இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 27-04-2024

Total Views: 14623

காதலொன்று கண்டேன்!

தேடல்  22

அவனுக்காக..


இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்த நந்த கோபாலனின் பார்வை கட்டுத் திண்டில் அமர்ந்து தன்னுடன் கதையளக்கும் மகனின் மீது வாஞ்சையாய் படிந்தது.

அவருக்கென்று அவனும் அவனுக்கென்று அவரும் இருப்பதாலோ என்னவோ அவர்களின் பந்தம் தனித்துவமானது  தான்.

"பாப்பா வச்சிருந்த நிக் நேம் தான்..எங்கிருந்து தான் யோசிக்கறாளோ தெரியல இந்த பாப்பா..சட்டிப்பான சஞ்சீவ்.." இரசனை மிகு விழிகளுடன் கூறியவனின் இதழ்களில் இப்போதும் புன்னகை மலர அதைக் கண்டு அவனின் தாயுமானவரின் இதழ்களும் மெல்லிய முறுவலை தம் புறத்தே திரியவிட்டன.

"ஆனாப்பா..பாப்பா என்ன பாத்து பயந்தாங்கோலின்னு நெனச்சிட்டா.."

"எதே..உன்ன பாத்தா..?"

"அன்னிக்கி யாதவ் காபி ஊத்த வந்தப்போ நா பேசாம இருந்துட்டேன்ல..அதுக்குத் தான் அப்டி நெனச்சு இருப்பா போல.."

"அதுவும் சர்தான் பாப்புக்குட்டி..அவன் என்ன சீண்டி விடுவான்னு நீ ஒதுங்கி நின்னுருப்ப..அந்த பொண்ணு தப்பா நெனச்சு இருக்கும்.." என்றவருக்கு மகனின் அன்றைய நிலை புரிந்திடாமல் இல்லை.

முன்பொரு முறை யாதவ் பையனை சீண்டியிருக்க பதிலுக்கு ஏதோ சொல்லி விட்டு வந்தவனின் மீது அளவற்ற கோபம் அவனுக்கு.பையனிடம் காட்ட முடியாமல் கடைத்தெருவில் வைத்து நந்த கோபாலனை அவமானப்படுத்தி இருக்க நியாயம் கேட்கப் போன மகனை தடுப்பதற்குள் ஓய்ந்து விட்டார்,மனிதர்.

"இனி அவன் கூட சண்ட போடாத பாப்புக்குட்டி."மகனை நினைத்து அவர் வாக்குக்கேட்க தந்தையை நினைத்துத் தான் வாக்குக் கொடுத்திருந்தான்,மகன்.

அன்று துவக்கம் யாதவ் வம்பிழுக்க வந்தாலும் ஒதுங்கிச் சென்று விடுவான்,கண்டும் காணாதது போல்.வம்புக்குள் மாட்டிக் கொள்ளாது விலகி நிற்கிறான் என்பதற்காக பையன் ஒன்றும் பயந்தவன் இல்லையே.

"அதுன்னா உண்ம தான் பா..பாப்பா நா ரொம்ப பயந்த டைப்னு நெனச்சிட்டு அட்வைஸ் வேற..அன்னிக்கி யாதவ் வண்டி டயர பன்சர் பண்ணி விட்டதும் அவ தான் போல..இன்னிக்கி தான் சிசிடீவி பாத்தேன்.."

"பாப்புக்குட்டி என்னடா சொல்ற..?பொண்ணு பாவம் டா.."

"அதான் பா யாருக்கும் தெரியாம புட்டேஜ டிலீட் பண்ண சொல்லிட்டேன்..ஆனாலும் அவ ரொம்ப கேடி தான்..ரெண்டு சிசிடீவில மாட்டிக்காம தான் வேலய பாத்துருக்கா..மூணாவதுல சைட்ல தெரிது அவ உருவம்..எனக்குத் தான் பாத்ததுமே புரிஞ்சிடுச்சு..நாளக்கி போய் ஆபிஸ்ல கேக்கனும்..கேடி பாப்பா.."

