இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 30-04-2024

Total Views: 32398

அத்தியாயம் -25


மகிழுந்தில் ஜன்னலோரம் ஒன்றி அமர்ந்தபடி தன் பார்வையை வெளியே சுழல விட்டபடி இருந்த அஞ்சனாவிடமிருந்து மெல்லிய விசும்பல் ஒலி வந்து கொண்டே இருந்தது. 

“சனா..” என்று இதோடு பத்தாவது முறையாக அழைத்துவிட்டான் யஷ்வந்த். அவள் திரும்பவுமில்லை, கண்ணீரை நிறுத்தவுமில்லை. 

பேசிவிட்டாள்.. தன் மனதில் அடைத்துக் கொண்டிருந்த பாரம் அனைத்தையும் கொட்டிவிட்டாள்.. ஆனால் தற்போது அன்னை என்ன நினைப்பாரோ? வருந்துவாரோ என்று மனம் பதைபதைத்தது!

வண்டியை வீட்டை நோக்கி விடாது கடற்கரை நோக்கி செலுத்தியவன், இடம் வந்ததும் மீண்டும் அழைத்தான். பார்வையை வெளியே கொடுத்திருந்தவள் சிந்தையை எங்கோ வைத்ததன் பயனாய், எங்கு இருக்கின்றோம் என்றே அறியாது வெறித்துக் கொண்டிருந்தாள்.

“சனா..” என்று அவளை உலுக்கியவன், அவள் திடுக்கிட்டுத் திரும்பியதும், இடவலமாய் தலையசைத்து கண்கள் மூடி திறந்து அவளை சமன் செய்தான்.

இருவரும் வெளியே வர, அந்த மணல் பரப்பில் தன் பஞ்சு கால்கள் புதைய மெல்ல நடந்து வந்தாள், அவளவன் கரம் கோர்த்துக் கொண்டு.


“நா.. நான் தப்பா பேசிட்டேனா மாமா? அ..அம்மா.. அழுவாங்கள்ல?” என்று தன் கேவல் ஒலியை தொண்டைக்குள் அடக்கியவளாய் அவள் பேச, 

அவள் தோள் சுற்றி கரம் போட்டவன், “கண்டிப்பா அழுவாங்க சனா.. ஆனா நீ பேசினதுல தப்பில்லை” என்றான்.

தலையை மெல்ல அவன் மார்போடு சாய்த்துக் கொண்டவள், “என்னால முடியலை மாமா.. அவங்கள பார்த்தா.. நா.. நான் இப்படி இருக்க அ..அவங்க..ம்ஹும்” என்று கண்ணீரோடு பேசமுடியாமல் தலையை தாழ்த்தினாள்.

அவளை அங்குள்ள ஒரு இருக்கையில் அமர்த்தி தானும் அமர்ந்தவன், “சனா..” என்றழைக்க, 

“என்னால முடியலை மாமா” என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

அவள் தலையை பரிவாய் வருடிக் கொடுத்தவன், அவளது கண்ணீரை தடுக்கவும் முடியாமல் வேடிக்கைப் பார்க்கவும் முடியாமல் தவித்தான்.

“ஒரு பக்கம் அம்மாவை அப்படி நினைக்குறேனேனு வருத்தம், இன்னொரு பக்கம் அவங்க தான் காரணம்னு கோவம்.. பேசாம தான் இருந்தேன் மாமா. என்னனே தெரியலை அம்மாவை பார்க்க பேச, வித்தியாசமா.. அது பயமா இல்லை கோவமானு தெரியலை.. ஆனா இன்னிக்கு..” என்று குனிந்த தலை நிமிராது பேசிக் கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து அவன் கண்களை ஏறிட்டு,

“அன்னிக்கு அவங்க யாரோ சொன்னது போல தானே என் அம்மாவும் சொல்றாங்க.. நான் உங்களுக்கு தொல்லையா மாமா? ஏன் எல்லாருமே இப்படியே சொல்றாங்க? நிஜமாவே நான் தொல்லை தானா?” என்று கேட்டாள்.

