இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 5 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 04-05-2024

Total Views: 13233

இதயம் - 4

"எங்க போறத பத்தி பேசிட்டு இருக்கிங்க" என்று கேட்டவாறே உள் நுழைந்த மூவரின் அன்னையான மல்லிகாவை பார்த்ததும் மூவரும் திருதிருவென விழித்தனர். "என்னங்கடா ஒருத்தரை ஒருத்தர் பாக்றிங்க ... என்ன கூட்டு சதி பத்தி பேசிட்டு இருக்கிங்க ... எங்கையாவது டூர் போறத பத்தி பேசிட்டு இருக்கிங்களா" என்று மல்லிகா தன் பிள்ளைகளின் திருட்டு விழியை உற்று நோக்கியதாலும் மூவரின் ஒற்றுமையான அமைதியையும் கவனித்து கேட்டார். "ஐய்யோ தாயே உன்னை விட்டு டூர்ரா ... நெவர் ... டூர் போனா நீ கட்டி எடுத்துட்டு வருவியே ஒரு புலியோதரை அதை விட்டுட்டு நாங்க தனியா போவோமா டூர்ரு" என்று ப்ரீத்தி கூற மகன்கள் இருவரும் தன் தங்கை கூறிய கிண்டல் தோரணையில் வாய் விட்டே சிரித்தனர். 

"அடிங்க என்னையவா கிண்டல் பன்ற இரு என் புருஷன் கிட்டையே சொல்ரன்" என்று மல்லிகாவும் பொய் கோபத்துடன் கூறினார். "அம்மா உன் புருஷர் தான் முதல் ஆளா புலியோதரைய பாத்ததும் ஓடுவாரு" என்று பரத் கூற மல்லிகா மூவரையும் முறைத்தார். "போங்கடா ... நீங்க ரொம்ப கிண்டல் பன்றிங்க ... ஏதோ வெளிநாட்ட பத்தி பேசிட்டு இருந்திங்களேன்னு கேக்க வந்தா என்னை இன்னைக்கு பழிகாடா ஆக்கறிங்க" என்று மல்லிகா கிளம்ப போக வாசு "பரத்தோட ஹோட்டல் ப்ரான்ச் ஒன்னு ஜெர்மன்ல ஸ்டார்ட் ஆக போகுதாம்ம்மா அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்" என்று கூறினான். "அந்த ஊர் எப்படி டா இருக்கும்" என்று மல்லிகா கேட்க "அதுவும் ஊர் மாதிரி தான்ம்மா இருக்கும்" என்று ப்ரீத்தி கூறினாள். "ஹேய் சும்மா இரு டி" என்று பரத் ப்ரீத்தி தலையில் கொட்டி விட்டு அவனுடைய லேப்டாப்பில் ஜெர்மனியின் புகைப்படங்களை கூகுள் செய்து காண்பிக்க தொடங்கினான். வாசு அஞ்சனாவுடன் நடந்த நிகழ்வு மொத்தமும் மறந்து தன் தங்கையின் கிண்டலிலும் தாயின் பொய்யான கோபத்திலும் பரத்தின் கண்டிப்பிலும் புன்னகையுடன் அவர்களின் பேச்சுடன் சங்கமித்தான். 

