இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -29 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 06-05-2024

Total Views: 25964

“பூனை. அடியே பூனை..” 

“ஹா” 

“கூப்பிட்டுட்டே இருக்கேன் அப்படி என்ன யோசனையில இருக்க.?” 

“ஒன்னுமில்ல சொல்லு” 

“இன்னைக்கு போலாமா?” 

“இன்னைக்கா.. இன்னைக்கு வேண்டா.” 

“எங்கப் போறீங்க ரெண்டு பேரும்?” என்று வளவன் கேக்க,  

“போகும் போதே எங்கப் போறிங்கன்னு கேட்டுட்டியா உருப்புட்ட மாதிரி தான்.” என்ற யுகி, “நீ ஷாலு கூட ரொமான்ஸ் பண்றதுல மட்டும் கானசன்ட்ரெட் பண்ணு, எங்க விசியத்துக்குள்ள மூக்கை நுழைக்காத போ போய் ஷாலு ஷாலுன்னு அவளோட ஷாலைப் பிடிச்சி தொங்கு.” 

“டேய் நீ ரொம்ப ஓவரா பேசறடா.” என்றவனை,  

“வளவா” என்றார் ராஜி. 

“அம்மா” 

“இங்க வா” என்று அவனை அருகில் அழைக்க, அவன் பக்கம் சாய்ந்து அமர்ந்தான். 

“உன் கல்யாணம் முடிஞ்சதும் அவங்ககிட்ட பேசி சீக்கிரம் யுகிக்கும் பாப்பாவுக்கும் கல்யாணம் பண்ணிடனும்.” 

“நானா வேண்டாம்னு சொன்னேன் நந்தன் இருக்கும் போது யுகிக்கு பண்ண முடியாதுன்னு தான் அமைதியா இருக்கோம். நந்தன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லட்டும் அப்புறம் இவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை வெச்சிடுவோம்.” என்றான். 

அம்மாவும் மகனும் ரகசியம் பேசினர். ஆனால் அவர்கள் நினைக்கும் எதுவும் நடக்காது, மகள் பெரிய குண்டை தூக்கிப் போடப்போகிறாள் என்று தெரியாமல் தாய் மகளின் திருமணத்தைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தார். 

எல்லோரையும் போல இவர்களும் யுகியும் நிலாவும் காதலிப்பதாக தான் நினைத்தனர். 

கார் யுகியின் வீட்டின் முன்பு சென்று நின்றது. மாரத்தாண்டமும், மணிமேகலை மட்டும் தான் முன்னால் வந்து வளவனின் குடும்பத்தை வரவேற்றனர். 

கிருஷ்ணம்மாள் கன்னத்தை தோளில் இடித்துக் கொண்டு ஓரமாய் நின்றார். கிருஷ்ணமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருந்ததால் அவர் எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை. 

“வாங்க வாங்க மாப்பிள்ளை” 

“மாமா என்ன இது? புதுசா வாங்க போங்கன்னுட்டு. எப்போவும் போல வா பொன்னே சொல்லுங்க.” 

“முன்னாடி எப்படி வேணா கூப்புட்டு இருக்கலாம் இப்போ அப்படி இல்லையே. வீட்டு மாப்பிள்ளைக்கு உரிய மரியாதை கொடுக்கனும்ல.” என்றவர் பேச்சு வளவனிடம் இருந்தாலும் பார்வை கிருஷ்ணம்மாளிடம் இருந்தது. 

மகன் என்ன சொல்ல வருகிறான் என்று கூட தாய்க்கு புரியாத என்ன? 

“வாங்க” என வேண்டா வெறுப்பாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். 

குழந்தைகள் இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினார் என்பது தான் பழமொழி. அதை மாற்றி அமைக்கும் விதமாக நந்தன் இல்லாத வீட்டில் துள்ளி விளையாடினாள் நிலா. 

