இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே 2 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 26-04-2024

Total Views: 11842

இதயம் - 2

வாசுவின்  அலைபாய்ந்த கண்கள் ஆசையாக ஒருவளின் முதுகை பார்த்து வேகமாக அவளை நோக்கி நகர்ந்தான். வாசு அவள் அருகில் சென்று நிற்கவும் அவள் வாசுவை மேலும் கீழுமாக பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள். "குட் மார்னிங்" என்று வாசு உற்சாகமாக கூறி அவளை இடித்தவாறே அமர்ந்தான். அவளோ நொச் என்று சத்தமிட்டு வாசுவை முறைத்தாள். "எதுக்கு இப்போ இந்த கோவம்" என்று வாசு அவள் தோளை இடித்து கேட்க "காலையில எத்தனை மெசேஜ் எத்தனை போன் பன்னன் ஏன் எடுக்கல" என்று அஞ்சனா கோபமாக கேட்டாள். "நைட் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்ததால காலையில எழ முடியல ஜிம்க்கு கூட போகல" என்று வாசு சோகமாக கூறினான். "நைட் எங்க நீ ரொம்ப நேரம் பேசன ஜஸ்ட் டூ ஓ க்ளாக் வரைக்கும் தான் பேசன அதுக்கப்பறம் அப்படியே தூங்கிட்ட ... காலையில ஒரு சிக்ஸ்க்கு உன்னால எழ முடியலையா" என்று அஞ்சனா கேட்கவும் வாசு முகத்தை திருப்பிக் கொண்டு சிலிப்புடன் தலையை கோத அங்கிருந்த அவர்களின் மற்ற நண்பர்கள் கேலியாக சிரித்தனர். 

"என்ன மச்சான் ஜஸ்ட் டூ ஓ க்ளாக் வரைக்கும் தான் பேசனியா ... ம்ச் ... ஏன்டா இப்படி இருக்க என்னையும் கீர்த்தியையும் பாரு விடிய விடிய பேசறோம் இல்லையா செல்லம்" என்று வாசுவின் நண்பன் சித்தார்த் தன் காதலி கீர்த்தியை இடித்துக் கூற அவளோ சிரிப்புடன் "ஆமா ஆமா ... நைட் எல்லாம் என்னை தூங்கவே விட்றதில்லை" என்று கொட்டாவி விட்டது போல் நடித்து கூறினாள். ஆனால் சித்தார்த்திற்கு இலவச இணைப்பாக கீர்த்தியிடம் இருந்து தொடையில் கிள்ளு கிடைத்தது. சித்தார்த் வலியை பற்களுக்கு இடையில் மறைத்துக் கொண்டு வாசுவையும் அஞ்சனாவையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான். வாசு இருவரையும் தீயாய் முறைக்க இருவரும் அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர். வாசு அஞ்சனாவை சமாதானப்படுத்தும் நோக்கில் "சாரிம்மா ... நாளையில இருந்து கரெக்ட்டா நடந்துக்றன் ... இப்ப வேலைக்கு டைம் ஆகுது ப்ரேக்ல பாக்கலாம்" என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டான். அஞ்சனா வாசுவின் முதுகை முறைத்து விட்டு அங்கிருந்து எழுந்துச் சென்றான். 

கீர்த்தி சித்தார்த்தின் பின்னங்கழுத்தை பற்றி அவனை நிற்க வைத்து "நைட் ஒன்பது மணி ஆனதும் தூக்கம் வருதுன்னு மல்லாக்க படுத்து தூங்கிட்டு இங்க வந்து நைட் எல்லாம் தூங்காம பேசிட்டே இருக்கோம்ன்னு பிட்டா போட்ற" என்று சித்தார்த்தின் வயிற்றிலே ஒன்று வைத்தாள். சித்தார்த் கீர்த்தி அடித்த அடியில் "ஹப்ப்பா" என்று முனங்கி வயிற்றை பற்றிக் கொண்டு "செல்லமா செல்லமா நைட் எல்லாம் முழிச்சிருந்தா உடம்பு கெட்டு போய்டுமா அதனால தான் ... நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கனுன்னு தான் நா தூங்கிட்றன் ... அதும் இல்லாம கனவுல நம்ம டூயட்டே ஆடும் போது போன்ல பேசனா நல்லா இருக்காது இல்லை" என்று சித்தார்த் கூற கீர்த்தி "ஐஸ் ஐஸ் ... நல்லா ஐஸ் வைக்கிற" என்று கூறி அவன் மண்டையை பிடித்து ஆட்டி விட்டுச் சென்றாள். சித்தார்த் தன் தலையை கோதியவாறே தன் இடம் சென்றான். வாசு சித்தார்த் தலையை நீவிக் கொண்டு வரவும் "இன்னைக்கு கோட்டா கொஞ்சம் ஜாஸ்தியோ" என்று கிண்டலாக கேட்டான். 