அஞ்சனாவோ கோபமாக தன் மாளிகை போன்றதொரு வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாமலும் மேசை மேல் இருந்த பூ ஜாடியை தூக்கி போட்டு உடைத்தாள். அஞ்சனாவின் கோபத்தில் சில்லு சில்லாய் போன பூஜாடியின் சத்தத்தில் சாந்தமே உருவமாய் வெளியில் வந்த அவளின் தாய் அஞ்சனாவின் காளி அவதாரத்தை சட்டை செய்யாமல் சிதறிய துண்டுகளை எடுக்கத் தொடங்கினார். அஞ்சனாவின் தந்தை தான் அஞ்சனாவின் கோபத்தை குறைக்க ஓடி வந்தார். "அஞ்சும்மா அஞ்சும்மா .. என்னம்மா ஆச்சி ஏன்ம்மா கோவப்பட்ற" என்று தன் உப்பிய வயிறு வானுக்கும் பூமிக்கும் குதிக்குமாறு மாடியில் இருந்து குதித்து ஓடி வந்தார் கோடியில் புரளும் மயில்சாமி. "அந்த வாசு ஜெர்மன்க்கு வர மாட்டானாம் அவனுக்கு அவன் குடும்பம் முக்கியமாம்" என்று கண்டப்படி கோபத்தில் அஞ்சனா கத்தினாள். "குடும்பத்தோட அருமை தெரியிற எவனும் உங்க கொள்க்கைக்கு ஒத்துக்க மாட்டான் ... அந்த பையன் எவ்வளவு நல்ல பையன் அவனையே உங்களால தக்க வச்சிக்க முடியல" என்று சிதறிய துண்டுகளை கையில் எடுத்தவாறே மயில்சாமியின் மனைவியும் அஞ்சனாவின் அம்மாவுமான நிர்மலா கூறினார். 

"ஏய் நீ வாய மூடு உன் கிட்ட இப்ப யாராவது கேட்டாங்களா" என்று மயில்சாமி தன் மனைவியை அதட்ட நிர்மலா "எப்படியோ போங்க பொண்ணும் அப்பாவும் ... உங்களால தான் இவ இப்படி ஆட்டகாரியாட்டம் வளர்ந்து நிக்கிறா ... இன்னும் அந்த பையனை கல்யாணம் பன்றதுக்குள்ள என்னென்ன ஆட்டம் ஆட போறாளோ ... எப்ப பாரு என் வாய மூட வைக்க வேண்டியது" என்று புலம்பியவாறே நிர்மலா சென்று விட்டார். "அஞ்சும்மா எதுக்கு கோவப்பட்ற ... அந்த விஷயத்தை பத்தி நீ பேசனா இப்படி தான் மாப்பிள்ளை ரியாக்ட் பன்னுவார் ... நா பொறுமையா எல்லா வேலையும் முடிச்சிட்டு மாப்பிள்ளை கிட்ட பேசிக்கிறன் ... நீ ஒன்னும் கவலைபடாத ... முதல்ல மாப்பிள்ளைக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்டு ஒழுங்கா பேசு" என்று மயில்சாமி கூற அஞ்சனாவும் சரி என்று வாசுவிற்கு அழைத்தாள். ஆனால் வாசுவோ தன் தங்கை மற்றும் தம்பியுடன் சேர்ந்து அன்னையை கலாய்ப்பதில் பிஸியாக இருந்ததால் அஞ்சனாவின் பத்து அழைப்புகளையும் தவற விட்டு விட்டான். 

ஏற்கனவே வாசுவின் அலட்சியத்தால் கோபத்தின் உச்சியில் இருந்த அஞ்சனா தற்பொழுது அவன் அழைப்பை ஏற்காததால் கொதித்து விட்டாள். "போன் எடுக்கலப்பா ... என் போன்ன அவன் எப்படி எடுக்காம போலாம்" என்று அஞ்சனா கத்த மயில்சாமி "கூல் டௌன்டா ... அவர் வாஷ்ரூம்ல கூட இருக்கலாம் இல்லை ... அவரே கூப்டுவாரு ... நீ டென்ஷன் ஆகாத" என்று மேகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். "நான்தான்ற அகம்பாவம் எப்பவுமே தலைக்கு மேல இருக்கவேக் கூடாது டி அது தலைய மட்டும் இல்லை மொத்த உடம்பையும் சாச்சிடும் ஜாக்கிரதையா இருந்துக்கோ" என்று நிர்மலா கோபமாக படியேறச் சென்ற மகளிடம் கூற அவளோ மௌனமாய் மாடியேறி விட்டாள். அஞ்சனா அம்மா என்று நிர்மலாவை அழைத்து எப்படியும் பத்து வருடத்திற்கு மேல் ஆகி இருக்கும். அஞ்சனாவின் பருவ வயதில் அவள் வைத்திருந்த ததவறான பழக்க வழக்கங்களை மாற்றியமைக்கக் கூறிய போது தந்தையின் செல்லத்தால் தாயிடம் பேச்சை நிறுத்தியவள் இன்று வரை அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. பிடிவாதம் என்பதை விட நிர்மலா கூறியது போல் தான் தான் பெரியவள் தான் வைத்தது தான் சட்டம் என்ற தலைகனத்தில் திரும்பிக் கொண்டிருக்கிறாள். தட்டி கேட்ட தாயையும் தந்தை அடக்கி விடவே அவளை கேட்கவே ஆள் இல்லை. மகளின் சொல்லே மந்திரம் என்பது தான் தந்தையின் செயல் என்பதால் அவளை கையில் பிடிக்க இயலுமா, ம்ஹூம் வாய்ப்பே இல்லை. தனிகாட்டு ராணி என்று பந்தாவாக சுற்றிக் கொண்டிருக்கிறாள். 

