இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 04-05-2024

Total Views: 19292

செந்தூரா 24


தாரிகா கண்விழிக்கும் போது மருத்துவமனையின் படுக்கையில் இருந்தாள். அதை உணர்ந்து தன் கணவனுக்கு என்ன நடந்ததோ என்று பதறினாள். ஜானகி மட்டும் அருகில் இருக்கவும், “அத்தை என் மாமாக்கு என்ன ஆச்சு, அய்யோ, அந்த ஜோசியர் சொன்னது போல எதும் நடக்கலையே?” என்று அரற்றினாள்.

சத்தம் கேட்டு அறைக்கு வெளியே இருந்த கதிரேசன், முத்துப்பாண்டி, ரஞ்சிதம் ஆச்சி உள்ளே வந்தனர். அவர்களில் தன் கணவனை காணாமல் கதறி அழ தொடங்கிவிட்டாள். “யாராவது சொல்லுங்களேன் என் மாமாக்கு என்ன ஆச்சு?” என்று கத்தினாள்.

அவர்கள் அனைவரும் பின்னால் திரும்பி பார்க்க, அவர்களின் பார்வை போன திசையில் தன் கவனத்தை திருப்பினாள் தாரிகா. செந்தூரன் கைகளை கட்டி கொண்டு அழுத்தமாக அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

அவனுக்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள அவன் தலை முதல் கால் வரை கண்களால் அலசி ஆராய்ந்தாள். கணவன் நலமாக இருக்கிறான் என்றதுமே ஆழ்ந்த பெருமூச்சு விட்டவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. தன் இரு கைகளையும் நீட்டி அவனை தன்னிடம் வருமாறு கண்களால் அழைத்தாள். அதை கண்ட பெரியவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அந்த அறையிலிருந்து வெளியேறினர்.

செந்தூரன் மனைவியின் அருகில் கட்டிலில் அமர்ந்து அவளை எழுப்பி அமர வைத்தான். அவளோ அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு அவன் முகம் முழுவதும் வேகமாக, பரிதவிப்புடன் முத்தமிட்டாள். அமைதியாக அதை ஏற்றுக் கொண்டு அவள் முதுகை வருடி சமாதானம் செய்தான்.

ஒருவழியாக சமாதானம் ஆனவள், “என்னாச்சு மாமா?” என்று கேட்டாள்.

இப்போது அவளை பார்த்து முறைத்தான். “ஏன்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நான் தான் வண்டியை எவ்வளவு மெதுவா ஓட்டிட்டு வந்துட்டு இருந்தேன். லாரி அந்த கடைசியில் வருது… நீ என்னமோ மாமான்னு சொல்லி கத்திட்டு மயங்கி விழற… நான் உன்னையே பிடிக்கிறதா இல்லை எதிரே வர லாரியில் மோதாமல் இருக்க வண்டியை ஓரங்கட்றதானு தெரியாமல் ஒரு நிமிஷம் பயந்துட்டேன். அப்பறம் வேகமாக ஒரு கையால் வண்டியை பேலன்ஸ் பண்ணி உன்னை மட்டும் தூக்கிட்டு ஓரமாக போய்ட்டேன். அடுத்த நிமிடமே அந்த வண்டி லாரிக்கு அடியிலே…” என்றான் பெருமூச்சோடு.

நடந்ததை நினைத்து பார்க்கும் போதே அடிவயிறு கலங்க “அய்யோ” என்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளின் முதுகை வருடியபடி “அது தான் எதுவும் நடக்கவில்லை தானே, பயப்படாதேடி” என்றான் வாஞ்சையுடன்.

அவன் நடந்ததை சொன்ன பின்பு தான் அவளின் உடல் பயத்தில் உதறியது. “ஒரு வேளை என் ஜாதகம் ஒத்து போகாததால் தான் இந்த சம்பவம் நடந்ததா? ஒரு வேளை இது எனக்கு ஒரு எச்சரிக்கையா? தன் மாமா கொஞ்சம் சுதாரிக்காமல் இருந்து இருந்தால் என்ன நடந்திருக்கும்? அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. மேலும் மேலும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புரட்டி ஆறுதல் தேட முயன்றாள் தாரிகா.

