இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 30-04-2024

Total Views: 19413

பாவை - 20

ஆனந்தியை உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் விசாரிக்க, அவரோ குமரன் கூறியதால் தான் இவ்வாறு செய்தேன் என்று ஒப்புக் கொண்டார்.

“அவங்க சொன்னா நீங்க எப்படி செய்யலாம் ? இது எவ்வளோ பெரிய தப்பு ? இவங்க கிட்ட வாக்குமூலம் வாங்கிக்கோங்க. அப்போ அந்த பொண்ணோட இறப்பு எப்படி ? உடல் கூறாய்வுல என்ன வந்தது ?”

“பலாத்காரம் செஞ்சி கழுத்துல அழுத்துமா நெறிச்சிருக்காங்க. அதுனால அவங்க மூச்சு விட முடியாம இறந்துப் போய்ட்டாங்க “ என்கவே, அதனை பதிவு செய்துக் கொண்டனர்.

“கோர்ட்டுக்கு கூப்பிட்டா நீங்க கண்டிப்பா வரணும். கொலையை தற்கொலையா மாத்தினதுனால உங்களுக்கு தண்டனை கிடைக்கும் “ எனக் கூறி நிதின் ஏதோ நல்லவன் போய் எந்த தவறும் செய்யாதவன் போல் சென்றான்.

பின் நாட்கள் கடந்து நீதிமன்றத்துக்கு வரக் கூறிய நாளும் வரவே, அங்குச் சென்றனர்.

அன்று நடந்ததுப் போல் தான் இன்றும் விசாரிக்க, நிதினை அழைத்து விசாரித்து விட்டதா கேட்க, அவன் விசாரித்ததை நீதிபதியின் முன் கோப்பாக கொடுத்தான்.

அதனை வாங்கிப் பார்த்த நீதிபதியும் மருத்துவரை விசாரிக்க வேண்டுமென கூற, அவரையும் அழைத்திருந்தனர். 

“இவர் தான் உங்க கிட்ட ரிப்போர்ட் மாத்த சொன்னதா ?” என்க, 

அந்த மருத்துவரும், “ஆமா சார் “ என்று ஆனந்தி இறந்த அன்று அவளின் உடலைக் கொண்டு வந்த போது, தன்னை தனியாக சந்தித்து பணம் தருவாக கூறிப் பேசியதை இன்று கூறினார்.

“பணத்துகாக உங்க தொழிலுக்கு நீங்க துரோகம் பண்ணிருக்கீங்க, அதுனால இனி உங்களால எந்த ஹாஸ்பிட்டல்லையும் வேலை பார்க்க முடியாது “ என்று அவருக்கு தண்டனைக் கொடுத்தனர்.

“இப்போ சொல்லுங்க குமரன். அந்த பொண்ணு இறந்ததுக்கு நீங்க தான் காரணம்ன்னு ஒத்துக்குறீங்களா ?” கேட்க, தலை குனிந்த குமரனும் தலையசைத்தான்.

“நான் தான் காரணம் ?”

“எதுக்காக நீங்க இப்படி பண்ணுனீங்க ? என்ன நடந்தது ?” நீதிபதிக் கேட்க, கடந்த நினைவுகளுக்குச் சென்று அதனை கூறினான்.

அன்று ஆனந்தி வழக்கம் போல் இரவு வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஹெச்.ஆர் அழைப்பதாக தகவல் வந்தது. சரியெனக் கூறி அவரைக் காண அவரின் அறைக்குச் சென்றாள். அவளுக்குமே விடுப்புக் கேட்க வேண்டிய அவசியம் இருந்தது. 

“சொல்லுங்க சார் ?“ அனுமதி வாங்கி அறைக்குள் நுழைந்துக் கேட்க,

“லீவ் அப்ளே பண்ணிருக்கீங்க போல ? என்கிட்டே இன்பார்ம் பண்ணவே இல்லை “

“சாரி சார். கொஞ்சம் எமெர்ஜென்சி அதான் “

“அப்படி என்ன ?”

“என் சொந்த ஊருக்கு போக வேண்டியது இருக்கு “ 

“அப்படியா அப்போ சரி. போயிட்டு வாங்க. வேலையில பெண்டிங் எதுவும் இருக்கா ?” என்க, சட்டென அனுமதி கொடுத்து விடவே, அதியசமாய்க் கண்டாள்.

