இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 29-04-2024

Total Views: 19946

‘வெளியே போகலாம் வா’ என்று சொல்லி அழைத்து வந்த அபிநந்தன் ஒரு காஃபி ஷாப் முன்பு வண்டியை நிறுத்த என்ன காரணம் என்று ஆர்வமாக அவனை அபிலாஷா பார்க்க

உள்ளே வர ப்ரதீப் ஏற்கனவே வந்து அமர்ந்திருக்க அவனை பார்த்து அபிலாஷா ஆச்சரியமாக பார்க்க அவனோ இவர்கள் பின்னால் அக்சயா வருகிறாளா என்று எட்டி எட்டி பார்க்க அதை புரிந்து அபிலாஷா

“நீ வெளியே எழுந்து போய் பார்த்தா கூட அக்சயா உன் கண்ணுக்கு தெரிய மாட்டா… அவ எங்க கூட வரலை…” என்று அபி கிண்டல் செய்ய அபிநந்தன் சிரிக்க

“ஹேய் நான் ஒன்னும் அக்சயாவை தேடலையே…” என்று கெத்தாக இருப்பது போல கூற

“வழியுது ப்ரதீப் துடைச்சுக்கோ…” என்று தோழியாக கேலி செய்ய

“ஏதோ என் மச்சானுக்கு வொய்ஃப் ஆகிட்டியேனு உன்னை மன்னிச்சு விடுறேன்… அப்பறம் மச்சான் எப்படி சமாளிக்கிறீங்க இவளை…” என்று அவன் பங்குக்கு இவளை கேலி செய்ய நண்பர்கள் மத்தியில் யாருக்கும் பரிந்து பேசாமல் வேடிக்கையாளனாக மௌன சிரிப்பை மட்டுமே தந்தான் நந்தன்.

“அப்பறம் மச்சான்… நம்ம ரெண்டு பேரோட வீடு ஆஃபிஸ் இதெல்லாம் விட்டுட்டு இங்க என்ன மீட்டிங்? வரச் சொன்னீங்க..” என்று கேட்க 

“ஆமா நந்தன்… ப்ரதீப்பை பார்க்க தான் இங்கே கூட்டிட்டு வந்தீங்களா?” அபி கேட்க

“ஆமா… ப்ரதீப் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் அதான் வரச் சொன்னேன்.” என்று சொல்ல

“சொல்லுங்க அபிநந்தன் ரொம்ப முக்கியமான விஷயமா என்ன?” என்று அவனும் சீரியஸாக கேட்க

“இல்ல..‌ அது வந்து நீங்க இப்போ பிஸ்னஸ் ஸ்டார்ட் அப் க்கு வெய்ட் பண்றீங்க.. லாஷாக்கு அவளோட பிஸ்னஸ் கூட இருந்து கவனிச்சுக்க ஒரு வொர்க்கிங் பார்ட்னர் தேவை… நீங்க ரெண்டு பேரும் ஏன் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் ஆகக்கூடாது?” அபிநந்தன் கேட்க

ப்ரதீப் என்ன சொல்ல என்று புரியாது பார்க்க அபிலாஷா நமக்கு ஏன் இப்படி தோணலை என்று ஆச்சரியமாக பார்த்தாள்.

“சூப்பர் நந்து… நான் கூட இப்படி யோசிச்சதே இல்ல.. ஈவன் நானும் ப்ரதீயும் ஃப்ரண்ட்ஷிப் ஜாலி டாக்ஸ் தவிர பிஸ்னஸ் இதைப்பத்தி எல்லாம் பேசிக்கிட்டதே இல்ல.. என்னோட காலேஜ் டேஸ்ல ஒரு டிஸ்கஷன்ல எங்களுக்குள்ள ஆர்க்யூமெண்ட் வந்ததால அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேருமே அந்த டாபிக் உள்ள போனதே இல்ல.. அதான் எங்களுக்கு இப்படி தோணலையோ என்னவோ…

ப்ரதீப் இப்போ நீ என்னோட பார்ட்னர் ஆன எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கும் டா ப்ளீஸ்…” என்று அபிலாஷா பேச இன்னும் ப்ரதீப்புக்கு என்ன சொல்ல என்று புரியாமல் தான் இருந்தது.