"கொஞ்சம்" என்று சித்தார்த் தன் தலையை தேய்த்தவாறே கூற வாசு புன்னகையுடன் கணினியை நோக்கி திரும்பினான். வாசு கணினியை உயிர்பிக்கும் முன் அவன் முன் சூடான இட்லியும் சாம்பாரும் வந்தது. வாசு மனம் நிறைந்த புன்னகையுடன் "என் தேவைய புரிஞ்சிகிட்ட ஒரே ஆள் நீ தான்" என்று கூறி நிமிர்ந்தவனின் கண்களுக்குள் புன்னகை முகமாக அழகான பெண் ஒருத்தி நின்றிருந்தாள். தாமரை, உண்மை தான் அழகான தாமரை போல் தான் அவள் கண்கள் எப்பொழுதும் விரிந்து கிடக்கும் தாமரை போல் தான் அவளின் புன்னகை, இதழ் மேல் ஒட்டாத தண்ணீர் துளி போல் கரை படியாத குணம், வாசுவின் நண்பி, சித்தார்த், வாசு மற்றும் தாமரை மூவரும் ஒன்றாக படித்து ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். 

"போதும் மூடிகிட்டு தின்னு" என்று தாமரை சட்டென தன் புன்னகையை மறைத்து கோபமாக முறைத்தவாறு கூறவும் வாசு "ஒரே செகண்ட்ல அசிங்கப்படுத்திட்டியே" என்று பாவமாக கேட்டான். "டேய் சாப்பிட்டு வேலைய பார்ட்டா" என்று கூறிய தாமரை அங்கிருந்து நகர்ந்து விட்டாள். "எவ்வளவு அழகா மங்கலகரமா முன்னால அப்படியே மயக்கற புன்னகையோட வந்து நின்னா ... பொசுக்குன்னு கூவம் ஆத்துல என் இமேஜ்ஜ வீசற மாதிரி பேசிட்டு போய்ட்டா" என்று வாசு புலம்ப சித்தார்த் சிரித்தான். சித்தார்த்தின் சிரிப்பொலி கேட்டு தாமரை திரும்பி பார்க்க சித்தார்த் கப் சிப்பென்று வாயை மூடிக் கொண்டான். "அசிங்கப்பட்றதே உன் வேலையா போச்சி ... இல்லை மச்சி" என்று வாசு கேட்க சித்தார்த் தன் இரு கையையும் விரித்து தோளை குலுக்கினான். 

பரத் வீட்டில் இருந்து தன் அண்ணனிற்கு ஒரு பாக்ஸிலும் அவனுக்கு ஒரு பாக்ஸிலும் மதிய உணவை போட்டுக் கொண்டு பொறுமையாக ஒன்பது மணிக்கு கிளம்பினான். முதலில் வாசுவின் அலுவலகம் சென்றவன் கீழே ரிஷப்ஷனிஸ்ட்டிடம் உணவை கொடுத்து விட்டு "என்னங்க மேடம் இன்னைக்கு முகத்துல ஒரு கோட்டிங் கமியா இருக்கு" என்று கேட்டு அவளின் முறைப்பை பரிசாய் பெற்றுக் கொண்டு அவள் திட்டும் முன் "வேலைக்கு டைம் ஆச்சி நாளைக்கு திட்டிக்கோ பாய்" என்று காலில் சுடு நீர் பட்டது போல் அங்கிருந்து ஓடி விட்டான். அவளோ பரத் சென்ற பின் புன்னகைத்து விட்டு வாசுவிற்கு அழைத்து உணவு வந்திருப்பதாக கூறி அழைப்பை துண்டித்தாள். 

பரத் ஓர் உயர்ரக ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வருகிறான். பரத் தன் அறைக்குள் நுழைந்ததுமே அவன் கைப்பேசி சினுங்க அழைப்பை ஏற்றவன் "ஓகே சார் நா வரன்" என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு எழுந்து தன்னுடைய கோர்ட்டை அணிந்தவன் வேகமாக ஹோட்டலின் மீட்டிங் அறைக்குள் நுழைந்தான். அங்கு ஏற்கனவே நான்கு  வெளிநாட்டவர்கள் அமர்ந்திருந்தனர். பரத் உள்ளேச் சென்று ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்று அவர்கள் பருக ஜூஸை எடுத்து வரக் கூறி அதை அனைவரிடமும் பணிவுடன் கொடுத்தான். அதே நேரம் ஹோட்டலுக்கு வெளியில் ஒரு கருப்பு நிற கார் ஒன்று பளபளத்தவாறு மெதுவாக வந்து நின்றது. அதன் பின்னிருந்து ஹை ஹீல்ஸை தரையில் ஊன்றியவாறு ஒரு உருவம் இறங்கியது. 

