இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-31 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 06-05-2024

Total Views: 29283

அத்தியாயம்-31


“முடியாது.. இது நடக்காது” என்று அக்ஷை ஆத்திரத்துடன் கண்கள் சிவக்க கத்த, 

“நான் உங்க கிட்ட பர்மிஷன் கேட்கலை” என்று அசட்டையாக பதில் கொடுத்தான் அர்ஷித். 

“எப்படி பேசுறான் பாருடி உன் புள்ளை? அந்த கொலைகார குடும்பத்துலருத்து இந்த குடும்பத்துக்கு மருமகள் எடுக்குறதா? இது எந்த ஜென்மத்துலயும் நடக்கவே நடக்காது. இந்த கல்யாணம் நான் செத்தா தான் நடக்கும்” என்று கண்களை மறைத்த கோபத்துடன் அக்ஷை கத்த,

 “அதே கொலைகார குடும்பத்தை சேர்ந்த பொண்ணு தானே மாமா நானும்?” என்றபடி அவ்வீட்டினுள் நுழைந்தாள், மதுமஹதி.

மதுமஹதியைக் கண்டதும் முடிந்தமட்டும் தன் கோபத்தை அவர் கட்டுப்படுத்த முயற்சித்தும் அது முடியாமல் போனது. எங்கே மீண்டும் தனது கோபத்தால் அவளை மருள வைத்திடுவோமோ என்று அந்த மனிதர் பயமும் படபடப்பும் கலந்து தவித்த போதும், கோபத்தை கட்டுப்படுத்தும் யுக்தியை அவரால் கையாள இயலவில்லை.

“மதுமா.. நீ..நீ இதுல தலையிடாத” என்று அவர் உறுமலாய் கூற, அவரது கோபத்தில் பயம் எழுந்த போதும் 

‘மீண்டும் அஞ்சி மயங்கி சரியா நான் இன்னும் அதே ஐந்து வயது மதுவல்லவே!’ என்று நினைத்துக் கொண்டவள்,

 “என் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை மாமா” என்றாள்.

“மது.. நீ என் தங்கச்சி பொண்ணு.. என் தங்கையோட மறுபிறவிடா..” என்று அவர் கூற,

 “நான் உங்க தங்கையோட பொண்ணு தான் மாமா. அதுல எந்த மாற்று கருத்தும் இல்லவே இல்லை. ஆனா இதே நான்.. உங்க தங்கைக்கு மட்டுமில்லை.. தி யுவனா இன்டஸ்ட்ரீஸோட தலைமை பங்குலயும் கிருஷ்ணா குடும்பத்தின் செல்லப்பிள்ளையாவும் இருந்த யவீந்தரோட பொண்ணும் தான்” என்று கர்வம் மேலிட கூறினாள்.

தன் அத்தை மகளை மெச்சும் பார்வை பார்த்த அர்ஷித் பயத்துடன் நின்றிருக்கும் தன் அன்னையைக் கண்டு கண்கள் மூடித் திறந்து சாந்தப்படுத்த, 

“உங்க தங்கைய இழந்துட்டதால நீங்க இவ்வளவு தவிக்குறீங்களே.. நான் இழந்தது என் அம்மா அப்பா ரெண்டு பேரையும், எனக்கு வேதனை இருக்காதா மாமா? உங்க வேதனை உங்க கண்ணை மறைக்குது மாமா. யாரோ எங்கயோ பண்ண தப்புக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்று மது மீண்டும் தன் கேள்வியை எழுப்பினாள்.

“மதுமா.. போதும்..” என்று அவர் கண்களை அழுந்த மூடி கர்ஜிக்க,

“நான் பேசணும் மாமா. எனக்கு உங்க கிட்ட இதை பேசியே ஆகணும். நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுகிட்டே ஆகணும். நீங்க கொலைகார குடும்பம்னு அடைமொழி வச்சுக்கூப்பிடுறது அவங்களை அவமானம் செய்யவோ, எதிர்க்கவோ தான்னா.. ஐ ஆம் சாரி.. என்னையும் சேர்த்து தான் நீங்க அப்படி சொல்றீங்க” என்றாள்.

