இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-28 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 03-05-2024

Total Views: 30858

அத்தியாயம்-28

ஆளை அசரடிக்கும் உயரத்தில் அனைவரையும் அன்னார்ந்து பார்க்க வைக்கும் கட்டிடத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்த யாழினியின் மனம் பந்தய குதிரையின் வேகத்தில் துடிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

மனம் படபடக்க அந்த கட்டிடத்தினுள் நுழைந்தவள், மேலே அதிகாரகூட்டம் நடைபெரும் அறைக்குள் தன் அண்ணனுடன் நுழைந்தாள். அவள் எந்த ஜென்மத்தில் என்ன செய்து வைத்தாளோ.. அவளை பதற்றமடையச் செய்வதற்கென்றே பிறப்பெடுத்திருந்தவன் அவ்வறைக்குள் நுழைந்தான்.

யஷ்வந்தை எதிர்ப்பார்த்து வந்திருந்த அர்ஷித்தின் விழிகள் யாழினியை அங்கு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. 'ஏ டார்லிங்..’ என்று உள்ளம் உவகையில் குதிக்க, அவளுக்கு நேரெதிரே தனக்கென கொடுக்கப்பட்ட இருக்கையைக் கண்டு மனதில் மேலும் குதூகலித்தான்.

ஆனால் வழமைபோல் முகத்தில் எந்த உணர்வினையும் காட்டாமல் வந்தமர்ந்தவன் யஷ்வந்தை நோக்க, யஷ்வந்த் இதழில் கண்களுக்கு புலப்படாத ஒரு சிரிப்பு. தனக்கு அருகில் தன் அண்ணனும் தனக்கு எதிரில் தன் காதலனும் என இருந்தால் எந்த பெண்ணிற்கு தான் பதற்றமாக இருக்காது?

அதிலும் இருவருக்கும் ஆகவே ஆகாது. மனம் பந்தய குதிரை வேகத்தில் துடிக்க 'ஐயோ... ஆண்டவா.. இப்டி ஒரு சூழ்நிலைல என்ன விட்டுடியே.. ஏற்கனவே முதல் அனுபவத்துல தட்டு தடுமாறுது.. இதுல இவர் முகத்த பாத்தா நாக்கு ஒட்டிகுமே.. எதையாவது சொதப்பினா யஷு அண்ணா கஷ்டப்பட்டது எல்லாம் வேஸ்ட்டா போய்டும்.. இதுல போதா குறைக்கு நான் எதும் சொதப்பினா கண்டிப்பா இது அர்ஷித்கு தான் போகும். நான் வேணும்னே அவருக்கு ஃபேவர் பண்ண போல ஆயிட்டா?' என மனம் பலவாறு யோசித்தது. 

நெற்றியில் வியர்வை முத்துமுத்தாய் துளிர்க்க படபடப்பாக இருக்கும் தன்னவளை துளியும் திரும்பி பாராதபோதும் அவளது பதற்றநிலையை அர்ஷித்தால் உணரமுடிந்தது. யஷ்வந்த் அவள் கை மீது தன் கை வைக்க சட்டென திரும்பி பார்த்தாள். 

அரிதினும் அரிதான அண்ணனின் புன்னகையைக் கண்டவள் மனம் சற்று வேகம் குறைக்க கண்களாலேயே தங்கைக்கு தைரியமூட்டினான். 

அந்த வியாபாரி (டீலர்) உள்ளே நுழைய யாழினிக்கு மேலும் படபடப்பு கூடியது. 

'நான் வாயே திறக்க மாட்டேன் யாழி. நீ தான் பேசணும். முதல் தடவைங்குறதால தான் உன் கூட வரேன். இல்லனா உன்ன மட்டுமே அனுப்பிருப்பேன். நீ பேசாம தடுமாறி எனக்கு லாஸ் ஆனாலும் பரவால ஆனா நான் இந்த டீலிங் சார்பா பேச மாட்டேன்' என யஷ்வந்த் ஆணித்தரமாகக் கூறியது காதுகளில் ஒலிக்க, 

 'அய்யோ கிருஷ்ணா... இந்த கலவரத்துலருந்து என்ன காப்பாத்திடு' என அவசரமாக ஒரு வேண்டுதலையிட்டாள். 