ஐந்தரை அடி உயரமும் கொண்ட பேதை அவளின் பளிச்சென மிளிர்ந்த கார்குழல் ஒரு சிறிய கிளிப்பினுள் அடங்காமல் காற்றில் அங்கும் இங்கும் அசைந்தாடியது. வெயிலின் தாக்கத்தை இறங்கிய ஒரே விநாடியில் உணர்ந்து உடல் உஷ்ணம் ஆகியதோ என்னவோ அவளின் கண்கள் சுருங்கி புருவம் மூக்கின் மேல் வளைந்து தன் சங்கடத்தை தெரிவித்தது. லேசான ஒப்பனையும் மை தீட்டிய கூரிய கருவிழிக்கும் மூக்கிற்கும் கீழே லேசாக சாயம் பூசிய உதட்டை சுழித்தவளை அதற்கு மேல் சலிப்படைய விடாமல் பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்து இறங்கிய இரு கருப்பு நிற கோர்ட் சூட் அணிந்த உருவத்தில் ஒருவர் அவள் தலைக்கு மேலே குடையை விரித்தார். அவளும் சகஜமாக புன்னகைத்து விட்டு பின்னால் நின்றிருந்த அவளின் பிஏ கணேஷ்ஷை அழைத்து "பைல்ஸ் எல்லாம் கரூக்ட்டா இருக்கு இல்லை" என்று கேட்டாள். "எல்லாம் கரெக்ட்டா எடுத்துட்டு வந்துட்டன் மேடம்" என்று பவ்வியமாக கூறிய கணேஷை பெருமிதத்துடன் பார்த்தவள் "லெட்ஸ் கோ" என்று புத்துணர்வுடன் கூறவும் கணேஷ் அவள் பின் சென்றான். 'டொக் டொக்' என்று அவளின் கம்பீர நடையால் சத்தமிட்ட ஹீல்ஸின் சத்தத்தை கேட்டதும் அந்த ஹோட்டலில் இருந்த அனைத்து பணியாளர்களும் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க அவளும் புன்னகையுடன் அனைத்தையும் தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டு வேகமாக மீட்டிங் அறைக்குள் நுழைந்தாள். 

இரு காவலர்களும் ஆளுக்கொரு கதவு வாயிலில் நின்றுக் கொள்ள கணேஷ்ஷும் அவளும் மட்டும் உள்ளே நுழைந்தனர். உள்ளே அமர்ந்திருந்தவர்களிடம் பொதுவான வணக்கம் வைத்தவள் தன் இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பயமில்லாத கம்பீரமான பெண் சிங்கம் போல் காட்சியளித்தாள். பரத் அவளை புதியதாய் பார்ப்பது போல் வாயை பிளந்துக் கொண்டு அவளின் தைரியத்தையும் கம்பீரத்தையும் தெளிவையும் அறிவையும் புதியதாய் கண்டு வியப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

யாழிசை, இப்பொழுது பரத் வேலை செய்துக் கொண்டிருக்கும் 'இசை ஸ்டார்' ஹோட்டலுக்கும் இன்னும் பல சிட்டிகளில் உயர்ந்து நின்றிருக்கும் ஹோட்டல்கலுக்கும் சொந்தக்காரி. சிறு வயதிலே தாய், தந்தை, தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, அக்கா,தம்பி என்று ஒரு பெரிய உலகத்தையே இழந்தவள். யாழிசையும் அவளின் அண்ணன் அவினாஷ்ஷும் தான் அந்த கோர சம்பவத்தில் இருந்து மீண்டவர்கள்.