“மது ஸ்டாப் இட்” என்று அக்ஷை கத்த, 

“அது தான் உண்மை மாமா. இதுவரை நான் எத்தனை முறை அத்தையையும் அர்ஷித் மாமாவையும் தைரியமா வீட்டுக்கு வாங்கனு கூப்பிட்டிருப்பேன் தெரியுமா? ஆனா ஒருமுறை கூட அங்கருந்து யாரையுமே நான் கூப்பிட்டதில்லை. அமேரிக்காவுக்கு யஷ்வா அண்ணா வந்தப்போ யாரோ போல ஹோட்டல்ல தங்கினது இ..இங்க அவ்வளவு வலிச்சது” என்று ஒற்றை விரல் கொண்டு தன் நெஞ்சை குத்தியவள்,

 “ஆனா கூப்பிட முடியலை. என்னால வீணா பிரச்சினை வரக்கூடாதுனு விட்டுட்டேன்” என்றாள்.

அக்ஷை அவளை தாங்கமாட்டாது ஒரு பார்வை பார்க்க, 

“எத்தனை இரவுகள் என்னால தான் இந்த ரெண்டு குடும்பமும் பிரிஞ்சிருக்கோனு அழுதுருக்கேன் தெரியுமா மாமா?” என்று கேட்டாள்.

அதில் அவர் பெண்ணவளை ஸ்தம்பிப்பாய் ஒரு பார்வை பார்க்க, 

“என்னிக்காவது உங்க கோபம் தனிஞ்சு.. இந்த ரெண்டு குடும்பமும் சேர்ந்துடாதானு நான் யோசிக்காத நாளில்லை மாமா. வாய்விட்டு அத்தைகிட்ட புலம்ப கூட செஞ்சிருக்கேன் மாமா. எனக்கு புரியுது மாமா.. நீங்க அம்மா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கனு புரியுது. இந்த வீட்டில் ஒரு செங்கலை கூட நகர்த்தாம இதை இவ்வளவு பராமரிச்சு நீங்க வைச்சுக்கவும் இந்த வீட்டுல எங்கம்மாவோட காலடிலருந்து சுவாசம் வரை இருப்பது தான் காரணம். இதை நீங்க வாய்விட்டு சொல்லி பல முறை கேட்டிருக்கேன். ஆனா.. அந்த அலாதியான பாசத்துக்கு முழுசா நீங்க மரியாதை தரலையே மாமா..” என்றாள்.

அவள் கூறியது போல் அவர் யசோதா மீது தன் உயிரையே வைத்திருப்பவர் தான். யசோதாவுக்கும் அவருக்கும் அதிக வயது வித்தியாசம். கிட்டதட்ட தன் மகள் போல அவரும் அவர் மனைவியும் தான் அவரை வளர்த்தது. அர்ச்சனாவிற்குமே யசோதா என்றால் உயிர்.

அவர்கள் அறையில் சுற்றிலும் அர்ச்சனா, அக்ஷை மற்றும் யசோதா சேர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் நிறைந்திருக்கும்.

 'இங்க தான் பாப்பா எப்போ பாரு ஒளிஞ்சு விளையாடுவா, பாப்பாவோட டென்த் பர்த்டேக்கு வாங்கி தந்த சைக்கிள் இது' என்று அவர் அர்ச்சனாவிடம் பேசுவதை பல முறை மது கேட்டும் இருக்கின்றாள்.

அவ்வளவு பாசம் கொண்டவரை அந்த பாசத்திற்கு மரியாதை தரவில்லை என்று அவள் கூறுவதில் அக்ஷை அதிர்ந்து தான் போனார்.

“அம்மா உங்க மேல அவ்வளவு பாசம் வச்சு நீங்க பார்த்து தரும் மாப்பிளையை தான் காதலிச்சு அழகா வாழணும்னு ஆசைப்பட்டதா நீங்க தானே சொல்லிருக்கீங்க. எங்கம்மா எங்கப்பாவை எவ்வளவு காதலிச்சாங்கனு தெரியும் தானே மாமா? எனக்கு தெரியும்..

அவங்க அப்பாவோட எடுத்துகிட்ட ஒவ்வொரு ஃபோட்டலயும் அவங்க கண்ணுல இருக்குற அந்த காதலும் சந்தோஷமும் சொல்லும். அவங்க எழுதின டைரில அப்பாவுக்கு அவங்க எழுதின காதல் கவிதைகள் சொல்லும்.. கிருஷ்ணா குடும்பத்தின் ஒவ்வொரு துரும்பையும் அவங்க எவ்வளவு ஆழமா ஏற்றுக்கிட்டாங்கனு அதுல எழுத்தா வடிச்சிருக்காங்க. அப்படி அவங்க நேசிச்ச ஒன்றை நீங்க துச்சமா நினைக்குறது மட்டும் அவங்களை வருத்தாதா மாமா?” என்றாள்.