உள்ளே வந்து அமர்ந்த டீலர் "குட் மார்னிங் எவ்ரிபடி. ஐ அம் மிஸ்டர் பிரித்வி. நா தான் எல்லா ஷோரூம்ஸ் அன்ட் கடைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் கிலாத்ஸ் சப்ளை பண்ணுவேன். எல்லாரும் உங்க  கம்பெனி டெக்னிக்ஸ் அன்ட் குவாலிட்டீஸ பத்தி சொல்லுங்க.. லெட்ஸ் ஸ்டார்ட் தி மீட்" என ஆங்கில நடையில் தனது தந்தையின் தொழிலில் இறங்கிய அந்த இளம் வாலிபன் கூற யாவரும் தங்கள் தொழில் துறைகளை பற்றியும் தங்களது சலுகைகளைப் பற்றியும் விவரித்தனர். 

அங்குள்ள கம்பனிகள் யாவும் சலுகைகளை வாரி வழங்க, 

'இத்தன சலுகைக்கு இந்த கான்டிராக்ட்ட எடுக்காமலே இருக்கலாம்' என யஷ்வந்தும் அர்ஷித்தும் எண்ணினர். 

முக்கால்வாசி நிருவனங்களின் பேச்சு முடிய "ம்ம்.. எல்லாரும் நிறைய ஆஃபர்ஸ் தருவீங்க போல? " என பிரித்வி கேட்டான். 

சொல்லி வைத்தாற்போல் யஷ்வந்தும் அர்ஷித்தும் ஒன்றுபோல "அவ கம்பெனி வில் நெவர் ப்ரோவைட் ஸச் டிஸ்கௌண்ட்ஸ் (Our company will never provided such discounts)" என கூறிட யாவரும் அவர்களை நோக்கினர். 

யாழினிக்கோ 'வாயே திறக்கமாட்டேன்' என கூறிய அண்ணன் பேசிவிட்டானே என எண்ணி மகிழக்கூட முடியாது அர்ஷித் மற்றும் யஷ்வந்தின் நேருக்கு நேரான பார்வை பீதியை ஏற்றியது. 

"யூ ஆர் மிஸ்டர் யஷ்வந்த் கிருஷ்ணா ரைட்? வாட் அபவுட் யுவர் கம்பெனி?" என பிரித்வி கேட்க

 "ஷி வில் எக்ஸ்பிலைன்" என யாழினியை கை காட்டினான். 

யாழினிக்கு பக்கென்றிட பதற்றத்தில் நா வரண்டு ஒட்டிக்கொண்ட உணர்வானது. வியர்வை முத்து முத்தாய் துளிர்த்திட அமைதியாக இருப்பவள் அங்குள்ளவர்கள் வாய்க்கு அவலாகிப் போனாள். 

யஷ்வந்திற்கு அவள் மௌனத்தில் கட்டுக்கடங்காத கோபம் கிளர்ந்தாலும் அவள் மேல் உள்ள நம்பிக்கை பொருமையை ஏற்படுத்தியது. 

"எக்ஸ்கியூஸ்மி மிஸ்.. சே சம்திங்" என பிரித்வி கூற அனைவரது ஏளனப் பார்வை அவளது தன்மானத்தை சீண்டியது. 

நிமிர்ந்து பார்த்தவள் கணீரென்ற பாணிக்கு தன் மென்குரலை இழுத்து "குட் மார்னிங் எவ்ரிபடி.. ஐ அம் யாழினி கிருஷ்ணன் ப்ரம் யுவனா இன்டஸ்ட்ரி.." என பேச துவங்க அனைவரும் அறைவாங்கிய அதிர்வில் மூச்சுவிட மறந்து அவள் பேச்சைக் கேட்டனர். 

யஷ்வந்த் ஒரு வித கர்வ புன்னகையில் அர்ஷித்தை பார்க்க அர்ஷித் இருபுறமும் தலையாட்டி மெல்ல இதழ்கடையோர புன்னகையை வீசினான்.

