இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-32 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 07-05-2024

Total Views: 28676

அத்தியாயம்-32


காலம் படபடவென்று ஓடியதன் விளைவாய் அஞ்சனாவும் அர்ஜுனும் தங்களது இறுதியாண்டை முடிக்கும் நிலையில் இருந்தனர்.

அர்ஜுன் வீட்டு கூடத்தில் அமர்ந்திருந்த அஞ்சனா,

“படிச்சு முடிச்சு அடுத்த என்ன பண்ணலாம்னு யோசிக்குற அஜு?” என்று கேட்க,

“அடுத்து இன்னும் ஒரு டிகிரி பண்ணலாம்னு இருக்கேன் அஞ்சுமா.. நீ என்ன பண்ண போற?” என்று கேட்டான்.

“நான் ஜாப் போயிடலாம்னு யோசிக்குறேன் அஜு.. ஆனா எம்ராயிடரிக்கு கிளாஸ் போகலாம்னு இருக்கேன்” என்று அஞ்சு கூற, 

“சூப்பர் டா..” என்றான்.

“மாமா கம்பெனிலயே வேலை பார்க்கலாம்னு இருக்கேன்” என்று அவள் கூற, 

“புரியலை சனா.. வேலை பார்க்க போறியா?” என்று கேட்டான்.

“ம்ம்.. ஒரு நார்மல் ஸ்டாஃபா அங்க ஜாயின் பண்ண போறேன்” என்று அவள் கூற,

தங்கையை மெச்சுதலாய் பார்த்தான். தன் திறமைக்கும் தகுதிக்கும் போதுமான வேலையே தற்போது போதும் என்றும் யஷ்வந்த் மனைவி என்ற பட்டத்திற்காக கிடைப்பதை விட அஞ்சனா படித்த பட்டித்திற்காக கிடைப்பதே தனக்கு பெருமை என்றும் முந்தைய நாள் யஷ்வந்திடம் பேசியதை பற்றி அவள் கூற, 

“சூப்பர் டா பாப்பா” என்று அர்ஜுன் கூறினான்.

அவன் கண்கள் ஆனந்தமாய் பனிய, ‘கண்ணீர் சோகத்தில் மட்டுமே வருவது கிடையாது’ என்ற யஷ்வந்தின் வரி மனதில் தோன்றி அவளைப் புன்னகைக்க வைத்தது.

அங்கு வந்த அமுதா, “என்ன டிஸ்கஷன் போகுது?” என்று கேட்க, தாயிடமும் அதைக் கூறினாள்.

சில மாதங்கள் முன்பு தான் அமுதாவுடன் சகஜமாக பேசத்துவங்கியிருந்தாள் அஞ்சனா. மனநல ஆலோசனைகள் எல்லாம் முடிந்தும் அன்னை விடயத்தில் மட்டும் கடந்து வர அவளுக்கு சில காலம் தேவைப்பட்டது. இன்னமும் அந்த விடயத்தில் அன்னை செய்ததை ஏற்க முடியவில்லை என்ற போதும் முடிந்து போன ஒன்று என அதைக் கடந்துவர பழகியிருந்தாள் பெண்.

“சூப்பர்டா கண்ணா.. நல்ல முடிவு” என்று கூறிய அமுதாவுக்கு மகளின் இந்த பரிணாமம் அத்தனை சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், அவள் இந்த நிலையை அடைய எதிர்கொண்ட துன்பங்கள் அத்தனைக்கும் தானே காரணம் என்ற குற்ற உணர்வும் அவரை வெகுவாக வருத்தியது. அதற்கு அவரால் மன்னிப்பும் கேட்க முடியவில்லை, கேட்டாலும் அஞ்சனா மன்னிக்கப் போவதில்லை. இருவருமே அதுகுறித்து பேசுவதை முற்றுமாக தவிர்த்து சுமுகமான உறவுக்குள் நுழைந்திருந்தனர்.