செந்தூரன் அவளின் காதருகே குனிந்து, “ஹனி இது ஹாஸ்பிட்டல்டி, நீ ஆறுதலுக்காக தான் இப்படி பண்றேன்னு தெரியுது. ஆனால் எனக்கு டெம்ப்ட் ஆகுது. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தால் நான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டியிருக்கும். இங்கே பரவாயில்லையா உனக்கு?” என்று கிசுகிசுத்தான்.

“போடா செவப்பா… நானே எவ்வளவு பயந்து போயிருக்கேன். அப்படி தான் பண்ணுவேன். ஆனால் நீ என்னை எதும் பண்ணக்கூடாது” என்று சிணுங்கினாள்.

“ஏய் இதெல்லாம் ஓவர்டி. எப்படியோ இன்னிக்கு தான் ஆத்தங்கரையில் பேசிட்டு இருக்கும்போது மனசு மாறி கோபம் எல்லாம் விட்டு மலை இறங்கி வந்தே. நானும் உன் விருப்பத்தோடு உன்னை முழுசா முழுங்கலாம்னு பார்த்தால் இப்படி ஆஸ்பெட்டல்ல வந்து படுத்துகிட்ட… போடி என்னை ரொம்ப அலைய விடுறே” என்றான் செல்ல கோபத்துடன்.

“நீ என்ன முதலையா என்னை முழுங்கறதுக்கு?” என்று சிரித்தாள் தாரிகா.

அவனோ பதில் சொல்லாமல் அவள் கண்களை தீவிரமாக பார்க்கவும் வெட்கத்தில் அவளின் கன்னங்கள் சூடேறியது. அதை ரசித்தபடி அவள் கன்னத்தை அவளுக்கு வலிக்காமல் கடித்தான்.

அந்த நேரம் சாரதாவும் சுபாஷும் அறைக்குள் நுழைந்தவர்கள் அவர்கள் இருந்த கோலத்தை பார்த்து சங்கோஜத்துடன் திரும்பிக் கொண்டனர். பெற்றோரை பார்த்ததும் தன் கணவனை வேகமாக விலக்கி “வாங்க அப்பா” என்றாள். அப்போதே அவர்கள் வந்ததை உணர்ந்த செந்தூரன் தலையை கோதிக் கொண்டு மெல்ல சாரதாவின் அருகே வந்து, “உனக்கும் உன் புருஷனுக்கும் விவஸ்தையே இல்லையா? என்னடா புதுசா கல்யாணம் ஆன சின்ன சிறுசுங்களாச்சேனு குரல் கொடுத்துட்டு வரமாட்டிங்களா?” என்றான் அத்தைக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“நீ ஆஸ்பத்திரியில் கதவை திறந்து வச்சிட்டு இப்படி செய்வனு எங்களுக்கு என்ன தெரியும்?” என்று முறைத்தார் சாரதா. அப்போதே தன் தவறு புரிய தொண்டை கனைத்துக் கொண்டு தலையை கோதியபடி, “சரி சரி பேசிட்டு இருங்க, காபி வாங்கிட்டு வரேன்” என்றான் செந்தூரன்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வரும்போது டாக்டரை பார்த்து விட்டு தான் வந்தோம். ஓவரா டென்ஷன் ஆகியதால் அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம்னு சொன்னாங்க. இப்போ வீட்டிற்கு அழைச்சிட்டு போக சொன்னாங்க. அதனால் வீட்டுக்கு போகலாம்” என்றார் சாரதா.

“இதுக்கு போய் ஏன்ப்பா இவ்வளவு தூரம் நீயும் அம்மாவும் வந்தீங்க” என்று தந்தையிடம் கேட்டு கொண்டிருந்தாள் தாரிகா.