வாசுவின் மேல் அஞ்சனா வைத்திருக்கும் அன்பு கூட அவளின் தலைகனத்தில் ஒன்று தான். சிறிய வயதில் இருந்தே 'தி பெஸ்ட்' என்பது தனக்கே கிடைக்க வேண்டும் என்ற பழக்கம் கொண்டவளுக்கு கல்லூரியில் வாசுவை  படடிப்பிலும் விளையாட்டிலும் குணத்திலும்  அனைவரும் ஆஹா ஓஹோ என்று கூறியதால் வாசுவை நேரடியாகவே கண்களை பார்த்து ப்ரப்போஸ் செய்தாள். முதலில் நிராகரித்த வாசுவின் பின்னாலே அலைந்து கெஞ்சி கெஞ்சியே ஒப்புக் கொள்ள வைத்தாள். வாசு முதலில் பிடிக்காமல் சரி என்று கூறினாலும் நாட்கள் போக்கில் அஞ்சனா தான் வாழ்க்கை என்ற முடிவிற்கு வந்து அவள் தன் வீட்டில் வாழ எல்லா வசதியும் செய்ய வேண்டும் என்று சிறிது சிறிதாக பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறான். இன்னும் நான்கு மாதத்தில் புதியதாய் ஒரு ப்ராஜெக்ட் முடித்து உயர் பதவிக்கு முன்னேற திட்டமிட்டிருந்தான். வாசு சிறிது சிறிதாக முன்னேறி தன் உழைப்பில் அவளை வாழ வைக்க நினைக்க அவளோ ஒரே அடியாக உழைக்காமலே அனைத்தும் கொண்டு வருகிறேன் என்று கூறுகிறாள். வாசுவிற்கு அவளின் பணத்தின் மேல் சிறிதும் ஆசையில்லை. இப்பொழுது இருக்கும் இன்பமே போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். 

இரவு உணவிற்கு பின் தான் வாசு தன் கைப்பேசியையே தேடி எடுத்தான். தவறிய அழைப்புகளில் அஞ்சனாவின் இலக்கை கண்டதும் பதறி மீண்டும் அவளின் எண்ணிற்கு அழைத்தான். அஞ்சனா முதல் ரிங்கிலே அழைப்பை ஏற்றாள். "உன்னால என்னோட ஒரு கால் கூட அட்டன் பன்ன முடியல இல்லை" என்று அஞ்சனா கோபமாக கேட்கவும் "ஹேய் அப்படி இல்லை ... வந்ததும் அம்மாவும் தங்கச்சியும் பக்கத்துல வந்து உட்காந்து பேச ஆரமிச்சிட்டாங்க ... அவங்கைளோட பேசிட்டு இருந்ததால நா போன கவனிக்கல" என்று வாசு உண்மையை கூறினான். "என்னை திட்டிட்டு போனோன்னு கொஞ்சம் கூட உனக்கு கில்ட்டியா இல்லையா" என்று அஞ்சனா கேட்க "எனக்கென்ன கில்ட்டி ... நா ஒன்னும் தப்பா உன்னை திட்டல" என்று வாசு தொடங்க அஞ்சனா மேலும் பேச என்று சண்டை வழுப்பெற்று இறுதியாக அஞ்சனா கோபமாக அழைப்பை துண்டித்ததில் சண்டை சற்று ஓய்வு பெற்றது. 