தங்கள் நிறுவனம் பற்றியவையோடு டீலிங் சம்பந்தமான பேச்சுக்களை முடித்தவள் அமர, அவள் நெஞ்சுக்கூட மூச்சிற்கு சற்றே தவித்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாதபடி மெல்ல மூச்சிளுத்தவள் தன் அண்ணனை நோக்க, அவன் முகத்தில் எந்த உணர்ச்சிகளுமில்லை.

அதில் மேலும் படபடப்பு தொற்றிக் கொள்ள, தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்று தனது மேலங்கியை உதறிக் கொண்ட அர்ஷித் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

அத்தனை நேரம் மனதில் ஓடிய படபடப்பு, அவன் அங்கியை உதறிய தோரணையில் சிதறிப் போனதாய் ஒரு பிம்பம் மனதில் தோன்ற, அவனை சற்றே வியப்பாய் கண்டாள்.

மென்மையான புன்னகையுடன் சீரான அவனது நுனிநாக்கு ஆங்கிலப் பேச்சும், அவளை வசீகரிக்கும் அவனது விழிகளும் என்றும்போல் இன்றும் அவளை சுருட்டிக் கொண்டு ஓடியது.

மனதில் அவன் காதலை கூறும் முன் அவனுடன் சகஜமாய் பேசியவை வலம் வந்தன.

'வருஷா வருஷம் உங்க பிறந்தநாளுக்கு மதுவை எழுப்புறதுக்கு நான் தான் அலாரம் வச்சு எழுந்துட்டு இருக்கேன். எனக்கு ஒரு சாக்லேட்டாவது தந்திருப்பீங்களா?’ என்று ஒருமுறை அவனது பிறந்தநாள் வாழ்த்தோடு அவள் கூற, அதற்கு மறுநாளே மதுவுக்கு கொடுப்பதாய் அமேரிக்க சாக்லேட் ஒரு பெரிய வண்ண பெட்டி நிறைய வந்திருந்தது.

'நிஜமாவே நான் கேட்டதுக்கா இவ்வளவு சாக்லேட்?’ என்று துள்ளலோடு அவள் அவனுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை தட்டிவிட, 

‘அஃப்கோர்ஸ் டார்லிங்’ என்று பதிலனுப்பி அவளை குழப்பத்தோடு திணற வைத்திருந்தான்.

அப்போது பத்தொன்பது வயது பதுமையவளுக்கு காதல் என்ற உணர்வெல்லாம் புதிது. அதை ஆராய்ந்து அறிந்துகொள்ளுமளவெல்லாம் அன்றைய யாழினிக்கு தோன்றவுமில்லை, தெரியவுமில்லை. ஆனால் இன்றைய யாழினி அதே பேதைப் பெண் அல்லவே!

அவன்மீதான ஆசையும், மோகமும், காதலும் அவள் வலிக்க வலிக்க உணர்வதே! அது காதலென்று அவள் மனம் எடுத்துக்கூறும் ஒவ்வொரு நொடியும் பயமெனும் திரை அவளைச் சூழ்ந்து அவள் காதலை மறைத்து வைக்கும். காதலென்ன புறத்தோற்றமுள்ளதா? மறைத்து வைத்தால் மறைவதற்கு!

அகம் சார்ந்த உணர்வினை அகத்தால் நோக்கும் யாவரும் கண்டிட இயலுமே! அப்படித்தான் அவளது காதல் யாவராலும் உணரப்பட்டது. ஆனால் அதை உணர வேண்டியவள் அல்லவா அதை மறுக்கின்றாள்!

தற்போது அவனை ரசித்து கண்கள் பருகிய சில நிமிடங்கள் அவளுள் கவிதையை விதைத்த நொடி, அதே பயமெனும் உணர்வு அவளை ஆட்கொண்டது.

 'இல்ல யாழி.. இது சரிவராது. தேவையில்லாம ஆசைபட்டு அழியாத’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள் தன் பார்வையை கீழே தாழ்த்திக் கொள்ள, அவள் முகம் முழுதும் சிவந்துவிட்டது. 

