இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 29-04-2024

Total Views: 17343

பாவை - 19

குமரனை நீதிமன்றத்திற்க்கு தன் வக்கீல் மற்றும் காவல் அதிகாரிகளோடு வர, அவனின் முன்னே வந்து நின்றான் வசந்த்.

வந்த வேகத்தில் அவனின் சட்டையைப் பற்றியவனோ, “உன்னை நான் சும்மா விட மாட்டேன்டா. ஆனந்தியை கொன்னுட்டீல “ என்க, ஒரு நொடி அதிர்ந்த ஹெச்.ஆரான குமரனும் அப்படியேப் பார்வையை மாற்றினான்.

“என்னடா சொல்லுற நீ ?”

“ஏய் எனக்கு என்ன எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா ? இன்னைக்கு இருக்குடா உனக்கு “ என்க, அதே நேரம் உடன் இருந்தவர்கள் பிரித்து விட்டனர்.

வசந்த் ஏற்பாடுச் செய்திருந்த வக்கீலும், “வாங்க சார், நாம்ம உள்ளே போய் பார்த்துக்கலாம் “ எனக் கூறி அழைத்துச் செல்ல, சென்றனர்.

உள்ளே குமரன் நீதிபதியின் முன்னே வந்து நிற்க, அவர்களுக்காக வழக்கு ஆரம்பித்தது. குமரன் செய்த குற்றத்திற்கான தண்டனை கூறும் நொடி வசந்தின் வக்கீல் தடுத்தார்.

“இங்கே நிற்பவர் விபச்சாரத் தொழில் செய்தது மட்டுமில்லாமல் கொலையும் செய்திருந்திருக்கிறார் “ என்க,

“எனது கட்சிக்காரரிர் மீது தேவையில்லாத குற்றச்சாட்டினை  விதிக்கிறார் “

“இல்லை. எங்க கிட்ட ஆதராம் இருக்கு “ எனக் கூறி தங்களிடம் இருந்த ஆதாரம் முழுவதையும் கொடுத்தார்.

அதில் ஆனந்தியைக் காரில் கடத்தி ஹோட்டலுக்கு மயங்கி நிலையில் அழைத்துச் சென்றது. பின் மறுபடியும் அவளையும் அழைத்துக் கொண்டு வந்தது. இறந்ததாக வந்த பிரேக்கிங் நியூஸ். தான் கம்பிளைண்ட் கொடுத்ததும் இதுவரை அதனை கிடைப்பில் போட்டது என்று அனைத்தும் இருந்தது.

வசந்த் அழைத்து அவனிடம் விசாரனை நடத்த, அவனோ தங்களின் காதல் விசியம், அவள் கடைசி நிமிஷம் வர சந்தோஷமாக இருந்ததையும், இவனுக்கு துணையாக காவல் அதிகாரிகள் இருப்பதையும் கூறினான்.

“எந்த போலீஸ் இவனுக்கு துணையா இருக்கு ?” நீதிபதிக் கேட்க,

“நான் கம்பிளைண்ட் கொடுத்த எங்க ஏரியா போலீஸ் “ என்க, அங்கே நிதினும் இருக்க அவனை அழைத்து விசாரித்தனர்.

“எதுக்காக நீங்க இவரை உதாசீனப்படுத்துனீங்க ?”

“சார் அந்த பொண்ணு இறந்தது சூசைடு தான் சார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல பாலியல் ரீதியா துன்புறுத்துனதா இல்லை சார். தண்ணீயால தான் இறந்ததா இருந்தது. நான் தான் அந்த பொண்ணோட பேரெண்ட்ஸ் கிட்ட கொடுத்தேன். அப்படி இருக்கும் போது எப்படி சார் அந்த பொண்ணை கொள்ள முடியும் ?”

“இல்லை இவன் போய் சொல்லுறான். அப்போ இந்த வீடியோக்கு என்ன அர்த்தம் கேளுங்க சார் “ என்று தன் ஆத்திரத்தை அடக்க முடியாது கத்த, அவர்களுக்குமே அந்த நொடி என்ன பொய் சொல்வது என்று தெரியவில்லை.