“ஐயா அப்படிலாம் நீங்க வாங்கன்னு பொத்தா பொதுவா சொல்லிட முடியாது. உங்க வீட்டு சம்மந்தி வந்துருக்காங்க, உங்க வீட்டு மாப்பிள்ளை வந்துருக்காங்க, வருங்கால மருமக வந்துருக்காங்க.." என்று வேகமா சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டவள், யாரும் பார்க்கவில்லை என்றதும் இயல்பாக, "வாங்கம்மா மின்னல்ன்னு அழைக்கணுமா இல்லையா?" என்று சாதாரணமாகக் கேட்டாள் 

. அவரைப் பார்த்தாலே ஏதாவது கேலியாக பேச வேண்டும் போல் நாக்கு துறுதுறுத்தது 

“என்னடி வெளி ஊருக்கு போனதும் நாக்கு நீண்டு வாய் அதிகமாகிடுச்சோ.. யார்கிட்ட பேசிட்டு இருக்காங்கன்னு நியாபகம் இருக்கா?” 

“பின்ன இருக்காதா கிழவி? நீ என்ன என்னைய பழைய நிலான்னு நினைச்சிட்டு இருக்கியோ? அந்த நிலா எப்போவோ மாறிப் இப்போ புது நிலா வந்துருக்கா தெரியுமா.. போலீஸையே மிரட்டினவ” என்று சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டாள். 


“என் பேரன் வந்தா தெரியும்டி உன்னோட வீர சாகசமெல்லாம். நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அது நக்கி தான் குடிக்கும். என்ன தான் தகுதி தராதரம் பார்க்காம உங்க வீட்டுக்குப் பொண்ணுக் கொடுத்தாலும், உங்க கேவலமான புத்தியை தான் காட்டுவீங்கன்னு எனக்கு தெரியும். இதுங்களுக்கு தெரியாம உள்ளே விடுதுங்க இதுக்குலாம் சேர்த்து அனுபவிப்பாங்க." என்று கிருஷ்ணம்மாள் தன் வெண்கல தொண்டையில் கூறினார். 

அது சுற்றி இருந்த அனைவருக்கும் தெளிவாகக் கேட்டது. வளவன் பற்களை கடிக்க. அதைப் பார்த்த ஷாலினியின் முகம் சுருங்கிவிட்டது. 

"அம்மா என்ன வார்த்தை பேசறீங்க? அறிவில்லையா? கொஞ்சம் கூட தெரிய மாட்டிங்குது.” 

“நான் என்னடா இல்லாததையா சொன்னேன் ஒரு காலத்துல வீட்டுக்குள்ள வரவே பயந்து கெடந்தக் கூட்டம், இன்னிக்கு ஜம்பமா நடு வீட்டுக்குள்ள வந்து நிக்குதுன்னா அதுக்கு யாரு காரணம் நீ தானே, என்னமோ உன் பொண்ணுக்கு இந்த சீமையிலயே மாப்பிள்ளை சிக்காத மாதிரி, போயும் இவனை மாப்பிள்ளையா கொண்டு வந்து நிக்க வெச்சிருக்கீங்க” என்று ஷாலினியின் முதுகில் ஒரு அடி வைக்க, அம்மா, அத்தை, ஐயா என்று அனைவரும் மாறி மாறி கத்தினர் 



தாண்டி சுற்றி இருந்தவர்கள் அன்று சொன்னது போல தானே இன்று நடக்கிறது, வளவன் உள்ளே வந்துவிட்டால் 'மொத்தக் குடும்பமும் உங்களை வளைச்சிப் போட்டுக்கும்' என்ற வார்த்தை எத்தனை உண்மையாகிப் போனது என வேதனை, கோவம் சுற்றி இருப்பவர்களுக்கு அவல் ஆகிப் போனோமே என்ற ஆதங்கம் என அனைத்தும் வார்த்தைகளாக வந்தது.


Leave a comment


Comments


Related Post