“அபிஷா… சரியா வருமா டி இது..?” அவன் சந்தேகமாக கேட்க

“ஏன் வராது… அதுவும் இல்லாம அந்த முகிலை சமாளிக்க உன்னால தான் முடியும்.. ப்ளீஸ்டா…” என்று சொன்ன பின்பே ப்ரதீப் கோபம் தெரிந்தும் முகில் பற்றி உளறி விட்டோமே.. என்று நாக்கை கடித்து கொள்ள

“முகில்..‌ முகில் என்ன பண்ணினான்? ஏன் என்கிட்ட நீ சொல்லலை?” என்று ப்ரதீப் கோபமாக

“டேய் டேய்… அமைதியா இரு ஃப்ர்ஸ்ட்… அவன் எதுவும் பண்ணல… இனிமே பொறுப்பா இருப்பேன் எனக்கு ஜே.எம்.டி. போஸ்டிங் கொடு னு கேட்டான் நான் முடியாது னு சொல்லிட்டேன். பட் அவங்க அம்மா மூலமா பேச விட்டு கடுப்பேத்திட்டான்…” என்று விளக்க

“இதை ஏன் நீ முன்னாடியே சொல்லலை?” ப்ரதீப் ஆதங்கப்பட

“ம்ம் சொன்னா.. என்ன செய்வ..‌ இவனை பத்தி தெரியுமா நந்து.. சின்ன வயசுல அந்த முகில் என்னை கிண்டல் பண்ணினான் னு அவனோட கையை பிடிச்சு திருகி.. அவனுக்கு மாவு கட்டு போடுற அளவுக்கு பண்ணிட்டான்..’ என்று தன் நண்பனின் பராக்கிரமங்களை எடுத்து சொல்ல அபிநந்தன் ஆச்சரியமாக பார்க்க

“பின்ன இல்லையா அபிநந்தன் நீங்களே சொல்லுங்க… இப்போ அக்சயாவை யாராவது கேலி பண்ணினா நீங்க சும்மா விடுவீங்களா? அபிஷா எனக்கு அப்படி தானே…” என்று சொல்ல இவர்கள் நட்பை நினைத்து பெருமிதம் தான் கூடியது அபிநந்தன் மனதில்.

“சரி இப்போ நந்தன் சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பிஸ்னஸ் ல பார்ட்னர்ஷிப் வைச்சுக்கலாமா இல்லையா?” என்று அபிலாஷா பேச்சை மாற்ற

“பின்ன இல்லாம.. ஒரு வேளை மத்த நேரமா இருந்து நந்தன் இப்படி கேட்டிருந்தா நான் யோசிச்சி இருப்பேன். இப்போ வுட்பியோட அண்ணன் கேட்குறாரு… நீயும் என் மச்சானோட வொய்ஃப் ஆகிட்ட.. அதுமட்டும் இல்லாம கல்யணத்துல மாப்பிள்ளை என்ன பண்றாரு னு யாராவது கேட்டா வெறுமனே மோகன்ராம் பையன்… பிஸ்னஸ் பண்றதுக்கு ட்ரை பண்றாரு னு சொல்லாம யமுனா இன்டஸ்ட்ரீஸ் கம்பனியோட பார்ட்னர் னு சொன்னா கொஞ்சம் கெத்தா தானே இருக்கும்..‌” என்று அபிலாஷாவை வம்பிழுக்க கேலியாக சொல்ல அவனை முறைத்து தள்ளிய அபிலாஷா

“இருடா மவனே..‌. இதுக்கான வெஞ்சன்ஸ் நான் அக்சயா மூலமா தீத்துக்கிறேன்..” என்று அவளும் கோபம் போல பல்லிடுக்கில் வார்த்தையை கூற

“ஐயோ அம்மா தாயே… என் வாழ்க்கை தொடங்கும் முன்னவே பாலூத்தி பாடை கட்டிடாதே…” என்று கையை தூக்கி கும்பிடு போட்டு அவளிடம் சரணடைந்தான் ஃப்ரதீப்

அவனின் செய்கையில் சத்தமாகவே சிரித்தனர் அபிநந்தனும் அபிலாஷாவும்.

ப்ரதீபிடம் இருந்து விடைபெற்று இருவரும் வீட்டிற்கு வர பைக்கில் இருந்து முதலில் இறங்கி உள்ளே சென்ற அபிலாஷா ஹாலில் ஒரு புதிய பெண் அமர்ந்திருக்க அவளுக்கு எதிரே பார்வதி சிநேகமாக சிரித்தபடி இருக்க குழப்பத்தோடு உள்ளே வர

“வா.. அபி” என்று பார்வதி சொன்னதும் “டேய் அபி..” என்று கூக்குரலோடு எழுந்த பெண் அபி என்று ஒரு பெண் வந்து நிற்க குழப்பமாக பார்த்தாள் பார்வதியை..

