இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 25-04-2024

Total Views: 20955

பெண் பார்க்க செல்கிறோம் என்று சொல்லி அபியின் வீட்டு முன்பு வண்டியை நிறுத்த எதுவும் புரியாமல் முழித்த ப்ரதீப்

“அப்பா… எதுக்கு இப்போ அபி வீட்டுக்கு வந்திருக்கோம்?” என்று கேட்க

“ம்ம் நீதானே நீ கட்டிக்கப் போற பொண்ணு அபிக்கும் பிடிக்கனும் னு முன்னாடி சொல்லிருந்த… அதான் அவளும் பொண்ணை பார்க்கனும் ல…” மோகன்ராம் சொல்ல

“ம்க்கும் எனக்கே மேரேஜ் ல இன்ட்ரஸ்ட் இல்ல இதுல அபியை வேற கூட்டிட்டு போகனுமா? சரிதான்…” மனதுக்குள் அலுத்துக் கொண்டான்.

“வாங்க அங்கிள் ஆன்டி ப்ரதீப்.. உள்ள வாங்க..‌” என்று அபிலாஷா அழைக்க

“வாங்க சார்.. ஏதோ பேசனும் னு சொல்லி கால் பண்ணி இருந்தீங்க.. நானே நேர்ல வந்திருப்பேனே சார்” என்று அபிநந்தன் சொல்ல

“இட்ஸ் ஓகே அபிநந்தன் இந்த விஷயத்துல நாங்க வந்து பேசுறது தான் முறை… ஆமா அம்மா அக்சயாவை எங்கப்பா?” என்று மோகன்ராம் கேட்க

“வீடு ஷிப்ட் பண்ணோமே… திங்க்ஸ் எல்லாம் அடுக்கிட்டு இருக்காங்க… நானும் நந்தனும் கூட அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தோம்.” என்று அபி சொல்ல அவர்களே வெளியே வந்தனர்.

“வாங்க உட்காருங்க… அச்சு வந்தவங்களுக்கு காஃபி போடு ம்மா..” என்று பார்வதி சொல்ல அக்சயா கிச்சன் சென்றாள்.

வந்து விட்டோம்… ஆனால் எப்படி பேச்சை துவங்க என்று மோகன்ராம் பத்மாவதி தயங்கி நிற்க ‘எதுக்கு இங்க வந்தோம் ஏன் இங்க உட்கார்ந்து இருக்கோம்’ என்று புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருந்தான் ப்ரதீப்.

“என்ன அங்கிள் ஏதோ பேசனும் னு சொல்லி எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க ஏதாவது முக்கியமான விஷயமா?” அபி கேட்க

“ஆங்… அப்படி கேளு அபி சும்மா இருந்தவனை பொண்ணு பார்க்க போகனும் அது இதுன்னு சொல்லி காலையிலயே கிளப்பி கூட்டி வந்து இங்க அமைதியா உட்க்கார்ந்து இருக்காங்க…” என்று ப்ரதீப் புலம்ப

“டேய் ப்ரதீப் ரொம்ப அவசரம் போல?” அபி நக்கல் செய்ய நந்தன் லேசாக சிரிக்க பெண் பார்க்க எதற்கு நம்ம வீட்டுக்கு வந்தாங்க என்று பார்வதி குழப்பமாக பார்க்க

“ஆமா எனக்கு அவசரம்… ரெண்டு வருஷம் போகட்டும் னு சொன்னா கேட்கவே மாட்டேங்குறாங்க அபி… இதுல நான் மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணை நீ பார்த்து ஓகே சொல்லனும் னு உன்னை கூப்பிட தான் இங்க வந்ததா என்கிட்ட சொன்னாங்க…” என்று ப்ரதீப் தனக்கு தெரிந்ததை விளக்க பார்வதி அப்போ சரி என்று நினைத்து கொண்டு இருக்க அக்சயா காஃபியோடு வந்தாள்.

“வாம்மா… உட்காரு..” என்று பத்மாவதி சொல்ல காஃபியை தந்து விட்டு பார்வதி அருகில் அமர

“அது வந்து… பேசணும் னு வந்திட்டோம் ஆனா எப்படி ஆரம்பிக்கிறது னு தெரியல…” என்று பத்மாவதி இழுக்க
 
“பரவாயில்ல சொல்லுங்க ம்மா.. ஏதாவது பிரச்சனையா என்ன?” பார்வதி கேட்க

“பிரச்சினை எதுவும் இல்லை பார்வதி… அக்சயாவை முதல் முறை பார்த்த அப்போவே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதோட இவரும் அக்சயா எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும் னு நினைக்குறாரு.. அதான் அதை பத்தி உங்ககிட்ட பேசி உங்க முடிவு என்னனு தெரிஞ்சுக்க தான் வந்தோம்.” ஒரு வழியாக வந்த நோக்கத்தை பத்மாவதி சொல்ல 

ப்ரதீப் அபிலாஷா ஆச்சரியமாக பார்க்க அபிநந்தன் பார்வதி திடிரென்று இப்படி கேட்டதில் என்ன சொல்ல என்று புரியாது குழப்பமாக பார்த்தனர்.

