இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 26-04-2024

Total Views: 19462

பாவை : 18 

அஞ்சனா கூறக் கேட்ட வசந்திற்க்கு தன்னவள் துடித்த துடிப்பினை நினைக்கும் போதே விழிநீர் முத்தாக வழிந்தோட, அப்படியே மடிந்தான்.

“ஆனந்தி “ கதறவே, அஞ்சனாவின் மனமோ உக்கிரமாக பலி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

“அவனை நான் சும்மாவே விட மாட்டேன். என் ஆனந்தியை சிதைச்ச அவன் எல்லாம் உயிரோட இருக்கவே கூடாது “ சீற்றமோடு அதிரக் குரல் கொடுக்க,

“அவனுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்குது. அப்பாவோட பவர் இருக்கு. முதல்ல இதை ரெண்டையும் அவன் கிட்ட இருந்து பிடிங்கணும்.டூர் போன இடத்துல என் கிட்ட அவனோட வேலையை காட்ட முயற்சி பண்ணிருக்கான். நல்ல வேலை நந்தன் என்னை காப்பாத்திட்டாரு. இந்த வீடியோ ஆதாரமா வச்சி நம்மளால எதுவும் பண்ண முடியாது. வேற ஏதாவது ரெடி பண்ணனும் ? “  என்க,

“என்ன பண்ணனும் அஞ்சனா சொல்லு. உடனே பண்ணலாம் “ வெறியோடுக் கூற,

“அந்த ஹோட்டலுக்கு போய் விசாரிச்சா தான் நமக்கு ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்கு “ என்கவே, அப்போதே இருவரும் சேர்ந்து ஹெச்.ஆர் தந்தையின் சொந்த ஹோட்டலுக்கு சென்றனர்.

அங்கே வரவேற்பில் இருந்த பணியாளர்களிடம் தங்கள் இருவருக்கும் சேர்ந்து ஒரு அறை வேணுமெனக் கேட்க, அவர்கள் இருவரையும் நிமிர்ந்துக் கண்டாள் அந்த பெண்.

“எங்க கிட்ட பிரைவேட் ரூம்ஸ் இருக்கு சார். வேணுமா ?” என்கவே, வசந்தும் சரியென்றான்.

பின் அறை எடுத்து அங்கிருந்த பணியாளர்களை தான் முதலில் தேடினர். யார் தாங்கள் சொன்னால் பணத்திற்க்காக செய்வார்கள் என்ற நினைப்போடு ஆட்களை தேட கிடைத்தது ஒருவன்.

இவர்களுக்கு அவன் டீ சேர்வ் பண்ண, அவனுக்கு பணப்பிரச்சனையால் பல முறை அழைப்பு வரவே, சமாளித்து கஸ்டமரை கவனித்து வந்தான்.

அவன் வேலை முடிந்துச் செல்லும் போது காரினை அவனின் முன்னேச் சென்று நிறுத்தவே பதறினான்.

“நீ இந்த ஹோட்டல்ல தானே வேலை பார்க்குற ?”

“ஆமா “

“கார்ல ஏறு. முக்கியமான விசியம் உன்கிட்ட பேசணும். எவ்வளோ பணம் வேணும்னாலும் தரோம் “ என்க, பயந்துக் கொண்டே ஏறினான்.

தனிமையான ஒரு இடத்தில் காரினை நிறுத்தியவர்கள், “அந்த ஹோட்டலை ஏதாவது இல்லீகல் நடக்குதா  சொல்லு ?” மிரட்டலாய் வசந்த் கேட்க,

“அப்படியெல்லாம் எதுவுமில்லையே ? நீங்க யாரு ? எதுக்கு என்னை பிடிச்சி வச்சி கேட்குறீங்க ?” என்றவனோ அவனோ பயம் கொள்ள ஆரம்பித்தான்.

அதனை உணர்ந்த அஞ்சனா ஒரு கட்டு பணத்தை எடுத்து அவனின் முன்னே நீட்டி விட்டு, “உங்களை இதுல நாங்க இன்வால்வ் பண்ணவே மாட்டோம். என்ன நடக்குதுன்னு சொல்லிட்டா, இந்தா பணத்தை நீங்க எடுத்திட்டு போகலாம். நாங்க போலீஸ்சோ, ஆபிஸரோ இல்லை. உங்க முதலாளி பையன் அந்த குமரன் என் அக்காவை நாசம் பண்ணி கொன்னுட்டான் அதுக்காக தான் கேட்குறோம். பிளீஸ் எங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க 
 “ என்று கெஞ்சதலாய்க் கேட்க,

பணத்தை கண்டு ஒரு புறம் ஆசை இருந்தாலும், அவர்கள் சொல்வதையும் முழுதாக ஏற்க முடிந்தது. ஏன் என்றால் அப்படி  குணம் கொண்டவன் தானே தங்களின் முதலாளி மகன்.