இது என்னமாதிரியான உணர்வு? அவனைப் பார்க்க தடைவிதிக்கும் தன்மீதே கோபமும் வருகின்றது, அவன் நேசிக்கும் தன் மனதின் மீது காதலும் கொள்கிறது.. வலியும் ஆசையும் ஒருசேர உள்ளுக்குள் மண்டியதில் கண்களை உணர்வுநீர் பிடித்துக் கொள்ள, தன்னை வெகு பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்தாள்.

ஆடவன் பேசிவிட்டு அமர, மேலும் இருந்தோரும் பேசி முடித்தனர்.

“உங்க எல்லாரோட டீலிங்கும் ரொம்ப சாடிஸ்பைடா இருந்தது. நான் முடிவு பண்ணிட்டு ஈமெயில் பண்ணுவேன். தேங்ஸ் ஃபார் யுவர் அட்டென்ஷன்” என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி அனைவருக்கும் விடை கொடுத்தான்.

யஷ்வந்தின் அருகே வந்தவன் யாழினியைப் பார்த்து, “மிஸ் யாழினி கிருஷ்ணா.. இது தான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் மீட்டிங் போலயே?” என்று வினவ, 

தன் அண்ணனை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டவள், ப்ரிவிக்கு ஆமென்று பதில் கூறினாள்.

“ம்ம்.. உங்க சைலன்ஸ்கு பிறகு நீங்க பேசினது ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் பார்த்த ஃபீல். ஆல் தி பெஸ்ட் ஃபார் யூ” என்று அவன் கரம் நீட்ட, தயக்கமின்றி அதைப் பற்றிக் குலுக்கிக் கொண்டாள்.

அங்குள்ள யாவரும் அவன் யாழினியுடன் கைகுலுக்கியதைப் பற்றி தங்களுக்குள் கற்பனை செய்துகொள்ள துவங்கியது அவர்களின் முகபாவமே காட்டியது.

'போச்சு.. இவங்களுக்கு தான் கான்டிராக்ட் போல'

‘விழுந்துட்டாரு போலயே.. ரெண்டு பேருமே பெரிய இடம்'

என்று பல்வேற கருத்துக்கள் அங்குள்ளோர் எண்ணத்தில் வட்டமிட, அனைவரும் அக்கட்டிடம் விட்டு வெளியேறினர்.

அண்ணனுடன் வண்டியில் ஏறச் சென்றவள், “யாழி..” என்ற அர்ஷித்தின் குரலில் திடுக்கிட்டு நின்றாள். மறுபுறம் வண்டியின் கதவினைத் திறந்த யஷ்வந்தும் நிமிர்ந்து பார்க்க, யாழினி அப்படியே உறைந்து நின்றாள்.

“மிஸ் யாழினி கிருஷ்ணானு கூப்பிட்டா தான் திரும்புவியா?” என்றவன் குரலில் சட்டென திரும்பியவள் படபடப்பாய் அவனை நோக்க,

 “நைஸ் ட்ரை” என்று கரம் நீட்டினான்.

ப்ரித்வியின் கரம் பற்ற அவளுள் எழாத அந்த தடுமாற்றம் இவன் கரங்களைப் பற்றுவதில் எழுந்தது. லேசாய் நடுநடுங்கும் கரத்தினை இறுக மூடி விடுவித்துக் கொண்டவள் அவன் முன் தன் கரம் நீட்ட, அதை அழுந்தப் பற்றிக் குலுக்கியவன் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம், 

“பொது இடத்துல சைட் அடிக்காதடி.. வெட்கமா இருக்கு” என்றுவிட்டுச் செல்ல, அதில் அதிர்ந்து அப்படியே நின்றாள்.

“யாழினி..” என்று யஷ்வந்த் அழைக்கவே சட்டெனத் திரும்பியவள் கலங்கத் துடித்த விழிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வண்டியினுள் ஏறினாள்.

