இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 02-05-2024

Total Views: 30388

அத்தியாயம்-27

இதோ அதோவென ஒரு மாதம் கடந்திருந்தது. அஞ்சனாவின் மனநல ஆலோசனை வகுப்புகளும் முடிவை அடைந்திருந்தன.

 “நான் உனக்கு சொன்னதெல்லாம் நீ தைரியமா இருக்கணும், சுயமா சிந்திக்கணும்னு தான்டா. ஹோப் யூ கேன் அன்டர்ஸ்டேன்ட் எவ்ரிதிங். எப்பவும் உன்னை பற்றி நீயே இன்ஃபீரியரா மட்டும் யோசிக்காம இரு. அதுவே உன்னை பில்ட் அப் பண்ணி கொண்டு வரும்” என்று அந்த மருத்துவர் கூற, 

அழகான புன்னகையுடன், “தேங்க்யூ சோ மச் டாக்டர்” என்றாள்.

முற்றும் முழுதும் ஒரு புது அஞ்சனாவாக அவள் வெளியே வந்தால் என்று கூறுமளவெல்லாம் அவள் மாறவில்லை. இன்னும் கூற வேண்டுமானால் அவள் தன்னை முற்றிலுமாக மாற்ற விரும்பவில்லை. நான் என் இயல்பிலேயே இருந்து கொண்டு பக்குவமடைய இயலும் என்ற வரையில் தனக்குள் ஒரு நம்பிக்கையை மட்டும் உருவாக்கிக் கொண்டிருந்தாள்.

இந்த ஒருமாத மருத்துவ ஆலோசனை அவளுக்கு கொடுத்திப்பது சிறு வயது சம்பவம் பற்றிய புரிந்துணர்வும், கடந்து வரும் மனப்பக்குவமும், சுயமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய தைரியமும் மட்டுமே. விளக்கம் கொடுக்க வேண்டுமானால் அவள் வாழ்ந்து பத்தொன்பது வருட வாழ்வுக்கே விளக்கம் கொடுக்க வேண்டும்.

அதனால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அவள் கேட்பதற்கு மட்டும் பதில் விளக்கம் கொடுத்துவிட்டு, அவளை சுயமாக யோசனை செய்யவும், அதன் நல்லது கெட்டதை ஆராயவும் திடப்படுத்தினர்.

மென்மையான புன்னகையுடன் வெளியே வந்தவளைக் கண்டு தானும் புன்னகைத்த யஷ்வந்த், “ஷல் வீ கோ?” என்று கேட்க, 

“மாமா.. ஃபுட் மறுபடியும் மாத்திக்கலாமா?” என்று கேட்டாள்.

அவள் குரலில் இருந்த ஆர்வமும் ஆசையும், இந்த ஒரு மாதம் உணவிற்காக அவள் தவித்த தவிப்பை எடுத்துக் கூறியதில் அவன் உள்ளம் சுணங்கி ‘அச்சோ பாவமே!’ என்றுணர்ந்தது.

“இல்லை சனா உடனே மாத்துறது நல்லதுக்கில்லை. அதான் இன்னும் ஒரு வன் மந்த் அதே ஃபாலோ பண்ணலாம்னு சொல்லிருக்காங்க” என்று அவன் கூற, 

கோவமும் வருத்தமும் சரிவிகிதத்தில் பெற்றதன் கடுப்போடு, “போங்க மாமா” என்றுவிட்டு முன்னே சென்றாள்.

அதில் சிரித்துக் கொண்டவன் சென்று மருத்துவரிடம் அவளுக்காக பேச, “அட்லீஸ்ட் இன்னும் ஒரு பத்து நாளாவது கடைப்பிடிக்கணும் சார். உடனே மாத்துறது நல்லதுக்கில்லை” என்று கூறிவிட்டார்.

இருவருமாக வீடு திரும்ப, அவளை சமாதானம் செய்ய கடற்கரைக்கு அழைத்து செல்வோமா என்று நினைத்தான். ஆனால் அங்கு சுற்றிலும் உள்ள கடைகளே போதும் அவளை மீண்டும் உசுப்பேற்ற. அதனாலேயே அமைதியாய் அவன் வீட்டை அடைய, கார் கதவை படாரென சாற்றிவிட்டு உள்ளே சென்றாள்.

