இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 3 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 28-04-2024

Total Views: 15335

இதயம் - 3

பரத் அங்கு வேலைக்குச் சேர்ந்த இரண்டே நாளில் முழு ஹோட்டலின் கட்டுப்பாட்டையும் தன்வசம் கொண்டு வந்து விட்டான். ஹோட்டல் மொத்தமும் புது மேனேஜர் அழகானவர், அறிவானவர் ஆனால் வேலை விஷயத்தில் ரொம்பவும் கரரானவர் என்பதை அங்கு வேலை செய்யும் ஒவ்வொரு காதிலும் விழுந்தது. இதே குரல் கணேஷ் காதிற்கும் செல்ல அவனோ யாழிசையின் காதில் ஓதினான். யாழிசை புன்னகையுடன் "அப்போ பழைய மேனேஜரோட ஹெல்ப் அவர்க்கு தேவைப்படாது அவரை அனுப்பிடு" என்று கூற கணேஷ்ஷும் சரி என்று கூறி சென்று விட்டான். அடுத்த நாள் கணேஷ் கிச்சனில் நின்று கத்திக் கொண்டிருக்க எதார்த்தமாக ரொண்ட்ஸ் சென்ற பரத் அதை பார்த்து விட்டு அவன் அருகில் சென்றான். 

"என்னங்க ஆச்சி ... ஏன் இப்படி டென்ஷன்னா குக்ஸ் கிட்ட கத்திட்டு இருக்கிங்க" என்று பரத் சந்தேகமாக கேட்க "மேடம் காபி கேட்டாங்க ... ஒரு காபி போட்டு தர சொன்னா தண்ணிய விட கேவலமா போட்டு கொடுத்திருக்காங்க" என்று கணேஷ் கோபமாக கூற அங்கிருந்த சமையல்காரர்களோ "சார் நாங்க எப்பவும் போல தான் சார் காபி கொடுத்தோம்" என்று கூறினர். "அப்போ எல்லா கெஸ்ட்கும் இப்படி தான் காபி கொடுக்றிங்களா" என்று கணேஷ் கத்த பரத் அதற்குள் காபியை அருந்தி பார்த்து விட்டு "கணேஷ் கணேஷ் இருங்க ... அவங்க போட்ட காபி நல்லா தான் இருக்கு ... கெஸ்ட்க்கு எல்லாம் காபி நல்லா இல்லைன்னா கம்ப்ளைண்ட் எனக்கு வராதா ... மேடம்க்கு தான் காபி டேஸ்ட் பிடிக்கல ... இருங்க நா போட்டு தரன்" என்று பரத் மடமடவென பாலை அடுப்பில் வைத்து காய்ச்சி காபியை போடத் தொடங்கினான். 

ஐந்து நிமிடத்தில் காபியை போட்டு கணேஷ் கையில் கொடுத்த பரத் "இப்ப கொண்டு போய் கொடுங்க மேடம் டென்ஷன் எல்லாம் பறந்து போய்டும்" என்று கூற கணேஷ் அதை வாங்கிக் கொண்டு வேகமாக யாழிசை அறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்த பத்தாவது நொடியில் மீண்டும் வேகமாக வெளியே வந்த கணேஷ் அவசரமாக பரத்தை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். "மேடம் கூப்ட்டிங்களா" என்று பவ்வியமாக கேட்ட பரத்தை பார்த்த யாழிசை "தாங்க்ஸ் பார் யுவர் காபி ... அண்ட் இனிமே நா ஹோட்டல்க்குள்ள நுழைஞ்ச பத்து நிமிஷத்துல நீங்க எனக்கு காபி கொடுக்கனும் உங்க வேலையோட இதையும் சேத்துக்கோங்க" என்று கூற பரத் "ஓகே மேடம்" என்று சிரித்தவாறே வெளியேறினான். 'அன்னைக்கு அவர் கேட்டப்போவே ஓகே சொல்லிற்கலான்னு நினைச்சி சிரிச்சிட்டு போறாரு" என்று யாழிசை கூறி காபியை பருக கணேஷ்ஷும் புன்னகைத்தான். 

