இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 4 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 01-05-2024

Total Views: 14553

இதயம் - 4

அஞ்சனா தன் தந்தை வாசுவை ஜெர்மன் கம்பனிக்கு எம்டி ஆக்க போவதை கூறியதும் வாசு வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான். அஞ்சனா வாசுவின் தோளை பயத்தில் இறுக பற்றிக் கொண்டு "வாசு" என்று பற்களை கடித்துக் கொண்டு முனங்கினான். "உனக்கும் உன் அப்பாக்கும் மூளையில எதாவது இருக்கா இல்லையா அஞ்சு" என்று வாசு கோபமாக கேட்க "இப்ப தேவையில்லாம எதுக்கு என் அப்பாவ திட்ற வாசு நீ" என்று அஞ்சனா கோபமாக கேட்டு வண்டியில் இருந்து இறங்கினாள். "திட்டாம வேற என்ன சொல்ல சொல்ர ... என் பேமிலி எல்லாரும் இங்க இருக்காங்க ... உங்க அப்பா என்னை ஜெர்மன் கம்பனி பொறுப்பை கொடுக்க போறதா சொல்ர ... முதல்ல யார கேட்டு அந்த முடிவ நீயும் உன் அப்பாவும் எடுத்திங்க ... நீங்க வாங்க மாப்பிள்ளைன்னு கூப்ட்டா உடனே உங்க பின்னாடியே வருவன்னு நினைக்கிறிங்களா ... இன்னும் நம்ம லவ் விஷயம் என் வீட்ல தெரியவே தெரியாது ... அதுக்குள்ள கம்பனிய ஒப்படைக்க போறாருன்ற" என்று வாசு கோபமாக கேட்டான். "எங்க அப்பா எல்லாமே நம்ம ப்யூச்சர்க்காக தான் செய்றாரு வாசு அவரை அசிங்கப்படுத்தற மாதிரி பேசாத ... நா வீட்டுக்கு ஒரே பொண்ணு ... எல்லா சொத்துக்கும் ஒரே வாரிசு ... என்னை கட்டிக்க போறவரு அந்த கம்பனியெல்லாம் பாத்துக்கனுன்னு என் அப்பா நினைக்கிறது தப்பா" என்று பதிலுக்கு அஞ்சனா கத்தினாள். "கத்தாம பேசு அஞ்சு எல்லாரும் பாக்றாங்க" என்று வாசு குரலை தாழ்த்தி கூற அவளோ "பாக்கட்டும் ... நல்லா பாக்கட்டும் ... எவனாவது கம்பனியும் கொடுத்து பொண்ணையும் கொடுத்தா ... என் குடும்பத்தை விட்டு வர மாட்டன்னு உன்னை மாதிரி எவனாவது சொல்வானா" என்று கத்தினாள். "அஞ்சு ஜஸ்ட் ஸ்டாப் தி நான்சன்ஸ்" என்று வாசுவும் அவளுக்கு இணையாக கத்தினான். 

அப்பொழுது அவ்வழியாக சென்ற யாழிசை இருவரையும் ஒரு நொடி பார்த்து விட்டு பின் அமைதியாக நொச் கொட்டி விட்டு திரும்பிக் கொண்டாள். பரத் இருவரும் சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டான். 'எப்ப பாரு ரோட்ல சண்டை போட்றதே வேலையா போச்சி' என்று நினைத்தவன் வேகமாக வண்டியை நிறுத்தி விட்டு அவர்களிடம் ஓடினான். "அண்ணா என்ன அண்ணா பன்ற ... நடு ரோட்ல நின்னு சண்டை போட்டுட்டு இருக்க" என்று பரத் வாசுவை கேட்க வாசு "நா எங்கடா சண்டை போட்டன் ... அவ தான் தேவையில்லாதத எல்லாம் பேசி என்னை டென்ஷன் பன்றா" என்று கூறினான். "அண்ணா அதுக்காக இப்படியா ... அவங்களை கூட்டிட்டு கிளம்பு" என்று பரத் கூற அஞ்சனா "ஒன்னும் தேவையில்ல" என்று கோபமாக கூறியவள் தன் காரில் ஏறி கிளம்பி விட்டாள். பரத் வாசுவை பார்க்க வாசு தன் தம்பியை சலிப்புடன் பார்த்தான். "கிளம்பு" என்று பரத் கூற வாசுவும் வண்டியை வீட்டிற்கு திருப்பினான். 

