இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 28-04-2024

Total Views: 22694

அக்சயா ப்ரதீப் திருமணம் இரு வீட்டார் பேசி முடிவு செய்ததில் அதிக மகிழ்ச்சி அபிலாஷாவிற்கே… 

தங்கையாக தோழியாக இருந்த அக்சயாவிற்கு ப்ரதீப் போல ஒரு நல்ல கணவன் அமைவதுவும் தன் நண்பனுக்கு நல்ல துணைவியாகவும் தங்கள் நட்பை புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ள அக்சயா கிடைத்தற்கும் கடவுளுக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டாள்.

கல்யாணப் பேச்சு உறுதியான உடனேயே அபியின் மூலம் ப்ரதீப் ஃபோன் நம்பர் அக்சயாவிற்கும் அக்சயா ஃபோன் நம்பர் ப்ரதீப்பிற்கும் கிடைத்திருந்தாலும் நெருங்கி வரும் அக்சயாவின் பரிட்சைகளை மனதில் கொண்டு அமைதி காத்தனர் இருவரும். 

ஆனால் பத்மாவதி தினமும் தன் மருமகளுக்கு அழைத்து பேசிடுவார். வாரம் இருமுறையாவது மருமகளை காண வந்திடுவார். 

பார்வதி தான் இத்தனை பெரிய இடத்தில் மகள் திருமணம் முடித்து செல்ல இருக்கிறாள் அவளுக்கு செய்ய வேண்டிய சீர் எல்லாம் சரியாக செய்ய வேண்டும் அதற்கு தன் மகன் எப்படி பாடுபடுவானோ என்று உள்ளுக்குள் மருகி கொண்டு இருந்தார்.

அன்று மாலை அலுவலகம் சென்று திரும்பிய அபிலாஷா ஒரு கணிசமான தொகையை கொண்டு வந்து பார்வதி கையில் கொடுத்து “அம்மா கல்யாண செலவுக்கு இந்த பணம் உதவியா இருக்கும். நீங்க தானே பட்ஜெட் எல்லாம் போடுவீங்க இதையும் கணக்குல வைச்சுக்கோங்க…” என்று சொல்ல

“அபி மா என்னடா இதெல்லாம்… பணம் எல்லாம் வேண்டாம் அபி…” என்று மறுக்க

“அம்மா ஏன் நான் தரக்கூடாதா?” 

“ஐயோ அதெல்லாம் இல்ல மா… ஆனா வேண்டாம் அபி நந்தா எதாவது சொல்லுவான்…” என்று தயங்க

“நந்தன் வந்திட்டாரா ம்மா?” என்று சத்தமாக நந்தனை அழைக்க அறையில் இருந்து வந்தான். 

“நந்தன்… அச்சு மேரேஜ் க்கு நான் பணம் தரக்கூடாதா?” என்று கேட்க உன் சொத்து பணம் எதுவுமே எனக்கு வேண்டாம் நீ மட்டும் போதும் என்று சொல்லி திருமணம் செய்து கொண்டவன் என்ன சொல்லுவான்… அவன் அமைதியாக நிற்க

“அப்போ நான் எதுவும் செய்ய கூடாது அப்படி தானே?” என்று அவள் முகம் சுருக்க

“ஏய்… லாஷா ஏன் இப்படி ஃபீல் பண்ற… அதெல்லாம் ஒன்னும் இல்ல மா. ஆனா அன்னைக்கு எல்லார் முன்னவும் உன் சொத்து பணம் எதுவும் தேவையில்லை னு சொல்லிட்டு இப்போ நீ தந்தேன் னு வாங்க…” என்று அவன் முழுதாக சொல்ல முடியாது நிறுத்த

“ஓ… அப்போ ஒருவேளை நான் பெரிய பணக்கார குடும்பத்து பொண்ணா இல்லாம சாதரணமா ஒரு ஆஃபிஸ் ல வொர்க் பண்ற பொண்ணா இருந்தா என்னோட சம்பளத்தை இந்த குடும்பத்துக்கு கொடுக்க ஒத்துப்பீங்க இல்லையா?” அபிலாஷா கேட்க அமைதியையே பதிலாக தந்தனர் பார்வதியும் நந்தனும்..

“இதோ பாருங்க நந்தன்… எனக்கு உங்களை பத்தி நல்லா தெரியும். நான் ஒன்னும் என்னோட ப்ராப்பர்ட்டி ஷேர்ஸ் ல இருந்து எதையும் எடுத்து தரலை… எம்.டி யா இருந்தாலும் நான் செய்ற வேலைக்கு ஒரு சம்பளம் இருக்கும் இல்லையா அந்த மாதிரி நினைச்சு தான் இப்போ இந்த பணத்தை தரேன்… 

இது என்னோட சம்பளம்… என் குடும்பத்துக்கு என்னோட சம்பளம் பயன்படனும் தானே… அம்மா இனி மாசா மாசம் இப்படி நான் பணம் தருவேன்.. அதை நீங்க வாங்கி தான் ஆகனும்..” என்று அன்போடு கட்டளை இட்டவள் இந்த பணத்தை பார்வதி கையில் திணித்து விட்டு அறைக்கு சென்று விட்டாள். 

