இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -03 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 05-05-2024

Total Views: 17062

இதரம் -03

மல்லியை சந்தித்த நாளை நினைத்தபடி வந்தவனை உலுக்கினான் ரகுவர்மன். 


"என்னண்ணா...?"


"வீட்டுக்கு வந்தாச்சு திரு" என்றவன் இறங்கும் போதே வாயிலில் நின்றாள் நயனிகா. 

கணவனைக் கண்டு அவளின் மலர்ந்த முகம், திருவைக் கண்டு அப்படியே மாறியது. 


'இப்போ எதுக்கு இவன் கூட வர்றாரு?' என்று முனகிக் கொண்டவள் ரகுவர்மனின் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டாள்.


"என்ன நயனி வாசல்லயே நிக்கிற...? ஏதாவது ஃபுட் ஆர்டர் பண்ணி இருந்தியா?" என்றதும் அவனை முறைத்தவள்," உங்களுக்காக தான் வெய்டிங்."என்று முகத்தாடையை தோளில் இடித்து கொண்டு சென்றாள். 


திரு புன்சிரிப்புடன் அண்ணனைக் காண," உன் முன்னாடி கலாய்ச்சுட்டேனாம்" என்று அவனும் சேர்ந்து சிரித்தான். 



இருவருமாய் உள்ளே நுழைய,ஜெகதீஸ்வரி கூடத்தில் அமர்ந்திருந்தார். அவரின் கால்களைப் பிடித்து விட்டபடி தரையில் அமர்ந்திருந்தாள் மல்லி. 



திருவின் முகம் அப்படியே இறுகிப் போனது அவளைக் கண்டதும். 



விறுவிறுவென்று தன்னறை நோக்கிச் சென்றவன்," மல்லி!"என்று சத்தமாய் அழைத்தான். 


அவன் குரலில் நடுங்கித் தான் போனாள் பெண்ணவள். 


"அம்மா!" என்றதும்," நீ போ!" என்று அனுப்பினார் ஜெகதீஸ்வரி. 


அவசரமாய் ஓடினாள் அறைக்கு. 

வாசலில் நின்றபடியே," புருஷன் வந்தா எந்த வேலை எப்படி இருந்தாலும் அப்படியே போட்டுட்டு வரணும்."என்றதும் சரியென்று அவள் தலையாட்ட," போய் டிஃபன் எடுத்துட்டு வா" என்றான் பார்வையை சுழலவிட்டபடி. 


அவள் சமையலறை செல்லவும், ஜெகதீஸ்வரி திருவை அழைக்க அங்கே வந்தான்.


"எதுக்கு வந்ததும் வராததுமா வேலை வைக்கிற அவளுக்கு?, டிஃபன் டைனிங் ஹால்ல சாப்பிட வேண்டியது தானே இதென்ன புதுப்பழக்கம்?" என அதட்ட

"இனிமேல் சாப்பிடுறேன்." என்றான் மறுக்காமல்


"மாசமா இருக்கிறவளை அதட்டலாமா...?பயந்து போய் போறா "என்று வாஞ்சையாக சொல்ல


"இல்ல கால் அமுக்கற வேலை எல்லாம் செய்றா. டிஃபன் எடுத்துட்டு வரமாட்டாளா?" என்றவன், அவரின் பதிலுக்கெல்லாம் காத்திருக்கவில்லை அறைக்குள் சென்று விட்டான்.  ஜெகதீஸ்வரி திகைப்பாய் மகன் செல்லும் திசைப் பார்த்து அமர்ந்திருந்தார். 


சிறிது நேரத்தில் மல்லி உணவோடு அறைக்குள் செல்ல, திருமாறன் குளியலறையில் இருந்து இலகுவான டீசர்ட், ட்ராக் ஃபேண்ட் சகிதம் வெளியே வந்தான். 


அவன் வந்து அமர்ந்ததுமே டீசர்ட்டைத் தான் கவனித்தாள். 

"டாக்டர் சார் தொவைக்கையில புதுத்துணியோட சேர்த்து தொவைச்சுட்டாங்க போல. சாயம் ஒட்டிக்கிச்சு. சண்டை போடுவீங்களோனு அந்தக்கா பயந்துகிட்டு நிக்குது. இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க." என்றாள் சங்கடமாக 


"ஹேய், அதெல்லாம் இல்லம்மா. ஃபேவரைட் டீசர்ட் எனக்கு நெருக்கமானவங்க ப்ரசன்ட் பண்ணது. அதான் திங்கிங் இந்த கலரை போகவைக்க முடியாதா?" என்று மென்மையாக கேட்க மல்லியோ,' ரொம்ப வேண்டப்பட்டவங்க தந்திருப்பாங்க போலருக்கு அதான் கேட்கிறார்' என்று நினைத்துக் கொண்டு," சார் நான் ஒரு யோசனை சொல்லவா?" என்றாள் ஆர்வமாக 


"சொல்லேன் கேட்போம்." என கூறவுமே," சாயம் பட்ட இடத்தில் ஏதாவது படம் டிசைனா வரைஞ்சுட்டா கறை தெரியாது தானே!?"என்றாள். 


"ம்ம்ம், இது கூட நல்ல ஐடியா தான் ஆனா யாருக்கு அதுபோல வரையத் தெரியும்?"என்றதும்," நான் செஞ்சு தருவேன் சார்" என்றாள் ஆர்வமாக 


"ஓகே!" என்றவன் உடனே கொடுத்துவிட்டான் விட்டான் அவளிடம். 