வாசுவின் கோபமும் கடுப்பும் இன்னும் அதிகமாகி விட்டது. இவ்வளவு நேரமும் பரத்தும் ப்ரீத்தியும் அவனை சிரிக்க வைத்து அவன் எண்ணத்தை சற்று தெளிவு செய்து வைத்ததெல்லாம் காற்றில் கரைந்து போனது. வாசு கடுப்புடன் பால்கனி சென்று நின்றான். 'ச்சை அவளை காதலிக்க ஆரமிச்சதுல இருந்து ஒரு நாள் கூட நம்ம காதல் கரெக்ட்ன்னு திங்க் பன்ன வைக்கல ... எப்பா பாரு ஏன்டா லவ் பன்னோம்ன்னு தான் நினைக்க வைக்கிறா ... இதுல அவங்க அப்பன் வேற சப்போட்டு' என்று அஞ்சனாவை நினைத்து மனதில் அவளை திட்டியவாறு நின்றிருந்த வாசுவின் விழிகளில் வாசலில் ஓர் கார் வந்து நிற்கும் காட்சி பட்டது. "வீட்டுக்கே வந்துட்டாளோ" என்று நினைத்த வாசு வேகமாக அஞ்சனாவை தடுக்க கீழே ஓடி வந்தான். ஆனால் கீழே இருந்ததோ பரத்தை பார்க்க வந்திருந்த அவினாஷ். 

மல்லிகா காபி எடுக்க சென்றிட ப்ரீத்தி பரத்தை அழைக்கச் சென்றிருந்தாள். வாசு அவினாஷை பார்த்து புன்முறுவலிட அவினாஷ் "ஹாய் நீங்க வாசுதேவன் ரைட்" என்று கையை நீட்டி தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு வாசுவை கேட்க வாசு "ஹெஸ் ரைட் ... என் பேர் உங்களுக்கு" என்று குழப்பமாக நிறுத்தினான். "பரத் சொல்லி இருக்கான்" என்று அவினாஷ் கூறினான். "ஹாய் சார் ... நீங்க என்ன இவ்வளவு தூரம் கால் பன்னி இருந்தா நானே நேர்ல வந்திருப்பனே" என்று பரத் அவினாஷை தன் வீட்டில் பார்த்த அதிர்ச்சியிலும் தன் முதலாளி தன்னை தேடி வீட்டிற்கு வருவதா என்ற பதட்டத்தில் கேட்டான். "இட்ஸ் ஓகே பரத் ... நா முக்கியமான விஷயம் பேச தான் வந்தன்" என்று கூறிய அவினாஷ் தான் கொண்டு வந்திருந்த பைலை அங்கிருந்த மேசை மேல் வைத்து பிரித்து பரத்திடம் சில காகிதங்களை தனியாக எடுத்து காண்பித்தான். 