வெடித்து அழுதிடத்தான் மனம் முரண்டியது. தன்னையும் ஏமாற்றிக் கொண்டு தன்னில் கொள்ளை காதல் கொண்டுள்ள தன்னவனையும் ஏமாற்ற நினைக்கும் அபத்தம் ஏனோ இன்று பூதாகரமாக தோன்றிய உணர்வு எழுந்ததில் கண்களிலிருந்து மலுக்கென்று நீர் வடிந்தது.

வண்டி ஜன்னலோடு ஒன்றி அமர்ந்தவள் அண்ணனுக்கு தன் கண்ணீரைக் காட்டிவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்க, அடக்க முயற்சித்த கண்ணிர் அவள் தொண்டையை அடைத்தது.

மெல்லிய கேவல் ஒலி எழுந்திட, வண்டியை ஓரம் கட்டிய யஷ்வந்த், “யாழி” என்றது தான் தாமதம்,

 “ஐம் இன் லவ் வித் அர்ஷித், அண்ணா” என்று கூறி முகத்தை மூடி கேவி அழுதாள்.

யஷ்வந்த் அமைதியாய் அவளை நோக்க, “யாஹ்.. அம்..அம் இன் லவ் வித் ஹிம். அம் இன் லவ் வித் தட் ப்ளடி தீஃப் ஆஃப் மை ஹார்ட். எ..என்னால முடியலை.. தாங்கவே முடியலை அண்ணா.. ஐ.. ஐ கான்ட் இக்னோர் ஹிம்.. ஐ கான்ட்” என்று வெடித்து அழுதாள்.

தன் மனதில் முட்டி மோதிய உணர்வுகளை கட்டுப்படுத்த போட்ட அணை கொடுத்த அழுத்தம் தீரும் வரை அழுது அறற்றியவள் அண்ணனை கெஞ்சலாய் நிமிர்த்து பார்க்க, அவன் அதே அழுத்தமான பார்வையுடன் அவளை நோக்கினான்.

“ரொம்ப வலிக்குது அண்ணா.. என்னால முடியலை.. எனக்கு அவர் வேணும். அவர் மட்டும் தான் வேணும். அவரை இழக்க முடியாது..” என்று திக்கித் திணறி அவள் கூற, 

“உன்னை இழக்க சொல்லி யார் ஃபோர்ஸ் பண்ணது?” என்று ஒரே ஒரு வரியில் அவளை திகைக்க வைத்து வண்டியை இயக்கினான்.

அதே திகைப்போடு அமைதியாய் கண்களில் கண்ணீர் வழிய வந்தவள் வீட்டை அடைய, வண்டியிலிருந்து இறங்கவிருந்த அண்ணனின் கரம் பற்றி, “அண்ணா..” என்றாள்.

அவள் புறம் திரும்பியவன் அவளை கேள்வியாய் நோக்க, “அ..அண்ணா.. நான்..அவர.. நீ.. உனக்கு..” என்று அவள் தவியாய் தவித்தாள்.

“யாழினி..” என்று அடர்ந்த குரலில் யஷ்வந்த் அவளை அழைக்க, தவிப்பாய் தலை குனிந்தவள், கண்ணீரோடு பெருமூச்செறிந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மென்மையான புன்னகையுடன் தங்கையின் கண்ணீர் துடைத்தவன் “தெளிவா யோசி யாழினி. உனக்கு புடிச்சது உனக்கு சரினு படுறதை செய். உனக்கு விருப்பமானதை, உன் மனசுக்கு பிடித்ததை எந்த தேவையில்லாத காரணங்களாலும் நீ மூடி மறைக்க வேணாம்” என்று கூற,

 “அ..அண்ணா.. நீ.. நீங்களும் அவரும்..” என்றாள்.

“நான் சொன்னது கேட்டுச்சா? தேவையில்லாத காரணங்களை யோசிக்காதனு சொன்னேன்” என்று யஷ்வந்த் கூற, கண்களை அழுந்தத் துடைத்தவள்,

 “நா.. நான் அவரை பார்த்துட்டு வரவா அண்ணா?” என்றாள்.

தங்கையின் கன்னம் தட்டியவன் “போ” என்க, வண்டியை விட்டு விரைவே இறங்கி வீட்டிற்குள் சென்று தனது வண்டி சாவியுடன் வெளியே வந்தவள் வண்டியை இயக்கிக் கொண்டு பறந்திருந்தாள்.