உடனே நிதின் முன்னே வந்து, “சார், நாங்க விசாரிச்சா வரை அப்போ எந்த தப்புமில்லைன்னு நினைச்சி தான் விட்டுட்டோம். இப்போ நீங்க அனுமதி கொடுத்தா நாங்க விசாரிக்குறோம் சார் “ என்று அப்போதைக்கு குமரனைக் காப்பாற்ற நிதின் கூற,

“குற்றம் சாட்டப்பவரின் மீது போதுமான ஆதாரம் இல்லை என்பதை இந்த வழக்கை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கிறேன். வருகிற பதினாறாம் தேதி இந்த வழக்கு தொடரும். அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன்லில் வெளியே இருப்பார்“ எனக் கூறிய நீதிபதி முடித்து விட, அங்கிருந்து கூட்டம் கலைந்தது.

வெற்றி சிரிப்போடு குமரன் செல்ல, சீறும் நாகமாய் துடித்தான் வசந்த்.

“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை என் கிட்ட ஏன் நீங்க சொல்லலை ?”

“அதை கேட்பாங்கன்னு எனக்கு தெரியல சார் ? ஒரு வேலை அந்த ரிப்போர்ட் தப்பா இருக்கலாம்ல சார் “

“அதுக்கு வாய்ப்பேயில்லை “

“பணத்தைக் கொடுத்து மாத்திருக்கலாம்ல “ என்க, வீக்கீலும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.

வசந்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்பதால் இரவு நேரம் போல் அஞ்சனாவே அவனுக்கு அழைக்க, அழைப்பினை எடுத்தான்.

“என்னாச்சு ? அவனுக்கு தண்டனை கிடைச்சதா ?”

“இல்லை “ என்றவனோ இன்று நடந்த அனைத்தையும் கூறினான்.

“ச்சே ! இப்படி நடந்துப் போச்சே. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அப்படியே இப்பவே அவனைக் கொல்லணும் போல இருக்கு “ என்று அன்று நந்தன் கூறியதை தான் இன்று ஆவேசமாய் அஞ்சனா கூறினாள்.

“அப்போ நாளைக்கு அந்த ஜி.ஹெச் போய் விசாரிக்கலாம் “

“எப்படியும் இதை போலீஸ் விசாரிக்க தான் போறாங்க. என்ன மாதிரி கொண்டு வராங்க பார்க்கலாம் “ என்கவே, பொறுமையிழந்து காத்திருக்கத் தயாரானாள்.

அலுவலகத்தில் அமர்ந்திருந்த அஞ்சனா எதையோ யோசித்தவாறு இருக்க, அவளின் தோள்பட்டையில் கரம் வைத்தான் நந்தன்.

பலமுறை அழைத்தும் அவளிடமிருந்து பதிலே இல்லாமல் இருக்க, கரத்தினை வைத்து தொட்ட நொடியே சட்டென பின் திரும்பினாள்.

“சாரி ! சாரி. கூப்பிட்டேன் ஆனா பதிலே இல்லை. அதான் “ என்க,

“என்ன வேணும் உங்களுக்கு ?” எரிச்சலோடுக் கேட்கவே, அவளின் மனநிலை சரியில்லை என்பதைப் புரிந்துக் கொண்டான்.

“இன்னைக்கு நைட் எங்கையாவது லாங் ட்ரைவ் போகலாமா ?”

“வாட் “

“உங்களோட மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா பீல் இருக்கும் அதான். எனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா அப்படி தான் பண்ணுவேன் “ என்றதும், சில நொடி யோசித்தவளோ பின் சரியென்றாள்.

அன்றைய இரவினை நெருங்கும் நேரம் வேலை முடிந்து இருவரும் வெளியே வர, “எப்படி ? எதுல போக ?” கேட்க,

“எங்க வீட்டுல கார் இருக்கு எடுத்திட்டு வரேன். வந்ததும் கால் பண்ணுறேன். நீங்க ஹாஸ்டல்ல வெயிட் பண்ணுங்க. உங்களோட நம்பர் கொடுங்க “ 

“கண்டிப்பா தரணுமா ?”

“அப்பறம் எப்படிங்க போக முடியும் “ என்க, அவளும் கொடுக்கவே, குறித்துக் கொண்டவனோ அவளிடம் கூறிச் சென்றான்.

இரவு பத்து மணிப் போல் ஹாஸ்டலுக்கு வந்த நந்தன் அஞ்சனாவிற்கு அழைக்க புதிதாக நம்பரைக் கண்டதும் அவன் தான் எனப் புரிந்தது.

“ஹலோ “

“நான் தான் நந்தன். கீழே வெயிட் பண்ணுறேன் “ என்க,

“இதோ வரேன் “ எனக் கூறி அடுத்த ஐந்து நிமிடத்தில் கீழே வந்தாள்.