இவ்வாறாக பரத் யாழிசையின் நம்பிக்கையை வென்று வைத்திருந்தான். இன்றும் யாழிசை அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே பரத் அவ்வறையை விட்டு வேகமாக சமையலறையை நோக்கிச் சென்றான். யாழிசைக்காக காபியை போட்டவன் அதை சிந்தாமல் எடுத்துச் சென்று மரியாதையுடன் பவ்வியமாக வைத்தான். யாழிசை பரத்திற்கு புன்னகையுடன் "தாங்க்ஸ்" என்று கூறி அதை வாங்கிக் கொண்டாள். 

"இப்ப ஜெர்மனில ஓப்பன் பன்ன போறது 'இசை ஸ்டார்ஸ்'ஸோடா சில்வர் ஜூப்லி ஹோட்டல் ... அதனால அந்த ஹோட்டல் முழுசா சில்வர் கோட்டிங்கால நிறம்பி இருக்கனும் ... அண்ட் அங்க சர்வ் பன்ன போற ப்லேட்ஸ் டம்ப்ளர் ஸ்பூன் எல்லாமே சில்வர்ல தான் இருக்கனும் ... அதோட அங்க செக்யூரிட்டீஸ் டபுள் மடங்கா இருக்கனும் ... நீங்க எங்க ஹோட்டலோட ப்ளான்ன பாத்துட்டு உங்க கவர்ன்மென்ட் கிட்ட பர்மிஷன் வாங்கி தரனும்" என்று கணேஷ் கூற "உங்களோட ப்ளான்ன நாங்க டிஜிட்டலா பாக்கலாமா" என்று அவர்கள் கேட்கவும் கணேஷ் அவ்வறையில் மிளிர்ந்த மின்விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு வெள்ளை ஸ்க்ரீனில் அவர்கள் கட்டப்போகும் புது ஹோட்டலுக்கான டிஜிட்டல் ப்ளானை போட்டுக் காட்டி விளக்கினான். அவர்களுக்கு அது பிடித்து விட அவர்களும் அதை பற்றி அவர்கள் நாட்டு அரசாங்கத்திடம் யாழிசை சார்பாக பேசுவதாக ஒப்புதல் கூறி அங்கிருந்து நகர்ந்தனர். 

பரத் குழப்பமாக நின்றிருக்க யாழிசை "என்ன கேக்கனும் தயங்காம கேளுங்க" என்று பரத்தின் தயக்கத்தை புரிந்துக் கொண்டு கேட்டாள். "இல்லை மேடம் இவங்க ஜஸ்ட் நமக்கு சப்போர்ட் தான பன்ன போறாங்க இன்வஸ்டர்ஸ் இல்லையே இவங்களுக்கு ஏன் நம்ம ப்ளான் எல்லாம் போட்டுக் காட்டனும்" என்று ஆரம்பத்தில் இருந்தே மண்டையை குழப்பிக் கொண்டிருந்த கேள்வியை கேட்டான். "நம்ம ஸ்டார்ட் பன்ன போறது தமிழ்நாடா இருந்தா பரவால்ல ... நமக்கு எல்லா ரூல்ஸ்ஸும் தெரியும் அதுப்படி நம்ம பன்னிடலாம் ... ஆனா நம்ம இப்போ தொடங்க போறது ஜெர்மனில அங்க இருக்க ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் அப்பறம் ரெஸ்ட்ரிக்டட் எல்லாம் எதும் தெரியாது ... இந்த மாதிரி நாலு பேர்ர அதும் அந்த ஊரு கவர்ன்மென்ட் சம்மந்தப்பட்டவங்களை நம்ம ப்ளான்ன சொல்லி அப்ரூவல் வாங்க சொன்னோம்ன்னா அவங்க நமக்கு அந்த ஊர் ரூல்ஸ் ரெஸ்ட்ரிக்ஷன் சொல்லி ஹெல்ப் பன்னுவாங்க ... அதோட அவங்களால நாலு கஸ்டமர்ஸ் வர வாய்ப்பு இருக்கு ... எல்லா கோணங்கல்லையும் யோசிக்கனும் பரத் ... பிஸ்னஸ் மைன்ட் எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவெடுக்க கூடாது" என்று யாழிசை பெரியதாய் ஒரு விளக்கத்தை கூறி முடிக்க பரத் புன்னகையுடன் "சூப்பர் மேடம் நானும் கத்துக்றன்" என்று கூற கணேஷ் தான் ஏக அதிர்ச்சியில் நின்றிருந்தான். 