செல்லும் தங்கையை புன்னகையுடன் பார்த்தவன் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்திருக்க, அதைப் பார்த்தவன் முகம் இன்னும் அழகாய் ஒரு புன்னகை சிந்தியது, ‘தேங்ஸ்’ என்ற அர்ஷித்தின் மின்னஞ்சலில்.

'i didn't expect this from you’ என்று யஷ்வந்த் பதிலனுப்ப, ‘but I expected this from you’ என்று அர்ஷித் அனுப்பினான்.

அதில் சிரித்துக் கொண்டவன் வீட்டிற்குள் நுழைய திரும்ப, அவன் அலைபேசி ஆபாய செய்தியைத் தாங்கி அலறியதை. அழைத்தது வினோத் என்பதைக் கண்டவன் எடுத்து காதில் வைக்க, “சா..சார்.. மேடம..” என்று வினோத் திணறினான்.

‘மேடம்’ என்று வினோத் பதட்டமாய் உறைத்ததிலேயே யஷ்வந்தினுள் இனம் புரியா படபடப்பு சடுதியில் தொற்றிக் கொள்ள,

 “வினோத்?” என்று அழுத்தமாய் அழைத்தான்.

“சா.. சார் மேடம.. கடத்திட்டாங்க” என்று வினோத் கூற,

 “வாட்?” என்று அதிர்வும் குழப்பமுமாய் அவன் குரல் ஒலித்தது. 

“எ.. எந்த மேடம்? யாரை சொல்ற?” என்று கிட்டதட்ட யஷ்வந்த் கத்த,

வினோத், “அ..அஞ்சனா மேடம் சார். ஆ.. ஆர்.கே!” என்றது தான் தாமதம்,

 “ஆர் கே?!” என்று அதிர்ந்தான்.

அடுத்த நொடி அவன் அலைபேசிக்கு எண்களற்ற ஒரு அழைப்பு வந்தது. அதை புருவம் சுருங்கப் பார்த்தவன் தாமதியாமல் அழைப்பை ஏற்க, “ஆ…” என்ற அஞ்சனாவின் கதறல் ஒலி அவன் செவிப்பறைகளை அதிரச் செய்தது.

அதிர்ந்தான்.. உறைந்தான்.. தன்னையே அந்த நொடி மறந்தான்.. அனைத்தும் அவளது கதறல் ஒலியினால் மட்டுமே என்று கூறுவதில் ஆச்சரியம் இல்லையே!

“என்ன மிஸ்டர்..” என்றவன் தலையை இடவலமாய் ஆட்டியபடி உச்சுக்கொட்டி,

 “தி கிரேட் யஷ்வந்த கிருஷ்ணா.. உன் பொண்டாட்டியோட கதறல் கேட்க எப்படி இருக்கு?” என்றது தான் தாமதம், 

“ஆர்.கே” என்று கர்ஜித்திருந்தான்.

“த்து த்து த்து.. சத்தம் அதிகமா இருக்கே வை.கே (Y.K)? சத்தம் அதிகமா இருக்கே.. கூடாது.. இப்ப நீ என் கட்டுப்பாட்டுல இருக்க. புரியுதா?” என்றவன் அஞ்சனாவை நெருங்கி செல்வதை அதிக சத்தத்துடன் கேட்கும் அவளது கதறல் கூறியது.

“அ..அவள என்னடா பண்ண?” என்று ரத்த சிவப்பேறிய விழிகளை அழுந்தமூடி பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பிய வண்ணம் யஷ்வந்த் வினவ,

 “ப்ச்.. ஜஸ்ட் ஒரு அரைமணி நேரம் காற்றோட்டமே இல்லாத ரூம்ல தான் அடைச்சு வச்சிருந்தேன்” என்று சாதாரணமாய் ஒரு தோள் குலுக்கலுடன் அவன் கூறினான்.

