இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 25 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 06-05-2024

Total Views: 19016

அத்தியாயம் 25

வாசுவின் கன்னத்தில் விழுந்த அடியில் அவன் அதிர்ந்து அவரை பார்க்க அவன் முன்னால் ஒருவனை இழுத்து வந்து போட்டனர் அவன் வேறு யாருமல்ல அருவியை அவனுடன்தான் அனுப்பி வைத்தான் வாசு.

அவன் முகம் எங்கும் காயமாக இருக்க "வாசு... நீயாவது சொல்லுடா நான் எந்த தப்பும் பண்ணல..." என கூற.

அவனிடம் இருந்து கைப்பற்றிய மருந்து பாட்டிலை அவன் முன்னால் தூக்கி போட்டார் சக்கரவர்த்தி.

வாசுவிற்கு இப்போது மேலும் அதிர்ச்சி.

அவனுக்கு அங்கு என்ன நடந்தது என்பதை புரிய வைக்க விளக்கம் எதுவும் தேவைப்படவில்லை.

"அடப்பாவி.. துரோகி..." என கீழே கிடந்தவனை தூக்கி அவன் கன்னத்தில் பளார் பளார் என வைக்க.

ஏற்கனவே அடி வாங்கி இருந்தவன் மேலும் துவண்டான்.

"உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ண பார்த்தியாடா... துரோகி... எங்கம்மா எத்தன நாள் அது கையால உனக்கு சோறு போட்டுருக்கும்...அந்த உயிர எடுக்க உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு...?" என மேலும் அறைய. 

"ம்ம்ம்ம்... போதும் வாசு... இந்த விருந்து முடியற வரைக்கும் அவன் உயிரோட இருக்கனும்... ஏன்னா இவனால உங்களுக்கு ஒரு நல்லது நடக்கறத தள்ளிப்போட முடியாது... ஊர்ல எல்லோருக்கும் நாளைக்கு விருந்துன்னு சொல்லியாச்சு... இன்னைக்கு ராத்திரி இவன தூக்கிட்டு போய் ரெண்டு நாளைக்கு பண்ணை வீட்டுல அடைச்சு வைங்க... ரெண்டு நாள் கழிச்சு இவன ஊர்ல இருக்க பெரிய ஆலமரத்துல தொங்க விடுங்க... இனி என் குடும்பத்து மேல கைய வைக்க துணிய எவனுக்கும் தைரியம் வரக்கூடாது..."என்றவர் "வாசு கூட இருக்கவனுக்குத்தான் நம்மள பத்தின அதிக ரகசியம் தெரியும்... அவனுங்ககிட்டத்தான் நாம ஜாக்கிரதையா இருக்கனும்... நம்மோட வீக் பாயின்ட்ட தெரிஞ்சு அடிப்பானுங்க... நம்ம ஊர்ல எல்லோருக்கும் தெரியும் குடும்பத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்னு... அதான் அந்த குடும்பத்துமேல கைய வைக்க துணிஞ்சிட்டானுங்க... இனியும் அமைதியா இருக்க நான் ஒன்னும் கோழை இல்ல... பழைய சக்கரைய இவனுங்க பார்த்தா தாங்க மாட்டானுங்க... வாசு இனி தூங்கும்போது கூட நீ விழிப்பா இருக்கனும்... கூட நண்பன்னு நினைச்சு நாம வீட்டுக்குள்ள விடுவோம்... ஆனா அவனுங்கதான் முதல் எதிரியா இருப்பானுங்க...அந்த வஜ்ரவேலுவோட வேலைன்னு எனக்கு நல்லா தெரியும்... நான் ஏன் அமைதியா இருக்கேன்... எல்லாம் அருவிக்காகத்தான்... அவ இப்போவரைக்கும் அவ அப்பா சாவுக்கு நாமதான் காரணம்னு நம்பிட்டு இருக்கா... அது உண்மை இல்லன்னு நிரூபிக்கனும்... அவ அப்பன கொன்னது யாருன்னு அவளுக்கு தெரியப்படுத்தனும்... இன்னும் நமக்கே தெரியாத சில விஷயங்கள் அவன்கிட்ட மறைஞ்சு இருக்கு... அத கண்டுபிடிக்கனும்... அடிக்கடி நம்ம ஊர்ல இருக்க அம்மன் கோவில்ல  ராத்திரி நேரத்துல அவன் நடமாட்டம் அதிகமா இருக்குன்னு எனக்கு தகவல் வந்துருக்கு... நான் நினைக்கிறது சரின்னா அவனுக்கும் அந்த கோவிலுக்கும் ஏதோ சம்பந்தம்... இருக்கு அது என்னென்னு கண்டுபிடிக்கிற வரைக்கும் நாம கொஞ்சம் பொறுமையா போக வேண்டியது இருக்கு..." என்றவர் "டேய்..." என கத்த ஒரு ஆறு வாலிபர்கள் நல்ல திடகாத்திரமாக வந்தனர்.

அவர்களை பார்த்ததும் வாசுவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் எல்லாம் அவனுடன் படித்த வாலிபர்கள்.

அவர்களை அவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அவர்கள் எப்படி தன் பெரியப்பாவுடன் என அவன் யோசனையில் ஆழ.

"என்னடா... அதிர்ச்சியா இருக்கா... இவனுங்க எல்லோருமே உங்கூட படிச்ச நம்ம ஊர் பசங்க உனக்கு நினைவு இருக்கா...?" என கேட்க.

"இருக்குப்பா..."என்றான் அவன்.

