இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...33-2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 29-04-2024

Total Views: 29224

அவளது நெருக்கமான மூச்சுக்களும் அவளது வாசமும் அந்த மயிலிறகு கண்களும் லிப் கிளாஸ் போட்டதால் பளபளத்த இதழ்களும் லெகங்காவின் தாவணியை கழட்டி சோளி மற்றும் பாவாடையுடன் இருந்த பெண்மையின் வனப்புகளும் பளிச்சிட்ட பளீர் இடுப்பும் அவனை மிகுந்த சோதனைக்கு உள்ளாக்கி இருந்தன. வித்தைகளைப் பற்றி தெரியாதவரை ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் பிரமிப்பும் மட்டுமே இருக்கும்… கற்றுக்கொண்டபின் சுவை தெரிந்தபின் இளமை நரம்புகள் அனைத்தும் அவள் அருகாமையில் வெடித்து வெளியே வரும் சூழல்.


“உன்னை யாருடா டீலெல்லாம் போடச் சொன்னது. உன் வாயை கொடுத்து நீயே வினையை இழுத்து வச்சுக்கிட்ட… உன் ஆளு வேற பயங்கர டென்ஷன்ல இருக்கா… கண்டிப்பா கிட்டே வந்து கொஞ்சவோ கெஞ்சவோ மாட்டா… இது உனக்கு தேவையா… பட்டினி கிடந்து சாவு…’ கண்டபடி திட்டியது மனசாட்சி. தன்னையே நொந்தபடி ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்.


“என்ன பார்வை… திரும்பி படுங்க… நான் டிரஸ் மாத்தணும்…” அதே காட்டமான குரல். அதுதான் தனக்கும் பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டவன் கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.


“ஆச்சா…” கண்களை மூடியபடியே கேட்க “திரும்புங்க…” அவளிடம் இருந்து சற்று இரங்கிய குரல்.


கண்களை திறந்து பார்த்தவனின் எதிரில் அதே நிலையில் அருகில் அமர்ந்திருந்தாள் பூச்செண்டு.


“இன்னும் என்னடி…?” என்றான் எரிச்சலாய்.


“பிளவுஸ் பேக் ஹூக்… என்னால கழட்ட முடியாது… நீ..நீங்கதான்…” அவள் முடிக்கும் முன் “நோ…”  வேகமாய் உதறிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.


“நீ என்னை வேணும்னே டெம்ப்ட் பண்ண பார்க்கிற… நான் வலிய வந்து பேபி செல்லக்குட்டின்னு உன்கிட்ட வழியணும்னு பிளான் பண்ற… முன் வச்ச காலை நான் பின் வைக்க மாட்டேன்டி… ஐ காண்ட் ஹெல்ப்… என்னவோ பண்ணிக்கோ…” 


கைகளை விரித்தவனை பற்களை நறநறத்தபடி பார்த்தவள் உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்ல… உங்களுக்கு செல்ஃப் கண்ட்ரோல் இருந்தா நான் ட்ரெஸ்ஸே இல்லாம பக்கத்துல படுத்தாலும் உங்க விரல் நுனி கூட என் மேல படாது… வெட்டியா டீலிங் போட்டுட்டு என் மேல பழி போடுறீங்களா… இப்ப கழட்ட முடியுமா முடியாதா…?” அவனை கழுத்தை நெறிக்கும் அளவு கோபம். பின்னே… அவளுக்கும் ஆசைத் தீயை மூட்டி இன்பத்தின் சுவையை உணர வைத்து தேவையற்று வம்பிழுத்தால் வெறி கிளம்பாதா…?


“முடியாதுடி…” ஜம்பமாய் கூறி கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டான்.


“சரி… எனக்கு என்ன போச்சு… நான் உங்க அம்மாகிட்டயே போய் கழட்டிவிட சொல்றேன்... இன்னைக்கு மதியம்தான் மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு மருமகளே… சீக்கிரம் நீயும் நல்ல செய்தி சொல்லுன்னு சொன்னாங்க… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைன்னு அவங்க தெரிஞ்சுக்கட்டும்…” சொன்னபடியே எழுந்து வேகமாய் கதவை நோக்கி நடக்க துள்ளி எழுந்தவன் ஓடிச் சென்று அவளை மறித்ததுபோல் நின்றான்.


“என்னடி… பிளாக் மெயில் பண்றியா… கீழே பெரியவங்க எல்லாரும் தூங்காம பேசிட்டுதான் இருக்காங்க… இவ்வளவு நேரம் கழிச்சு போனா என்ன நினைப்பாங்க…”


“இப்போ என்னை என்னதான் பண்ணச் சொல்றீங்க… ஒரு வழிக்கும் வர மாட்டேங்கறீங்க… வழிய விடுங்க மாமு… எரிச்சல் படுத்தாதீங்க…” அவனை தள்ளிக் கொண்டு நகர முயன்றவளின் கரத்தை பிடித்து இழுத்து நிறுத்தினான். 


அவளை முறைத்தபடியே வெடுக்கென அவளை திருப்பி அவள் இடுப்புவரை வழிந்து கிடந்த கூந்தலை அள்ளி அவளுக்கு முன்புறமாக போட்டான். முதல் கொக்கியில் கை வைத்தவன் எச்சிலை கூட்டி விழுங்கினான்.