காரில் முன்னே வந்து ஏறிக் கொள்ள, இருவரும் பயணிக்க ஆரம்பித்தனர்.

“எங்க போறோம் இப்போ ?”

“அப்படியே கொஞ்சம் நேரம் லாங் ட்ரைவ். மனசை போட்டு எதையும் யோசிக்காதீங்க. பாட்டு போட்டு விடுறேன் கேளுங்க. என் கிட்ட எதையாவது பேசணும் தோணுச்சுன்னா பேசுங்க “ எனக் கூறி தன் பயணத்தை ஆரம்பிக்க, அவனோடு தனிமையில் செல்வது கூட பிடித்திருந்தது.

இந்தப் போராட்டத்தில் இவன் துணையாக வரவில்லை என்றாலும் தனக்கு ஆறுதல் கொடுப்பதாக நெஞ்சம் நினைக்க, அவ்வப்போது ஓர விழியால் அவனைக் கண்டாள்.

சிறிது நேரம் செல்ல, “ஏதாவது பேசலாம்ல ?” என்க,

“என்ன பேச ?”

“உனக்கு என்னை பிடிக்குமா ?”

“என்னது ?”

“என்ன பிடிக்கும்ன்னு கேட்டேன் “ என்கவே, அவன் முதலில் கூறிய வார்த்தையை அப்படியே மாற்றுவது உணர்ந்து புன்னகைத்தாள்.

கார் டோரினை இறக்கி விட சில்லென்ற காற்று வந்து தாக்கவே, “உனக்கு ஓகே தானே ?” என்க,

“நல்லாயிருக்கு “ என்றாள்.

பின் இருவரும் சிறிது நேரம் பொதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டேப் பேச, ஹெவே ஓரம் இருந்த காபி ஷாப் ஒன்றில் காரினை நிறுத்தினான்.

“காஃபி சாப்பிட்டு போகலாம் “

“சரி “ என்றவாறு அவனோடு இறங்கி வர, இருவருக்கும் சேர்ந்து காஃபியை ஆடர் கொடுத்தான். வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் செல்லும் வாகனங்களை வேடிக்கைப் பார்த்தவாறு அருந்தினர்.

“உனக்கு ஏதாவது உதவி தேவைப்படுதா ?”

“இல்லையே ? ஏன் கேட்குறீங்க ?”

“என்னென்னு தெரியல. நீ அடிக்கடி வித்தியாசமா நடந்துக்குற மாதிரி இருக்கு அதான் கேட்டேன் “ என்க,

“அப்படியெல்லாம் இல்லை “ என்றதும், சிறிது நேரம் மௌனமாக அருந்தி முடித்தனர். 

பின் இருவரும் கிளம்ப, இவன் கூறியது உண்மை தான் போல் ? மனம் அப்படியே லேசான உணர்வு. ஓடி ஓடி கலைத்துப் போன தனக்கு இந்த இரவு அற்புதமாக ஒரு புது வெளிச்சத்தை வாழ்வில் கொண்டு வந்ததுப் போன்று இருந்தது.

“நீ இப்போ ஏதாவது மிஸ் பண்ணுறையா ?”

“ஆமா “

“என்னது ?”

“என் குடும்பத்தை “ என்கவே, சட்டென திரும்பி அவளைக் கண்டாள்.

“உனக்கு பேமிலி “ அவனோ யோசிப்பது போல் கூற,

“நான் வாழ்ந்த வீடு அங்கே இருந்தவங்க “ என்றதுமே, அவள் வாழ்ந்த அனாதை இல்லத்தை நினைத்து கூறுகிறாள் என நினைத்துக் கொண்டான்.

“நான் உனக்கு பிராமிஸ் பண்ணுறேன். நிச்சியம் நீ அவங்க எல்லாரையும் மறுபடியும் பார்ப்பே ? ஒரு வேலை அது என்னால கூட நடக்கலாம் “ என்று தங்களுக்கு திருமணம் நடந்தால் அழைப்பாலே என்ற எண்ணத்தில் அவன் கூற,

“அதுக்கு வாய்ப்பேயில்லை. அந்த வாழ்க்கை எனக்கு முடிஞ்சி போச்சு “

“அது எப்படி ? நம்ம இருக்குற வரை இருக்க தான் செய்யும். முடியாது. என்னைக்காவது ஒரு நாள் நீ திரும்ப அந்த வாழ்க்கையைத் தேடி போவே “ 

“அப்படி நடந்தா நல்லா தான் இருக்கும் “ என்க,

“இது, இது தான் உன் மனசுல இருந்தது இந்தா வெளியே வந்திருச்சில “ என்கவே, பேசியே மனம் லயிக்க வைப்பதை உணர்ந்தாள்.