"வேற ஏதோ சொல்லனுன்னு நினைக்கிறிங்க சொல்லுங்க" என்று யாழிசை கூறி பரத்தை பார்க்க பரத் "மேடம் நம்ம ஹோட்டல்ஸ் எல்லாத்துக்கும் மோஸ்ட்லி இசை தான் நேமா இருக்கு இந்த சில்வர் பில்டிங்க நம்ம ஏன் சில்வர் மென்ஷன் பன்ற மாதிரி நேம் வைக்கக் கூடாது" என்று கேட்டான். "சில்வர்ன்ற பேர்ல நிறைய பில்டிங்க்ஸ் கட்டி இருக்காங்க பரத்" என்று யாழிசை கூற "இருக்கு மேம் ஆனா எல்லாருமே சில்வர்ன்னு இங்க்லீஷ்ல தான் மென்ஷன் பன்னி இருப்பாங்க ... நம்ம ஏன் அதை வேற மாதிரி 'வெள்ளி ஸ்டார்ஸ்'ன்னு மென்ஷன் பன்னக்கூடாது" என்று கேட்டான். "உங்களோட தமிழ் பற்று எனக்கு புரியுது ... ஆனா நம்ம ஹோட்டல்க்கு அது சூட் ஆகாது" என்று யாழிசை கூறி அங்கிருந்து நகர்ந்து விட்டாள். பரத்தும் சரி என்று கிளம்பி விட்டான். 

மதிய இடைவேளையில் ரிஷப்ஷனிஸ்ட்டிடம் இருந்து தனது உணவை வாங்கிக் கொண்டு உள்ளேச் சென்ற வாசு அஞ்சனாவின் வருகைக்காக காத்திருந்தான். அவளோ அவனை கடந்து மற்றொரு மேசையில் அமர வாசு கடுப்புடன் "ம்ச் அஞ்சூ" என்று பற்களை கடித்தவாறே அவள் அருகில் சென்று அமர்ந்தான். "எதுக்கு இப்போ பக்கத்துல உட்கார்ர ... உனக்கு தான் என் கிட்ட பேசனுன்னாலே அவ்வளவு கடுப்பா இருக்கே அப்பறம் ஏன் பக்கத்துல உட்கார்ர" என்று அஞ்சனா கோபமாக கேட்டாள். "ஹேய் இன்னுமா நீ கோவமா இருக்க ... சரி நைட் விடிய விடிய பேசறன் டி" என்று வாசு இறங்கி வந்து வாக்கு கொடுத்தான். "நா ஒன்னும் அதுக்கு கோவமா இல்லை ஆப்பிஸ் வந்து நாலு மணி நேரம் ஆச்சி ஒரு மெசேஜ் கூட நீ எனக்கு பன்னல அப்பன்னா என்ன அர்த்தம் நீ என்னை அவாய்ட் பன்றன்னு தான அர்த்தம்" என்று அஞ்சனா புதியதாய் ஒரு பிரச்சனையை கிளப்ப வாசுவிற்கு ஐய்யோ என்றிருந்தது. அப்பொழுது அங்கு வந்த தாமரை வாசு அருகில் அமர்ந்து அவன் உணவை எடுத்துக் கொண்டு அவள் உணவை பிரித்து அதை சிறிது சுவை பார்த்து விட்டு வைத்தாள். அதை கண்டதும் அஞ்சனாவின் முகம் சுருங்கி அறுவெறுப்புடன் வைத்துக் கொண்டாள். 