“நான் சொல்லுறேன். ஆனா நான் சொன்னேன் மட்டும் வெளியே தெரியாம பார்த்துக்கோங்க. பிரைவேட் ரூம்ஸ் இருக்கு அந்த ஹோட்டல்லை. அங்கே சில பொண்ணுங்க எப்பவுமே நிரந்திரமா இருப்பாங்க. கட்டயாப்படுத்தி கூட்டிட்டு வந்தாங்களா ? இல்லை பிரியப்பட்டு வந்தாங்களா தெரியாது. அவங்களை வச்சி விபச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க. அது போக குமரன் சாருமே அடிக்கடி ஏதாவது கரெக்ட் பண்ணி வெளியே இருந்து பொண்ணுங்களை கூட்டிட்டு வருவாரு “

“அப்படியா ! அப்போ என்னைக்காவது இந்த பொண்ணை கூட்டிட்டு வந்திருக்காரா ?” என்று ரேஷ்மியின் புகைப்படத்தைக் காட்ட,

“இப்போ இந்த பொண்ணு கூட வாரத்துக்கு ரெண்டு மூனு தடவை வந்திருவாரு “

“அப்போ இந்த பொண்ணு பார்த்திருக்கீங்களா ?” என்றவாறு தன் அக்காவின் புகைப்படத்தை எடுத்துக் காட்டவே, சட்டென மின்னல் வெட்ட விழிகளோ அதிர்ந்தது.

“இந்த பொண்ணா ?”

“ஆமா. என்னாச்சு சொல்லுங்க ?”

“ஒரு வருஷத்துக்கு கிட்ட இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஒரு நாள் இந்த பொண்ணை ரெண்டு மணி போல மயக்கத்துல வச்சி கூட்டிட்டு வந்தாரு.  எப்பவுமே அவரோட ரூமுக்குள்ள போய்ட்டாரு. அன்னைக்கு நான் நைட் சிப்ட் தான் வேலை பார்த்தேன். காலங்காத்தால ஒரு போலீஸ்க்காரன் வந்தான். எங்க சாரும், அந்த போலீஸ்சும் சேர்ந்து அந்த பொண்ணை மறுபடியும் கார்ல ஏத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க “ என்க, 

“அப்போ இந்த பொண்ணு எப்படி இருந்தது ?”

“நெத்தில அடிபட்டிருந்தது.  அப்பவும் மயக்கத்துல தான் இருந்தது “

“உங்க ஹோட்டலுக்குள்ள யார் வந்துப் போனாலும் சிசிடிவில இருக்கும்ல “

“ஆமா இருக்கும் “ என்க, அவனிடம் அந்த பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு காரினை எடுத்தனர்.

“அக்காக்கு என்ன நடந்தது ஆதாரம் கண்டு பிடிக்கணும் அப்படின்னா முதல்ல ஆபிஸ்ல இருந்து தான் வரணும். நிச்சியம் பார்க்கிங் ஏரியால இருந்து தான் அக்காவை கடத்திருக்க வாய்ப்பு இருக்கு. அக்காவோட இஸ்கூட்டி என்னாச்சு ?” என்று இப்போது தான் அந்த நினைப்பே வந்துக் கேட்க,

“நீங்க யாரும் வாங்கலை அப்படின்னா அது போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கும். நான் கம்பிளைன்ட் கொடுக்க போகும் போது பார்த்தேன். சூசைடு பண்ணுன இடத்துல நின்னுக்கிட்டு இருந்தது தான் சொன்னாங்க “

“மயக்கத்துல இருக்குறவ எப்படி ஓட்டுவா ? இவங்க தான் அவளை தண்ணீல தள்ளி விட்டிருக்கணும். இந்த ஹோட்டல்ல நடக்குற விசியத்தை போலீஸ் கிட்ட இன்பார்ம் பண்ணனும் ?”

“அந்த போலீஸ்க்காரன் கிட்ட தானே போகணும். ரெண்டு பேரும் கூட்டு களவானியா இருக்கும் போது எப்படி கேஸ் எடுப்பான் ?”