“ஏ கோழிக்குஞ்சு.. என் காருடி.. பீரோ கதவ சாத்துற போல சாத்துற?” என்று அவன் சிரிப்பை உள்ளே வைத்துக் கொண்டு இறுக்கமான முகத்துடன் வினவ, எப்போதும் அதற்கு பயந்து போபவள், இருந்த கோபத்திற்கு அவனை முறைத்துவிட்டு விருட்டென்று உள்ளே சென்றாள்.

அதில் தலையை இடவலமாய் ஆட்டியவன் அவள் விட்டுச் சென்ற கல்லூரி பையை லாவகமாய் ஒரே விரலில் தொங்கவிட்டுக் கொண்டு உள்ளே வர, 

மகனை சிரிப்போடு பார்த்த யமுனா, “என்னடா ரொம்ப கோவமா போறா போல? கௌன்சிலிங் எக்ஸ்டென்ட் பண்ணிட்டாங்களா?” என்று கேட்டார்.

“அதெல்லாம் முடிஞ்சது ம்மா. டயட் தான் கொஞ்ச நாளுக்கு அதையே கண்டினியூ பண்ண சொல்லிட்டாங்க” என்று கூறியவன் இதழில் அழகாய் அந்த புன்னகை இன்னமும் வீற்றிருக்க,

அதை மனமார கண்ட தாயவர், “சாப்பாடு விஷயத்துல மது மாதிரிடா. நல்லா ரசிச்சு சாப்பிடுறவகிட்ட போய் உப்பில்லாத சாப்பாட்டை குடுத்தா பாவம் தானே அவளும்” என்றார்.

“நான் போய் டாக்டர் கிட்ட கேட்டுட்டேன் ம்மா. அவங்க அடுத்த பத்து நாளாவது கண்டினியூ பண்ணியே ஆகணும்னு சொல்றாங்க. நான் என்ன செய்ய?” என்று அவன் வினவ,

 சிரித்தபடி, “போய் அவளை சமாதானம் செய்” என்றார்.

அன்னையை அவன் ஒற்றை புருவம் உயர்த்தி நோக்க, “குடும்பஸ்தன் ஆகிட்ட யஷ்வா. இதெல்லாம் பழகி தான் ஆகணும்” என்று கூறியவர் ஒரு கோப்பையில் பழச்சாறையும் கொடுத்தார்.

அதில் லேசாய் சிரித்துக் கொண்டவன் செல்ல, உள்ளே அவர்கள் அறை நீள்விருக்கையில் கோபமே உருவாய் அமர்ந்திருந்தவள் அவனைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஹப்பா.. கழுத்து சுழுக்கிடப் போகுதுடி கோழிக்குஞ்சு” என்றவன் பழச்சாற்றை நீட்ட, அவள் திரும்பினாலில்லை.

“அப்ப வேணாமா? எனக்கு தாகமா இருக்கு. நான் குடிச்சுக்கவா?” என்று அவன் கூறியது தான் தாமதம் அவன் முகம் பாராமல் அதை வாங்கி தன் வாயில் கவிழ்த்திருந்தாள்.

'எனக்கு தாகமா இருக்கு’ என்று அவன் சொன்ன வசனம் மனதில் முண்டிக் கொண்டே இருந்தபோதும் அவனுடன் அதை பகிர்ந்துக் கொள்ள அவளுக்கு விருப்பம் துளியுமில்லை. 

குடித்து முடித்து அவள் கோப்பையை வைத்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொள்ள,

 “அய்யோ.. ரொம்ம கோவம் தான்டி உனக்கு” என்று கூற,

 “ஆமா..” என்றாள்.

“இன்னும் பத்து நாள் தானே சனா?” என்று கேட்டபடி அவளவன் பாவையை நெருங்கி அமர, 

“ப்ச்.. கிட்ட வராதீங்க போங்க மாமா” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஓ.. அப்ப நைட் மேடம் என்கூட தூங்க வரலை? அப்ப சரி நான் ஆஃபிஸ் ரூம்ல தூங்கிக்குறேன்” என்று கூறிவிட்டு அவன் எழ, அப்போதும் முகத்தை வீராப்பாய் வைத்துக் கொண்டாள்.