“ஆர்.கே.. தப்பு பண்ற..‌ எனக்கு நீ கொடுக்க நினைப்பதைவிட பல மடங்கா அனுபவிப்ப..” என்று யஷ்வந்த் கர்ஜிக்க, 

“இந்த நேரத்துலயும் உன் திமிரு அடங்குதா பாரு.. நல்லா கேட்டுக்கோ.. உன்னோட ஃபோன் என் கட்டுப்பாட்டுல இருக்கு.. யாருக்காவது கால் பண்ணனு தெரிஞ்சது..‌ இவ கதை அவ்வளவு தான். மரியாதையா நான் சொல்ற இடத்துக்கு வா” என்று அழைப்பை துண்டிக்கச் சென்றவன்,

 “ஏ அப்றம்.. உன் பொண்டாட்டிக்கு எதும் பிரச்சினை இருக்கா என்ன? கொஞ்ச நேரத்துக்கே நெஞ்ச புடிச்சுட்டு கத்த ஆரம்பிச்சுட்டா?‌ சீக்கிரம் நீ வந்து என்னனு பார்க்குறியா இல்லை நானே என்னனு பார்க்கட்டுமா?” என்று நக்கலாக கேட்டான்.

“டேய்..” என்று யஷ்வந்த் கர்ஜிக்க, 

“வந்து சேரும் வழிய பாருங்க தி கிரேட் யஷ்வந்த் கிருஷ்ணா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 அப்படியே சிலையாகி நின்றவனுக்கு அந்த நொடி உலகமே நழுவி அவனை கீழே தள்ளியதைப் போன்றிருந்தது. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அமைதியடைய முயற்சித்தவனுக்கு அந்த அமைதியான சூழல் உள்ளே ஓடிய நேர்மறை எண்ணங்களை மென்மேலும் வளர்க்க அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழுந்தது‌. எடுத்துப் பார்த்தவனுக்கு அது ஆர்.கேவிடமிருந்து எங்கு வரவேண்டும் என்பதற்கான தகவல் என்று புரிந்தது.

தலையை தாங்கியபடி அப்படியே படியில் அமர்ந்தவன் மனம் படபடக்க, தன் மூச்சினை இழுத்து விட்டு தன்னை சீர் செய்தவன் பொறுமையாக சிந்தித்தான்.

‘தான் எங்காவது சென்றாலும், யாரையேனும் அழைத்தாலும் அது ஆர்.கேவிற்கு தெரிந்துவிடும். அங்கு அவன் எத்தனை அடியாட்களுடன் இருப்பானோ? அத்துணை நபர்களையும் அடித்து வீழ்த்தி தன்னவளை கூட்டிவர தான் திரைப்பட நடிகனல்ல. எனில் தனக்கு நிச்சயம் காவல்துறையின் துணை வேண்டும்' என்று நினைத்த மாத்திரம் காவல் துறையிலிருக்கும் அவனது நண்பன் வெற்றி நினைவிற்கு வந்தான்.

சட்டென மனதில் ஓர் எண்ணம் தோன்ற, விறுவிறுவென வீட்டிற்குள் சென்றவன் சில நிமிடங்களில் தெளிவான முகத்துடன் வெளியே வந்து தனது வண்டியை கிளப்பினான்.

ஆர்.கே கூறிய இடத்தினை சில நிமிடங்களில் அடைந்தவன் அந்த பழுதடைந்த பழைய தொழிற்சாலைக்குள் தன் கனத்த கால்களை எடுத்து வைத்தான். 

அஞ்சனாவின் அழுகுரலின் மெல்லிய ஒலி அவன் காதுகளை வந்தடையவும் படபடக்கும் நெஞ்சத்துடன் விரைந்து வந்தவன் உள்ளே நுழைய,

 “வெல்கம் தி கிரேட் யஷ்வந்த் கிருஷ்ணா. இட்ஸ் அ இம்மென்ஸ் ப்ளஷர் டு மீட் யூ” என்று சந்தோஷமும் உற்சாகமுமாய் கூறினான் ரக்ஷன் கபூர், ஆர்.கே இன்டஸ்ட்ரீஸின் தலைமையாளன்.


Leave a comment


Comments


Related Post