இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 30-04-2024

Total Views: 20713

தன் தோழியின் வாழ்வில் நிகழ்ந்த துன்பங்களை எண்ணி அந்த நேரத்தில் தான் அவளோடு இல்லாமல் போனதை எண்ணி அபிநந்தன் உள்ளம் வருந்த அதன் வெளிப்பாடாக அவனின் கண்கள் கலங்கியது.


அதை கண்ட சந்தியா “டேய் அபி… நானே அதுல இருந்து வெளியே வந்திட்டேன் அபி… ஏதோ சின்ன வயசுல இருந்து உன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணி பழகிட்டேன்.. அதான் இதையும் சொன்னேன். நான் இப்போ நல்லா இருக்கேன் அபி… ஏன் இப்படி ஃபீல் பண்ற?” என்று அவனின் கையை தொட இருவரையும் கண் சுருங்க பார்த்து நின்றாள் அபிலாஷா.


அபிநந்தன் குணத்தில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை… பெண்கள் விஷயத்தில் அபிநந்தன் அத்தனை ஒழுக்கமானவன் என்பது அபிலாஷாவிற்கு நன்கு தெரியும். இதுவரை அவனின் வாழ்வில் அம்மா தங்கை அடுத்து வந்த பெண் தான் தான் என்று நினைத்திருக்க இவள் யார் இடையில்… ஏன் இவளைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை தன்னிடம்.. என்று சிறு வருத்தம் மட்டுமே…


எதுவும் புரியாமல் மலங்க மலங்க பார்த்திருந்த அபியை கவனித்த பார்வதி “அபி, இவ சந்தியா… சந்தியாவும் நந்தாவும் ஸ்கூல் படிக்கும் போது இருந்து ஒன்னா படிச்சவங்க வளர்ந்தவங்க.. நந்தாவோட அப்பாவுக்கு இவளை ரொம்ப பிடிக்கும்.” என்று பார்வதி சொல்ல


“அப்போ உங்களுக்கு பிடிக்காதா அத்தை? என்று சந்தியா கேட்க அத்தை” என்று அழைத்ததில் குழப்பமாக பார்த்தாள் அபிலாஷா.


“ஆமா அபி அது எப்படி டா உன் பெயர்லயே ஒரு பொண்ணை பார்த்திருக்கீங்க…” என்று சந்தியா கேட்க


“அந்த பெயர் தான் ரெண்டு பேரையும் சேர்த்தே வைச்சது சந்தியா அக்கா..” என்று வந்து நின்றாள் அக்சயா. 


“ஹேய் அச்சு குட்டி… மூணு வருஷத்துல எவ்வளவு வளர்ந்துட்டா… எப்படி டி இருக்க?” என்று உற்சாகமாக எழுந்து ஓடிப்போய் கட்டிக் கொள்ள அவளும் இவளை கட்டிக் கொண்டு நலம் விசாரித்தாள்.


“நீ எப்போ வந்தே அச்சு?” பார்வதி கேட்க


“ம்ம்… அக்காவை அப்பாக்கு பிடிக்கும் னு சொன்னப்போ உனக்கு பிடிக்காதா னு கேட்டாங்க இல்லையா அப்போவே வந்துட்டேன். நீங்க சொல்லுங்க அக்கா எப்படி இருக்கீங்க?” அக்சயா கேட்க 


“நான் நல்லா இருக்கேன் குட்டி… இல்லல்ல இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சிட்டு குட்டி பாப்பா னு கூப்பிடலாமா? கல்யாணப் பொண்ணு… அச்சோ வெட்கம் எல்லாம் படுறாளே… டேய் அபி நம்ம அக்சயா இது?” என்று தன் சோகங்கள் யாவும் மறைத்துக் கொண்டு சந்தியா கேலியாக கேட்க


“ச்சூ போங்க அக்கா… அம்மா பாருங்க..” என்று சொல்லி சிணுங்க


“அச்சு நீ போய் ஃப்ரஸ் ஆகிட்டு வா.. அம்மா நான் எல்லாருக்கும் காஃபி போட்டு வரட்டுமா?” என்று அபி நகர பார்க்க 


“நீ இப்போ தானே மா வெளியே போய்ட்டு வந்த… நான் போய் எடுத்திட்டு வரேன்.. உட்காரு. நான் போடுற டீ சந்தியாக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று கிட்சன் சென்றார் பார்வதி.