“கமினிஷர் கிட்டயே நேரா இந்த நியூஸ்சை போக வைக்கணும் ?” என்க,

“நான் பார்த்துக்குறேன் “ எனக் கூறிய வசந்த் மறுநாள் காலையிலே அதற்க்கான ஏற்பாட்டினைச் செய்தான். பின் தான் அந்த ஹோட்டலுக்கு சென்று ரைடு நடத்தி செய்திகளில் வந்து குமரன் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுவரை நடந்ததை நினைத்த அஞ்சனா நாளை முதல் வேலையாக தான் சென்று என்ன செய்யவேண்டுமென்று யோசித்தாள். இதற்கிடையில் நந்தனின் காதலை அவளால் நினைக்க கூட முடியவில்லை.

மறுநாள் அலுவலகம் செல்ல அங்கே சிசிடிவியை கண்காணிக்க என்று தனியாக ஒரு அறை இருந்தது. அதில் காவலாளி ஒருவரும், கண்காணிப்பதற்க்கு ஒருவர் என்று இரண்டு பேர் இருந்தனர்.

காவலாளியோ பார்க்கிங் ஏதோ பிரச்சனை என்று சென்று விட, அந்த அறை வாசலில் நின்றவளோ, “ஹாய் “ என்றவாறு உள்ளே நுழைய,

“யாரும்மா நீ  ? எங்கம்மா வேலைப் பார்க்குறே ? என்ன விசியம் ?”

தான் யார், எந்த இடத்தில் வேலை பார்க்கிறேன் என்று தன்னை பற்றிக் கூறி, “எனக்கு ஒரு உதவி வேணும் ?” என்றாள்.

“சொல்லும்மா “ 

“என்னோட கோல்ட் செயின் ஒன்னு பார்க்கிங்ல மிஸ்சாகிருச்சி. நான் முழுக்க தேடி பார்த்துட்டேன். கிடைக்கவே இல்லை. யாரோ எடுத்துட்டாங்கன்னு தோணுது. கொஞ்சம் பார்த்து செக் பண்ணி யாருன்னு கண்டு பிடிச்சி சொல்லுறீங்களா ?” 

“எப்படிம்மா உறுதியா பார்க்கிங் ஏரியால தான் தொலைஞ்சதுன்னு சொல்லுறே ?”

“கேபின்ல இருந்து எழுந்து வரும் போது இருந்தது. அதை நினைச்சி தான் சொல்லுறேன் சார் “ என்றவாறு சிறிதுப் பணத்தை எடுத்து அவரின் டேபிளில் மீது வைக்க, 

“அவ்வளோ முக்கியமான செயின்னா ?” எப்படியும் அதில் பத்தாயிரத்துக்கு மேல் பணம் இருக்கு என்பதை அறிந்தே அவர் கேட்க,

“ஆமா. என் அப்பா எனக்காக வாங்கிக் கொடுத்தது. அவர் தான் உயிரோட இல்லை. இப்போ அவர் எனக்கு வாங்கிக் கொடுத்தும் இல்லை “ என்று கண்ணீர் வருவதுப் போல் விழிகளைக் கலங்க வைத்து வேதனையோடுக் கூறினாள்.

“சரிம்மா எப்போ தொலைஞ்சு போனது ?”

“ரெண்டு வாரமாச்சு “ என்கவே,

“இப்போ வந்து சொல்லுறே ?”

“எப்படி தேடணும்ன்னு தெரியல. அதுக்கு அப்பறம் தான் உங்க நியாபகமே வந்தது “ என்றதும், 

“ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தது எல்லாம் மொத்த பையில் ஒன்னு இருக்கு. அதுல சேவ் பண்ணிருவேன் “ என்றவாறு அந்த பையிலை எடுக்கப் பார்த்தவாறு இருந்தாள்.

எப்படி இவரை திசை திருப்புவது நினைத்துக் கொண்டிருக்க அருகில் இருந்த ஒரு வயரினை அவருக்கு தெரியாது ஆட்டிவிடவே, விட்டு விட்டு வருவதுப் போல் இருந்தது.

“என்னாச்சு சார் ?”

“உன் நேரம்மா என்னவோ சரியா வொர்க் ஆகலை “

“நான் நெட்வொர்க் டீம் தான். நான் வேணா என்னென்னு பார்க்கட்டா “ என்க, அவரும் சரி என்று எழுந்துக் கொண்டார்.

