இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -25 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 29-04-2024

Total Views: 27572

நந்தன் போவதைப் பார்த்ததும் அவன் பின்னாலையே சென்றாள் உஷா, நந்தன் சென்று நின்ற இடத்தைப் பார்த்ததும்   'நந்து இது அன்னிக்கு உங்க வீட்டுல பார்த்த பொண்ணு தானே அதுக்குள்ள லவ் பன்றாளா? பாரேன் இப்போ இருக்க புள்ளைங்க 10 த் 11 த் படிக்கும் போதே லவ் பண்ணிடறாங்க,  நம்ப தான் லேட் இல்ல நந்து"  என உஷா அவன் தோளில் தொங்க.. அவளை விலக்கி விட்டவன்.  "அவ லவ் பண்றதை நீ பார்த்தியா?, அதுதான் பன்றான்னு பிராண்ட் பண்ண நீ  யாரு?"  "நந்து"  "நந்து பொந்துலா வேண்டா, அவ சின்னப் பொண்ணு கொஞ்சம் கூட யோசிக்காமல் லவ் பண்றான்னு சொல்ற.அவ கேரியர் ஸ்பாயில் ஆகும்ன்னு தெரியாத அளவுக்கு நீ சின்ன பொண்ணு இல்லை. கெட் அவுட் இனி இவளைப் பத்தி பேசுன பல்லை தட்டிடுவேன்" என்று நந்து கத்த, உஷா  பயந்து வெளியே சென்றுவிட்டாள்.  நந்தன் பக்கத்தில் வந்து நிற்கும் போதே நிலா  பார்த்துவிட்டாள். பயத்தில் மேலும் மயக்கம் வருவது போல் இருந்தது. உடல் நடங்கி வியர்வையில் குளித்திருக்க, . தொண்டைக் குழி பயத்தால் வறண்டுப் போக. எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.  அதற்குள் நந்தனுக்கும் உஷாவுக்கு பேச்சுவார்த்தை நடக்க..அது மேலும் பயத்தை தான் கூட்டியது நிலாவிற்கு.  உஷா கிளம்பியதும் நந்தனின் பார்வை நிலாவிடம் சென்றது.  அவள் தானாகவே "அது எனக்கு.. மயக்கம். கீழே" என வார்த்தையை   பிய்த்து பிய்த்து  கோர்க்க தெரியாமல் தடுமாற, நந்தனோ அவளையே தின்பது போல் பார்த்தான்.  "நிலா யாரு இவரு உங்க அண்ணாவா?"என்று  நிலாவின் நண்பன் வேறு கேக்க..  "இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாமல் பேசறான். ஏற்கனவே இவன் வெட்டி கூறு போடற அளவுக்கு வெறியில நிற்கறான், இது தெரியாம அண்ணான்னு சொல்லி வைக்கறானே, இந்த கோட்டான், சொன்னவனை விட்டுட்டு பக்கத்துல நிற்கவீங்கள தானே பிராண்டி வைக்கும்" என  எப்போதும் போல மனதுக்குள்  புலம்பிக் கொண்டே "நீ போ தேவா நான் போயிக்குவேன்" என்றாள் மெலிதாக.  "எப்படி போவ.?"  "ஏன் நான் கூட்டிட்டு போக மாட்டனா? நீ கிளம்பு."  "சரிண்ணா."  "இவனை" என நந்தன் தன் கையில் இருந்த வெள்ளிக் காப்பை முறுக்கி விட்டுக் கொண்டு தேவாவை அடிக்கப் போக..  "ஐயோ அவனை அடிச்சிடாதீங்க தெரியாம சொல்லிட்டான்". என நந்தனின் கையைப் பிடித்துக் கொண்டாள் நிலா.  அவள் பிடித்திருப்பதையும்,அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்க்க பட்டென்று கையை எடுத்துக் கொண்டாள் நிலா.  