“அப்பறம் அபி… எப்படி டா ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி நேம்… நான் கேட்டேன் பதில் சொல்லும் முன்னயே அச்சு வரவும் பேச்சு நின்னு போச்சு..” என்று மீண்டும் சந்தியா கேட்க சிறு புன்னகை முகத்தில் அரும்ப அபிநந்தன் அபிலாஷாவை பார்க்க


“அதை நான் சொல்றேன் அக்கா.. ரெண்டு பேரும் லவ் மேரேஜ் தெரியுமா..?” என்று அக்சயா இவர்கள் கதையை சொல்ல துவங்க ஆச்சரியமாக பார்த்தாள் சந்தியா.


“அன்னைக்கு ஒரு நாள் நகைக்கடைக்கு போனப்போ அம்மா எதார்த்தமா ‘அபி அபி’ னு அண்ணாவ கூப்பிட்டதும் ‘என் பெயர் தான் அபி எதுக்கு என்னை கூப்பிட்டீங்க’ னு கேட்டாங்க.. அப்போ நான் சொன்னேன் ‘அண்ணாவை நந்தா னு தானே கூப்பிடுவ.. இன்னைக்கு ஏன் அபி’ னு கூப்பிட்டனு கேட்டதும் இவங்களும் சரினு போய்ட்டாங்க… 


அப்பறம் ஒரு நாள் அம்மா கோவில்ல மயங்கி விழுந்துட்டாங்க… எனக்கு என்ன பண்றது னு ஒன்னும் புரியல ரொம்ப பயந்து அழவும் இவங்க தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் அண்ணாக்கு கால் பண்ணி வர வைச்சாங்க.. அப்போ தான் இவங்க அண்ணா கம்பெனி எம்.டி” என்று அக்சயா சொல்லி ஒரு நொடி நிறுத்த 


“அதாவது உன்னை கட்டிக்கப் போற மாப்பிள்ளை.. சரியா?” என்று சந்தியா கேட்க அழகாய் வெட்கப்பட்டு சிரித்தாள் அக்சயா.


“ம்ம் ஆமா.. அவரும் இவங்களும் ஃப்ரண்ட்ஸ்.. ஆஃபிஸ் ல வச்சு பார்த்திருக்கேன் னு அண்ணா சொன்னாரு. அப்பறம் எனக்கும் அம்மாக்கும் தெரியாம இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு சீக்ரெட் லவ் ஸ்டோரி ஓடிட்டு இருந்திருக்கு… திடீர்னு ஒரு நாள் இவங்களை வீட்டுக்கு கூட்டி வந்து நாங்க லவ் பண்றோம் இவங்க வீட்ல ஒத்துக்கல னு சொன்னதும் நானும் அம்மாவும் பயங்கர ஷாக்… 


ஆனா இங்கதான் பெரிய ட்விஸ்ட்… அடுத்த நிமிஷம் அம்மா ‘உள்ளே வாங்க’ னு கூப்பிட்டு அடுத்த நாளே இவங்களுக்கு கல்யாணமும் ஆகிடுச்சு.. இப்போ கொஞ்ச நாள் முன்ன தான் ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் நடந்தது.” என்று கதை சுருக்கத்தை அக்சயா விவரிக்க


“அடப்பாவி… உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிட தோணலை இல்ல?” என்று கேட்ட படி பட்டென்று அபிநந்தன் தோளில் ஒரு போடு போட்டாள் சந்தியா.


உள்ளுக்குள் திடுக்கிட்ட அபி முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க நந்தன் அவளின் அடியை தூசி போல தட்டி விட்டு சிரித்தான்.


