இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 7) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 26-04-2024

Total Views: 20219

உனக்கென்றே உயிர் கொண்டேன் 7

இரு வீட்டாருக்கும் என்பதைவிட பூர்விக்கும், அஸ்வினுக்கும் பிடித்திருக்கிறது என்பதாலேயே பெண் பார்க்கும் படலம் அடுத்தக்கட்ட நகர்விற்கு சென்றது.

சண்முகம் "நிச்சயத்துக்கு நாள் பார்க்கலாமா சம்மந்தி?" என்று கேட்டிட...

பூர்வியின் முகம் பார்த்த தேவராஜ். மகளின் கண்களில் ஒளிர்ந்த பூரிப்பில்...

"மூத்த தலைமுறை நீங்க பெயர் சொல்லியே கூப்பிடுங்க மாமா" என்ற தேவராஜ், "மாமா சொல்லலாங்களா?" என்று கேட்டிட...

"உறவுக்குள்ள கேள்வி எதுக்குப்பா?" என்று தன் சம்மதத்தை மறைமுகமாக வழங்கினார்.

"லட்சுமி." தேவராஜ் மனைவியை அழைத்திட அவர் புரிந்தது எனும் விதமாக நாட்காட்டியை கொண்டு வந்து கொடுத்தார்.

"ஜாதகம் பார்க்கலையா?" தெய்வானை கேட்டிட... 

"ஆமாம்டா... ஜாதகம் பார்க்காம எப்படி? பார்த்தாதானே ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கா இல்லையா தெரியும்?" என்று அகிலாண்டம் நீட்டி முழக்கினார்.

"ஜாதகம் பார்த்து கட்டிவச்சா மட்டும் ஆச்சா? வாழ்க்கை நல்லாயிருந்திடுமா? உங்க பொண்ணை பக்கத்துல வச்சிக்கிட்டு இந்தப்பேச்சு தேவையா?" மணி கேட்டதில் தாய், மகள் இருவரும் கப்பென்று வாயினை மூடிக்கொண்டனர்.

"நீங்க பாருங்க மச்சான். தேவையில்லாமல் குட்டைய குழப்ப நினைப்பவங்க என்னத்தையும் சொல்லுவாங்க" என்று தேவராஜின் கையிலிருந்த நாட்காட்டியை வாங்கி தானே நாள் பார்த்தார் மணி.

"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மாமா. இதைப்பற்றி உங்கக்கிட்ட பேசியாகணும்" என்று தேவராஜ் சங்கடமாகத் தெரிவிக்க...

"தமிழ் என்கிட்ட சொல்லிட்டார். எனக்கு பூர்வியும் அவளைச் சார்ந்தவங்க மட்டும் போதும்" என்றான் அஸ்வின்.

அவனது பேச்சில் தெய்வானைக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"பார்த்தியாம்மா உன் பேரனை... பொண்ணு பார்த்து முடிவாவதற்கு முன்பே என் கதையை சொல்லியாச்சு. இனி அவன் எங்கிருந்து என்னை மதிப்பான்" என்று அகிலாண்டத்தின் காதில் புலம்பிய தெய்வானை, "எம் பொண்ணை கட்டட்டும். அப்புறம் வச்சிக்கிறேன் அவனுக்கு கச்சேரியை" என்று கருவினார்.

"அடக்கி பேசுடி. யாருக்கும் கேட்கப்போவுது" என்ற அகிலாண்டம் முயன்று சிரித்து வைத்தார்.

என்னயிருந்தாலும் பூர்வியும் அவரது பேத்தியாயிற்றே. அவளுக்கு நல்லது நடக்கும் இடத்தில் தன்னால் எவ்வித தடங்கலும் உண்டாகக்கூடாது என நினைத்து அமைதியாக இருந்தார்.

"மூணு மாசத்துல ஒரு நாள் வருது. ரொம்ப அமோகமா இருக்கு. அதுக்கு நடுவுல நாளிருந்தாலும், அந்த நாள் சிறப்பு" என்றார் மணி.

சண்முகமும் வாங்கி பார்த்துவிட்டு...

"அப்போ கல்யாணம், நிச்சயம் ரெண்டும் ஒட்டுக்கா வச்சிக்கிடலாம் தேவராஜ். நீங்க என்ன சொல்றீங்க?" எனக் கேட்டார்.

"பெரியவங்களுக்கு சரின்னா எனக்கு சம்மதம்" என்றவர் தனத்திடம் பார்வையால் அனுமதி கேட்க தவறவில்லை.