அந்த இடைவெளியில் தேவா அங்கிருந்து சென்றயிருந்ததை நந்தனின் பார்வையை உணர்ந்து நிலா தன் பையை எடுத்துக் கொண்டு முன்னால் நடந்தாள்.  உஷாவும் நந்தனும் குடித்த காபி குளிர்பானத்திற்கான காசைக் கொடுத்தவன்,  வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு நிலாவின் அருகில் சென்று நிறுத்தினான்.  "ஏறு"  என்று சொல்லவில்லை அவளிடம் ஒற்றை வார்த்தை பேசவில்லை,  அதுவே மேலும் மேலும் பயத்தை உண்டாக்கியது நிலாவிற்கு.  "இப்போ நான் ஏறணுமா?  ஏறக் கூடாதா? ஏறுனா நான் உன்னைய ஏற சொன்னானான்னு கேப்பான்? ஏறலைன்னா மகாராணிக்கு வெத்தலைப் பாக்கு வைக்கணுமான்னு கேப்பான்? என்னடா செஞ்சு தொலையறது?" எனப் புரியாமல் மழுங்க மழுங்க விழித்தாள்.  அவளையும்.வண்டியின் பின் சீட்டையும் நந்தன் பார்க்கவும்,அடுத்த நொடி ஏறி அமர்ந்து விட்டாள்.  வண்டி அசுர வேகத்தில் செல்ல  சமநிலை தவறி அவன் மீதே இடித்துவிட..கண்ணாடி வழியே அதற்கும் முறைத்து வைத்தான்.  "கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்,இந்த கொடுமை பண்ற? எல்லோரும் செத்து மேலே வந்து நரகத்தை அனுபவிப்பாங்க, எனக்கு மட்டும் பூமில்லையே நரகத்தை அனுபவிக்க இவனை அனுப்பி வெச்சியா?"  என கடவுளிடம் சண்டை வேறு போட..அந்த சண்டை போட்ட நேரத்தில் வண்டி யாரும் இல்லா காட்டுக்குள் சென்று நின்றது.  ஏற்கனவே நந்தனை பார்த்தால் பயம், நந்தன் நின்றால் பயம்,  உக்கார்ந்தால் பயம், பேசினால் பயம் என நிலாவிற்கு முழுவதும் நந்தன் பயம் மட்டும் தான்,  இதில் காட்டில் தனியாக அழைத்து வந்தால் பயம் போய் சந்தோசமா வரும்? , கைகால்கள் நடுக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தது எங்கு அவன் மீதே விழுந்து வாரி வைத்து விடுவோமோ என்று தனிக் கவலை வேறு.  வண்டி நின்றதும் இறங்காமல் அப்படியே இருந்தவளை ஹாரன் சத்தம் சுயநினைவுக்கு கொண்டு வர சட்டென்று கீழே இறங்கி நின்றாள்.  "இங்க... யாராவது பார்த்தா.. போலா.. "என மீண்டும் மீண்டும் அவன் முன்னே வார்த்தையை கோர்த்து பேச தெரியாமல் தடுமாறினாள்.  "யாருடி அவன்?".  "அது பிரண்ட்."  "என்னடி பிரண்ட். இந்த வயசுலயே உனக்கு லவர் கேக்குதா.?"  "ஐயோ!! அப்படிலாம் இல்லை"  என தன் பக்கம் புரிய வைத்துவிட வேண்டும் என்ற வேகத்தில் பேச வர,அவளை பேசவிடாமல் கழுத்தை பிடித்து நெருக்க ஆரம்பித்து விட்டான்.  "ஸ்ஆஆ விடு.. விடுங்க." என்று மூச்சு திணற திணற நிலா அவன் கையை தட்டி விட.. அவளை கீழே தள்ளி விட்டவன். மீண்டும் தூக்கி நிறுத்தி கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.  "ஸ்ஆஆஆஆஆ" . வலியில் நிலா கன்னத்தைப் பிடிக்க,  "அவன்கூட இவன் கூடன்னு இனி யார் கூடையாவது உன்னைய பார்த்தேன் கொன்னு புதச்சிடுவேன். இனி எவன்கூடையாவது போவியா சொல்லுடி?"  "ஹும்ஹும், போமாட்டேன் ப்ளீஸ் விடுங்க வலிக்குது யார்கூடயும் பேச மாட்டேன்" கதறி கதறி அழுதாள்.  "அது,  அந்த பயம் இருக்கனும், இனி அப்படி எவன் கூடையாவது உன்னைய பார்த்தேன், உன்னைய எதுவும் பண்ண மாட்டேன் எவன் கூடப் போறியா அவன் மண்டையை உடைச்சி மாவு கட்டுப் போட வெச்சிடுவேன் ஜாக்கிரதை"  "போக மாட்டேன்."என்றவளுக்கு நந்தன் என்றாலே அரக்கன் என்ற நிலை மாறி அவன் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் காற்றில் பறந்து சென்றுவிட்டது.  யாரோ ஒருவனிடம் பேசியதற்கே அசுரதனமாக அடித்த நந்தன் தான்,ஷாலினியின் காதல் விஷயம் தெரிந்து எதுவும் பேசாமல் சென்றது, அதை ஷாலினியே நிலாவிடம் கூறி இருந்தாள்.  ' தன் தங்கையை அடிக்காதவன் தன்னை மட்டும் மாட்டை அடிப்பது போல் அடிக்கிறானே  அப்போ அவங்க வீட்டுப்பொண்ணுனா தங்கம் நானா தகரம் தானே,  இவன் இருக்கற ஊர்லயே இருக்கக்கூடாது' என மனதில் உறுப்போட்டுக் கொண்டாள்.  "ம்ம் வந்து வண்டியில ஏறு".என்றது குரங்கு,  கோவம் இருக்கும் வரை வண்டியை முறுக்கிக் கொண்டு நின்றவன், "ஏறு" என்று ஒற்றை வார்த்தைக் கூட சொல்லவில்லை. இப்போது நிலாவை அடித்து கோவத்தை தனித்ததும் "ஏறு" என்கிறான் இவன் என்ன மாதிரியான டிசைனோ.  அடியையும் வாங்கிக் கொண்டு அவன் பின்னால் சென்று ஏற.  "கீழே விழுந்து வாரி வைக்காம ஒழுக்கமா புடிச்சி உக்காரு" என்றான் அதட்டலாக.  "இப்போ என் ஒழுக்கத்துக்கு என்ன கேடு?" என்று கேட்டுவிட தான் நிலாவின் நாக்கு துருதுருத்தது.  கேட்டால் அடுத்த நொடி ரோடு என்றுக் கூட பாராமல் தள்ளிவிட்டு சென்று விடுவான்,  பின்பு தான் தான் அனைவருக்கும் காட்சிப் பொருளாக வேண்டும் என அவன் தோளை பட்டும் படாமல் பிடித்துக் கொண்டாள்.  வந்தப்போது இருந்த வேகம் இப்போது இல்லை.. ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே நிலாவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்கியதும். "சொன்னது நியாபகம் இருக்குதானே" என கேட்டு ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு தான் அங்கிருந்து கிளம்பினான்.  அவனது கை விரல்கள் ஐந்தும் நிலாவின்  இருக் கன்னத்திலும் சாலை அமைத்து தன்னை நிலை நிறுத்தியிருக்க..மயக்கமெல்லாம் எங்கு போனது என்றே தெரியவில்லை.  