அக்ஷை அவள் பேச பேச விக்கித்து நிற்க, அர்ஷித் மார்பிற்கு குறுக்கே தன் கரங்களைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தான்.

“இப்பவும் நான் உங்களையோ உங்க கருத்தையோ மாற்ற சொல்லி கேட்கல மாமா.. உங்களை சுற்றியிருக்குறவங்களையும் உங்க கருத்துக்குள்ள அடக்கப் பார்க்காதீங்கனு தான் கேட்குறேன்” என்ற அவள் கூற, பெரியவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

நிச்சயம் அவரால் தற்போதும் அந்த குடும்பத்தை ஏற்க இயலாது. ஆயிற்று.. பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாயிற்று. திடீரென தன் கருத்தை மாற்ற அவரால் எங்கனம் இயலும்!?

பொத்தென நீள்விருக்கையில் அமர்ந்தவர் காலடியில் வந்து அமர்ந்து அவர் கரத்தை பற்றியவள்,

“யாழிக்கா ரொம்ப நல்லவங்க மாமா.. அக்கா அழகு, அறிவு, ஆளுமைனு எல்லாத்துலயும் உயர்ந்தவங்க. அ..அர்ஷித் மாமாக்கு சரியான ஆள் அக்கா தான். அ..அதுமட்டுமில்ல.. மாமா மேல அக்கா உயிரே வச்சிருக்காங்க.. ஆனாலும் அவங்க காதலை சொல்ல கூட அவங்க யோசிச்சதுக்கு ரெண்டு காரணம் நீங்களும் யஷ்வா அண்ணாவும் தான்.

அவங்க சுயமரியாதையை ரொம்ப கான்ஷியஸா கடைபிடிக்கும் ஆள். அஃப்கோர்ஸ்.. அர்ஷித் மாமாக்கு வரப்போறவங்க அப்படி தானே இருக்கணும்?” என்றபடி புறங்கையால் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தொடர்ந்தாள்.

“ப்ளீஸ் மாமா.. உங்களால ஏத்துக்க முடியலைனாலும் தவிர்க்கவோ தடுக்கவோ செய்யாம இருக்கலாமே? ப்ளீஸ்.. எ..எனக்கு நீங்க எல்லாருமே வேணும் மாமா.. எல்லாரும் ஒன்னா இருக்கனும்” என்று அவரது ஒற்றை பரந்த உள்ளங்கையில் தன் மொத்த முகமும் புதைத்து கண்ணீர் சிந்தினாள்.

அழுகையில் உடல் குலுங்க அவரது சுண்டு விரலை ஒரு கரத்திலும், கட்டை விரலை ஒரு கரத்திலும் பற்றிக் கொண்டு உள்ளங்கையில் முகம் புதைத்து அழுபவள் அச்சு அசல் யசோதாவின் நகலாகவே அவர் கண்களுக்குத் தெரிந்தாள்.

மது அழ அழ அர்ஷித்தின் முகமும் உடலும் இறுக, அர்ச்சனா கண்ணீரோடு தன்னவரை கெஞ்சலாய் பார்த்தார்‌.

தன் கண்களை அழுந்த மூடி பெரியவர் ஒரு பெருமூச்சு விட்டு தன் மற்றைய கரத்தை அவள் தலையில் வைக்க, மெல்ல நிமிர்ந்து “ப்ளீஸ் மாமா” என்றாள்.

பின்னிருந்து அவள் புஜங்களைப் பற்றி தூக்கிய அர்ஷித், “மது..” என்க, அர்ஷித்தை அணைத்துக் கொண்டு 

“உங்களுக்காகலாம் பேசலை மாமா.. எனக்காக தான் பேசுறேன்” என்றாள்.

லேசாய் சிரித்து அவள் தலையை வருடிக் கொடுத்தவன்,

“ஜஸ்ட் காம் டௌன் டா” என்க, லேசான விசும்பலுடன் அக்ஷையை திரும்பிப் பார்த்தாள்.