இரண்டு நாட்களில் சாயம்பட்ட இடத்தில் தாமரையை தைத்து வைத்திருந்தாள். 

"இது நிஜமாவே நீ எம்பிராய்டரி பண்ணியா மல்லி?!" என்று ஆச்சரியத்துடன் வினவ


"சார் அவ்வளவு தெறமை எல்லாம் இல்ல... அந்த பூவு கடையில வாங்கினது அதை வச்சு தைச்சேன்." என்றாள்.


"பரவாயில்லை இதுவும் நல்லா தான் இருக்கு"என்று சொல்ல மல்லியின் முகத்தில் புன்னகை கீற்று .


"கூப்பிடுறது காதுல விழுதா இல்லையா?" என்று உலுக்கவும் சுயம் வந்தாள் மல்லி. 



"சா... சார் !"என்று திடுக்கிட்டு விழிக்க 


"இதென்ன குழந்தைக்கு எடுத்துட்டு வர்ற மாதிரி வந்திருக்க போய் இன்னும் எடுத்துட்டு வா" என்று அதட்ட வேகமாய் பாத்திரத்துடன் வெளியேறினாள். 

மல்லி உணவை எடுத்து வருவதற்குள் வெளியே வந்தவன் ,"வர்றதுக்கு இவ்வளவு நேரமா இங்கேயே எடுத்து வை" என உணவு மேசையில் அமர, அதிசயமாக மற்றவர்களும் உணவருந்த அமர்ந்திருந்தனர். 


"ஹேய்! அந்த சட்னியை எடு" என நயனிகா அழைக்க," அப்படியே எனக்கு சாம்பார் போடு" என்று துர்காவின் குரல் கேட்டது. 


பரிமாறப் போனவளை மீண்டுமாய் தடுத்தவன்," வீட்ல உள்ள எல்லாரும் சாப்பிட உட்காரும்போது நீ மட்டும் வேலை செய்வியா என்ன? வேலைக்காரங்க முன்னாடி என் வீட்டை அசிங்கப்படுத்துறியா...? புது மருமகளை வேலை வாங்கறாங்கனு வெளியே பேசிக்கணும் அதுக்குத்தானே இப்படி செய்ற?"என்று கடுகடுக்க மல்லியின் விழிகள் கலங்கிப் போயின. 


'இவன் ஏன் அவளை இந்தப் பாடு படுத்துகிறான்?'என்று நொந்து போனார் ஜீவரெத்தினத்தம்மாள். 


"உட்கார்னு சொன்னா புரியாதா?" மீண்டும் ஒரு அதட்டல். சட்டென்று அமர்ந்து கொண்டாள். 


"அண்ணி ஏதோ கேட்டீங்க, நான் எடுக்கவா?" என்று நயனியிடம் கேட்க


 அவளோ பதறிப் போய் ஜெகதீஸ்வரியைப் பார்த்து விட்டு," இல்லை தம்பி செஞ்சு வருவா பரிமாற, நீங்க சாப்பிடுங்க" என்றாள். 


"ம்ம்ம்" என்றவன்," பாட்டி முக்கியமான விஷயம் பேசணும்" என்றான். 


"முதல்ல சாப்பிடு "என்றார் அவர். 

உணவருந்தும் போது வேறு பேச்சுக்கள் பேசுவதில்லை எப்போதுமே. உழைப்பதே இந்த உணவிற்காக தான். அதை நிறுத்தி நிதானமாக உண்ண வேண்டும் என்பது ஜீவரெத்தினத்தம்மாளின் எண்ணம். 


ஜெயராஜ் அப்போது தான் வந்து அமர்ந்தார் மனைவி மற்றும் மகனுடன். முகம் இறுக்கமாக இருந்தது அவருக்கு. மல்லியை ஒரு வித எரிச்சலுடன் பார்த்திருந்தார் ஜெயராஜ். 



உணவருந்தி முடிக்கவும் அனைவரும் கூடத்தில் அமர ,ஜெகதீஸ்வரி மல்லியிடம் அனைவருக்கும் தேநீர் கலக்கும்படி சொல்ல, அவளும் சரியென நகரவும் திரு முறைத்தான் அவளை. 



"செஞ்சு!" என்று சத்தமிட உடனே ஓடிவந்தாள் வேலைக்கார பெண்.



"அண்ணா...!"என்று படபடப்பாக வந்து நிற்க


"எல்லாருக்கும் டீ போடச் சொல்லு செஃப் இருக்காங்க தானே?" என்றான் சற்று சத்தமாக


மல்லி தயங்கி அவன் முகம் பார்க்க," என் துணி மடிக்காம இருக்கு போய் அதைப்பாரு."என்றான் அதட்டலாக 



அவள் வேகமாக அறைக்குச் செல்லவும், ஜெகதீஸ்வரி மகனிடம் திரும்பினார். 

"நீ அந்தப் பொண்ணை நடத்துற விதமே சரியில்லை திரு." என்க


"ம்மா உங்க ஸ்டான்டர்ட் என்ன அவ கிட்ட டீ போட சொல்றீங்க."என்றவன்," நாம பேசவேண்டியதை பேசலாமா?"என்றான். 



எல்லோரும் ஆமோதிக்க ஜெயராஜ் வாய்திறந்தார்.


இங்கே அறையிலோ மல்லி திருவின் அலமாரியை திறந்தவள், திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள். அங்கே அவனின் துணிகள் அனைத்தும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 





..... தொடரும். 
















Leave a comment


Comments


Related Post