இது எப்பொழுதும் பழக்கமான ஒன்று தான் ... சித்தார்த்தும் சரி தாமரையும் சரி வாசுவின் உணவை எந்த தயக்கமும் இன்றி எடுத்து உண்ணுவது அவர்களிள் பழக்கம். தாமரை என்றாவது ஒரு நாள் தன் வீட்டின் சமையல் பிடிக்கவில்லை என்றாலோ அல்ல அவளுக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தாலோ வாசுவின் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவளுடையதை அவனிடம் நீட்டி விடுவாள். இன்றும் அதே போல் தான் சாப்பாட்டை வைத்து விட்டு எதற்கும் ஒரு வாய் சுவை சரியாக இருக்கிறதா என்று உண்டு பார்த்தாள். வாசுவிற்கு சுவை பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் சென்று விடுவான் என்று தான் தாமரை இவ்வாறு செய்வது. "ச்சீ ... உன் எச்சில அவனுக்கு கொடுக்கற" என்று அஞ்சனா அதை தள்ளி வைக்க வாசு வேகமாக சாபாட்டை எடுத்துக் கொண்டு வேறு மேசைக்கு நகர்ந்து விட்டான். அஞ்சனா எந்த விஷயத்தில் அவனிடம் சண்டைக்கு நின்றாலும் பொறுமையாக கையாளுவான். ஆனால் தன் நண்பர்களின் பழக்கத்தில் ஏதேனும் மாறுதல்கள் செய்யுமாறு அஞ்சனா கூறினாள் அடுத்த நிமிடம் அவன் அங்கு இருக்க மாட்டான். 

"என்ன டா தனி தனியா உட்காந்திருக்கிங்க ... வழக்கம் போல ச்சீன்னுட்டாளா" என்று சித்தார்த் வாசு அருகில் அமர்ந்தவாறு கேட்டான். "டேய் ஏன்டா" என்று தாமரை சித்தார்த்தை பார்த்து முறைத்தாள். "எனக்கு ஏன் மச்சான் கீர்த்தி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கல" என்று வாசு கேட்க சித்தார்த் அதிர்ந்து "டேய் என்ன பார்வைய என் ஆள் பக்கமா திருப்பற" என்று சித்தார்த் கீர்த்தியை ஒரு பக்கமாக அணைத்தவாறு கேட்டான். "ம்ச் நீ குடுத்து வச்சவன் உனக்கு உன்னை புரிஞ்சிக்கிற பொண்ணு கிடைச்சிருக்கா எனக்கு அப்படியா ... எழுந்தா சண்டை உட்காந்தா சண்டை குனிஞ்சா சண்டை... ப்பா முடியல டா ... வேலைய விட இவளால தான் நா அதிகமா ஸ்ட்ரஸ் ஆகறனே" என்று வாசு புலம்பினாள். "இங்க பார் அதுக்காக நீ என் ஆள் பக்கம் எல்லாம் பார்வைய திருப்பக் கூடாது புரியுதா .. ஏன்னா அவ உனக்கு தங்கச்சி முறை" என்று சித்தார்த் கூற வாசு அவனை முறைத்தான். "அடச்சீ சாப்பிடு" என்று சித்தார்த்தின் கையை கீர்த்தி தட்டி விட சித்தார்த்தும் அமைதியாக உண்ணத் தொடங்கினான். 

"ம்ம்ம்ம் ... பரத் சமையலே சமையல் தான் ... எப்படி டா உன் தம்பி இவ்வளவு சூப்பரா சமைக்கிறான் ... என்னை விட சின்னவனா போய்ட்டான் இல்லைன்னா அவனை கடத்திட்டு போய் கல்யாணம் பன்னி இருப்பன்" என்று தாமரை வாசுவின் சாப்பாட்டை ரசித்து உண்டவாறே கூற வாசு "அவனுக்கு எங்க ஆச்சியோட கை பக்குவம் ... ஊருக்கு போகும் போதெல்லாம் எதாவது ஒன்னு கத்துகிட்டு வந்திருவான்" என்று புன்னகையுடன் தன் தம்பியை நினைத்து பெருமிதத்தவாறே கூறினான்.