அவள் கண்களில் இருந்த வலி அவனை ஊசியாய் தாக்கியது. அவளை எப்படி பக்குவப்படுத்தி தாங்கள் வாழ்வது என்று தான் திருமணம் ஆன முதல் அவன் நினைத்துக் கொண்டிருப்பது. இப்படி இருக்கின்றாளே என வருத்தம், கோபம், ஆற்றாமை என பல உணர்வுகளை சந்தித்து இருக்கின்றான்.. ஆனால் ஒரு நாளும் ‘இவளை ஏன் திருமணம் செய்தோம்?’ என்றோ ‘நமக்கு தொல்லை தருகின்றாளே' என்றோ அவன் நினைத்ததே இல்லையே!

அவளது வலி அவன் மனதில் அவளுக்கான காதலை பூதாகரமாக காட்சிப்படுத்திய நொடி தான் தன் காதலை அபரிமிதமாக உணர்ந்தான், யஷ்வந்த் கிருஷ்ணா, அவளின் யஷு மாமா.

அவள் முகத்தை தன் கரங்களில் ஏந்தியவன், “உன்னை நான் தொல்லையா நினைச்சிருப்பேன்னு உனக்கு தோனுதா சனா? வாய்விட்டு சொல்லிருக்க வேண்டாம். என் செயல்லயாவது என்னிக்காவது அப்படி நான் காட்டிருக்கேனா?” என்று கேட்ட மறுநொடி,

 “அப்படி தெரியாததால தான் மாமா இவங்க சொல்றது ரொம்ப வலிக்குது. எ..எனக்கு உ..உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா. இ..இவங்க எல்லாரும் தொல்லைனு சொல்றாங்க.. ஆனா நீங்க அப்படி சொன்னதே இல்லையே அப்றம் ஏன் இப்படி சொல்றாங்க..? இதை நான் ஏத்துக்கணுமா கூடாதானு குழப்பமா இருக்கு மாமா” என்றாள்.

“யோசனையே வேணாம் சனா.. நான் சொன்னேனா? நான் உன்னை தொல்லைனு சொல்லிருந்தா தான் நீ குழம்பணும். அப்ப கூட நீ தெளிவா இருந்தா நீ குழம்பவே வேணாம் சனா. உன்னை பத்தி அடுத்தவங்கள ஏன் ஜட்ச் பண்ண விடுற நீ? உன்னை பத்தி நீ மட்டும் தான் ஜட்ச் பண்ணனும். ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வாங்கடா. நீ எப்படி, உன்னோட நிலை என்னனு உனக்கு மட்டும் தான் தெரியும். யார் என்ன சொன்னா உனக்கு என்ன கவலை? உன்னை பத்தி உனக்கு தெரியும் தானே?” என்று அவன் வினவ, 

“என்னை பத்தி தெரிஞ்சுகிட்டதால தான் மாமா அவங்க சொல்றது உண்மையோனு தோனுது” என்றாள்.

“அப்படி இல்லை சனா.. அது வேற இது வேற. உன் அறியாமையும் நம்ம காத்.. நம்ம உறவும் வேற. நமக்கு இடையான உறவு உன் பிடித்தத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்னு. அது என்னனு புரிஞ்சுக்கோ. அது புரிஞ்சா அந்த அபரிதபான உணர்வை தாண்டி இப்படி எந்த குப்பைகளும் உனக்கு தெரியாது” என்று அவன் கூற, அவள் கண்கள் இங்குமங்கும் அலைபாய்ந்தன. 

சற்றே அமைதியடைந்தவள் நெஞ்சுக் கூடு மூச்சிற்கு கெஞ்சி ஏறி இறங்க, நெஞ்சில் மெல்லிய வலியை உணர்ந்தவள் சற்றே பதட்டத்துடன் விழி விரித்தாள்.

“சனா..?” என்று அவன் கேள்வியாய் நோக்க, 

“ஷ்ஷ்” வாயில் விரல் வைத்தவள் மனதில் மருத்தவரின் பேச்சுக்கள் மட்டுமே ஓடின. 