அக்சயா கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல விழிகளை உருட்ட யாருமறியாமல் அவளை விழிகளில் களவாடிக் கொண்டான் ப்ரதீப்.

“பார்வதி என்னாச்சு… எதாவது தப்பா எதுவும் கேட்டுட்டோமா? இவ்வளவு அமைதியா இருக்கீங்க…’ என்று பத்மாவதி மௌனத்தை கலைக்க

“ஐயோ அப்படி எதுவும் இல்லை ங்க” என்று பார்வதியும்

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம்” என்று அபிநந்தனும் சொல்ல ஒரே நேரத்தில் சொல்ல

“அது வந்து சடனா நீங்க இப்படி கேட்கவும் என்ன சொல்ல னு புரியல…” என்று அபிநந்தன் சொல்ல

“வாஸ்தவம் தான் அபிநந்தா… அபியும் நீயும் கல்யாணம் பண்ணிக்கும் முன்னவே அக்சயாவை எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும் னு நான் நினைச்சிருக்கேன். ஆனா படிக்குற பொண்ணு படிப்பு முடியட்டும் ப்ரதீப்பும் வெளிநாட்டுல இருந்து வரட்டும் னு யோசிச்சு அமைதியா இருந்தேன்.” என்று மோகன்ராம் சொல்லிக் கொண்டு இருக்க

“ஆனா இப்போ ரிசப்ஷன் ல உங்க ரிலேட்டிவ் அக்சயாவை பொண்ணு கேட்கனும்னு பேசிட்டு இருந்ததை கேட்டதும் இப்படி ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளாக வரது கை தவறி போய்ட கூடாது னு அவரு இப்போ அவசரமா எங்களை கூட்டிட்டு வந்திட்டாரு.” என்று பத்மாவதி மீதத்தை சொன்னார்.

தாயின் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்த அபிநந்தன் அப்படியே தன்னவளை பார்க்க அவளோ இதில் தனக்கு முழு சம்மதம் என்பது போல சிரித்த முகத்துடன் இருக்க ஒரு முடிவுக்கு வந்தவனாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.

“சார் நம்ம ரெண்டு ஃபேமிலிக்கு இடையே ஒருத்தரை பத்தி ஒருத்தர் அறிமுகம் செய்துக்க தேவையில்லை… ஆனா இந்த சமூகத்துல உங்க குடும்பத்தோட உயரம் வேற… நாங்க வேற…” என்று இழுக்க

“இப்போ அதெல்லாம் யாரு கேட்டா நந்தா.. எங்களுக்கு ஒரே பையன் அவனை நல்லா புரிஞ்சுட்டு வாழறதுக்கு தான் ஒரு பெண் தேவை… தகுதி அந்தஸ்து.. இதுல எங்க இருந்து வந்தது. அதுலயும் பார்வதி அம்மா அவங்க பிள்ளைகளை எப்படி வளர்த்திருப்பாங்க எங்களுக்கு தெரியுமே…” மோகன்ராம் சொல்ல

“ஆனா பொண்ணு படிப்பு இன்னும் முடியல..” பார்வதி தயக்கமாக சொல்ல

“அவ படிக்கட்டும் பார்வதி… நாங்க எப்போதும் அவளோட படிப்பு முன்னேற்றம் இது எதுலயும் தடையா இருக்க மாட்டோம். கண்டிப்பா அக்சயா எங்களுக்கு மருமகளா இல்ல மகளா தான் இருப்பா…” பத்மாவதி உறுதி தர

“அட நீங்களே பேசிட்டு இருந்தா… கல்யாணத்துக்கு முக்கியமானவங்க பொண்ணும் மாப்பிள்ளையும்… அவங்க விருப்பம் தெரியனுமே அவங்களை பேச விடுங்க…” என்று அபிலாஷா சொல்ல

“ம்ம்… அதெல்லாம் உன் ஃப்ரண்ட்க்கு இதுல விருப்பம் னு தெரிஞ்சு தான் இங்க வந்திருக்கோம் அபி மா…” என்று மோகன்ராம் சொல்ல தன் குட்டு உடைந்ததில் ப்ரதீப் நாக்கை கடித்து கொள்ள அக்சயா முதல் முறை தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் உயர்த்தி எதிரில் இருந்தவனை முழுதாக பார்த்தாள் அக்சயா.

