இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 02-05-2024

Total Views: 20167

பாவை - 21 

வாரயிறுதி நாள் அனைவரும் வீட்டில் இருக்க இன்று கூறினால் தான் அனைவரின் அனுமதியும் வாங்க முடியும் என்று நினைத்த நந்தன் பேச்சினை ஆரம்பித்தான்.

பெற்றவர்கள் முன்னே வந்தவனோ, “அப்பா ! அம்மா நான் முக்கியமான விசியம் சொல்லணும் ?” என்க,

“என்னடா சொல்லு ?”

“நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன் “ என்ற நொடி சட்டென எழுந்து விட்டார் அவனின் அன்னை.

“டேய் ! என்ன விளையாடுறையா ? என் அண்ணன் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணனும் நினைச்சிக்கிட்டு இருக்கேன். நீ என்னடானா இப்படி வந்து சொல்லுறே ?” என்று அன்னை மனோகரிக் கேட்க,

“நந்தன் உனக்கு என் பார்டனர் பொண்ணை கல்யாணம் பண்ணனும் நினைச்சிக்கிட்டு இருக்கேன் நான். நீ என்னடா எங்க ரெண்டு பேரையும் ஏமார்த்திட்டு ஒரு பொண்ணை காதலிக்கேன்னு வந்து நிக்கிறே ?”

“காதல் எப்போ எப்படி வரும்ன்னு சொல்ல முடியாதுலப்பா “

“வாய் சவாடா விடாதே ! முதல்ல இந்த காதல் கருமத்தை தூக்கி போடு” 

“என்னால முடியாதும்மா. நான் அவளை உயிரா நேசிக்கிறேன். அவளுக்கு நான் பிராமிஸ் பண்ணிருக்கேன். நிச்சியம் கல்யாணம் பண்ணுவேன். அவளோட மனசை காயப்படுத்த மாட்டேன் “

“அப்போ எங்க பேச்சை மீற போறையா ?”

“எனக்கு உங்க சம்மதம் வேணும். அவளுக்குன்னு என்னை விட்டா யாருமேயில்லை. அவ ஒரு அனாதை. சின்ன வயசுல இருந்து குடும்பத்துக்காக ஏங்குனவ. கூட்டு குடும்பத்துல வாழுறது தான் அவளோட ஆசையே !” என்று தன்னை பெற்றவர்களை சமானதப்படுத்த ஏதேதோ கூறினான்.

“இப்போ என்னை தான் முடிவா சொல்லுறே “

“நான் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணுனா அவளை மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன். “

“அப்போ நீ இப்படியே இரு. உன்னால என் அண்ணன் பாசம் முறியை கூடாது “ என்று சீற்றமோடு கூறிய அவனின் அன்னை அங்கிருந்துச் சென்று விட, மகனை விட அண்ணன் முக்கியம் என்பதை தெளிவாக கூறி விட்டார்.

“சரி அந்த பொண்ணை நான் பார்க்கணும். அதுக்கு அப்பறம் தான் ஏதா இருந்தாலும் முடிவு பண்ணுவேன் “ என அவனுக்கு துணையாக சற்று மனமிறங்கி தந்தை வாசுதேவன் வரவே, 

“தேங்க்ஸ்ப்பா. எப்போ மீட் பண்ணனும் சொல்லுங்க. நான் அரேஞ்ச் பண்ணுறேன் “

“பிரைடே ஈவினிங் முத்தாலம்மன் கோவில் இருக்குல அங்கே கூட்டிட்டு வா “ என்றதும், சரியெனக் கூறி தந்தையிடம் மறுபடியும் நன்றியிரைத்து உற்ச்சாகமோடுச் சென்றான்.

மகனின் சந்தோஷத்தைக் கண்ட பெற்றவருக்கு இதற்கு மேல் என்ன கூற முடியும் ? படிப்பு வேலை அனைத்தும் இருக்க அவனால் அவனை நம்பி வந்த பெண்ணை காக்க முடியும். தங்களிடம் சொல்லாமல் கூட இவன் நினைத்தால் திருமணம் செய்துக் கொள்ள முடிந்திருக்கும் ? பெற்றவர்கள் என்று தங்களை மதித்து கூறியதற்கு மதிப்புக் கொடுக்க நினைத்தார்.

மறுநாளே அஞ்சனாவின் முன்னே வந்தவனோ தந்தை கூறியதை கூறவே, அவளும் சரியென்றாள். பின் இருவரும் அந்த நாட்களுக்கு ஒன்றாக காத்திருக்க அந்த நாளும் வந்தது. இந்த இடைப்பட்ட நாட்களின் தங்களின் பொழுதுகளை ஒன்றாக கழித்த இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி தெரிந்துக் கொண்டனர்.