யாழிசை வீட்டிற்குள் நுழைந்ததும் அவளது தோரணையும் முகமும் அப்படியே வேறு விதமாக மாறியது. கண்களில் கூர்பார்வைக்கு பதில் குறும்புத்தனமும். இதழில் அளவான மென்நகைக்கு பதில் அகலமான விரிந்த புன்னகையும், நிமிர் முகத்தில் தாழ்வும், ஸ்டிப்பான உடலில் தளர்வும் தோன்ற யாழிசை பூனை நடையிட்டு சமையலறைச் சென்றாள். உள்ளே ஆறடிக்கு அதிகமும் அல்லாமல் குறைவாகவும் அல்லாமல் உடலை அழகாய் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த அந்த ஆடவனின் பின்னால் சென்று மெதுவாக நின்றவள் கத்த வாயை திறக்கவும் "பாப்பா" என்ற அழுத்தமான குரல் அவனிடம் இருந்து வந்ததோடு அழகாய் புன்னகை முகமாய் அவளை நோக்கி திரும்பினான் அவினாஷ். "போண்ணா இன்னைக்கும் நீ கண்டுபிடிச்சிட்ட" என்று பொய்யாய் கோபம் காட்டி குறைப்பட்ட தன் குழந்தை தங்கையின் தலையை கோதி விட்ட அவினாஷ் "உன்னை ஒரு பாதுகாப்பான கையில ஒப்படைக்கிற வரைக்கும் நா இவ்வளவு விழிப்புணர்வோட இருந்து தான் ஆகனும்" என்று கூறினான். "உன்னை விட எனக்கு யார் கிட்ட பாதுகாப்புன்னு ஒன்னு கிடைச்சிட போது ... எனக்கு யாருமே வேணா அண்ணா நீ மட்டும் போதும்" என்று யாழிசை கூறினான். "உனக்கு நா மட்டும் போதும் ஆனா எனக்கு உன் அண்ணி வேணுமே" என்று அவினாஷ் கூற யாழிசை அவனை முறைத்தாள். 

அவளின் முறைப்புக்கெல்லாம் கால் நடுங்கி வியர்த்துக் கொட்ட அவன் ஒன்றும் யாழிசையிடம் வேலை செய்பவன் அல்லவே அவினாஷ். யாழிசைக்கு வேலை கற்றுக் கொடுத்தவன். "போதும் இத குடி" என்று அவள் முன் ப்ரஷ்ஷான ஜூஸ் ஒன்றை நீட்ட யாழிசை "உனக்கு எத்தனை முறை அவிண்ணா சொல்ரது ... எதுக்காக நீ இதெல்லாம் பன்ற" என்று கவலையாகவும் அதே சமயம் சிறிது கோபமாகவும் கேட்டாள். "இங்க இருக்கறது உனக்கு நீ எனக்கு நா ... நா உனக்காக செய்யாம வேற யார்க்காக செய்ய போறன்" என்று அவினாஷ் யாழிசையின் தலையை லேசாக கலைத்து விட்டவாறு கூறினான். "ம்ச்" என்று நொச் கொட்டியவாறு யாழிசை தன் அண்ணனை முறைக்க அவனோ அழகாய் புன்முறுவல் பூத்தான். "சும்மா சும்மா சிரிக்காத ... நீ சிரிச்சா என் கோவமெல்லாம் பறந்து போய்டுது மாயக்காரா" என்று யாழிசை தன் அண்ணனின் மார்பிலே தட்டினாள். அவனிற்கு அவளின் மென்மையான தட்டல் வலிக்கவா போகிறது. அவன் தான் கட்டு கட்டாய் உடலை உடற்பயிற்சி மூலமாக ஏற்றி வைத்திருக்கிறானே!, தங்கைக்காக வலிப்பது போல் தடவிக் கொண்டான். 

அண்ணன் தங்கை இருவருமே வீட்டில் பாசமலர்கள், பண்பானவர்கள், குணமானவர்கள், ஏன் கோபம் என்பதே என்ன என்று கேட்கும் அளவிற்கு இருவரும் வாய் விட்டு சிரித்துக் கொண்டே வீடு முழுதும் சுற்றுவர். அவ்வீட்டில் வேலை செய்யும் ஒரே ஒரு ஆள் மகேஷ்வரியம்மாளை தவிற வேறு யாருக்குமே இருவரின் உண்மையான குணம் தெரிய வாய்ப்பே இல்லை. இவ்வளவு ஏன் ஐந்து வருடமாக யாழிசை பின் வேலையாய் சுற்றும் கணேஷ்க்கு கூட யாழிசையின் உண்மையான குணம் தெரியவே தெரியாது.  இருவரும் வீட்டிற்கு வெளியில் காலடி எடுத்து வைத்தால் இருவரின் முகமும் இறுகி போய் புன்னகையே அரிதாய் இருப்பது போல் காட்டிக் கொள்வர். அத்தோடு இருவரின் குணமும் அப்படியே எதிராக மாறி விடும். இதழில் புன்னகை இருக்காது கண்களில் கனிவு இருக்காது நெஞ்சில் ஈரம் இருக்காது. ஆனால் இருவரும் ஒரு நொடி ஒரு விஷயத்தை பார்த்தாலே அதை இறுதி வரை மறக்க மாட்டனர். 