அகிலாண்டத்திற்கும், தெய்வானைக்கும் பொடுபொடுவென வந்தது.

தங்களை ஒரு ஆளாக மதித்துக்கூட ஒன்றும் கேட்கவில்லையே என.

தனம் பூர்வியை தனியாக அழைத்துச்சென்று அந்த நாள் சரிவருமா என்று கேட்டு, ஒப்புதல் அளித்தார்.

"அப்போ நீங்க எல்லாம் ஒருமுறை நம்ம வீட்டுக்கு வாங்க. மத்ததை முறைப்படி பேசிப்போம்" என்று சண்முகம் எழுந்து நிற்க...

அவர்களை தேவராஜ் தன் குடும்பத்தோடு வழியனுப்பி வைத்திட வெளிவாயில் வந்தனர்.

பூர்வியை பார்த்து மெல்ல தலையசைத்த அஸ்வின், 

"மொபைல் நெம்பர் வேணுமே தமிழ்?" என தன்னுடன் வெளியில் வந்தவனிடம் கேட்டிருந்தான்.

தமிழ் எண்ணை சொல்லிட...

"நான் உங்களோடது கேட்டேன்" என்றான்.

"வழக்கமா இதுமாதிரி நேரத்தில் பொண்ணு நெம்பர் தானே கேட்கணும்." தமிழ் சிரித்திட...

"அல்ரெடி வாங்கியாச்சு" என்று ஒற்றை கண்ணடித்தான் அஸ்வின்.

தமிழ் தன்னுடைய எண்ணைக் கூற,

தன்னுடைய அலைப்பேசியில் தட்டச்சு செய்த அஸ்வின்...

"ரிங் கொடுக்கிறேன். சேவ் பண்ணிக்கோங்க" என்றான்.

"ம்ம்ம்" என்ற தமிழின் அலைப்பேசி அஸ்வினின் அழைப்பால் அதிர்ந்து ஒலித்தது.

ஒலித்த பாடல் அஸ்வினின் புருவத்தை சுருங்கச் செய்தது.

"என்னாச்சு?"

"நத்திங்... ரிங்க்டோன் கேட்டு ஷாக்" என்றான் அஸ்வின்.

இருக்கத்தானே செய்யும். தமிழ், மொழி இருவருடைய அலைப்பேசி ஒலியும் ஒன்று. அத்தனை எளிதில் யாரும் அந்த பாடலில் ஹை டெசிபெல்'லில் ஒலிக்கும் இந்த வரிகளை ரிங்க்டோனாக வைத்திட மாட்டார்கள்.

"உன் பெயர் வருதுன்னு இந்த பாட்டு வச்சு... உனக்கு ஒவ்வொரு முறை கால் வரும்போது தெறிக்க விடுற அம்மு" என்று அஸ்வின் பலமுறை தங்கையை கிண்டல் செய்திருக்கிறான். 

இப்போது தமிழும் அதையே வைத்திருக்க...

அவ்வரிகளில் அவனது பெயரும் வருவதால் வைத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டான்.

"சேன்ஜ் பண்ணிடாதீங்க" என்ற அஸ்வின் சிரிப்பினை அடக்குவது தமிழுக்கு தெரிந்தது.

"சிரிப்பு வந்தால் சிரிக்கணும். இப்படி கண்ட்ரோல் பண்ணக்கூடாது" என்ற தமிழ்... "வெளியில் போனால் மொபைல் வைப்ரேட் மோட் தான். வீட்டில் ஃப்ரியா இருக்கும்போது தான் நார்மல் மோட்" என்றான்.

"ம்ம்... ம்ம்ம்" என்ற அஸ்வின், "ஒரே நாளில் ரொம்ப நெருங்கிட்டோம் நினைக்கிறேன். இந்த பார்மல் பேச்சு வேணுமா?" எனக் கேட்டான்.

"நானும் அதான் தின்க் பண்ணேன். போகப்போக மாத்திக்கலாம் இருந்தேன்" என்றான் தமிழ்.

வாயிலில் நின்றபடியே தமிழும், அஸ்வினும் சிரித்து பேசியபடி இருப்பதை அனைவருமே சிறு புன்னகையோடு பார்த்தனர்.

"ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கமா இருக்குமோ?" மணி கேட்டிட...

"சான்ஸ் இல்லையே" என்றான் உடன் வந்திருந்த அஸ்வினின் நண்பன் விக்கி.