"எனக்கு அந்த பொண்ண பாக்கனும் பாப்புக்குட்டி..நீ சொல்றத கேக்கும் பொது ஆசயா இருக்கு.."

"ஒரு நாள் பாப்பாவ வீட்டுக்கு கூட்டி வர்ரேன் பா..நீயும் நல்லா க்ளோஸ் ஆயிருவ..அவ கேரக்டர் அப்டி.."

"பாப்புக்குட்டி..உங்க எம் டி சார் பேசுனாரு டா.."

"அவரா..? அவர் எதுக்கு போன் பண்ணாரு..?" என்றவனுக்குப் புருவங்கள் சுருங்கின.பையனின் கேள்வியில் இன்னும் அவனுக்கு விடயம் தெரியாது என்பது புரிய தான் வீணாய் குழப்பிட வேண்டிய அவசியமில்லை எனத் தோன்றிற்று,மனிதருக்கு.

அவனிடம் அப்பொழுதே சொல்லியிருக்கலாமோ..?
கண்டு கொள்ளாமல் தவிர்த்த விடயம் தான் கண் குத்தும் பிரச்சினையை தரப் போகிறது என அவருக்கும் தெரிந்திருக்க மாட்டாதே.

"அது ஒன்னுல்ல பாப்புக்குட்டி..அன்னிக்கு மாதிரி நார்மலா தான் பேசுனாரு.." முதுகு காட்டி நின்று கொண்டு சொன்னவரின் முகத்தை கண்டிருந்தாலும் அவரின் வார்த்தைகளில் இருந்த பொய் பையனுக்குப் புலப்பட்டிருக்கும்.

"ம்ம்..நல்ல மனுஷன் பா அவரு.." சொல்லிக் கொண்டவனின் அலைபேசி ஒலிக்க நகர்ந்திருந்தான்,வெளியே.

                ●●●●●●●●●

"கடவுளே..இந்த கார்த்திக் சார பாத்தா நா சாதாரணமா நடந்துக்கனும்.." கன்னத்தில் தட்டிய படி கடவுளிடம் வேண்டுதல் வைத்திருந்தவளை காலடிச் சத்தமும் அதனைத் தொடர்ந்து காலை நேர விளிப்பும் கலைத்தன.

"குட் மார்னிங் யாழினி.."

"குட் மார்னிங் சார்.." திரும்பி படி கூறியவளோ தடுமாற்றத்தை லாவகமாய் மறைத்து கொண்டு விட்டிருந்தாள்.

"நீங்க இப்போ ஃப்ரீயா..?"

"ஆமா சார்..ஏதாச்சும் முக்கியமான விஷயமா..?"

"ஆமா உங்க கூட கொஞ்சம்  பேசனும்.." இதழ்கள் உதிர்த்த வார்த்தைகள் காதை எட்டிய கணம் பதறியவளுக்கு உள்ளுக்குள் படபடவென்றிருந்தது.

"என்ன சார்..?" என்று அவள் கேட்கும் முன்னே அவளுக்கு முன்னே இருந்த கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவனின் பார்வை அவளை கூர்மையாய் அளவிட்டது.

பையனின் இயல்பான பார்வையே அவளை இழுத்துக்கொள்ளும் சுழல் என்றிருக்க இந்த கூரிய பார்வை அவள் ஜீவனை வாரி சுருட்டிக் எடுக்கும் புயலாகி நின்றிருக்க தன்னை இயல்பாய் காட்டிக் கொள்ள பிரம்ம பிரயத்தனப்பட வேண்டியிருந்தது,அவளுள்ளுக்குள்.

"ஆமா..அன்னிக்கு யாதவ்வோட வண்டிய யாரோ பன்சர் பண்ணுனாங்கல..யாருன்னு தெரியுமா..?"

பையனின் கேள்வியில் திருட்டு முழி முழித்தவளோ தாமதியாது "ஐயோ அது நா இல்ல..எனக்குத் தெரியாது.."  என உளறி விட விரிய முயன்ற புன்னகையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள போராடத் தான் வேண்டியிருந்தது,பையனுக்கு.

