இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 23 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 03-05-2024

Total Views: 18103

அத்தியாயம் 23

பின்கட்டில் குளித்து முடித்துவிட்டு இடுப்பில் துண்டோடு தன் அறைக்குள் நுழைந்தான் சுரேந்தர்.

கண்களுக்கு அவள் மனையாள் கிடைக்க அப்போது அங்கு அவளை எதிர்பாராதவன் சற்று அதிர்ந்துதான் போனான் எனலாம்.

காரணம் அவள் அணிந்திருந்த தாவணி சற்று விலகி அவளது வெள்ளை இடுப்பு தெரிய அதையே பார்த்தபடி இருந்தான் அவன்.

"வேணாம்... இந்தர்,அவள பார்த்து மயங்கிடாத... அவ ஒன்னும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு ஒர்த்தானவ இல்ல...உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டா...அதவிட பழசெல்லாம் மறந்துட்டியா என்ன... இவள வாழ்நாள்ல மன்னிக்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்த... இப்ப இவளையே கல்யாணம் பண்ணி வாழ்நாள் முழுக்க வாழ வேண்டியதா போச்சு..."என நினைத்தவன் "என்ன நிம்மதியான தூக்கம் பாரு இவளுக்கு..." என நினைத்தவன் சுற்றிலும் தன் கண்களை சுழலவிட அங்கு அவன் குடிப்பதற்காக நீர் வைத்திருந்தார் பத்மினி.

"ம்ம்ம்ம்...."என புருவத்தை உயர்த்தியவன் அதை எடுத்து அவள் மேல் அபிஷேகம் பதறியடித்து எழுந்தாள் அருவி.

தன் முகத்தில் வழிந்த நீரை துடைத்தவள் தன் முன்னால் ஐயனார் கணக்காக உயர்ந்து நிற்கும் அவனை நிமிர்ந்து பார்த்து கழுத்து வலி கண்டாள்.

"என்ன மேடமுக்கு பகல்லயே இந்த தூக்கம்.... ஏன் கனவுல யாராச்சும் வரேன்னு சொன்னாங்களா...?" என கேட்க.

"ம்ம்ம்...ஆமா... என் அம்மா..." என்றவளின் பார்வை எதேச்சையாக அவன் இடுப்பில் செல்ல பதறி அடித்து எழுந்து திரும்பி கொண்டாள்.

"என்ன பன்றீங்க...?" என கேட்க.

"ஏன் என்ன ஆச்சு...?" என அவன் கேட்க.

"என்ன ஆச்சா எங்க உங்க துண்டு... எதுக்கு இப்படி ஒன்னும் இல்லாம வந்து நிக்குறீங்க... யாராவது பார்த்தா என்ன ஆகறது...?" என கேட்க.

கீழே குனிந்து பார்த்தவன் "ஓ.. இதுவா..." என கேட்டவன் "என்ன ரொம்பத்தான் சீன் போடற... இது நீ பார்க்க வேண்டியதுதான..." என கேட்க.

என மீண்டும் தன்னை குனிந்து பார்த்தான்.

வேண்டும் என்றுதான் இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்து போட்டான்.

"நான் போறேன்..." என அவள் திரும்ப மீண்டும் அவன் அதே கோலத்தில்தான் நின்றான்.

"முருகா... முருகா...முதல்ல துண்ட எடுத்து கட்டுங்க..." என்றபடி அவனுக்கு முதுகை காட்டி நின்றவள் தன் ஒரு கரத்தால் முகத்தை மூடிக்கொண்டாள்.

"என்னடி ஓவரா பன்ற... இது என் ரூம்... இங்க நான் எப்படி வேணா இருப்பேன்... நீதான் அதிகப்பிரசங்கித்தனமா என் ரூமுக்கு வந்துட்ட... பரவால்ல நாம இப்பவே ஸ்டார்ட் பண்ணிடலாம்..." என அவளின் ஒருகரத்தை பிடித்து இழுத்து சுவற்றோடு சுவராக சாய்த்து நிறுத்தினான். 

அவளோ அவனின் அந்த செயலை எதிர்பாராதவள் "எ... என்ன.. பன்ற இந்தர்...?" என தடுமாறி கேட்க. 