“யாழினிக்கு இப்ப எத்தனை மாசம்டா?” என்று அமுதா வினவ,

“அஞ்சு மாசம் ஆச்சு ம்மா. யமு அத்தை ஏழாவது மாசம் வளைகாப்பு பண்ணி கூட்டிட்டு வரலாம்னு பார்க்குறாங்க. அர்ஷித் அண்ணா என்ன அவசரம் ஒன்பதாவது மாசம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு” என்று கூறி சிரித்தாள்.

ஆம்! அர்ஷித்திற்கும் யாழினிக்கும் திருமணம் செய்வதை அக்ஷை, மது பேசி அடுத்த வாரமே ஏற்றிருக்க, திருமணம் இனிதே நடந்திருந்தது. யாழினியுடன் பேசி சிரிக்கவில்லை என்றாலும் இன்றளவும் அவளை வருத்தும்படி நடக்காது இருக்கின்றார். 

யாழினியாக வழிய சென்று பேசினால் ஓரிரு வார்த்தையிலோ தலையசைப்பிலோ பதில் கூற துவங்கியிருந்தார். விசேஷ நேரங்களில் அவர் யஷ்வந்த் வீட்டிற்கு வரவில்லை என்றாலும் அவ்வீட்டிலிருந்து யார் வந்தாலும் தடுப்பதுமில்லை. சமீபமாக யாழினியிடம் தங்கள் நிறுவனம் குறித்து சில தகவல்கள் பேச யஷ்வந்தே வீட்டிற்கு வந்திருக்க, அவனை வரவேற்கவில்லை என்றாலும் வெளியே போவென்று கூறாது தனதறைக்கு சென்றிவிட்டார்.

“ரொம்ப சந்தோஷம்டா..” என்று அமுதா கூற, 

“சரிம்மா..  நான் கிளம்பறேன்” என்றபடி தனது மகிழுந்து சாவியை எடுத்துக் கொண்டாள்.

தனது உடமைகளுடன் வந்தவள் மகிழுந்தை இயக்கிக் கொண்டு புறப்பட, அர்ஜுன் ஆனந்தமாய் தங்கையைப் பார்த்தான். ஆம்! அஞ்சனாவும் மகிழுந்து ஓட்ட பழகி உரிமமும் எடுத்திருந்தாள்.

திருமணம் ஆனாலும் படித்து தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற அவளது எண்ணம் கண்டு அவளை சார்ந்த அனைவருமே ஆனந்தமாய் உணர்ந்தனர்.

வீடு திரும்பிய அஞ்சனா, புத்துணர்வு பெற்று தனது கல்லூரிப் பணிகளை முடித்துக் கொண்டு கீழே வந்து யமுனா, அக்ஷரா மற்றும் மதுவுடன் ஐக்கியமானாள்.

“அண்ணி.. நீங்க ஸ்டிச் பண்ணி குடுத்த கௌன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதுல ஹான்ட், நெக் அன்ட் பாட்டம்ல கொடுத்த ஃப்ளோரல் டிசைன் அவ்ளோ ரிச்சா இருந்தது” என்று மது கூற, 

“எனக்கும் அப்படி ஒன்னு ஸ்டிச் பண்ணி குடுடா அஞ்சு” என்று அக்ஷரா கூறினாள்.

அஞ்சனாவின் ஆடை வடிவமைப்பிற்காக அவளுக்கென்று ஒரு பிரத்யேக அறையே அமைத்துக் கொடுத்திருந்தான், அவளவன்.

“தேங்ஸ் மது.. கண்டிப்பா அக்ஷா க்கா.. நெக்ஸ்ட் வீக்குள்ள குடுக்குறேன். நம்ம யதுவோட பர்த்டே பார்டிக்கு போட்டுக்கோங்க” என்று அஞ்சு புன்னகையாய் கூற,

“ஏ.. ஆமாம்ல.. அப்பனா எங்க மூனு பேருக்குமா செட் டிரெஸ் ரெடி பண்ணி தரியா? டென் டேஸ்குள்ள முடியுமா?” என்று அக்ஷரா கேட்டாள்.

