இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 24 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 05-05-2024

Total Views: 18179

அத்தியாயம் 24

அந்த ஊரில் அது கொஞ்சம் பிரம்மாண்ட கடைதான்.

அந்த கடையை ஒட்டியே பாத்திரக்கடையும் அதன் அருகே நகைக்கடையும் இருக்க அருணாவிற்கு ஒவ்வொன்றிற்கும் தனியாக அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

முதலில் சுரேந்தருக்கும் அருவிக்கும் துணியை எடுத்தவர்கள் அடுத்தது வாசுவிற்கு பார்த்தனர்.

அவனோ தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தான்.

சுந்தர் அருணாவிடம் சில நேரமும் வாசுவிடம் சில நேரமும் அமர்ந்து இருந்தான்.

மகிழாதான் எது எடுப்பது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க அருணா அவளுக்கு உதவினார்.

ஆனாலும் அவளுக்கு மனம் அதில் எல்லாம் லயிக்கவில்லை.

அவளுக்கு கவனம் முழுவதும் வாசுவின் மேல்தான் இருந்தது.

அவனோ அவளை கண்ணால் காண்பது கூட பாவம் என எண்ணி இருக்க அவளோ ஒவ்வொரு துணியும் எடுக்கும் போதும் அவனை மனதில் வைத்தே எடுத்தாள்.

அவனுக்கு ஒரு போன் வர முதலில் அதை அலட்சியம் செய்தான்.

சுந்தர் இப்போது அவன் அருகில் அமர்ந்து "இப்போவாச்சும் உண்மைய சொல்லுடா..." என்க.

"என்ன உண்மை...?" என கேட்டான் அவன்.

"டேய்... இந்த அருவிப் புள்ளைக்கும் உன் அண்ணன் அந்த விளங்காவெட்டிக்கும் ஏதோ பிளாஷ்பேக் இருக்கும் போலயே... அது தெரியலனா எனக்கு மண்டையே உடைஞ்சுடும் போலடா... சொல்லுடா ப்ளீஸ்..."என்க.

"அடுத்தவங்க விஷயம்னா உனக்கு அவ்ளோ ஆர்வம் போல..." என்க.

"ம்ம்ம்ம்... அப்படி இல்ல... லைட்டா அப்படித்தான்... ஏன் சொல்லு... உன் அண்ணன் பின்னாடி வர்ஷினின்னு ஒரு டாக்டர் பொண்ணு சுத்துது... முதல்ல அவன் கூட வேணாம்னு சொல்லிட்டான்... ஆனா விடாம அந்த பொண்ணு அலைஞ்சிதால சரின்னு ஒத்துக்கிற நேரத்துல இங்க ஊருக்கு வந்துட்டான்... ஆனா உன் பெரியப்பா சொன்னதும் அந்த அருவி கழுத்துல தாலிய கட்டிட்டான்... அதான் என்னதான் அவன் மனசுல இருக்குன்னு தெரியாம நான் அல்லாடுறேன்...." என்க.

"பெருசா ஒன்னும் இல்ல அருவி அப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் கொஞ்சம் நிலப்பிரச்சனை அதுதான்..." என்க.

"டேய்.... அது பெரியவங்களுக்கு இடையில இருக்கற பிரச்சனை... ஆனா இதுங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதோ இருக்கும் போலயே..." என்க.

"அது..." என அவன் இழுத்தவன் சுந்தரின் காதில் "அத அவன்கிட்டயே கேட்டுக்க..." என்க.

சுந்தர் அவனை பார்த்து முறைத்தவன் "ஏன் அது எனக்கே தெரியாதா... உங்கிட்ட வந்து கேட்டேன் பாரு... போடாங்க..." என்றபடி அருணாவின் அருகே செல்ல "சுந்தர்.. இங்க எல்லாம் முடிஞ்சிதுப்பா நகைக்கடைக்கு போலாம்..." என்க.

"வாங்கம்மா..." என்றபடி அவன் முன்னே நடக்க மகிழாவும் அவர்கள் பின்னால் சென்றாள்.

மறந்தும் அவன் இருந்த இடத்தை பார்க்கவில்லை அவள்.