மறுபடியும் அப்படியே அந்த சாலையில் திருப்பி வந்த பாதைக்கேச் செல்ல, “எங்கையாவது சுத்தி பார்க்கப் போறதை விட, இப்படி லாங் ட்ராவல் நல்லாதான் இருக்கு “ என்றாள்.

“இது என்ன சும்மா தான். நான் நாலைஞ்சு நாள் ட்ராவல் பண்ணிட்டே இருப்பேன். கேட்க யாருமே இருக்க மாட்டாங்க. சுதந்திரமா சுத்துவேன். இந்த வாழ்க்கை நமக்கு திரும்ப கிடைக்குமான்னு தெரியல. இருக்குற வரை சந்தோஷமா இருக்கணும். எதையும் எதிர்த்தும் நிக்கணும் “ என்று இன்னும் சில அறிவுரைகள் வழங்கக் கேட்டுக் கொண்டாள்.

அதிகாலை நாலு மணி போல் ஒரு டிப்பன் கடையின் முன் காரினை நிறுத்த, அங்கே கூட்டமோ அலைமோதியது.

“இந்த நேரம் இவ்வளோ கூட்டமா ?”

“ஆமா. இது ரொம்ப பேமஸ் ஆனா கடை. காலங்காத்தால மூனு மணில இருந்து பத்து மணி வரைக்கும் இந்த கடை இருக்கும். டிப்பன் மட்டும் தான். அருமையா இருக்கு டேஸ்ட். என்ன உட்கார இடம் இருக்காது. வாங்கி நின்னு தான் சாப்பிடணும். உங்களுக்கு என்ன வாங்கிட்டு வர்றே ?”

“என்ன இருக்கும் ?”

“இட்டிலி,தோசை, வடை, பூரி, பொங்கல் “ என்று அடுக்கிக் கொண்டேப் போக, என்ன வேண்டும் என்று கூறினாள். அவனும் அதனை பத்து நிமிடங்களில் வாங்கிக் கொண்டு வர, காரின் அருகே நின்றவாறு இருவரும் அருந்தினர்.

“எப்படி இருக்கு ?”

“வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கு “ உண்மையிலே அவளின் வீட்டில் உண்ட நினைவு தான் வந்தது. 

“வேற ஏதாவது வாங்கவா ?”

“ஹ்ம்ம் “ என்று இன்னும் கூற வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க, வயிறு நிறையும் வரை உண்டு முடித்தாள். நீண்ட நாட்களுக்கு பின் வயிராற உண்ட எண்ணம். கடைசியில் பாதாம் பால் ஒன்றை சூடாக வாங்கிக் கொண்டு வர, அதையும் பருகினாள்.

“கிளம்பலாமா ?” 

“போகலாம் “ என்க, காரில் ஏறினர்.

நேரம் செல்ல, ஹாஸ்டல் வர சில நிமிடங்களே இருக்கும் நொடி, அவனின் கரங்களின் மீது தன் கரத்தினை வைத்தாள். ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு அப்படியே விண்ணில் பறக்கும் எண்ணம். அவளின் ஒற்றை கரத்தை தன் கரங்களுக்கு வைத்துக் கொண்டு, இன்னொரு கரத்தால் காரினைச் செலுத்தினான்.

அவள் தங்கும் இடம் வந்துச் சேர, இறங்கி நின்றனர் இருவரும்.

“தேங்க்ஸ். நீங்க சொன்னது மாதிரி ரிலாக்ஸ்சா பீல் பண்ணுனேன் “

“அனுபவிச்சிருக்கோம்ல “ சட்டை காலரை தூக்கிக் கொண்டு கூறவே, அவனின் நெஞ்சில் வந்து மென்மையாய் சாய்ந்தாள்.

அவன் கொடுத்த இந்த ஒரு நாள் சந்தோஷமும், ஆறுதலும் தினமும் தனக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் ? அவனோடு தன் வாழ்க்கை, தனக்குள் அவனால் உதிர்க்கும் எண்ணங்கள் அனைத்தும் புதிதாக இருக்க, நேசம் கொள்ள ஆரம்பித்தாள்.