அனைவரும் கிளம்பி வீட்டை அடைந்த போது காயத்ரியும் தன் கணவனோடு வந்து விட்டிருந்தாள். அவளின் கணவன் சத்யன் காயத்ரி கர்ப்பமாக இருப்பதாக சொல்லவும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள் கூறினர். செந்தூரன் சத்யனின் கைகளைப் பற்றி “வாழ்த்துக்கள் மாப்பிள்ளை” என்று சொல்ல, அவனோ “நீங்க எப்போ குட்நியூஸ் சொல்ல போறீங்க மச்சான்” என்றான் சிரித்தபடி.

செந்தூரன் தன் மனைவியை அழுத்தமாக பார்த்தபடி, “கூடிய சீக்கிரமே” என்றான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.

வீட்டினர் அனைவரும் ஒன்றாக இருந்ததால் தோட்டத்தில் ஒன்றாக அமர்ந்தபடி பேசி சிரித்து கொண்டு இருந்தனர். செந்தூரன் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாலும் பார்வை மட்டும் மனைவியை விட்டு அகலவே இல்லை.
 
அவளுக்கு அவன் பார்வை அவஸ்தையாக இருந்தது.‌ ஆனாலும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.‌ யாருமறியாத வண்ணம் அவ்வப்போது அவளை பார்த்து கண்சிமிட்டி மோகப் பார்வை பார்த்தான். கணவனின் பார்வையில் உடல் சிலிர்த்து, அவனை நேராக பார்க்கவும் முடியாமல், அவன் காந்த பார்வையை தவிர்க்கவும் முடியாமல் திணறினாள். அவனோ அவளின் திணறலை ரசித்தபடி இரு கைகளையும் பின்னால் ஊன்றி அவன் பார்வையை அவள் மேனியெங்கும் படரவிட்டான். அவன் பார்வை பட்ட இடமெல்லாம் அனலாய் தகிக்க, தொண்டைக்குழியில் ஏதோ அடைக்க தவிப்புடன் கணவனை ஓரப்பார்வையால் நோக்கினாள். செந்தூரன் பார்வையாலே அவளை விழுங்கி கொண்டிருந்தான். காயத்ரி தாரிகாவிடம் ஏதோ கேட்க, தாராவோ முழங்காலில் தன் தாடையை பதித்தபடி தன்னை மறந்து கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். காயத்ரி இப்போது தன் அண்ணனை பார்த்தாள். செந்தூரனும் தன் மனைவியை விழிகளால் விழுங்கி கொண்டிருந்தான். இருவருக்கும் காயத்ரி மட்டுமல்ல அங்கிருந்த யாரும் கண்ணிலும் கருத்திலும் பட்டதாக தெரியவில்லை. அவர்களை  கண்களால் தன் அன்னைக்கு ஜாடை காட்டினாள் காயத்ரி.  இப்போது ஜானகி மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் அந்த காதல் பறவைகளை பார்த்து தங்களுக்குள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

ரஞ்சிதம் ஆச்சி, “நம்ம வீட்டில் இது வரைக்கும் அவங்களுக்கு சாந்தி முகூர்த்தம் நடத்தலை. இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. நம்ம வீட்டில் தான் நம்ம குலம் தழைக்கனும். நீயும் சாரதாவும் போய் அவங்களுக்கு அறையை ஏற்பாடு செய்யுங்க. காயத்ரி நீ  தாராவை கூட்டிட்டு போய் அலங்காரம் செய்” என்று வீட்டின் பெரிய மனுஷியாக கட்டளையிட்டார்.

“இன்னிக்கு தான் ஆஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்காங்க. பிறகு பார்க்கலாமே மா” என்ற சாரதா வை முறைத்தார் ரஞ்சிதம் ஆச்சி.

“எவடி இவ. ஆஸ்பத்திரியில் அவங்க நடந்துகிட்டது பார்த்தே தானே. எல்லாம் என் பேரன் பார்த்துப்பான். ஏற்பாடு செய்ய வேண்டியது நம்ம கடமை. அதுக்கப்புறம் அவங்க பாடு” என்றார் ஆச்சி.