“நோ சார் “

“இப்பவே நீங்க கிளம்பலாம். அதான் எந்த வேலையும் இல்லையே ?” என்றதும், அவளும் நன்றி கூறிவிட்டு வெளியே வந்தாள்.

மணியைக் காண அதுவோ ஒன்றைத் தாண்டியது. சரி சிறிது நேரம் ஹாஸ்டல் சென்று தூங்கிவிட்டு வசந்த்தை சந்தித்து பின் ஊருக்குச் செல்லலாம் என நினைத்து அங்கிருந்துக் கிளம்பினாள்.

உடன் இருந்தவர்கள் உறக்கத்தோடு வேலைப் பார்க்க தொந்தரவு தராது வெளியேறியவள் பார்க்கிங் வர, அவளின் முன்னே வேகமோடு ஒரு கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய அவளின் ஹெச்.ஆர், அவள் என்ன நடக்கிறது என்பதை யோசிக்கும் முன்னே சட்டென மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை எடுத்து அவளின் வாயை மூடினான். பின் அவளை காருக்குள் கிடத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

நிச்சியம் அவள் தனக்கு ஒத்து வர மாட்டாள் என்பதை அறிந்தே மயக்கமடைய வைத்து தன் ஹோட்டலுக்கு அழைத்து வந்தவனோ எப்போதும் தான் பயன்படுத்தும் அறைக்குள் அவளோடு நுழைந்தான்.

ஆனந்தியை விட்டதும் படுக்கையில் பட்டென சரிய, ஒரு புறமாய் சரிந்தவளின் முன் அழகினை ரசிக்க ஆவலோ தூண்ட, சட்டென உடையை அகற்றி வன்மமாக செயல்பட ஆரம்பித்தான்.

அவனின் கொடூரம் மயக்கத்தில் இருந்தவளுக்கு வலியை கொடுக்க, மெல்ல விழி திறக்க முற்பட்டாள். அப்படியே விழி திறந்தாலும் எதிர்க்கும் சக்தி அவளிடமில்லை. அரை மயக்க நிலையிலும் கூட தன் பெண்மையைக் காக்க தான் போராடினாள். 

எங்கே அவளால் முடிந்தது ? கேடு கெட்ட மிருகமானவோ தன் பசியைத் தீர்த்து அவளை நாசம் செய்து வெற்றியைக் கண்டு எழுந்து அமர்ந்தான்.

அரை மணி நேரம் சென்ற பின்னே ஆனந்தியோ மெல்ல சுயவுணர்விற்கு வர எழ கூட முடியவில்லை. அந்த அளவுக்கு மிருகனாய் அவனின் செயல் இருக்க, நடந்ததை முழுதாக ஏற்றுக் கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

“சும்மா சொல்ல கூடாது நல்லாவே கம்பெனி கொடுத்தே ?” என்க, சீற்றமாய் பற்களை கடித்துக் கொண்டு எழுந்தவளோ, அருகிலிருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து அவனை தாக்க முயற்சித்தாள்.

“என்னை நாசம் பண்ண உன்னை சும்மா விட மாட்டேன்டா “ கத்தியவளோ, அவனின் மீது குத்த முயல நொடியில் தடுத்து விட்டான்.

அவள் தான் மொத்த சக்தியையும் இழந்து விட்டாலே ? 

“என்னை சீரழிச்ச உன்னை இந்த உலகமே பார்க்க அவமானப்படுத்தாம விட மாட்டேன்டா ? பொம்பள பொறுக்கி, நாயே. நீயெல்லாம் மனுஷன் தானா ? இப்பவே உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு “ எனக் கூறி அங்கே இருந்த அலைபேசியின் அருகேச் செல்ல,

கழுத்தைப் பற்றி சுவரோடு அடக்கியவனோ, “என்னடி ஒவர்ரா போறே ? பணத்தை தரேன். படுத்துக்கு வாங்கிட்டு மூடிட்டு போடி “ என்க, விழிகளால் அவனை எரித்தாள்.

அவனோ கழுத்தை நெரிக்க, தாங்க முடியாது சுவரில் கரங்களை துலாவ விட்டவளுக்கு அங்கே ஒரு போட்டோ பிரேம் இருக்க சட்டென அதனை கழட்டி அவனின் மண்டையிலே அடித்தாள்.