பார்வையிலேயே அவளை எரித்த வண்ணம் இருக்க அவனை பார்த்து தன்னை பலமிழக்க அவள் முனையவில்லை.

நகைக்கடையிலும் அவர்களுக்கு தேவையானதை எடுத்து பில் போடும் பொழுது மீண்டும் அவனுக்கு கால் வந்தது.

இப்போது புருவமுடிச்சுடுன் அதை எடுத்தவன் எதிர் முனையில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்து "அம்மா முடிஞ்சிதா வீட்டுக்கு போலாம்..." என்க.

"அவ்ளோதாம்பா இதோ போலாம்..." என்றவர் வாங்கியது  எல்லாத்தையும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு கிளம்பினார்.

வண்டியின் அருகே வேகமாக வந்தவன் சீக்கரம் ஏறுங்க என முன்னால் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

அவனின் பதட்டத்தை பார்த்த அருணா "என்ன வாசு... என்ன ஆச்சு...?" என கேட்க.

"அப்பா உடனே வர சொன்னாரும்மா..." என்க.

"சரி அதுக்கு எதுக்கு நீ இவ்ளோ பதட்டப்படற... ஏதாச்சும் பிரச்சனையா...?" என கேட்க.

"இல்லம்மா... வாங்க போலாம்..." என்றபடி அவர் அருகில் அமர்ந்து இருந்தவளை ஒரு முறைத்தவன் மீண்டும் முன்னால் திரும்பி கொண்டான்.

அவளுக்குத்தான் உள்ளுக்குள் புயல் அடித்தது.

"ஐயோ.. இப்ப என்ன பிரச்சனையா இருக்கும்னு தெரியலயே...?" என நினைத்து சற்று பதட்டமாக அமர்ந்து இருந்தாள்.

வெற்று உடம்புடன் அருவியையும் இழுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான் இந்தர்.

அவளோ அவனிடம் இருந்து திமிறியபடி "இந்தர்... என்ன பன்ற விடு என்னைய..." என்க.

"போதும் வாய மூடுடி... நாம புருஷன் பொண்டாட்டிதான... என்னைக்கா இருந்தாலும் இது நடக்கப்போறதுதான... எப்பவோ நடக்கறதுக்கு இன்னைக்கே நடந்துட்டு போகட்டும்... இல்ல எங்கூட இப்படி இருக்க உன் முன்னால் காதலனுங்க எல்லாம் பர்மிஷன் கொடுக்க மாட்டானுங்களா...?" என கேட்க.

"இந்தர்  போதும் இதுக்கு மேல ஏதாச்சும் பேசினா நான் மனுஷியா இருக்க மாட்டேன்..." என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்

"நிறுத்துடி.. உன் ட்ராமாவ.. அந்த பாலன கட்டிக்க நினைச்சவதானடி நீ..?"என்க.

"அது என் விருப்பம்..." என்றாள் அவள்.

அவளின் பதில் அவனுக்கு மூளையை சூடேற செய்ய "என்ன சொன்ன...?" என அவன் கேட்க.

"அவன கட்டிக்கிறதும் வேணாம்னு சொல்றதும் என்னோட விருப்பம் அதுல நீ தலையிடாத...?" என்க.

"நான் தலையிட கூடாதா... கட்டின புருஷன்கிட்டயே இன்னோருத்தன கட்டிக்கிறது என்னோட விருப்பம்னு சொல்றீயே... வெக்கமா இல்ல உனக்கு..." என கேட்க.

"உன் கையால தாலி வாங்கி இன்னும் முழுசா ஒருநாள்கூட முடியல... ஆனா உன் மனைவிய வேற ஒருத்தங்கூட சேர்த்து வச்சு பேசுறியே... உனக்கு வெக்கமா இல்லையா... நீயெல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச..?"என்க.

"என்னடி... வாய் ரொம்ப நீளுது... என்ன ஏமாத்திதான கட்டிக்கிட்ட... என்னைய அடைய இது எல்லாமே உன்னோட மாஸ்டர் பிளான்தானடி..." என்க.

"ஆமா நீ பெரிய உலக அழகன் பாரு... உன்னை கட்டிக்க நாங்க பிளான் வேற பன்றமாக்கும்... முதல்ல என் மேல இருந்து எழுந்திரி..." என்க.