'வலிக்குற போல இருந்தா நல்லா டீப் ப்ரீத் எடுத்துக்கோ டா. மைன்ட ரிலாக்ஸ் பண்ணு. ஒரு சின்ன வாக் போ, ரெஃபரஷ் ஆக ட்ரை பண்ணு. ரொம்ப பெயினா இருந்தா டேப்லெட் எடு' என்று மருத்தவர் கூறியதை நினைவு கூர்ந்தவள் மூச்சை நன்கு இழுத்துவிட்டு எழுந்தாள்.

அவளை புரியாமல் பார்த்தவன், “என்னடி?” என்க, பதிலேதுமின்றி மெல்ல முன்னே நடந்து சென்றாள்.

 “ஏ சனா..” என்றபடி எழுந்தவன் அவளிடம் வர, 

“மாமா.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்” என்று அவனக்குக் கூறுவதாய் தனக்குக் கூறிக் கொண்டாள்.

'என்னாச்சு இவளுக்கு?’ என்பதைப் போல் அவன் பார்க்க, மெல்ல கரம் வைத்து தன் நெஞ்சை அழுத்திக் கொண்டவள் மூச்சை மீண்டும் இழுத்து விட்டு சுற்றி முற்றி தன் பார்வையை சுழற்றினாள். அந்த மாலை நேர செவ்வானம் முத்தமிடும் கடலின் எழிலை ரசிக்க முயற்சித்தாள்.

“சனா வலிக்குதாடி?” என்று அவள் செய்கையில் புரிந்தவனாய் அவன் கேட்க, 

“லைட்டா மாமா” என்றவள் தன் மனதை திசை திருப்ப முயற்சித்து கடலை நெருங்கினாள்.

தன்னவன் கரம் கோர்த்துக் கொண்டு கடலலைகளில் கால் நனைத்து தன்னை சமன் செய்ய அவள் எடுத்த முயற்சி மெல்ல மெல்ல கை கொடுத்தது.

அவளை வியப்பும் மகிழ்ச்சியுமாய் பார்த்து யஷ்வந்தின் மனமெங்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு தான். தன்னை ஆசுவாசம் செய்துககொண்டு நெஞ்சை நீவியவள், 

“ஐம் ஓகே மாமா” என்க,

 “லவ் யூ சனா..” என உள்ளார்ந்த குரலில் கூறினான்.

அவன் தன் காதலைக் கூறும் அந்த தருணம் அவனுக்கு அத்தனை இனிமையாகவும் அவளுக்கு அவன் குரலில் இந்த ஆழ்ந்த உணர்வு கொடுத்த புரிந்தரியா தன்மையாகவும் அந்த நொடி மிக மிக அழகாய் கடந்தது.

பதில் மொழி ஆற்ற தெரியாமல் அவள் திணறலாய் நோக்க, மென்மையான சிரிப்புடன், “போலாமா?” என்று கேட்டான். 

திக்கித் திணறி தலையசைத்தவள் அவனுடன் மீண்டும் மகிழுந்தில் அமர, சில நிமிடங்களில் இருவரும் வீட்டை அடைந்தனர்.

வண்டியை விட்டு இறங்கியவள் யோசனையுடன் மேலே சென்றுவிட, மேலே வந்தவனிடம், 

“மாமா நான் கௌன்சிலிங் அட்டென்ட் பண்ண விரும்புறேன்” என்றாள்.

அவளை புரியாமல் பார்த்தவன், “என்ன கௌன்சிலிங் சனா?” என்று கேட்க, 

“டாக்டர் கிட்ட எனக்கு சைக்காலஜிகல் கௌன்சலிங் அட்டென்ட் பண்ணனும்” என்றாள்.

அவன் எதிர்ப்பார்த்த ஒன்று தான்.. அவளது யோசனையான முகமே அவள் இதை கேட்பாள் என்று அவனுக்கு உணர்த்தியது. அதனால் அதிர்வேதுமின்றி,

 “கௌன்சிலிங் அட்டென்ட் பண்ண மென்டலி நீ ஓகேவானு யோச்சுக்கோ சனா. நிறையா விஷயம் புரிய வரும், தெரிய வரும். இழந்துட்டோமேனு ஏக்கமும், இப்படி இருந்திருக்கோமேனு கோவமும் ஆற்றாமையும் நிறைய உருவாகும். இப்ப இருக்குற கண்டிஷன்ல உன்னால அதை ஓவர்கம் பண்ண முடியும்னு நீ நம்பிக்கையா இருந்தா நான் டாக்டர் கிட்ட பேசுறேன்” என்றான்.