பின் அதனைச் சரிபடுத்த, “எந்த நேரம், எப்போன்னு நீயே இதுல பாரும்மா ?” என்றவாறு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து விட, சிறிது நேரம் பிளே செய்து அதனைப் பார்ப்பது போல் சைகை செய்தாள்.

“கடவுளே ! எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணு ? இவரை வெளியே போக வைக்க ஏதாவது பண்ணு “ மனதில் வேண்டிக் கொண்டே சரியாக அக்கா எந்த நாள் இறந்தால் என்பதை பார்த்து விட்டாள்.

அருகில் இருந்தவருக்கும் அழைப்பு வந்து விடவே, அவரோ, “நீ பாரும்மா, நான் பேசிட்டு வரேன் “ எனக் கூறி எழுந்துச் செல்ல, கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு இது தான் நேரமென நினைத்து அதனை பிளே செய்தான்.

அக்கா வேலைக்கு வந்ததைப் பார்த்தவளோ பின் எப்போது சென்றால் என்பதை ஓட விட்டு வீடியோப் பார்க்க, ஒரு மணி போல் அவள் வருவது தெரிந்தது.

தன் இஸ்கூட்டி அருகே வரும் நேரம் அவளின் முன்னே ஒரு கார் வந்து நிற்க, அடுத்த நொடி அந்த கார் அவளோடுச் சேர்ந்து அந்த இடத்தில் இருந்து மறந்தது.  பின்னோடு வந்த ஹெல்மெட் போட்ட ஒருவன் இஸ்கூட்டியை எடுத்துக் கொண்டுச் செல்வதை பார்த்தவளோ அப்படியே அதனை தன் கைபேசியில் ஏற்றிக் கொண்டாள்.

“என்னம்மா இவ்வளோ நேரமா ?”

“என்னால யாருன்னு கண்டு பிடிக்க முடியல. சரி இருக்கட்டும் சார். தேங்க்யூ சார் “ என்றவளோ அறையை விட்டு வெளியே வந்து விட்டாள்.

மதிய நேரம் போல் நந்தன் அவளின் முன்னே வந்து நிற்க, “என்னாச்சு ஆர் யூ ஓகே ? ரொம்ப பிஸியா இருக்குற மாதிரி இருக்கு “ என்க,

“கொஞ்சம் தலை வலிக்கு “ நெற்றியை பிடித்துக் கொண்டு கூறவே,

“இருங்க. நான் சூடா டீ எடுத்துட்டு வரேன் “ என்றவனோ அவள் மறுக்கும் முன்னேச் சென்று டீயோடு, சேர்ந்து மாத்திரையும் எடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் வந்தான்.

அதனை அவளிடம் கொடுக்க, “எதுக்கு இதெல்லாம் நீங்க பண்ணுறீங்க ?” தயக்கமாய் வாங்கிக் கொண்டு கேட்க,

“இதுனால என்ன ? எனக்கு நீ என்னோட காதலி. உனக்கு நான் பிரெண்ட்டுன்னு நினைச்சிக்கோ “ என்க, லேசாக குறுநகை பூத்தாள்.

“அன்னைக்கு நம்ம அந்த ஹோட்டலுக்குப் போனோம்மே அப்போ பார்த்தது தானே நேத்து அந்த நியூஸ்ல வந்திருக்கு “ எனும் போதே,

“ஆமா உங்க வேலை என்னாச்சு ? மெயில் எதுவும் போட்டீங்களா ? என்க,

“மேலிடத்துக்கு சொல்லிட்டேன். அவங்க இன்னும் பெண்டிங்ல தான் வச்சிருக்காங்க “ என்றதும், தானும் மெயில் போடுவதாக கூறினாள்.

பின் சிறிது நேரம் இருந்து பேசியவனோ வேலை நேரம் வந்து விட்டதால் கிளம்பி விட, இந்த சில நேரங்களில் புத்துணர்ச்சி வந்ததுப் போன்று உணர்ந்தாள்.

ஹாஸ்டலுக்கு வந்ததுமே வசந்த்திடம் அதனை அனுப்பி பேசவே, அவனோ தீயாய் எரிந்துக் கொண்டு தான் இருந்தான். என்ன ஆனாலும் பரவாயில்லை நேராகச் சென்று குமரனை கொன்று விடும் நோக்கத்தில் தான் இருந்தான்.