அவர் சொல்வதும் சரி என்று தோன்ற ஜானகியும் சாரதாவும் சடங்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார்கள். அவர்களின் சம்பாஷனை எதுவும் அறியாமல் செந்தூரன் பார்வையாலே பல காதல் கதைகளை தன்னவளுக்கு சொல்லிக் கொண்டு இருந்தான். வேறு வழியே இல்லாமல் காயத்ரி அவர்கள் இருவருக்கும் இடையில் நந்தி போல சென்று அமர்ந்தாள். பார்வை தடைப்பட்டுப் போகவும் உச்சு கொட்டியபடி தங்கையை பார்த்து முறைத்தான் செந்தூரன்.

“அண்ணி வாங்க இன்னைக்கு என் கூட தூங்குங்க, ரொம்ப நாள் ஆச்சு இல்ல? நாம ஒன்னா பேசி தூங்கி?” என்றாள் காயத்ரி தன் அண்ணணின் முறைப்பை பொருட்படுத்தாமல்.

இப்போது தாரிகா கணவனை பார்த்தாள். அவன் வேண்டாம் போகாதே என்று பார்வையால் சைகை செய்தான். தாரிகாவோ காற்றாகி போன குரலில் “காயு டயர்டா இருக்கு. என்னால் உன் கூட பேச முடியாது. இன்னொரு நாள் உன் கூட தூங்கறேன்” என்றாள்.

“அதெல்லாம் முடியாது. நான் கர்ப்பமாக இருக்கேன். என் ஆசையை நிறைவேற்ற மாட்டியா?” என்று காயத்ரி கேட்டுவிட தாரிகா கணவனை கெஞ்சுதலாக பார்த்தபடி, “சரி காயு” என்றாள். செந்தூரன் மனைவியை அப்பட்டமாக முறைத்தான். போகாதே என்று விழியசைவால் மிரட்டினான். சுபாஷ் கதிரேசன், சத்யன் முத்துப்பாண்டி என அனைவரும் செந்தூரனின் செய்கையில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

செந்தூரனோ தங்கையையும் மனைவியையும் மாறி மாறி முறைத்தான். காயத்ரியோ கண்டு கொள்ளாதவள் போல தாரிகாவை இழுத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள். மற்ற ஆண்கள் பேசிக்கொண்டே இருக்க செந்தூரன் கடுப்புடன் அமர்ந்திருந்தான்.  

காயத்ரி தாரிகாவை அழைத்துச் சென்று இளம் ரோஜா வண்ண ஷிபான் சேலையை கட்டிவிட்டாள். தாரிகா எதற்கு என்று கேட்டதற்கு, காயத்ரி அவர்களின் ஏற்பாட்டை பற்றி சொல்லவும், முகம் நாணத்தில் சிவந்தது. “பாவம் மாமா, அவர்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல…” என்றாள் வெட்கத்துடன்.

“யம்மா என்னைய என்னா முறைக்கிறான் எங்க அண்ணன்? அவனை கொஞ்சம் காய விடணும், அதான் சொல்லலை” என்றபடி தாரிகாவை அலங்காரம் செய்ய தொடங்கினாள் காயத்ரி. 

சுபாஷ் செந்தூரனிடம் அவன் தொடங்க போகும் தொழிலைப் பற்றி விசாரித்தார். வேண்டா வெறுப்பாக சொல்ல தொடங்கியவன் பிறகு சுவாரசியமாக விளக்கமளித்துக் கொண்டு இருந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு ரஞ்சிதம் ஆச்சி வந்து, “சரி சரி புதுசா தொழில் தொடங்க போற, எங்க எல்லார் கால்லயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போய் உன் அறைக்கு போய் தூங்கு, நேரமாச்சு” என்றார் பேரனிடம்.

“இப்பவா? காலையில் ஆசிர்வாதம் வாங்கிக்கிறேன். இந்த காயத்ரி வேற என் பொண்டாட்டியை அவள் அறைக்கு கூட்டிட்டு போயிட்டா. தனியாக எப்படி ஆசிர்வாதம் வாங்கறது?” என்றான் செந்தூரன் சிடுசிடுவென்று.