“ஓகே க்கா.. நான் ட்ரை பண்றேன்” என்று அவள் கூற, யாதவும் யஷ்வந்தும் உள்ளே நுழைந்தனர். யஷ்வந்தை கண்டதும் கண்களில் எப்போதும் தோன்றும் அந்த மின்னலுடன் புன்னகைத்த அஞ்சனா அவன் தங்களறைக்கு செல்லவும் சில நிமிடங்களில் மெதுவாக தானும் நழுவிக் கொண்டு மேலே சென்றாள்.

குளித்து முடித்த ட்ராக் பேண்டுடன் கண்ணாடி முன் நின்று தலை துவட்டுபவன் வெற்று முதுகோடு வந்து அணைத்துக் கொண்டு நின்றாள் பெண்.

“சனா.. ஈரமா இருக்குடி” என்று அவன் கூற, 

“பரவால்ல..” என்றாள்.

 “அப்ப இங்க வா” என்று அவள் கரம் பற்றி தன் முன்னே இழுத்தவன், “என்ன மேடம்.. உங்க இரட்டையர பார்த்துட்டு வந்தாச்சா?” என்று கேட்டபடி தன் தலைகோத, துண்டை எக்கிப் பறித்தவள் அவனை அங்குள்ள நாற்காலியில் அமர்த்தினாள்.

தான் ஆடவனுக்கு துடைத்துவிட்டவள் “ம்ம்.. அவன் மாஸ்டர்ஸ் பண்ற ப்ளான்ல இருக்கான்” என்று கூற,

 “நீயும் பண்ணலாம்ல சனா?” என்று கேட்டான்.

“எனக்கு இன்டிரஸ்ட் இல்லை மாமா. நான் எம்ராயிட்ரிக்கு மட்டும் கோர்ஸ் ஜாயின் பண்ண போறேன். அப்படியே யுவனாஸ்ல வேலைக்கும் சேரலாம்னு இருக்கேன்னு நேத்தே சொன்னேன் தானே?” என்று அவள் கூற,

 “ம்ம்..” என்றபடி அவள் இடை சுற்றி கரம் போட்டு அணைத்துக் கொண்டான்.

“மாமா.. நா..நான் அவர பார்த்தேன் இன்னிக்கு” என்று அவள் கூற, அவளை புரியாமல் நிமிர்ந்து பார்த்தவன் ‘எவர?’ என்பது போல் ஒற்றை புருவம் உயர்த்தினான்.

“ர்..ரக்ஷன்..” என்னு அவள் கூற, “ஹ்ம்.. எங்க?” என்றான்.

 “வர்ற வழில” என்று கூறியவள் ஒரு பெருமூச்சுவிட்டு, “அவரை சொல்லியும் குற்றமில்லை தானே மாமா? யாருமே இல்லாம ஒரே உயிரின் துணையோட வளர்ந்தவர். தவரான புரிதல்ல திசை மாறிட்டார்” என்றாள்.

“ம்ம்.. அதனால தான் அன்னிக்கு அவன் மேல குடுத்த கம்ப்ளைன வாபஸ் வாங்கி வெற்றி பொறுப்புலயே கௌன்ஸ்லிங்கு ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன் சனா” என்று யஷ்வந்த் கூற, அவனை ஆச்சரியமாக பார்த்தவள்,

“நிஜமாவா மாமா?” என்றாள்.

“ஆமா சனா.. அப்ப அவன் மேல ரொம்ப கோவத்துல தான் இருந்தேன்.. காரணம் நீ அன்னிக்கு இருந்த நிலை..” என்று கண்களை மூடித் திறந்து அவன் பெருமூச்சு விட, அவன் தலைதுவட்டிய துண்டை விட்டு தன் கரம் நுழைத்து சிலுப்பினாள்.

அதில் அவளைக் கண்டு புன்னகைத்தவன் பாவையை இழுத்து தன் மடியில் அமர்த்தி, “பிறகு அவனோட நிலையை யோசிச்சப்போ அவனுக்கு கௌன்ஸிலிங் தான் இப்ப தேவைனு பட்டுச்சு. அதனால கேஸ வாபஸ் வாங்கிட்டு வெற்றி தலைமைலயே அவன ஒப்படைச்சுட்டேன்” என்க, 

“நல்லது தான் மாமா..” என்றாள்.