அஞ்சனாவிற்கு நடக்கும் நிகழ்வுகள் புதிதாக இருந்தாலும் உள்ளத்திற்கு அவனோடு தன்னை இணைக்கும் நாட்களை நினைக்க இதமாக தான் இருந்தது

கோவிலுக்கு இருவரும் ஒன்றாக நுழைய,பிள்ளைகளின் வருகைக்காக தான் மனைவியோடுக் காத்திருந்தார் வாசுதேவன்.

மனோகரிக்கு விருப்பமில்லை என்றாலும் கணவனின் பேச்சினை மீற முடியாது. அதுவுமில்லாமல் தன் மகனின் நிம்மதியையும், ஆனந்தத்தையும் நினைக்கும் போது கணவனின் அறிவுரையால் அண்ணன் எட்டாக்கனியானான்.

“அதோ என் அப்பா, அம்மா “ என்று அங்கே அமர்ந்திருந்த ஜோடிகளைக் கண்டு காட்டவே,  அஞ்சனாவிற்கு இதயமோ படபடவென அடித்துக் கொண்டது.

அவர்களின்  முன்னே வந்து நிற்க, இவர்களும் எழுந்து நிற்க ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள் அஞ்சனா.

அஞ்சனாவின் அழுகு, பொறுமை, பேசும் விதம், பண்பு இதனை ஆராய தான் அழைத்திருந்தனர். அவளிடம் பேச்சுக் கொடுக்க அவளும் நன்றாகவேப் பேசினாள்.

எதையும் மறைக்காது நேராக நின்றுப் பேசுபவள் என்பதை அவளின் குணத்திலே தெரிந்துக் கொண்டார் வாசுதேவன். குடும்பத்தையும் நல்லபடியாக கவனித்துக் கொள்வாள் என்பதையும் உணர்ந்துக் கொண்டார்.

“என்னைக்கு நாங்க கூட்டு குடும்பமா தான் இருப்போம். நீ எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா அப்படி தான் இருக்கணும். குடும்பத்தை விட்டு தனியா போகணும் நினைக்க கூடாது. நாங்க ரொம்ப கௌரவமா வாழுற குடும்பம். தன்மையா பொறுமையா நடந்துக்கணும் “ என்று மனோகரி பட்டியல் வாசிக்க,

“தப்பு நடந்தா நேரா சொல்லிருவேன் எப்பவும். அதை தவிர எனக்கு வேற எந்த பிரச்சனையுமில்லை “ என அவளுமே தன் எண்ணத்தை கூறிவிட்டாள்.

இந்த சில மணி நேர பேச்சிலே மாமியார், மருமகள் இருவரும் வருங்காலத்தில் மோதிக் கொள்வார்கள் என்று தெரிந்து விட்டது வாசுதேவனுக்கு. இருந்தும் அஞ்சனாவை மருமகளாக ஏற்பதில் எந்த தவறுமில்லை என்பதால் ஏற்றுக் கொண்டார்.

“சரி எனக்கு மனப்பூர்வ சம்மதம். கல்யாணம் தேதியை குறிச்சிடலாமா ? நீ யார் கிட்டயும் கேட்கணும்மா ?” என்க, ஒரு நொடியில் தன் குடும்பத்தாரின் நினைவு தான்.

அவர்களை மீறி வந்ததே தவறு. இப்போது திருமணமும் செய்துக் கொள்ளப் போகிறேன். இது மட்டும் அவர்களுக்கு தெரிந்தால் எவ்வளோ வேதனையாக இருக்கும் ?

“என்னம்மா என்ன யோசிக்கிற ?”

தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் திருமணம் செய்து இவனின் வீட்டுக்குச் சென்றாக வேண்டும் ? அதை விட தன்னை பெற்றவர்களே பார்த்தாலும் இப்படியொரு துணையை தேட முடியாது. அந்த அளவுக்கு அவனின் நேசத்தை உணர்ந்தாள்.

 “எனக்கு சம்மதம் தான் “ தலை குனிந்து கூற, 

"இந்தா இந்த பூவை மருமக தலையில வச்சி விடு “ என்று வாசுதேவன் மனைவியிடம் கூற, கையிலிருந்த பூவினை மருமகளுக்கு முழு மனமில்லாமல் வைத்து விட்டார்.