"முடியாது அப்படித்தான் படுப்பேன்..." என்றவன் மேலும் அவனது வெற்று உடலோடு அவளது மேனியில் அழுத்தியபடி நெருங்கினான்.

"மூச்சு முட்டுது இந்தர்... விடு என்ன பன்ற பகல்ல..."என அவள் கேட்க.

"அப்போ ராத்திரி பண்ணா ஓகேவா உனக்கு..."என அவன் கேட்க.

"இந்தர்..." என அழைத்தவளை "ஏய்... பேர் சொல்லி கூப்பிட்ட பல்ல உடைச்சிடுவேன்..." என்றான் அவன்.

"அப்போ மாமான்னு கூப்பிட்டா ஓகேவா...?" என அவள் கேட்க.

"வேணாம்டி என் கோபத்தை அதிகப்படுத்தாத.. அமைதியா படுத்தா...அஞ்சு நிமிஷத்துல விட்டுருவேன்..." என்றான்.

அவளோ அவனிடம் இருந்து விலக போராடியபடி "வேணாம் இந்தர் உன்மேல நான் நல்ல அபிப்பிராயம் வச்சிருக்கேன்... அத கெடுத்துக்காத..." என்றாள்.

"உன் நல்ல அபிப்ராயம் யாருக்கு வேணும்..." என்றவன்  வேகமாக அவளது வலப்பக்க தோளின்மேல் இருத்த பிளவுஸின் பக்கத்தை பிடித்து வேகமாக இழுக்க அதற்குமேல் முடியாதவள் தன் ஒட்டு மொத்த பலத்தையும் கொண்டு அவனை பிடித்து தள்ளினாள்.

அவன் இழுத்த வேகத்தில் அவளது பிரவுன் கலர் பிளவுஸும் கிழிந்து தொங்கியது.

அவனின் கண்கள் அவளது வலப்பக்க மார்பில் இருந்தவற்றை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருக்க வேறுபக்கம் எங்கும் அவனது பார்வை செல்லவில்லை.

அவளோ அவனது செயலில் அதிர்ந்தவள் அவளது தாவணியை இழுத்து மூடிக்கொள்ள மீண்டும் அவன் அவளது தாவணியை விலக்கிவிட்டு அங்கு இருந்த தன் பேரை ஆசையாக தடவினான்.

அவனிடம் மாட்டிக் கொண்டோம் என அவள் திருட்டு முழி முழிக்க அவளை ஒரு முறை ஏறிட்டு பார்த்தவன் அவள் கண்களை சந்தித்தான்.

அவள் கண்கள் அழுது அழுது சிவப்பேறி இருக்க அவளும் அவனைத்தான் கண்டாள்.

என்ன நினைத்தானோ அவளின் வலப்பக்க மார்பின் மேல் இருக்கும் தன் பெயரின் மேல் தன் உதடுகளை வைத்து அழுத்த மெய்சிலிர்த்து கண்களை மூடினாள் அருவி.

வீடு வந்து இறங்கியதும் வண்டியை நிறுத்திவிட்டு அவன் அருகில் இருப்பவர்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் வேகமாக சமையல் நடக்குமெ இடத்திற்கு ஓடினான் வாசுதேவன்.

அவன் செயல் புரியாத மற்றவர்களும் என்ன ஆச்சு இவனுக்கு என நினைத்துக் கொண்டு இருக்க சுந்தர்தான் "நான் போய் என்னென்னு பாக்கறேன்மா.." என்றபடி வாசு சென்ற திசையில் ஓடினான்.

அங்கு வேப்பமரத்தடியில் சக்கரவர்த்தி மற்றும் தர்மன் இருந்தனர்.

சக்கரவர்த்தியின் கண்களில் கோபம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டு இருந்தார்.

தர்மன் அவருக்கு அருகில் அமர்ந்து இருக்க அவரும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தார்.

"அப்பா..." என்றபடி அவர்களுக்கு அருகில் சென்றவனை பார்த்து முறைத்த பெரியவர்கள் இருவரும் எழுந்து அவனை பார்க்க தர்மன்தான் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்....



Leave a comment


Comments


Related Post