சில நிமிடங்கள் கழித்து அபிநந்தன் அறைக்கு செல்ல அவனை பார்க்க மாட்டேன் என்று முகத்தை திருப்பி கொண்டாள் அபிலாஷா. சில நொடிகள் எதுவும் புரியாதவன் பின்னரே அவள் கோபம் புரிந்து தனக்குள் சிரித்துக் கொண்டான். 

திருமணம் முடிந்து வரும் முதல் ஊடல்.. ஊடல் என்பதே கூடலுக்கான அச்சாரம்..‌ ஊடல் இல்லா கூடல் எப்போதும் ருசிப்பதே இல்லை.. என்று எண்ணியவன் அதற்கு முதலில் இவள் சமாதானம் ஆக வேண்டும் என்று புத்தியில் உரைக்க அதற்கான வழியை தேடி அவள் அருகில் வந்தான்.

இவன் அருகில் வர அவள் தள்ளி செல்ல மீண்டும் இவன் நெருங்க அவள் விலக என்று இறுதியாக சுவற்றை அடைந்து அறை ஜன்னல் கம்பிகளை அழுத்த பிடித்துக் கொண்டு நின்றாள்… அவளும் எத்தனை நேரம் தான் கோபம் உள்ளது என்பதை போல முகத்தை தூக்கி வைத்திருப்பாள்.

அவன் அருகில் நெருங்க நெருங்க அவனின் உஷ்ண மூச்சுக்களில் உருகும் மெழுகாக பாவை இவள் தத்தளிக்க இழுத்து பிடித்த கோபமும் எப்போதோ கரைந்து தான் போனது… ஆனால் இவன் எப்படி இந்த வீட்டிற்காக இவள் செய்வதை வேண்டாம் எனலாம்? என்று வருத்தம் மட்டும் அகலவில்லை மனதில் இருந்து…

“லாஷா…” மென்மையாக அழைக்க கம்பியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடி நின்றாள் அவனை திரும்பி பாராது… சில நொடிகள் அவனின் சுவாசம் தன்னை தீண்டாது போக லாஷா திரும்பி பார்க்க சற்று தள்ளி நின்று அழகாய் புன்னகைத்தான் இவளை பார்த்து… 

இவள் முறைத்துக் கொண்டு நிற்க கையில் இருந்த மல்லிச் சரத்தை அவளை நோக்கி நீட்டிட வாங்கிட மாட்டேன் என்று கையை கட்டி கொண்டு நிற்க இன்னும் சற்று அருகில் வந்தான்.

“லாஷா.. என்ன இப்போ.. சரி சாரி என்னை பாரு…” ஒவ்வொரு வார்த்தைக்கும் மென்மையான அழுத்ததோடு இடைவெளி விட்டு விட்டு சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள் அபிலாஷா.

“லாஷா… இது உன் குடும்பம்… இதுக்கு நீ என்ன செய்யனும் னு நினைக்கிறியோ தாராளமா செய் நான் இனி தடுக்க மாட்டேன் போதுமா?” என்று மொத்தமாக சரண்டர் ஆக

“ம்ம்… இந்த பேச்சு அப்போ எங்கே போச்சாம்?” கோபத்தில் இருந்து கொஞ்சம் இறங்கி வந்து அவள் கேட்க

“உனக்கு தெரியும் ல.. என்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட் தான் அப்போ பேச விடாம தடுத்துச்சு..‌ இப்போ உன் முன்னாடி எல்லாமே தோத்து போச்சு போதுமா…” என்று அவள் விழிகளை பார்த்து இவன் கேட்க

அழகாய் வெட்கப்பட்டு தலை குனிந்தாள் அபிலாஷா. “சரி இந்தா… பூ..” என்று நீட்ட வாங்கியவள் கொண்டவன் மார்பில் தஞ்சம் புகுந்திட அவளை அணைத்து அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு தன் தாடை பதித்துக் கொண்டவன் தன்னோடு இறுக்கிக் கொண்டான் அபிநந்தன்.

மறுநாள் அலுவலகம் சென்ற அபிலாஷா நந்தன் வருவதற்கு முன்பே வந்து அறையில் அமைதியாக அமர்ந்திருக்க தான் வாங்கி வந்த பூவை அவள் முன்பு நீட்டவே நந்தன் வந்ததை உணர்ந்து நிமிர்ந்தாள் அபிலாஷா.