இரவு உணவை கடினப்பட்டு விருப்பமே இன்றி உண்டு முடித்து அவள் மேலே சென்றிட, அறைக்குள் நுழைந்தவன் அவளை திரும்பியும் பாராமல் வேலையறை கதவு வரை சென்றவன், அவளைத் திரும்பிப் பார்த்து பளிச்சென்ற புன்னகையுடன், 

“குட் நைட் ஸ்வீட்டி” எனக் கூறிவிட்டு சென்றான்.

'என்ன உண்மைலயே போயிட்டாரு?’ என்ற எண்ணத்துடன் ‘பே’ என்று விழித்தவள், அறையை சுற்றி முற்றி பார்த்தாள்.

'ஏன் நீங்க இல்லாம நான் தூங்கினதில்லையா என்ன?’ என்று எண்ணிக் கொண்டு கட்டிலில் விழுந்தவளது அலைபேசி ஒலித்தது.

அதில் பதறிக் கொண்டு எழுந்தவள் யஷ்வந்த் அழைத்திருப்பதைக் கண்டு அழைப்பை ஏற்க,

 “சனா.. லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு. கரெண்ட் வேஸ்ட் பண்ணாத. பயமா இருந்தா சொல்லு” என்றான்.

முதல் வாக்கியத்தில் நிஜத்தில் பயம் எழுந்த போதும் அவன் அவ்வாறு கேட்கவும் மீண்டும் கோபம் கொண்டவள்,

“எனக்கென்ன பயம்? அதெல்லாம் ஆஃப் பண்ண தான் வந்தேன் மாமா” என்றாள்.

“ஓ.. ஓகே ஓகே.. அப்றம் சனா.. நைட் லேம்ப் உடைஞ்சு போச்சு. நாளைக்கு மார்னிங் தான் மாத்தணும். உனக்கு பயமா இருந்தா.. சொல்லு” என்று இழுத்து நெழித்து அவன் கூற, 

“அதெல்லாம் எனக்கு எந்த பயமும் இல்லை. வைங்க நான் தூங்கணும்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

சென்று விளக்கை அணைக்கவும் இருளின் நிறத்தை சுவற்றில் பூசிக் கொண்டிருந்த அவ்வறை மேலும் இருள் சூழ்ந்து மிரட்டியது. சட்டென மீண்டும் விளக்கைப் போட்டவள் மிரட்சியாய் அறையை நோக்க, உள்ளே படுத்துக் கொண்டு இவளின் சேட்டைகளை உணர்ந்தவன் சிரித்துக் கொண்டான்.

“என்ன இவ்வளவு இருட்டா இருக்கு.. நான் எப்படி தூங்குவேன்?” என்றவள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு விளக்கை அணைத்து கண்களை இறுக மூடிக் கொண்டு கட்டிலில் பொத்தென விழுந்தாள்.

கண்ணை திறந்தால் தானே எதையும் கண்டு அஞ்ச வேண்டும் என்று எண்ணியவள் கண்களை இறுக மூடிக் கொள்ள, உள்ளே அவன் கணியை எடுத்து வைக்கும் சத்தம் எல்லாம் கேட்டு அவளுக்கு கிடுகிடுத்தது.

அப்போது தான் என்றென்றோ பார்த்த பேய் உருவ படங்கள் எல்லாம் நினைவில் வந்து அவளை வேண்டுமென்றே படுத்தியது. 'அய்யோ கடவுளே' என்று தலையணையை இறுக பற்றிக் கொள்ள அவள் கையை அசைத்த நேரம் அவளது கண்ணாடி வளையல்களே கலகலவென்று பயமுறுத்தியது.

'மான ரோசமெல்லாம் எதுக்கு அஞ்சு உனக்கு?’ என்று ஒருபக்கம் மனசாட்சி உந்தியது. அவளும் அப்படி இப்படியென ஒருமணி நேரத்தை நெட்டி முறித்து சோர்ந்து போனாள். நாம் எதை நினைக்க வேண்டாம் என்கின்றோமோ அப்போது தான் அவை நினைவில் உதித்து இம்சிக்கும்.

பாவை இதற்குமேல் பொருக்க இயலாது எழுந்து அமர்ந்தாள். அறையின் இருள் கொடுத்த மிரட்சியோடு மெல்ல எழுந்து சுவரை தடவியபடி அவனது அலுவல் அறைக் கதவின் அருகே வந்தாள்.