 முதன் முதலாக பரத் இந்த உணவகத்திற்கு வேலைக்கு நுழைந்த போது ஹோட்டலையும் அதன் வடிவமைப்புக்களையும் பார்த்து முதலில் பிரமித்து போனான். ஏதோ ஓர் கண்ணாடி உலகத்திற்குள் நுழைந்தது போல் நினைத்து பூரித்து போனான். வாசல் முதல் உள்ளே இருக்கும் ஸ்டோர் ரூம் வரை அனைத்துமே சுத்தமாக ஒரு தூசி கூட அல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டு அழகாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு அங்கு வேலை செய்யும் அனைவருமே தலைக்கனம் உள்ளவர்களாகவும் அல்லாமல் தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களாகவும் அல்லாமல் எல்லா சூழ்நிலையையும் கையாளும் பொறுமையான அதே சமயம் திறமை நிறைந்த புத்திசாலியாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இத்தனை அம்சத்தையும் வைத்துத் தான் ஒரு வேலையாளை தேர்ந்தெடுக்கப்படுவது எவ்வளவு பெரிய ப்ராசஸ்ஸாக இருக்கும் . அத்தோடு அதை பொறுமையாக கண்டறியும் முதலாளியின் மனம் எவ்வளவு பொறுமை நிறைந்த மனமாகவும் குணமாகவும் இருக்கும் என்பதை நினைத்து தான் பரத் இன்னும் இன்னும் வியந்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது ஹோட்டலுக்குள் நுழைந்த யாழிசையை பார்த்ததும் பணியாளர்கள் வணக்கம் வைக்க பரத் "வணக்கம் மேடம்" என்று கைகூப்பி வணக்கம் வைத்தான். அனைவரையும் ஒரு நொடி பார்த்து விட்டு நகர்ந்துவிடும் அவளின் கண்கள் பரத்தின் செய்கையால் நிலைகுத்தி அவன் மேல் ஒரு நிமிடம் விழுந்தது. கால்கள் முன்னே நடக்க தலையும் முன்னோக்கி இருக்க பார்வை மட்டும் பரத்தை பார்த்தவாறே முன்னேறினாள்  யாழிசை. அவளது அறைக்குள் நுழைந்து அமர்ந்ததும் காவலர்களில் ஒருவன் வந்து பரத்தை உள்ளே மேடம் அழைப்பதாக கூறவும் பரத்தும் உள்ளே சென்றான். "உட்காருங்க மிஸ்டர் பரத்" என்று யாழிசை கூறவும் பரத் "தாங்க்ஸ் மேடம்" என்று புன்னகையுடன் கூறி இருக்கையில் அமர்ந்தான். "நீங்க இந்த வேலைக்கு புதுசுன்றதால ஒரு வாரத்துக்கு உங்க கூட பழைய மேனேஜர் இருப்பாரு ... அவர் செய்றத நல்ல அப்சார்ப் பன்னிக்கோங்க ... நீங்க தனியா டேக் ஓவர் பன்னதும் ஸ்ட்ரக்கல் பன்னாம வேலை செய்ய ஈஸியா இருக்கும் ... அன்ட் ... உங்களுக்கு தனிப்பட்ட , ஐ மீன்,  ஹோட்டல பத்தி எதாவது தனிப்பட்ட கருத்தோ கம்ப்ளைண்ட்டோ இருந்தா தாராளமா என் கிட்ட ஓப்பனா சொல்லலாம் ... உங்களுக்கு எதாவது கேள்வி இருந்தா கேளுங்க" என்று பரத் பேசுவதற்காக யாழிசை அவகாசம் கொடுத்தாள். 

"எனக்கு கேள்வி எல்லாம் எதும் இல்லைங்க மேடம் ... ஒரு ஒரு ரெக்வஸ்ட் தான்" என்று பரத் கூறி என்ன என்ற கேள்வியை யாழிசையிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்க யாழிசையும் என்ன என்று கேட்டதும் பரத் "நீங்க வரும் போதெல்லாம் நா என் கையால உங்களுக்கு காபி கொடுக்கனும்" என்று கூற யாழிசையும் கணேஷ்ஷும் அதிர்ந்தனர். இருந்தும் யாழிசை அனுமதிக்காமல் பேச கூடாது என்பது கணேஷ்க்கு யாழிசை விகித்த விதி என்பதால் அமைதியாக அவள் முகம் பார்த்தான்.யாழிசை நொடியில் தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு "அதெல்லாம் என் பிஏ பாத்துப்பாரு நீங்க சிரமப்பட வேணா" என்று கூறி விட பரத்தும் யாழிசையின் தயக்கத்தையும் அவளின் வேண்டாம் என்ற மறைமுக பதிலையும் புரிந்துக் கொண்டு "ஓகே மேடம்" என்று கூறி பணிவுடன் அவளை தன் காபிக்கு திணிக்காமல் வெளியில் வந்து விட்டான். ஆனால் யாழிசை அவனின் குணத்தை அந்த நொடியிலே புரிந்துக் கொண்டு புன்னகைத்தாள். 


Leave a comment


Comments


Related Post