“ஹ்ம்..” என்று அவன் கூற, “மாமா.. ஒரு கேள்வி கேட்பேன்.. உண்மையா பதில் சொல்லுவீங்களா?” என்றாள்.

“கேளுடி கோழிக்குஞ்சு” என்று ஆடவன் மேலும் அவளை இறுக்கிக் கொள்ள, 

“நீங்களும் அர்ஷித் அண்ணாவும் ஃபிரெண்ட்ஸா இல்லை எனிமீஸா?” என்று கேட்டாள்.

மேலும் “அன்னிக்கு ஒருநாள் உங்க ஃபோன்ல கேளரில நம்ம பேரிஸ் போனப்ப எடுத்த ஃபோட்டோஸ் பார்த்துட்டு இருந்தேன். நடுவுல அர்ஷித் அண்ணா யாழிக்காவுக்கு கால் பிடிச்சு விடுறபோல ஒரு வீடியோ இருந்தது. இது எப்படி உங்க ஃபோன்ல? யார் அனுப்பிருப்பானு பார்த்தா யாழிக்காவும் அனுப்பலை.. கடைசில தான் தெரியுது அது அர்ஷித் அண்ணா அனுப்பினதுனு. அப்ப நீங்க சேட்லலாம் பேசிப்பீங்களா?” என்று அவள் தன் கேள்வியை தொடுக்க, 

“பேசிக்கலாம் மாட்டோம் சனா.. எப்போவாவது மெசேஜ் போட்டுப்போம்.. இன்னிக்கு நேத்திக்கு இல்லை.. நாங்க தொழில்ல இறங்கினதுல இருந்தே என் நம்பர் அவன்கிட்ட இருக்கு அவன் நம்பர் என்கிட்ட இருக்கு. அன்ட் என்னோட ஒவ்வொரு மூவும் அவனுக்கு தெரிஞ்சுடும் அவனோட ஒவ்வொரு மூவும் எனக்கு தெரிஞ்சுடும். எப்பவாவது ஒன்னு ரெண்டு வார்த்தை வாழ்த்தோ, கன்ஸோல்டென்ஸோ தான் போட்டுப்போம். இப்ப கொஞ்சம் நாளா தான் இந்த வீடியோ பரிமாற்றம்.. ஹி இஸ் ஷோயிங் தட் ஹீ டேக்ஸ் கேர் ஆஃப் மை சிஸ்டர்” என்றான்.

“அப்போருந்தே பேசுவீங்களா? அப்ப நீங்க பிரண்ட்ஸ் தானா?” என்று அவள் கேட்க,

“நாட் ஃபிரண்ட்ஸ், நாட் எனிமீஸ்.. ஜஸ்ட் ஸ்டிரேஞ்சர்ஸ் வித் மெமோரீஸ்” என்று கூறினான்.

“இதென்ன மாமா பதில்..?” என்று அவள் வினவ, 

“இதுதான் பதில் சனா.. எங்களை சுற்றி இருக்கும் எல்லாரும் தான் எங்களை விரோதிகளாக சித்தரிச்சாங்க. நாங்க அப்படி நினைக்கலை. ஆனா அதேபோல நாங்க நண்பர்களும் இல்லை. மே பி இந்த குடும்ப சண்டைகள் இல்லாம இருந்திருந்தா ஃபிரண்ட்ஸ் ஆயிருக்கலாம்.. என்னை பொருத்தவரை அவன் ஒரு நல்ல பிஸ்னஸ் காம்படீடர்.. இப்ப என் தங்கையோட கணவன்” என்று கூறினான்.

“ஹ்ம்..” என்று அஞ்சனா பெருமூச்சுவிட, 

“சரி இப்ப எதுக்கு இந்த கேள்வி?” என்று கேட்டான். 