"நம்ம ஹோட்டல்ல இது வரைக்கும் பழைய மேனேஜரால ஐஞ்சி லட்ச ரூபாய் மோசடி நடந்திருக்கு ... இது இப்ப வரைக்கும் உன் கவனத்துக்கும் என் கவனத்துக்கும் வராம பாதுகாப்பா வைக்கப்பட்ருக்கு ... நம்ம ஹோட்டல்ல தங்கவனங்களோட எக்ஸ்பென்ஸ் ... நம்ம ஹோட்டல செலவான எக்ஸ்பென்ஸ் எல்லாத்தையும் கேல்க்குலேட் பன்னா ஒரு அமௌண்டும் நம்ம இயர் எக்ஸ்பென்ஸ்ல ஒரு அமௌன்ட்டும் வருது ... இதுல சந்தேகப்பட்டு தான் நா இங்க வந்தன் ... மொத்தமா ஐஞ்சி லட்ச ரூபாய் ஷாட்டேஜ் ... அதை என்னன்னு கொஞ்சம் நீங்க பாருங்க ... ஏன்னா இப்ப கூட உள்ள யாரோ பழைய மேனேஜர்க்கு ஹெல்ப் பன்னி இதை நம்ம கவனத்துக்கு வராம பாத்துக்றாங்க யார்ன்னு கொஞ்சம் பாருங்க ... நா நைட் ப்ளைன்ட்ல ஜெர்மன் போறன் அதனால தான் உன் கிட்ட இந்த பிரச்சனைய ஒப்படைக்கிறன் .. மத்த விஷயம் எல்லா பாப்பா கிட்ட கேட்டு டிஸ்கஸ் பன்னிக்கோ" என்று அவினாஷ் கூற "ஓகே சார் நா பாத்தூக்றன்" என்று பரத் ஒற்றை வரியில் அவினாஷ்ஷிற்கு நம்பிக்கையூட்டினான். 

"ஓகே ப்ளைட்க்கு டைம் ஆச்சி நா கிளம்பறன்" என்று அவினாஷ் கிளம்ப பரத் "சார் மேடம் தனியாவா வீட்ல இருக்காங்க" என்று அக்கரையாக கேட்டான். "ஆமா பரத் ... பாப்பா வீட்ல இருக்க வரைக்கும் எந்த பயமும் எனக்கில்லை ... வெளில வந்தா தான் பயம் நீ கொஞ்சம் அவளை ஹோட்டல்ல பத்திரமா பாத்துக்கோ" என்று கெஞ்சலுடன் அவனாஷ் கூற பரத் "சார் நா பாத்தூக்றன் சார்" என்று கூறினான். அவினாஷ் அங்கிருந்து கிளம்பியதும் வாசு "ஏன்டா உன் முதலாளிக்கு அப்பா அம்மா இல்லையா" என்று கேட்டான். "இல்லைண்ணா அவங்க அண்ணனும் தங்கச்சியும் தான் அவங்க மொத்த குடும்பத்துலையும் உயிரோட இருக்க ஒரே வாரிசு" என்று பரத் கூறி சென்று விட்டான். "இரண்டே பேரா அவ்வளவு பெரிய 'இசை ஸ்டார்ஸ்ஸ' ரன் பன்றாங்க ... வாட் எ எபிலிட்டி ... இரண்டு பேர்க்கும் செம தைரியம் செம தில்லு தான்" என்று வாசு முனுமுனுக்க "உன் ஆளோட அப்பா மாதிரி அனாதை சொத்த பங்கு போட்டு விக்க மாட்டாங்க" என்று ப்ரீத்தி கூற வாசு ப்ரீத்தியை முறைத்தான். "அவளை ஒன்னும் சொல்லிடக் கூடாதே உடனே முறைச்சிகிட்டு வந்துருவியே" என்று கூறிய ப்ரீத்தி வாசுவின் முறைப்பு அதிகமாகியதும் வேகமாக உள்ளே ஓடி விட்டாள். 

அப்பொழுது சரியாக வாசுவின் கைப்பேசி சினுங்க வாசு சலிப்புடன் "எங்கடா இன்னும் கால் வரலையேன்னு பாத்தன்" என்று புலம்பியவாறே கைப்பேசியை எடுத்தவன் முகப்பில் சித்தார்த் எண்ணை கண்டதும் குழம்பி போனான். 'இவன் ஏன் இன்னேரத்துக்கு கால் பன்றான்' என்ற குழப்பத்துடனே அழைப்பை ஏற்றவன் சித்தார்த் கூறிய செய்தியில் அதிர்ந்து போனான். 


Leave a comment


Comments


Related Post