“எங்க பையனுக்கு அக்சயாவை பிடிச்சிருக்கு னு தெரிஞ்சு தான் வந்தோம் பார்வதி அம்மா… அக்சயா கிட்ட நீங்க பேசுங்க உங்களுக்குள்ள பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க…” என்று மோகன்ராம் சொல்லி விட்டு கிளம்பலாமா? என்று பத்மாவதிக்கு கண்ணில் ஜாடை காட்ட

“இருங்க ஏதாவது சாப்பிட்டு போகலாம் சார்…” பார்வதி சொல்ல

“இல்ல பரவாயில்ல…” என்று எழப்போனவர்களை

“சார் ஒரு நிமிசம்…” என்று நிறுத்திய அபிநந்தன்

“அச்சு… இதுவரை அம்மாவும் நானும் உனக்கு நம்ம குடும்பத்துல என்ன நடக்குது எப்படி நீ நடந்துக்கனும் னு உனக்கு எடுத்து சொல்லி தான் வளர்த்தோம்… நீயும் வயசுல சின்ன பொண்ணா இருந்தாலும் எல்லாத்தையும் புரிஞ்சு பக்குவமா நடந்துக்குற பொண்ணு… வந்தவங்களை வைச்சிட்டே நான் கேட்குறேன்னு எதுவும் நினைச்சுக்காதே அச்சு.. உன் மனசுல என்ன இருக்குனு நீ தெளிவா சொல்லிட்டா அவங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்.” என்று அபிநந்தன் கேட்க

என்ன சொல்ல என்று சில நொடிகள் திருதிருவென விழித்தவள் “அண்ணா எனக்கு எப்பவும் நீங்களும் அம்மாவும் சொல்றது தான் என் முடிவு… ஆனா நான் படிக்கனும் என் படிப்பு கரியார் எதுக்கும் எந்த டிஸ்டர்ப் ம் வரக்கூடாது…” என்று சொல்ல

“அதுதான் நான் ஏற்கனவே சொல்லிட்டேனே அக்சயா… நீ எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் உனக்கு என்ன வேலை செய்ய தோணுதோ செய்யலாம்..” என்று சிறு சிரிப்போடு பத்மாவதி சொல்ல

“அம்மா அச்சு முடிவை அவ சொல்லிட்டா… நீங்களும் நந்தனும் என்ன சொல்றீங்க? ப்ரதீப் ரொம்ப நல்லவன்… அவனை பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல..” அபி சொல்ல

நந்தனை ஒரு முறை பார்த்த பார்வதி சம்மதமாக தலையசைக்க “எங்களுக்கும் சம்மதம் தான் சார்… ஆனா அச்சு செகண்ட் இயர் படிக்கிறா.. இந்த இயரோட லாஸ்ட் செமஸ்டர் நெருங்குது…” என்று அபிநந்தன் நிறுத்த

“அப்போ எக்ஸாம் முடிஞ்சு லீவ்ல கல்யாணத்தை வைச்சுக்கலாம்… அடுத்த வருஷம் அவ வழக்கம் போல காலேஜ் போகட்டும்..” என்று பத்மாவதி சொல்ல அனைவருமே சம்மதமாக தலையசைத்திட

“சரி அப்போ பேச்சு வார்த்தை முடிஞ்சது… சம்பந்தி வீட்டுக்காரங்க இப்போ கை நனைக்கலாம் ல?” அபி கேட்க

“கண்டிப்பா..‌ விருந்தே சாப்பிடலாம்” என்று மோகன்ராம் சொல்ல பெண்கள் மூவரும் எழுந்து கிச்சன் செல்ல நானும் வரேன் என்று பத்மாவதியும் உடன் சேர்ந்து கொண்டார்.

வழக்கமாக காஃபி போடுவது காய்கறி அரிவது என்று நிறுத்திக் கொள்ளும் அக்சயா “இன்னைக்கு நான் சமைக்கிறேன்..” என்று அவளே அடுப்பில் நின்று சமைக்க மெச்சும் படி பார்த்தார் பத்மாவதி.

சமையல் முடிந்து அக்சயா பார்வதி பரிமாற நந்தனையும் அபியையும் மோகன்ராம் பத்மாவதி ப்ரதீபோடு சேர்ந்து அமரச் சொல்லி பரிமாறினர்.

“என்னங்க.. இது எல்லாமே அக்சயா சமைச்சது தான். எனக்கு இப்பவே என் மருமகளை கையோடு வீட்டுக்கு கூட்டிட்டு போகனும் னு தோணுது…” என்று பத்மாவதி புகழாரம் சூட்ட

“என்ன ஆன்டி… உங்க பையன் இங்க பேசமாட்டேன் னு அவன் ஏற்கனவே உங்களுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வந்த மாதிரியே இருக்கே… என்ன மாப்பிள்ளை சார் நீங்க எதுவும் பேச மாட்டீங்களா?” என்று அபிலாஷா கேலி செய்ய அவளை ஆசையாக விழிகளில் தழுவினான் அபிநந்தன்.

தொடரும்…




Leave a comment


Comments


Related Post