வாசு டென்ஷனுடனே வீட்டிற்குள் நுழைய அதை பார்த்த ப்ரீத்தி அவன் பின்னாலே சென்றாள். பரத் உடையை கூட மாற்றாமல் நேராக சமையலறை சென்று தன் அண்ணனிற்காக ஒரு டீயை போட்டு எடுத்துச் சென்றான். "என்ன டா ட்ரஸ் கூட மாத்தாம டீ எடுத்துட்டு போற ... யார்க்கு" என்ற தன் தாயினே கேள்விக்கு "அண்ணனுக்கு மா ... தலை வலியாம்" என்று கூறிய பரத் டீயுடன் அண்ணன் அறைக்குள் நுழைந்தான். "டேய் என்னடா ரொம்ப டென்ஷன்னா இருக்க ... என்னன்னு சொல்லு நா உனக்கு ஐடியா கொடுக்றன்" என்று ப்ரீத்தி கூற வாசு "வயசுக்கு தகுந்த மாதிரி பேசு டி ... போய் வேலைய பாரு" என்று வாசு கூறினான். "ஐய்ய ரொம்ப தான் பன்ற ... நீ இதுவரைக்கும் என் கிட்ட எதுமே சொல்லாத மாதிரி சீன் போட்ற ... சொல்லு" என்று ப்ரீத்தி கேட்க பரத் "ஏன்டி அவனை வந்ததும் வராததுமா வாய கிளறி வாங்கி கட்டிக்க பாக்கற" என்று தன் தங்கையிடம் கேட்டவாறு டீயை அண்ணனிடம் நீட்டினான். வாசு இருந்த டென்ஷனில் அதை வாங்கி பருகினான். 

"இரண்டு பேரும் என் கிட்ட மறைக்கிற அளவுக்கு என்ன வேலை பன்னிட்டு வந்திங்க" என்று ப்ரீத்தி கேள்விக் கண்ணோடு கேட்க "ஹேய் ஒன்னும் இல்லை டி வழக்கம் போல இரண்டு பேர்க்கும் சண்டை" என்று பரத் கூற "டேய் அண்ணா ரொம்ப திட்டிட்டாங்களா டா" என்று ப்ரீத்தி தன் பெரிய அண்ணனின் முக வாயை பிடித்து கேட்டாள். "இல்லை இன்னைக்கு நான்தான் டென்ஷன்ல கத்தி விட்டு வந்துட்டன்" என்று வாசு கூற பரத்தும் ப்ரீத்தியும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். "என்ன அண்ணா சொல்ர ... அவங்க வசதியா இருக்கவங்க அவங்களை கல்யாணம் பன்றதுக்குள்ள அவங்களுக்கு தகுந்த மாதிரி நம்ம வீட்ட மாத்தனும் அது வரைக்கும் அவங்க சங்கடப்பட்ற மாதிரி எதும் பேச மாட்டன்னு சொன்ன" என்று பரத் கேட்டான். 

"அவங்க அப்பா ஜெர்மனில கம்பனி ஓப்பன் பன்ன போறாராம் அதை போய் நா அங்க பாத்துக்கனுமாம்" என்று வாசு கோபமாக கூற "நல்ல விஷயம் தான அண்ணா ... நீ சம்பாதிச்சி வாங்கனுன்னு ஆசைப்பட்டத அவங்களே தராங்க ... அதை ஏன் வேணா சொல்ர" என்று ப்ரீத்தி கேட்டாள். "ஹேய் லூசு ... உங்களை எல்லாம் விட்டுட்டு அங்க போய் தனியா என்னை இருக்க சொல்ரியா" என்று வாசு கோபமாக கேட்டான். "இல்லன்னா கொஞ்ச நாள் இரு அப்பறம் எதாவது காரணம் சொல்லிட்டு அஞ்சனாவ கூட்டிட்டு இங்க வந்திரு" என்று ப்ரீத்தி கூற "அதெல்லாம் சரிப்பட்டு வராது ப்ரீத்திம்மா" என்று வாசு கூற பரத் "எங்க ஹோட்டல் கூட ஜெர்மனில ஒரு ப்ரான்ச் ஓப்பன் பன்ன போறாங்க" என்று கூறினான். "நீயும் ஜெர்மனி போறியாடா" என்று ப்ரீத்தி அதிர்ச்சியாக கேட்க "அட பைத்தியமே நா ஏன் அங்க போக போறன் ... அங்க போக ஏற்கனவே ஆளுங்களை எல்லாம் இன்டர்வ்யூ எடுத்து செலக்ட் பன்னியாச்சி ... அதோட அங்கேயே செட்டில்ட்டா இருக்க இந்தியன்ன தான் வேலைக்கு வைப்பாங்க ... நா எல்லாம் கூப்ட்டா கூட அங்க போக மாட்டன் ... போங்கடா நீங்களும் வேலையும்ன்னு சொல்லிடுவன்" என்று பரத் கூறினான். "அப்பறம் நா மட்டும் போவனா" என்று வாசு கேட்டான். "எங்க போக போறிங்க" என்று கேட்டவாறே உள்ளே நுழைந்த வாசுவின் தாயை கண்டதும் மூவரும் அதிர்ந்தனர்.


Leave a comment


Comments


Related Post