“நான் வர்றதுக்குள்ள சம்பவம் முடிஞ்சுடுச்சு போலயே” என்ற குரலில் மது திடுக்கிட்டு திரும்ப, அர்ஷித் ஒரு மந்தகாச புன்னகையுடன் திரும்பினான்.

தன் அழகிய புன்னகையுடன் கரத்தை மார்பிற்கு குறுக்கே கட்டியபடி தன் மெல்லிய பாதங்களை அந்த பளிங்கு தரையில் மென்மையாய் பதித்து நடையிட்டபடி வந்த யாழினி, 

“ம்ஹும் மதுமா.. தட்ஸ் மை ப்ளேஸ்” என்று இரு புருவங்களையும் உயர்த்தி தலையை இடவலமாய் ஆட்டி கூற, அக்காவை செல்லமாய் முறைத்தவள், “மாமா..” என்று சிணுங்கலுடன் அர்ஷித்தை பார்த்தாள்.

“அவ சும்மா சொல்றாடா பேபி” என்று அவன் மதுவின் பின்னந்தலையை வருட,

 “நோ.. ஐ அம் சீரியஸ்” என்றவள் அக்ஷையைக் கண்டாள். 

பார்வையில் அதிருப்தியும் கோபமும் கொப்பளித்தபோதும் அவர் உதடுகள் இறுக பூட்டியிருந்தன.

“மாமா..” என்றவள் அழைக்க,

“யாருக்கு யாரு..” என்றபடி எழுந்தவர் மதுவைக் கண்டு தன் கண்களை இறுக மூடிக் கொண்டார். 

“எனக்கு தான் நீங்க மாமா. மதுக்கு நீங்க மாமான்னா.. அவ அக்காவான எனக்கும் நீங்க மாமா தான்” என்று அழுத்தமாய் கூறிய யாழினி, அர்ச்சனாவை ஏறிட்டாள்.

அவர் பெண்ணவளைக் கண்டு மெலிதான புன்னகையை சிந்த, இவ்வீட்டில் தன்னை ஏற்க ஒரு ஜீவன் உள்ளது என்ற நம்பிக்கை உண்டானது யாழினிக்கு.

“நான் பேசணும்னு வந்ததை என் தங்கை பேசிட்டா போல. எனக்கும் உங்களுக்கும் சுத்தமா ஆகாது. நான் சுயமரியாதையை ரொம்ப கடைப்பிடிக்க நினைக்கும் ஆள். நீங்க அவமானப்படுத்தி பேசினா கேட்டுட்டு இல்லாம பதில் பேசி பிரச்சினையும் தேவையில்லாத மன சங்கடங்களும் வரும்னு தான் இந்த உறவை ஒதுக்கினேன்” என்றவள் அர்ஷித்தை பார்த்து, “ஆனா முடியலை..” என்றாள்.

அதில் அர்ஷித் இதழ்கள் கர்வமாய் வளைய, தானும் புன்னகைத்தவள், 

“இதுவரை நடந்தது எதுவோ.. அதை மறக்க முடியாதுனாலும் மறுத்துட்டு வர நான் தயார் மாமா. என்னை மருமகளா ஏற்க முடியலைனாலும் உங்க மகன் கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணு என்றளவு நீங்க ஏற்றாலே போதுமானது. என்னோட நீங்க சந்தோஷமா சிரிச்சு பேசணும்னு உங்களை கேட்கலை.. ஆனா என்னை வருத்தபட வைக்கணும்னு நீங்க வார்த்தைகளை வாளா பயன்படுத்தாம இருக்கணும். அப்பதான் இந்த வீட்டிலிருக்கும் மத்த ரெண்டுபேரும் நிம்மதியா இருக்க முடியும்” என்று அழுத்தமாய் கூறிவிட்டு, ஒரு குறும்பு சிரிப்புடன், 

“அப்றம் உங்க வைஃபும் என் ஹஸ்பென்டும் தான் நமக்கு டெய்லி பஞ்சாயத்து பண்ணனும்” என்றாள்.

அதில் அர்ஷித் மற்றும் அர்ச்சனாவின் இதழ்களிலும் குறுநகை தவழ, அக்ஷை கோபமாய் எழுந்து தன்னறைக்கு சென்று கதவை படாரென சாற்றினார்.