“இப்போ மட்டும் இதே மாதிரி அந்த ஹோட்டல்ல இருந்து வீடியோ புட்டேஜ் கிடைச்சா நாம்ம நிரூபவிச்சிரலாம் “ என்க, தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினான்.

ஹோட்டல் வேலைப் பார்க்கும் அவனிடமேச் சென்று இன்னும் சிறிது பணத்தைக் கொடுத்து வாய் வார்த்தையாகச் சொன்னது வீடியோவாக வேணுமென்றான்.

“சார் இந்த விசியம் வெளியே தெரிஞ்சா என்னை வேலையை விட்டே தூக்கிருவாங்க ? ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் குமரன் சாரை அரெஸ் பண்ணுனாங்க. அதுக்கு காரணமே நான் தான் உங்க மூலமா தான் தெரிய வந்தது. நான் சொல்லப் போய் தானே நீங்க இப்படி பண்ணுனீங்க ?”

“ஆமா. உனக்கு எவ்வளோ பணம் வேணும்மோ  சொல்லு தரேன். எனக்கு எப்படியாவது கிடைச்சாகணும். அப்போ தான் ஒரேடியா ஜெயிலுக்கு அனுப்ப முடியும் “ என்க,

“ஐஞ்சு லட்சம் வேணும் “ என்றதும், சரியென்று அந்த பணத்தினைக் கொடுக்க, அடுத்து இரு நாட்களில் அந்த புட்டேஜ் இருவரின் கரங்களில் கிடைத்தது.

ஆனால் அதில் நந்தனின் அண்ணன் இல்லாதுப் போக, “அந்த போலீஸ்க்காரன் இதுல இல்லை ?” என்க,

“ரூம்ல இருந்து வரும் போது ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த பொண்ணை கூட்டிட்டு வந்தாங்க. கீழே வந்ததும் அவர் வேகமா முன்னாடி போய்ட்டாரு. அதுனால தான் இதுல அது வரல “ 

“சரி ஓகே “ என்றவனோ அதனை இரவில் அஞ்சனாவிற்கு அனுப்பினான்.

“இப்போ ஜெயில்ல இருந்து அந்த குமரன் வக்கீல் மூலமா வெளியே வந்திருக்கான். அவனை செவ்வாய்கிழமை கோர்ட்ல சரண்டர் பண்ணச் சொல்லிருக்காங்க. அன்னைக்கு கேஸ் நடக்கும் போது இந்த ஆதாரத்தையும் நான் கம்பிளைண்ட் பண்ணி எந்த ஸ்டெப்பும் எடுக்காததையும் சொல்லப் போறேன் ” என்று அஞ்சனாவிடம் காட்ட, அவளோ தானும் வருவேன் என்று கூறினாள்.

“வேண்டாம் இதுல நீ தலையிடாம இருக்குற மாதிரி இருந்துக்கோ. சப்போஸ் எனக்கு ஏதாவது ஆனாலும் நீ தண்டனை வாங்கி தர இருக்கணும் “ என்கவே, சரி என்றாள்.

நாட்கள் கடந்து அந்த நாளும் வர, புதிதாக வந்த ஹெச்.ஆரிடம் நந்தன் தவறில்லை என்பதை உறுதிபடுத்திக் காட்டியதால் நந்தனுக்கு வேலை நிரந்திரமானது.

“தேங்க்ஸ் அஞ்சனா. உன்னால தான் இதெல்லாம் நடந்தது. இல்லைன்னு வை இந்த நேரம் நான் வீட்டுல இருந்திருக்கணும் “ என்க,

“இட்ஸ் ஓகே நந்தன். தப்பு உங்க மேல இல்லை. எல்லாமே அந்த ஹெச்.ஆர் பண்ணுன தப்பு தான் எனக்கு தெரியும். அன்னைக்கு அந்த இடத்துக்கு கூட அவன் தான் என்னை என்னை கூட்டிட்டு போயிருக்கணும் “ என்கவே, அவனுக்குமே அந்த சந்தேகம் தானே இருந்தது அதையும் கூறினான்.

“எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சி இப்போ பிரச்சனை தீர்ந்தது.“ என்ற நந்தன் புன்னகைத்துச் சென்று விட, தனக்கு இன்னும் எதுவுமே முடியவில்லையே கைபேசியைப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

நீதிமன்றத்தில் எப்போது குமரன் விசாரணை வரும் என்று வசந்த் காத்திருக்க, இங்கே அவனின் பதிலுக்கு அஞ்சனா காத்திருந்தாள்.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 


Leave a comment


Comments


Related Post