அவ்வளோ தான் அதற்கு மேல் விடுவானா ?வெறியானவனோ தன்னையே கொல்லத் துடிக்கும் இவளை விட்டு வைக்க முடியுமா என்ன ? அப்படியே தன் பிடியின் அழுத்தத்தை அதிகரித்தவனோ அவளின் உயிர் பிரியும் வரை துடிக்க வைத்து கொன்றான்.

ஆனந்தியின் மூச்சு அடங்கிய பின்னே விட பட்டென தரையில் சரிந்தாள். அவசரப்பட்டு விட்டோம்மோ செய்த பின்னே புத்தியில் உரைத்தது. பின் நண்பன் கூறியதுப் போல் கொலையை தற்கொலையா மாற்றி விட்டான்.

விடிந்த நேரம் ஏரிக்கரை ஓரம் ஒதுங்கிய அவளின் உடலை பார்த்த நிதின் விசாரிக்க, செய்தி ஊடங்கள் வழியாக தகவல் சென்ற பின்னே வந்துச் சேர்ந்தான் வசந்த்.

பிணமாக கிடந்தவளை கட்டி பிடித்து வசந்த அழுகவே தற்கொலைக்கான காரணத்தை ஏற்பாடு செய்து விட்டு அதையே பரப்பியும் விட்டனர்.

அன்று நடந்ததை இன்று நீதிபதியின் முன் கூறிய குமரன் நிதினை இதில் இழுக்கவில்லை. இழுக்க கூடாது தான் வெளியே இருந்தால் தான் உனக்கு உதவ முடியும் என்று கூறியிருந்ததால் இதனை மட்டும் கூறினான்.

கேட்ட வசந்திற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. ஆவேசமாய் நீதிமன்றம் என்றும் கூட பார்க்காது வேகமாய் வந்தவனோ அவனின் சட்டையைப் பற்றி அடுத்து துவம்சம் செய்ய, உடன் இருந்த அதிகாரிகள் பிரித்து விட்டனர்.

 “சார் இவனையெல்லாம் சும்மா விடாதீங்க ? என் ஆனந்திக்காக மட்டுமில்ல எத்தனையோ பொண்ணுங்க கிட்டயும் இப்படி நடந்திருக்கான் “ என்று ரேஷ்மியோடு இருந்தததையும் கூறினான்.

அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்ட நீதிபதி ஆயுள் தண்டனைக் கொடுக்கவே அதிர்ந்தான் குமரன்.

சில காலம் தண்டனை என்றாலும் தந்தையை வைத்து வெளியே வந்து விடலாம். ஆயுள் தண்டனை என்றால் சொல்லவா முடியும் ? இனி காலம் முழுக்க ஜெயில் நினைக்கும் போதே பீதியானான்.

குமரனின் முகத்தில் தென்பட்ட அந்த பயத்தைக் கண்ட பின்னும் கூட வசந்திற்கு கோபம் அடங்கவில்லை.

“என்ன நிதின் இப்படியாகிருச்சி ?”

“முடிஞ்ச அளவு நான் முயற்சி செய்து பார்க்குறேன் குமரன் “ என்று நழுவி விட்டான் நிதின். பின் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்று விட, அன்றையப் பொழுது ஒரு வழியாகச் சென்றது.

மறுநாள் மாலை நேரம் போல் அஞ்சனா வேலைப் பார்க்கும் பார்க்குக்கு வந்து வசந்த் காத்திருக்க, அவனைக் காண வந்தாள்.

“என்னாச்சு நேத்து என்ன நடந்தது ? கேட்டதுக்கு நீங்க எதுவும் சொல்லையே ?”  என்க, நேற்று நடந்த குமரன் கூறிய அனைத்தையும் கூறினான்.

தன் அக்கா அவனால் எத்தகைய காயங்களை சுமந்திருக்கிறாள் என்பது புரிய, ஆயுள் தண்டனை கிடைத்ததை கூட முழுமையாக ஏற்க முடியவில்லை.

“எனக்கு ஒரு விசியத்தை மட்டும் சொல்லுங்க. இனி அவனால வெளியே வர முடியாதுல ?”

“வாய்ப்பேயில்லை. இருந்தாலும் அந்த போலீஸ்க்காரனை தான் என்னால எதுவும் பண்ண முடியாம போச்சு “

“அவனை நான் பார்த்துக்குறேன் “

“என்ன பண்ணப் போறே ?”

