இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -26 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 01-05-2024

Total Views: 26342

அகந்தை -1

எட்டு வருடங்களுக்கு பிறகு,

“அம்மா திடீர்னு அங்கயே போகணும்னு சொன்னா எப்படி..? பொண்ணு பார்க்க தானே வரோம்னு சொன்னோம். இப்போ நிரந்தரமா அங்கயே போகணும்னு சொன்னா.. என்ன ஏதுன்னு கேக்க மாட்டாங்களா..?”

“கேட்டா சொல்லு.. என் தங்கச்சி இப்படி பண்ணிட்டா அதனால எங்களால அங்க இருக்க முடியாம இங்க வந்துட்டோம்ன்னு, இங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் பதறி பதறி என்னால வாழ முடியாது. எப்போ எது நடக்குமோன்னு நினைச்சாலே கொலை நடுங்குது.” என கண்ணீர் வடித்த ராஜியை மகன், மகள் இருவரும் பாவமாக பார்த்தனர்.

“அம்மா என்மேல் தானே தப்பு. சரி இனி எதுவுமே பண்ண மாட்டேன் போதுமா?”

திரும்ப நிரந்தரமாக திருப்பூர் என்றால் நந்தனை நினைத்து உடல் நடுங்கியது. இத்தனை வருடங்கள் ஆகியும் அவன் மேல் இருக்கும் பயம் மட்டும் குறையவேயில்லை. அவனுக்கு பயந்தே தாயிக்கு வாக்குறுதியைக் கொடுத்தாள்.

கருங்கூந்தல் இடையை தாண்டி ஆட, பிறை நெற்றியில் வில்லாக இருப் புருவங்கள், கருவண்டாக துள்ளும் கருவிழி கண்கள். பெயர் மட்டும் நிலா அல்ல அவளும் களங்கமற்ற நிலவின் முகத்தைப் போன்று செதுக்கி வைத்த செப்பு சிலையாக இருந்தாள்.

சிறிய வயதின் வறுமையால் மாசுபடிந்த குத்துவிளக்காக இருந்ததால் அவளது அழகு பெரிதாக வெளியே தெரிந்தது இல்லை. இப்போது வளவன் பெரிய அளவில் சம்பளம் வாங்குவதால் ஏழ்மையில் இருந்து நடுத்தர வர்க்கத்திற்கு மாறி இருந்தனர்.

அதனால் அவர்களின் உடையின் மதிப்பும், வாங்கும் பொருட்களின் மதிப்பும் விலை கூடியிருந்தது. பெங்களூர் நகரத்தில் இருப்பதால் அந்த சூழலுக்கு தகுந்ததுப் போல் தன்னை மாற்றிக் கொண்டு துடைத்து வைத்த செப்பு சிலையாக மின்னினாள் நிலா.

பருவ வயதில், மகள் அழகில் மிளிர்வதை எண்ணி சந்தோசப்படுவதா? இல்லை அந்த அழகு களங்கப்பட்டு விடுமோ என பயப்படுவதா? என தெரியாமல் தான் அவசர அவசரமாக ஊருக்குப் போக வேண்டும் என்கிறார் ராஜி.

“நீ பண்ண வரைக்கும் போதும் தாயி. இதுக்கு மேல பண்ணுனா என் உடம்பு தாங்காது, உயிர் போய்டும்.” என தாயி மண்டியிட்டு அழ.

“அம்மா... இப்போ எதுக்கு அழற ஊருக்குப் போகணும் அவ்வளவு தானே போலாம் போதுமா?”

“போதாது..”

“இன்னும் என்னமா வேணும்?”

“இங்க நடந்தை யார்கிட்டையும் சொல்லக் கூடாது.”

“யுகி கிட்ட சொல்லாம என்னால இருக்க முடியாதும்மா.”

“செருப்பு பிஞ்சிடும் நாயே.. அங்க சொல்லி இங்க சொல்லின்னு ஊர் நாரணுமா?”

“என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி பேசிட்டு இருக்க. இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா”

“எல்லோரும் வாயை மூட்டிட்டு இருக்கும் போது உனக்கு எதுக்குடி அதிக பிரசங்கித்தனம்?”

“சரி யார்கிட்டயும் சொல்லல போட்டு பிச்சி எடுக்காத.” என்றாள் நிலா.

“ட்ரைனுக்கு இன்னும் நாலு மணி நேரம் இருக்கு அதுக்குள்ள இருக்கறதை பேக் பண்ணிட்டு கிளம்புவோம், அவ்வளவு தான் சொல்லுவேன். மீதி பொருளை கனகா அக்காவை பார்சல்ல அனுப்பிவிட சொன்னா அனுப்பிடுவாங்க.”