"மாமன் மச்சான் உறவாகப் போறவங்க... நெருக்கமா இருந்தால் நல்லது தானே" என்றார் சண்முகம். மகனின் மனம் தெரிந்திருந்த தேவராஜ் வேகமாக ஆமோதித்தார்.

"நீங்க பூர்விக்கு ஹஸ்பெண்ட் ஆகப்போறீங்க. நமக்குள்ள ஃபோர் இயர்ஸ் டிப்ரெண்ட். நான் மாமா கூப்பிடுறேன். ஓகே?" எனக் கேட்ட தமிழை, "நானும் இந்த ங்க எடுத்திடுறேன்" என்று அணைத்து விடுத்தான் அஸ்வின்.

"தமிழு..."

தேவராஜ் தான் அழைத்து இருவரின் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

"அவுங்க கிளம்பி நேரத்தில் வீடு போய் சேர வேண்டாமா?" எனக் கேட்டார்.

"இட்ஸ் ஓகே மாமா. எனக்கு தமிழை ரொம்ப பிடித்திருக்கு. அதான் பேசிட்டே நின்னுட்டேன்" என்ற அஸ்வினை,

"விட்டால் விடிய விடிய பேசுவ போலடா" என்று கேலி செய்தான் விக்கி.

"அதான் போன் இருக்கே. பேசிப்பாங்க" என்றார் சண்முகம்.

சிரிப்புடன் அவர்கள் கிளம்பி சென்றிட...

"என்ன தமிழு சட்டுன்னு ஒட்டிகிட்ட. புது ஆளுங்ககிட்ட பேசவே ரெண்டு நாளாகுமே உனக்கு?" என்று மகனிடம் கேட்ட தனம்,

"என்னால நம்ப முடியலங்க" என்றார் கணவரிடம்.

தேவராஜ் மகனை பார்த்து அர்த்தமாக புன்னகைக்க...

"பூர்விக்கு ஹஸ்பெண்ட் ஆகப்போறாங்கம்மா. பேச வேண்டாமா?" எனக் கேட்டவன் ஓடிவிட்டான்.

"நான் இப்படியே கிளம்புறேன் மச்சான்" என்று மணி சொல்லிட...

"உள்ள வந்து சாப்பிட்டு போ'ண்ணா" என்றார் தனம்.

எவ்வளவு வற்புறுத்தினாலும் மணி இங்கு சாப்பிட மாட்டார் என்பதால்,

"அத்தை தனியா இருப்பாங்களே தனம். மாப்பிள்ளை போகட்டும்" என்றார் தேவராஜ்.

"நீ உன் தங்கச்சி வீடா மட்டும் பாரேன் அண்ணா!" தனத்தின் குரலில் தழுதழுப்பு.

"முடியல தனம்" என்றவர் வாசலோடு சென்றுவிட்டார்.

தேவராஜ்ஜிற்கு தெய்வானை மீது கோபம் இருப்பினும் அதனை காட்டும் வழிவகை தெரியவில்லை.

பேசாமல் இருந்தாயிற்று. முகம் பார்ப்பதை நிறுத்தியாயிற்று. இதைவிட ஒரு மனிதன் தன் ஒதுக்கத்தை வேறெப்படி காட்டுவது. புரிந்தும் சட்டமாக வீட்டில் அமர்ந்திருப்பவரை அடித்தா விரட்டிட முடியும்? ஆணாக இருந்திருந்தால் அதையும் செய்திருப்பாரோ என்னவோ? 

இதில் மணி போன்ற நல்ல மனிதனின் வாழ்வு கெட தானும் ஒருவகையில் காரணமோ என்கிற குற்றவுணர்வு தேவராஜ்ஜிற்கு. அதனை நீக்கும் மார்க்கம் தான் அவருக்கு தெரியவில்லை.

"சுணங்கி உட்கார இது என்ன புது கதையா? மாப்பிள்ளை வீட்டுக்கு என்னைக்கு போகலாம் பாருங்க." 

தன் அண்ணன் தன்னைப்போல் ஒரு சிறப்பான வாழ்வு வாழவில்லையே என்ற வருத்தம் இருப்பினும்... அதுகுறித்து தன்னுடைய கணவர் முகத்தில் கவலையை கண்டதும் தனது சோகம் மறைத்து கணவரை தேற்றி உள்ளே அழைத்துச் சென்றார் தனம்.

இருவரும் வீட்டிற்குள் செல்ல, தமிழ் வெளியே செல்ல கிளம்பி வந்தான். கீழிறங்கி வரும்போது, தமக்கையின் அறையை எட்டி பார்த்தான்.