"நா நீங்க தான் அப்டி பண்ணி இருப்பீங்கன்னு சொல்லவே இல்லயே யாழினி..?"

"அ..அது..ஃப்லோல வந்துருச்சு.."

"ஃப்லோல எப்டி வரும் அது..?" அழுத்தமாய் பார்த்த படி கேட்டவனின் பார்வையே உணர்த்திற்று,பையனுக்கு அவளின் திருகுதாளம் மொத்தமும் தெரியும் என்பது.

"உங்களுக்கு எல்லாம் தெர்யுமா சார்..?" கூம்பிய முகத்துடன் கேட்டவளுக்கு அவனுக்கு தெரிந்திருக்கக் கூடாது என்ற எண்ணம் தான்.

"இல்லன்னு நம்பிருவீங்களா..? இல்ல தான.."

"ஆமாங்குறத சுத்தி வளச்சு சொல்றத பாரு.."

"என்ன முணுமுணுக்கிறீங்க யாழினி..?"

"ஆமா சார் நா தா பண்ணேன்..அந்த சைக்கோ பேய் எப்ப பாரு உங்கள மொறச்சிகிட்டு இருக்கான்..இல்லன்னா ஏதாச்சும் வம்பு பண்ணிட்டு இருக்கான்..நீங்க தான் அன்பே சிவம்னு ஒதுங்கி வர்ரீங்க..அப்டியே காந்தித் தாத்தா பேரன் மாதிரி நடந்துகிட்டா நா என்ன பண்றது..? அந்தளவு நல்லவ கெடயாது நா..அதுல அன்னிக்கு சுடசுட காபிய ஊத்த வர்ரான் சைகோ..நீங்களும் இழுத்து நாலு அப்பு அப்பாம கருணையோட கடவுள் மாதிரி பேசாம இருந்தீங்க..எனக்கு அப்போவே அவன் மண்டய ஒடச்சி போட்ற அளவு கோவம்.."

"நீங்களே பேசாம இருந்தீங்க..கன்னத்துல வேற எரிச்சலா இருந்துச்சா அதான் பேசாம வந்துட்டேன்..அதுக்குன்னு உங்கள மாதிரி என்னால அவன சும்மா விட முடியாது..அதான் டயர பன்சர் பண்ணி விட்டேன்..ஆனாலும் எனக்கு ஆத்திரம் தீரல..அதான்..." படபடவென பொறிந்தவளுக்கு தான் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் விடயம் உரைத்த கணம் நிமிர்ந்து பார்த்து அசடு வழிய சிரிக்க அசருவானா பையன்..?

"அதான்....?" என்ற படி கேள்வியாய் இழுக்க முற்றாய் புரிந்து விட்டது,மொத்த விடயத்தையும் அறிந்து கொள்ளாமல் விட மாட்டான் என்பது.

"அதான் அடுத்த நாள் அவன் ஆபிஸ் வரும் போது வேணும்னே கால் தடுக்கி விழ வச்சேன்.." தலையை குனிந்த படி சொன்னவளின் குரலில் இலேசான குற்றவுணர்வு.

"வாட்..?என்ன சொல்றீங்க..?அடுத்த நாள் அதான் கெந்தி கெந்தி நடந்து வந்தானா..?" என்றிட விழி நிமிர்த்தாது தலையசைத்தவளுக்கு பையன் திட்டுவானோ என்கின்ற பயம்.

"எனக்கு தெரியாம இவ்ளோ பண்ணியிருக்கீங்களா..கேடி பாப்பா.." முணுமுணுத்தபடி பையன் எழுந்து கொள்ள அவளுக்கு பாதி தான் கேட்டுத் தொலைத்தது.

"சார் நீங்க இப்ப என்ன சொன்னீங்க..?"

"நத்திங்.." பட்டும் படாமல் மொழிந்தவனின் இதழ்களில் புன்னகை ஒளிந்திருந்தது,பையன் மட்டுமே அறிந்த இரகசியம்.

தலையை சிலுப்பிக் கொண்டு அவள் திரும்ப அதன் பின் வழமையான வேலைகள் தான்.

நேரம் பதினொரு மணியைத் தொட்டுக் கொண்டிருந்த முற்பகல் வேளை அது.