“இன்னும் கொஞ்சம் நாளுல உங்களுக்கே தெரியும் “ வன்மம் முழுவதும் கெட்டவனுக்கு துணை நின்றவனின் மீது திரும்பியது.

“எங்கையாவது வெளியே போ ரிலாக்ஸ்சா கொஞ்சம் நாள் இருந்திட்டு வாங்க. இதுல இருந்து நீங்க மீண்டு வந்தா தான் ஒரு புது வாழ்க்கை பயணத்துல அடியெடுத்து வைக்க முடியும் உங்களால “ என்று வசந்த்திற்க்கு ஆறுதல் கூற,

“ஆனந்தி இல்லாத இந்த வாழ்க்கையை நான் ஏன் வாழணும் ?”

“அப்படி சொல்லாதீங்க ? அக்கா இந்த உலகத்துல இல்லைன்னாலும் நீங்க சந்தோஷமா இருக்கணும் தான் நினைச்சிருப்பா ? சீக்கிரமே உங்களுக்காக துணையை பாருங்க. இப்படியே இருக்காதீங்க “ என சிறிது நேரம் அவனின் மனதின் காயத்தை ஆற்ற முயற்சித்தாள்.

நாட்கள் கடக்க வழக்கம் போலே அலுவலகம் செல்ல வரவென்று இருந்தாள். குமரனின் தந்தையோ தன்னால் உதவி செய்ய முடியாது செய்தால் தன் பதவி போய் விடும் என்று கூறி விடவே முடங்கி விட்ட நிலைக்குச் சென்றாள்.

தவறு செய்தவன் முடங்கி விடவே, கூட்டிலிருந்து வெளி வந்த பட்டாம்பூச்சி போல் வாழ்ந்து தினமும் நாட்களைக் கடத்தினாள் அஞ்சனா.

வசந்திற்கு இந்த நிகழ்வில் இருந்து மீள சில காலங்கள் தேவைப்பட்டது. ஒரு வருடத்தை நெருங்குவது போல் இருக்கவே தன்னை பெற்றவர்களைக் காணத் துடித்தாள்.

நிதினுக்கு ஒரு முடிவு கட்டிய பின் தான் பெற்றவர்களிடம் செல்ல வேண்டுமென வைராக்கியமாக இருந்தவளுக்கு அதுவோ முடியாதுப் போனது. அவர்களுக்கு தெரியாமலாவது பார்த்து விட்டு வரலாம் என நினைத்து ஊருக்குச் சென்றாள்.

தன் ஊரில் வந்து இறங்கியவளோ மூஸ்லீம் பெண் வேடமிட்டு பிறந்த வீட்டின் முன்னேச் சென்று நிற்க பூட்டிய வீடு தான் வரவேற்றது.

“அப்பா, அம்மா எங்க போனாங்க ? அவங்களுக்கு என்னாச்சு ? ஏன் இந்த இடம் இப்படி இருக்கு ?” செடிகள் முளைத்து தூசியாக இருப்பதைக் கண்டு நினைத்தாள்.

பக்கத்து வீட்டு பெண் தண்ணீர் எடுக்கச் செல்ல, “அக்கா ஒரு நிமிஷம் ? இந்த வீட்டுல இருந்தவங்க எங்க ?” என்க,

“நீ யாரும்மா ?”

“நான் ஐஸ்வர்யா கூட படிச்ச பொண்ணு. பாரின்ல இருந்து இப்போ தான் வர்றேன் “

“உனக்கு விசியமே தெரியாதாம்மா. ரெண்டு பொம்பளை பிள்ளைகளும் இறந்துப் போய்ட்டாங்க. அதுனால அவருக்கு உடம்பு முடியாம போய் ஹாஸ்பிட்டலுக்கு அலைஞ்சிட்டு இருந்தாக. இங்கே இருந்தா சரி வராது குணப்படுத்த முடியாதுன்னு சொல்லி சென்னைக்கு கூட்டிட்டு போய்ட்டான் அவங்க பையன் “

“சென்னைக்கா ? எப்போ போனாங்க ?” அதிர்ச்சியோடுக் கேட்க,

“ரெண்டு மாசம் இருக்கு “ என்கவே, ஏமாற்றமோடு அங்கிருந்து கிளம்பினாள்.