“இல்ல கேக்கணும்னு தோனுச்சு” என்று அவள் கூற, 

“எனக்கும் என்னென்னமோ தோன்றுதே” என்று அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

“மிஸ்டர் பீஸ்ட்..” என்று அவள் அவன் மார்பில் குத்த, 

அவள் காதோரம் ஒரு முத்தம் வைத்து, 
“அதென்னடி மிஸ்டர் பீஸ்ட்..” என்றான். 

“அது நான் உங்களுக்கு வச்சுருக்கும் செல்ல பெயர்” என்று அவள் வெட்கத்துடன் கூற, “ஆஹாங்..” என்றான்.

“நான் எவ்வளவு அழகா உங்களுக்கு பீஸ்ட்னு மாஸா பெயர் வச்சுருக்கேன்.. நீங்க ஏம்மாமா கோழிக்குஞ்சு வவ்வாகுஞ்சுனு கடுப்படிக்குறீங்க?” என்று அவள் கேட்க, அதில் வாய்விட்டு சிரித்தவன், 

“உன்னை பொண்ணு பார்க்க வந்தப்போ நீ கோழிக்குஞ்சு மாதிரி தான்டி தெரிஞ்ச” என்றான்.

அவன் புஜங்களில் நான்கு அடியை போட்டு அதிலேயே தலை சாய்த்தவள், “நான் நிறையா மாறிட்டேன்ல மாமா?” என்று கேட்க, 

அவள் தலையை பரிவாய் கோதி, “ம்ம்..” என்றான்.

அவனை நிமிர்ந்து கண்ணோடு கண் பார்த்தவள், “அந்த பழைய அஞ்சுவ என்னிக்காவது மிஸ் பண்ணிருக்கீங்களா மாமா?” என்று கேட்க, சற்றும் யோசிக்காமல் இல்லையென்றிருந்தான்.

அதில் அவள் சிரிக்க, “அறியாமைல மூழ்கி இருந்த என்னோட சனாவை என்னிக்குமே நான் தேட மாட்டேன்டி.. அந்த சனா எல்லாருக்கும் கூலக்கும்மிடு போட்டுகிட்டு தனக்குனு சுயமே இல்லாம இருந்த சனா. இப்ப இருக்குற சனா அவளுக்கான அங்கீகாரத்தை தேடி ஓடும் சனா.. எனக்கு இவளை தான் ரொம்ப பிடிச்சிருக்கு. பட் அஃப்கோர்ஸ் அப்ப இருந்த அந்த பாப்புகுட்டியவும் நான் ரசிச்சேன்” என்று கூறி கண்ணடித்தான்.

அதில் மையலுடன் புன்னகைத்தவள், அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டு, “தேங்ஸ் மாமா..” என்று உளமாற கூற, 

“இப்படிதான் தேங்ஸ் சொல்லுவாங்களா புருஷனுக்கு?” என்றான்.

அவன் மார்பு ரோமங்களில் விரல் கொண்டு அவள் கோலமிட, “ஏ.. உனக்கு இதுவே வேலையா போச்சுடி.. நீ கோலம் போட்டு விளையாடவும் பிடிச்சு இழுத்து விளையாடவும் தான் நாங்க முடி வளர்த்து வச்சிருக்கோமா?” என்று கேட்டான்.

“ம்ம்.. குட்டி பாப்பாங்கலாம் அவங்க அப்பாவோட நெஞ்சுமுடிய பிடிச்சு இழுத்து தான் விளையாடுவாங்க. நானும் எங்கப்பாகிட்ட அப்படி தான் விளையாடுவேன்னு ஆதியண்ணா சொல்லுவாங்க” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து,

“நாளைக்கு உங்க பாப்பா விளையாடினா சிரிச்சுட்டே வேடிக்கை தானே பார்ப்பீங்க? அப்பறம் பட்டா போட்ட எனக்கு உரிமை இருக்காதா?” என்று பொய் கோபத்துடன் கேட்க, 

“ஆஹாங்..” என்றவன் அவள் நெற்றி முட்டி, “பேச்சு வேற பக்கம் போகுதே..” என்றான்.