அவனிடம் அடிக்கடி வாங்கும் அடிதான், அந்த அடிக்கும் இந்த அடிக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது அது என்ன என்றால் இவ்வளவு நாள் குச்சி கிரிக்கெட் மட்டை, கொட்டு, கிள்ளு, அடி என்று இருந்தவன் சற்று முன்னேறி கன்னத்தில் அறைந்திருக்க, மற்ற அடிக்களுக்கு பழகிய உடல் இந்த அடிக்கு பழகாததால் கன்னம் தீப் போன்று எரிந்தது. இதற்கும் பழகவேண்டும்  என எண்ணிக் கொண்டாள்  எப்போதும் போல் அவன் அடித்ததையோ தனியாக அழைத்துச் சென்றதையோ யாரிடமும் சொல்லவில்லை.  மனம் மட்டும் மறுகிக் கொண்டிருந்தது. வலித் தாங்காமல் சுருண்டுப் படுத்துவிட்டாள்.  உஷா என்றப் பெண்ணை பேசி அனுப்பி வைத்தோமே அவளுக்கு அழைத்து சமாதானம் செய்வோம் என்றெல்லாம் நந்தனுக்கு கவலை இல்லை,  வீட்டுக்குச் சென்றவன் சந்தோசமா பாயசம் செய்ய சொல்லி சாப்பிட்டான். நிலாவை அடிப்பதில் அடுத்த நிலைக்கு சென்றதை ஸ்வீட் எடுத்துக் கொண்டாட நினைத்திருப்பானோ என்னவோ.  "ஆயா பாயாசம் வேணும்"  "என்ன நந்து திடீர்னு"  "சாப்பிடணும்னு தோணுச்சு"  "உன் அம்மாவை வைக்க சொல்றேன்"  "ம்ம்"   "என்ன பாயசம் வேணும்?"  "நீங்க அவங்ககிட்ட சொல்லுங்க,அவங்களே எனக்கு புடிச்சதை செய்வாங்க" என்று எழுந்து சென்று விட்டான்.  கிருஷ்ணம்மாள் பாயாசம் செய்ய சொல்லி மணிமேகலையிடம் சொல்ல அவரும் என்ன பாயசம் என்றெல்லாம் கேக்கவில்லை. உடனே செய்ய தொடங்கிவிட்டார்.  "அம்மாலும் பையனும் பேசிக்கலைன்னாலும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என முனவிக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டார்.  பாயாசம் வைத்து எடுத்து வந்த மணிமேகலை நந்தனிடம் நேரடியாக  கொடுக்காமல் டீப்பாயின் மீது வைத்துவிட்டு  சென்று விட  ஒரு தோள் குலுக்களுடன் அதை எடுத்துக் கொண்டான் நந்தன்.  பாயாசத்தை ரசித்துக் குடித்த விதமே அவன் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறான் என்று சொல்லாமல் சொன்னது.  சமையலறையில் இருந்து நந்தனுக்கு தெரியாமல் அவன் சாப்பிடும் அழகை கண் குளிரப் பார்த்தார் மணிமேகலை.  "என்ன இவன் இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கான் என்ன விஷயமா இருக்கும்?" என்று யோசிக்க..நந்தனை விட சந்தோசமாக வந்தாள் ஷாலினி.  "ஏய் ஷாலு"  "அம்மா"  "என்னடி ஒரே ஆட்டமா இருக்கு, என்ன விஷயம்.?"  "சும்மா..ஏன் ஆடக் கூடக் கூடாதா?"  "நீ சும்மா ஆடற ஆள் இல்லையே.சொல்லு"  "ஆமா என்னோட கிளோஸ் கிளோஸ் ரொம்ப கிளோஸ் பிரண்ட்க்கு டீசிஎஸ் கம்பெனி பெங்களூர்ல வேலைக் கிடைச்சிருக்கு. இன்னும் ஆறுமாசத்துல அங்கப் போய்டுவாங்க என சந்தோசமாக துள்ளிக் குதித்தவள், "இன்னைக்கு ஏதாவது ஸ்வீட் செய்யும்மா இதை நான் கொண்டாடணும்."