"மச்சான் அங்க இருந்து ஒரே பர்னிங் ஸ்மெல்லா வருது" என்று சித்தார்த் அஞ்சனா இடத்தை குறிப்பிட்டு காண்பித்து கூற வாசு "நா போய் என்னன்னு பாக்கறன் நீங்க சாப்பிடுங்க" என்று கூறிய வாசு அஞ்சனாவிடம் சென்றான். வாசு அவள் அருகில் அமர்ந்ததுமே அஞ்சனா கண்களில் அருவி போல் கண்ணீரை ஊற்றெடுத்து கொட்டியவாறே "நீ என்னை ரொம்ப ஹர்ட் பன்ற வாசு ... நா என்னை இதை வாங்கி கொடு அதை வாங்கி கொடுன்னா கேட்டன் ... என் கூட பேசுன்னு தான கேட்டன் அதுக்கே இப்படி மூஞ்ச திருப்பிகிட்டு போற ... நா உனக்காக தான வேலைக்கே வந்தன்" என்று அஞ்சனா எப்பொழுதும் போல் பழைய புராணமே பாட வாசு "சரி சரி அழுகாத அதான் நைட் பேசறன்னு சொல்லிட்டனே அப்பறம் என்ன" என்று அஞ்சனாவின் முதுகை நீவி ஆறுதல்படுத்தினான். 

அதன் பின் வாசு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அஞ்சனாவிற்கு மெசேஜ் அனுப்பி பேசினான். மாலை ஐந்து மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு அனைவரும் வெளியில் வர அஞ்சனா வாசுவின் வண்டியில் ஏறிக் கொண்டாள். "அஞ்சு என்ன புதுசா வண்டியில ஏற ... கார் வரலையா" என்று வாசு கேட்டான். "ஏன் ஒரு நாள் கூட உன் கூட நா வரக் கூடாதா" அஞ்சனா கேட்க "இல்லை நீ தான் பைக்ல போனா முகத்துல தூசி விழும் டார்க் சர்கல்ஸ் வரும்ன்னு சொல்லுவியே அதான் கேட்டன்" என்று வாசு கூற அஞ்சனா "இப்படி எல்லாம் நீ இந்த இடத்துல சொல்லி காட்டனுமா வாசு" என்று தாமரையும் சித்தார்த்தும் அருகில் இருப்பதால் சங்கடத்துடன் கேட்டாள். "ஓகே பைன் நா எதும் " என்று கூறிய வாசு அமைதியாக வண்டியை எடுத்தான். சிறிது தூர மௌனத்திற்கு பிறகு "ஏன் வாசு எதுமே பேசாம இருக்க" என்று அஞ்சனா கேட்க "நா எது கேட்டாலும் தான் சண்டை வருதே" என்று வாசு கூற அஞ்சனா "நா உன் மேல இருக்க உரிமையிலையும் பாசத்துலையும் தான சண்டை போட்றன் ... சரி விடு ... எங்க அப்பா புதுசா ஒரு சாப்ட்வேர் கம்பனிய ஜெர்மன்ல ஓப்பன் பன்ன போறாரு அதுக்கான ப்ராசஸ் நடந்துட்டு இருக்க அந்த ஜெர்மன் பங்க்ஷன்ல உன்னை எல்லார்க்கும் அவர் மாப்பிள்ளையா இன்ட்ரோ கொடுத்து கம்பனி பொறுப்பையும் உன் கிட்ட ஒப்படைக்க போறதா சொன்னாரு" என்று அஞ்சனா கூற வாசு வண்டியை அப்படியே சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.


Leave a comment


Comments


Related Post