கரம் பற்றியத்திற்கே விண்ணில் பறந்த உணர்வில் இருந்தவன், கட்டிப்பிடித்தற்குச் சொல்லவா வேண்டும்.

“யா ஹூ “ எனக் கத்த, அவளோ பட்டென பதறி விலகினாள்.

“ஐ லவ் யூ அஞ்சனா “ கத்த, காதினையும், கண்களையும் மூடியவளோ சில வினாடி கடந்து மெல்ல கண்களை திறந்தாள்.

அவளையேப் பார்த்தவாறு அவனோ நிற்க வெட்கம் கொண்டவளோ தலைகுனிந்து, “இந்த நாள் என் வாழ்க்கையில மறக்கவே முடியாதா புது அனுபவம் “ எனக் கூறி அங்கிருந்து நாணத்தோடுச் சென்று விட்டாள்.

அதன் பின் நாட்கள் செல்ல தன் காதலை நந்தனிடம் கூறவில்லை என்றாலும் நிராகரிக்கவுமில்லை. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று அலுவலகம் முழுவதும் தெரிந்திருக்க யாருமே கண்டு கொள்ளவுமில்லை.

குமரனும் நிதினும் இந்த வழக்கில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதைப் பற்றிப் பேசினார். இன்னும் சில நாட்களே இருக்க ஒரு முடிவினை எடுத்தனர். 

“நீ சொல்லுறது போல பண்ணுனா வாழ்க்கை முழுக்க நான் ஜெயில்ல தான் இருக்கணும் “ குமரன் கூற,

“டேய் ! உன் அப்பன் எம்.பி ஆக போறாருல. இன்னும் மூனு மாசத்துல தேர்தல். அதுக்கு அப்பறம் அவர் உன்னை வெளியே கொண்டு வர போறாரு “

“அதுக்காக இந்த கொலையை நான் ஏத்துக்கணும்மா ? இதுக்கு தான் உனக்கு பத்து லட்சம் கொடுத்தேன்னா ?”

“என்னை என்ன பண்ணச் சொல்லுறே ? தெரிஞ்சவனா இருக்குறையே பார்த்து அன்னைக்கு உதவி பண்ணுனேன். ரேப் பண்ணிட்டு விடுவேன்னு பார்த்தா உன்னை யாருடா கழுத்தை நெறிச்சி கொலை பண்ண சொன்னது “

“அவ என்னைய கொலை பண்ண வந்தா நான் பார்த்திட்டு இருக்கணுமா ?” 

“இருந்திருக்கணும். இருந்திருந்தா இன்னைக்கு இவ்வளோ பெரிய பிரச்சனை வந்திருக்காது. பார்த்தியா எப்படி ஆதாரத்தை தப்பவே முடியாதபடி கொண்டு வந்து வச்சிருக்கான். இதுல வேற நானும் சிக்கிருக்கேன். சொன்ன மாதிரியே இப்போதைக்கு நீ ஜெயிலுக்குப் போறது தான் நல்லது. வேற வழியில்லை “ என்று தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள நினைத்து கூறினான் நிதின்.

இப்போது மட்டும் நிதின் உண்மையைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் அவனும் சேர்ந்து தான் இதற்கு காரணம் என்று தீர்ப்பு வர வாய்ப்பிருக்கிறது என்பதால் தன்னை முதலில் இதிலிருந்து காத்துக் கொள்ள நினைத்தான்.

“சரி நான் என் அப்பா கிட்ட பேசுறேன். நீ சொல்லுற மாதிரியே பண்ணலாம் “ என்கவே, மறுநாளே தன் வேலையில் நேர்த்தியாக இருப்பது போல் காட்டிக் கொண்டான் நிதின்.

ஆனந்தியின் உடல் கூறாய்வு செய்த மருத்துவமனைக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தான்.

“அந்த பொண்ணை பிரேத பரிசோதனை செஞ்சது யாரு ? அந்த ரிப்போர்ட் ஒன்னு உங்க கிட்ட இருக்குல நான் பார்க்கணும் “ என்க, அதனை எடுத்துக் கொடுத்தனர். அந்த மருத்துவரும் முன்னே வந்து நின்றார்.

நிதின் கூறி தான் குமரன் வந்து மருத்துவரிடம் பணத்தை கொடுத்து ரிப்போர்டை மாற்றக் கூறினான். அதை மருத்துவர் அறியாதுப் போனது இப்போது நிதினுக்கு நல்லதாக அமைந்தது.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Leave a comment


Comments


Related Post