தான் இருக்கும் இடத்திலே தன் குடும்பத்தார் இருக்க இத்தனை நாள் இதனை அறியாமல் விட்டானே ? வேதனையோடு சென்னை வந்துச் சேர்ந்தாள்.

இவ்வளோ பெரிய சிட்டியில் எங்குச் சென்று அவர்களை தேடுவேன் நான் ?

இரண்டு நாட்கள்  கழித்து வேலைக்கு வந்த அஞ்சனாவைக் கண்ட நந்தன், வேகமாய் அவளின் முன்னேச் சென்று நின்றான்.

“என்னாச்சு உனக்கு ? கால் பண்ணுனா எடுக்கவே இல்லை. எங்க போனே ? உனக்கு எதுவும் ஆச்சோன்னு நான் பயந்தே போய்ட்டேன். உன் ஹாஸ்டல் கூட வந்து விசாரிச்சிப் பார்த்தேன். நீ ஏதோ ஊருக்கு போனதா சொன்னாங்க எங்க போனே ?” என்று பதட்டத்தோடு கேள்வி மேல் கேள்வியாய் கேட்க, சட்டென எழுந்து அலுவலகம் என்றும் பாராது அணைத்துக் கொண்டாள்.

இதனை எதிர்பாராதவனோ, “அஞ்சனா என்னாச்சு ?” மென்மையாய் கேட்க, அவளின் விழிக் கண்ணீர் அவனின் நெஞ்சில் வந்து பதிந்தது.

தன்னவள் அழுகிறாள் என்பது புரியவே மெல்ல விலக்கி அனைவரும் தங்களைக் காண்பது உணர்ந்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அந்த கட்டிடம் வெளியே இருந்த ரெஸ்டாரெண்ட் ஒன்றில் இருவரும் அமர்ந்திருக்க, “இப்போ சொல்லு, ஏதாவது பிரச்சனையா உனக்கு ?” என்க,

“நான் ஆசைப்பட்ட எதுவுமே எனக்கு நடக்க மாட்டிங்குது. எனக்கு பிடிச்சவங்களை அந்த கடவுள் என் கிட்ட இருந்து ஏன் பறிக்கிறாரு. எனக்கு இந்த வாழ்க்கை சுத்தமா பிடிக்கவேயில்லை. என் மனசு என்ன நினைக்கிது நான் ஏன் இப்படி பைத்தியம் மாதிரி இருக்கேன்னு எனக்கே தெரியல “ என்று ஏமாற்ற உணர்வில் புலம்பவே, அவளை பேச விட்டு கரத்தினை தடவிக் கொடுத்தவாறேக் கேட்டான்.

 “சரி இப்போ என்ன பண்ணலாம் ? எங்கையாவது வெளியூர் போய்ட்டு வருவோம்மா “

“வேண்டாம். என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா நந்தன் ? எனக்கு ஒரு புது வாழ்க்கை வேணும் “ என்கவே, இவள் தான் இவ்வாறு கூறினாளா தன்னிடம், அதிர்ச்சியோடு தான் பார்த்தான்.

“என்னாச்சு நந்தன் ? எதுக்கு என்னை இப்படி பார்க்குறீங்க ?”

“நீ இன்னும் என்னை காதலிக்கிறதா சொல்லவேயில்லை. நாம்ம லவ்வர்ஸ் மாதிரி என்ஜாய் பண்ணலை “

“கல்யாணம் பண்ணிட்டு பண்ண முடியாத என்ன ? காதலை சொல்லலை தான். ஆனா வேண்டான்னு சொல்லலைல. சொன்னா தான் புரிஞ்சிப்பீங்களா நீங்க ? நான் காதலிக்கிறேன்னா இல்லையான்னு உங்களுக்கு தெரியாதா நந்தன் “ 

“சரி சரி கோபப்படாதே. எனக்கு கொஞ்சம் டைம் கொடு “

“ஒரு வாரம் எடுத்துக்கோங்க. நம்ம கல்யாணம் எப்போன்னு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க “ என்றவளோ அங்கிருந்துச் சென்று விட்டாள்.

அவள் முடிவினைச் சொல்லி விட்டால் தன் வீட்டில் இதனை கூறி அவர்களை சமாளிக்க வேண்டுமே ? நினைக்கும் போதே கன்னத்தில் கைவைத்து விட்டான் நந்தன்.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



Leave a comment


Comments


Related Post