"ஏன் ஒரு புருஷன் பொண்டாட்டிக்கு இடையில என்ன இருக்குமோ அதுதானே இதுவும்...." என கேட்க.

"நமக்குள்ள இன்னும் எதுவும் சரியாகல..." என அவள் கூற.

"என்ன சரியாகல...?" என அவன் விடாமல் கேட்க.

"இந்தர்.. ப்ளீஸ்.. இப்படி செய்யாத எனக்கு கஷ்டமா இருக்கு..." என அவள் கூற.

"ஓ உனக்கு கஷ்டமா இருக்கா... அப்போ என்ன பண்ணலாம்... இப்பவே பர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணிடலாமா...?" என கேட்க.

"இந்தர், புரிஞ்சிக்க..." என அவள் முடிக்கும் முன் "ஏய்..." என அவள் கழுத்தில் கைவைத்து நெருக்கியவன் "இன்னோர் தடவ என்ன இந்தர்ன்னு கூப்ட்ட நான் மனுஷனா இருக்க மாட்டேன்..." என்றான் கோபத்தில் சிவந்த முகத்துடன்.


"என்ன கொஞ்சம் பேச விடு... அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்..." என்க.

"போதும்டி உன்  நடிப்பு... அதெல்லாம் நம்பறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல... நான் ஒரு டாக்டர்..." என்க.

"ம்ம்ம்ம்... ஆமா... இதய டாக்டர்னு பேரு... ஆனா இதயமே இல்லாத டாக்டர்..." என அவள் கூற.

அவள் கழுத்தை இன்னும் நெருக்கியவன் "ஏய்...எனக்கு இதயம் இருக்கா இல்லையாங்கிறது... பத்தி நீ கவலைப்படாத... எனக்கு இன்னும் நீ பண்ண துரோகம் கண்ணுலயே இருக்கு... இந்த ஜென்மத்துல அத மறக்கற எண்ணம் இல்ல... அதனால அப்போ நீ பண்ண துரோகத்துக்கு இப்ப நீ அனுபவிக்க போற... எல்லாத்துக்கும் தயாரா இரு இதுக்கும்தான்..."என அவளின் கன்னத்தை அழுத்தி பிடித்தவன் அவளின் சிவந்த உதடுகளை பார்த்தவன் அப்படியே அவனது ஒரு கரத்தை கொண்டு  அவள் முகத்தில் கோடிழுத்தான்.

"ம்ம்ம்ம்...சும்மா சொல்ல கூடாது முன்னாடி மாதிரி எலும்பும் தோலுமா இருப்பேன்னு நினைச்சேன்..." என்றவன் மேலிருந்து கீழாக அவளது வதனத்தை பார்வையால் வருடியவன் "இப்போ கொஞ்சம் வெயிட் போட்டுட்டடி ம்ம்ம்ம் பார்க்கற மாதிரிதான் இருக்க..." என்க.

"அதுக்காகவாவது என் நெனப்பு உனக்கு வந்துச்சே.. அதுவரைக்கும் சந்தோஷம்..." என்க.

"ஓ... உனக்கு அந்த நெனப்பு வேற இருக்காடி...கனவுல கூட என்னை அடைஞ்சிடலாம்னு நினைக்காத... எப்படிடி பழசெல்லாம் மறந்துட்டு என் கையால தாலி வாங்கிக்கிட்ட... உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா... இப்போ கூட பாரு... ஒரு ஆம்பள நான் எந்த கோலத்துல இருக்கேன்... கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம இப்படி என் முன்னால நிக்கிற... ஏன் நிறைய பேர இந்த கோலத்துல பார்த்து இருப்பியோ...?" என கேட்க.

"இந்தர்..."என அவள் சத்தமாக அழைத்த விதம் அவள் வாயிக்குள்ளே மறைந்து போனது.