“அதெல்லாம் இன்னொருக்கா காலையிலும் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம். இப்போ கால்ல விழு. இல்ல பெரிய மனுஷன் ஆயிட்டியா? எங்க கால்ல எல்லாம் விழமாட்டியோ?” என்று ரஞ்சிதம் ஆச்சி ராகம் இழுத்து முடிப்பதற்குள் செந்தூரன் தன் தாத்தா பாட்டி காலில் விழுந்திருந்தான். அதன் பிறகு அப்பா அம்மா, அத்தை மாமா காலில் வரிசையாக விழுந்து எழுந்தவன் மனதிற்குள் பெரியவர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த வாரம் தொடங்க போகும் கம்பெனிக்கு இந்த ராத்திரி நேரத்தில் ஆசிர்வாதம் ரொம்ப முக்கியம் என்று மனதிற்குள் பொருமியபடி “நான் தூங்க போறேன்' என்று பொதுவாக சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். ஒரு கணம் நின்று காயத்ரியின் அறையை அழுத்தமாக பார்த்தான். கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பேசாமல் கதவை தட்டி என் பொண்டாட்டியை என் கூட அனுப்பு என்று  கேட்கலாமா? என்று தோன்றியது. அதுக்கு பிறகு தங்கை தன்னை என்னவென்று நினைப்பாள்? வேண்டாம் இன்று ஒரு இரவு மட்டும் தானே. நாளைக்கே நம்ம வீட்டிற்கு போய்விட வேண்டியது தான் என்று பெருமூச்செறிந்தபடி தன் அறையை நோக்கி நடந்தான்.

இத்தனை நாட்கள் தாரிகா அவன் மேல் கோபம் கொண்டு விலகி இருந்ததால் தனிமை அவ்வளவாக அவனை பாதிக்கவில்லை. ஆனால் இன்று அவளின் கன்னச்சிவப்பும் வெட்கமும் அவனை வெகுவாக தடுமாற செய்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் இந்த கணமே அவள் முழுமையாக வேண்டும் என்று அடம் பிடித்தது. 

உடலும் மனமும் மோகத்தில் தகித்துக் கொண்டிருக்கும் போது எங்கே தூங்குவது? என்ற வெறுப்புடன் தன் அறைக்கதவை திறந்து உள்ளே வந்து தாழிட்டான். இருட்டாக இருந்த அறையில் மின்விளக்கை ஒளிர விட்டு திரும்பியவன் கட்டிலில் பதுமையாக தலை குனிந்தபடி அமர்ந்திருந்த தாரிகாவை பார்த்து இன்பமாக அதிர்ந்தான்!

“ஹனி…” என்று கூவி கொண்டே வந்தவன் அவளை அப்படியே தன் இரு கைகளில் தூக்கி தட்டாமாலையாக சுற்றினான். அவளோ பேச்சற்று தன் இரு கைகளால் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு தன் வெட்கத்தை மறைக்க அவன் கழுத்து வளைவிலேயே இடம் தேடிக்  கொண்டிருந்தாள். 
 
அவன் சுற்றிய வேகத்தில் அவளின் இதழ்கள் அவனின் கழுத்தில் தன் முத்திரையை வேகமாக பதித்து விட, அவளை அப்படியே கட்டிலில் படுக்க வைத்தவன், விழிகள் விரிந்தது. தாரிகாவின் வழவழப்பான சேலை தேவையான இடங்களில் தேவைக்கு அதிகமாகவே விலகி இருந்தது. தீவிரமாக அவளை தலை முதல் கால் வரை அளவெடுப்பது போல பார்த்தான். அவளோ புடவையை சரி செய்ய எத்தனிக்க மனைவியின் இரு கைகளையும் தன் வலிய கரங்களால் சிறை செய்திருந்தான். மீண்டும் வஞ்சையின்றி தன் பார்வையை அவள் மேனியெங்கும் படர விட்டான். தாரிகா கைகளால் தன்னை மறைக்க முடியாமல் போனதால் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அந்த கள்வனோ அவள் இமை திறந்து அவனை பார்க்கும் வரை பொறுமையாக பார்வையால் அவள் அழகை பருகி கொண்டிருந்தான். 