“சரிம்மா போலாம்... அதுக்குள்ள வீட்டு ஓனருக்கு சொல்லணும். ஆபிஸ்ல இருந்து உடனே நிற்க முடியாது இப்போதைக்கு லீவ்வாவே இருக்கட்டும், ஊருக்கு போனதும் ரிசைன் லெட்டர் அனுப்பிடறேன். போதுமா?” என்று வளவன் வேறு சலித்துக் கொள்ள. 

“வேற வேலை?” என ராஜி இழுத்தார்.

நிலா செய்த வேலையால் இப்போது எவ்வளவு கஷ்டம். வீட்டை விட்டு திரும்ப ஊருக்கு போக வேண்டும், வளவன் வேலையை விட்டு நிற்க வேண்டும், இன்னும் என்ன பிரச்சனை வருமோ என பயந்துக் கொண்டே வாழ வேண்டும் நிலாவை ஒருவன் கையில் ஒப்படைக்கும் வரை பெற்ற வயிறு கலங்கி நின்றது.

“அதெல்லாம் வேணாம்மா, நான் சின்னதா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம் இருக்கேன். மாமாகிட்ட இதைப் பத்தி பேசியிருக்கேன் இது முன்னாடியே எடுத்த முடிவு தான் நேரம் வரட்டும் பார்க்கலாம்ன்னு இருந்தேன். இப்போதான் வந்துருக்குப் போலவே"

“அவரோட சேர்ந்து பிஸ்னஸ் பண்றதுல நந்தனுக்கு வருத்தம் இருக்கப் போகுது தம்பி.”

“அவனுக்கு வருத்தம் இருந்தா நம்ப என்ன பண்ண முடியும்? என்னோட காசைப் போட்டு பிஸ்னஸ் பண்றேன் அவர் ஹெல்ப் மட்டும் தான் பண்றார், அதுக்குலா அவன் வருத்தப்பட்டா நம்ப என்ன பண்ண முடியும்?” 

“சரி வளவளன்னு பேசிட்டு இருக்காம போய் ஆக வேண்டிய வேலையைப் பாரு.” என்றவர் வீட்டில் இருக்கும் பைகள் அனைத்திலும் அவசர அவசமாக பொருள்களை அடைத்து வைத்துக் கொண்டிருந்தார்.

நிலா அதை வேடிக்கைப் பார்க்க அவள் மீதும் ஒரு பையைத் தூக்கிப் போட்ட ராஜி.

“போடி போய் டிரஸ் எல்லாத்தையும் எடுத்து வை, இவளால நிம்மதியே போச்சி.”

“போறேன் மறுபடியும் உன் புராணத்தை ஆரம்பிச்சுடாத என்னால முடியாது.“ என பையைத் தூக்கிக் கொண்டு அவளது அறைக்குப் போனாள்.

வீடு முழுவதும், மாந்தோரணம் பூந்தோரணம் தொங்க, நெய் வாசனையும் ஏலக்காய், வாசனையும் போட்டிப் போட்டுக் கொண்டு வீசியது என வீடேக் கல்யாணக் கலைக் கட்டியதுப் போல் இருந்தது.

“அம்மா கேசரியில நிறைய நெய் விட்டியா?”

“ஏன்? உன் பூனை நிறைய நெய் விட்டா தான் சாப்பிடுமா?”

“ஆமா அம்மா உனக்கு தெரியாதா? அவளுக்கு கேசரில நெய் இருக்கறதை விட, நெயில கேசரி இருந்தா புடிக்கும்ன்னு.”

“டேய் போதுடா, உன்னைய ஒன்னும் மாப்பிள்ளை பார்க்க வரல, ஷாலுவை தான் பொண்ணுப் பார்க்க வராங்க நியாபகம் வெச்சிக்கோ.”

“இருக்கட்டும் யாரைப் பார்க்க வந்தா என்ன? யார் பார்க்க வராங்கங்கறது தான் முக்கியம்.”

“இவனோட பூனை அலப்பறையை தாங்க முடியலையே, யுகி உண்மையை சொல்லிடு அடுத்து நீயும் ஷாலினி மாதிரி வந்து நிற்கப் போற.”

“புரியலம்மா”

“ஹா நீயும் காதல்ன்னு சொல்லிட்டு நிற்கப் போற பாரு.”

“சொல்றதுக்கு இல்லம்மா நீ நினைச்சதும் நடக்க வாய்ப்பு இருக்கு.”

“பொண்ணு யாருன்னு தான் உலகத்துக்கே தெரியுமே.” என மணி முனவ,

“என்னம்மா ஏதாவது சொன்னியா?”

“இல்லையே, இல்லவே இல்ல நீ போய் ஷாலுவைப் பாரு போப்பா.”

“நான் பார்க்கறது இருக்கட்டும் நீ நெய்யை அதிகம் ஊத்து சரியா?” என கத்திக் கொண்டே ஹாலுக்கு வந்தான்.


Leave a comment


Comments


Related Post