பூர்வி முகத்தில் புன்னகையுடன், கண்ணாடி முன்பு அமர்ந்திருக்க மெல்லிய சிரிப்புடன் கீழிறங்கினான்.

"எங்க தமிழு கிளம்பிட்ட?"

"எஸ்டேட் வரை போயிட்டு வரேன் ம்மா. கர்நாடகாவுக்கு லோட் அனுப்பனும். சரக்கு ஏத்திட்டாங்களா செக் பண்ணனும்" என்றவன் உணவு உண்ண அமர்ந்தான்.

அவனின் அலைப்பேசி ஒலித்தது.

"சாப்பிடும் போதாவது அதை அமுத்தி வைடா" என்ற தனம், "முதலில் சாப்பிடு" என்று அலைப்பேசியை பிடுங்கிட...

"முக்கியமான கால்'ம்மா. பேசிடறனே!" என்று கண்கள் சுருக்கி கேட்டவனாக எழுந்து சென்றிட...

"இங்க உட்கார்ந்தே பேசலாம்ல" என்றார்.

திரும்பி சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை.

"எக்ஸாம் எப்படி பண்ண?" நேரத்தை பார்த்தவன், "இப்போ தானே டைம் க்ளோஸ் ஆகியிருக்கும். ஹாஸ்டல் போயிட்டியா?" எனக் கேட்டான்.

"சொல்ல முடியாது?" உர்ரென்று வந்தது பதில்.

"கோபமா இருக்கியா?" கேட்டவனுக்கு குட்டியாக சிரிப்பு வந்தது.

"உங்ககிட்ட ஒருத்தவங்க பேசணுமாம்?"

"யாரு?"

வெண்பா தமிழின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அவள் சொல்லிய நபர் பேசினார்.

"ஹலோ..."

.... தமிழ் கேட்ட பெண்ணின் குரல் யாருடையதென்று யூகிக்க முயன்றான். முடியவில்லை.

"ஹ்ம்ம்."

"தமிழ் நான் மனிஷா!"

"எந்த மனிஷா?"

தமிழ் அப்படி பட்டென்று தெரியவில்லையென்ற பொருளில் தன்னை கேட்பானென்று மனிஷா நினைக்கவில்லை.

ஓரளவாவது, தான் அவனின் நினைவிலிருப்போம் என்றே எதிர்பார்த்திருந்தாள்.

தமிழ் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் போது... மனிஷா முதுகலை முதலாம் ஆண்டில் அங்கு சேர்ந்திருந்தாள். ஒருவருடம் உடன் பயின்றிருக்கிறாள். தமிழுடன் அதிகம் பேசவில்லை என்றாலும், அப்போது முதுகலையில் அவள் மட்டுமே பெண் மாணவி. அந்த வகையிலாவது தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாது, தமிழ் தன்னுடைய படிப்பின் இறுதித் தேர்வினை முடித்த அன்று அவனிடம் தன் காதலை சொல்லியிருந்தாள். அப்படியாவது நினைவிருப்போம் என எண்ணியிருந்தாள்.

ஆனால் அவனோ அவளது பெயரே தெரியாதென்றல்லவா தன் பேச்சில் காட்டியிருந்தான்.

மனிஷாவின் முகம் சட்டென்று சுருங்கியது.

"என்ன?"

வெண்பா மனிஷாவிடம் கேட்பது தமிழுக்கும் கேட்டது.

"அம் ரியலி சாரி. எனக்கு நினைவில்லை." தமிழ் தன்மையாகவேக் கூறினான்.

"பிஜி... உங்க ஜூனியர்" என்றாள். அவள் தன் பெயரை சொல்லியபோது இருந்த உற்சாகம் இப்போது அவளது குரலில் இல்லை. ஆனால் தமிழ் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

"ஒன் இயரா உங்க பதிலுக்காகக் காத்திருக்கிறேன்" என்றாள் அவள்.

"என்ன பதில்?" கேட்டவனுக்கு அவள் தான் காதலை சொல்லிய கணத்தை நினைவுபடுத்திட...

"அப்போவே நாட் இண்ட்ரெஸ்ட்டட் சொல்லிட்டனே." நெற்றியை தேய்த்துக்கொண்டான்.

வெண்பாவின் மீதுதான் கோபம் வந்தது.

"ஓ..." என்ற மனிஷா, "சான்ஸ் இல்லையா?" எனக் கேட்டாள்.

"சுத்தமா கிடையாது" என்ற தமிழிடம்...