பின் நாட்கள் கடக்க திருமண தேதி குறித்து அதற்க்கான ஏற்பாடுகளும் துவங்க ஆரம்பித்தது. தனக்கு திருமணம் நந்தனை தான்  தன் வருங்கால கணவன் என்று வசந்த்தை சந்தித்து கூறினாள் அஞ்சனா.

“நீ ஏன் இப்படி பண்ணுறே அஞ்சனா ? உன் வாழ்க்கையை அடமானம் வைக்குறையா  என்ன ? இப்போ எதுக்கு இந்த கல்யாணம் சொல்லு ? எல்லாம் அந்த போலீஸ்க்காரனை பழிவாங்க தானே ?”

“ஆமா. ஆனாலும் எனக்கு நந்தனை ரொம்ப பிடிச்சிருக்கு. அவன் கூட எனக்கு ஒரு நல்ல லைப் அமையும்ன்னு தோணுது “ என்று தன் மனதில் இருந்ததை அஞ்சனா கூற,

“எனக்கு புரியுது. தப்பு பண்ணுவனுக்கு தண்டனை கிடைச்சாச்சு. இனி அவனால வெளியே வர முடியாது. இந்த போலீஸ்க்காரன் மேல எந்த தப்புமில்லை. உறுதுணையா இருந்திருக்கான். ஆனா முழு காரணம் அவன் தானே அப்பறம் என்ன ?”

“இருந்தாலும் நான் சும்மா விடப் போறதில்லை. எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணுறீங்களா  பிளீஸ் ?”

“சொல்லும்மா ?”

“என்னோட பேமிலி இங்க தான் இருக்கு. ஆனா எங்கன்னு தெரியல. கொஞ்சம் கண்டு பிடிக்க முடியுமா ?”

“முயற்சி பண்ணுறேன். வருங்காலத்துல நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதே அவனோட அண்ணனை பழிவாங்க அப்படின்னு அவனுக்கு தெரிஞ்சா உன் மேல வச்ச காதல் அப்படியே இருக்குமா அஞ்சனா. யோசிச்சி பாரும்மா “ என்க, நம்பிக்கையோடு தான் இருந்தாள்.

அதன் பின் வந்த அனைத்திலும் ஒவ்வொரு நொடியும் அவனின் அன்பினை சோதித்துப் பார்க்க, துளி கூட அவன் தன்னை விட்டுச் செல்ல மாட்டேன் என்ற நம்பிக்கைக் கொண்டாள்.

நாட்கள் கடந்து திருமண நாள் வந்து விட, இனிதே அவர்களின் திருமணம் நல்லபடியாக பெரியவர்கள் முன்னிலையில் முடிந்தது. இருவரின் வாழ்க்கையில் எந்தவொரு விரிசலும் இல்லாதுச் செல்ல, வசந்த் ஒரு நாள் அஞ்சனாவை தொடர்பு கொண்டான்.

வழக்கம் போல் அவர்கள் சந்திக்கும் பார்க்கில் இருவரும் சந்தித்துக் கொள்ள, “உன்னோட பேமிலி எங்க இருக்காங்கன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன். இந்த அட்ரெஸ் தான் “ எனக் கூறி அவர்களின் முகவரியோடு புகைப்படத்தையும் சேர்த்து கொடுத்தான்.

அன்னையை விட தந்தையோ முற்றிலும் மெலிந்து நோய்வாய்பட்டத்தை போன்று காட்சிக் கொடுக்கவே, தன் நெஞ்சோடு அணைத்து அழுது கரைந்தாள்.

இரவில் மனைவியின் வாடிய முகம் கண்டு ஒவ்வொரு நாளும் என்ன காரணம் என்று தெரியாதே அவளே தேற்றி தன் அன்பெனும் வலையில் கட்டி வைத்தான் நந்தன்.

( பிளாஸ்பேக் முடிந்தது )

அறையில் அமர்ந்திருந்த அஞ்சனாவிற்கு தன் அண்ணனை பார்த்ததை அவளாலே நம்ப முடியவில்லை. தானேச் சென்று அவர்களுக்கு தெரியாது பார்த்து வரவேண்டுமென நினைத்திருக்க, தன்னை தன் அண்ணன் கண்டு விட்டது அதிர்ச்சி தான்.

“என்னாச்சு அஞ்சனா ? ஆர் யூ ஓகே ? எதுக்கு லீவ் போட்டு வந்துட்டே ? “ பதட்டத்தோடு வந்த நந்தன் அவளின் அருகே அமர்ந்து அவளைத் தொட்டு ஆராய்ந்துப் பார்த்துக் கேட்க,

“நந்தன் “ அழுகையோடு அணைத்துக் கொண்டாள்.