இரண்டு கொக்கிகளை அவிழ்த்த நிலையில் ‘ஐயோ முடியலையே…’ வடிவேலு பாணியில் மனதிற்குள் சத்தமிட்டான் அவன் படும் அவஸ்தைகளை அறிந்து கொண்டவள் வெளிவரத் துடித்த சிரிப்பை இதழுக்குள் அடக்கி ‘டீலிங்கா போடுற டீலிங்கு… இப்போ நீ வழிக்கு வரியா இல்லையான்னு பாரு…’ தனக்குள் சொல்லிக்கொண்டு “இன்னும் எவ்வளவு நேரம்…?” என்றாள் குரலை சற்று உயர்த்தி. அவன்தான் இடைப்பட்ட சிறு இடைவெளியில் கண்களால் முதுகுப்புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தானே.


“இருடி…” பல்லை கடித்தவன் அடுத்த இரண்டு கொக்கிகளையும் விடுவித்து வெற்று முதுகினை பார்க்கும் திராணியற்று ஓடிச் சென்று படுக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டான். அடக்க முடியாமல் சத்தமிட்டு சிரித்தவள் 


போடா போடா புண்ணாக்கு 

போடாத தப்புக் கணக்கு

தலைகிறுக்கு ஒனக்கு இருக்கு 

இப்போ என்னாது மனக்கணக்கு 


சத்தமிட்டு பாடியபடியே உடையை களைந்து இரவு உடைக்கு மாறி விளக்கை அணைத்து இரவு விளக்கினை போட்டு அவன் அருகில் படுத்துக்கொண்டாள்.


‘வீக்னஸ் அவளுக்கு தெரிஞ்சு போச்சே…’ தனக்குள் புலம்பியவன் ‘கெத்த விடாம அவ பக்கமாக திரும்பி படுப்போம்…’ கவிழ்ந்த நிலையில் இருந்து அவள்புறம் திரும்பிப் படுத்தவனுக்கு சுர்ரென உச்சி முடி சிலிர்த்து நின்றது. முட்டிவரை மட்டுமே இருந்த ஸ்லீவ்லெஸ் சாட்டின் நைட்டி அணிந்து அவன்புறம் ஒருக்களித்து படுத்து அவனை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“எ..என்னடி இ..இது…” எச்சில் வறண்டு போனது. 


“நைட்டி…”


“அது தெரியுது… இந்த மாதிரி நைட்டி எல்லாம் நீ போடுவியா…?”


“மீராக்காதான் வாங்கி கொடுத்தாங்க… வெயில் காலத்துக்கு ரொம்ப ஃப்ரீயா இருக்கும்னு சொன்னாங்க… அதான் இன்னைக்கு போட்டேன்…” உதட்டை சுழித்து சொன்னவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தவனுக்கு உடல் முழுக்க ஹார்மோன்களின் ஆட்டம் அதிகரித்தது.


“நீ..நீ வேணும்னே என்னை டெம்ப்ட் பண்ணி பாக்குற… இதெல்லாம் அலுவினி ஆட்டம்டி… நா..நான் ஒத்துக்கவே மாட்டேன்… ஒழுங்கு மரியாதையா ஃபுல்லா கவர் பண்ற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்து படு…”


“ஆஹான்… அப்போ தோல்வியை ஒதுக்கங்க… உங்களால முடியலேல்ல…” அவனை இன்னும் நெருங்கி வந்து கேட்க “எல்லாம் முடியும்… தள்ளிப் படுடி…” கண்களை இறுக்கி மூடி கத்தினான்.


சில நொடிகளில் அவன் மூக்கோடு அவள் மூக்கு உரச பட்டென விழி விரித்தவன் நெருக்கமாய் தெரிந்த அவள் முகத்தைக் கண்டு தொண்டைக்குழி ஏறி இறங்க பார்க்க “லூசு மாமு… தாம்பத்தியத்தில யாராவது டீலிங் வைப்பாங்களா…? காதல் ஆட்சி செய்ற இடத்தில என்ன ஈகோ…? ரெண்டு பேர்ல யார் ஆசையா நெருங்கி வந்தாலும் வெற்றி ரேண்டு பேருக்கும்தானே… கிடைக்கிற சந்தோஷத்தில ரேண்டு பேருக்குமே பங்கு இருக்குதானே… அப்புறம் எதுக்கு வெட்டி வீராப்பு…?” குழைந்த குரலில் கூறியவள் அவன் நெற்றியில் செல்லமாய் முட்டினாள்.


“பொக்கே… பேபி… அப்போ டீலிங்கை கேன்சல் பண்ணிக்கலாமாடீ…” கண்கள் மின்ன கேட்டவனின் கைகள் அவளை கட்டி அணைக்க தயார் நிலையில் இருந்தன. அவன் மூக்கை செல்லமாய் கடித்து வைத்து சிரித்தாள் பூச்செண்டு. அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்து கழுத்துக்குள் புதைந்து கொண்டான் தரணி. அவளும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.


“அப்போ நம்ம ரெண்டு பேர்ல ஹூ இஸ் தி வின்னர்…? ஹூ இஸ் தி லூசர்…?” இதழ்களால் அவள் கழுத்து முழுக்க ஊர்ந்தபடியே கரகரத்த குரலில் கேட்க “ரெண்டு பேருமே வின்னர்… ரெண்டு பேருமே லூசர்…” அவன் காதுமடலை செல்லமாய் கடித்து பதில் கூற “அப்போ என் அம்மாவோட ஆசையை நிறைவேத்தி வைக்கிற வேலையை பார்க்கலாமா பேபி…” தாபமாய் அவள் முகம் பார்த்தபடி கேட்க அவளும் வெட்கமாய் சிரிக்க அன்றைய இரவு முழுக்க முத்த சத்தங்களே அறை முழுக்க ஆட்சி செய்ய அழகான சங்கமம் விடியும்வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.


 



Leave a comment


Comments


Related Post