“பாவம் மாமா.. யசோம்மா வாழ்ந்த வீடு.. கதவை உடைச்சுடாதீங்க” என்று நின்ற இடத்திலிருந்தே கத்தியவள் சிரித்தபடி திரும்பி அர்ச்சனாவை நோக்க, மென்மையான புன்னிகையுடன், தன் ஆள்காட்டி விரலால் அவளையும் அர்ஷித்தையும் சுட்டிக்காட்டி, ‘சூப்பர்’ என்பது போல் ஒற்றை கண் சுருக்கி அபிநயம் காட்டினார்.

அதில் அத்தனை நேரமிருந்த குறும்பு மறைந்து நாணம் குடிகொள்ள அர்ஷித் புறம் அவள் திரும்ப, தன் இடையில் கைகள் ஊன்றி கால்கள் அகட்டி நின்ற மது,

 “ஹலோ யாழிக்கா..” என்க, 

“அட குட்டிமா.. நம்ம பஞ்சாயத்த வீட்டுல வச்சு பார்த்துப்போமா?” என்று அர்ஷித்தை பார்த்தபடியே மதுவுக்கு பதில் கூறினாள்.

“ஹ்ம்.. எல்லாம் என் நேரம்.. அர்ஷித் மாமாவ விட கொஞ்சம் குட்டையா இருக்குறதால மறைக்க முடியலை” என்றவளை கிணற்றுக்குள் எட்டிப் பார்ப்பதைப் போல் பார்த்த அர்ஷித் “கொஞ்சம்?” என்று அபிநயம் பிடித்து காட்ட,

 “அஃப்கோர்ஸ் மாமா” என்றவள் கூறியதில் யாவரும் சிரித்தனர். சில நிமிடங்களில் யாழியும் மதுவும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு தங்கள் வீட்டை அடைய,

 “எங்கடி போனீங்க ரெண்டு பேரும் காலைலயே?” என்று யமுனா கேட்டார்.

மகள்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருக்க, தங்கைகளை அழுத்தமாய் பார்த்த யஷ்வந்த், 

“டூ போல்ட் (too bold)” என்று நக்கலாய் கூறி லேசாய் சிரித்துக் கொண்டான்.

“அ..அது யமு ம்மா.. ய..யாழிக்கா.. யாழிக்காதான் கூட்டிட்டு போனாங்க.. நீங்க கேளுங்க நான் ஃப்ரஷ்ஷாகிட்டு வரேன்” என்று மது ஒரே ஓட்டமாய் ஓடிவிட, ‘அடிப்பாவி’ என்று தங்கையைப் பார்த்த யாழினி யமுனாவின் குரல் செருமலில் திரும்பினாள்.

“ம்ம்? எங்க போனீங்க? அக்கா தங்கச்சி முழியே சரியில்லையே?” என்று யமுனா வினவ, 

“ப்ச்.. மம்மி.. உனக்காக தான் மம்மி போனேன்” என்று அன்னையின் கன்னம் கிள்ளி கூறினாள்.

“எனக்காகவா?” என்று யமுனா கேட்க, 

“ஆமா ம்மா.. உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலைய மிச்சம் பண்ணத்தான் போயிருந்தேன்.. கூட தொணைக்கு என் தங்கச்சி” என்றவள் “என்னது?” என்று அதிர்ந்த அன்னையைக் கண்டு விருட்டென்று மாடிக்கு ஓடியே விட, யஷ்வந்த் வாய்விட்டு சிரித்தான்.

யஷ்வந்தின் இந்த வெடி சிரிப்பை எட்டாவது அதிசயமாய் பார்த்தபடி அர்ஜுன் உள்ளே வர, அர்ஜுனைக் கண்டு தன் அதிர்ச்சி விலகிய யமுனா, 

“வ..வாப்பா.. நல்லாயிருக்கியா? கை கட்டு எடுத்தாச்சா?” என்று கேட்டார்.

மெல்ல புன்னகைத்தவன், “எடுத்தாச்சு (அ)த்தை” என்க,

 “அஞ்சு இன்னும் கீழ வரலை.. ரெடியாகுறா போல. நீ உக்காருப்பா” என்றவர் அவனுக்கு பழச்சாறை கொடுத்துவிட்டுச் சென்றார்‌.