“ஹேய் கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்தது.. அது மட்டும் இல்ல நீ யூ.எஸ் போய்ட்டு கான்டாக்ட் பண்றேன்னு சொல்லிட்டு மூணு வருஷம் கழிச்சு வந்து நிக்கிற… அதான் சந்தியா சொல்ல முடியல…” என்று அபிநந்தன் சொல்ல


“ஆமா ல்ல… சரி விடு அதான் அச்சு கல்யாணத்துக்கு கரெக்டா வந்துட்டேனே… சமாய்ச்சிடலாம்…” என்று மகிழ்வாக பேசிக் கொண்டு இருக்க பார்வதி டீ ஸ்நாக்ஸ் எடுத்து வர அனைவரும் சேர்ந்து உண்டபடி


“அம்மா நானும் லாஷாவும் இப்போ ப்ரதீப்பை பார்க்க தான் போனோம்.. ஒன்னும் இல்ல ப்ரதீப் ஸ்டார்ட் அப் க்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தாரு இல்லையா… அவரை லாஷா கம்பெனில பார்ட்னர் ஆக தான் கேட்க போனோம்..” என்று தாங்கள் சென்ற விபரத்தை கூற


“ஆமா ம்மா.. இனி அவரு யமுனா இன்டஸ்ட்ரீஸ் கம்பனியோட பார்ட்னர்…” என்று சிறு வெட்கத்தோடு அக்சயா ப்ரதீப் தன்னிடம் பகிர்ந்ததை உளறிக் கொட்ட


“ஓ.. ஓஹ்ஹோ… அதுக்குள்ள பிஸ்னஸ் ல பார்ட்னர்ஷிப் ஆனதை லைஃப் பார்ட்னர் கிட்ட தெரியப் படுத்திட்டாரோ… வெறும் ஷேரிங் மட்டுமா இல்ல ட்ரீட் கூட உனக்கு தனியா கொடுத்திட்டானா என்ன?” என்று அபிலாஷா கேலியில் இறங்க


“ச்சீ போங்க அண்ணி.. காலேஜ் முடிஞ்சு பஸ்ல வரும் போது கால் பண்ணி சொன்னாரு..” என்று சொல்ல


“ம்ம் சரி தான்… நாங்க உனக்கு சர்ப்ரைஸ் பண்ண நினைச்சா நீ எங்களை சர்ப்ரைஸ் பண்ற…” அபிநந்தன் சொல்ல


“ஆனா அபி நீ பண்ணினது தான் எனக்கு சர்ப்ரைஸ்… ஏன்டா நம்ம ஸ்கூல் படிக்கும் போதிருந்து ஒரு ஜூனியர் பொண்ணு உன்னை ஃபாலோ பண்ணி நம்ம காலேஜ் படிக்கும் போது உங்கிட்ட ப்ரப்போஸ் பண்ணினாலே…உனக்கு நியாபகம் இருக்கா?” என்று சந்தியா கேட்க தாய் தமக்கை குறிப்பாக தாரமும் சேர்ந்து அபிநந்தனை உறுத்து விழிக்க


“ஈஈஈ… இப்போ எதுக்கு சந்தியா அதெல்லாம்?” என்று அவன் மழுப்ப


“என்ன க்கா சொல்றீங்க இதெல்லாம் எங்களுக்கு தெரியாதே… அண்ணா எப்போ இதெல்லாம்..” என்று கேள்விகளை தொடுத்தாள் அக்சயா.


“அதெல்லாம் நாங்க செகண்ட் இயர் படிக்கும் போதே நடந்தது அச்சு… அந்த பொண்ணு ப்ரப்போஸ் பண்ணினா. பட் அபி அவளை திரும்பி கூட பார்க்கல.. ஆனா அப்போ எனக்கு லவ் வராது ஒருவேளை வந்தா அந்த பொண்ணு கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட தான் சொல்லுவேன்… நீ பார்த்து சரினு சொன்னா தான் நான் அந்த பொண்ணுகிட்டயே லவ் ப்ரப்போஸ் பண்ணுவேன்னு சத்தியம் செய்யாத குறையா அழுத்தி அழுத்தி சொன்னான் அத்தை.. 