"உங்களுக்காக ஒன் இயரா வெயிட் பன்றேன் தமிழ்" என்றாள்.

"நான் வெயிட் பண்ண சொல்லலையே" என்றவன், "லிசன், இதுவே கடைசியா இருக்கட்டும். என்கிட்ட பேச முயற்சிப்பது" என்றான்.

"ம்ம்ம்" என்ற மனிஷா, "எனக்கு நெக்ஸ்ட் மன்த் மேரேஜ். உங்க மைண்டில் சின்னதாவது என்மீது ஏதும் இருக்குமோன்னு நினைத்து தான் பேச ட்ரை பண்ணேன். பர்ஸ்ட் க்ரஷ்... சின்ன எதிர்பார்ப்பு. அவ்வளவு தான்" என்றாள்.

கேட்டிருந்த தமிழுக்கு சிரிப்பதா, கோபம் கொள்வதா என்றே தெரியவில்லை. இப்போது அவன் ஆமென்றாள் அவள் ஏற்பாடு செய்த கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்து விடுவாளாமா? அருகிலிருந்த மரத்தில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

"நீயே க்ரஷ் சொல்லிட்ட... அப்புறம் என்ன?" என்ற தமிழ், "ஹேப்பி மேரிட் லைஃப்" என்றிட, "தேன்க்ஸ்" என்றவள் வெண்பாவிடம் அலைப்பேசியை கொடுத்துவிட்டு சென்றாள்.

காதில் அலைபேசியை வைத்து செல்லும் அவளையே பார்த்த வெண்பா தமிழின் குரலில் சுயம் பெற்றாள்.

"ஹேய் லூசு... யார் என்கிட்ட பேசணும் சொல்லி கேட்டாலும், எனக்கு போன் போட்டு நீட்டிடுவியா?" சற்று கோபமாகத்தான் கேட்டிருந்தான்.

அவன் அவளுக்காக உருகிக்கொண்டிருக்க, அவளோ சர்வ சாதாரணமாக காதலே இல்லாத ஒருத்தியை தன்னிடம் பேச வைக்கின்றாளே என்ற கோபம். அப்போ அவளுக்கு தான் ஒன்றுமில்லையா என்கிற ஆதங்கம்.

அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப்போகிறது... மனிஷா தமிழின் எண்ணைக் கேட்டு செய்த தொல்லையை. 

'அவங்க என்னோட தமிழ்.' மனிஷாவிடம் சத்தம் போட்டு சொல்ல முடியாது உள்ளுக்குள் வெண்பா கொண்ட கோபம் அவனுக்கு எப்படித் தெரியும்.

"நெம்பர் கொடுத்தால் சீனியர் திட்டுவாங்கக்கா" என்று வெண்பா பலமுறை எஸ்கேப் ஆகியிருக்க...

இன்று நீயே அழைத்து கொடு என்று நிலையாக நின்றிட... வெண்பாவுக்கும் வேறு வழியில்லாது போனது. அதுவும் அவள் எப்போதோ சொல்லிய காதலுக்கு இப்போது பதில் கேட்கிறாளே என்றதோடு கல்யாணம் செய்துகொள்ள ஒருவனுடன் நிச்சயம் முடித்த பிறகு என்ற கோபத்தில் தான் தமிழ் அழைப்பை ஏற்றதும் வெண்பா சிறு கோபம் கொண்டு பேசியது.

வெண்பா அவனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அமைதியாக இருக்க...

"இப்படித்தான் யார் கேட்டாலும் என்னைத் தூக்கி கொடுத்திடுவியா?" கோபத்தில் என்ன கேட்கிறோம் என்று தெரியாமல் மனதில் பொத்தி வைத்திருக்கும் காதலின் சுவட்டை கொஞ்சமே கொஞ்சம் காட்டியிருந்தான்.

தமிழ் சொல்லிய வார்த்தைகளின் பொருள் புரிந்தவளுக்கு விழிகள் விரிந்து கொண்டது. இதயத்தில் இன்பமாய் மென் சாரல் வீசியது போல் உணர்ந்தாள். 

அடுத்து அவன் சாதாரணமாக பேசியதில் தான்... அவன் சொன்னதன் பொருளை அவனே விளங்கிக்கொள்ளவில்லை என்பதை புரிந்துகொண்டாள்.

'உங்க மனசு என்னை விரும்பறது உங்களுக்கு தெரியுமா தமிழ்?' கண்களை மூடி அக்கணத்தை உள்வாங்கினாள்.