"யப்பா தந்த வேலய முடிச்சிட்டேன்.." என்ற படி சோம்பல் முறித்துக் கொண்டு கொட்டாவி விட்டவளை வருத்தத்துடன் பார்த்தாள்,ருத்ரா.

"என்னடி பொறாமயா..? சீக்கிரம் பண்ணி முடிச்சுரு.."

"எரும பினிஷ் பண்ணுன்னு சொல்லு..பண்ணி முடிச்சுருங்குறத யாராச்சும் கேட்டா திட்றதா எடுத்துப்பாங்க.."

"அட ஆமால..யோசனயே வர்ல பாரேன்.." என்றவளோ அலைபேசியில் ஆழ்ந்து போக அடிக்கடி கேளாமல் பார்வை பையனைத் தொட்டு மீண்டு கொண்டிருந்தன.

"ஸ்கூல் காலத்துல கூட நல்ல புள்ளயா இருந்தேன்..வளந்து கெட்ட வயசுல சைட் அடிக்க வச்சுட்டியே சாமி.." மனதால் கடவுளுக்கு அர்ச்சித்தவளோ அதற்கு மேலும் அங்கு தரிக்க முடியாதவளாய் ருத்ராவிடம் சொல்லி விட்டு கிளம்பி இருந்தாள்,சிற்றுண்டிச்சாலைக்கு.

போகும் போது கூட பையன் இடை மறித்து வேலை முடிந்து விட்டதா எனக் கேட்க மறந்திடவில்லை.

சிற்றுண்டிச் சாலைக்கு வந்தவளோ ஓரமாய் இருந்த மேசையொன்றில் அமர்ந்து கொள்ள பெரிதாய் ஆட்கள் இல்லை,அந்நேரத்தில்.இடைவேளை நேரம் இல்லை,அல்லவா..?

வாங்கிக் கொண்டு வந்த மெதுவடை இரண்டும் காபியும் மேசையில் இருக்க எடுத்துக் கடிக்கப் பார்த்தவளின் முன்னே வந்தமர்ந்தான்,சஞ்சீவ்.

திடுமனெ தோன்றிய நிழல் இருளில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு எள்ளலான நகைப்புடன் தன் முன்னே அமர்ந்து இருந்த சஞ்சீவைக் கண்டதும் முகம் கடுகடுவென ஆகிற்று.

ஏற்கனவே அவனைப் பிடிக்காதிருக்க நேற்று பையனைக் கண்டு முகத்தை சுளித்த பின் இன்னும் பிடிக்காது போயிற்று.

நம்மை காயப்படுத்தும் நபர்களை விட நமக்கு பிடித்தவர்களை காயப்படுத்தும் நபர்கள் மீது தானே அதிகமாக கோபம் வருகிறது.அதைப் போல் தானே அவளும்..?

"ஹாய் கருவாச்சி..நீ இங்க தான் வேல பாக்கறியா..?" கையில் இருந்த ஐஸ்க்ரீமை சுவைத்தவாறு அவன் கேட்க பதிலேதும் சொல்லாமல் தன் உணவில் கவனமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனுக்கு பளாரென அறை விடும் கோபம்.

"என்ன கருவாச்சி பதில் ஒன்னும் பேசாம இருக்க..வீட்ல தான் எகிறிகிட்டு இருப்பியே..இப்போ எதுக்கு அமைதியா இருக்க..?" சீண்டி விடும் நோக்கில் கேட்டவனுக்கு அவள் ஒரு போதும் தனக்கு பதலளிக்க போவதில்லை என்று தெரிந்தாலும் பேசாமல் விட்டு விடவும் மனமில்லை.

விருட்டென எழுந்து அடுத்த மேசையில் அமர அவனும் அதே மேசைக்கு வர அவளுக்கு தட்டாலே தலையில் அடித்தால் என்னவென்று தோன்றிற்று.

தான் என்ன செய்தாலும் தன்னைப் பின்தொடர்வான் எனத் தோன்றிட உண்டு முடித்தவளோ கைகளை கழுவச் செல்ல அப்போதும் விடவில்லை,அவன்.

