இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -24 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 29-04-2024

Total Views: 26965

இரண்டு வாரம் சோகக்கீதம் வாசித்தவள் சந்தோசமாக சுற்றுவதைப் பார்த்தால், யாருக்கு தான் சந்தேகம் வராது. வீடே இவளுக்கு பாதுகாப்பாகச் சுற்ற அதைக் கண்டுக் கொள்ளாமல் ஜாலியாக சுற்றினாள் ஷாலினி.

நாட்கள் வேகமாக ஓடியது. வளவன் வீடும் நந்தன் வீடும்  சரியாக பேசிக் கொள்வதில்லை, பரம எதிரியைப் பார்ப்பது போல் பார்த்து வைப்பார் கிருஷ்ணம்மாள். அவரை மீறிப் பேசினால் வீட்டில் அன்று திருவிழா நடக்கும் என்பதாலையே மணிமேகலையும் பேசுவதை தவிர்த்துவிட அதுவே பழகிப் போய்விட்டது.

பெரியவர்கள் வேண்டுமானால் விலகி நிற்கலாம், சிறியவர்களுக்கு அந்த கட்டுப்பாடு எல்லாம் இல்லை. யுகியை கட்டி வைக்கவும் முடியவில்லை.

அவனது பூனை அவனுக்கு வேண்டும், அதனாலயே  யார் சொல்வதையும் கேக்காமல் சென்று பேசுவான்.

நந்தனும் வளவனும் கல்லூரியின் கடைசி வருடத்தில் இருந்தனர். ஷாலினி பனிரெண்டாம் வகுப்பும், 
நிலா பத்தாம் வகுப்பும் படித்தனர். யுகி வளவன் படிக்கும் கல்லூரிலையே இரண்டாம் ஆண்டு  பொறியியல் படித்தான். அந்தக் காலத்தில் பொறியியல் படிக்கிறார்கள் என்றாலே தனி மதிப்பு இருந்தது,

அதனாலையே எல்லோரும் அதையே எடுத்துப் படிக்க, எப்போதும் ஒரு படிப்புக்கு  இவ்வளவு பேர் என்ன வரம்பு இருந்தால் தான் அதன் மதிப்பு அதிகரிக்கும், புழுமுட்டைப் போல் எல்லாரும் போய் அதிலையே குதித்தால் அதன் மதிப்பு காணாமல் போக தானே செய்யும், பொறியியல் துறைக்கும் இதுதான் கதி.

வருடம் 1 லட்சம் பேர் ஒரு படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திகொடுப்பதில் சிரமம் ஏற்படவில்லை. ஆனால் வருடம் 10 லட்சம் பேர்  அதேத் துறையில் படிப்பு. முடித்துவிட்டு வந்தால் எங்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது.வளவன் யுகியிடம் சொல்லிப் பார்த்தான் 

"டிகிரி பண்ணு யுகி அது தான் பெனிபிட்,"

"எனக்கு அதெல்லாம் செட்டாகாது"

"ஏன்?"

"தெரியல இதுல தான் இன்ட்ரெட்ஸ்ட் இருக்கு,  இதையே படிக்கறேன்" என்றவனை விட்டுவிட்டான்.

ஒருநாள் பத்தாம் வகுப்பு படிக்கும் நிலா தன் நண்பர்களுடன் சைக்கிளை தள்ளிக் கொண்டு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தாள்.

ஏழாவது செமஸ்டரை முடித்து விட்டு விடுமுறைக்கு வந்திருந்தான் நந்தன். 

நிலா பத்தாவது படிப்பதால் சிறப்பு வகுப்புகள் வைத்திருந்தனர்.தன் நண்பன் ஒருவனுடன்  நடந்து வீட்டிற்கு வர. அன்று மதியம்,   கொண்டுப் போன உணவு கெட்டு விட்டது போல் இருந்ததால் சாப்பிடாமல் விட்டுவிட்டாள்,  காலையிலும் பள்ளி செல்ல நேரமாகியதால் சாப்பிடாமல் வந்து விட,நடக்கும் போது தலை சுற்றுவது போல் இருந்தது.

"என்னாச்சி நிலவியா?"

"தலை சுத்துறமாதிரி இருக்குடா."

"விழுந்துடாம பார்த்துக்கோ  பக்கத்து பேக்கரில காபி வாங்கிட்டு வரேன் குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்."

"நானும் வரேன். இங்க தனியா இருக்கறது அங்கையாவது வரலாம்ல". என்றவள். தன் பையில் இருந்து ஒரு பத்து ரூபாய் பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தவள்.. "என்கிட்ட இவ்வளவு தான் இருக்கு இதுக்கு எது வருதோ அதை வாங்கிக் குடு".என்றாள்.

"ம்ம் சரி"  என்றவன் அவள் கீழே விழுந்திடாமல் இருப்பதற்கு கையை பிடித்துக்கொண்டு வந்தான்.

உஷா நந்தனிடம் தன் காதலைச் சொல்லிருந்தால், மறுக்க நந்தனுக்கு எந்த காரணமும் இல்லை என்பதால் அவள் காதல் செல்லி  ஒரு வருடத்திற்குப் பிறகு தான் சரி என்றான்,

எந்த  எண்ணத்தில் சரி என்றான் தெரியவில்லை,  ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து சலுகையாக தோளில் தொங்கும் உஷாவை அதட்டிப் பார்த்தான்

"இங்க பாரு உஷா இப்படி தொங்கற வேலையிலா வெச்சிக்கக் கூடாது. எனக்கு இதுமாதிரி பண்ணுனா புடிக்காது,அப்புறம் போடின்னு போட்டே இருப்பேன், உன்னோட  இஷ்டத்துக்குலா எதும் பண்ணக் கூடாது." என உறுதியாக சொல்லிருக்க  அன்றில் இருந்து சற்று விலகி இருந்தாள்.

