இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
நசையினம் மொழிவாயோ தையலே - முன்னோட்டம் அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK001 Published on 03-05-2024

Total Views: 13815

நசையினம் மொழிவாயோ தையலே!


"இங்க பாரு... நான் ஒன்னும் உனக்காக வரல... என்னோட நண்பனுக்காக மட்டும் தான் வந்தேன்..."

"நானும் அவருக்காக மட்டும் தான் உங்க கூட எல்லாத்தையும் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்..."

"எல்லாம் என் தலையெழுத்து..."

'ச்சே! நீங்க வெளியே மட்டும் தான் அமைதி... நல்லவர்... வல்லவர்... ஆனா, பக்கத்துல இருந்து பார்க்கும் போது தான்... எவ்வளவு பெரிய சேடிஸ்ட் ன்னு தெரியுது...' என்று அவளால் உள்ளுக்குள் மட்டுமே நினைக்க முடிந்தது.

**********

"ஹேய், எனக்கு இந்த ஸ்டெப்ஸ் எல்லாம் வராது ன்னு எத்தனை முறை சொல்றது..." என்று அவன் நொடித்துக் கொள்ள, பெண்ணவளோ தலையில் கை வைத்து அமர்ந்துக் கொண்டாள்.

"உங்களுக்கு சுட்டு போட்டாலும் பரதம் ஆட வரவே வராதா? இது எவ்வளவு ஈசியா ஸ்டெப்... ப்ளீஸ், கொஞ்சம் எனக்காக ட்ரை பண்ணுங்க... கஷ்டமான ஸ்டெப்ஸ் எல்லாம் நானே மேனேஜ் பண்ணிக்கிறேன்..."

"அடச்சே! எல்லாம் என் தலையெழுத்து..."

************

"உங்களுக்கும் எனக்கும் செட் ஆகும்னு தோணல... நாம விலகிக்கலாம்... அது தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது..." என்று அவனிடம் கோபத்துடன் விவாதம் செய்தாள் பெண்.

ஆடவனோ அதற்கு எவ்வித பதிலையும் கூறாமல் அங்கிருந்து வெளியேறியவனின் மனதின் எண்ணவோட்டமோ, 'இவ கூட எல்லாம் மாட்டிட்டு முழிக்கணும்னு என் தலையெழுத்தை போல...' என்றதாக தான் இருந்தது.

***********

"என்ன நினைச்சிட்டு இருக்க நீ? எப்பவும் நீ எடுக்குற முடிவு தான் சரின்னு நினைச்சிட்டு உன் இஷ்டத்துக்கு என்னென்னவோ பண்ணுவீயா? யாரை கேட்டு நீ இதெல்லாம் செஞ்ச? கொஞ்சமாவது அறிவு இருக்கா டி உனக்கு? படிச்சி இருக்க தான? மேலும் மேலும் முட்டாள்தனம் செய்யாம வாயை மூடிட்டு என் கூட வா?" என்று சினத்துடன் சீற,

"நான் முட்டாளாவே இருந்துட்டு போறேன்... அத பத்தி எனக்கு கவலை இல்ல... என் கவலை எல்லாம் எது தெரியுமா? உங்களையும் என்னையும் வச்சு தப்பு தப்பா பேசறாங்க இல்ல... அது தான்... எனக்கு அது சுத்தமா பிடிக்கல... நான் உங்க கூட இருக்க இருக்க, எல்லாமே எல்லை மீறி போய்ட்டு இருக்கு... இத எல்லாம் நிறுத்தி ஆகணும்னா, நீங்களும் நானும் இனி எப்பவும் பார்க்கவோ பேசவோ கூடாது... அதனால் நான் பண்ண எல்லாமும் சரி தான்..." என்று அவளும் அவன் மீது பாய,

"உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு வர ரூமர்ஸ் எல்லாம் உனக்கு வேணா பிடிக்காம இருக்கலாம்... பட், எனக்கு பிடிச்சு இருக்கு... ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு... அத விட அதிகமா உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு தையல் நாயகி..." என்று தன் மனதில் இருந்ததை அப்படியே மொழிந்து விட்டான்.

மனமோ, 'என் தலையெழுத்து என்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்குன்னு பார்த்தியா' என்று சிரித்துக் கொண்டது.


*******


ஆரம்பிக்கலாமா 😄 கதையை லேட்டா ஆரம்பிச்சாலும் லேட்டஸ்ட்டா ஆரம்பிக்கலாமா 😎


இப்படிக்கு உங்களின் தையல் ❣️


Leave a comment


Comments


Related Post