"என்ன கருவாச்சி..கண்டுக்காம போற..பயமா..?" வம்படியாய் வழி மறித்த படி மூச்சு வாங்க முறைத்தவளின் விழிகளில் கோபம் பற்றி எறிந்து கொண்டிருந்தது.

"யப்பா என்ன பார்வ..பயந்துட்டோம்.." என்ற படி அவன் கலாய்க்க அவளைக் காப்பாற்றவென வந்து சேர்ந்தாள்,ருத்ரா.

அதற்கு மேல் அவனுக்கும் வம்பு செய்ய வாய்ப்பு கிடைக்காது போக ஒதுங்கி நின்றவனின் விழிகளில் வழமைக்கு மாறாய் ஏதோ ஒன்று.

நேற்று தான் நீண்ட நாட்களுக்கு பிறகு அவளைக் கண்டிருக்க அவனின் இயல்பான குணம் தலை தூக்கினாலும் இரவெல்லாம் அவள் முகம் தான் கண் முன்னே வந்து சென்று கொண்டிருந்தது.

முன்பெல்லாம் இருவருக்கும் கொஞ்சமும் ஒத்துக்கொள்ளாது.வயது ஏற அவள் தானாய் ஒதுங்கி நிற்க அவளை சீண்டி கோபப்டுத்திக் கொண்டு திரிந்தவன் தான் அவன்.

இடையில் அவன் படிக்க வெளியூர் சென்றிருந்த போது வாண்டுகளின் சண்டையை காணும் போது எப்போதாவது அவளின் நினைவு வந்திடும்.ஆனால்,நேற்று அவளைக் கண்டதும் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு.

அவளும் காலத்துடன் மாறியிருப்பான் என அவள் நினைத்திருக்க முன்பு போலவே அவன் எண்ணியதற்கு மாறாய் அவளிருக்க அது தான் காரணமோ என்னவோ..?
அதிலும் தன்னை புறக்கணித்து விட்டு அவள் நகர்ந்திருந்தது அவனை தூண்டி விட்டிருந்தது.அதனால் தான் இந்த சீண்டல்.

கைகளை கழுவிக் கொண்டு அவன் வெளியேற அவனுக்கு வாய்க்கு வந்த படி அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்,யாழினி.

"அரகிறுக்கு..அவன கொல்லனும் போல இருக்கு எனக்கு..அப்டியே நாலு அப்பு அப்புனா தான் என்னோட மனசு ஆறும்..எப்ப பாத்தாலும் ஏதாச்சும் சொல்லி கிட்டு..இவன் சொல்லி சொல்லியே அப்போல இருந்து என்னோட மனசுல ஒரு தாழ்வு மனப்பான்ம..இப்போ தான் அத ஒடச்சிட்டு வெளிய வந்திருக்கேன்னா..அத கெடுக்கன்னே வந்துட்டான்.."

"சரிடி..அமைதியா இரு..அந்த ஆள பத்தி தான் உனக்கு தெரியும்ல..அதுக்கப்றமும் பொலம்புனா என்ன அர்த்தம்..?"

"அது தான்..ஆனா அவன பாக்க பாக்க எரிச்சலா வருது.." என்றவளின் வார்த்தைகளில் துளியும் பொய் இல்லை.

ருத்ரா வரும் வரை அமர்ந்து இருந்தவளின் பின்னே வந்து யாதவ் நிற்க எதிர்பாராமல் அவனைக் கண்டதும் அதிர்ந்து போனாள்,ருத்ரா.

"இவ என்ன இப்டி முழிக்கிறா..?" என்ற படி திரும்பியவளுக்கு பின்னே இருந்த யாதவ்வை கண்டதும் தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

பையனிடம் வீரனசனம் பேசி விட்டு வந்தாலும் அத்தனை தைரியமானவள் அல்லவே அவள்.

யாதவ்வின் பார்வை அவளில் அழுத்தமாய் படிந்து மீள அவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை,அவளால்.

தேடல் நீளும்.

2024.04.23


Leave a comment


Comments


Related Post