“சந்தியா… இவதான் அபிலாஷா அபிநந்தனோட மனைவி” என்று அறிமுகம் செய்து வைக்க அபிநந்தன் சரியாக உள்ளே வந்தான்.

“ஹேய் சந்தியா… எப்போ வந்தே… எப்படி இருக்க சந்தியா…” என்று இவனும் மகிழ்வாக கேட்ட படியே அருகில் வர அவனை தோளோடு அணைத்துக் கொண்டாள் அந்த சந்தியா.. 

இதுவரை யாரோடும் இத்தனை மகிழ்வாக சிரித்து பேசாத தன் கணவனை அபிலாஷா வித்யாசமாக பார்த்தாள்.

“ஸ்டேட்ஸ் ல இருந்து எப்போ வந்தே சந்தியா நான் உனக்கு எவ்வளவோ முறை லைன் ட்ரை பண்ணி பார்த்தேன் கிடைக்கவே இல்லை.. நீ எப்படி சடனா அதுவும் இந்த வீட்டு அட்ரஸ் உனக்கு எப்படி?” என்று அபிநந்தன் நீண்ட நாட்கள் கழித்து தோழியை பார்த்த மகிழ்வில் கேட்டுக் கொண்டே போக

“கொஞ்சம் பொறுமையா ஒவ்வொன்னா கேளு அபி… அப்போ தானே நான் பதில் சொல்ல முடியும்..” என்று சிரித்தாள் சந்தியா.

“டேய் நந்தா.. சந்தியா நம்ம பழைய வீட்டுக்கு தான் போயிருக்கா.. அங்க நாம குடி வச்சோமோ அந்த பொண்ணு தான் இந்த வீட்டு அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைச்சிருக்கு…” என்று பார்வதி சொல்ல

“ஆமா அபி.. அம்மாக்கு அந்த வீடு அவ்வளவு பிடிக்கும்… உனக்கும் அந்த வீட்டை மாத்த விருப்பம் இல்லை னு சொல்லுவ.. இப்போ எப்படி டா ஷிப்ட் ஆனீங்க?” என்று சந்தியா கேட்க

“காலத்துக்கு தகுந்த மாதிரி மாறித்தானே ஆகனும் சந்தியா… நந்தாக்கு கல்யாணம் ஆகிடுச்சு இப்போ அச்சுக்கு கல்யாணம் ஆக போகுது… ஒரே ரூம் இருக்க வீட்ல எப்படி.. அதுவும் அபி பெரிய இடத்து பொண்ணு… எங்க விருப்பத்துக்காக அந்த வீட்ல அவ்வளவு அனுசரிச்சு போனா… அவளோட வசதியும் நாங்க கொஞ்சம் யோசிக்கனுமே… 

அதே போல இப்போ அச்சுக்கு அமைஞ்ச மாப்பிள்ளை நந்தா வேலை செய்ற கம்பெனி முதலாளியோட மகன்… அப்போ அவங்களுக்கு சமமா நாமளும் இருக்கனுமே…” என்று மனதில் தோன்றியதை பார்வதி சொல்ல

“சரி சந்தியா.. நீ எப்படி சடனா இந்தியாக்கு… அமெரிக்கால தானே இருந்த எப்போ வந்த? எப்படி போகுது உன் மேரேஜ் லைஃப்.. உன் ஹஸ்பண்ட் வரலை?” என்று மீண்டும் அபிநந்தன் அடுக்க

“எல்லாத்துக்கும் ஒரே பதில் தான் அபி..” என்று விரக்தியாக சிரித்தாள் சந்தியா. மூவரும் அவளை கூர்ந்து பார்க்க

“எங்களுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சு..” என்று வெற்றுப் புன்னகை சிந்த அபிநந்தன் அதிர்ச்சியாக பார்க்க

“ஏன் மா என்னாச்சு?” என்று பதறி கேட்டார் பார்வதி. அபிலாஷா எதுவும் பேசாமல் இவர்கள் சம்பாஷனையை கவனிக்க மூவரையும் ஒரு முறை பார்த்த சந்தியா தன் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் மீண்டும் கண் முன் வர கண்கள் கலங்க ஆதரவாக தோளை தொட்ட பார்வதி தோளில் சாய்ந்து கொண்டாள் சந்தியா.