“அஞ்சனா ஏதாவது பிரச்சனைன்னா சொல்லு ? நீ இப்படி பண்ணுறது எனக்கு பயமா இருக்கு ?”

“நீங்க என்னை என்னைக்கும் விட்டு போக மாட்டீங்களே ?”

“வர்ற வர்ற நீ ரொம்ப மாறிட்டே, முன்னே இருந்த அஞ்சனாவே இல்லை. எப்பவும் போல்டா இருக்குற நீயா இப்படி பேசுற ? உன்னை விட்டு நான் எங்க போகப் போறேன் சொல்லு “ என்றதும், கணவனின் நெஞ்சில் சாய்ந்தாள்.

ஆதவன் விழி திறந்த காலைப் பொழுது வழக்கம் போலே கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தாள். அப்போது தான் நிதின் ஸ்டேஷன் செல்லக் கிளம்பி வெளியே வர இருவரும் பார்த்துக் கொண்டனர்.

“குட் மார்னிங் “ லேசான புன்னகையோடு கூறிச் செல்ல, அப்படியே அவனை குரோதத்தோடுக் கண்டாள்.

அப்போது தான் கவிநயா இரு நாட்களுக்கு முன் எதையோ மறைத்து வைத்துக் கொண்டுச் சென்றது நினைவுக்கு வந்தது. 

‘அது என்னதா இருக்கு ? ஒரு வேலை யார் கிட்டையும் லஞ்சம் வாங்குன பணமா இருக்குமோ ? இது மட்டும் உண்மைன்னா இதை வச்சே ஈஸியா மடக்கிரலாம். நான் நினைச்சது நடந்திரும். ஆனா இப்போ அது பணம் தானான்னு உறுதிப்படுத்தனுமே என்ன பண்ணலாம் ?’ யோசிக்க, அலுவலகம் செல்லும் நேரமும் வந்து விட கிளம்பி விட்டாள்.

‘இங்கே கல்லூரிக்கு வந்த மகிழனுக்கு நிச்சியம் அவள் தன் தங்கை தான். யார் என்ன சொன்னாலும் உடன் பிறந்தவளை சரியாகக் கண்டு பிடிக்க முடியாதா என்ன ? எப்படியாவது இன்னொரு தடவை பார்த்துப் பேசினா எல்லாமே தெரிஞ்சிரும். ஆனா எப்படி ? வேறு வழியில்லை. நம்ம இந்த பொன்னை பாலோ பண்ணி தான் ஆகணும் ‘ என்று தீப்தியை நினைத்து கூறினான்.

வழக்கம் போல் வகுப்பு எடுக்கச் செல்ல, உள்ளே நுழைந்ததுமே அவனின் பார்வை தீப்தியின் மீது தான். அவள் வந்திருக்கிறாளா என்று ?

அவன் இருந்த நேரம் முழுவதும் அடிக்கடி அவளிடம் பார்வையை பதித்துச் செல்லவே, தீப்தியும் அதனை உணர்ந்தாள்.

‘சார் என்னை அடிக்கடி பார்க்குற மாதிரி இருக்கே ? ச்சே, ச்சே அப்படி இருக்காது. அவர் கிளாஸ் எடுக்குறதுனால அப்படி தோணும் ‘ என தானேக் கேட்டு தானே பதிலும் கூறிக் கொண்டாள்.

மறுநாளும் இதே தொடர இச்செயலை மற்றவர்களும் கண்டு விட்டனர். வகுப்பு முடிந்து மகிழன் சென்று குழப்பமோடு அமர்ந்திருந்தாள் தீப்தி.

“சார் ஏன் உன்னை அடிக்கடி பார்க்குறாரு தீப்தி. என்ன காரணம் ?” என்று அருகில் அமர்ந்த தோழிக் கேட்க,

“ஆமா நானும் பார்த்தேன் “ என்று இன்னொருத்தியும் கூறவே, பிரம்மை இல்லை உண்மையென உணர்ந்தாள்.

“எனக்கு எதுவும் தெரியல “ என சமாளித்து விட்டளுக்கு உண்மையிலேக் காரணம் தெரியவில்லை தான். மாலை கல்லூரி முடிந்துக் கிளம்ப அவளின் பின்னே பாலோ செய்தான் மகிழன்.

