா இருக்க முடியும் ?” என்க, ஏளனமாக சிரித்தாள்.

அவரைப் பற்றி தான் அஞ்சனாவிற்கு நன்கு தெரியுமே ?

“என்னாச்சு அஞ்சனா ? எதுக்கு இப்படி சிரிக்கிற ?”

“இங்க நீங்களும் வேலை தானே பார்க்குறீங்க சார். உங்க ஆபிஸ்ன்னு சொல்லுறீங்க ?” என்றதும், ஹெச்.ஆர் ரூமுக்கு அறுபட்ட உணர்வில் சினத்தை மறைத்துக் கொண்டு நின்றான்.

“அஞ்சனா பார்த்து பேசும்மா ? நான் உன்னோட ஹெச்.ஆர் “

“அதுனால என்னோட அனுமதி இல்லாம என்ன வேணாலும் பண்ணுவீங்களா ?” கத்தவே, அஞ்சனாவின் இந்த முகம் அங்கிருந்த அனைவருக்கும் புதிதாக இருந்தது.

அஞ்சனா தான் இவளா என்னும் படியாக நின்றிருக்க வியந்தனர்.

 தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Leave a comment


Comments


Related Post