“வாங்க நந்தன்… இப்போ தான் வந்தீங்களா?” என்று இயல்பாக புன்னகைக்க முயல அவள் முகத்தில் இருந்த குழப்பம் அவன் உணர்ந்து கொண்டான்.

அவள் அருகில் கட்டிலில் அவளை பார்க்கும் படி அமர்ந்து “என்னாச்சு லாஷா ஏன் டென்ஷனா இருக்க? ஏதாச்சும் ப்ராப்ளமா மா?” ஆதூரமாக கேட்டபடி தன் கை கொண்டு அவள் கன்னத்தை தாங்க

“அது ஒன்னும் இல்ல நந்தன்…” என்று முதலில் மழுப்பியவள் அவன் விழி தந்த ஊக்கத்தில்

“நந்தன் அது வந்து முகில் தெரியும் ல… சுகந்தி அத்தை பையன்..” என்று கேட்க

“ம்ம்.. நாம உன் வீட்டுக்கு போனப்போ பார்த்தோம். அப்பறம் ரிசப்ஷன் ல கூட பார்த்தோமே…” என்று நினைவு படுத்திக் கொள்ள

“அவன் படிப்பு முடிஞ்சதும் அத்தையும் மாமாவும் நம்ம கம்பெனில வேலை தர சொல்லி கேட்டாங்க… நானும் நம்ம ரிலேட்டிவ்… நமக்கு ஹெல்ப்பா இருப்பான் னு சேர்த்திட்டேன்.. 

ஆனா அவன் ஆளே சரியில்லை நந்தன் திடீர் திடீர்னு சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போய்டுவான்… நான் நிறைய வார்ன் பண்ணி.. ஏன் வேலையை விட்டு கூட அனுப்பி பார்த்துட்டேன். அடுத்து அத்தை அழுது புலம்பி ஒரு ட்ராமா பண்ணி திரும்ப ஆஃபிஸ் வருவான்… அதனால நான் அவனுக்கு பெருசா போஸ்டிங் எதுவும் கொடுக்கல..‌ 

பட் இப்போ வந்து நீதான் அடிக்கடி ஆஃபிஸ் வர மாட்டிங்கிறியே.. உன்னோட பவர் எல்லாம் எனக்கு எழுதி கொடு நான் பொறுப்பா ஆஃபிஸ் பார்த்துக்கிறேன் னு கேட்டு தொந்தரவு பண்றான்… நான் அவனை நல்லா திட்டி அனுப்பிட்டேன். ஆனா அப்பறம் அத்தை ஃபோன் பண்ணி அவங்க ட்ராமாவை ஆரம்பிச்சிட்டாங்க… அதான் லேசா தலைவலி..” என்று சொல்ல

“அது உன் ஆஃபிஸ் லாஷா… எந்த முடிவா இருந்தாலும் நீதான் எடுக்கனும்… சொந்த பந்தம் னு நீ இதுல எதையும் போட்டு குழப்பிக்காதே… சரியா?” என்று அவள் கன்னத்தில் இருந்து தன் கையை எடுக்காமல் கூற

“ம்ம் கண்டிப்பா நந்தன்.. நந்தன் நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்று பீடிகை போட

“என்ன லாஷா?”

“இல்ல… நம்ம ஆஃபிஸ் பிஸ்னஸ் எல்லாத்தையும் நீங்க கவனிச்சுப்பீங்களா?” ஏக்கத்துடன் அவனை பார்த்து கேட்க அவள் பார்வை தன்னை தாக்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் அபிநந்தன்.

“சாரி லாஷா… என்னால அது மட்டும் முடியாது… ப்ளீஸ் உனக்கு பின்னாடி உனக்கு சப்போர்ட்டா நான் எப்பவும் இருப்பேன். ஆனா உன்னோட பிஸ்னஸ் ஆஃபிஸ் எதுலயும் நான் தலையிட விரும்பல… புரிஞ்சுக்கோ டா..” கூடிய மட்டிலும் அவன் மென்மையாக கூற

“ஓகே நந்தன்… விடுங்க எனக்கு நீங்க இதைத்தான் சொல்லுவீங்க னு தெரியும்… இருந்தாலும் ஒரு சின்ன நப்பாசை” என்று அவளும் தன்னை சமாதானம் செய்து கொள்ள முயல

“பிஸ்னஸ் ல உனக்கு நல்ல பார்ட்னர் சூஸ் பண்ணி தர வேண்டியது என் பொறுப்பு லாஷா.. கூடிய சீக்கிரம் உன்னோட ஆஃபிஸ் டென்ஷன் ல இருந்து உன்னை நான் ரிலீஃப் பண்றேன்..‌” என்று அவளுக்கு வாக்கு தந்தான் அபிநந்தன்.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post