அவனை அமைதியாய் பார்த்தவள், “யோசிச்சு சொல்றேன்” என்று நகர்ந்திட, அடுத்த நாள் காலை நிச்சயம் தனக்கு ஆலோசனை தேவை என்ற கருத்தை அவனிடம் தெரிவித்தாள்.

சன்னமான புன்னகையுடன் அவள் தலைகோதியவன், “டாக்டர் கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்றிட,

 “தேங்கியூ மாமா” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அன்றும் அவளைக் கல்லூரியில் விட்ட யஷ்வந்த் வேலைக்குப் புறப்பட, ஆத்ரிகாவின் மகிழுந்து வந்து நின்றது. 

உள்ளிருந்து இறங்கிய அர்ஜுனிடம் “பை மாமா” என்று ஆத்ரிகாவின் மகள் கூற, “பை டா” என்றான்.

அவர்கள் அருகே அஞ்சனா வந்து நிற்க, முந்தைய நாள் தங்கை வந்து கதறியதை அர்ஜுன் வழி அறிந்த ஆத்ரிகா, தங்கையை ஆராய்ச்சியாய் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த தெளிவும் புன்னகையும் அவள் கொண்ட முதிர்வை அக்கா அவளுக்கு எடுத்துக் காட்ட, 

“ஹாய் அக்கா.. ஹாய்டா பாப்பா” என்று அஞ்சனா கூறினாள்.

“ஏ சித்தி..” என்று மகிழுந்திலிருந்து இறங்கிய அதிதி, சித்தியைக் கட்டிக் கொள்ள, அக்கா மகளைத் தூக்கி முத்தமிட்டவள், 

“ஸ்கூல் கிளம்பியாச்சா அதி குட்டி?” என்றாள்.

“ஆமா சித்தி” என்றவள், 

“உன்னை பார்க்கவே முடியலை சித்தி. நேத்து நீ வந்தனு அரு மாமா அம்மாகிட்ட பேசினாங்க. என்னை ஏன் பார்க்கவே வரலை?” என்று கேட்க, அர்ஜுனையும் ஆத்ரிகாவையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள்,

 “நீங்க டியூஷன் போயிருப்பீங்கனு வரலைடா. நாளைக்கு வரேன் சித்தி” என்று கூறினாள்.

“ஓகே சித்தி. டாட்டா” என்று கூறிய அதிதி மீண்டும் மகிழுந்தில் அமர, தங்கையைப் பார்த்து புன்னகைத்த ஆத்ரி புறப்பட்டாள்.

அர்ஜுனைப் பார்த்த அஞ்சு அதே புன்னகையுடன், “கை பரவாலையா அஜு?” என்று கேட்க, சிரம் தாழ்த்தியபடி தலையசைத்து உள்ளே வந்தான்.

வகுப்பறைக்குள் வந்த இருவரும் அமர, அமைதியாய் இருந்த அர்ஜுன் பார்த்து, “அஜு.. ஏன்டா இப்படி இருக்க? நான் உன்னை நேத்து ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று கேட்டாள். 

சட்டென அவளை அணைத்துக் கொண்டவன் மெல்ல கேவி அழுதே விட்டான். அதில் அதிர்ந்து போனவள், 

“அஜு.. என்னாச்சுடா? ஏன் அஜு அழுற? டேய் கை..கை இடிச்சுட போகுது அஜு” என்று பதற,

 “பாப்பா..” என்று அழுதான்.

உள்ளே வந்த மீனா இவர்களைக் கண்டு பதறி, “ஏ அஞ்சு.. என்னாச்சு இவனுக்கு?” என்று கேட்க, 

கண்கள் கலங்க அவளைப் பார்த்து “தெரியலை மீனு..” என்றாள்.

நண்பனை அவளிடமிருந்து விலங்கியவள், “லூசு பக்கி கை இடிச்சுட போகுதுடா” என்று கூற, உடல் குலுங்க அழுதான்.

 “இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுற நீ?” என்று மீனா கேட்க, அஞ்சனாவை வருத்தமாய் பார்த்தான்.