முதல் நாள் கவனிக்க தவறியவள் மறுநாள் கவனித்து விட்டாள். சட்டென நின்று பின்னே திரும்ப, அவனோ அப்படியே தாண்டிச் சென்று விட்டாள்.

‘இவரு எப்பவும் இந்த பாதை வழியா வர மாட்டாரே ? இன்னைக்கு என்ன ?’ யோசனையோடு வீட்டுக்கு வந்தாள்.

விடுமுறை நாள் வந்து விடவே தன் இரு அண்ணிகளையும் இரவு நேரம் ஒன்றாகச் சந்தித்தாள் தீப்தி.

“சின்ன அண்ணி, நாளைக்கு ஷாப்பிங் போகலாம்ன்னு சொன்னீங்க மறந்துட்டீங்களா ?” என்று நினைவூட்ட, அவளுக்கு எங்கே அது நியாபகம் இருக்க ? தன் அண்ணனைப் பார்த்ததும் தான் அன்று பறந்து விட்டாலே ?

“ஆமால. போகலாம். அக்கா நீங்களும் வாங்க ?”

“அவர் கிட்ட கேட்டுக்கிறேன் அஞ்சனா “ என்கவே, உள்ளுக்குள் பொரிந்து தள்ளினாள்.

மாமியார் ஒருத்தி இருக்க அவளிடம் எதுவுமே கேட்காது பெண்களாகவே முடிவெடுக்க, தன் மகளையும் இவளுக்கு துணைச் சேர்த்து விட்டாலே நினைத்துப் பொறுமினார்.

“சரி அப்போ வாங்க சீக்கிரம் போய் தூங்கலாம் “ என்ற தீப்தி எழ, அஞ்சனாவும் எழுந்து நின்றாள்.

ஹால் சோபாவிலே சின்மயி உறங்கிக் கொண்டிருக்க, “அக்கா நான் மாடிக்கு தானே போறேன். பாப்பாவை ரூம்ல படுக்க வச்சிரவா ? நீங்க தான் கொஞ்சம் நேரத்துல வந்திருவீங்களே ?” என்க,

“சரி அஞ்சனா தூக்கிட்டு போ பக்கத்துல தலையனை வச்சி விட்டுரு “ என்றதும், சரியெனக் கூறி இது தான் வாய்ப்பு விடக் கூடாது நினைத்துக் கொண்டு குழந்தையை தூக்கி மாடியேறினாள்.

எதிரெதிரே இருவரின் அறைகளும் இருக்க, கவிநயாவின் அறைக்குள் நுழைய, சுத்தமான அறை தான் அவர்களை வரவேற்றது. சின்மயி புகைப்படம் மட்டும் தான் ஒன்று இருந்ததே தவிர இவர்களின் புகைப்படமேயில்லை.

மெல்ல குழந்தையைப் படுக்க வைத்தவள் அன்றுக் கொண்டு வந்ததை நினைத்துப் பார்த்து சத்தமில்லாது தேட ஆரம்பித்தாள்.

எப்படியும் அவர்கள் வருவதற்குள் தேடி விட வேண்டுமென நினைத்தவளோ வேகமோடு அறை வாசலை ஒரு பார்வை பார்த்தவாறு தேடினாள்.

லேப்டாப் டேபிள், கபோர்ட்டு,படுக்கையின் பின்னே என்று அறை முழுவதும் தேடி தோற்றுப் போனவள் கடைசியாக படுக்கை மெத்தையின் கீழ் பார்த்தாள். அங்கு இல்லாதது போகவே, நிமிர, அவளின் செயின் படுக்கை விளிம்பில்  பட அதுவோ நகர்வது போல் இருந்தது.

‘என்ன கட்டில் லூசா இருக்கா என்ன ?’ நினைத்து அதன் மீது கை வைக்க, பட்டென அதுவோ முன்னேச் சரிந்தது. குழந்தையின் மீது விழுந்து விடுமோ என்ற எண்ணத்தில் இறுக்கிப் பிடிக்க, உள்ளே சின்மயி விளையாட்டுப் பொருட்கள் இருந்தது.

“ஹே ! கண்டிப்பா இதுக்குள்ள இருக்கும் “ தனக்குள்ளே கூறிக் கொண்டு அகற்றிவிட்டு தேடிப் பார்க்க, கிடைத்தது. வேகமாய் அதனை பிரித்துப் பார்க்க நினைத்ததுப் போன்று பணம் தான்.

யாரோ வரும் சத்தம் அறை வாசலில் நிழல் தெரிய திடுக்கிட்டாள்.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 


Leave a comment


Comments


Related Post