தாரிகா மெல்ல கண் திறந்து கணவனை பார்க்கவும், செந்தூரன் தன் கண்களை அவள் கண்களோடு கலக்க விட்டபடி, “ஹனி ஓகேவா” என்றான் கிறக்கத்துடன்.

அவளோ பதில் சொல்லாமல் கீழுதட்டை கடித்தபடி பக்கவாட்டாக திரும்பிக் கொள்ள, அவள் நாடியைப் பற்றி அவனை பார்க்க செய்தான். “நீ ஓகேனு வாயை திறந்து சொல்ற வரைக்கும் இப்படியே தாண்டி இருக்கனும்” என்று அவள் கோலத்தை கண்களால் காட்டினான்.

“அய்யோ இதெல்லாம் ஏன் என்கிட்ட கேட்கிற மாமா. என்னவேனா பண்ணிக்கோ” என்றாள் தவிப்பாய். அடுத்த நொடி அவளின் சேலையை உருவி வீசியிருந்தான். அவள் கண்களில் மெல்லிய திடுக்கிடலை காணவும் மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டான். மெல்ல மெல்ல தன் ஆக்ரமிப்பை மென்மையாக அவளின் மேல் காட்ட தொடங்கினான். ஆழி பேரலையாய் அவன் உணர்ச்சிகள் தகித்தாலும் மனைவியின் முகத்தை நொடிக்கொருமுறை பார்த்து பூவினும் மென்மையை பூப்போன்ற பெண்ணவளின் மீது காட்டினான். 

தன் ஆளுமையில் இருந்தவளின் முகத்தை பார்த்தபடி “ஓகேவா, வலிச்சா சொல்லு” என்றபடி மென்மையாக அவளிடம் தன் ஆதிக்கத்தை செலுத்தி விட்டு பக்கவாட்டில் படுத்துக் கொண்டு அவளை தன் மேல் போட்டு கொண்டவன், “உனக்கு ஓகேவா ஹனி, வலிக்கலையே? பிடிச்சிருக்கா?” என்று கேட்டான். 

அவள் அவன் நெஞ்சில் படுத்தபடி இல்லையென்று தலையாட்டினாள். “என்ன சொல்ற தாரா சாஃப்டா தான்டா ஹேன்டல் பண்ணேன், பிடிக்கலையா?” என்றான் வருத்தமான குரலில்.

“இந்த சைவமுத்தத்தை விட பாண்டிச்சேரியில் கொடுத்த அசைவ முத்தம் தான் ரொம்ப பிடிச்சது மாமா. அதனால் தான் என்னால் அன்னைக்கு உன்னை தடுக்க முடியலை” என்றாள் தாரிகா கிசுகிசுப்பாக

இப்போது அவள் நாடியை நிமிர்த்தி, “என்னடி சொல்றே? நிஜமாவா? என்னோட அதிரடியை அடக்காமல் உன்கிட்ட நான் காமிச்சால் அங்கங்கே உன் உடம்பு கன்றிப்போய்டுமே, பரவாயில்லையா?” என்றான் ரகசியமான குரலில்.

“பரவாயில்லை. அதிரடிக்கார மச்சான் தான் வேணும்” என்று சொல்லி விட்டு வெட்கம் தாளாமல் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். இதற்காகவே காத்திருந்தவன் போல அடுத்த நொடி தன் அதிரடி செய்கைகளால் அவளை கிறங்கடித்தான் செந்தூரன்.

அவளின் மேனியெங்கும் இதழ் ஒற்றலாலும் பற்தடங்களாலும் கவிபாட தொடங்கிவிட்டான். அவளோ உணர்ச்சிகளின் பிடியில் தன் நககீறல்களால் அவன் முதுகில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தாள்.

இருவரும் இணைபிரியாமல் விடிய விடிய விடியாத இரவொன்றை தேடி தேடி காலை வரை தங்களுக்குள் பயணித்து கொண்டிருந்தனர்.

(தொடரும்)



Leave a comment


Comments


Related Post