இந்த விடுமுறையில் நந்தன் ஊருக்கு வந்துவிட, அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என உஷா அழுகவும்,  நந்தன் தான் இந்த பேக்கரிக்கு வர சொல்லிருந்தான்.

வீட்டில் இவர்கள் விஷயம் தெரியாது தெரிந்தாலும் நந்தன் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை அதனால் தான் அங்கு வர சொல்லிருந்தான்.

மாலை நேரம் பள்ளி மாணவ மாணவிகள் சென்றுக் கொண்டே இருக்க, அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே உஷாவிடம் பேசிக் கொண்டிருந்தான் நந்தன்.

"பிளேஸ்மெண்ட்ல செலக்ட் ஆகியும் ஏன் நந்து போக மாட்டேன்னு சொல்லிட்ட, நானும் அங்க வருவேன் ரெண்டுபேரும் ஒன்னா ஒர்க் பண்ணலாம்ல"

"எனக்கு பிடிக்கல"

"அப்புறம் எதுக்கு இன்டெர்வியூல கலந்துகிட்ட.?"

"டைம் பாஸ்க்கு"  என திமிராகவே சொல்ல,அந்த கம்பீரத்தில் எப்போதும் போல் இப்போதும் மயங்கி போனாள்.

ஆம் நந்தனை உஷா விரும்புவதாக சொல்லவும்,அவனுக்கும் மறுக்க வேண்டிய காரணம் இல்லை. தன்னை வேண்டாம் என்று சொல்லும் பெண்களை தானே இவ்வளவு நாளும் பார்த்து இருக்கிறான், உதாரணத்திற்கு அவன் வீட்டிலையே மணிமேகலையும் வெளியே நிலாவும் இருக்கிறார்களே. அவனை பிடிக்கும். என்று ஒருப் பெண் வந்து நிற்கும் போதும் அவள் அன்பை மறுக்கத் தோன்றவில்லை.

உஷாவிடம் எந்த தவறும் தெரியவில்லை, அதனால் அவளது காதலை ஏற்றுக் கொண்ட நந்தனால் அவளுடைய அடக்குமுறைக்கு அடங்கிப் போகத் தெரியவில்லை. அவன் எதிர்பார்ப்பே வேறு.அதை அவனே புரிந்துக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

"இப்படி இரு நந்து இன்னும் அழகா இருப்ப"  என்று உஷா ஏதாவது ஹேர்ஸ்டைல் செய்துவிட்டாலும் அதைக் கலைத்து விடுபவன்.

"நான் எப்படி இருக்கனோ அப்படியே ஏத்துக்க பழகு உஷா" என்று சென்று விடுவான்.

அதையும் அவள் சரி அவள் இயல்பு என்று விட்டுவிட்டாள்,  ஆனால் அவன் தோளில் தொங்கும் போது கிடைக்கும் பெருமையை இழக்க விரும்பாமல்  அதை மட்டும் செய்துகொள்கிறேனே என அவனிடம் கெஞ்சி கேட்டு செய்தாள்.

உஷா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் தான் நந்தனை விரும்பி தான்  காதலித்தாள்.

"இங்கப் பாரு உஷா, எனக்கு இந்த ஒர்க்லா செட்டாகாது நான் அப்பாவோட பிஸ்னஸ் பண்ணுவேன் இல்லையா தனியா பிஸ்னஸ் பண்ணுவேன்,  ஆனா  எவங்கிட்டையும் கையைக் கட்டிட்டு வேலைப் பார்க்க மாட்டேன், அது என் குணத்துக்கு செட்டாகாது இனிமே இதை சொல்லாத"

"ம்ம் சரி ஜூஸ் குடி.."

"ம்ம்" என்று  குளிர்பானத்தில் இருந்த ஸ்ட்ராவில் வாயை வைக்க நிலாவை ஒருவன் கையைப் பிடித்து அழைத்து வருவதைப் பார்த்துவிட்டான்.

பார்த்ததும் அவன் கண்கள் கோவத்தில் சிவந்து விட்டது. இவ்வளவு நாள் வளவனோடோ இல்லை யுகியோடோ தான் எங்கவாது பார்க்க முடியும், வளவனோடும் யுகியோடும் வரும் போது அவனது  முழங்கையைப் பிடித்திருப்பாள், அதை கவனித்திருக்கிறான் நந்தன்.

இன்று ஒருவனின் கையோடு கைக் கோர்த்துக் கொண்டு உள்ளே வர 
எப்படி வேறு ஒருத்தனோடு தனியாக  போகும் அளவிற்கு வந்தாள் என்று கோவம் தலைக்கு ஏறியது.

அவர்கள் இருவரையும் நோட்டமிட ஆரம்பித்திருந்தான்.

நிலா  தன் நண்பனிடம் சிரித்துப் பேசுவதும், அவனிடம் டீ வாங்கிப் குடிப்பதுமாக இருக்க.அதைப் பார்த்த நந்தனுக்கு அவ்வளவு கோவம், கண்கள் சிவந்திருக்க அவனைப் பார்ப்பவர்கள் கூட மிரண்டு விடுவார்கள் அப்படி ஒரு வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏன் கோவம் வருகிறது? எதற்கு வருகிறது என்றெல்லாம் தெரியாது ஆனால் வருகிறது. யுகியிடம் பேசுவதைப் பார்த்தாலே கடுப்பாவான்.  இதில் அடுத்தவனிடம் சிரித்துப் பேசினால் கோவப்படாமல் இருப்பானா?.பேசுபவனை விட்டுவிட்டு  பேசியவளை உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும். என்ற கோபத்துடன் அவள் முன் சென்று நின்றான்.



Leave a comment


Comments


Related Post