“என்னாச்சு சந்தியா? பெரிய இடம்… மாப்பிள்ளையும் டாக்டர்.. நீயும் அவரும் ஒரே ப்ரொஃபஷன்… உங்களுக்குள்ள நல்ல புரிதல் வரும் னு சொன்னியே… என்னாச்சு சந்தியா?” பரிதவிப்பாக அபிநந்தன் கேட்க

“நீ சொன்னதை அப்போவே கேட்டிருக்கனும் அபி… இந்த மாப்பிள்ளையை வீட்ல சொல்றாங்க னு ஒத்துக்காதே நீ பேசி பார்த்து முடிவு எடு னு நீ அன்னைக்கு அவ்வளவு சொன்ன.. நான் தான் உனக்கு மட்டும் இல்ல என்னை நானே சமாதானம் பண்ணிக்க தான் உனக்கு இத்தனை காரணங்கள் சொல்லி இருக்கேன்..

அவன் சரியான சைக்கோ அபி.. சந்தேகம் சந்தேகம்… எதுக்கெடுத்தாலும் சந்தேகம்… கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரங்க ஃப்ரண்ட்ஸ் னு அத்தனை ஆம்பளைங்க எல்லாரோடவும் என்னை இணைச்சு வைச்சு பேசினான். நான் கூட ஏதோ பொசசிவ் னு விட்டேன். ஒரு டாக்டரா ஒரு பேஷண்ட் கூட பேசுனா கூட சந்தேகம்… ஒரு நிலைல அடி உதை னு அவனோட அராஜகம் அதிகமாயிடுச்சு… ஆரம்பத்துல வீட்டுக்கு தெரிஞ்சா பெரியவங்க வருத்தப் படுவாங்க வேண்டாம் னு தான் அமைதியா பொறுத்து போனேன்.

ஆனா நாளுக்கு நாள் அவனோட வக்கிர புத்தி… என்னை ரொம்ப கொடுமை படுத்திட்டான்… என்னை வீட்ல அடைச்சு வைச்சு கொடுமை பண்ணினான். என் நடவடிக்கையில சந்தேகம் வந்து அப்பா என் ரிலேட்டிவ் கொலிக் மூலமா எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அவங்களே வந்து அவன்கிட்ட இருந்து என்னை ஷேவ் பண்ணி கூட்டிட்டு வந்திட்டாங்க அப்பறம் எப்படியோ டிவோர்ஸ் வாங்கிட்டு… இப்போ தான் நிம்மதியா மூச்சு விடுற மாதிரி இருந்தது.” என்று சந்தியா சொல்ல

“அட பாவமே இந்த காலத்துல இப்படியுமா இருப்பாங்க.. சந்தியா அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க ம்மா?” பார்வதி விசாரிக்க 

“அவனோட குணம் தெரியாம கல்யாணம் பண்ணி வைச்சிட்டோமே பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே னு அப்பா அம்மா ஒரே அழுகை… தினமும் அதை நினைச்சு புலம்பி அவங்களும் அதுல இருந்து வெளி வராம என்னையும் வரவிடாம அதுதான்.. எல்லாத்தையும் விட பெரிய டார்ச்சர்… அதான் அவங்கள பாட்டியோ கிராமத்துல செட்டில் பண்ணி ஹோம் கார்டன் விவசாயம் னு அவங்க மனசை திசை திருப்பிட்டு இப்போ ஒன் மன்ந்தா இங்க இருக்கிற ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ல வேலை பார்த்திட்டு இருக்கேன்.” என்று மொத்தமாக சொல்லி முடிக்க கண்கள் கலங்க அமர்ந்திருந்தான் அபிநந்தன்.

“டேய் அபி… என்னாச்சு? நானே அதுல இருந்து வெளியே வந்திட்டேன் அபி… ஏதோ சின்ன வயசுல இருந்து உன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணி பழகிட்டேன்.. அதான் இதையும் சொன்னேன். நான் இப்போ நல்லா இருக்கேன் அபி… ஏன் இப்படி ஃபீல் பண்ற?” என்று அவனின் கையை தொட இருவரையும் கண் சுருங்க பார்த்து நின்றாள் அபிலாஷா.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post