“என்னாச்சு அஜு?” என்று அவள் கேட்க, 

“சாரி பாப்பா.. உன் மனசுல இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு எனக்கு கூட தெரியலை.. நீ ஏதோ சோகத்துல இருக்கனு மட்டுமே தான் புரிஞ்சுதே தவிர இப்படி ஒரு கஷ்டத்துல நீ இருப்பனு நினைக்கலைடா. நே..நேத்து தான் புரிஞ்சுது நீ எவ்வளவு கஷ்டபட்டிருப்பனு” என்று கதறலாய் கூறினான்.

அவன் வருத்தம் நியாயமானது தான்.. ஆனால் அஞ்சனா தன்னுடைய கவலையை தானே தற்போது தான் புரிந்து கொண்டதாலோ என்னவோ அடுத்தவர் புரிந்துகொள்ளவில்லையே என்று யோசிக்கவே இல்லை. 

அதுவும் தனது பிழைகள் புரிந்துகொண்டபோது கூட ‘இதுக்கு தான் அஜு அப்பவே சொன்னான். நான் தான் கேட்கலை' என்று தான் தோன்றியது பெண்ணவளுக்கு.

மீனா அமைதியாய் அஞ்சனாவின் யோசனை முகம் காண, கண்கள் மூடித் திறந்து பெருமூச்சுவிட்ட அஞ்சனா, தெளிவான பார்வையுடன், “அஜு” என்றழைத்தாள்.

கண்ணீரோடு அவன் தங்கையை நோக்க, “எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்த நீயே இப்படி சம்மந்தமில்லாம கவலைபடுறியேடா? உனக்கு நான் அழுதது வருத்தம்னு புரியுது. ஆனா நீ சொல்றபோல நீ புரிஞ்சுக்கலைனு எனக்கு வருத்தமே இல்லை. இன்னும் சொல்ல போனா நீ புரிஞ்சுக்கனும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லைடா. எனக்கே இதெல்லாம் இப்பதான் புரியுது. அப்படியிருக்க நீ அதை புரிஞ்சுக்கனும்னு நான் எப்படிடா யோசிப்பேன்?” என்றாள்.

அவளின் முதிர்ச்சியான பேச்சில் ஆச்சரியமாய் நோக்கிய அர்ஜுனைக் கண்டு அவனை நெருங்கி அமர்ந்தவள், 

“அஜு… எப்பவும் நீ தான் கரெக்ட் அஜு. அப்பவே நீ எனக்கு உன்னால முடிஞ்சளவு சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்த முயற்சி பண்ணிருக்கடா. யோ..யோசிச்சு பாரு.. அஜுனு ஒரு கேரக்டர் என் வாழ்க்கைல இல்லைனா நான் ஸ்கூல் கூட போயிருக்க மாட்டேனேடா. ஸ்கூலே போகாதபோது காலேஜ்லாம்? இப்ப இருப்பதில் பாதி என்ன கால்வாசி கூட எனக்கு பக்குவம் இருக்காது அஜு. நீ எனக்கு எல்லாம் சொல்லுவ அஜு.. ஆனா..ஆனா.. நான் பைத்தியக்காரத்தனமா அம்மா பேச்சை தான் கேட்டிருக்கேன்டா” என தொண்டை அடைக்கப் பேசினாள்.

மீனா மெல்ல அவள் முதுகை வருடிக் கொடுக்க, தோழியைப் பார்த்து புன்னகைத்தவள்,

 “மீனு இல்லைனா நிறையா விஷயம் தெரிஞ்சிருக்க மாட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் தான் நான் ஓரளவாவது உருப்படியா வளர காரணமானவங்கடா. ப்ளீஸ் நீங்களும் நான் அழுததையே நினைச்சு வருந்தாதீங்க” என்று கூறினாள்.

இருவருமாய் அவளை அணைத்துக் கொள்ள, தன் தோள் வளைவில் அவர்களை கழுத்தோடு இறுக்கிக் கொண்டவள், 

“ப்ளீஸ்.. சாரி.. தேங்ஸ்.. எல்லாத்துக்குமே” என்றாள்.


Leave a comment


Comments


Related Post