"டைம் ஆகுது. ஹாஸ்டல் போயிட்டு, பர்ஸ்ட் சாப்பிடு" என்றான்.

....

"பேசமாட்டியா?"

"நான் என்ன பண்ணட்டும் சீனியர். நீங்க இங்க ஆளே இல்லாமலே, இன்னும் நிறைய பொண்ணுங்களுக்கு உங்க மேலிருந்த க்ரஷ் போகவே இல்லை. நான் உங்க ரிலேடிவ்ன்னு என்னை டார்ச்சர் பண்ணுதுங்க. உங்க நெம்பர் கேட்டு. எவ்ளோ தான் அவாய்ட் பண்றது. நீங்க கான்வகேஷனுக்கு வந்துட்டு போனதிலிருந்து இந்த அக்கா  டார்ச்சர் தான் ரொம்ப பெருசா இருந்தது. எப்படியும் திட்டுவீங்க தெரியும். திட்டு வாங்கிட்டால் தொல்லை பண்ணமாட்டங்க நினைத்தேன். அப்பவும் உங்க நெம்பர் கொடுக்காமல் இருக்கத்தான் நானே கால் பண்ணி கொடுத்தேன். உங்களை நிறைய பொண்ணுங்ககிட்ட இருந்து சேவ் பண்ணியிருக்கேன். அதுக்கு நீங்க எனக்கு தேன்க்ஸ் சொல்லணும். அதைவிட்டு கோபமா பேசறீங்க. போங்க உங்ககிட்ட பேசவே மாட்டேன்" என்று மூச்சு வாங்கிட பேசியவள், அழைப்பை துண்டித்திருந்தாள்.

"மேடம் என்னை பொண்ணுங்ககிட்டேர்ந்து சேவ் பன்றீங்களா? ஏன்னு யோசிச்சிருக்கியா மொழி?" அவளுக்கு தான் கேட்பது கேட்கவே செய்யாது என்று தெரிந்தும் காதல் கிறுக்கனாக வினவினான்.

"மொழிக்கு தமிழ் மேல கோபமெல்லாம் வருதே!" நாக்கை துருத்தி சிரிக்கும் எமோஜியுடன் மெசேஜ் அனுப்பி வைத்தவன், "முதலில் தண்ணியை குடி" என்று அடுத்ததாக அனுப்பியிருந்தான்.

"போயா!" என்று முறைக்கும் பொம்மையுடன் அனுப்பியவள்,

"நான் கோபமா இருக்கேன்" என்றிருந்தாள்.

உள்ளே தனம் கூப்பிடும் விளிப்பில்,

"இருந்துக்கோ... ரைட்ஸ் இருக்கே!" என்று அனுப்பியவன், அலைப்பேசியை சட்டை பையில் போட்டவனாக உள்ளே சென்றான். இதழோரம் சிறு புன்னகை பூத்தது.

'உங்க குட்டி ஸ்மைல் நல்லாயிருக்கு சீனியர்.' அடிக்கடி அவனின் மொழி சொல்வது. பிடரியை அழுந்த நீவிக்கொண்டான்.

தமிழ் இறுதியாக அனுப்பிய செய்தியில், அவன் மீது ஆழிப்பேரலையாய் பொங்கும் காதலை மேலும் மேலும் மனப்பெட்டகத்தில் சேமித்தவளாக குறுநகை புரிந்தாள்.

"ரைட்ஸ் இருக்கா? அப்போ வீட்டுக்கு வந்திடவா?" தட்டச்சு செய்தவள் அனுப்பிடாது...

"அப்போ ஒரு 50K ட்ரான்ஸ்பெர் பண்ணுங்க" என்று சிரிக்கும் பல பொம்மைகளுடன் இறுதியாக கண்ணடிக்கும் பொம்மையையும் சேர்த்து அனுப்பினாள்.

'இப்போ உங்களுக்கும் லிப்ஸ் ஓரமா குட்டி ஸ்மைல் வந்திருக்கும்ல?' மனதில் நினைத்தவளாக அலைப்பேசியில் நெற்றி முட்டிவள், "ரொம்பவே மிஸ் பன்றேன்" என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டாள்.

இதுபோன்ற... அவனுடனான குட்டி குட்டி இன்பமான நொடிகளை ஆழ்ந்து அனுபவிப்பவள், நோட்டிஃபிக்கேஷன் ஒலியில் என்னவென்று பார்க்க... வெண்பாவுக்கு விழிகள் விரிந்து கொண்டது.











Leave a comment


Comments


Related Post