இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 05-05-2024

Total Views: 19263

ப்ரதீப் அக்சயா திருமணம் அக்சாயாவின் பரீட்சை முடிந்த பிறகு தேதி முடிவு செய்யப் பட்டிருக்க அவளோ படிப்பில் பிஸியாக புதிதாக தான் பங்குதாரர் ஆன தொழிலில் ப்ரதீப் கவனத்தை செலுத்த இவர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் முழு மூச்சாக திருமண வேலைகளில் ஈடுபட்டனர். 


அதிலும் குறிப்பாக பத்மாவதி தன் மருமகளை சீக்கிரம் தன்னோடு கூட்டிச் செல்லும் பரபரப்பில் அவளின் விருப்பங்கள் அறிந்து அதன் படி அவரே அக்சயாவிற்கு ஆடைகள் தேர்வு செய்ய அபிலாஷா மணமகளின் அண்ணி மற்றும் மணமகனின் தோழி என்று கூடுதல் பொறுப்போடு அபிநந்தன் மோகன்ராமோடு சேர்ந்து பத்திரிகை டிசைன் முதல் மண்டபம் சாப்பாடு வரை அனைத்தும் இழுத்துப் போட்டு கவனித்தாள்.


அதனால் சரிவர அலுவலகம் செல்ல முடியாது போக அவளுக்கும் சேர்த்து அலுவல்களை பார்த்துக் கொண்டான் ப்ரதீப். அதுவும் ஒரு வகையில் நல்லதாக போனது. ப்ரதீப்பிடம் வாலாட்ட முகில் ரொம்பவே தயங்குவான். ஏனென்றால் அவனிடம் இவன் வாங்கியது அப்படி..‌ அதனால் அபிலாஷாவை எந்த தொந்தரவும் செய்ய முடியாமல் அவன் வஞ்சத்தை நெஞ்சில் சேர்த்து வைத்து தனக்கான நாளுக்காக காத்திருந்தான் முகில்.


என்னதான் கல்யாண வேலைகளில் ஈடுபடாமல் போனாலும் காலை மாலை என ப்ரதீப் அக்சயாவிற்கு அழைத்து பேசிவிடுவான். மனதளவில் இருவருமே நெருங்கி இருந்தனர் இத்தனை நாட்களில்..


நேரம் கிடைக்கும் போது எல்லாம் சந்தியாவும் நந்தன் வீட்டிற்கு வந்து உதவிடுவாள். அதன் மூலம் அபிலாஷா மட்டுமின்றி அவளின் தோழிகள் பவி ஜெனி கீர்த்தனா கூட இவளுக்கு நண்பிகள் ஆகியிருந்தனர்.


ஆனால் முதல் முறை வார இறுதி என்று சந்தியா வந்திருக்க “என்ன சாப்பிடுறீங்க சந்தியா?” என்று அபிலாஷா கேட்க


“இட்ஸ் ஓகே வர வழியில தான் சாப்பிட்டு வந்தேன் கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடுறேன் லாஷா..” என்று சந்தியா எதார்த்தமாக சொல்ல


“என்னை லாஷா னு கூப்பிடாதீங்க சந்தியா” என்று அபிலாஷா பட்டென்று சொல்ல சந்தியாவோடு அக்சயா பார்வதியுமே அதிர்ந்து பார்க்க


“அது வந்து… சாரி சந்தியா தப்பா எடுத்துக்காதீங்க இதுவரை நந்து மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடுவாரு மத்த எல்லாரும் அபினு தான் கூப்பிடுவாங்க… லாஷா நந்துக்கு மட்டுமான ஸ்பெஷல் நேம் னு மனசுல பதிஞ்சிடுச்சு அதான்…” என்று அவள் இழுக்க லேசாக புன்னகை புரிந்த சந்தியா


“இட்ஸ் ஓகே அபி… எனக்கு புரியுது. பட் அபியை… ஐ மீன் அபிநந்தனை அபினு கூப்பிட்டு பழகிட்டதால சட்டுனு லாஷானு வந்திடுச்சு… இனி சேஞ்ச் பண்ணிக்கிறேன்.” என்று சந்தியா சொல்ல


“நீங்க எதுவும் வருத்தப்படலையே?” அபி கேட்க


“இந்த நீங்க வாங்க போங்க தான் கொஞ்சம் வயசாயிடுச்சோ னு வருத்தப்பட வைக்குது… மத்தபடி எதுவும் இல்லை அபி…” என்று இயல்பாக சந்தியா சொல்ல சிரித்தனர் மற்ற மூவரும்.