'மாமா கண்டிப்பா இப்ப தூங்கிருப்பாங்க’ என்றபடி அவள் மெல்ல கதவினைத் திறக்க, உள்ளே மெல்லிய மஞ்சள் நிற ஒளி பரவியிருந்தது.

'அட ஃப்ராடு மாமா.. லைட் ரிப்பேர்னு பொய்யா சொல்றீங்க’ என்று எண்ணியபடி அவள் உள்ளே வர, அவளது மெல்லிய கொலுசொலியின் ஓசையில் விழித்துக் கொண்டு படுத்திருந்தவன் உள்ளுக்கு சிரித்துக் கொண்டு திரும்பிப் படுக்க, அவன் அசைவில் அசைவற்று நின்றாள்.

ஒரு முழு நிமிடம் அமைதியாக நின்றவள், அவனிடம் அசைவில்லையென்பதை உணர்ந்து அவன் அருகே சென்று படுத்துக் கொண்டாள். 

அவள் அரவத்தில் அவன் முழிக்கின்றானா என்று எட்டி எட்டி பார்த்தவள் அவன் உறங்கிவிட்டான் என உறுதி செய்துகொண்டு பெருமூச்சுடன் படுக்க, சட்டென திரும்பி அவளில் படர்ந்து அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தான் யஷ்வந்த்.

அதில் ஒரு நொடி அதிர்ந்து போனவள், சொல்லொண்ணா உணர்வின் குவியலில் தடுமாறி இருக்க, அவனது மூச்சுக் காற்று அவளுள் விசித்திரமான உணர்வை வியர்க்க விறுவிறுக்க அனுபவிக்க வைத்தது.

“மா..மா..” என்று அவளுக்கே கேட்காத வகையில் காற்றோடு கரைந்த அவளது அழைப்பு அவனை இன்னும் அழகாய் பித்தேற்ற, 

“சனா..” என்றபடி அவளில் தன் இதழ் அச்சரம் பதித்தான்.

என்ன மாதிரியான உணர்விதென்று புரியாது, அவனிடம் தன்னை எதற்கேன்றே தெரியாது ஒப்புகொடுக்க துடிக்கும் உணர்வேதென்று தெரியாது, தன்னுள்ளம் அவனிடம் எதை நாடி தவிக்கின்றதென்று அறியாது, அவஸ்தையும் பூரிப்புமாய் அவள் இழைந்த தருணம் அவன் மனதில் கவிதையாய் பதிந்தது.

“மா..மா” என்று தற்போது காற்றுக்கு வலிக்காத வகையில் அவள் அழைக்க, 

“சனா.. கோழிக்குஞ்சு.. பேபிகேர்ள்..” என்று வகை வகையாய் அவளுக்கு பெயரிட்டு அழைத்தான்.

அவள் முகம் அந்த இருளைத் தாண்டி சிவந்ததோ என்று வியக்கும் வண்ணம் மஞ்சள் ஒளியில் பளபளக்க, அந்த அறை குளிரூட்டியின் தாக்கத்தை மீறி அவள் உடலெங்கும் வியர்த்தது.

எப்போதும் அவள் அணியும் இரவு சட்டைக்கும் பைஜாமா கால்சட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் இழையோடிய அவள் இடையை வளைத்துப் பற்றிக் கொண்டவன், 

“நான் யாரு சனா உனக்கு?” என்று கேட்க, அவளிடம் அதே திணறலானா அழைப்பு தான்.

“சனா டெல் மீ..” என்று அவள் காதோரம் அவன் கிசுகிசுக்க, அத்தனை நேரம் கட்டில் நுனியை பற்றியிருந்த அவள் கரம் மேலெலும்பி அவன் புஜங்களை இறுக பற்றிக் கொண்டன.

“பேபி டெல் மீ..” என்று மீண்டும் அவன் அழுத்தமாய் அழைக்க, தன்னுள் எழுந்த உந்துதலில் எம்பி அவன் இதழை முற்றுகையிட்டிருந்தாள் பெண்!

திருமண வாழ்வு காதலால் கட்டமைக்கப்பட்டதா காமத்தால் கட்டமைக்கப்பட்டதா என்ற வரையறைக்க இயலாத கேள்விக்கான ஒற்றை பதிலாய் அம்முத்தம் விளங்கியதோ? காதலன்றி கமுறுதலும் இல்லை! கமமன்றி காதலுற்றலுமில்லை!