"என்னடி துள்ளுற... அது யாரு... அது... என யோசித்தவன் உன் ஏமாத்துக்கார கூட்டாளி... அவபேரு என்ன... என யோசித்தவன் ம்ம்ம்... அந்த மகிழா... என் தம்பிய ஏமாத்தி கட்டிக்கிட்டவ...அவ நீ எல்லாம் கூட்டு களவாணிகதான... ம்ம்ம் அவ அண்ணன் பேரு என்ன... பாலன்... அதுதான அவன் பேரு... ம்ம்ம்ம் அவன் உன் பின்னாடி சுத்தனானாமே... அப்பறம் இன்னொருத்தன் உன் வீட்டுக்கு தீ வச்சவன்... அவன் அப்பறம் மார்க்கெட்ல ஒருத்தன்னு... உனக்கு சரியான கிராக்கி போல ஏன்டி... என கேட்டவன் என்ன பன்றது நீயும் மூக்கும் முழியுமாத்தான் இருக்க... அதான் உன் பின்னாடி சுத்தி இருக்கானுங்க... என்ன சும்மா சுத்திட்டுதான் இருந்தானுங்களா... இல்ல எல்லாம் முடிச்சிட்டு அனுப்பிட்டானுங்களா...?" என கேட்க

அவளோ தன் இருகரம் கொண்டு காதுகளை இறுக்க மூடிக்கொள்ள ரொம்ப "நடிக்காதடி நல்ல கைகாரிதான்... நீ கல்யாணத்துக்கு முன்னாடி அவனுங்க கூடலாம் சுத்திட்டு... என்ன பார்த்ததும் வளைச்சி போட பிளான் பண்ணிட்ட இல்லையா... அதுல ஒன்னுதான நீயும் உன் கூட்டு களவாணி பிரண்டும் பெரிய இடமா பார்த்து அந்த வீட்டு பசங்கள மடக்கி செட்டில் ஆகிடலாம்னு உங்க திட்டம் அதேமாதிரிதான நடந்துச்சு நீயும் அவளும் இப்ப ஹேப்பிதான..." என கேட்க

"இப்படிலாம் பேசறதுக்கு பேசாம நீ என்ன கொன்னே போட்ருக்கலாம்.." என்க.

"ஓஹோ... என அவளைப்பார்த்து இளக்காரமாக சிரித்தவன் அப்படி கொன்னுட்டா ஒரு நாளோட உன் துன்பம் போய்டும்டி நானும் என் குடும்பமும் பட்ட அவமானத்த இனி நீ தினமும் படனும் என் அம்மா அப்பா சித்தி சித்தப்பான்னு எல்லோருமே பழச மறந்து இருக்கலாம் ஆனா நான் சாகற வரைக்கும் மறக்க மாட்டேன் அப்போ அவமானப்பட்டு போனவன திரும்ப இந்த ஊருக்குள்ள வர வைக்க என் சித்தப்பாவும் வாசுவும் எவ்ளோ பாடுபட்டாங்கன்னு உனக்கு தெரியுமாடி ஈசியா என் மேல பழிய தூக்கி போட்டுட்ட ஆனா அதுல இருந்து நான் வெளிய வந்தது அத்தன சுலபமா இருக்கலடி உன்ன இனி தினமும் இதோ இந்த மாதிரி அழ வைக்கிறதுதான் என்னோட வேலையே என்றவன் இங்க சும்மா ஒரு ட்ரையல்தான் நீ சென்னை வா அங்க இருக்கு உனக்கு மெயின் பிக்சர் என்றவன் மீண்டும் தன்னை குனிந்து பார்த்துவிட்டு ஏன் மேடமுக்கு பிடிக்கலயோ..." என கேட்க.

"நீ என் பழைய இந்தரே இல்ல.." என்க.

"ஆமா புது இந்தர் மேட் இன் சைனா எப்படி இருக்கு இனி தினமும் உனக்கு இருக்கு..." என்க.

"நீ இந்த மாதிரிலாம் பேசாத இந்தர் என்னால தாங்க முடியல.." என்க.

"நானும் அன்னைக்கு உங்கிட்ட இப்படிதான் கெஞ்சினேன்டி மறந்துட்டியா?"
 என கேட்க .

"இந்தர் ப்ளீஸ்..." என அவள் கூற அவளை இழுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான் இந்தர்.

கீழே சமையல் தயாரிக்கும் இடத்திலோ மருந்தை கலக்க தயாரானான் திகம்பரனின் ஆள்....


Leave a comment


Comments


Related Post