அதிலிருந்து சந்தியா அபிநந்தனுக்கு மட்டும் அல்ல அபிலாஷாவிற்கும் நல்ல தோழியாக மாறி இருக்க கல்யாண வேலைகளில் அனைத்தையும் பகிர்ந்து அவளையும் உள்ளே இழுத்துக் கொண்டாள் அபிலாஷா.


இப்படியாக இன்னும் மூன்று நாட்களில் திருமணம்… இன்று காலை மூன்றாம் நாள் நலங்கு வைத்துவிட்டு மாலை பெண்ணிற்கு மெகந்தி வைக்கும் வைபவம் ஏற்பாடு செய்ய பட்டிருக்க காலையில் தங்கள் வீட்டில் நலங்கு வைத்து விட்டு நாளை ரிஷப்ஷனுக்கான வேலையை கவனித்து விட்டு மோகன்ராம் பத்மாவதி தம்பதியர் அபிநந்தன் வீட்டிற்கு கிளம்ப


குழந்தை போல ‘நானும் வருவேன்’ என்று அடம்பிடித்த ப்ரதீப்பை சமாளிக்க அபிலாஷாவையே நாடினார் மோகன்ராம். 


“அபிஷா அக்சயாவை பார்க்கனும் போல இருக்கு ப்ளீஸ்டி ஹெல்ப் பண்ணு…” என்று அவளிடமும் கெஞ்ச


“ஓகே டா நீ தாராளமா வரலாம்..” என்று அபி இலகுவாக சொல்ல


“ஹேய் அபி..” என்று ப்ரதீப் உற்சாகமாக விளிக்க 


“பட் ஒரு கண்டிஷன்… இப்போ வந்து அக்சயாவை பார்த்திட்டு போ… பட், மேரேஜ் டேட் இன்னும் கொஞ்ச நாள் தள்ளி வைச்சிடுவோம் அது ஓகே வா?” என்று அவள் சாதாரணமாக கேட்டிருக்க


“எதே? கல்யாணத்தை தள்ளி வைப்பியா… உண்மையாவே என் ஃப்ரண்டா டி நீ?” என்று அலுத்துக் கொண்டான் ப்ரதீப்.


இவர்கள் உரையாடலை இதுவரை இருந்து கேட்ட பத்மாவதி மோகன்ராம் இருவரும் “உன்னை அடக்க அபி பொண்ணு தான் சரி…” என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை கவனிக்க சென்றனர்.


“இப்போ என்ன சொல்றீங்க மாப்ளை சார்?” என்று நக்கலாக அபிலாஷா கேட்க


“ம்ம்… வேற வழி… ஆனா பாருங்க நீங்க எல்லாரும் பண்ற கொடுமைக்கு கல்யாணம் ஆன அடுத்த நிமிஷம் என் பொண்டாட்டியை கடத்திட்டு ஹனிமூன் போகலை…” என்று சவால் விடுவது போல பேச


“அதெல்லாம் அப்புறம் பார்ப்போம் அதுக்கு முன்னாடி உன் கல்யாணம் நடக்கனும் அந்த வேலையை பார்க்க விடு…” என்று சொல்லி ஃபோனை வைக்க இதுவரை தன் நண்பனை மிரட்டி கலாய்த்துக் கொண்டு இருந்த தன் மனைவியை ரசித்துக் கொண்டு இருந்தான் அபிநந்தன்.


“என்ன நந்தூ?” அவனின் பார்வையில் வெட்கி சிவந்து கேட்க அவனோ “ஒன்னும் இல்ல வழக்கமா மாப்பிள்ளை மாப்பிள்ளை குடும்பத்தை பார்த்து பொண்ணு வீட்ல பயப்படுவாங்க ஆனா இங்கே உன்னை பார்த்து மாப்பிள்ளை அந்த அலறு அலறிட்டு இருக்காரு…” அபிநந்தன் சொல்ல


“பின்ன அபிலாஷான்னா சும்மாவா?” என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள 


“ம்ம் ம்ம் பெரிய ஆளுதான்…” அவனும் ஆமோதிக்க பார்வதி அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே ஓடினாள்.