இப்போ திடுதிப்புனு… என்கிட்ட கூட சொல்லாம சடனா மேரேஜ் வரைக்கும்.. என்னால யோசிக்க கூட முடியல…” என்று சந்தியா சொல்ல


“ஆனா நந்தா அபியை காதலிச்சதோ இல்ல அன்னைக்கு அவளை கையோட கூட்டிட்டு வந்து என் முன்னால நின்னதோ எதுவுமே எனக்கு தப்பாவே தோணல சந்தியா… நீயே சொல்லு கொஞ்சம் கேட்குறது எல்லாம் வாங்குற அளவுக்கு வசதி இருந்தாலே அந்த வீட்டு பொண்ணுங்க பொறுப்பு இல்லாம திமிரோட நடக்குற இந்தக் காலத்தில என் அபி அவ்வளவு வசதி இருந்தும் என் பையன் மட்டும் போதும்..‌ அவனோட சம்பாத்தியத்துல என்னோட தேவைகளை நிறைவு பண்ணிப்பேன் னு சொல்லி வந்தா..‌ அவ எப்பேர்ப்பட்ட குணம்… அதுதான் என் மருமக அபி..” என்று பார்வதி புகழாரம் சூட்ட


“அப்பப்பப்பா.. இந்த வீட்ல என்ன அச்சு மாமியார் மருமகளை இப்படி புகழ்றாங்க…” என்று சந்தியா கேலியாக கேட்க


“அதை ஏன் கேட்குறீங்க அக்கா… அம்மாக்கு அண்ணியை அவ்வளவு பிடிக்கும்.. அண்ணிக்கும் அம்மாவை ரொம்ப பிடிக்கும். பல சமயத்துல நானே பொறாமை பட்டிருக்கிறேன்… மாமியார் மருமகள் பாசத்துல அப்பப்போ என்னையே டீல்ல விட்டுடுவாங்க ரெண்டு பேரும்… இருக்கட்டும் இருக்கட்டும் இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கப்புறம் பாருங்க உங்களை விட என் மாமியார் என்னை எப்படி புகழுவாங்கனு..‌ நான் அவங்களை அந்த அளவுக்கு கவனிச்சுப்பேன்.” என்று அக்சயா சொல்ல


“விட்டா நீ இன்னைக்கே உன் மாமியார் வீட்டுக்கு ஓடிடுவ போலயே..” என்று சந்தியா கிண்டல் செய்ய அனைவரும் சிரிக்க “ச்சீ போங்க அக்கா” என்று வெட்கம் பூசிக் கொண்டாள் அக்சயா.


“சரி சந்தியா இப்போ எந்த ஹாஸ்பிடல் ல வொர்க் பண்ற? எங்க தங்கி இருக்க?” என்று அனைத்தையும் கேட்டு


“ஓ… அப்போ ஒரு மாசமா இதே ஏரியால இருந்திட்டு இன்னைக்கு தான் உனக்கு என்னை தேடி வர டைம் கிடைச்சதா?” என்று செல்ல கோபம் கொண்டான் அபிநந்தன்.


“இல்லடா… வேலையில கொஞ்சம் பிஸி… அதான்… சரி விடு என்னோட வீக் எண்ட் எல்லாமே இங்க தான் வருவேன்… உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று அபியை பார்த்து சந்தியா கேட்க


“இல்லல்ல… எனக்கு என்ன பிரச்சினை? சரி அம்மா இன்னைக்கு நான் டின்னர் வொர்க் பண்றேன். சந்தியா உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்று கேட்க


“எனக்கு ஸ்பெஷலா எதுவும் வேண்டாம் ங்க.. மோஸ்ட்லி அபிக்கு பிடிச்ச எல்லா ஐட்டமும் நானும் நல்லா சாப்பிடுவேன்.” என்று இயல்பாக சந்தியா சொல்ல


“அவ்வளவு தானே… பண்ணிடுறேன்..” என்று ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு எழுந்து சென்ற தன் மனையாளை மிரட்சியாக பார்த்து வைத்தான் அபிநந்தன்.


  • தொடரும்…






Leave a comment


Comments


Related Post