என்றாள்.  "ஏற்கனவே உன் அண்ணன் கொண்டாடிட்டு தான் இருக்கான் போய் குடி போ."  "அவனா..?"  "அவன் வேற ஏதோ சந்தோசத்துல இருக்கான்.நீ போய் உன்னோட சந்தோஷத்தை என்ஜோய் பண்ணு"  "ம்ம் ஓகே" என்று பாயாசத்தை குடித்தாள்.  பிள்ளைகளின் சந்தோஷம் தானே ஒரு தாய்க்கு முக்கியம் இதை தவிர வேற எதை எதிர்பார்த்துவிடப் போகிறார்.  நந்தனும் ஷாலினியும் சந்தோசமாக இருக்க, அதற்கு மாறாக  இரவு வீட்டிற்கு வந்த யுகியின் முகத்தில் ஜீவன் இல்லை.கண்கள் ஒளி இழந்து சோர்ந்ததுப் போல் வந்தான்.  "யுகி.."  "அம்மா"  "என்னாச்சிடா? ஏன் ஒருமாதிரி இருக்க..? இங்க வா" என அருகில் அழைத்து அவனது தலையை தடவிக்கொடுக்க..  "அம்மா.." என்று அவரை அணைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டான்.  "டேய் என்னடா இது வயசுப் பையன் அதுவும் ஆம்பளப் பையன் அழுவளாமா? என்னாச்சின்னு சொல்லு?" என்க  அதற்கு சத்தம் கேட்டு அனைவருமே வந்துவிட்டனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.  "என்ன யுகி எதுக்கு அழற?" என்று மார்த்தாண்டம் மகனின் முதுகை தடவி கேக்க.  "அப்பா பூனையும் வளவனும் இந்த ஊரை விட்டேப் போகப் போறாங்களா..பூனை இல்லாமல் நான் என்ன செய்வேன்?".என்று சிறுக் குழந்தைப் போல அழுதான்.  கிருஷ்ணம்மாளை தவிர மற்ற அனைவரின் பார்வையும் கிருஷ்ணம்மாள் என்ன சொல்லுவார் என்பதிலையே தான் இருந்தது.  "அவ எங்க போய் நாசமா போனா உனக்கு என்னடா? இன்னும் அந்த ----- பேசிட்டு தான் இருக்கியா?" என்று அதட்ட..  யுகிக்கு எங்கிருந்து அவ்வளவு கோவம் வந்ததோ.. "ஏய் கிழவி வாயை மூடிட்டு இருக்கறதுன்னா இரு இல்லனா வீட்டை விட்டு வெளியே போ. உன்னால தான் நாங்க பிரிச்சிப் போகவே காரணம். உனக்குலா பாசம்ன்னா என்னனு தெரியுமா?, நாளைக்கு நீ கட்டிட்டு அழற கவுரவம், தகுதி தராதரம் ஒன்னும் சோறு போடாது நீ படுத்துட்டா என் அம்மா பார்த்து சோறு போட்டா தான் உனக்கு சோறு.. எப்போ பாரு கவுரவம்,  தகுதி, பிரிவுன்னு பேசிட்டு இருக்க..எதுக்கு நாசமா போகப்போற, அவங்களை நீ படுத்தின பாட்டுக்கு நீதான் நாசமா போவ.. இன்னொரு தடவை அவளைப் பத்தி தப்பா பேசுனா வயசான கிழவின்னு கூடப் பார்க்காம மண்டையை உடைச்சிடுவேன்" என்று கத்தியவன்.  "எங்களுக்குள்ள  சுத்தமாக பாசம் தான் இருந்துருக்கு, நீ அதை தப்பா பார்த்துப் பார்த்தே இப்போ அவங்க ஊரை விட்டுப் போற அளவுக்கு வந்து நிற்குறாங்க, இனியும் ஏதாவது பேசுனா மண்டையை உடைச்சிடுவேன்" என்று டீப்பாயின் மீது இருந்த சொம்பை எடுத்து அடிக்கப் போய்விட்டான்.  "டேய் என்ன பண்ணற பெரியவீங்கன்னு மட்டு மரியாதை இல்லாமல் என்ன பழக்கம் இது" என மார்த்தாண்டம் அடிக்கப் போக.  "அப்பா எனக்கு பூனை வேணும்.. இங்கையே வேணும், என்னோடவே இருக்கனும், அவ இல்லாம அவள பார்க்காம என்னால இருக்க முடியாது" என்று மண்டியிட்டு அழுதான்.  "யுகி இன்னும் நீ சின்ன பையன் இல்லை. அவங்களும் நம்பள மாதிரி  மாறனும்ன்னா இங்கையே இருந்தா முடியுமா..? வளவன் கேம்பஸ்ல செலக்ட் ஆகியிருக்கான், இரண்டு மூனு வருஷம் பெங்களூருல வேலை செஞ்சிட்டு வந்தா அவனும் வீடு வாசல்ன்னு கட்டுவான்ல".என்றதும் தான் அங்கிருந்த அனைவருக்குமே விஷயம் என்ன என்று புரிந்தது.  மணிமேகலை ஷாலினியைப் பார்க்க அவளோ. அவரைப் பார்க்காமல் திரும்பி  நின்றுக் கொண்டாள்  ஷாலினி சந்தோசப்பட்டதில் கூட ஒரு நியாயம் இருந்தது, இவர்களில் சேர்த்தியே இல்லாத நந்தன் எதற்கு சந்தோசமாக இருந்தான் என்று புரியாமல் மண்டை காய்ந்தது.  ஆம் வளவன் கல்லூரியில் நடந்த பல தொழிற்சாலைகளின் நேர்முக தேர்வில்  தேர்வாகியிருந்தான்.  இவ்வளவு நாள் அம்மா பட்ட கஷ்டத்தை இந்த வேலையின் மூலம் சரி செய்துவிட வேண்டும் என்ற தமையனாக கொல்லை ஆசை.அதை நிறைவேற்ற அவன் பெங்களூர் சென்று தானே ஆக வேண்டும்.  "அப்பா அதுக்கு அவன் மட்டும் போகக்கூடாதா.. இவளையும் எதுக்கு அழைச்சிட்டுப் போகணும்?'.  "அவனா அழைச்சிட்டு போகணும்ன்னு சொல்றான் நிலா தான் கூட போயே ஆகணும்னு அடம்பிடிக்கிறாளா.. வளவன் சொன்னான்"   "ஆமா இங்க அவளை போட்டு படாத பாடுபடுத்திருக்காங்க, அப்புறம் போறேன்னு அழாம என்ன பண்ணுவா" என்று நந்தனை முறைக்க, அவன் யாருக்கு வந்த விருந்தோ என்று எதிலும் கலந்துக் கொள்ளாமல் அப்படியே இருந்தான்.  கடைசியில்  வளவன் நிலா ராஜி மூவரும் பெங்களூரு செல்வது என்று முடிவானது.  அதில் அதிக சந்தோஷம் நிலாவிற்கு தான், இனி நந்தனின் டார்ச்சர் இருக்காது, கிருஷ்ணம்மாளின் குத்தல் பேச்சுகள் இருக்காது. மின்சாரம் இருக்கும் வீட்டிற்கு செல்லலாம், அறியாத ஊரில் பலரின் நட்புகள் கிடைக்கலாம் என்று ஆயிரம் ஆயிரம் சந்தோசம்  புதிது புதிதாக கனவு கண்டால் அனைத்தையும் நினைத்து.  ஆறுமாதம் மற்றவர்களுக்கு வேகமாக போவது போல் இருந்தது, ஆனால் நிலாவிற்கோ மிகவும் மெதுவாக போவது போல் இருந்தது.  "என்னடா இது மத்த நேரம் எந்திரிக்கறதும் தெரியாது, தூங்கறதும் தெரியாதுன்னு ஓடும், இப்போ என்னனா நேரமே போக மாட்டிங்குது, சீக்கிரம் போனா தானே இந்த ஊர்ல இருந்து சீக்கிரம் போக முடியும்" என்ற  கவலை வேறு.  