மீண்டும் தன் கோலம் போடும் வேலையை தொடர்ந்தவள், “எனக்குலாம் கேர்ள் பாப்பா தான் வேணும்” என்று கூற, 

“பொதுவா பொண்ணுங்க பாய் பேபி தானே கேப்பாங்க.. என் டயலாக்க நீ சொல்ற?” என்றான்.

“ம்ஹும்.. கேர்ள் தான் வேணும்” என்றவள் அவன் கண்களை ஏறிட்டு, இதழில் மெல்லிய புன்னகையும் கண்களில் மெல்லிய கண்ணீர் திரையுமாக,

“எப்படி ஒரு பொண்ணை வளர்க்கக் கூடாதுனு எங்கம்மா காட்டினாங்க.. எப்படி ஒரு பொண்ணை வளர்க்கணும்னு நான் அவங்களுக்கு காட்டணும்” என்றாள்.

அவள் கண்களை நிறைத்த கண்ணீர் கன்னம் தாண்டி, தீண்டி அவன் கரத்தில் பட்டுச் சிதற, அதை தன் இதழ் கொண்டு துடைத்தவன் அவள் இதழோடு தன்னிதழ் பூட்டிக் கொண்டான். ஆழமாய், அழுத்தமாய், காதலாய், ஆசையாய், மோகமாய் அவன் தொடங்கிய முத்த யுத்தம், பெண்ணவளின் மென்மையான ஆளுமைக்குள் அவள் கட்டுப்பாட்டில முடிவடைந்தது.

இதழில் ஒரு மயக்க புன்னகையுடன் அவளை அணைத்தபடி அந்த உடைமாற்றும் அறையில் வெற்றுத் தரையில் அவன் படுத்திருக்க, பெருமூச்சுக்களுடன் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் நாணம் பூசிய கன்னங்களை அதில் புதைத்துக் கொண்டாள்.

வெளியே அவன் அலைபேசி அழைப்பதன் சத்தம் கேட்க, “அம்மாதான்னு நினைக்குறேன்..” என்று கூறினான்.

“சாப்பிடவாதான் இருக்கும்..” என்று அவள் கூற, 

“அதான் நான் சாப்பிட்டுட்டேனே..” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான். 

“ப்ச்.. மாமா..” என்று சிணுங்கி, “நீங்க  போங்க.. எனக்கு வேண்டாம்..” என்று கூற வந்தவள், “நீங்க சாப்டுட்டு எனக்கு ஜுஸ் மட்டும் கொண்டு வாங்க” என்றாள்.

அவளை அணைத்து அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தவன் அவள் சொல்படி சென்று உண்டு அவளுக்கான பழச்சாறுடன் வர, அதற்குள் குளித்து இரவு உடைக்கு மாறியிருந்தாள்.

அவன் கொடுத்த பழச்சாற்றை வாங்கி பருகிவிட்டு அவனோடு படுத்தவள், மனதில் அப்படியொரு நிம்மதி. என்னவொரு அழகான வாழ்க்கை இது! இந்த மாயவன் தன் வாழ்வில் வராதிருந்தால் தன் வாழ்வு எப்படி இருந்திருக்குமோ? என்று எண்ணுகையிலேயே அவள் உடல் சிலிர்த்தது.

அவளை அணைத்தபடி படித்திருந்தவன் அச்சிலிர்ப்பை உணர்ந்து, “என்னடி..? மனுஷன படுத்தாத.. எனக்கு தூங்கணும்” என்க, 

களுக்கிச் சிரித்தவள், “தேங்ஸ் அன்ட் லவ் யூ மாமா” என்று அணைத்துக் கொள்ளவும் தானும் அணைப்பை இறுக்கி அவள் நெற்றி முட்டி, படுத்தான். அனைவருக்கும் குழந்தை போல பொம்மையாய் திரிந்தவள் அந்த காந்தனுக்கு மட்டுமே குழவியாய் மாறி, மற்றோர் முன் தலைநிமிர்ந்து காதல் வாழ்விலும் நிலை நிமிர்ந்து நின்றாள்….


Leave a comment


Comments


Related Post