அவள் இதழ் தீண்டலை ஏற்று அரவணைத்து நிமிர்ந்தவன் படபடக்கும் அவள் இமைகள் கண்டு நெற்றி முட்டி, “குட் நைட்..” என்ற கிசுகிசுப்போடு அவளுக்கு மறுபுறம் இறங்கி படுத்தான்.

தற்போதுவரை நடந்தவை என்ன? அவை உணர்த்திய பொருளென்ன? தான் உணர்ந்த உணர்வென்ன? என்ற குழப்பமான நிலையில் திக்கற்று திணறிய சிறியவளின் மனம் வேட்கையில் தவித்தது. அதை தவிக்கச் செய்திருந்தவனோ அமைதியாய் அவளருகே குறும்புப் புன்னகையுடன் கண்மூடினான்.

விழியோரம் நீர் மணிகள் பொங்கி வழிய, நெஞ்சமெங்கும் படபடப்பும், பூரிப்பும், நாணமும் உவகையும் பொங்கிப் பெருகியது. ‘கண்ணீர் சோகத்தில் மட்டுமே வரும் உணர்வில்லை சனா..’ என என்றோ யஷ்வந்த் கூறிய வார்த்தைகள் அவள் மனதில் தோன்ற, அவளவனை இறுக அணைத்துக் கொண்டு, 

“அ..அழுகை சோ..சோகத்துல மட்டும் வ்..வரும் உணர்வில்லை மாமா” என்று திணறலோடு கூறினாள்.

அவள் உதிர்த்த வார்த்தைகளில் அவள் புறம் திரும்பியவன், சிவந்து நாணி, மலர்ந்திருந்தவள் முகத்தில் மினுமினுத்த கண்ணீர் கண்டு அதை தன் இதழ் கொண்டு துடைத்து, 

“படுடா..” என்க, 

“இனி எங்க தூங்க?” என்று பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.

அதில் வாய்விட்டு சிரித்தவன் அவளை அரவணைத்துக் கொள்ள, அவனுள் பாந்தமாய் பொருந்திக் கொண்டு படுத்துறங்கினாள்.

நாட்கள் சில கடந்து ஒரு வாரம் ஓடியிருந்தது. தனது அறையிலிருந்து பரபரப்பாய் கீழே வந்து நின்ற யாழினி யஷ்வந்தின் குறுகுறு பார்வையில் ‘அய்யோ.. எதும் சரியில்லையா என்ன?’ என்று தன்னை பார்த்துக் கொண்டாள்.

“ஹ்ம்..” என்றபடி எழுந்தவன், 

“யாழி.. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. கோர்ட் சூட்லாம் வேணாம். ஜஸ்ட் ஃபார்மல் லைட் கலர் ஃபுல் ஹாண்ட் ஷர்ட் அன்ட் டார்க் கலர் பேண்ட் ஆர் எல்ஸ் ஸ்கர்ட்ஸ் போட்டுக்கோ. ஹேர் ஃப்ரீ ஹார் வேணாம். ஒன்னு போனி போடு, இல்லை பன் போடு. க்ளோஸ் டோட் லேதர் ஷுஸ் இல்லைனா ஹீல்ஸ் போட்டுக்கோ. கைல வாட்ச் மட்டும் போதும். காதுல காதை ஒட்டின போல ஒரு ஸ்டட் மட்டும் போட்டுக்கோ. கழுத்துக்கு எதும் வேண்டாம். கமான் க்விக்” என்று அவன் கூற, விழிகள் விரிய அதிர்ந்து நின்றாள்.

'ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண இவ்வளவு இருக்கா?’ என்ற எண்ணம் அவளுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த மது, அஞ்சனா மற்றும் அர்ஜுனுக்கும் தோன்றியது.

“யாழினி க்விக்” என்று அவன் கூற, சிட்டாய் பறந்தவள் அவன் கூறியதைப்போல் தயாராகி வந்தாள்.

யாவரும் உண்டு முடிக்க, யஷ்வந்த் மற்றும் யாழினி நேர்காணலுக்கும் மது, அஞ்சனா மற்றும் அர்ஜுன் கல்லூரிக்கும் சென்றனர், அன்றைய மாலை நடக்கவுள்ள விபரீதம் அறியாமல்!


Leave a comment


Comments


Related Post