யுகியோ, 'இன்றைய நாள் இன்னும் கொஞ்சம் நீண்டால் தான் என்ன என்ன அவசரம் என்ன அவசரம் சொல்லுப் பெண்ணே'  என  ரொமாண்டிக் பாடலை சோகப் பாடலாக பாடிக் கொண்டு சுற்றினான்.  ஆறுமாதம் எப்படி போனது என்றே தெரியவில்லை. வேகம் வேகம் அந்த சூரியன் வருவதிலும் வேகம் நிலவு மறைவதிலும் வேகம்.. ஆறுமாதம் ஆறு நாள் போல் வேகமாக ஓடிவிட்டது.  நந்தன் கோல்டுமெடலுடன் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்திருந்தான். மற்ற விசியங்களில் அப்படி இப்படி இருந்தாலும் படிப்பில் எப்போதும் கெட்டி தான்  வளவனும் ரேங்க ஹோல்டராக வந்திருக்க..ஷாலினி நல்ல மதிப்பெண்னுடன்  மேல்நிலை வகுப்பை முடித்திருந்தாள். நிலா பத்தாம் வகுப்பை பள்ளியில் முதல் மாணவியாக வந்து முடித்திருக்க, அவளுடைய டீசியை வாங்கிக் கொண்டனர். பெங்களூரில் மேல்படிப்பை படிக்கட்டும் என்று.  நந்தன் சென்னையில் இருந்து ஊருக்கும் வளவன் ஊரில் இருந்து பெங்களூருக்கும் செல்லும் நாளும் வந்தது.  நந்தன் வருவதற்கு முன்பே கிளம்பிவிட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றாள் நிலா.  "ஏன் பூனை என்னைய விட்டு போறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா?".  "இல்லை உன் அண்ணனை இனி பார்க்கவே மாட்டேங்கறதுல அவ்வளவு சந்தோசம்."என்று சொல்லிவிட முடியுமா? அவனால் தான் நிலா ஊரை விட்டுப் போகிறாள் என மீண்டும் மீண்டும் சண்டை தான் வரும் இருவருக்கும். அதனாலயே நந்தன் செய்யும் சேட்டைகளை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தாள் நிலா.  மறைத்து மறைத்தே பைத்தியம் பிடித்துவிடும் சூழ்நிலையில் தான்,  அதனாலயே ஊரை விட்டு சென்று விட வேண்டும் என்று  முதல் ஆளாக கிளம்பி நின்றாள்.  அவளை சொல்லியும் குற்றமில்லை எவ்வளவு சூழ்நிலை வந்தாலும் அவள் கோவத்தை மற்றவர்களிடம் காட்டத் தெரியாமல் தனி ஒருத்தியாக தன்னை தேற்றிக் கொண்டு அடுத்த அடுத்த கட்டத்தைக் கடந்து வந்திருக்கிறாள் அல்லவா. அவளுக்காக ஊரை விட்டு போவதில் தவறில்லை என்று தான் நிலா கேட்டதும் வளவன் சரி என்றான். அதற்கு முன்பு வரை அவன் மட்டும் கிளம்புவதாக தான் இருந்தது.  ஒருவழியாக நந்தன் வீட்டிற்கு வருவதற்கு முன்பே வளவன் குடும்பம் தன் பெட்டி படுக்கையுடன் பெங்களூருக்கு ரயில் ஏறி விட்டனர்.  நந்தனுக்கு இதுதான் நடக்கும் என்று தெரிந்ததால் அவனும் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை.ஊருக்கு வந்தவன் ஒரு வருடம் தன் தந்தையுடன் அலுவலகம் சென்று அனைத்தையும் கற்றுக் கொண்டான்.


முதல் பாகம் முடிவுற்றது.


இரண்டாம் பாகம் விரைவில் வரும் 


Leave a comment


Comments


Related Post