அதை வாங்கி வைத்தவன் தனது அலைபேசியில் வரைபடம் ஒன்று உருவாக்கிக் கொண்டிருக்க, 

“கூலிங் போயிடபோகுது அர்ஜுன்” என்ற அடர்ந்த குரல் அவனை விறைப்புறச் செய்தது.

அதில் அதிர்ந்து நிமிர்ந்தவன் முன் மென்மையான புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்த யஷ்வந்த், 

“உன்னதான்டா..” என்க, 

“அ..ஆங்?” என்று கனவிலிருந்து விழித்தவனாய் பார்த்தான்.

அதில் தன் தலையை இடவலமாய் ஆட்டி சிரித்தவன், குவளையை அவன் முன் எடுத்து நீட்ட, பதட்டமாய் அதை வாங்கியவன்,

 “த்..த..தேங்ஸ்..” என்று இழுக்க, 

“மாம்ஸ்னு கூட கூப்பிடலாம்” என்று அசட்டையாய் கூறி விட்டு எழுந்தான்.

அர்ஜுன் விழிகள் விரிய அதிசயமாய் யஷ்வந்தை நோக்க, படிகளிலிருந்து இறங்கி வந்த மனையாளை வழிமறித்து நின்றவன் அவளை கள்ளப் பார்வை பார்த்தான்.

கூடத்தில் யாருமில்லை என்று நினைத்த பாவைக்கு தன் முன் நிற்பவனின் பரந்த தேகம் அர்ஜுனை மறைத்திருப்பது தெரியவில்லை.

 “மா..மாமா..” என்று எப்போதும் குழையும் அவளது குரலில் மயங்கி கண்கள் மூடி திறந்தவன், அவள் உயரத்திற்கு குனிந்து,

 “ஏ கோழிக்குஞ்சு.. காலைல குட் மார்னிங்கே சொல்லலடி..” என்றான்.

“மாமா.. ஹால்..” என்று அவள் காற்றாகிய குரலில் கூற, 

“சோ வாட்? நான் குட் மார்னிங் தானே கேட்டேன்?” என்றான்.

“ப்ச்..” என்றவள் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு “குட் மார்னிங்” என்றுவிட்டு செல்ல, அர்ஜுன் ‘பே’ என்ற முழியுடன் அமர்ந்திருந்தான்.

'அடக்கடவுளே..’ என்றெண்ணியவள் யஷ்வந்தை திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, ஒற்றைகண் சிமிட்டி பறக்கும் முத்தம் ஒன்றை இதழ் குவித்து ஊதிவிட்டு படிகளில் பாய்ந்தேறி சென்றான்.

முகம் முழுதும் சூடாகி சிவந்திட்ட நிலையில் அவள் அப்படியே நிற்க, முதலில் சுயம் மீண்ட அர்ஜுன், “அஞ்சு..” என்றழைத்தான். 

அதில் தன்னை சற்றே நிலைபடுத்திக் கொண்டவள் திரும்ப, லேசான சிரிப்பு ஒன்றை கொடுத்துவிட்டு, “சாப்பிட்டு வா..” என்றான்.

“ம்ம்..” என்று அவள் திரும்ப, 

“அஞ்சு ஒரு நிமிஷம்..” என்று அர்ஜுன் அவளை நிறுத்தினான்.

இரட்டையன் புறம் திரும்பி வந்தவள், “என்ன அஜு?” என்க,

 “ஹாப்பியா இருக்கியாடா?” என்றான்.

அவள் கண்கள் நிறைவான புன்னகை சிந்த, அழகாய் சிரித்தபடி தலையசைத்தவள், 

“ரொம்ப ஹாப்பியா தான் இருக்கேன்” என்க, 

“உன் மாம்.. ” என்று ஏதோ கூற வந்தவன், “மாம்ஸ் உன்னை நல்லா வச்சுக்குறாரா?” என்று கேட்டான்.

அதில் காலை தாமரையாய் முகம் பிரகாசிக்க கன்னங்களில் மெல்லிய சிகப்புடன் படிகளின் புறம் திரும்பினாள். யஷ்வந்த் தன் அலைபேசியில் பேசியபடி இறங்கி வரும் தோரணை கண்டு மேலும் புன்னகைத்தவள், “ராணி மாதிரி பார்த்துக்குறாரு” என்று கூற, திருப்தியான புன்னகையுடன் தங்கையின் தலைகோதினான்.


Leave a comment


Comments


Related Post