மாலை பெண் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அவர்கள் முறை என்று மருதாணி கொண்டு வர மணமகள் மட்டும் இல்லாமல் அவளின் உறவினர்கள் உடன் இருக்கும் நண்பிகள் என்று அனைவருக்கும் கொண்டு வந்தனர் மோகன்ராம் பத்மாவதி இருவரும். அத்தோடு அழகுக்கலை நிபுணர்கள் வந்து மெகந்தி போட்டு விட பெண்கள் ஆளுக்கொருவராக போட்டுக் கொண்டனர்.


மறுநாள் எளிமையாக சில உறவுகள் நெருங்கிய நண்பர்கள் என்று அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிய மறுநாள் திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. 


முதலில் மணமகள் வீட்டிற்கு வந்து பால் பழம் சாப்பிட்டு விட்டு புகுந்த வீடு அனுப்பும் நிகழ்வு… இத்தனை நாட்கள் கைக்குள்ளேயே வைத்து வளர்த்த மகள் இன்று இன்னொரு வீடு செல்ல எவ்வளவு முயன்றும் பார்வதி அடக்க முடியாமல் இரண்டு துளி நீரை விட்டிட அவரை சமாதானம் செய்ய வேண்டிய அபிநந்தனும் இத்தனை நாட்கள் தந்தையின் பொறுப்பை ஏற்று வளர்ந்தவன் அவனுக்கும் அவளின் பிரிவு சோகம் தர கண்கள் கலங்கினான்.


“அட என்ன நந்தன் இது… அம்மாவை நீங்க அமைதி படுத்துவீங்க னு பார்த்தா நீங்களும் இப்படி கண் கலங்கி நிக்கிறீங்க? அச்சு எங்க போகப்போறா? இங்க பக்கத்துல தான் இருப்பா ப்ரதீப் என்ன நம்மளை பார்க்க விடாமலா பண்ணிடுவான்… அம்மா கண்ணை துடைங்க அச்சு ஃபீல் பண்ணுவா ல்ல…” என்று பேச இன்னும் தெளிந்தார் இல்லை பார்வதி.


“என்னம்மா நாளையில இருந்து உன் மருமகளை புகழ்ந்து பேச ஆள் கிடைக்காது னு தானே அழுவுற.. பாரு என் மாமியார் உனக்கு ஃபோன் பண்ணி என்னை புகழ்வாங்கு…” வந்த கண்ணீரை உள்ளிழுத்த படியே தாயை வம்புக்கு இழுத்தாள் அக்சயா.


“ச்சூ போடி… பாரு நந்தா எப்படி பேசுறான்னு…” பார்வதி கண்ணீரை துடைத்து கொள்ள நந்தனும் கண்ணீரை விழுங்கி சிரிக்க முயன்றான்.


“இதோ பாருங்க அத்தை… நான் என்ன அக்சயாவை வெளியூர்களுக்கு எதுவுமா கூட்டிட்டு போய்ட போறேன்… இங்கிருந்து ஒரு இருபது நிமிஷம் இருக்குமா?? தினமும் நீங்க அங்க வாங்க இல்லைன்னா நாங்க இங்க வரோம்… ஏன் அத்தை இப்படி அழறீங்க அபிநந்தன் நீங்களும் இப்படி ஃபீல் பண்ணலாமா?” என்று ப்ரதீப் வந்து பேச


“ஐயோ மாப்பிளை… தப்பா எதுவும் நினைச்சு அழலை… என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு அதை கூட இருந்து பார்க்க அந்த மனுஷனுக்கு கொடுத்து வைக்கலையே னு தான் ஒரு வருத்தம் அவ்வளவு தான்…” என்று பார்வதி கமறிய குரலில் பேச


“வருந்தாதீங்க பார்வதி..” என்று ஆறுதலாக கை பிடித்தார் பத்மாவதி.


“சின்ன பொண்ணு பார்த்துக்கோங்க சம்மந்தி…” தாயாக தன் கடமை என்று பார்வதி சொல்ல


“அதெல்லாம் சொல்லனுமா சம்பந்தி.. அக்சயா இனி என் பொண்ணு… நீங்க அபியை பார்த்துக்கிற அளவுக்கு இல்லாட்டியும் நான் என் மருமகளை.. இல்ல மகளை நல்லா பார்த்துப்பேன்.” என்று பத்மாவதி சொல்லியவர் “நல்ல நேரத்தோட கிளம்பலாம்.” என்று மகனையும் மருமகளையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.



  • தொடரும்…




Leave a comment


Comments


Related Post