"இவனுங்க எல்லாம் என் பசங்க மாதிரி...இந்த ஊர்ல என்ன நடந்தாலும் எனக்கு உடனே தகவல் வந்துடும்..." என்க.

இதுவரை தன் பெரியப்பாவிடம் இப்படி ஒரு முகம் இருக்கும் என அவன் எண்ணவில்லை.

அவன் அருகில் வந்து அவன் தோள்மேல் கையை போட்டவர் "என்னடா அதிர்ச்சியா இருக்கா...?" என கேட்க.

அவன் அமைதியாக இருந்தான்.

"உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல...உனக்கு இன்னும் விவரம் பத்தல... இதோ இவன மாதிரி ஆளுங்கள எல்லாம் நல்லவன்னு நினைச்சு உள்ள விட்ட...இப்ப என்ன நடந்துருக்கு பாத்தியா... கொஞ்சம் இல்லனா இந்நேரம் அவன் இன்னைக்கு நைட் நமக்கு சாப்படற சாப்பாட்டுல விஷத்த கலந்து இருப்பான்..., ஊர் மக்கள் நாளைக்கு நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரதுக்கு பதிலா இழவுக்கு வந்துருப்பாங்க... இனி எப்பவும் எங்கயும் கவனமா இருக்கனும்... நீ யார விரும்பினங்கிறது வரைக்கும் எனக்கு தெரியும்... தெரிஞ்சும் ஏன் உனக்கு அந்த மகிழாவ கட்டிவச்சேன் தெரியுமா...அவ உண்மையிலயே உன்ன விரும்பறா... அதும் இல்லாம அவ மூலமா நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டியது இருக்கு..." என்க.

"தெரிஞ்சும் ஏன்ப்பா...?"என்றான் அவன்.

"ஏன்டா இப்போதான கிளிப்பிள்ளைக்கு படிக்கிற மாதிரி அண்ணன் சொல்லிட்டு இருக்காரு... நீ என்ன எதுத்து பேசிட்டு இருக்க... அண்ணன் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்...பேசாம அவரு என்ன சொல்றாரோ அத கேளு..." என்க.

அவன் வாயை மூடிக் கொண்டான்.

அவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்னே இருவர் அவனை தூக்கிக் கொண்டு தேங்காய் கொட்டி வைக்கும் அறைக்குள் போட்டனர்.

இந்தரின் அறை.

திடீரென முத்தமிடுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.

அவன் உதடு பட்டதும் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது கண்டு ஒரு மர்மப் புன்னகையை உதிர்த்து கொண்டான் இந்தர்.

அவள் கண்மூடி படுத்து இருக்கும் அழகை கண்களில் நிரப்பியவன் மீண்டும் ஒருமுறை அவன் பெயரை பச்சை குத்தி இருக்கும் அந்த இடத்தை வருடி பார்க்க அவள் இன்னும் மெய்மறந்து அவனின் வருடலில் லயித்து இருந்தாள்.

அவள் முகத்தை பார்த்தவன் அது நாணத்தில் சிவந்து இருந்ததை பார்த்தவன் அவள் கன்னத்தில் தட்டி "என்னடி அப்படியே உறைஞ்சு போய் இருக்க... ஏன் உன் முன்னால் காதலன்கள் யாரும் இதெல்லாம் செஞ்சது இல்லையா...?" என கேட்க.

எங்கிருந்துதான் அவளுக்கு கோவம் வந்ததோ தன் முழு பலத்தையும் கொண்டு அவனை தள்ளினாள்.

அவன் சற்று தடுமாறி பின்னே விழ போக "இந்தர்..." என அவனை தன் ஒரு கரத்தால் பிடித்து இழுத்தாள்.

மீண்டும் அவள்மேலேயே வந்து விழுந்தான்.

"கொஞ்சம் பார்த்து வார்த்தைய விடு இந்தர்... என்னை உனக்கு பிடிக்காதுதான்... ஆனா அதுக்காக என் குணத்தை அசிங்கப்படுத்தனும்னு இல்ல... நீ என்னை வேற விதமா கூட பழி வாங்கிக்க... ஆனா  இதுதான் என் குணம்னு நீயே முடிவு பண்ணிக்காத..."என்க.

அவள் வாயில் கைவைத்து மூடியவன் "போதும் பேசினது... யார எப்படி பாக்கனும்னு எனக்கு அறிவு இருக்கு... நீ சொல்லாத... நாளைக்கு ஊருக்கு போறோம்... அங்க தினமும் நீ எனக்கு வேணும்... இங்க இப்ப போனா போகட்டும்னு விடறேன்...  ஏன் தெரியுமா மனசளவுல நீ தயாராகிக்கத்தான்..." என்றவன் அவள்மேல் இருந்து வேகமாக எழுந்து அவன் அணிந்து இருந்த துண்டை எடுத்து இடுப்பில் அணிந்து கொண்டான்.

அவனின் பீரோ அருகே சென்றவன் அதை திறந்து ஒரு ஆகாய வண்ண தாவணியை எடுத்து அவள்மேல் வீச அதை பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருக்க "கொஞ்சநேரம் அப்படியே கண்ண மூடிக்கிட்டு இரு... நான் துணி மாத்திக்கிறேன்..." என்றவன் அவனது உடையை எடுத்து அணிந்து கொண்டான்.

"நான் வெளிய போறேன் இதுலயே பிளவுஸும் இருக்கு..." என்றபடி கதவை அறைந்து சாத்தியபடி வெளியேற 
அவள்தான் அதிர்ச்சியில் இருந்து வெளியேறாமல் அவன் தூக்கிப் போட்ட தாவணியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறி அழுதாள்.....



Leave a comment


Comments


Related Post